Jump to content

ஐந்து நாட்களில் 34கி.மீ பாலம் கட்டுவது சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரே நாளில் ஒரு பாலத்தை சிறிது நாட்களுக்கு முன்னர் கட்டி முடித்தார்கள்( 1-3 மாதங்களுக்கு முன்னர்)

அதன் விஸ்திரணம் அளவு பற்றி எனக்கு தெரியாது. யாருக்கும் இது பற்றி தெரிந்தால் சொல்லவும்.

கனடா தலை நகரம், ஓற்ரோவா வில்தான் கடந்த ஆவணி மாதம் நடந்தது. பக்கத்தில இருந்த வெளியில் புதிய பாலத்தை வடிவமைத்தனர். ஆனால் அதை கட்டுவதற்கு எவ்வளவு நாள் எடுத்ததென மறந்திட்டேன். பின்னர் ஒரே இரவில் கனரக இயந்திரங்களின் உதவியுடம் பழைய பாலத்தை எடுத்திட்டு புதிய பாலத்தை வைத்தனர். இது நடந்தது கைவே 417 இல் உள்ள ஜலன்ட் பார்க் ஓவர்பாஸ் எண்டு கைவேக்கு மேலால போற பாலம். கனடாவிலையோ இல்லை ஒன்ராறியோவிலையோ எண்டு மறந்திட்டேன் ஆனால் இதுதானம் முதல் முதலான முயற்ச்சி. அதானல் அதிக மக்கள் பார்வையிட வருவார்கள் என எதிர் பார்க்கபட்டது. அதை இலகுபடுத்த ஒன்லைன்னில் லைவ் ஒளிபரப்பு செய்தனர்.

மேலதிக தகவல் & காணொளி

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

இதுக்கு தான் பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்பதோ :lol::unsure:

http://www.nowpublic.com/canada-replaces-bridge-overnight

பாலம் எங்கை கட்டினது எண்டுதானே கேட்டன். கனடாவில் ஒரே நாளில் பாலம் கட்டமுடியாதெண்டா சொன்னன். அது சாத்தியமே இல்லை எண்டா சொன்னன். ஒரு மாதிரி இணைப்பைத் தேடிப்பிடித்து விட்டு பொல்லுக் கொடுத்து அடிவாங்கிற கதையெல்லாம் அளவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பபோ சீதையைத் தூக்க எப்படி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் சீதையைக் கடத்திய பின்னர் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இராவணனால் செல்ல முடிந்தது. இராமர் பாலம் கட்டிப்போனான். இராவணனால் எப்படிப் போகமுடிந்தது?

இராவணன் என்று ஒருவன் உண்மையிலேயே இருந்திருந்தால்தானே போக வேண்டி வந்திருக்கும் போவதற்கும் ஒரு வழி சமைக்கப்பட்டிருக்கும்.

இது வெறும் கற்பனை கார்ட்டுன் அதுதான் புஸ்பவிமானம் அதிரடியாக உள் நுழைந்தது.

ஆனால் நிச்சயமாக கெலிகொப்ரர் ரகமாகத்தான் இருக்க வேண்டும் காரணம். சீதை விமான ஓடுபாதை அருகே நின்றிருக்கவில்லை. அத்தோடு புள்டோசர்களில் மண் அள்ளுவதற்காக பயன்படும் அந்த பாரிய இரும்பு கோலியும் பிரமாண்டமான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். போகும் பாதையில் கடல் இருப்பதால் சீதை விழுந்து விடமாலிருக்க கூடியதான அளவு பெரியதாக அது இருந்திருக்கும்.

இது வெறும் 3.0047 நிமிடங்களில் செய்யப்பட்டது. அந்த இரும்பு கோலியை உருக்கி வார்ப்பதற்கு இராவணன் தனது பத்து கைகளிலே' எட்டு கைகளை மட்டுமே பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிட தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் டங்குவார்... இராமரைப் பற்றி இவ்வளவு அலசுறீங்களே தெய்வீக சக்தி படைத்த ஜேசு கிறிஸ்து கூட சிலுவை மரணம் வரை தான் இறையருள் மிக்கவன் என்று காட்டாமல் சாதாரண மனிதனாகத்தானே வாழ்ந்ததா கிறிஸ்தவம் சொல்கிறது. உயிர்ந்தெழுந்த போதுதான் அவருக்குள் இருந்த தெய்வீக மகிமை வெளிப்பட்டதாச் சொல்லுறாங்க. ஏன் இராமரும் இதே அச்சில் செயற்பட்டிருக்கக் கூடாது. அங்கால நபிகள் நாயகத்துக்குப் பின்னாடியும் நிறைய இருக்குது.

இராமர் பாலம் என்பது தற்போதைய நவீன கால பாலங்கள் போன்றது என்பதாக நீங்கள் கற்பனை செய்வதற்கு இராமாயணம் பொறுப்பல்ல. அது பாலமல்ல. கடலூடு தரையை இணைக்கும் பாதை. இடையிடையே குறுக்கடற்குன்றுகளைக் கடக்க பாலம் அமைத்திருக்கலாம் இல்லையா..??! அறிவியல் தான் தான் ஆராயிறன் என்றுதே பிறகேன் நீங்கள் இடையில இவ்வளவு கஸ்டப்படுறீங்க. அறிவியலுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கட்டன். பாலமா.. புலுடாவா என்று..??!! :lol:

ஜேசு தான் கடவுளின் பிள்ளை என்பதை நிருபிக்க எவ்வளவோ வித்தைகளை முன் கூட்டியே செய்து காட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு பிறவி ஊமையையே வாய்பேச வைத்திருக்கிறார்.................. அடுக்கிக் கொண்டே போலாம்.

இது சின்னதொரு தரவுதான்! உங்களின் வாதத்திற்து எதிர் வாதமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தலை நகரம், ஓற்ரோவா வில்தான் கடந்த ஆவணி மாதம் நடந்தது. பக்கத்தில இருந்த வெளியில் புதிய பாலத்தை வடிவமைத்தனர். ஆனால் அதை கட்டுவதற்கு எவ்வளவு நாள் எடுத்ததென மறந்திட்டேன். பின்னர் ஒரே இரவில் கனரக இயந்திரங்களின் உதவியுடம் பழைய பாலத்தை எடுத்திட்டு புதிய பாலத்தை வைத்தனர். இது நடந்தது கைவே 417 இல் உள்ள ஜலன்ட் பார்க் ஓவர்பாஸ் எண்டு கைவேக்கு மேலால போற பாலம். கனடாவிலையோ இல்லை ஒன்ராறியோவிலையோ எண்டு மறந்திட்டேன் ஆனால் இதுதானம் முதல் முதலான முயற்ச்சி. அதானல் அதிக மக்கள் பார்வையிட வருவார்கள் என எதிர் பார்க்கபட்டது. அதை இலகுபடுத்த ஒன்லைன்னில் லைவ் ஒளிபரப்பு செய்தனர்.

மேலதிக தகவல் & காணொளி

ஓரு இரவில் வேறு ஒரு இடத்தில் வைத்து ஏற்கனவே கட்டி கட்டி வைத்த துண்டகளை பொருத்தினார்கள் என்பதே செய்தி. கொன்ங்றீட் காய்வதற்கே நேர அவகாசம் வேணுமய்யா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான யாழ்கள நேயர்களே..! இந்தத் தலைப்புக்கு பலவித எதிர்ப்புக் குரல்களும் ஒரு சில ஆதரவுக் கருத்துக்களும் வந்து சேர்ந்திருக்கின்றன..! :unsure:

முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இராமர் இருந்தார் / இல்லை என்பதோ அவர் பாலம் கட்டினார் / இல்லை என்பதோ, கடவுள் இருக்கிறாரா என்பதோ இங்கே விவாதப் பொருள் அல்ல. இந்திய அறிவியல் ஆய்வு மையம் இராமர் 103 குறுமலைகளை இணைத்து ஐந்து நாட்களில் பாலம் கட்டிமுடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறுகிறது. இது சரியா என்பதே கேள்வி..

இராமர் மனித / வானர வலுக்களை உபயோகித்திருந்தால் இது சாத்தியமற்ற ஒன்று என்பது என் கருத்து. ஒருவேளை குறுமலைகள் உண்மையிலேயே பெரிய தொடர்மலைகளாக இருந்து இடையிடையே இருந்திருக்கக்கூடிய இடைவெளிகளை கல் போட்டு நிரவியிருந்தால் அது சாத்தியம். அப்படி நடந்திருந்தால் அதைப் பாலமென்று கருத முடியாது.

மறுபுறத்தில் இராமர் கடவுளர்களுக்கே உரிய சக்திகளைப்பயன்படுத்தியிருந????தால்.., உதாரணத்துக்கு உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஒருவித ஒளிக்கற்றையைப் பயன்படுத்தியிருந்தால் இந்தப் பாலம் 5 வினாடிகளிலேயே சாத்தியமாகியிருக்கும். ஆனால் இந்திய ஆய்வு மையம் ஐந்து நாட்கள் தேவைப்பட்டதாகக் கூறுகிறது. இதிலிருந்து இராமர் கடவுளரின் சக்தியைப் பாவிக்கவில்லை என இந்திய அறிவியல் ஆய்வு மையம் ராமாயணத்தை மேற்கோள் காட்டி கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் ஒரு பாலத்தை ஐந்து நாட்களில் மனித வானர பலத்தை மட்டுமே கொண்டு 34 கி.மீ. கட்டவே முடியாது என்பது என் கருத்து.

நன்றி. வணக்கம்.. :lol:

இலங்கைத்தீவு 5 மில்லியன் ஆண்டுகளுக்க முன்பு இந்தியாவுடன் ஒட்டியே இருந்தது. பின்னாளில் நடந்த எரிமலைகளின் சீற்றத்தினால் தான் நகர்வுகள் எற்பட்டு இலங்கை தீவானது இதனிடியே நில தொடர்வு இன்னமும் இணைந்தே இருக்கிறது.

முக்கியமமானதும் கவலைக்கிடமானதுமான செய்தி தற்போதைய அவ்கானிஸ்தானுக்கு கீழே ஒரு பாரிய கண்டம் இருந்திருக்கிறது அது தனி தமிழர்கள் வாழ்ந்த ஒரு கண்டமாகவும் இருந்திக்கின்றது பின்னாளில் அது கடலுக்குள்ளேயே தாண்டு விட்டது. அமெரிக்காவில் இருக்கும் கவாய் தீவு தான் கடைசியாக கடலினுள் இருந்து வெளியே வந்த மலைப்பகுதி காரணம் எரிமலைகள்தான்

பாலமெல்லாம் சும்மா கார்டுன் கதை.............. நல்ல திரைக்கதை. வசனங்கள் இக்காலத்திற்கெற்ப திருத்தம் பெற்றால் இன்மும் நல்லது. அதாவது மீண்டும் ஒருமுறை திரையிடலாம். ( இக்காலத்திற்கெற்ப சீதைக்கு ஆடை குறைப்பும் அவசியம் அதிக நாள் ஒடவிட வேண்டுமெனில்)

கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு ................. இராவணணுடன் சீதைக்கு பாடல் காட்சிகளை அமைக்காது விடுதல் நல்லது. அனுமான்கனுடன் சீதைக்கு ஒரு பாடலை போடலாம்

நேரம் கிடைத்தால் கிழுள்ள லிங்கை பார்வையிடுங்கள் தலைவரே!

http://www.handprint.com/PS/GEO/time9.html#start

http://www.ucmp.berkeley.edu/geology/anim1.html

Link to comment
Share on other sites

அண்மையில் ஒரு மிகவும் பிரபலமான கடவுளின் அவதாரம் பற்றிய இன்னுமொரு இலக்கியம் ஒளிப்பட விபரணமாகப் பார்க்கக் கிடைத்தது.

அதில் அவர் இந்தியாவில் உள்ள மக்களின் வறுமையை போக்க எப்படி கடுமையாக உழைக்கிறார் என்று விளங்கப்படுத்துகிறார்கள்.

எந்த காண்டம் என்று ஞாபகம் இல்லை அதில் ஒரு அத்தியாயத்தில் அந்தப் பரம்பொருளின் அவதாரம் மக்களின் துயரம் வறுமை தாங்காது கோவத்தோடு சற்று வேகமாக நடந்து வருவார் அந்தப் பாவப்பட்ட ஜென்மங்கள் வாழும் பகுதியூடாக. அது புழுதியும் அழுக்குகளும் குடிசைகளும் நிறைந்த இடம்.

அவர் நடந்து வர அவர் கடந்து வந்த பகுதியெல்லாம் அவர் அருள் பெற்று தார் வீதகளாக நகரங்களாக மாறிக்கொண்டே வரும்.

மெதுவாக சாதாரணமாக நடந்தால் அது கிட்டத் தட்ட 5 km/h . அவதாரங்கள் ஆன்மீகவாதிகள் மெஞ்ஞானிகள் சற்று வேகமாக நடந்தால் ஒரு 8..10 km/h என்று எடுக்கலாம்.

அவர்கள் ஒரு நாளின் 24 மணத்தியாலங்களில் 6 மணத்தியாலங்கள் நடந்தாலே போதும் 6x8 = 48km தார் வீதி போட்டிடலாம்.

இந்த அவதாரம் பற்றிய இன்னொரு காண்டத்தில் இவர் 1 அல்ல 100 ஆக தொழிற்படக் கூடயவர் என்றும் இருக்கு. அப்படிப் பாத்தால் 6x8x100= 4800km கட்டலாம்.

ஆனபடியால் மண்திட்டிகளை இணைச்சு கட்டினாத்தான் 34 கீமி அய் 5 நாளில் கட்டலாம் என்று இல்லை. ஒருநாளிலேயே ஸ்ரீ ராமன் அந்தமாதிரி குடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு தான் கடவுளின் பிள்ளை என்பதை நிருபிக்க எவ்வளவோ வித்தைகளை முன் கூட்டியே செய்து காட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு பிறவி ஊமையையே வாய்பேச வைத்திருக்கிறார்.................. அடுக்கிக் கொண்டே போலாம்.

இது சின்னதொரு தரவுதான்! உங்களின் வாதத்திற்து எதிர் வாதமல்ல

ஏன் இராமர் செய்யல்லையே அப்படி சித்துவிளையாட்டுக்கள். நிறையச் செய்திருக்கிறார். சிலையாய் இருந்த பெண்ணை உயிர்ப்பித்தே இருக்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஏன் சத்தியசாய் பாபா கூட பல சித்துக்களைச் செய்யுறார்... அப்ப அவரும் ஜேசு போல கடவுளின் பிரதிநிதி என்பீர்களா..??!

ஜேசுவிற்குப் பிறகு ஏன் யாரும் தோன்றி இப்படி வாய் பேசாதவங்களை எல்லாம் பேச வைக்கும் மருத்துவ சிகிச்சையை அளிக்கல்ல..??! ஆக இராமர் செய்தா அது நம்பத்தகுந்ததல்ல. ஜேசு செய்தா நபிகள் செய்தா அதை நம்பினால் என்ன விட்டால் என்ன.. நமக்கென்ன. நாம இராமரை ஒரு கை பார்க்கிறது என்று முடிவு கட்டிட்டம்..!

இக்களத்தில் நடுவுநிலை என்பதே கிடையாது. வேண்டும் என்றே இராமர் சீதை என்ற நிலைகளை கொச்சைப்படுத்தும் வகையான கருத்துக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் எத்தனை தலைப்புடன் சம்பந்தப்பட்டு நியாயபூர்வ விவாதம் செய்கிறது..??! இராமரை பழிக்கவும்.. நெளிக்கவும்.. நக்கல் நளினம் பண்ணவும்.. ( அது நேரடியாகவும் நடக்கது மறைமுகமாகவும் நடக்குது) இடமளிப்பினம். ஆனால் இதையே நாம் எழுதினால் இங்குள்ள சில நிர்வாகிகளுக்கு எமது கருத்துக்குள் உள்ள மறைமுகங்கள் கூட வெளில தெரிஞ்சிடுது. தணிக்கை செய்யுற வசதிக்கு ஏற்ப...! அதிதான் வேடிக்கையானது..! இவர்கள் தங்களைப் போல மற்றவர்களையும் எண்ணிக் கொண்டார்களோ என்னவோ..??! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேசு தான் கடவுளின் பிள்ளை என்பதை நிருபிக்க எவ்வளவோ வித்தைகளை முன் கூட்டியே செய்து காட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு பிறவி ஊமையையே வாய்பேச வைத்திருக்கிறார்.................. அடுக்கிக் கொண்டே போலாம்.

இது சின்னதொரு தரவுதான்! உங்களின் வாதத்திற்து எதிர் வாதமல்ல

நீங்கள் கண்டனிங்களா??? சும்மா சும்மா கதைவிடாதிங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு தான் கடவுளின் பிள்ளை என்பதை நிருபிக்க எவ்வளவோ வித்தைகளை முன் கூட்டியே செய்து காட்டி இருக்கிறார். உதாரணத்திற்கு பிறவி ஊமையையே வாய்பேச வைத்திருக்கிறார்.................. அடுக்கிக் கொண்டே போலாம்.

இது சின்னதொரு தரவுதான்! உங்களின் வாதத்திற்து எதிர் வாதமல்ல

ஐயா மருதங்கேணி!

இராவணன் புஸ்பகவிமானம் என்று காட்டினால் அது கப்சா! ஆனால் இஜேசு நாதர் ஊமையைப் பேச வைச்சாலோ, அல்லது அப்பம் எடுத்துக் காட்டினாலோ அது மட்டும் உண்மையோ!

பகுத்தறிவு என்ற பெயரில் இந்துமதத்தைச் சாடி, மற்றய மதங்களுக்கு ஆட்கள் சேர்க்கின்ற வேலையும் நடக்குதோ இங்கே? ஊரைப் பார்க்கின்றபோதே, அதைப் புரிந்திருக்க வேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மருதங்கேணி!

இராவணன் புஸ்பகவிமானம் என்று காட்டினால் அது கப்சா! ஆனால் இஜேசு நாதர் ஊமையைப் பேச வைச்சாலோ, அல்லது அப்பம் எடுத்துக் காட்டினாலோ அது மட்டும் உண்மையோ!

பகுத்தறிவு என்ற பெயரில் இந்துமதத்தைச் சாடி, மற்றய மதங்களுக்கு ஆட்கள் சேர்க்கின்ற வேலையும் நடக்குதோ இங்கே? ஊரைப் பார்க்கின்றபோதே, அதைப் புரிந்திருக்க வேண்டும்....

அதே தான் என் கேள்வியும்.

இவை எல்லாம் வெள்ளைககாரங்க வம்சாவளியினர். அதுதான் புஸ்ப விமானம் பொய் இராமர் பாலம் பொய் குரங்கு பாலம் கட்டுமா என்றெல்லாம் கதை விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தைச் சொன்னாலே உடனே அது மதமாற்ற முயற்சி என்று துள்ளிக் குதிக்கிறது தான் மதவாதியின் முதல் நோய்க் குணங்குறி. இதிலே இருக்கிற ஊரை வைத்து வேறு ஆட்களை எடை போடுகிறார்கள். மதம் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீங்கள்? பிறப்பு, சந்தர்ப்பம் போன்ற காரணிகளால் ஒரு உப கலாச்சாரமான மத அடையாளத்தை மனிதர்கள் தாங்க வேண்டி வருகிறது. இதனால் இந்த மதம் நல்லது அந்த மதம் கெட்டது என்று தீர்ப்புச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான எண்ணம் தானே மதமாற்றம் குற்றம் என்று சொல்ல வைக்கிறது? மதம் தனிமனிதனின் உரிமை என்று ஏற்றுக் கொண்டால் இது ஒரு பிரச்சினையாகுமா? இராமனைப் பற்றிக் கருத்தெழுதிய யாரும் இந்து மதத்தைத் தவறாகக் காட்ட முனையவில்லை இங்கே. வாதத்தைத் திசை திருப்புவதற்காக உங்கள் சுயசிந்தனையை இழக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தைச் சொன்னாலே உடனே அது மதமாற்ற முயற்சி என்று துள்ளிக் குதிக்கிறது தான் மதவாதியின் முதல் நோய்க் குணங்குறி. இதிலே இருக்கிற ஊரை வைத்து வேறு ஆட்களை எடை போடுகிறார்கள். மதம் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீங்கள்? பிறப்பு, சந்தர்ப்பம் போன்ற காரணிகளால் ஒரு உப கலாச்சாரமான மத அடையாளத்தை மனிதர்கள் தாங்க வேண்டி வருகிறது. இதனால் இந்த மதம் நல்லது அந்த மதம் கெட்டது என்று தீர்ப்புச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான எண்ணம் தானே மதமாற்றம் குற்றம் என்று சொல்ல வைக்கிறது? மதம் தனிமனிதனின் உரிமை என்று ஏற்றுக் கொண்டால் இது ஒரு பிரச்சினையாகுமா? இராமனைப் பற்றிக் கருத்தெழுதிய யாரும் இந்து மதத்தைத் தவறாகக் காட்ட முனையவில்லை இங்கே. வாதத்தைத் திசை திருப்புவதற்காக உங்கள் சுயசிந்தனையை இழக்கிறீர்கள்.

ஐயா

உங்களுக்கு என்ன இயேசு பற்றிக் கேட்டவுடன் கோபம் வருது. பிறப்பினால் ஒருவன் குறித்த மதத்தைக் காவுவதற்கும், காசு, சொத்து போன்ற கிடைக்கின்ற சந்தர்ப்பங்களுக்காக மதங்களைக் காவுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

மேலும் இங்கே இயேசுநாதரின் செயலைப் பற்றிச் சொன்ன ஒருவருக்காகத் தான், அவரை இழுக்க வேண்டி ஏற்பட்டதே தவிர, அவரைப் பற்றிய விமர்சனங்களுக்காக அல்ல. ஆனால் கேட்டகேள்வியிலும் தப்பில்லை.

ஒரு கருத்தைச் சொன்னாலே உடனே அது மதமாற்ற முயற்சி என்று துள்ளிக் குதிக்கிறது தான் மதவாதியின் முதல் நோய்க் குணங்குறி. இதிலே இருக்கிற ஊரை வைத்து வேறு ஆட்களை எடை போடுகிறார்கள். மதம் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீங்கள்?

ஏன் காசையும், சொத்தையும் காட்டி வீடுவீடாகப் போய் மதத்தில் இணையச் சொல்லும் வியாபாரமதப் போதகர்கள் இல்லை என்ற மாதிரியல்லவா உங்களின் கதை கிடக்கு. அப்படிப்பட்டவர்கள் இல்லை... நான் ஏதோ புதுசாகச் சொன்னால் என்னை மதவாதி என்பதில் தப்பில்லை. ஆனால் காலம்காலமாக சாதாரணமாக நடக்கின்ற செயலையும், விலைபோகின்றவர்ளையும் பற்றித் தான் நான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

உங்களுக்கு என்ன இயேசு பற்றிக் கேட்டவுடன் கோபம் வருது. பிறப்பினால் ஒருவன் குறித்த மதத்தைக் காவுவதற்கும், காசு, சொத்து போன்ற கிடைக்கின்ற சந்தர்ப்பங்களுக்காக மதங்களைக் காவுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

மேலும் இங்கே இயேசுநாதரின் செயலைப் பற்றிச் சொன்ன ஒருவருக்காகத் தான், அவரை இழுக்க வேண்டி ஏற்பட்டதே தவிர, அவரைப் பற்றிய விமர்சனங்களுக்காக அல்ல. ஆனால் கேட்டகேள்வியிலும் தப்பில்லை.

ஏன் காசையும், சொத்தையும் காட்டி வீடுவீடாகப் போய் மதத்தில் இணையச் சொல்லும் வியாபாரமதப் போதகர்கள் இல்லை என்ற மாதிரியல்லவா உங்களின் கதை கிடக்கு. அப்படிப்பட்டவர்கள் இல்லை... நான் ஏதோ புதுசாகச் சொன்னால் என்னை மதவாதி என்பதில் தப்பில்லை. ஆனால் காலம்காலமாக சாதாரணமாக நடக்கின்ற செயலையும், விலைபோகின்றவர்ளையும் பற்றித் தான் நான் சொன்னேன்.

கோபம் இயேசு பற்றியல்ல. ஒருவன் எதற்காக மதம் மாற வேண்டும் என்று தீர்மானிக்க நீங்கள் யார்? உங்களிடம் ஒரு லிஸ்ட் இருக்கும், அதில் உள்ள காரணங்களுக்காக மட்டுமே மாற வேண்டும், மற்றைய காரணங்கள் வலுவற்றவை என்றால் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? தலித்துக்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து பௌத்த மதத்தைத் தழுவினால், அது தலித்துக்களின் தவறு என்பீர்களா அல்லது சாதியை இன்னும் தூக்கிப் பிடிக்கும் மதத்தின் தவறு என்பீர்களா? எதிர்காலம் சிறக்க வேண்டுமென்று ஒருவர் கிறிஸ்தவ மிஷனரியில் இணைந்தால், அது அவரது தவறா அல்லது சிறப்பான வாய்ப்புகளை அவருக்குக் கொடுக்காத ஒரு மதத்தின் தவறா? மதம் ஒரு வாழ்க்கை முறை என்கிற போது, ஒருவர் தன் பழைய வாழ்க்கை முறை திருப்தியில்லை என்று இன்னொரு வாழ்க்கை முறைமையைத் தேர்ந்தெடுத்தால் அதில் அலட்டிக் கொள்ள என்ன இருக்கிறது? இதனால் யாருக்காவது நட்டம் ஏற்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்காலம் சிறக்க வேண்டுமென்று ஒருவர் கிறிஸ்தவ மிஷனரியில் இணைந்தால், அது அவரது தவறா அல்லது சிறப்பான வாய்ப்புகளை அவருக்குக் கொடுக்காத ஒரு மதத்தின் தவறா? மதம் ஒரு வாழ்க்கை முறை என்கிற போது, ஒருவர் தன் பழைய வாழ்க்கை முறை திருப்தியில்லை என்று இன்னொரு வாழ்க்கை முறைமையைத் தேர்ந்தெடுத்தால் அதில் அலட்டிக் கொள்ள என்ன இருக்கிறது? இதனால் யாருக்காவது நட்டம் ஏற்படுமா?

கிறிஸ்தவ மிஷனரியில் இணையாமல் இருப்பவர்களுக்கு இந்த மிஷனரிகள் உதவுமா???? தங்கள் மதத்தை போதிக்காமல்?? அல்லது தங்கள் மத புத்தகத்தையும் கொடுக்காமல்??

மனித நேயம் என்பது ஒன்றையும் எதிர் பார்காமல் செய்வது தான்.

அதை தான் இந்து மதம் கர்ணன் மூலம் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின்

இயேசு கடவுளா இல்லையா என்பது அவரவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிடவிரும்பவில்லை. ஆனால் ஜேசுவை வைத்து வீடுவீடாக வியாபாரம் செய்கின்ற மதபோதகர்கள் வேற எந்த மதத்திலும் இல்லை. எனவே இப்படியான வியாபரங்களை மற்றய மதங்களோடு ஒப்பிடாதீர்கள்.

ஒருவன் பணத்துக்காக விலை போகலாம் அல்லது, அறியாமையை வைத்து விலைக்கு வாங்கப்படலாம் என்பதற்கும் சொந்த முடிவெடுத்து மாறுவதற்கும் வேறுபாடு உண்டு. சிங்களவனுக்கு வால் பிடித்தால் நல்ல நிலையில் வாழலாம் என வழியிருக்கின்றதை பாவித்தால், அவரைப் பார்த்து துரோகி எனத் திட்டுவதும் தவறாகத் தான் உங்களின் பதிலில் இருந்து தெரிகின்றது.

அப்படி நல்ல வாழ்க்கையைத் தெரிவு செய்த கருணா, டக்ளஸ், கதிர்காமரை யஸ்ரினின் கருத்தின்படி திட்டுவது தவறாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது. அதன்படி

அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையைத் தெரிவு செய்தது தவறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் பணத்துக்காக விலை போகலாம் அல்லது, அறியாமையை வைத்து விலைக்கு வாங்கப்படலாம் என்பதற்கும் சொந்த முடிவெடுத்து மாறுவதற்கும் வேறுபாடு உண்டு. சிங்களவனுக்கு வால் பிடித்தால் நல்ல நிலையில் வாழலாம் என வழியிருக்கின்றதை பாவித்தால், அவரைப் பார்த்து துரோகி எனத் திட்டுவதும் தவறாகத் தான் உங்களின் பதிலில் இருந்து தெரிகின்றது.

அப்படி நல்ல வாழ்க்கையைத் தெரிவு செய்த கருணா, டக்ளஸ், கதிர்காமரை யஸ்ரினின் கருத்தின்படி திட்டுவது தவறாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது. அதன்படி

அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையைத் தெரிவு செய்தது தவறா?

நல்ல ஒப்பீட்டைத் தெரிவு செய்தீர்கள் தூயவன். எனது பதிவின் இறுதிக் கேள்வியை வாசிக்காமல் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.மீண்டும் கேட்கிறேன்: எந்தக் காரணத்திற்காகவோ ஒருவன் மதத்தை மாற்றினால் யாருக்கு நட்டம் அல்லது யாருக்கு அநீதி இழைக்கப் படுகிறது? தமிழன் ஒருவன் சிங்களவனாக (அதுவும் சிறிலங்காவில்) மாறினால் எத்தனை பேர் அதனால் பாதிக்கப் படுவார்கள்? நீங்கள் சொன்ன நபர்கள் தங்கள் நலன்களுக்காக எத்தனை பேர் உயிரைக் குடித்தவர்கள்? இவர்களை மன்னிக்கலாம் என்பது என் கருத்து என்று புரிந்து கொண்டீர்களா? மத மாற்றத்தில் இப்படி துரோகத் தனங்கள் நடைபெறுகின்றனவா? தமிழ்த் தேசியமும் சிங்கள ஆதிக்கமும் எதிரெதிரே நிற்கையில், சிங்களப் பக்கம் தாவுகிறவர்கள் அநீதியின் பக்கம் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள எவ்வளவு அறிவு தேவை? உங்களுக்கு அது கூட இல்லையா? மதத்தின் நோக்கமும் ஒரு தேசியத்தின் நோக்கமும் ஒன்றா? மதத்தின் அடிப்படைப் பயன்பாடு தெரியாமலா நீங்கள் இந்துத்துவத்தின் மகிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ் லினக்ஸ்: கிறிஸ்தவனாக மாறாவிட்டால் கொன்று விடுவார்கள் என்ற நிலை இருந்தது மத்திய கால ஐரோப்பாவில். இது 21ஆம் நூற்றாண்டு. கிறிஸ்தவ மிஷனறிகள் உணவையும் கல்வியையும் பணயப் பொருளாகப் பாவிப்பதெல்லாம் இப்போது நடக்கும் விடயங்களல்ல. வறிய ஆபிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ மிஷனறிகளால் பராமரிக்கப் படும் வறிய மக்கள் எல்லாரும் கிறிஸ்தவர்களா? சுனாமிக்குப் பிறகு கிறிஸ்தவ அமைப்புகளின் உதவி பெற்ற இலங்கை மக்கள் எல்லோரும் கிறிஸ்துவத்தைத் தழுவிக் கொண்ட பின்னர் தான் உதவி பெற்றார்களா? உங்களிடம் ஏதாவது சான்றுகள் உண்டா, இப்படி நடந்ததாக? ஹெல உறுமய அல்லது பிக்கு முன்னணி சொன்னதாகச் சொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

அன்பான உலகத் தமிழ்ச்சொந்தங்களே.. :wub:

மீண்டும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மதங்களைப்பாற்றி ஆராய்வது நம் நோக்கமல்ல. விமரிசிப்பதென்றால் எல்லா மதங்களையுமே விமரிசிக்கலாம். அதனால் பயனேதுமில்லை. ஆனால் இங்கே ராமரினால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பாலத்தை மட்டும் ஆராய்வானேன் என்று நீங்கள் கேட்கலாம். அப்படிக் கேட்பீர்களாயின் அது ஒரு நல்ல கேள்வி..! :lol:

இங்கே ஒரு பாலத்தை இருந்ததாகச் சொல்லி ஒரு கால்வாய்த்திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இது தற்கால வாழ்வியலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பல வேலைவாய்ப்புக்களை முழுங்கிவிடும் இடைஞ்சலை மேற்கொள்ள எத்தனிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள அரசின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில், அந்தத் திசையில் செல்ல விளைகிறது. இப்போது, உலகச் சொந்தங்களே.. இதை விவாதிப்பதா வேண்டாமா..?

சரி, பாலம் இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதை ஒரு புராதனச் சின்னமாக இந்திய அரசு அங்கீகரித்து இருக்கிறதா? சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்து பாலத்தைக் கண்டு மெச்சுகிறார்களா..? வருமான இழப்பு யாருக்காவது ஏற்படப் போகிறதா?

இப்படியெல்லாம் இல்லாதபோது, ஒரு கால்வாய்த்திட்டத்தை தடுக்க திடீரென்று முளைக்கும் இந்த மாதிரி ஆய்வு மைய அறிக்கைகளின் உள்நோக்கத்தில் சாந்தேகம் எழுவது இயல்பு. அதை மத நம்பிக்கையுடன் முடிச்சுப் போடுவது தவறு என்பது என் கருத்து. இந்தப் பாலம் பற்றி எழுத வேண்டிய காரணம் தெளிவு பெற்றதென நம்புகிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் மக்களிடம் பிரிவினை தொடர்பில் தேர்தல் நடத்தக் கூடாது என்ற இந்திய மத்திய அரசின் நிலை போலத்தான் இராமர் பாலம் என்று அழைக்கப்படும் புவியியல் அம்சம் தொடர்பான அறிவியல் ஆய்வை மறுப்பதும்.

இதை வாதங்களால் மறுப்பது என்பது வாதங்களால் நிறுவுவதைச் செய்யும் இலக்கியங்கள் போன்றதே. எனவே அறிவியல் ஆராய்ந்து சொல்ல இடமளிப்பதே சர்ச்சைகள் தீர்ந்து ஒரு திடமான முடிவுக்கு வழிவகுக்கும். அதன் முதற்படியை உண்டு பண்ண எண்ணும் அறிவியல் ஆய்வு மையத்தை அதன் நோக்கங்களுக்கு அப்பால் பாராட்டியே ஆகனும்...! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களக ரசிகபெருமக்களே தற்போது இந்தப் பாலம் பெத்தலெகம் நோக்கி திசை திருப்பப் பட்டுள்ளது :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

அன்பு நெஞ்சங்களே..! :icon_idea:

இந்தய அறிவியல் ஆய்வு மையம் நீதிமன்ற உதவியை நாடினால் அதில் தவறேதுமில்லை. ஆனால் நீதிமன்றத்தில் இடம்பெறக்கூடிய வாக்குவாதம் எப்படியாக இருக்கும் என்று ஒரு கற்பனை..! :(

நீதிபதி: இன்று ராமர் பாலம் பற்றிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மனுதாரர் தன் வாதத்தைத் தொடங்கலாம்.

மனுதாரரின் வழக்கறிஞர்: கனம் நீதிபதியவர்களே.. சேதுசமுத்திர கால்வாய்த் திட்டம் வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பலதரப்புக்களிலிருந்தும் எதிப்புகள் தோன்றியிருப்பது எல்லோரும் அறிந்ததே. இவற்றில் பல வழக்குகள் சரியாக விசாரிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நெஞ்சங்களே..! :lol:

இந்தய அறிவியல் ஆய்வு மையம் நீதிமன்ற உதவியை நாடினால் அதில் தவறேதுமில்லை. ஆனால் நீதிமன்றத்தில் இடம்பெறக்கூடிய வாக்குவாதம் எப்படியாக இருக்கும் என்று ஒரு கற்பனை..! :(

நீதிபதி: ராமர் கடவுள் என்பதற்கு ஆதாரமென்ன?

மனுதாரரின் வழக்கறிஞர்: அது மத நம்பிக்கை.

நீதிபதி: ஆக மத நம்பிக்கைக்காக ஒரு பணியை இடைநிறுத்தலாமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை.

நீதிபதி: இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்..

மனுதாரர் சார்பில் reappel

மனுதாரரின் வழக்கறிஞர் : கனம் நீதிபதி அவர்களே எதனடிப்படையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்தீர்கள்?

நீதிபதி: ராமர் கடவுள் என்பதற்கு ஆதாரமென்னற அடிப்படையில்

மனுதாரரின் வழக்கறிஞர் : இந்த பாலம் 1,750,000 வருடங்களுக்கு முன்னர் உருவானது என்பது உங்களுக்கு தெரியும் தானே?

நீதிபதி: அப்படி தான் சொல்கின்றார்கள்

மனுதாரரின் வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே இன்றைய திகதி மாதம் ஆண்டு என்ன?

நீதிபதி: 30 கார்த்திகை 2007

மனுதாரரின் வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே 30 கார்த்திகை 1601-ல் உங்கள் கொள்ளு கொள்ளு கொள்ளு கொள்ளு கொள்ளு கொள்ளு பேரன்

யார் என்பதை உங்களால் ஆதாரத்துடன் நிருபிக்க முடியுமா

நீதிபதி: இந்த வழக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகின்றது :lol:

:icon_mrgreen::icon_idea::(:(:(

Link to comment
Share on other sites

நீதிபதி: இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.. அரசு வழக்கறிஞர் அவர்களே.. மனுதாரர் இந்தப்பாலம் 1,750,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்.

அரசு வழக்கறிஞர்: நீங்கள் கூட அதைக்கேள்விப்பட்டதாகச் சொன்னீர்கள்.

நீதிபதி: இதுகுறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

அரசு வழக்கறிஞர்: ஆம் கனம் நீதிபதியவர்களே.. இவ்வளவு பழமையான பாலமென்று எந்த ஆதாரத்தைவைத்துக் கூறுகிறார் மனுதாரரின் வழக்கறிஞர்?

மனுதாரரின் வழக்கறிஞர்: அங்குள்ள பாறைகளை ஆராய்ந்தால் தெரிந்துவிடும்.

அரசு வழக்கறிஞர்: பாறைகள் பாலமாகுமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: அந்தப்பாறைகள் ராமரால் பாலமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப்பாறைகள் கடலில் உள்ளதால் அவை பாலமாகும்.

அரசு வழக்கறிஞர்: அப்படியானால் கடலிலுள்ள தொடர் குன்றுகள் பாறைகளெல்லாம் பாலங்களா? தமிழீழத்தில் பருத்தித்துறைக் கடலில் நிறையப் பாறைகள் தென்படுமே, அதுவும் ஒரு பாலமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இல்லை.. அங்கே ராமர் சென்றதற்கான ஆதாரமில்லை.

அரசு வழக்கறிஞர்: அப்படியானால் ராமர் சென்றால்தான் அது பாலமாகுமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: கனம் நீதிபதியவர்களே.. அரசு வழக்கறிஞர் வழக்குக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசு வழக்கறிஞர்: இல்லை கனம் நீதிபதியவர்களே.. சம்பந்தம் இருக்கிறது. ராமர் நடந்து சென்றதாகக் கூறப்படும் கற்பாறைகள் பாலமாகிவிடாது. ராமர் இப்போதுள்ள திருச்சி சென்னை நெடுஞ்சாலையால் நடந்து வந்திருக்கக்கூடும். அதற்காக சாலை அகலப் பணிகளை நிறுத்தலாமா?

மனுதாரரின் வழக்கறிஞர்: இந்த நெடுஞ்சாலை குறித்து ராமாயணத்தில் எதுவுமில்லை.

அரசு வழக்கறிஞர்: ராமாயணத்தில் இலங்கை மன்னன் ராவணனை இந்திய மன்னன் ராமன் வென்றதாக உள்ளது. அதனால் இலங்கை இந்தியாவுக்குச் சொந்தமா?

இந்த நேரத்தில் நீதிபதிக்கு தலை கிறுகிறுக்க மயங்கிச் சாய்கிறார். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது..

:icon_mrgreen::icon_idea::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுதாரரின் வழக்கறிஞர்: நீதிபதி அவர்களே சிறிது அவகாசம் தேவை நாளைவரை. சில ஆதாரங்களை எடுப்பதற்கு ஆபிரிக்காவுக்கு செல்ல வேண்டியுள்ளது. :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.