Jump to content

அன்பே வா..


Recommended Posts

அன்பே வா......

e0ae9ae0af86e0aeb2e0af8ob5.jpg

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

உன் பொல்லாத கோவம் கண்டு

என் கனவு நனவாகா என

இன்றுதான் உணர்ந்தேன் நான்

அன்று போலில்லை நீ என்பதை

எப்போதும் இனிமையாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

துன்பங்கள் புடைசூழ நீயின்றி

துவண்டு துடிக்கின்றேன்

உனைப்போல் வேறோர் துணையின்றி

ஊனை மறந்து கலங்குகின்றேன்

விட்டுவிடு உன் கோவமதை

கட்டியணை பாவியிவளை

கெட்டிக்காரி என அடிக்கடி

தட்டிக்கொடுப்பவனே

அடிமேல் அடிவைத்து உனக்கு

நடை பழக்கிய உன்னவளை

இடி போன்ற வார்த்தைகளால்

எட்டி உதைத்துவிட்டு

தனியான எங்கு சென்றாய்

இன்னிசையாக பாடியவள்

கண்ணீரில் மிதக்கின்றாள்

மண்டியிட்டுக் கதறுகின்றாள்

மன்னிப்பு தந்து இவள் மடிதனில்

உன் கண்களை இறுக்கி மூடி

கண்ணயர வா எங்கிருந்தாலும்

என் மீதுள்ள கோவம் மறந்து

Link to comment
Share on other sites

நிலா அக்கா...........நிலா அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு யாரை கூப்பிடுறியள் என்று சொல்லவே இல்லை :lol: !!நிலா அக்கா மேல கோபம் போட்ட ஆளே எங்கிருந்தாலும் கோபத்தை மறந்து நிலாஅக்காவிடம் வரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!! :lol:

இன்னிசையாக பாடியவள்

கண்ணீரில் மிதக்கின்றாள்

மண்டியிட்டுக் கதறுகின்றாள்

மன்னிப்பு தந்து இவள் மடிதனில்

உன் கண்களை இறுக்கி மூடி

கண்ணயர வா எங்கிருந்தாலும்

என் மீதுள்ள கோவம் மறந்து

அதிலும் இந்த வரிகள் ஏக்கத்தின் விளிம்பு கவிதை ஏக்கத்துடன் சேர்ந்த அழகு ஏக்கம் நிறைவேற வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

நினைப்பதற்கும் நடப்பதிற்கும்

நடுவில் இடபட்ட

முகத்திரையை கிழித்துவிட்டு

மனதினுள் எட்டி பார்த்தால்

எரிமலையின் கொதி குழம்பாய்

வேதனைகள் கொந்தளித்து பொங்குவதைக்

காண்பாய்!! :D

Link to comment
Share on other sites

எப்போதும் இனிமயாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

நல்ல கவிதை

முக்கியமாக மேலுல்ல வரிகள் என் மனதை கவர்ந்துள்ளன.

என் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வரிகளும் கூட.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா கவிதையை கண்ட பிறகாவது அவர் மனம் மாறி உங்களிடம் வரட்டும் :lol:

Link to comment
Share on other sites

அட வெண்ணிலாவுக்கும் தட்டச்சில் தகராறு வருமா? வருதே..... (நீயூற்றனின் மூன்றாவது விதி நினைக்க... சும்மா ஒரு தமாசுக்கு தான்... சினம் தவிர்க்க...)

கவிதையில் பொருள் மயக்கம் வருவது போல அடியேன் எண்ணம்....

Link to comment
Share on other sites

நிலா அக்கா...........நிலா அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு யாரை கூப்பிடுறியள் என்று சொல்லவே இல்லை :D !!நிலா அக்கா மேல கோபம் போட்ட ஆளே எங்கிருந்தாலும் கோபத்தை மறந்து நிலாஅக்காவிடம் வரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!! :lol:

அதிலும் இந்த வரிகள் ஏக்கத்தின் விளிம்பு கவிதை ஏக்கத்துடன் சேர்ந்த அழகு ஏக்கம் நிறைவேற வாழ்த்துகள் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

நினைப்பதற்கும் நடப்பதிற்கும்

நடுவில் இடபட்ட

முகத்திரையை கிழித்துவிட்டு

மனதினுள் எட்டி பார்த்தால்

எரிமலையின் கொதி குழம்பாய்

வேதனைகள் கொந்தளித்து பொங்குவதைக்

காண்பாய்!! :(

:lol::lol: கோவம்போட்டு அடித்து எனைப் பிரிந்த ஆளை தெரியாமல் என்னமா கதைக்கிறியள் ஜம்முபேபி. எவ்வளவுதடவை தான் சொல்லுறது ஆ?

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்குதே. நன்றிகள் பேபி :lol:

Link to comment
Share on other sites

ஊடலோடு கூடலாய் உங்கள் கவிதை அழகு வெண்ணிலா .

நன்றிகள் நண்பியே.

எப்போதும் இனிமையாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

நல்ல கவிதை

முக்கியமாக மேலுல்ல வரிகள் என் மனதை கவர்ந்துள்ளன.

என் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வரிகளும் கூட.

பாராட்டுக்கள்!

நன்றிகள் வல்வை அண்ணா,

அட எல்லோரும் தப்புக்கள் செய்யும் போது தெரியாமல் தான் செய்கின்றோம். ஆனால் அது மற்றவர்களுக்கு தப்பாக தெரியும்.

வெண்ணிலா கவிதையை கண்ட பிறகாவது அவர் மனம் மாறி உங்களிடம் வரட்டும் :lol:

ஹீஹீ அவர் வந்துட்டார் இன்னிசை. கவிதை கண்டு மறுநிமிடமே வந்துட்டார் ல. அப்புறாம் இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு இப்ப சந்தோசம். :lol:

அட வெண்ணிலாவுக்கும் தட்டச்சில் தகராறு வருமா? வருதே..... (நீயூற்றனின் மூன்றாவது விதி நினைக்க... சும்மா ஒரு தமாசுக்கு தான்... சினம் தவிர்க்க...)

கவிதையில் பொருள் மயக்கம் வருவது போல அடியேன் எண்ணம்....

அட பாவமே. இங்கை பாருங்களன் காலை வாருற இடைத்தை. :D இப்ப மயக்கம் வராது என்பது அடியேன் எண்ணம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவமென்டு சொன்னா நக்கலை பாரு :lol:

Link to comment
Share on other sites

:lol::lol: கோவம்போட்டு அடித்து எனைப் பிரிந்த ஆளை தெரியாமல் என்னமா கதைக்கிறியள் ஜம்முபேபி. எவ்வளவுதடவை தான் சொல்லுறது ஆ?

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்குதே. நன்றிகள் பேபி :lol:

நிலா அக்கா நிசமா நேக்கு தெரியாது யார் அவர் என்று :D ஒரு வேளை பேபி மறந்திருக்கும் மறுபடி ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

நிலா, உங்கள் கனவு நிசமாகும்.

Link to comment
Share on other sites

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

அடிமேல் அடிவைத்து உனக்கு

நடை பழக்கிய உன்னவளை

இடி போன்ற வார்த்தைகளால்

எட்டி உதைத்துவிட்டு

தனியான எங்கு சென்றாய்

Link to comment
Share on other sites

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

எப்படி, இப்படி முடிவுகளை உங்களால் எடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

பாவமென்டு சொன்னா நக்கலை பாரு :o

உண்மையை சொன்னால் நக்கலாக தெரியுதா? என்ன கொடுமைப்பா இது :):(

நிலா அக்கா நிசமா நேக்கு தெரியாது யார் அவர் என்று :lol: ஒரு வேளை பேபி மறந்திருக்கும் மறுபடி ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆமா ஆமா பேபி இப்ப காதலில் சிக்கிட்டுது போல. காதல் வந்தால் மறதியும் வரும் என்பது உண்மை தான் போல :lol:

நிலா, உங்கள் கனவு நிசமாகும்.

நன்றிகள் நுணா. :o

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

ஹீஹீ அதெப்படி பரணியண்ணா இப்படி துல்லியமாக சொல்லுறீங்க? உண்மையில் நான் சொன்ன ஒரு வார்த்தையால் தான் என்மேல் அவன் கோவப்பட்டு சென்றான். ஆனாலும் நான் நினைக்கவே இல்லை இப்படி அவன் கோவம் கொள்வான். நான் சொன்னது தப்பு எனவும் தெரியலை. மொத்தத்தில் என் பரிதவிப்புக்கும் காரணமே நான் தான் :(

Link to comment
Share on other sites

முடிவில் என்ன தவறு கண்டீர்கள்.

ஊட்டிய கரம் உதறுவதில்லையா ?

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

எப்படி, இப்படி முடிவுகளை உங்களால் எடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

அழகாக உள்ளது !!

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.