Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐகோர்ட் உத்தரவு எதிரொலி

பிரிட்டனில் இந்திய

டாக்டர்களுக்கு சிக்கல்

லண்டன், பிப்.11:

குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம் செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால், பிரிட்டனில் தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

1970ம் ஆண்டுகளிலும், 1980ம் ஆண்டுகளிலும் பிரிட்டனில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் அந்த நாட்டில் குடியேறி தொழில் செய்ய தொடங்கினார்கள்.

இவர்களை தொடர்ந்து, பெர்மிட் தேவையற்ற பயிற்சி பிரிவின் கீழ் பல டாக்டர்கள் பிரிட்டனில் குடியேறினர். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க அந்த நாட்டின் உயர்நீதிமன்றம், ரத்து செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் பிரிட்டனில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அந்த நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசின் முடிவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து தொழில் செய்யும் டாக்டர்களை பிரிட்டிஷ் அரசு நடத்தும் விதம் ஏமாற்றமளிக்கிறது என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் சர்வதேச குழுவின் தலைவர் டாக்டர் எட்வின் பார்மன் கூறியுள்ளார். இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

http://www.maalaisudar.com

Link to comment
Share on other sites

 • Replies 232
 • Created
 • Last Reply

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி. சொந்த மக்கள் சேவைதான் மகேசன் சேவை எண்டுறது சும்மா பேச்சில இருக்கக்கூடாதுங்கோ. :rolleyes::D:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி.

அதே போல புலம் பெயர் ஈழத்தமிழரின் ஆளணி விடுதலைப் போருக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதால் அவர்களனைவரும் ஈழம் போவது தான் சரி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்த அசைலம் அடிக்கிறதுகள் அதுகளின்ர வாரிசுகள் தொடர்சி என்று எல்லாத்தையும் தடுத்து நிறுத்தி அமெரிக்கா கிறீன் காட் போல கொண்டு வந்தால் தான் பிரித்தானியாவும் உருப்படும் ஈழமும் உருப்படும்..! :P :rolleyes:

இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் படி இவ்வாண்டின் முதல் மாதத்தில் மட்டும் 5990 கருக்கலைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது 5990 சிசுக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி.

அதே போல புலம் பெயர் ஈழத்தமிழரின் ஆளணி விடுதலைப் போருக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதால் அவர்களனைவரும் ஈழம் போவது தான் சரி

சோக்கான விசயம் களத்தில களை பிடுங்கிறவைக்கு ஒருக்கா எட்டி சொன்னால் இன்னும் நல்லம்,,,,,

நான் ரெடி,.........நீர் ரெடியா.......?........ காவடி :D:D:unsure:

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: சீக்கிய மாணவருக்கு அடிடர்பன் கிழிப்பு

பிப்ரவரி 23, 2007

லண்டன்: லண்டனில், தலைப்பாகையில் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு சீக்கிய மாணவரை சிலர் அடித்து உதைத்த சம்பவம் அங்குள்ள சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில், லகிஸ்வர் சிங் என்ற சீக்கிய மாணவர் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்விச் செலவுக்காக, லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு, வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம் தகராறு செய்தனர். உன் தலைப்பாகையில் (டர்பன்) வெடிகுண்டு மறைத்து வைத்திருக்கிறாயா என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் தலைப் பாகையை பறித்து கிழித்து எறிந்தனர், லகீஸ்வர் சிங்கையும் அடித்து உதைத்தனர்.

அந்த சமயத்தில், அங்கு போலீஸார் வரவே, சீக்கிய மாணவரைத் தாக்கிய கும்பல் தப்பி ஓடி விட்டது. தன் மீதான தாக்குதல் குறித்து லகீஸ்வர் சிங் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வருகின்றனர்.

ஸ்காட்லாந்தில் வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மும்பை திரும்ப லகீஸ்வர் சிங் முடிவு செய்துள்ளாராம்.

http://thatstamil.oneindia.in/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன்: சீக்கிய மாணவருக்கு அடிடர்பன் கிழிப்பு

பிப்ரவரி 23, 2007

ஸ்காட்லாந்தில், லகிஸ்வர் சிங் என்ற சீக்கிய மாணவர் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்விச் செலவுக்காக, லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.

http://thatstamil.oneindia.in/

என்ன லண்டனில வேலை செய்து கொன்டு, ஸ்கொட்லண்டில படித்தவரோ அப்ப தினம் தினம் வேலைக்கும் யூனிக்கும் கெலிகொப்டரிலதான் போரவர் போல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன லண்டனில வேலை செய்து கொன்டு, ஸ்கொட்லண்டில படித்தவரோ அப்ப தினம் தினம் வேலைக்கும் யூனிக்கும் கெலிகொப்டரிலதான் போரவர் போல.

இது என்ன பெரிய பிரைச்சனையா?, அவர் ஸ்கொட்லண்டில படித்துக்கொண்டிருப்பார். அவரது தேசிய காப்புறுதி இலக்கத்தில்(அதாவது National Insurance Number) லண்டனில் இன்னொருவர் வேலை செய்துகொண்டிருப்பார். இங்கிலாந்தில் இதெல்லாம் சகசமப்பா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.