Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையும் இந்தியாவும் கண்டமேடை எனும் ஒரு பொது அடித்தளத்தின் மேல் தான் அமைந்துள்ளன. இந்தப் புவியியல் அமைப்பு இலங்கையின் வடமுனைக்கும் இந்தியாவின் தென் துருவத்திற்குமிடையில் ஒரு பாலம் அமைந்திருப்பது போன்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கக் கூடும். நான் இராமர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் தீர்ப்பெழுத வரவில்லை. ஆனால் இப்படியான பண்டைய கட்டமைப்புகள் இருந்தனவா என அறிய, நுணுக்கமான முறைகள் எல்லாம் நவீன தொல்பொருளியலில் தற்போது பயன்படுகின்றன. இந்தியாவுக்கோ அல்லது முன்னேறிய இன்னொரு நாட்டுக்கோ இத்தொழில்நுட்பங்கள் எட்டாதவை அல்ல. இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் ஆய்வுகள் செய்யப் படாமல் இருக்கக் கூடும். அல்லது ஆழ ஆராயப் போய் அப்படி இல்லை என்று கண்டுபிடித்தால் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கைங்கரியத்தில் ஆப்பு விழலாம் என்ற பயமும் உண்மையான விஞ்ஞான ஆய்வைத் தள்ளிப் போட ஒரு காரணமாக இருக்கலாம். இதற்காகத்தான் திறந்த மனதுடன் இப்படியான விடயங்கள் அணுகப்பட வேண்டும். யேசுவின் உடலைப் போர்த்தியதாக ஒரு துணி கண்டுபிடிக்கப் பட்ட போது முதலில் வத்திக்கான் அதை ஒரு புனிதப் பொருளாக மறைத்து வைத்தது. பின்னர் வத்திக்கான் தலைமையில் மாற்றம் வந்த போது இத்துணியின் மாதிரிகள் உலகின் சில முன்னணி ஆய்வுகூடங்களுக்கு காபன் டேற்றிங் செய்வதற்காக அனுப்பப் பட்டன. திறந்த மனதுடனான அணுகுமுறை இப்படிப் பட்ட உணர்ச்சி மயமான விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எனது கேள்வி பல நுற்றாண்டு காலமாக சொல்லப்படும் இராமாயணத்தில் வரும் அதே இடத்தில் அதேபகுதியில் இந்த பாலம் போன்ற அல்லது பாலம் எப்படி உருவாகியது?

இப்போ தான் இதை கடலுக்கடியில் கண்டுபிடித்தார்கள்.

ஆனால் இராமாயணத்தில் பல பல நுற்றாண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றார்கள். அதற்கான அடையாள சின்னங்களும் நம்பிக்கை தருவதாக பல இருக்கின்றன

இதன் பொருள் என்ன?

உங்களுக்காக இந்த இணைப்பு. இராஜஇராஜ சோழன் தஞ்சாவூர் கோவிலை எப்படிக் கட்டியிருப்பான் என்பது பற்றிய ஒரு ஆய்வு.

http://video.google.ca/videoplay?docid=-5096103596865842301

நன்றி துயவன்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள தமிழ் லினக்ஸ்,

தேடிப்பார்க்க வேண்டும் என்பதே சுருக்கமான பதில். சில சாத்தியமான விளக்கங்கள் தரலாம். இராமாயணம் எழுதப் பட்ட காலத்தில், தென்னிந்தியாவை ஒட்டிய புவியமைப்பு அறியப்பட்டிருக்கலாம்.அது ஒரு கற்பனைக் கதையாக எழுதப்பட்டதாக ஒரு சாரார் சொல்வதால், எழுதியவர் இப்புவியியல் அமைப்பை தனது கதையில் இராமர் கட்டிய பாலமாகச் சித்திரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் தெளிவாக வேண்டுமெனில், இராமாயணத்தின் உண்மையான வயது கணிக்கப் பட வேண்டும். அக்காலப் பகுதியில், அப்பிராந்திய நாகரிகத்தில் இது போன்ற புவியியல் அறிவு இருந்ததா எனப் பார்க்க வேண்டும். தொல்பொருள் மற்றும் இதிகாச இயல் போன்ற துறைகளில் வியாக்கியானம் தான் முக்கியமானது. அந்த வியாக்கியானம் அதைச் செய்பவரின் விருப்பு வெறுப்பினால் அன்றி, தகவல்களினால் உருவாக்கம் பெற வேண்டும்.உதாரணத்திற்கு, பைபிளை அப்படியே யாரும் நம்புவதோ பின் தொடர்வதோ மூட நம்பிக்கை. ஒவ்வொரு கருத்தும் அது என்ன காலத்தில் எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

சாதி பாக்கல்லையோ

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள தமிழ் லினக்ஸ்,

தேடிப்பார்க்க வேண்டும் என்பதே சுருக்கமான பதில். சில சாத்தியமான விளக்கங்கள் தரலாம். இராமாயணம் எழுதப் பட்ட காலத்தில், தென்னிந்தியாவை ஒட்டிய புவியமைப்பு அறியப்பட்டிருக்கலாம்.அது ஒரு கற்பனைக் கதையாக எழுதப்பட்டதாக ஒரு சாரார் சொல்வதால், எழுதியவர் இப்புவியியல் அமைப்பை தனது கதையில் இராமர் கட்டிய பாலமாகச் சித்திரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் தெளிவாக வேண்டுமெனில், இராமாயணத்தின் உண்மையான வயது கணிக்கப் பட வேண்டும். அக்காலப் பகுதியில், அப்பிராந்திய நாகரிகத்தில் இது போன்ற புவியியல் அறிவு இருந்ததா எனப் பார்க்க வேண்டும். தொல்பொருள் மற்றும் இதிகாச இயல் போன்ற துறைகளில் வியாக்கியானம் தான் முக்கியமானது. அந்த வியாக்கியானம் அதைச் செய்பவரின் விருப்பு வெறுப்பினால் அன்றி, தகவல்களினால் உருவாக்கம் பெற வேண்டும்.உதாரணத்திற்கு, பைபிளை அப்படியே யாரும் நம்புவதோ பின் தொடர்வதோ மூட நம்பிக்கை. ஒவ்வொரு கருத்தும் அது என்ன காலத்தில் எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

அப்போ இலங்கையிலும் இதன் பிரதிபலிப்பு எப்படி ஏற்பட்டது? திருக்கேதீஸ்வரம் திருகோணமலை திஸ்சமாகாராமை (கடலுக்கு நடுவில் ஒரு பாறை) போன்ற இடங்களிலும் இதன் அடையாள சின்னங்கள் இருக்கின்றன.

இந்த இடங்கள் எல்லாம் இராமாயணத்தில் கூறிப்பிடபடுகின்றன.

அதற்கு என்ன விளக்கம் தர போகின்றீர்கள்? புவியியல் அறிவு என்றா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :icon_idea:

தஞ்சாவூர் கோயில் எப்படி கட்டப்பட்டது. துயவன் தந்த இணைப்பில் யானைகள் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதில் ஒரு சந்தேகம் யானைகளால் சரியான இடத்தில் அந்த பிரமாண்டமான கற்களை நகர்த்தி சரியான நிலைகளில் வைக்க முடியுமா?? மனிதரால் அவை நகர்த்த முடியாது.

யானை கொஞ்சம் வேகமா தள்ளினாலே அம்போ தான் :lol: அந்த உயரத்திலிருந்த அந்த கல்லு விழுந்தால் யார் கச் பிடிப்பது :lol::lol:

Link to comment
Share on other sites

தமிழ் லினக்ஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யார்தான் தஞ்சைப் பெருங்கோவிலைக் கட்டியது. தமிழரின் கட்டடக்கலை வரலாற்றில் தஞ்சைப் பெருங்கோவில் தனித்துவம் மிக்கது.

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது???

Link to comment
Share on other sites

தமிழ் லினிக்ஸ்

எமது பகுத்தறிவாளர்கள் பாலம் கட்டியதைக் காணவில்லை. அவர்களின் பகுத்தறிவு விதி 9 சொல்வதன் படி, காணாத ஒன்றை அவர்கள் நம்ப மாட்டார்கள். அதை விடுங்கோ!..நான் இருப்பதைக் கூட அவர்கள் நம்பமாட்டார்கள் ஏன் என்றால் என்னை ஒருத்தரும் காணவில்லை

தூயவன் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் மணற்திட்டை மனிதனால் கட்டப்பட்ட பாலமா அல்லது இயற்கையினால் உருவானதா என்று நிறுவுவதற்குரிய எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தனியே இராமாயனத்தில் சொல்லப்பட்டதை வைத்து இராமர் பாலம் கட்டினார் என்றும் அது மட்டும்தான் உண்மையென்று நீங்கள் நம்புவதைப் போன்று மற்றவர்களும் நம்பவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் போலும்.

Link to comment
Share on other sites

தூயவன்

உண்மையில் தென்இந்தியாவில் இருக்கும் அந்த பிரமாண்டமான கோயில்கள் மற்றும் சிற்ப கலைகளை பார்க்கும் போது எவ்வளவு முன்னேறிய சமூதாயம் இப்போ இப்படி அடிமைதனமாய் இருக்க வேண்டியுள்ளதே என்ற எண்ணம் தான் ஏற்படுகின்றது.

எமது இதிகாசங்களில் பல உண்மைகள் மறைந்துள்ளன. அதற்கு சான்றாக இப்பவும் இருப்பது இந்த சிற்ப கலைகளும் அடையாள சின்னங்களுமே.

ஐயகோ எப்படித்தான் அடிமைத்தனமாய் போனதோ? சூத்திரன் எண்ட பெயரில் ஒதுக்கப்பட்டவன் கலைகள் கற்றால் ஈயம் காய்ச்சி அவன்ரை காதுக்கை ஊற்றினால். எப்படித்தான் முன்னேறும் சமூகம்?? அது சரி ஈழத்தமிழன் சிங்களவன் அடக்குகிறான். தமிழ்நாட்டு தமிழன் யாரிடம் அடிமைத்தனமாக அண்ணா இருக்கிறான்?

உங்கடை இதிகாசங்களிலில் இருக்கும் உண்மைகளில் எனக்குத் தெரிந்த சில...

- நரகாசுரன் உலகத்தை பாயாகச்சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளித்தான்

- பண்டியும் பூமியும் பாலுறவில் ஈடுபட்டு பிள்ளையும் பிறந்தது

- குரங்கு கரடியொல்லாம் இராமரோடு சேர்ந்து இராவனுடன் போரிட்டது.

Link to comment
Share on other sites

அப்ப சேதுவுக்கு ஆப்பு எண்டிறியள்.

இது எதிர்பார்த்தது தானே இராமர் இல்லாட்டி அங்க ஒரு அரசியல் வண்டி ஓடாது. இஞ்ச பிழைச்சா பிறகு அயோத்தி எல்லாம் பிழைச்சுபோம்

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் என்னுடைய தலைமையில் இயங்குகின்ற "அறிவியல் ஆய்வு மையம்" ராமர் பாலம் இல்லை என்று கண்டறிந்தள்ளது.

கம்பராமாயணத்தை தீவிரமாக ஆராய்ந்ததில் எமது "அறிவியல் மையம்" இந்த அறிவியல் உண்மையை கண்டுபிடித்துள்ளது.

:rolleyes::lol::lol::D:D

பெங்களுரில் யாரோ ஒருவர் "அறிவியல் ஆய்வு மையம்" என்ற பெயரில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு வான்மீகி இராமாயணத்தை ஆராய்ந்து அறிவியில் உண்மையை கண்டுபிடித்துள்ளாராம்.

இதை சிலர் நம்புகிறார்களாம்

இராமாயணம், மகாபாரதம், புராணங்களில் இருப்பது அறிவியலா?

இதிலே இன்னும் ஒருவர் தஞ்சை பெரிய கோயிலையும் கடலில் இருக்கின்ற மணல் திட்டையும் ஒப்பிடுகின்றார்.

தஞ்சையிலே இருப்பது கோயில் என்பதில் யாருக்கம் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் கடலுக்கு அடியில் இருப்பது பாலாமா, மணல் திட்டுக்களா இன்பதே இன்னும் முடிவாகவில்லை.

இந்த இரண்டையும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது?

உலகம் முழுவதும் எத்தனையோ அற்புதக் கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தும் மனிதர்கள் ஆண்டுக் கணக்கில் உழைத்து, ஆயிரக் கணக்கான மனிதர்கள் மடிந்து, கட்டி முடிக்கப்பட்டவை.

தரையில் இருக்கின்ற சீனப் பெருஞ்சுவரைக் கட்ட எத்தனை காலங்கள் சென்றன என்று தெரியுமா? இதன் போது எத்தனை மனிதர்கள் மடிந்தார்கள் என்று தெரியுமா?

ஆனால் கடலில் இருக்கின்ற ஒரு மணற் திட்டைக் காட்டி இதை குரங்குகளும், கரடிகளும் கட்டிய பாலம் என்று சொல்வது எவ்வளவு மடமை?

முதலில் அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட வேண்டும்

அதன் பிறகு அதன் காலம் கண்டறியப்பட வேண்டும்.

அதன் பிறகு அக் காலத்தில் வாழந்த மனிதர்கள் பற்றி அறியப்பட வேண்டும்

இவைகள் எல்லாம் நடந்தால், அதன் பிறகு முக்கியமான ஒரு விடயம் தெரிய வரும். இந்தப் பாலத்தை தன்னுடைய கதையில் குறிப்பிட்ட வான்மீகி ஏறக்குறைய எக் காலத்தில் வாழ்ந்திருப்பார் என்பது தெரிய வரும்.

இங்கே ஒருவர் திருகேதிஸ்வரத்தில் உள்ள பாறை இராமாயணத்தில் வருவதாக சொல்லியுள்ளார். இராமாயணத்தில் உள்ள அந்தக் குறிப்பை தர முடியுமா?

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :lol:

டங்குவார், இது கொஞ்சம் அதிகம்!

பிறகு நான், ஏன் கடவுள் ஒரு வினாடியிலேயே அரக்கர்களை அழிச்சு சீதையை சிறை மீட்டிருக்கலாமே என்று கேட்க, பிறகு சபேசன் வந்து, இராவணன் சிதையை கடத்த முன்னரே முற்றும் உணர்ந்த இராமன் சீதையை கடத்தி ஒளிச்சு வைச்சிருக்கலாமே என்று கேட்க, அதுக்கு நான் அப்ப இராமாயணமே எழுதப்பட்டிருக்காதே என்று சொல்ல, அப்ப யம்மு வந்து "பேபிக்கு இராமாயணக் கதை சொன்னால்தான் சாப்பிடுவன்" என்று அடம்பிடிக்க, கடைசியில வலைஞன் வந்து இராமாயணத்தில சந்தேகம் என்றால் மின்னஞ்சலில் வால்மீகியோட தொடர்புகொள்ளச் சொல்லி திரியை அணைக்க........... இதுதானே உங்கள் திட்டம்!

ஆகவே நான் அப்படிக் கேட்கப் போவதில்லை! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ அந்த கதைகளில் எப்படி அந்த பெயர்கள் வந்தன? சரி அதை விடுங்கள். 18ம் நுற்றாண்டில் தென்இந்தியாவில் கட்டப்பட்டு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கும் பிரமாண்டமான கோயில்களை பாருங்கள்.

அப்போ எப்படி அதை கட்டினார்கள்?

காரைக்காலுக்கு அண்மையில் கடலுக்கடியில் இருக்கும் நகரம் என்ன?

இது காலத்துக்கு காலம் அழிந்து மீண்டும் உருவாகும் யுகமாயும் இருக்கலாம்

ஆனால் ரோமிலிருக்கும் ஜேசுநாதர் இரத்தக்கரை படிந்ததாக சொல்லப்படும் துணியானது போலியானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது தெரியுமா.

தெனிந்தியாவில் பிரமாண்டாமான கோவில்களை கட்டி கொடுத்த கட்டிடக்கலை ஒரு விதையில் இருந்து மரமாக வளர்ந்த வளர்ச்சியே ஆகும். தலைமுறைகளின் பாதையில் இந்த கலைவளர்ச்சியின் பயணமும் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கும் அவ்வாறு இல்லாம ஒருசில தலைமுறைகளில் அந்தக்கலையை தொலைக்கப் பட்டிருந்தால் மக்களின், அரசுகளின் உரியபராமரிப்பின்றி அந்த சந்ததி தன் சொந்த தொழிலை துறந்திருக்கும்.

ஆனால் இதற்க்கும் இராமர் பாலத்துக்கும் என்ன முடிச்சு இருக்கின்றது.

அது இராமர்தான் கட்டுய பாலம் என்று சொல்பவர்கள், ஆககுறைந்தது இராமன்வரலாறு உண்மை என்பதை நீரூபித்தாலே போதுமாகின்றது பாலத்தின் கதையை ஏற்றுக்கொள்வதற்க்கு.

நாத்தீகர்கள் சொல்கிறார்கள் என்று நீங்கள் ஆத்திரத்துடன் பார்காது உண்மை மருந்துக்காவது உள்ளதா என்று யோசியுங்கள்.

வால்மீகி இராமாயணம் என்பது தமிழனுக்கு காதுகுத்தும் சடங்கு, அதை தமிழனின் தேசிய சடங்காக்கிய பெருமை கம்பராமாயாணம் என்பதையே சாரும்.

கம்பராமாயாணத்தின் பொய்களை தோலுரித்துக்காட்ட அதன் மூலக்கதை ஒன்றே போதும்.

இராமன் வரலாற்றை உண்மை என்று சொல்லவரும் எவராவது தெளிவாக கூறுங்கள்.

இராமன் வாழ்ந்த காலத்தில் இருந்து மனிதசந்ததி தொடர்ச்சியாக வாழ்கிறதா?

இல்லை புமி அழிவின் காரணத்தால் அந்த சந்ததி புவியில் இருந்து துடைக்கப்பட்டு இன்னொரு துவக்கம் தான் இன்றுள்ள சந்ததிக்கு ஆரம்பமாய் இருந்திருக்குமா?

இந்த சந்ததிக்கு விஞ்ஞானம் தான் உலகை ஆழ்வது, முன்னாள் சந்ததிக்கு மெய்ஞானம் ஆண்டது என்று சொல்லவருகின்றீர்கள். இரு சந்ததியினரும் ஒரேபூமியின் புதல்வர்கள்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வால்மீகி இராமாயணம் இருக்கு வேத காலத்திற்கு மிகப் பிந்திய நூலாகும் புத்தரின் காலத்திற்கும் பிந்தியது என்கிறார்கள். ஏனெனில் சாக்கியமுனி என்று புத்தரைப்பற்றியும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியாது. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்துக்கு அண்மைய காலங்களில் வாழ்ந்த ஒரு மன்னனைப் போற்றவே இராமாயணம் இயற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். முழு விபரங்கள் இல்லை. ராகுல சங்கிருத்தியாயன் போன்ற பகுத்தறிவாளர்கள் காப்பியங்களை பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நோக்கி பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். இராமன் என்பவன் ஒரு ஆரிய இளவரசன் அவன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலிருந்த ஆழங்குறைந்த கடற்பகுதியூடாக இலங்கைக்குச் சென்று திராவிட மன்னனான ராவணனுடன் போர்தொடுத்தான் என்று சரித்திரம் சொல்லியிருந்தால் அதுபற்றிய சர்ச்சை இந்தளவுக்கு இருக்காது. பொய்யும் புரட்டும் கலந்த புனைகதையாய்ப் போனதால் இராமனை மட்டுமன்றி எமது மன்னனான ராவணனையும் மறுத்துரைக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

Link to comment
Share on other sites

கடைசியில வலைஞன் வந்து இராமாயணத்தில சந்தேகம் என்றால் மின்னஞ்சலில் வால்மீகியோட தொடர்புகொள்ளச் சொல்லி திரியை அணைக்க........... இதுதானே உங்கள் திட்டம்!

:rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அறிவுக் கொழுந்துகளே..

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்த விடயம் தொடர்பாக ஓர் அறிவியல் ஆய்வுக்காக அனுமதி பெற முன் வைக்கப்பட்டுள்ள முன்னோடி அறிக்கை (draft proposal). இதனடிப்படையில் ஒரு அறிவியல் ஆய்வுக்கான தகுதியை இந்த விடயம் கொண்டிருக்கா என்பதை அவங்க தீர்மானிப்பாங்க. அதன் பின் தான் அறிவியல் ஆய்வுக்கான சான்றுகளைத் தேட குறித்த பகுதிகளை மாதிரிகளாக்கி ஆய்வுகளைச் செய்வர். ஆய்வுகள் திரட்டும் சான்றுகளின் அடிப்படையில் இறுதி ஆய்வும் அதன் முடிவுகளும் வெளியாகும்.

வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள படிதான் பாலம் 5 தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் சாத்தியப்படாது. நீங்கள் இன்று கடலுக்குள் காணும் பகுதி முன்னர் மேட்டு நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. அதன்படி ஒரு தொடர் பாதையை இடையிடையே கடலரிப்பால் அள்ளுப்பட்டுப் போன பகுதிகளை நிரப்பி பாதையாக அமைத்திருக்கலாம் தானே..! அதற்கு 5 நாள் போதும் தானே 5000 மனித வலுவைப் பாவிச்சிருந்தா..???!

எதுஎப்படியோ குறித்த பாலம் தொடர்பான புவியியல் கூறு அறிவியல் ஆய்வுக்கு உட்பட வாய்ப்புக் கேட்டு பிரேரிக்கப்பட்டிருப்பதானது முக்கியமான அம்சம். அதுதான் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சேது கால்வாய் தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன. அது வேறு விடயம். இது குறித்த புவியியல் அம்சமானது அறிவியல் ஆய்வுக்கு உட்பட வாய்ப்பளிக்கக் கோரி இந்தப் பிரேரிப்பு முன்வைகப்பட்டுள்ளது. இது வேறு விடயம். இது அங்கீகரிக்கப்படின் அறிவியல் ரீதியான ஆய்வுகள் ஆரம்பமாகும். இறுதியில் அறிவியல் ரீதியான முடிவுகள் எட்ட இது ஒரு முன்னோடி அவ்வளவும் தான்..!

இதை விளங்காம.. இங்கே பகுத்தரிவுக் கூட்டம்.. பினாத்திறது.. தேவையற்ற உணர்ச்சிப் பெருக்கின் விளைவு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா அறிவுக் கொழுந்துகளே..

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்த விடயம் தொடர்பாக ஓர் அறிவியல் ஆய்வுக்காக அனுமதி பெற முன் வைக்கப்பட்டுள்ள முன்னோடி அறிக்கை (draft proposal). இதனடிப்படையில் ஒரு அறிவியல் ஆய்வுக்கான தகுதியை இந்த விடயம் கொண்டிருக்கா என்பதை அவங்க தீர்மானிப்பாங்க. அதன் பின் தான் அறிவியல் ஆய்வுக்கான சான்றுகளைத் தேட குறித்த பகுதிகளை மாதிரிகளாக்கி ஆய்வுகளைச் செய்வர். ஆய்வுகள் திரட்டும் சான்றுகளின் அடிப்படையில் இறுதி ஆய்வும் அதன் முடிவுகளும் வெளியாகும்.

வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள படிதான் பாலம் 5 தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் சாத்தியப்படாது. நீங்கள் இன்று கடலுக்குள் காணும் பகுதி முன்னர் மேட்டு நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. அதன்படி ஒரு தொடர் பாதையை இடையிடையே கடலரிப்பால் அள்ளுப்பட்டுப் போன பகுதிகளை நிரப்பி பாதையாக அமைத்திருக்கலாம் தானே..! அதற்கு 5 நாள் போதும் தானே 5000 மனித வலுவைப் பாவிச்சிருந்தா..???!

அட அறிவு பொங்கி வழியும் அற்புதமே!

இராமர் வரலாறே உண்மை என்பதை நிரூபிக்க வலு இல்லாத இந்திதுவ மதவாதம், பாலம் கட்டப்பட்டது உண்மையா, இல்லையா என்பதை சொல்லப் போகிறதா?

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் தலையைக்கூட கேட்ட இந்துவெறி (இந்திவெறி) வாழும் நாட்டில் தலையை வைத்திருக்கு விரும்பும் எவனும் இந்த ஆராட்சி முடிவுகளின் உண்மையைச் சொல்ல விரும்புவானா?

Link to comment
Share on other sites

.....இதை விளங்காம.. இங்கே பகுத்தரிவுக் கூட்டம்.. பினாத்திறது.. தேவையற்ற உணர்ச்சிப் பெருக்கின் விளைவு. :rolleyes:

நேடுக்ஸ், ஆர் யூ ஒல்ரைட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அறிவு பொங்கி வழியும் அற்புதமே!

இராமர் வரலாறே உண்மை என்பதை நிரூபிக்க வலு இல்லாத இந்திதுவ மதவாதம், பாலம் கட்டப்பட்டது உண்மையா, இல்லையா என்பதை சொல்லப் போகிறதா?

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் தலையைக்கூட கேட்ட இந்துவெறி (இந்திவெறி) வாழும் நாட்டில் தலையை வைத்திருக்கு விரும்பும் எவனும் இந்த ஆராட்சி முடிவுகளின் உண்மையைச் சொல்ல விரும்புவானா?

இந்த விடயம் அறிவியல் ரீதியான அணுகப்படும் போது எட்டப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அறிவியல் உலகம் மதவாதிகளின் மனங்களையும் பல படிநிலைகளில் வென்றுதான் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமன்றி இந்தியாவும் ஏன் தமிழகத்தில் உள்ள பகுத்தரிவு கூட்டமும் விதிவிலக்கல்ல..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

நேடுக்ஸ், ஆர் யூ ஒல்ரைட்?

நெடுக்ஸ்சை உணர்ச்சிவசப் பட்டி கதைக்கிறதென்று நேரடியாகவே கேட்கலாமே...??? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அறிவியல் ஆய்வு மையத்தின் இவ்வரிய பணி புல்லரிக்கச் செய்கின்றது.

இராமாயணத்தில் வரும் இராவணனுக்கு பத்து தலைகள் வந்தது பற்றியும், அதன் அமைப்பு முறை பற்றியும்,

அதன் உயிரியல் சாத்தியங்களையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவித்தால் இராமாயண எதிரிகளுக்கு நல்ல பதிலடியாக இருக்கும்.

அப்புறம் பாலம் எல்லாம் கொசுறுப் பிரச்சனையாகிவிடும்.

அறிவியல் ஆய்வு மையமே உங்கள் பணிகளை முடுக்கிவிடுங்கள்.

இந்த அறிவிலிகளின் முகத்தில் அசடு வழியட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலரின் கேள்விகளுக்கான பதில்

திருக்கேதீஸவரம் இல்லை திஸ்சமகாரகமவில் உள்ள பாறை. இன்றும் இராவணன் கோட்டை என்று தான் அழைக்கபடுகிறது அங்கே.ஆரம்ப காலத்தில் அங்கே தமிழர் தான் இருந்தனர். இப்போ சிங்களவர் பூமியாக மாற்றப்பட்டுள்ளது.

தஞ்சை பெரும் கோயில் எப்படி கட்டப்பட்டதோ அக்காலத்தில். அதே போல இராமாயண காலத்திலும் அந்த பாலம் கட்டப்பட்டு இருக்கலாம்.

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் அப்போ தஞ்சை பெரும் கோவிலை கட்டியவர் HARDARD UNIVERSITY தான் படிச்சவர் என்று சொல்ல போறிங்களோ :lol:

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது

அதை தான் நானும் கேட்கிறேன்.

பாறைகளை யானைகளை கொண்டு நகர்த்தலாம். ஆனால் கோபுரத்தின் மேலே சரியான நிலையில் வைக்க முடியுமா? அந்த கோபுரம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது அசையாமல்.

ஆனால் இத்தாலியில் சாய்ந்த கோபுரம் சாய்ந்து நிற்கின்றது :rolleyes:

தமிழ்நாட்டு தமிழன் யாரிடம் அடிமைத்தனமாக அண்ணா இருக்கிறான்?

இது கூட தெரியாத சின்னபுள்ள தனமா இருக்கே குஸ்புவிடம் :lol::D

இதிலே இன்னும் ஒருவர் தஞ்சை பெரிய கோயிலையும் கடலில் இருக்கின்ற மணல் திட்டையும் ஒப்பிடுகின்றார்.

தஞ்சையிலே இருப்பது கோயில் என்பதில் யாருக்கம் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் கடலுக்கு அடியில் இருப்பது பாலாமா, மணல் திட்டுக்களா இன்பதே இன்னும் முடிவாகவில்லை.

இந்த இரண்டையும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது?

இதிலிருந்து என்ன உங்களை பற்றி தெரிகிறது.

இன்றும் பண்டைய நாகரிகம் எவ்வளவு வளர்ச்சியானது என்பதை சான்று பகிறுகின்றது தஞ்சை கோவில்.

அதேபோல இராமர் பாலம் ஏன் இருந்திருக்க கூடாது,

காரைக்கால் கடலுக்கு கீழ் புதைந்துள்ள நகரம் ஏக்காலத்தின் நகரம்? அதுவும் கடலுக்கு கீழே தான் உள்ளது.

திருகோணமலையில் கடலுக்கடியில் இருக்கும் கோவில் எக்காலத்தான்? இந்த கோவில் பற்றி இராமாயணத்தில் கூறப்படவில்லையா?

இவை இருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது

மின்னல்

உங்கடை இதிகாசங்களிலில் இருக்கும் உண்மைகளில் எனக்குத் தெரிந்த சில...

- நரகாசுரன் உலகத்தை பாயாகச்சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளித்தான்

- பண்டியும் பூமியும் பாலுறவில் ஈடுபட்டு பிள்ளையும் பிறந்தது

- குரங்கு கரடியொல்லாம் இராமரோடு சேர்ந்து இராவனுடன் போரிட்டது.

காலாகாலத்தில் இவை திரிபடைந்து இருக்கலாம்.

உதாரணமாக ஒன்றை கூறுகிறேன் கேழுங்கள். நம்புவது உங்களை பொறுத்தது. ஆனால் இது பொய்யல்ல.

எனது மூப்பாட்டனார் பாட்டனார் எல்லோரும் சித்த வைத்தியர்கள்.

நான் ஈழத்திலிருக்கும் போது அவர்களுடைய மருத்துவ ஏடுகளை பொழுது போக்கா எடுத்து வாசிப்பேன். ஆனால் ஒன்றுமே விளங்காது.

அதில் எழுதியிருந்த ஒன்று இப்பவும் ஞாபகம் உள்ளது.

சூரியனை பிடித்து அண்டையில் போட்டு நுண்ணானுடன் காச்சினால் நாககர்ப்பம் கிடைக்கும்

இது என்ன?

எனது தந்தையாருக்கும் இது பற்றி தெரியாது. எனது தாயாரிடம் கேட்டபோது என் தந்தையார் சிறுவயதில் ரொம்ப குளப்படி அதனால் எனது பாட்டனார் அவருக்கு அந்த சித்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்க மறுத்துவிட்டாராம்... அப்படி நிலைமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லினக்ஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யார்தான் தஞ்சைப் பெருங்கோவிலைக் கட்டியது. தமிழரின் கட்டடக்கலை வரலாற்றில் தஞ்சைப் பெருங்கோவில் தனித்துவம் மிக்கது.

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது???

உண்மை தான். யானைகளால் தூக்கி வைத்திருக்க முடியாதது தான். ஆனால் எப்படிக் கட்டிமுடிக்கப்பட்டது. அதையும், கற்பனை என்றோ, பொய் என்றோ சொல்லப் போகின்றீர்களா?

-------------------------------------

சபேசனுக்கு மாதம் ஒரு அமைப்புத் தொடங்கின்றதே வேலையாகக் கிடக்குப் போல. ராமசாமி இயக்கம் தொடங்கினீர்கள் அதற்கு என்னாச்சு. ராமசாமியைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். அதனால் தொடங்கினீர்கள். மன்னிக்கலாம். இப்போது தொடங்கியிருப்பது அறிவியல்........... மன்னிக்கவே முடியாது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான். யானைகளால் தூக்கி வைத்திருக்க முடியாதது தான். ஆனால் எப்படிக் கட்டிமுடிக்கப்பட்டது. அதையும், கற்பனை என்றோ, பொய் என்றோ சொல்லப் போகின்றீர்களா?

-------------------------------------

சபேசனுக்கு மாதம் ஒரு அமைப்புத் தொடங்கின்றதே வேலையாகக் கிடக்குப் போல. ராமசாமி இயக்கம் தொடங்கினீர்கள் அதற்கு என்னாச்சு. ராமசாமியைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். அதனால் தொடங்கினீர்கள். மன்னிக்கலாம். இப்போது தொடங்கியிருப்பது அறிவியல்........... மன்னிக்கவே முடியாது. :rolleyes:

துயவன் இவர்கள்

போற போக்கை பார்த்தால் தஞ்சை கோவில் Ulead GIF Animator and Photoshop மூலம் தான் உருவானது என்று சொல்ல போயினம் போல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

தமிழ்லினக்ஸ்!

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதும் மனிதர்கள்தான். சீனப் பெருஞ்சுவரைக் கட்டியதும் மனிதர்கள்தான். தாஜ்மகாலைக் கட்டியதும் மனிதர்கள்தான். மனித சக்திதான் இவைகளை சாதித்தது.

ஆனால் பிரச்சனை அதுவல்ல

ராமர் பாலம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே ஒரு பாலம்தானா?

அது பாலம் என்றால், அதை யார் கட்டியது என்று ஆராய்வதுதான் அறிவுள்ள செயலே தவிர, அதை ராமனும் குரங்குகளும் கட்டின என்று சொல்வது அறிவுள்ள செயல் அல்ல.

நீங்கள் அதை பாலம் என்று நம்பினால், அதை யார் கட்டியிருப்பதாக நம்புகிறீர்கள்?

வானத்திலே சந்திரன் இருப்பது உண்மை. சந்திர கிரகணத்தின் போது, அது கண்ணுக்குத் தெரியாமல் போவதும் உண்மை. அதற்காக சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று நம்புகிறீர்களா?

பாலம் இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அதை குரங்குகள் கட்டியதாக நம்புவீர்களா?

மணல்திட்டு அல்ல, அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட்டால், நான் எவ்வித தயக்கமும் இன்றி அதை பாலம் என்று ஒத்துக்கொள்வேன். ஆனால் அதை இராமாயணத்தில் வருவது போன்று குரங்குகளாலும் இராமனாலும் கட்டப்பட்ட பாலம் என்பதை நம்புகின்ற அளவிற்கு நான் முட்டாள் அல்ல.

அந்தப் பாலத்தை கட்டிய மனிதர்கள் யார்? எக் காலத்தில் கட்டப்பட்டது போன்ற விடயங்களையே அறிந்த கொள்ள ஆர்வம் காட்டுவேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பாலத்தின் வயது கண்டறியப்பட்டால், அதுவே இராமாயணத்தில் உள்ள பல பொய்களை வெளிப்படுத்திவிடும்.

இங்கு திஸ்சமகாரகமவில் உள்ள பாறை பற்றி சொன்னீர்கள். அது பற்றிய குறிப்பு ராமாயணத்தில் எங்கு வருகின்றது? அந்தக் குறிப்பைத் தயவுசெய்து தருவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.