Jump to content

ஆதரவு கேட்கும் ராமேஸ்வரம்


AJeevan

Recommended Posts

அடடா.. ஈரம்.. வெளிவந்து ஒரு வருடமாகிறது... ஆனால் எனக்கு இதுவரை தெரியாதே.. ஒன்றை உருவாக்கும்போது எவ்வளவு உழைக்க வேண்டுமோ.. அதேபோல அதை பிரச்சாரப்படுத்தவும் ஒரு உழைப்பாளி கிடைக்கவில்லையா..

எனக்கு ஒரேயோரு இறுவட்டை அனுப்பினால், அதற்கான செலவை அனுப்புவேன். மற்றும்படி, மற்றவர்களுக்கு விற்பது வாங்குவது போன்ற திறமை என்னிடம் இல்லை.. :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

நன்றி சுகன்.

சோழியன் பிரச்சனை கிடையாது.

அனுப்புகிறேன்.

இந்தியா - சிங்கை - மலேசியா ஆகிய நாடுகளில்

நண்பர்கள் இறுவட்டு வெளியீடு செய்ய இருக்கிறார்கள்.

ஒரு விடயத்தில் கவனம் தேவை சோழியா? :unsure:

தனியே எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

சில சின்ன பிரச்சனைகளை

நெடு தூரம் என்று விவாதித்தால்

நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருக்க முடியும்.

பல வேளைகளில் நாமே நமக்கு எதிரி.

வேறு யாருமில்லை?

உதாரணமாக

இலங்கையில் உள்ள பலருக்கு

இந்த யுத்தம் எதுக்கென்றே தெரியாது?

நாமே அப்படி இருக்கும் போது

அடுத்தவர்களை நொந்து ஒரு பயனுமில்லை.

நாம் ஒருவருக்கு உதவினால்தான்

மற்றவர் நமக்கு உதவுவார்.

ஒருவன் தன்னால் முடிந்த விதத்தில்

உதவ நினைக்கும் ஒருவனை

அதைக் கூட செய்யவிடாது தடுத்துக் கொண்டே

உதவவில்லை என்பது

நாம் செய்யும் பெரும் தவறு!

இலங்கையில் இருந்து எத்தனை தமிழ் படங்கள் உருவாகின்றன?

சிந்தித்தால் வருடத்தில் ஒன்று கூட இல்லை.

நம்மவரால் அதை எப்போது செய்ய முடியும் என்று வருகிறதோ

அன்று அதை பார்ப்போம்?

இந்திய சினிமாவை தடுப்பதால்

எதையும் யாராலும் சாதிக்க முடியாது.

கலை வேறு

அரசியல் வேறு

மக்கள் வேறு

அரசியல்வாதிகள் வேறு

எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது.

புலம் பெயர் நாடுகளில் வந்த

தொலைக் காட்சிகள்

புலம் பெயர் கலைஞர்களை வளர்க்கவேயில்லை.

அது அனைவருக்கும் தெரியும்.

முதலாளிகளும் வால் பிடித்தவர்களுமே வளர்ந்தார்கள்.

என்ன?

அவர்கள் கூட

தமிழக நிகழ்வுகளைத்தான்

கொட்டினார்கள்.

நம் கலைஞர்களை எத்தனை சதவீதம் எட்டிப் பார்த்தார்கள்?

இன்றும் இந்திய நிகழ்ச்சிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிகள் கூட இல்லாவிட்டால்

தொலைக்காட்சியில் வானோலி நிகழ்ச்சிதான் நடத்த வேண்டும்.

அதற்கும் அவர்களது பாடல்களைத்தான் ஒலிக்க வைக்க வேண்டும். :lol::lol:

நமது அனைத்து படைப்புகளையும்

ஒன்றாக சேர்த்தால் கூட

ஒரு மாதம் கூட தொடர்ந்து நிகழ்ச்சிகளை தர முடியுமோ நானறியேன்? :unsure:

புலம் பெயர்ந்தவர்கள்

நிகழ்வுகள் எதுவுமே தரமாக வர வாய்ப்பில்லை.

காரணம்

இங்கு செலவு செய்யும் தொகையில்

1 சதவீதம் கூட இங்குள்ள தொலைக் காட்சிகள் தராது.

அண்ண

நீங்க செய்ற புரோகிராம் எல்லாம் பார்க்கிறன் சுப்பர் என்று

காக்கா வடைக் கதை போல ஏதாவது நரித்தனம் பண்ணினால்தான் வரும்.

தொலைக் காட்சிகளில் என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

அதற்காக நான் பொய் பேசுவதில்லை.

அவர்களிடம் எழுதுவதை விட திட்டுவது அதிகம்.

அவர்களும் என்ன பண்ண

அதிபர்கள் கருணை காட்ட வேண்டும் என்கிறார்கள்.

நான் எப்பவோ

தமிழ் படைப்புகளை விட்டு

ஜெர்மன் படைப்புகளுக்கு போய் விட்டேன்.

நான் இருந்தால்தான்

கலையும் கத்தரிக்காயும்.

தமிழ் என்றால் சட்டி எரியாது

முடிதான் இன்னும் கொட்டும்? :lol:

.

இவை எல்லாம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

என் அனுபவத்தில் பேசுகிறேன்.

இது பொய்யல்ல : உண்மை.

வட்டங்களுக்குள் இருப்போர் அழிந்தே போவார்கள்.

அதை எவராலும் தடுக்க முடியாது.

அது குறித்து கவலைப்படக் கூடாது.

முதலில் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் வழியை தேட வேண்டுமே தவிர

எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டால்

நாம்தான் முட்டி மோதிக் கொள்வோம்.

ஆணிவேரில் முக்கிய பங்காற்றியவர்கள்

இந்தியர்கள்தானே?

ஏன் அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

மரண பயம்தானே?

உங்கள் வீட்டில் வானோலியில்

இந்திய இசை கேட்டால் நிறுத்தி விடுங்கள்.

நாம் வணங்கும் தெய்வத்தை தூக்கி எறிந்்து விடுங்கள்

நமக்கென்று தெய்வங்கள் உருவாகும் வரை?

மன்னிக்கவும்

உண்மை பேசுவதற்காக.................

நன்றி!

முதலில் நீங்கள் ஒரு மட்டுறுத்துனர் இல்லையென்று மறுக்கமுடியுமா?

உங்கள் கருத்துக்கு எதிராக வந்த ரிசானாவின் விடயத்தில் உங்கள் கருத்துக்கு எதிராக வந்த கருத்துக்களை நீங்கள் அகற்றவில்லையா?

சரி நீங்கள் அகற்றவில்லையென்றால் அந்த கருத்துக்களை மீண்டும் இணைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளமுடியுமா உங்களால்?

சாதாரணமான யாழிலையே கருத்து சுதந்திரம் இலலையென்றால் தொலைக்காட்சிகளில் எப்படி எதிர் பார்க்கமுடியும்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதே ஒரு கலைஞனுக்கு அழகு. விவாதம் என்று வந்துவிட்டால் மட்டுறுத்துனர் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விவாதிக்க வரக்கூடாது.

எந்த ஒரு கலைஞனும் நான் தரமானவன் என்று கூறிக்கொள்ள கூடாது. என்னால் ஏன் முடியவில்லை என்று ஆராய வேண்டும். விவாதத்திற்காக உருவாக்கப்பட்ட யாழ் களத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை. காரணம் இங்குள்ள மட்டுறுத்துனர்களுக்கு அளவுகோல் தெரியாது. அதுபோல்தான் தொலைக்காட்சிகளிலும்.

புத்திசாலி ஜெயித்துவிடுகன்றான்.

மன்னிக்கவேண்டும் உண்மையை எழுதியதற்கு

ஒரு வேண்டுகோள்.

எந்த ஒரு மேதாவி மட்டுறுத்துனராவது இந்த கருத்தை உடனடியாக அகற்றிவிடுங்கள்

Link to comment
Share on other sites

முதலில் நீங்கள் ஒரு மட்டுறுத்துனர் இல்லையென்று மறுக்கமுடியுமா?

உங்கள் கருத்துக்கு எதிராக வந்த ரிசானாவின் விடயத்தில் உங்கள் கருத்துக்கு எதிராக வந்த கருத்துக்களை நீங்கள் அகற்றவில்லையா?

சரி நீங்கள் அகற்றவில்லையென்றால் அந்த கருத்துக்களை மீண்டும் இணைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளமுடியுமா உங்களால்?

சாதாரணமான யாழிலையே கருத்து சுதந்திரம் இலலையென்றால் தொலைக்காட்சிகளில் எப்படி எதிர் பார்க்கமுடியும்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதே ஒரு கலைஞனுக்கு அழகு. விவாதம் என்று வந்துவிட்டால் மட்டுறுத்துனர் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விவாதிக்க வரக்கூடாது.

எந்த ஒரு கலைஞனும் நான் தரமானவன் என்று கூறிக்கொள்ள கூடாது. என்னால் ஏன் முடியவில்லை என்று ஆராய வேண்டும். விவாதத்திற்காக உருவாக்கப்பட்ட யாழ் களத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை. காரணம் இங்குள்ள மட்டுறுத்துனர்களுக்கு அளவுகோல் தெரியாது. அதுபோல்தான் தொலைக்காட்சிகளிலும்.

புத்திசாலி ஜெயித்துவிடுகன்றான்.

மன்னிக்கவேண்டும் உண்மையை எழுதியதற்கு

ஒரு வேண்டுகோள்.

எந்த ஒரு மேதாவி மட்டுறுத்துனராவது இந்த கருத்தை உடனடியாக அகற்றிவிடுங்கள்

நான் எங்கும் மட்டுறுத்துனர் இல்லை.

அதை அவர்களிடம் கேளுங்கள்.

ஒரு முறை கேட்டார்கள்.

அதுவும் குறும்பட பகுதிக்கு

நான் மறுத்தது அவர்கள் அறிந்ததே.

மட்டுறுத்துனராக இருந்தால்

நான் இங்கு கருத்தே எழுத மாட்டேன் :lol:

அது அனைவரும் அறிந்ததே!

எழுதுவதிலும் ஒரு வகை உண்டு.

யதார்த்தத்தை எழுதும் விதத்தில் எழுதினால்

யாரும் நிச்சயம் தூக்க மாட்டார்கள்.

களத்துக்கும் பிரச்சனை இருக்கிறது.

அது தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

எனவே கவனம் தேவை என்பது நியாயம்.

எனது கருத்துகளும் தூக்கப்பட்டிருக்கின்றன.

அது சரி என்பதால் ஏற்றுக் கொள்கிறேன்.

என் நண்பர்கள் எங்கும் இருக்கிறார்கள்.

எதிரிகள் என்போர் கூட என் நண்பர்களாவதுண்டு.

நான் சொல்வது ஆரம்பத்தில் கோபத்தை பலருக்கு வரவழைத்தாலும்

அவர்களே பின்னர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

புத்திசாலியை விட கூழைக் கும்பிடு போடுபவன் ஜெயிக்கிறான்.

இது பார்க்க கூடியது.

ஆனால் அது தொடராது.

இதுவே உண்மை.

என்னை சந்திப்போரிடம்

இதை விட மோசமாக

நேரடியாக கருத்துகளை வைக்கிறேன்.

ஆனாலும் என்றும் அவர்கள் என் நண்பர்களாக இருக்்கிறார்கள்.

நான் பேசுபவற்றை கேட்ட ஒரு தொலைக்காட்சி நிலையத்தார்

நீங்கள் ஒரு படம் செய்தால் கூட உதவ மாட்டோம் என்றார்.

பணம் கொடுத்து விளம்பரம் தந்தாலும் போட மாட்டீர்களா என்றேன்?

விளம்பரமாக தந்தால் போடுவோம் என்றார்.

பணம் பிணத்தையும் வாய் திறக்க வைக்கும்.

சுவிஸ் விளம்பரங்கள் நான் செய்பவை அதிகம்.

நிறுவனங்கள் என் நண்பர்களுடையது.

பணத்தை விட 17 வருட நட்பு பெரிது.

http://www.anischag.com/house.html

http://www.anischag.com/

இதுதான் நிலமை .............

நன்றி வன்னியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களை மறக்க முடியவில்லை - ஜீவா

ஒரு கலை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்ற நடிகர் ஜீவாவை, கொழும்பு ஏர்போர்ட்டில் வழிமறித்து பாராட்டு மழையில் நனைய வைத்தார்களாம் இலங்கை தமிழர்கள். 'ஈ', 'ராம்' படங்களை பற்றி பேசினாங்க. கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களையும் சந்தித்தேன். இப்ப நான் நடித்துள்ள 'ராமேஸ்வரம்' படம் பற்றி ரொம்ப நேரம் பேசினாங்க. அவங்களோட ஆதங்கம், ஏக்கம், சொந்த ஊர் பற்றிய சோகம்... போன்றவற்றையெல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க. 'இராமேஸ்வரம்' படத்தோட பாடல்கள் வெளிநாடுகளில் அதிகமா விற்பனையாயிருக்கு என்கிறார் இப்படத்தில் அகதியாக வரும் ஜீவா.

- நக்கீரன்

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா,நான் இருக்குமிடத்தில் அவ்வளவு தமிழர்கள் இல்லை.என்ற போதும் உங்களின் முதல் 5 தொகுப்பு டிவிடிக்களை வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.