Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டன் தேர்தலின் இறுதி நேர பிரச்சாரப் பொருளாக மாறும் இராக் விவகாரம்

பிரிட்டனில் மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் இறுதி நேரத்தில் முக்கிய வாதப் பொருளாக, இராக் போர் விவகாரம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

இராக் மீதான போர், சர்வதேச மட்டத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் அரச தலைமை வழக்கறிஞர், அரசுக்கு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து வந்த கடுமையான அழுத்தம் காரணமாக அவர் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் கடந்த ஞாயிறன்று வெளியான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் அவர்கள், வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதனை தற்போது தூக்கிப்பிடிப்பதாக குறைகூறுகிறார்.

கடந்த நாடாளுமன்றத்தில் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில் மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமொக்கிரட்டிக் கட்சியினர் ஆரம்பம் முதலே இராக் மீதான போரை எதிர்த்து வந்திருக்கின்றனர்.

போருக்கு செல்வதற்கான காரணத்தை நியாயப்படுத்த அரசாங்கத்தால் கூறப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்து பொது விசாரணை ஒன்று தேவை என்று அந்த கட்சியின் தலைவர் சார்ள்ஸ் கென்னடி கூருகிறார்.

கொன்சேர்வேட்டிவ் கட்சி போருக்கு தனது ஆதரவை வழங்கியிருந்த போதிலும், பிரதமர் பிளயரின் நேர்மையை அது குறைகூறுகிறது.

அவரால் முன்வைக்கப்பட்ட உளவுத்தகவல்கள் குறித்தே அந்த கட்சியின் தலைவரான மைக்கல் ஹவார்ட்டும் குறைகூறுகிறார்.

நன்றி - பிபிசி தமிழ்

Link to post
Share on other sites
 • Replies 232
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய பொது தேர்தல் இன்னும் 6 நாட்களில் நடைபெற இருக்கின்றது. மே 5ம் திகதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமது வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும்.

தற்போதைய தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல் என்று மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கின்றன. இவற்றுள் கன்சவேர்டிவ் கட்சி தீவிர போக்குடையது என்பதுடன் குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கொண்டிருக்கின்றது. மற்றய இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் கொள்கையளவில் லிபரல் நல்லது அதற்கு வாக்களிப்பதே நல்லது என்று நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அது வாக்குகளை பிரிப்பதால் மறைமுகமாக கன்சவேர்டிவ் பதவிக்கு வரவே வழி வகுக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிரித்தானிய தேர்தலுக்கு இன்றும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் தொழிற்கட்சி மற்றும் கன்சவேர்டிவ் கட்சி இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஆசியர்கள், கறுப்பினத்தவர் மற்றும் இந்நாட்டில் குடியேறியோர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். எனவே ஈழதமிழர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.
Link to post
Share on other sites

மதன் பிரித்தானியத் தேர்தல் தகவல்களையும், அதுபற்றிய கருத்துக்களையும் இணைப்பதற்கு நன்றிகள். சாத்தியமில்லை என்று சோம்பேறிகளாய் இருப்பதைக் காட்டிலும், முடிந்தளவு முயற்சி செய்வது நல்லதே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது

நடத்துங்கோ

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டையும் இணைத்துவிட்டேன். :D

தொழிற்கட்சி, கன்சவேர்டிவ் இந்த 2 கட்சியையுமா ?

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது

நடத்துங்கோ

:D :mrgreen: :mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்

போடுவதாக உள்ளேன். :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேபர்கட்சியிலும் வலதுசாரி இடதுசாரி என இரு பிரிவினர் இருப்பதை அவதானிக்கலாம் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராக சட்ட வரைவு கொண்டு வரும் பொழுது லேபர் கட்சியிலுள்ள இடதுசாரி போக்குள்ளவர் எதிர்க்கும்போது கன்சர்வேட்டிவ்கட்சியும் லோபர்கட்சியும் ஒனறிணைந்து செயற்படுவதை பார்க்கலாம் சிறுபான்மையரின் செல்வாக்கு பாரளு மன்றத்தில் செலு்த வேணுமென்றால் லிபரல்டெமக்கிரேட்டுக்கு வோட்டு போட்டால் நல்லமென்று நினைக்கிறேன்

Link to post
Share on other sites

மேலே பலர் குறிப்பிட்டது போல தொழிற்கட்சிக்கும் பழமைபேண் கட்சிக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தொழிற்கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் 1951 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அகதிகளுக்கான ஐநா வின் ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ்தான் இதுவரைகாலமும் அகதிஅந்தஸ்து அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

என்னைப்பொறுத்தவரையில் லிபரல் கட்சிக்கு வாக்களிப்பது பொருத்தமானதாயிருக்கும். அவர்களால் ஆட்சியமைக்க முடியாதென்பது வெளிப்படை. ஈழத்தவரது தற்போதைய அரசியல் பலத்தை அடிப்படையாக வைத்து நோக்குகையில் அவர்களால் பெரிய கட்சிகளில் பாரியளவு செல்வாக்கை செலுத்தக்கூடிய வல்லமை தற்போதைக்கு இல்லை. எனவே லிபரல் போன்ற கட்சிகளிற்கு வாக்களித்து அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு போவதற்கு முனையலாம். தகுந்த அணுகுறை மூலம் லிபரல் கட்சியை ஒப்பீட்டளவில் இலகுவாக அணுகலாம் (Lobby)

எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மில்லியன் மக்கள் இலண்டன் வீதியில் அணிதிரண்டு எதிர்த்தும் பிளேயர் போருக்குச் சென்றார். எனவே அவரைப் புறக்கணிப்பதன் மூலம் மக்களை எதிர்த்து நகர்வுகளை மேற்கொண்டால் எப்படியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் ஒரு செய்தியாக இந்த வாக்களிப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்

போடுவதாக உள்ளேன். :wink:

பிள்ளை என்ர சார்பா 2 ஐ போடு பிள்ளை

vot1is.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
தவறாமல் இம்முறை வோட் போடுங்கள் வசி. ஈழ தமிழர்கள் பலரும் வோட் போடுவதில் அக்கறை கொள்வதில்லை, நீங்கள் ஒவ்வொருவரும் வோட் போடாமல் இருக்கும் போது அது கடும் போக்குள்ள கன்சவேர்டிவ் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றது என்பதை மனதில் கொள்ளுங்கள். மே 5ம் திகதி அன்று என்ன வேலை இருந்தாலும் இதற்கென ஒரு அரை மணித்தியாலத்தை ஒதுக்கி தவறாமல் தொழிற் கட்சிக்கு வோட் போடுங்கள்,
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்த முறை வோட் போடச் சொல்றீங்கள்..

அப்ப இதுவரை போட்டதில்லையா..?? :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:

இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய

மதனுக்கு நன்றி :D .

நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவரி.

நீங்கள் எப்படி தமிழினி? :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:

இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய

மதனுக்கு நன்றி :D .

நீங்கள் எப்படி தமிழினி? :lol:

பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்படி தமிழினி?

நாங்கள் போனமுறை தான் முதல் தடவையாய் போட்டம் இந்த முறையம் போடுவம்.. லேபர்ஸ்க்கு தான் நம்ம ஓட்டும்.. என்ன தான் செய்தாலும்.. பிளேயர் அங்கிள் பாவம் வரட்டும். :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ

ரோ வோ.. சந்தேகமா.. உங்களுக்கும்.. ம் பிரித்தானியாவில்.. நிலையாய் இங்கையும் இல்லை.. விதி விட்ட வழி .போறம்.. பாப்பம்.. :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டும் பிள்ளையள் உங்க கள்ள ஓட்டு குத்த ஏலாதோ

உங்களுக்கு உதவ என்ர மச்சானை அனுப்பவே ???

கள்ள ஓட்டு குத்திறதில மன்னாதி மன்னன்

366113on.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டிஷ் தேர்தலில் இராக் விவகாரம்

பிரிட்டிஷ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இராக் மீதான போர் குறித்த விவகாரத்தை பிரதமர் டொனி பிளயரின் தொழில் கட்சி அடக்கி வாசிக்க முயற்சித்த போதிலும், பிரச்சார காலத்தின் இறுதி வேளையில் பத்திரிகைகளை அலங்கரிக்கும் தலைப்புச் செய்திகளில் இராக் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சில தினங்களுக்கு முன்னர் இராக்கில் ரோந்து நடவடிக்கை ஒன்றின் போது கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரின் மனைவி தனது கணவரின் மரணத்துக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சிகளான கான்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் டெமோகிரட்டிக் கட்சி ஆகியன, இராக் போரை பிரதமர் டொனி பிளயர் முன்னெடுத்த விதத்தை விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த சிப்பாயின் மரணம் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்ட மறுத்து விட்டன.

ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள்

தேர்தல் குறித்து அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் சில, இந்த தேர்தலின் போது இராக் போர் விவகாரத்தை ஒரு முக்கியமான விடயமாக பெரும்பாலன மக்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருக்கின்றன.

ஆனாலும் இறுதி நேரத்தில் இராக் போர் குறித்து வெளியாகும் தலைப்புச் செய்திகள், ஒரளவுக்கு பிளயர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்றும், சில தொழிற்கட்சி ஆதரவாளர்கள், போரை ஆரம்பம் முதலே எதிர்த்த லிபரல் டெமொகிரட்டிக் கட்சியை நோக்கி சாய இவை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிபிசி தமிழ்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
லண்டன் பகுதியில் உள்ள Bexleyheath & Crayford பகுதிகளில் தொழிற்கட்சிக்கும் மற்றய கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது, இந்த பகுதியில் உள்ள ஈழத் தமிழர்கள் தவறாமல் உங்கள் வோட்டை தொழிற் கட்சிக்கு போடுங்கள்,
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டனில் இறுதி நேரப் பிரச்சாரம்

பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று, நாடு முழுவது பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய கடும் போட்டியுள்ளதாக கருதப்படும் தொகுதிகளை மையம் வைத்தே இன்றைய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இராக் மீதான படையெடுப்பில் இருந்த உண்மை நிலையினை பிரதமர் டோனி பிளயர் தரவில்லை எனக் கூறும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினரும் அதற்காக டோனி பிளயர் வாக்காளர்களால் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பி பி சிக்கு அளித்த பேட்டியொன்றில் பிரதமர் டோனி பிளயர் அவர்கள் பிரிட்டிஷ் பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் கல்வி ஆகியவற்றில் தன் அரசாங்கம் செய்துள்ளவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு மக்களிடம் கோரியுள்ளார்.

BBC Tamil

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது 8)
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொழிற்கட்சியே வெற்றிபெறுகின்றது.......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது

நல்ல செய்தி மதன் கஸ்டப்பட்டது வீண் போகல.. பின்ன.. நாங்க வோர்ட் பண்ணினால்.. வெற்றி பெறாமல் எப்படி.. :wink:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.