Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கொலைகள்

சம்பவம் - 1

நேற்று இரவு லண்டன் ஈஸ்ட் காம்-இல்பேர்ட் (Eastham, Ilford) பகுதியில் நிகழ்ந்த குழு சண்டை (Gang Fight) ஒன்றில் 23 வயது தமிழ் இளைஞன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்த சண்டைகளின் தொடர்ச்சியாகவே நேற்றய கொலை நடந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் - 2

ஏறத்தாள ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் லூசியம் - கட்போர்ட் (Lewisham, Catford) பகுதியை அண்டிய பிரதேசத்தில் உள்ள Favorite Chicken Shopஇல் ( KFC போன்றது) நடுதர வயது தமிழர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டார். குத்தப்பட்டவரும் குத்தியவரும் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களாவர். இருவரும் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி கொண்டிருந்தாகவும் இருவரின் ஊர் குறித்த பேச்சு எழுந்த போது இருவரும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசியதாகவும் அது வாய்தகறாக மாறி குடிபோதையில் வேலை செய்துகொண்டிருந்தவர் அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியால் குத்தியதாககவும் கூறப்பட்டது.

இது தவிர சிறிது காலத்திற்கு முன்பு லண்டன் டூட்டிங் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியை தொடர்ந்து குழு சண்டையில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கே போகிறது லண்டன் தமிழினம் :cry:

Link to comment
Share on other sites

 • Replies 232
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ் புகழ்!

மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? ஜாலி!.. இப்பதான் பாரதி கண்ட கனவு பலிச்சிருக்கு. ஜாலி!..ஜாலி.. :evil:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ் புகழ்!

மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? :evil:

South London Press உள்ளிட்ட சில பத்திரிகைகளில் போட்டிருக்கின்றார்கள். தாக்கியவர் தாக்கப்பட்டவர் இருவருமே தமிழர்கள் என்பதாலும் அடிக்கடி நடைபெறும் சம்பவம் என்பதாலும் இதை அவர்கள் பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தெற்கு லண்டனின் பல பகுதிகளிலும் ஆசிய கலாச்சார நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக நேற்று ஞாயிற்று கிழமை South East London Plumstead Common பகுதியில் ஆசிய கலாச்சார விழா (Asian Mela) நடந்தது. அது ஒரு கலாச்சார விழாவாக மட்டும் அன்றி அந்த பிரதேச ஆசிய மக்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. அந்த பிரதேசத்தில் தமிழ் மக்களின் அளவு குறைவாக இருந்தமையினால் தமிழ் நிகழ்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. சிறிய தமிழ் குழந்தைகள் தமிழ் கலாச்சார உடையுடன் கலந்து கொண்ட ஆடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு விழாவின் போது மேலும் தமிழ் நிகழ்சிகளை இடம்பெற செய்யமுடியும் என்று நினைக்கின்றேன்.

15 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு Sunrise Radio, Sony Entertainment மற்றும் Western Union உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தனர். இதை தவிர Greenwich council மற்றும் அப்பகுதி தொழிற்கட்சி எம்பி John Austin ஆகியோரும் பக்கபலமாக இருந்ததுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

southlondon19zi.jpg

southlondon28of.jpg

southlondon39ze.jpg

Link to comment
Share on other sites

இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

இணைக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாகவே இருக்கின்றன. நன்றி

Link to comment
Share on other sites

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மனைவி செரி பிளேர். இவர் வக்கீலாக இருக்கிறார். ஆளும் தொழிலாளர் கட்சி தொடர்பான வழக்குகளில் இவரே பெரும்பாலும் ஆஜர் ஆகிறார். செரி பிளேர் இப்போது டெலிவிஷன் தொடரிலும் நடிக்கிறார்.

2 மணி நேரம் ஓடும் இந்த டெலிவிஷன் தொடர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களின் மனைவிமார்களை பற்றியது. 3 முன்னாள் பிரதமர் களின் மனைவிகள் கிளாரிசா ஈடன், மேரிவில்சன், நார்மா மேஜர் ஆகியோரும் நடிக்கிறார் கள். அவர்களுடன் இணைந்து நடிக்கும் செரிபிளேர் அவர்களை பேட்டி காண்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுண்டல்.

செரி பிளேயர் (Cherie Blair) கணவரைவிட தனது தொழில் மூலம் அதிகம் சம்பாதிப்பவர் என்று சண் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இது தவிர அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விரிவுவைகள் நடத்துவதன் மூலம் தனியாக சம்பாதிக்கின்றார். தன்னுடைய கணவரின் பதவி மூலம் கிடைக்கும் அந்தஸ்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் எடுத்த வேறு சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன். முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் Sony Entertainment Television Asia இல் ஒளிபரப்பாகும்.

southlondon41vb.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on4large1dm.jpg

southlondon59un.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on5large4ht.jpg

southlondon78ip.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on7large9tj.jpg

southlondon67dc.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on6large8rr.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன் .. நீங்களும் போய் இருந்தீர்களா.. ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம் தமிழ் நிகழ்சிகளும் நடந்தன. இது இந்த பகுதியில் இருந்த அனைத்து ஆசியர்களுக்கு பொதுவான கலாச்சார விழா. இந்த பகுதியில் தமிழர்கள் குறைவு என்பதால் பங்களிப்பு குறைவாக இருந்தது. அது தவிர தமிழர்கள் தமது பிள்ளைகளை தமிழ் நிகழ்சிகளின் பங்கு பெற செய்வதில் அவ்வளவு முன்னிற்கவில்லை. அடுத்து Lewisham மற்றும் Bromley பகுதிகளை இணைத்து ஆசிய கலாச்சார தினம் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த பகுதிகளின் அதிகம் தமிழர்கள் இருப்பதால் பங்களிப்பும் கூடுதாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

global_ho_logo.gif

ஐக்கிய ராச்சியத்தில் ஏறத்தாள 570,000 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக உள்துறை அலுவலகம் (Home Office) அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்கட்சிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிகையை விவாதங்களில் கேட்டபோதும் அதற்கு தொழிற்கட்சி அரசு பதிலளிக்கவில்லை, தொழிற்கட்சி குடியேறிகள் விடயத்தில் நெகிழ்வு போக்கை காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அந்த விபரம் வெளியிடப்பட்டால் அது தேர்தலில் எதிர்ப்பலை உருவாக்கலாம் என்று அப்போது இதற்கு பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்த அரசு இப்போது தேர்தல் முடிந்த நிலையில் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அரசியல் தஞ்சம் கோரி தற்போது விசாரணையில் உள்ளோரும் அது நிராகரிக்கபட்ட நிலையில் அதனை எதிர்த்து அப்பீல் செய்தோரும் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது ஐக்கிய ராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை அடையாளம் காணவதற்கு இலகுவான வழிமுறை ஏதும் இல்லை. முக்கியமாக இதனை காரணமாக வைத்தே அடையாள அட்டை திட்டத்தை தொழிக்கட்சி அரசு ஆரம்பித்தது ஆனால் இதற்கு நாடாளும் சபையில் ஆதரவு குறையும் நிலையில் இதன் அவசியத்தை உணர்த்தவே சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிக்கையை இந்த சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கூட மிக குறைவான கணிப்பீடு என்றும் உண்மையில் இதைவிட அதிகமானோர் இருக்கலாம் என்று குடியேறிகளை கண்காணிக்கும் Migration WatchUK அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தி ஆதாரம்: பிபிசி இணையம்

ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க http://news.bbc.co.uk/1/hi/uk_politics/463...7273.stm

Link to comment
Share on other sites

என்ன லண்டன் கிட்டமுட்ட கொழும்பு மாதிரி இருக்கு...இல்ல ஆகிட்டா...! :P :D

படங்களுக்கு நன்றி மதன்...! :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:

ரோட்டில கொத்துறொட்டிக் கடையும் இளனிக் கடையும்

போடாத குறை ஒன்றுதான் :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை போட்டால் நல்ல பிஸ்னஸ் ஆச்சே .. வசி போடுவமோ :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பு : புலம்பெயர்ந்த மக்களே!

பொலிஸுக்குத் தகவல் கொடுப்பதை விட்டுவிட்டு யாழுக்குள் ஏன் ஒட்டுகிறீர்கள்?

:evil: :twisted:

Link to comment
Share on other sites

எட சின்னப்பு எங்கையடாப்பு நிக்கிறாய். ஓடியாந்து எனக்கும் விளக்கம் சொல்லப்பா. நான்தான் மப்பிலை செப்புறனெண்டா இஞ்சை யாழ் இiணையத்திலையும் மப்புச் செப்பாக்கிடக்குது ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

olympics_flag_369.jpg

2012ம் ஆண்டுக்குரிய ஒலிம்பிக் போட்டியை லண்டன் மாநகரில் நடத்துவதற்காக கடும் முயற்சியில் பிரித்தானிய தொழிற்கட்சி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த் நாட்டில் நடக்கும் என்பது வரும் ஜூலை மாதம் 6ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இந்த ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு பல இன கலாச்சாரத்தை கொண்டுள்ள பிரித்தானியவாவிற்கு கிடைத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம்.

இதனை ஆதரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைய தளத்திற்கு சென்று தமது ஆதரவை பதிவு செய்யலாம், அது மட்டுமன்றி உங்கள் கைதொலைபேசியிலிருந்து London என்று 82012 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் ஆதரவளிக்கலாம்.

http://www.london2012.org/en/support/register/

image.gif

2012ம் ஆண்டுக்குரிய சர்வதேச ஒலிம்பிக் போட்டியை நடாத்த Madrid, London, New York, Paris மற்றும் Moscow ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. இவற்றில் கடும் போட்டி பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிடையே இருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி பாரிஸ் நகரம் முன்ணணியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நாளை சிங்கப்பூர் நகரில் நடைபெறும் அனைத்துல ஒலிம்பிக் கமிட்டி (IOC) மகாநாட்டில் யார் இந்த போட்டியை நடாத்த போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

_41267725_becks_blair203.jpg

டேவிட் பெக்கம் மற்றும் டொனி பிளேயர் சிங்கப்பூரில்

இந்த ஒலிம்பிக் போட்டியில் லண்டன் நகரத்திற்கு ஆதரவளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரபலங்கள் பலர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அண்மையில் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் டொனி பிளேயர் (Tony Blair) அங்கிருந்து 2012 ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முழுமூச்சாக செய்து வருகின்றார். இவருடைய முயற்சி பலிக்குமா என்பது நாளை தெரியவரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Nelson_Mandela.jpg

இந்த போட்டியை லண்டனில் நடாத்துவதற்கு முன்னைய தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை பல இன கலாச்சார மக்கள் வாழும் லண்டனை விட பொருத்தமான ஒரு இடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

"There is no city like London. It is a wonderfully diverse and open city providing a home to hundreds of different nationalities from all over the world. I can't think of a better place than London to hold an event that unites the world. " - Nelson Mandela

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

_41272319_thankyou300.jpg

2012 ஒலிம்பிக் போட்டியை யார் நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக சிங்கப்பூரியில் சற்று முன்பு நடந்த தேர்தலில் லண்டன் வெற்றீயீட்டியுள்ளது.

_41273031_blair_ap203main.jpg

G8 மகாநாடு ஸ்கொட்லாண்டில் ஆரம்பிக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் தேர்தலில் லண்டனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் டொனி பிளேடயருக்கு தனிப்பட்ட அரசியல் வெற்றியாகவும் இது கருதப்படும்.

-----------------------------------------------------------------

2012 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த லண்டன் தேர்வு

2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று சிங்கப்பூரில் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லண்டன், பாரிஸ், நியூயார்க், மாட்ரிட், மாஸ்கோ ஆகிய ஐந்து நகரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், இன்று முன்னாதாக , நியூயார்க், மாட்ரிட் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்கள் முதலிலேயெ பரிசீலிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன.

பின்னர் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முடிவில், பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷாக் ரோக் , லண்டன் நகரம் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

Thanx: BBC

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.