Jump to content

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு


Recommended Posts

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

துக்ளக் பத்திரிகை கனடாவிலும் இலண்டனிலும் சில மானங்கேட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

மெல்பேர்னில் ஒரே ஒரு தமிழ் கடையில் கண்டேன் ஷான் அன் வீனஸ் என்னும் கடை முதலில் ஈழத்தமிழரின் கடை அதனை தமிழக தமிழர்கள் வாங்கி இருகிறார்கள் அதிலேயே கண்டேன்

Link to comment
Share on other sites

துக்ளக் பத்திரிகை கனடாவிலும் இலண்டனிலும் சில மானங்கேட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில் இருக்கிறது.

"மானங்கெட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில்" அழகாய் கருத்து சொல்லியிருக்கிறீர்கள் கந்தப்பு

மெல்பேர்னில் ஒரே ஒரு தமிழ் கடையில் கண்டேன் ஷான் அன் வீனஸ் என்னும் கடை முதலில் ஈழத்தமிழரின் கடை அதனை தமிழக தமிழர்கள் வாங்கி இருகிறார்கள் அதிலேயே கண்டேன்

இந்தியத் தமிழர்கள் உரிமம் பெற்றிருக்கும் கடைகளில் அதனைத் தடுக்க முடியாது. அவர்கள் தமிழ் உணர்வாளராக இருப்பின் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்

Link to comment
Share on other sites

சோ தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துகளை எழுதி வருபவர்.

அவரின் பத்திரிகையில் வேறு எப்படி வரும்?

இப்படியானவர்களின் பத்திரிகைகளை மான ரோசம் உள்ள

தமிழர்கள் வாங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வையடா வை, தீயை சோவின் தலையிலே வை.:lol::o:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துகளை எழுதி வருபவர்.

அவரின் பத்திரிகையில் வேறு எப்படி வரும்?

இப்படியானவர்களின் பத்திரிகைகளை மான ரோசம் உள்ள

தமிழர்கள் வாங்க மாட்டார்கள்.

ஜனநாயகம் என்ற மாயாஜாலத்தை மலர்வித்த அமெரிக்காவே தன்ர நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் செய்தி நிறுவனங்களை தாக்கி இருக்கிறது அல்லது கட்டுப்படுத்தி இருக்கிறது. ஆனா நம்ம தமிழர்கள் மத்தியில் புளிச்ச ஜனநாயகம் பேசிற.. ஒரு கூட்டம் சோவை.. கீரைக்கடைக்கு எதிர்கடையாக்கிப் பார்கிறதில.. மும்மரமாவும் இருக்கின்றன.

சோ அரசியல் ரீதியா காங்கிரஸ் ஆதரவாளர். அதனால் அவர் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தது முதல் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் தாக்கி எழுதப் பின்னிற்பதில்லை..!

சோ.. சில இடங்களில் நல்ல பணி செய்திருக்கிறார். குறிப்பா ஈ வெ ராமசாமி போன்றவர்களின் பிராமண சமூக எதிர்ப்பு நிலைகளை தோலிருச்சுக் காட்டிறதில...! இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் சோ அதைச் செய்யாம ஈ வெ ராமசாமியைத் தோலுருக்கிறதோட ஈழத்தமிழர்களையும் எதிர்க்கச் செய்வது ஈழத்தமிழர்களைப் பற்றி சோ தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அல்லது காங்கிரஸ் விசுவாசம் அதை அவர் உணர விடுகுதில்லை. எனவே சோ கொஞ்சம் தன்னை அடங்கிறது நல்லம் அல்லது மாற்றிக்கிறது நல்லம். ஈழத்தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் என்றாலும் தமிழன் என்ற நிலையில் நின்று துன்பங்களை உணர்ந்து எழுதுவதுவே சிறப்பு.! வெந்த புண்ணில் வேல் பாச்சுவதை நிறுத்துவது நல்லது. :o:lol:

Link to comment
Share on other sites

இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது.

ஓஓ இப்படியும் ஒன்று இருக்கா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ இப்படியும் ஒன்று இருக்கா? :o

ஆமாம்.

தமிழக சமூக அரசியல் புறநிலைகளோடு தான் அவர்கள் செயற்படுகின்றனர். ஈழத்தமிழர் ஆதரவு என்பதை அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் என்பது கருதித்தான் செயற்படுத்த விளைகின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு தேவை தமிழகச் சகோதரர்கள் அனைவரினதும் தார்மீக ஆதரவு. அங்கு கட்சி.. கொள்கை.. சமூகம் என்று எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது.

எனவே நாமும் சில காரியங்களைச் செய்யும் போது உணர்ச்சிவசப்படுத்தலுக்கு இடம் கொடாது தமிழக அரசியல் மற்றும் சமூகப் புறநிலைகளை அவதானிச்சு செயற்படுவது நல்லம்.

ஏனெனில் துக்ளக்கை எரிக்கிறதைக் கூட விளம்பரப்படுத்த ஒரு சிலர் தீவிரமாக முன் வருவர். அவர்கள் எதிர்பார்ப்பது ஈ வெ ராமசாமியை எதிர்க்கின்ற பிராமண சமூக சோ ஈழத்தமிழர்களால் பகைக்கப்படுகிறான் என்று காட்டிட. எமக்கு ஈ வெ ராமசாமி தொண்டர்களின் தார்மீக ஆதரவும் தேவை.. பிராமண சமூகத்தின் ஆதரவும் தேவை. எனவே ஒருவரை தாக்க அடுத்தவர் அதற்கு கைதட்டுவதை இட்டு நாம் சந்தோசப்பட முடியாது.

சோவுக்கு சில விடயங்களை உணர்த்த இந்த நிகழ்வை பாவிக்கனுமே தவிர பிராமண சமூகத்தின் எதிர்ப்பை ஈழத்தமிழர்கள் மீது ஆழப்படுத்த சில சக்திகள் இந்த நேரத்தில் முனையலாம். ஆதாவது எரியிற நெருப்பில எண்ணெய் ஊற்றுறது. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அதேவேளை ஈ வெ ராமசாமி தொண்டர்களின் ஈழ ஆதரவையும் இழந்திடக் கூடாது.

ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவையும் தமிழீழ தேச விடுதலைக்காகக் கோரி நிற்கும் நாம் அநாவசியமாக யாரையும் பகைச்சுக் கொள்ளும் வகையில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்ப்பதும்.. ஒரு நடவடிக்கைக்கான காரணத்தை சரியான முறையில் சொல்லி சமூகம் தவறான செய்திகளை உள்வாங்கி ஈழத்தமிழர்கள் மீதான பகையை வளர்த்துக் கொள்ளாதிருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்..!

இந்த நடவடிக்கை கூட தமிழகத்தில் கட்சி சமூக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சிறுகச் சிறுக பெருகி வரும் ஈழத்தமிழர் ஆதரவை சிதைக்க என்று கூட எதிரிகளால் தூண்டப்பட்டதாகவும் இருக்கலாம். எனவே இவை தொடர்பில் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிட்டு ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒட்டுமொத்த தமிழகத்தில் இருந்து வேண்டப்படுகிறது ஒரு சிலரின் கட்சி, சமூக, கொள்கை விசுவாசங்களால் அது சிதைந்திவிடக் கூடாது என்பதை தெளிவான உணர்த்த வேண்டும்.

பிரான்சில் அண்மைக்காலமாக ஈழத்தமிழர் சிலர் மத்தியில் பிறந்துள்ள திடீர் ஈ வெ ராமசாமி பக்தி தொண்டர்களின் நடவடிக்கை என்பது ஈழத்தில் சாதி இருப்பு மற்றும் சிறீலங்கா அரச உளவுப்படையுடன் இணைந்த செயற்பட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. செய்தி ஒன்றை சாட்டு வைத்து இதனை யார் நிகழ்த்துகின்றனரே தெரியாத போதும்.. நிகழ்வு ஈழத்தமிழர்களுக்கான ஒட்டு மொத்த தமிழக ஆதரவை சிதைக்கும் வகையில் அமையாது இருக்க பார்த்துக் கொள்வது அவசியம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ.. சில இடங்களில் நல்ல பணி செய்திருக்கிறார். குறிப்பா ஈ வெ ராமசாமி போன்றவர்களின் பிராமண சமூக எதிர்ப்பு நிலைகளை தோலிருச்சுக் காட்டிறதில...! இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் சோ அதைச் செய்யாம ஈ வெ ராமசாமியைத் தோலுருக்கிறதோட ஈழத்தமிழர்களையும் எதிர்க்கச் செய்வது ஈழத்தமிழர்களைப் பற்றி சோ தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அல்லது காங்கிரஸ் விசுவாசம் அதை அவர் உணர விடுகுதில்லை. எனவே சோ கொஞ்சம் தன்னை அடங்கிறது நல்லம் அல்லது மாற்றிக்கிறது நல்லம். ஈழத்தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் என்றாலும் தமிழன் என்ற நிலையில் நின்று துன்பங்களை உணர்ந்து எழுதுவதுவே சிறப்பு.! வெந்த புண்ணில் வேல் பாச்சுவதை நிறுத்துவது நல்லது.

யாழ்களத்தில் சில அரைகுறை ஞானிகள் எதற்கு எடுத்தாலும் மதரீதியாக அணுகின்ற செயற்பாட்டை மையப்படுத்தி நீங்கள் பதிலளித்திருக்கின்றீர்கள் போலும்.

ஆனால் சோ என்ற தனிமனித காட்டுமிராண்டி பற்றியதாகத் தான் இங்கே விவாதம் போவதாகவே உணர்கின்றேன். எனவே அப்படியாரும் மதரீதியாக அணுகினால் அதற்குப் பதில் அளிக்கலாம். ஏனென்றால் சோ ஒன்றுமே அறியாத பாப்பா அல்ல. ராமசாமி என்ற மனிதருக்காக தமிழரைப் பகைக்கின்ற சுயநலவாதி நாளைக்கு தன் சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் சில அரைகுறை ஞானிகள் எதற்கு எடுத்தாலும் மதரீதியாக அணுகின்ற செயற்பாட்டை மையப்படுத்தி நீங்கள் பதிலளித்திருக்கின்றீர்கள் போலும்.

ஆனால் சோ என்ற தனிமனித காட்டுமிராண்டி பற்றியதாகத் தான் இங்கே விவாதம் போவதாகவே உணர்கின்றேன். எனவே அப்படியாரும் மதரீதியாக அணுகினால் அதற்குப் பதில் அளிக்கலாம். ஏனென்றால் சோ ஒன்றுமே அறியாத பாப்பா அல்ல. ராமசாமி என்ற மனிதருக்காக தமிழரைப் பகைக்கின்ற சுயநலவாதி நாளைக்கு தன் சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம்?

நாம் இது விடயத்தில் தெளிவாக செய்திகளை சொல்ல வேண்டும். துக்ளக் மீதான நடவடிக்கை என்பது குறித்த ஆக்கம் தொடர்பான ஆட்சேபனையே அன்றி.. சோ மீதானதோ அல்லது அவர் சார்ந்த அல்லது ஆதரிக்கும் பிராமண சமூகம் சார்ந்ததோ அல்ல என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

எமக்கு தமிழக அரசியல் சமூக நிலைகளூடு அவர்கள் தமக்கிடையே பிளவுபட்டு நிற்பதை சீர்செய்வதல்ல தற்போதைய பணி. எமது பணி ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் எல்லோரும் அனைத்துப் பிளவுகளையும் தாண்டி தார்மீக ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகவே அமைய வேண்டும். அதைத்தான் தமிழீழ மக்களும் எதிர்பார்க்கின்றனர். யோகி அண்ணா நடேசன் அண்ணா போன்றவர்களும் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்..!

Link to comment
Share on other sites

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு !

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.

யாழில் நேரடியாக படங்கள் இணைக்க முடியவில்லை எனவேகீழே உள்ள இணைப்பை அமத்திபடங்களை பாரக்ககலாம்்

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032709.jpg

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032708.jpg

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032706.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பத்திரிகை.. இதைப் போய் எரிப்பார்களா? இடைக்கிடை புலிகளுக்கு எதிராக எழுதினாலும், தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகக் கட்டுரைகள் வரைந்தாலும் சமயப் பணி, பெரியார் எதிர்ப்புப் பணி, பெண்ணிய எதிர்ப்புப் பணி என்று பல விடயங்களை தொடர்ந்தும் செய்துவரும் சோ.ராமசாமியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.. :lol:

Link to comment
Share on other sites

அருமையான பத்திரிகை.. இதைப் போய் எரிப்பார்களா? இடைக்கிடை புலிகளுக்கு எதிராக எழுதினாலும், தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகக் கட்டுரைகள் வரைந்தாலும் சமயப் பணி, பெரியார் எதிர்ப்புப் பணி, பெண்ணிய எதிர்ப்புப் பணி என்று பல விடயங்களை தொடர்ந்தும் செய்துவரும் சோ.ராமசாமியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.. :o

:lol:

Link to comment
Share on other sites

இந்த செய்தியை முதலே இறைவன் இணைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை எனக்கு செய்தியும் படங்களும் மின்னஞ்சலில் வந்திருந்தது அதை இணைத்திருந்தேன் சரி எது எப்பிடியோ பாரிஸ் குளிருக்கு சூடேற்ற துக்ளக் பத்திரிகை உதவியிருக்கு அந்த விசயத்திலை சந்தோசம். :lol::o

Link to comment
Share on other sites

இந்த செய்தியை முதலே இறைவன் இணைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை எனக்கு செய்தியும் படங்களும் மின்னஞ்சலில் வந்திருந்தது அதை இணைத்திருந்தேன் சரி எது எப்பிடியோ பாரிஸ் குளிருக்கு சூடேற்ற துக்ளக் பத்திரிகை உதவியிருக்கு அந்த விசயத்திலை சந்தோசம்.

அதில உடம்ப சூடேத்த வெளிக்கிட்டா உடம்பு நீலம் பாய்ஞ்சு மண்டையை போட வேண்டி வரும் கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும் தமிழீழத்துக்கும் எதிராக சோ எழுதிவருவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இது ஈ வே ராமசாமிக்கு எதிராக எழுதுவதால்தான் நாமும் எதிர்க்கப்படுகிறோம் என்பதாலல்லாமல் திராவிட எதிர்ப்பு என்ற பார்ப்பன விரதத்தால் வந்தது. இவரது சமூகத்தைச் சேர்ந்த ராம் மாணிக்கலிங்கம், நாராயணன், ஜயலலிதா போன்றோரும் ஈ வே ராமசாமியை எதிர்ப்பவர்களா ?இல்லையே, ஆனால் அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழரையும், எமது போரட்டத்தையும் எதிர்க்கவில்லையா? ஆக இது பழம்பெரும் பார்ப்பன திராவிடரை எதிர்த்தல் என்றதிலிருந்து வருகிறது.

அதை விடுத்து சோவை திருந்தக்கூடிய மனிதரென்பதும், துக்ளக்கை தரமான பத்திரிகை என்பதும் சகிக்க முடியவில்லை. எமது இருப்புக்கான போராட்டத்தையே எதிர்க்கும் ஒரு பத்திரிகையை வாங்கிப் படிப்பதும் அதை தரமானது என்று புகழ்வதும் ஒரு ஈழத்தமிழரால் முடிவதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

என்னைப்பொறுத்தவரை சோ - தீண்டத்தகாதது !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தசரசில் உள்ள சீக்கியப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அங்கு மனிதப்படுகொலை புரிந்ததினால்தான் இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி சுமார் 7,000 அப்பவித் தமிழர்களை வேட்டையாடியதால்தான் அவரது மகன் ரஜீவ் தண்டனையளிக்கப்பட்டார். அந்தக்கட்சியை ஆதரிக்கும் சோ ஒருபோதும் எமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை!!!!!

Link to comment
Share on other sites

தீ வைப்பவர்களின் கவனத்துக்கு - புலம்பெயர்ந்த சில தமிழ்க்கடைகளில் தினமுரசு பத்திரிகையும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமிரசு-டக்கிளச் என்னும் இனக்கிருமி கொட்டும் குப்பை. அதை எரித்து தேவை இல்லாத அந்தச்து எதுவும் கொடுக்க வேண்டாம். அதை ஒருநாள் கடைக்காரரே துடைக்கிறதுக்குப் பாவிப்பார்.

Link to comment
Share on other sites

தீ வைப்பவர்களின் கவனத்துக்கு - புலம்பெயர்ந்த சில தமிழ்க்கடைகளில் தினமுரசு பத்திரிகையும் இருக்கிறது.

ஓமோம் கந்தப்பு தாத்தா இந்த தினமுரசு பத்திரைகை வந்து சிட்னியில இருக்கிற "கமினியூட்டி லைபரியிலையும்" இருக்கு............ :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு திரும்பத் திரும்பச் சில விடையங்கள் மீளஉள்ளிடப்படுகின்றன.

தாம் சார்ந்திருக்கும் கருத்தியலுக்கு வலுவூட்டக்கூடியதாக தந்திரமான வாதாட்டங்களை எழுத்துகளாக வாசிக்க முடிகிறது.

பொருத்தம் கருதி யாழில் முன்பு இடப்பட்ட இயக்குநர் சீமானின் கருத்துகளை இதில் நானும் மீள உள்ளிடுகிறேன்.

"............. எங்களுக்குப் பேச்சுக்கள்- அறிக்கைகளில் உடன்பாடில்லை. பேசியே எங்களையும் சாக விட்டுவீடுர்கள்.

தமிழின விடுதலையை எதிர்க்கின்ற சுப்பிரமணியன் சுவாமியை சென்னை விமான நிலையத்திலேயே வழிமறித்து அடித்து நொறுக்கினால்- துக்ளக் சோவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் என்ன?

வரப்பு வாய்க்கால் தகராறுக்காக இரத்தச் சொந்தங்களை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறவர்கள்தானே நாம்!

ஒரு ஓசி பீடிக்காக கொலை செய்துவிட்டு போகிற தமிழன்- ஏன் இனத்துக்காக ஒன்றைச் செய்துவிட்டு போகக்கூடாது?

நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு நாடு இருக்கிறது. எதிர்க்கிறவர்களை அழித்துவிட்டால்தான் அனைத்தும் சரிப்படும்.

தமிழின விடுதலையை எதிர்ப்பவர்களே! வந்து பாருங்கள் இராமேசுவரத்துக்கு அந்தக் கரையின் இரத்த வாடை தெரியும்! அவர்களின் கண்ணீர் அந்த இராமேசுவரத்து கடல் நீரில் உப்பாய் கரிக்கும்!............"

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry358458

Link to comment
Share on other sites

ஏதோ, இந்திய ராணுவ வருகைக்குப் பின்புதான் சோ விடுதலைப் புலிகளை எதிர்த்தார் என்பது போன்ற அர்த்தம் வருவது மாதிரி நெடுக்காலபோவான் எழுதியிருக்கிறார்.

சோ என்றுமே தமிழீழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரித்தவர் அல்ல. அவர் எப்பொழுதுமே எங்களை எதிர்த்து எழுதுபவர்தான். அசல் 22 கரட் பார்ப்பனியவாதிதான் இந்த சோ.

இந்து ராம்தான் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான சில செய்திகளை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அனைத்து பார்ப்பனியர்களும் சந்தர்ப்பம் பார்த்து, எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். இன்றைக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் மாறி விடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு இவர்களுடைய பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இவர்களுக்கு சில ஈழத் தமிழர்கள் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குவது அதிர்ச்சியை தருகிறது.

திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு மிக்கவர்கள். அவர்கள் அன்றும் ஆதரித்தார்கள். இன்றும் ஆதரிக்கிறார்கள்.

அன்றைக்கு தேசியத் தலைவர் இந்துக் கோயில்களுக்கு எல்லாம் சென்று நேர்த்திக் கடன்கள் செய்து கொண்டிருந்தார். அதே வேளை மற்றைய இயக்கத் தலைவர்கள் சிலர் தங்களை பகுத்தறிவாளர்கள் போன்று காட்டிக் கொண்டார்கள்.

ஆனால் இவர்களை எல்லாம் தவிர்த்து விட்டு, தேசியத் தலைவரை திராவிடர் கழகம் உறுதியாக ஆதரித்தது: சில இயக்கத் தலைவர்கள் இது பற்றி வீரமணி அவர்களிடம் குறை பட்டுக் கொண்ட போதும், வீரமணி தன்னுடைய ஆதரவு புலிகளுக்குத்தான் என்றும் அவர்களால்தான் ஈழம் பெற முடியும் என்றும் உறுதியாகச் சொல்லி விட்டார்.

இதைத்தான் நாம் பகுத்தறிவு என்று சொல்கிறோம்.

ஆனால் சோ போன்ற பார்ப்பனர்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள்தான். அரசியல், வியாபார நலன் கருதி ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட மற்றயை பார்ப்பனர்களும் நேரம் பார்த்து எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இதற்கும் தந்தை பெரியாருக்கும் சிலர் முடிச்சுப் போடுவது பெரும் அறியாமை அல்லது மோசடி. இவர்களுக்கு இந்திய, தமிழக அரசியல் குறித்த அறிவு சற்றும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தந்தை பெரியாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சில ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை நான் காண்கிறேன்.

உறுப்பினர் பற்றிய விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Link to comment
Share on other sites

துக்ளக் ஈழத்தமிழருக்கு மாத்திரம் இல்லை தமிழக தமிழருக்கும் எதிரானது. அங்கு தி.மு.க ஆட்சிக்கு வருவதையே துக்ளக் விரும்புவதில்லை. தமிழ் தேசியம் பற்றி பேசினால் துக்ளக் பேப்பருக்கு காய்ச்சல் பிடித்துவிடும்.

தமிழகத்திலே மிகவும் குறைவான எண்ணிக்கை விற்கப்படும் வார இதழ் துக்ளக். அது எப்படி வருமானம் இல்லாமல் ஓடுகிறது. சோவுக்கு றோவின்நிதி ஒதுக்கீடு இருகின்றது. அவர் தான் தமிழ்நாட்டில் றோவின் காவலாளி..... அவனை பற்றி தமிழக உணர்வாளர்களும் அறிவார்கள்.

எங்கட வியாபார குப்பைகள் தான் யோசித்து சிலதை தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.