Archived

This topic is now archived and is closed to further replies.

kavi_ruban

மனசு எனும் மந்திரக்கிண்ணம்!

Recommended Posts

ஒலி வடிவம்

-------------------------------------

நெஞ்சில்

ஓர் மூலையில்

ஏதோவொரு சோகம்

எனை அணைக்கும்

உடம்பு

சோர்வின்

கைப் பிள்ளையாகும்!

மனசு

விரக்தியின் விளிம்பில்

தற்கொலை செய்யும்

எதிர்காலம் கண்முன்

விஷ்வரூபமெடுக்கும்

தனிமையில் தத்தளித்து

தாய் மடி

தேடும் மனம்

பொல்லாத கற்பனைகளால்

இதயம் வெடிக்கும்

தலை கோதி

நெஞ்சில் முகம்

சேர்த்து

அணைக்க

ஓருயிர் வாராதா

என விழிகள் தேடும்!

"எனக்கு மட்டும்

ஏன் இப்படி"

கண்முன் தெரியா

கடவுளிடம்

விசாரணை நடக்கும்

கால் போனால்

ஊன்றுகோல்

மனசு உடைந்தால்

என்ன உதவும் ?

"நம்பிக்கை" என்ற

பழகிப்போன பதிலில்

சமாதானம் ஆகாமல்

போலியாய் சிரிக்கும்

உதடுகள்...

விநாடிகளை விழுங்கி

காலம்

கன கதியில் பறக்கும்!

சூரிய தேவன்

இரதமேறி

ஒளிக்கைகளால்

பூமிப்பெண்ணை

தொடுவான்

மனசு இலேசாகிப்

பஞ்சாகப் பறக்கும்!

'ம்..."

புரியவில்லை தான்

எனக்கும்!

--------------------------------

5-12-2007

Share this post


Link to post
Share on other sites

கஜந்தியக்காவின் குரலில் கவி வாசிப்பு சூப்பரா இருக்கு. சின்னப்ப்பொண்ணின் குரல் போல இருக்கு. :lol:

ஆனால் எனக்கும் தான் புரியலை ஏன் தட்டச்சு செய்யும் போது எழுத்துப்பிழைகள் விடுகிறியள் என. :lol:

Share this post


Link to post
Share on other sites

"மனசை" பற்றிய ஆழமாக சிந்தித்து உள்ளீர்கள் போல கவிரூபன் அண்ணா நன்றாக இருக்கு கவிதை அழகிய வரிகள் :lol: !!அதிலும் இந்த வரிகள் எத்தனை உண்மை வாழ்த்துகள்!! :)

"நம்பிக்கை" என்ற

பழகிப்போன பதிலில்

சமாதானம் ஆகாமல்

போலியாய் சிரிக்கும்

உதடுகள்...

கஜந்தி அக்காவின் இனிமையான குரல் இந்த கவியை மேலும்மெருகூட்டுகிறது வாழ்த்துகள் இருவருக்கும்!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை

மனதைத் திறந்து விடு

அது உலகைக் கடந்து

பறந்து வரும்!! :lol:

Share this post


Link to post
Share on other sites

ஏன் தட்டச்சு செய்யும் போது எழுத்துப்பிழைகள் விடுகிறியள்

என்ன வெண்ணிலா பிழைகள் என்று பன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.... பல பிழையோ என்று நினைச்சன்.... ஒரு பிழை தானே....(யானைக்கும் அடி சறுக்குமாமே .... உண்மையா?)

-------

ஜம்மு பேபி...(இன்னும் தொட்டிலிலா....?) நன்றி......

Share this post


Link to post
Share on other sites

தனிமையில் தத்தளித்து

தாய் மடி

தேடும் மனம்

கவிரூபன் அருமையான கவிதை. உண்மையாகவே நாமெல்லாரும் இப்படி தான் நினைத்திருப்போம் எமக்கென்று பிரச்சனைகள் வரும் போது :)

Share this post


Link to post
Share on other sites

என்ன வெண்ணிலா பிழைகள் என்று பன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.... பல பிழையோ என்று நினைச்சன்.... ஒரு பிழை தானே....(யானைக்கும் அடி சறுக்குமாமே .... உண்மையா?)

:):lol: பதில் சொல்ல விரும்பலை. :lol:

Share this post


Link to post
Share on other sites

தலை கோதி

நெஞ்சில் முகம்

சேர்த்து

அணைக்க

ஓருயிர் வாராதா

என விழிகள் தேடும்!

அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிரூபன்.

அதுவும் மேலே குறிப்பிட்ட வரிகள்

ஒவ்வொருவர் மனதிலும் கண்டிப்பாக

ஏதோவொரு கணத்தில் தோன்றியே இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

மருமகன்(யாருக்கு என்று சொல்லவே இல்லையே...:-)), இன்னிசை கருத்திட்டதிற்கு நன்றிகள்... தொடர்ந்து சந்திப்பம்....

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத கல்கி கிருஷ்ணமூர்த்தி 3 தடவை யாழ்ப்பாணம் வந்தாராம். இதிலிருந்து தமிழ் நாட்டில் கூட இல்லாத சோழர் காலத்து வரலாற்றை தன்னகதே வைத்திருந்தது தான் யாழ் நூலகம்.  அதேபோல் தமிழ்நாட்டில் ஏன் சோழர் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின? அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?
  • சும்மா சும்மா கவலை தெரிவிச்சு ஊரை ஏமாத்தாமல் சட்டத்தரணி சேவைக்கக்கான அனுமதிகளை ரத்து செய்யலாமே.
  • ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை In இலங்கை     May 31, 2020 10:36 am GMT     0 Comments     1025     by : Jeyachandran Vithushan நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படலாம் என்றும் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தை-முழுமைய/
  • In இலங்கை     May 31, 2020 9:53 am GMT     0 Comments     1432     by : Dhackshala குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளன. கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆராய்வதற்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.ஆ.று. வீரகோன் குருநாகல் – மாவத்தகம பகுதிக்கு சென்றுள்ளார். கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில், இந்த ஆண்டு அங்கு அதன் பரவல் அதிகமாக உள்ள நிலையில், தற்போது இலங்கையிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையிலும்-வெட்டுக்கி/
  • பாடசாலைகளில் விசேட வசதிகளை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை..! In இலங்கை     May 31, 2020 6:53 am GMT     0 Comments     1340     by : Jeyachandran Vithushan பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு போதுமான நிதி அமைச்சிடம் இல்லை என அறிய முடிகின்றது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர், “பாடசாலைகளில் கை கழுவுவதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு 418 மில்லியன் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், கல்வி அமைச்சுக்கு 100 மில்லியன் மட்டுமே இருப்பு உள்ளது” என கூறியுள்ளார். இருப்பினும் இந்த வசதிகளுக்காக நிதி ஒதுக்கும்போது, இத்தகைய வசதிகளை உருவாக்க அனுசரணையாளர்கள் / நலம் விரும்பிகள் / பழைய மாணவர்களை ஈர்க்க வழி இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வசதிகளை மேற்கொள்ள பெற்றோரிடம் இருந்து நிதி பங்களிப்பு தேவையில்லை என்று அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தாலும், பாடசாலைகளின் நலன் விரும்பிகள் அல்லது பழைய மாணவர்களிடம் கோரிக்கை விடுக்க அனுமதிக்கப்படும் என கல்வி அமைச்சின் செய்ரலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல் வசதிகளை எளிதாக்க அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேச செயலகங்கள், நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றை பங்களிப்பையும் அமைச்சு கோரியுள்ளது. உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பாடசாலைகளில்-விசேட-வசதிக/