Sign in to follow this  
poet

முதற் காதல் --- வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

முதற் காதல்

வாடைக் காற்று

பசும்புல் நுனிகளில்

பனிமுட்டை இடும் அதிகாலைகளில்

என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்

ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி

உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"

என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை

அணைக்கச் சொல்லுங்கள்

பஸ் வரும் வீதியில்

தடைகளைப் போடுங்கள்

இந்த நாளை

எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்

படுத்துறங்கும் பூங்காற்றாய்

என் முதற் காதலி

உடனிருக்கின்ற காலைப் பொழுதில்

தயவு செய்து

என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே

நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்

காலனை எனது

இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்

இனிய சகியைப் பாடவிடுங்கள்

அவளை வாழ்த்தியோர் பாடல் நான்

இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட

நெல் வயல்களிலே

புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்

மயில் இறகுகளைச் சேகரிக்கும்

ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்

மனித நேயத்தின் ஊற்றிடமான

பொன் முலைக் காம்பை

கணவனும் குழந்தையும்

கவ்விட வாழும்

என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!

இனிமை

உன் வாழ்வில் நிறைக.

அச்சமும் மரணமும்

உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்

உனது

ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்

மீண்டும் மீண்டும்

வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து

உனது கிராமத்து

வீதியில் வரலாம்

தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை

அவர்கள் திறந்தால்

எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்

நாளையோர் பொழுதில்

என்னை நீ காணலாம் .....

யார் மீதும் குற்றமில்லை.

என்ன நீ பேசுதல் கூடும்?

நலமா திருமண மாயிற்றா?

என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்

கண்ணீர் மறைக்க

ஒரு சிறு புன்னகை

ஆலாய்த் தழைத்து

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

Share this post

Link to post
Share on other sites

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

முதற்காதலில் கட்டுண்ட கவிதையில் பால்ய சகியின் மென் விரல்களை பற்றிக் கொண்டதை அழகாக எழுதும் உங்க பேனா அன்னையைப்பற்றிய எழுதிய வரிகளை ஜீரணிக்கமுடியாமல் இருக்கு.

நன்றி கறுப்பி, நீங்கள் தேடி தேர்ந்து இணையமேற்றும் சேதிகளின் முதல் வாசகன் நான். அதற்க்காக முதல் வணக்கம். தங்களுடன் சில கருத்துக்களளில் வேறுபடுவதையும் சொல்ல என்னை அனுமதியுங்கள். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். மறிவரும் கலாச்சார விடயங்களில் நிலையான உண்மை என்று ஒன்று இல்லையென்றே கருதுகிறேன். ஒத்தும் மாறுபட்டும் வளர்ந்துசெல்லும் கருத்து நிலைகள்தானே உள்ளது. அதுதானே வளற்ச்சிக்கு வழி வகுக்கிறது. தோழமைக்குரிய கறுப்பி இவ்விடயங்களில் முடிந்த முடிவுகளோ முழுமையான உண்மையோ என்று ஒன்றுமில்லை. தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். சிந்திக்கிறேன். இது சங்க காலத்திலோ ஆண்டாளின் இடைக்காலதிலோ இருந்ததில்லை. குறிப்பாக கிறிஸ்துவமும் அதன் செல்வாக்கினால் இந்துமதமும் ஒரு சில நூற்றாண்டுகளாக கொண்டுவந்த தடைகள்தான் இவை. கிறிஸ்தவ நாடுகள் தடைகளை தாண்டிவந்துவிட்டன. யதார்த்தத்தை வழி மறிக்கும் சமூக கலாச்சார அரசியல் தடைகள் நமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு மேம்படவிடுவதாக இல்லை. அரசியல் கலாச்சாரரீதியாக உண்மையை எழுத தயக்கத்தால் ஈழத்து மண்ணும் எங்கள் முகத்துங்களுக்கும் (

http://noolaham.net/library/books/03/278/278.pdf

)பின்னர் நான் எனது காவிய முயற்ச்சிகளைப் பின்போட்டுவருகிறேன். எனது பொன்னான நேரத்தையெல்லாம் அரசியல் இராணுவ புவியியல் ஆய்வுகளில் இழந்துபோகிறேன். உலகின் எந்த முன்னணிக் கவிஞர்களும் தடைகளை ஏற்றுக் கொண்டதில்லை. இது என் கருத்துத்தான். எனினும் உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்.

Edited by poet

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

Share this post

Link to post
Share on other sites

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள், அவை பற்றிய பாராட்டுக்களும் மர்சனங்களும் மட்டுமன்றி வந்த ஒருசில வக்கிரமான குறிப்புகள்கூட பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரனனோடு (நிதர்சனம்) இணைய அரட்டையில் (சட்) தமிழ் செல்வனின் படுகொலைச் செய்திபற்றி பேசிக்கொண்டே சடில் வரிவரியாக எழுதப் பட்ட கவிதை அஞ்சலிப்பரணி. உடனேயெ காருணாகரன் பரபர்ர்பூஉ அஞ்சல் தந்து அனுப்பும்படி கேட்டார். களத்தில் நிற்கும் போராளிகளுக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ********************** வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எனக்கு எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் இன்னும் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். கவீதைகள் வர்ரலாறாகவும் வரலாறு கவிதைகளாகவும் மேம்படுகிற தரனங்கள் இது. வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்கள்.

தணிக்கை- யாழ்பாடி

Edited by yarlpaadi

Share this post

Link to post
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள் அவை பற்றிய பாராட்டுக்கள் வீமர்சனங்கள் ஒருசில வக்கிரமான குறிப்புகள் எல்லாமே பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரன் (நிதர்சனம்) போன்ற களத்தில் நிற்கும் போராளிகளுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ************ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீஇயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன்.

Edited by வலைஞன்
மூலக் கருத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

மன்னிக்கவும் நுணாவிலான், நேரம் அதிகமில்லை. மனவேகத்தில் எழுதுவதில் எப்பவும் நிறைய பிழைகள் வந்துவிடுகிறது. என்னை ஐயா என்று சொல்லாதீர்கள். ஜெயபாலன் என்றோ ஜெபி என்றோதான் என்னோடு பழகும் எல்லோரும் அழைக்கிறார்கள். அப்படியே அழையுங்கள். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Edited by poet

Share this post

Link to post
Share on other sites

நன்றி ஜெபி. உங்களுக்கும் இனிய புத்தாண்டுகள் உரித்தாகட்டும்.

Share this post

Link to post
Share on other sites

நன்றி ஜெபி. உங்களுக்கும் இனிய புத்தாண்டுகள் உரித்தாகட்டும்.

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

Share this post

Link to post
Share on other sites

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

எனது ஆசையும் அது தான். நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் பண்டிதர்

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

அர்த்தம் அவர்கள் என்னுடையாதனிப்பட்ட நண்பர்கள் என்பதுதான் பண்டிதர். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள்தானே. புதுவையோடு ஊடலாக நான் எழுதிய கவிதை வெளிச்சம் 100ல் வெளியாகி இருக்கிறது. அதற்க்கு என்ன அர்த்தமென்று புதுவைக்கே எழுதிக் கேளுங்கள். ராதேயன் தான் இந்திய சிறையில் இருந்தபோது விரக்தியடையும் போதெல்லாம் எனது நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதையை வாசித்ததாக ஈழநாதம் ஞாறு இதழ் ஒன்றில் குறிப்பு எழுதியிருந்தார். அவர்களிடமும் அர்த்தம் கேழுங்கள். இதுபோல பலதை எழுதலாம். அவர்களில் பலருக்கு மின்னஞ்சல் விலாசம் இருக்கு உங்கள் சந்தேகத்தை அவர்களுக்கே எழுதிக் கேளுங்கள். இங்கு பலர் தாங்களே விடுதலைக்கு குத்தகைக் காரர்களாக தீர்ப்புகள் எழுதுகிறார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? யாழ்க்களம் எனக்கு பொருதமான இடமில்லை என்று எனது நண்பர்கள் பலரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது. எழுதினேஎன். இப்போது விவாதங்களை முடித்துக்கொண்டு நண்பனாக. விடை பெறுகிற அவசரதில் இருக்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்களுடன்

Edited by poet

Share this post

Link to post
Share on other sites

மீண்டும் வணக்கம் கவிஞரேஎ!

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

********என்றாலும் யாழில் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது அவா.

ஜெயபாலனாக செல்வதாக முடிவெடுத்தாலும் முகமூடி அணிந்தாவது மீண்டும் வாருங்கள்.

நன்றி

****** தணிக்கை - யாழ்பாடி

Edited by yarlpaadi

Share this post

Link to post
Share on other sites

தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன்

எனக்கு இதில்ல உடன்பாடு இல்லை.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

பல முறை படித்தேன் .

இந்த வரிகள் என் மன ஒட்டத்துக்கு சரியாக படல்ல.

இது என் தனிப்பட்ட கருத்து.

உங்க பதிலுக்கு நன்றிங்க .

Share this post

Link to post
Share on other sites

வ.ஐ.ச,

இங்கே புதியவன் இவன். உங்கள் கவிதைகளை ஒழுங்காக படிக்கிறேனோ இல்லையோ, கவிதையின் இயல்பான நடை அழகு...

இங்கே சில வார்த்தைகளை நேரடியாக சொன்னால் கொடி பிடிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நீ எப்படி அப்படிச் சொல்லலாம் என்கின்ற உணர்ச்சிப் பெருக்கில் எதிர் அம்பு விடுவர். கோயில் கோபுரங்களில் வெளிப்படையாக சிற்பங்களைச் செதுக்கி அழகு பார்ப்பவர்கள், அவை சொல்லவரும் பொருளில் முகம் சுளிப்பது கட்டாயம் நடக்கும். சில வேஷம்... சில ரசனைக் குறைவு ... அவ்வளவே... (தாழ்மையான கருத்து...)

நன்றி...

Share this post

Link to post
Share on other sites

தோழமைக்குரிய பண்டிதருக்கும் மதிப்புகுரிய கறுப்பிக்கும் நட்புள்ள கவிரூபனுக்கும் எனது நல் வாழ்த்துக்கள். நான் நம்மவர் பலருடனும் அளவளாவ விரும்பித்தான் யாழுக்கு வந்தேன். ********

கறுப்பிமீது பெருமதிப்பு வைத்திருக்கிறேன்.

என்றாலும் நான் பண்டைய தமிழ் இலக்கியங்களையும் ஆண்டாளையும் கம்பனையும் உலக இலக்கியங்களையும் எனது பாதையாக கொண்டிருக்கிறேன். எங்க்ள் தமிழ் கவிதை மரபையும் உலகக் கவிதை மரபையும் தூக்கி வீசிவிட மனசு இடம் கொடுக்குதில்லை. என் அம்மாவின் முலைப்பால் உண்டபோது தாய்ப் பாசமாய் முதல் மனித நேயம் என்மீதுஇறங்கியதை சொல்லி இருக்கிறேன். அதில் என்ன தப்பிருக்கிறது? நான் நேரடியாகத்தானே எழுதியிருக்கிறேன். கறுப்பி நீங்கள் இதை ஓடிபஸ் சிக்கல் கோட்பாட்டைப் பிரயோகித்து அதன் பின்னணியில் பொருள்கொண்டிருக்கிறீர்கள் போலும்? அது வலிந்து பொருள் கொள்ளுதல் அல்லவா ? இது தகுமோ? இது முறையோ? இதுதர்மம்தானோ?.

தணிக்கை -யாழ்பாடி

Edited by yarlpaadi

Share this post

Link to post
Share on other sites

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

Share this post

Link to post
Share on other sites

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

Share this post

Link to post
Share on other sites

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

நன்றி கறுப்பி. இணையத்தில் நெற்றிக் கணும் இதயதில் ஆனிச்சம் பூவுமான. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

உண்மைதான் கெளரிபாலன், உங்களைப்போன்றவர்களின் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் விட்டும் விடுபட்டும் இந்த சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே நிற்கின்றேன். . தலைபணிய முடியாத கவிஞன் என்கிறதால் பலர் பாம்பாக தரையில் விழுந்து ஊரும் இசைஅமைப்பாளர்களின் பதிவான வாசல் பக்கம் செல்லவில்லை. விமர்சனங்களை எப்போதும் பாடப்புத்தகமாகக் கருதுகிறவன் தான். தேசியமும் கவிதையும் குத்தகைக்கு எடுத்த மாவி என்று கருதுகிற ஒருவரது அழுக்காறு மூக்கைப் பிடிக்க வைத்தது. அவ்வளவுதான். வேறு பிரச்சினையில்லை. * * * தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி பாலன்.

Edited by வலைஞன்
தனிமடல் விபரங்கள் பொதுக்களத்தில் இணைக்கக்கூடாது

Share this post

Link to post
Share on other sites

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

Edited by yarlpaadi

Share this post

Link to post
Share on other sites

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதல

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

2. நிறம்

வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)

வலைஞன் Edited by yarlpaadi

Share this post

Link to post
Share on other sites

வலைஞன்

முதல் சந்திப்பு

===========

கண்ணிமை மூடுவதற்குள் -ஒரு

புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்

விருட்டென்று

ஒட்டிக்கொள்கிறது பயம்

எல்லாக் கண்களும்

எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்

என்னுள் ஏதோ

இடம் மாறிப்போய் விட்டது

முதல் காதல் பலருக்கும் இப்படி இருந்திருக்கக் கூடும்... ஆணுக்கு ...மீசை துளிர்த்த பருவத்திலும் பெண்ணுக்கு ....தாவணியின் தேவை உணரப் பட்டபோதும் .... எதை அறிந்து எதை நினைந்து...இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும்.

எழுதிச் செல்லும் இயற்கையின் கரங்கள் ...புதிய பாத்தி கட்டி பயிர் செய்ய விளையும் போதே காதலும் உணரப் படுகின்றது...அதைப் போலவே காமமும்...

காமத்துப் பால் தந்த வள்ளுவமும் தமிழ் ஆண் பயல் தான்....கோவில் கோபுரங்களில் சிருங்காரம் செதுக்கி படைப்பியலின் முழுமை சொல்லியவர்களிலும் தமிழ் ஆண் பயல்கள் உண்டு. மோகத்தைக் கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு என்று பாடிய பாரதியும் ஒரு தமிழ் ஆண் பயல் தான்.....

இவர்களை எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் ஒரு பெண் பற்றியும் அவளோடு முகிழ்க்கும் முதல் காதல் பற்றியும் புரிந்து கொள்ள முடியாதா என்ன ?

-எல்லாள மஹாராஜா-

Edited by எல்லாளன்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this