Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

அறமும் காத்து.. நற்பண்பும் காத்து-நல்லவனாய் வாழ்பவனாய் எனை நினைத்து வந்தேன்... உன்னைக் காணும் வரை.. இது தவறு.. புத்தியின் சொல்லை மனது கேட்பதில்லை தேகங்கள் பரிசிப்பதுதான் காதலின் தேவை என்ற முடிவிலும் நீ முற்றுப்புள்ளி வைத்தாய்.. அம்மாவுக்கு பின் அப்படியோரு பாசம்.. ஆனாலும்..இது தவறு..நான் இல்லற வாழ்வினுள் புகக்கூடாதவன்.. ஆசாபாசங்களுக்கு விடை கொடுத்தவன்.. ஆனால் நானும் மனிதன் நீ அழகானவள் உன் அழகு என்னை பாதிக்கவில்லை நீ வாசமானவள் நான் அதையும் சுவாசிக்கவில்லை நீ அன்பானவள்..அதை மட்டுமே நான் யாசிக்கிறேன்.. மதமும்... சமுதாயமும் பேசவிடாது.. தடைகளும் கோட்பாடுகளும்.. கொள்கைகளும் மனிதன் வகுத்தது..ஆனால்.. மதகுரு ஆனாலும் நானும் எலும்பும் சதையும் ஊனும் உணர்வும் கொண்ட மனிதன்தானே..என்ன செய்வேன் ஆனால் நீ நீ என் அம்மாவாக எங்கேயோ இரு..நான் தூரமாய் இடம் மாறி போகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

காதலி மென்மையாய் அவள் மென்மை அழகிய மலராய் மலர்கள் நினைவுகளாய் நினைவுகள் அழகிய நாடகளாய் நாட்கள்..முட்களாய் கடிகார முட்கள் சோம்பேறிகளாய் சோம்பேறிகள் நண்பர்களாய் என் நண்பர்கள் தூதர்களாய் தூதர்கள் தூரமாய் அந்த தூரங்கள் பாரங்களாய் பாரங்கள் பாறாங்கல்லாய் நெஞ்சில் பாறாங்கல் காதலியாய்... அவளைத்தான்... ஆரம்பத்தில் மனது மலரென்றது.

Link to comment
Share on other sites

உன் மேல் விழுகின்ற பூக்கள் உன்னைக் காயம் செய்துவிடுமா என்ன தடுக்கத்துடிக்கின்றனவே கைகள் ...ம் பூவினும் மெல்லினம் நீயடி

Link to comment
Share on other sites

எல்லோரும் கேட்கிறார்கள்..காதலைத்தவிர வேறோன்றும் கவிதையில் வராதா என்று...என் கவிதையே காதலால்தானே வந்தது...

Link to comment
Share on other sites

உன் சிரிப்பினும் அழகிய கவிதை இல்லை ....உன் வார்த்தையை மிஞ்சிய வருடல் இல்லை.....உன் கோபத்தை மீறிய கோடை இல்லை....உன் அன்பினை தாண்டி ஓர் சொர்க்கமில்லை....உன் நினைவில்லா பொழுதுகள் இருந்ததில்லை...என் காதலானவளே என்னை இதயத்தில் கரைத்து வை எந்த அன்னப்பட்சி கூட பிரிக்கமுடியாமல்

Link to comment
Share on other sites

வானமாய் பரந்து கிடந்த இருண்ட மனதில் பால் நிலாவாய் வந்தவளே...நட்சத்திரங்களையே பார்க்காத ஆகாயம் உன்னை பார்த்ததும் அசந்து போனது ... உன் பால்ஒளியை பூசி ஆனந்தித்தது.. இடிகள் போல் மத்தள ஓசையிட்ட மனது..மின்னல் போல் பிரகாசித்தது... ஆனால் அன்று தெரியவில்லை அந்த ஆனந்தத்த்துக்கும் அந்தமுண்டு என்று ..அந்த நிலவு போலவே தரிசனங்கள் தேயந்து காணாமல் போனாய்...மீண்டும் வளர்ந்து என்மனவானில் வருவாயென காத்து கிடக்கிறேன் பத்திரிகை ஆண்டுகள் பறந்து போயும் வரவில்லை என்னிலவு.!!

Link to comment
Share on other sites

பனித்துளிகள் தொட்டுப்பார்த்தேன்... சில்லென்ற காலை..ஹார்மோனி வாசிக்கும் பறவைப்பாஷைகளில் லயித்துப்போனேன்..இந்தப்பூக்கள் அழகை சொல்கிறது..இந்தப்புற்கள் பாதங்களைப் பழகச் சொல்கிறது..மேலே பஞ்சுமுகில்கள் ஊர்ந்துபோகிறது. என் நெஞ்சும் சேர்ந்து போகிறது..இரசிக்கின்ற மனமும்..இரசனையான இடமும் தந்த தாய்தந்தையே..என்றும் நன்றிகள்

Link to comment
Share on other sites

அதிகமாக கசக்கி எறியப்பட்ட காகிதங்கள்..காதலுக்காக எழுத முனைந்த கடிதங்களாக தாம் இருக்கும்..அதிகமாக சென்று சேராத கடிதங்களும் காதல் கடிதங்களாகதான் இருக்கும்...அதிகமான கவிதைகள் காதல் கவிதைகளாகத்தான் இருக்கும்..அதிகமான ஏமாற்றங்கள் காதலில்தான் இருக்கும்..அதிகமான தியாகங்கள் காதலில்தான் இருக்கும்..ஆதலால்தான் காதல் சந்ததி சந்ததியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது போலும்

Link to comment
Share on other sites

இனிப்பு பாண்டத்தை முற்றுகை இடுகின்ற எறும்புகள் போல்.. சில மனிதர்கள் சுற்றிக்கிடப்பார்கள்..உன் பணமும் பதவியும் இல்லாதபோது காணாமல் போகும் சுயநலவாதிகள்..அவர்கள் அப்படித்தான்..இல்லை பெரும்பாலும் அப்படித்தான்..வெறுப்பை அவர்களில் காட்டாமல்..உன்னை உயர்த்திக்கொள்..கனமாயிரு..தனமோடிரு..தரைமீதிரு..தரணி போற்றுமொரு குணவானாயிரு..இடைவிடாத உழைப்பும்..இனிய சொல்லும்..சிரித்தமுகமும் இலகு மனமும் கொண்டால் இறந்தபின்னும் இருப்பாய் எல்லோரின் மனதிலும்..

Link to comment
Share on other sites

அதிகமாக கசக்கி எறியப்பட்ட காகிதங்கள்..

காதலுக்காக எழுத முனைந்த கடிதங்களாக தாம் இருக்கும்..

அதிகமாக சென்று சேராத கடிதங்களும்

காதல் கடிதங்களாகதான் இருக்கும்...

அதிகமான கவிதைகள் காதல் கவிதைகளாகத்தான் இருக்கும்..

அதிகமான ஏமாற்றங்கள் காதலில்தான் இருக்கும்..

அதிகமான தியாகங்கள் காதலில்தான் இருக்கும்..

ஆதலால்தான் காதல் சந்ததி சந்ததியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது போலும்..... 

 

 

அதிகமான துறக்கப்பட்ட உயிர்களும் காதலிகாகத்தான் இருக்கும்......  :icon_idea:

 

இதை விட்டுப்போட்டியளே  :lol:

 

 

 

 

Link to comment
Share on other sites

ஓம் ராஜன் விஷ்வா அதுவும் சரி தற்கொலை என்ற விசயத்தில் ஆண் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் மாறிவிடுகின்றனர். அண்மைக்காலங்களில் பெண்களும். காதலுக்காக தற்கொலை செய்துகொள்வதனை கேள்வியுறமுடிகிறது

Link to comment
Share on other sites

ஒரு சிங்கம் போல் மிடுக்குடன் பகலிலே...இரவிலே பூனையாய் முடங்கிப்போகும் மனசு.. ஊருக்கு காட்டும் திமிரை..ஊதித்தள்ளுமோர் அடிமனசின் தேவை.. தூக்கி எறிந்துவிடும் கர்வமும் தனித்ததும் கண்ணீர் விடும்.. இந்த பாசத்தின் சேவை..தேவை என்பதை கண்ணாடி கேட்கும்... வெளி வேசம் கலைந்தபின்.. வாழ்நாள்..கடந்து போய்விடும் காட்டாற்றைப்போல்... வீறாப்பை பிடித்துக்கொண்டு தங்க முடியாது..கனிந்தும் இனிந்தும் கலந்தும் வாழ்ந்துவிட ஏங்கும் மனங்கள் தமக்குள் கட்டும் இறுமாப்பு சுவரில் எத்தனை சோடிகள் ஏறித் தவிக்கிறது!!!

Link to comment
Share on other sites

நீ நீர் சொட்டும் கூந்தலோடு..நாணம் சேர விழியால் வளைத்தாயே...அதுதானடி ஆசையின் உச்சம்!....... வேறு நண்பன் பற்றி என்னிடம் பேசி என்னை வெறுப்பேற்றினாயே.. அதுதானடி பொறாமையின் உச்சம்!.....உன் கைவிரல்கள் கோர்த்து அழுத்திக்கொண்டாயே அதுதானடி தேவையின் உச்சமடி!... மூச்சுகள் கலந்து முற்றும் நனைந்து முகத்தினை இழுத்து மார்பினில் புதைத்த கணம் இன்பத்தின் உச்சமடி!... நோயுற்ற என்னை விழிகள் மூடாது மடியினில் சுமந்தாயே பாசத்தின் உச்சமடி!...அனைத்தும் பெற்றவனாய் உன்னை மறந்தகணம் துரோகத்தின் உச்சமடி!.....அதைக்கூட மறந்து அன்பே என்றழைத்து உயிராய் சுமக்கிறாயே..உயிரே இதுதான் காதலின் உச்சமடி!...

Link to comment
Share on other sites

காதல் கடலில் அவனும் அவளும் காதலை மட்டும் கட்டையாக பிடித்துக்கொண்டு...விதி என்னும் பேரலை பிரித்தது அவர்களை.....வெவ்வேறு கரைகளில் ஒதுங்கியும் காதலை நம்பி ஓடினார்கள்...தேடினார்கள்...வாடினார்கள் காலங்களும் கரைந்தது கனவுகளும் கலையத்தொடங்கியது...முதுமை முளைக்கின்ற தருணத்தில் அவள் ஒரு கோவிலில் அவனை அடையாளம் கண்டுகொண்டாள் அவனப் பார்க்கவும் அருகில் செல்லவும் ஆன்மா தவித்தது யாரோ ஒரு பெண் அவனருகில் ஓ... திருமணம் செய்துவிட்டானா..பாவி நான் மட்டும் ....அவள் பார்த்த அவனில்லை... வழுக்கை விழுந்துருந்தது உப்பி போயிருந்தான் முகத்தில் ஆனந்தரேகைகளின் தடயங்களே இல்லை அந்தப்பெண்ணுக்காக வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிவந்து தருகிறான் ...அன்பானவளே உன்னை ஒரு பூப்போலே தாங்கிக்கொள்வேன் கண்போல காத்துக்கொள்வேன்...அவன் எப்போதோ சொன்ன வார்த்தைகள் ஆயிரமாம் தடவையாக இதயசுவர்களில் எதிரொலித்தது . உனக்காகவே உன்னை எண்ணியே முதிர் கன்னியாய் நிற்கிறேனே.. ஒரு பெண்ணாய் இந்த உலகில் எவ்வளவு சவால்களை தாண்டி உன்னையே தேடினேனேயடா.. உள்ளம் குமுற அவள் மயங்கிச்சரிந்தாள் யாரோ தண்ணீர் தெளிக்க விழித்த அவள் விழிகளில் அவன் படவில்லை...ஆம் மீண்டும் அவன் காணாமல் போனான்... இனி அவனை அவள் தேட மாட்டாள் காதலில் அவன்தான் தோற்றப்போனான் அவளில்லை

Link to comment
Share on other sites

இந்த ஏக்கம் இப்படித் தாக்குமென நான் எண்ணியிருக்கவில்லை...புலர்ந்தும் புலராத காலைப் பொழுதுகளில்..பழுத்த மாங்கனிகள்..விழுந்த நுங்குகள்..கூரையோடு வளர்ந்த வேப்பமரத்தில் விளையாடும் அணில்கள்..காற்றுக்கும் மழைக்கும் சலவைக்குப் போன வெள்ளை மணல் முற்றம்..வெளிக்காணிக்குள் நாம் பராமரித்த எங்கள் அம்மன் கோவில்..குப்பைக்கிடங்கருகே நின்றதாலோ என்னமோ வளமாய் கொழியும் கொய்யாமரம்..நானே ஏற வசதியாய் சரிந்து வளர்ந்த செவ்விளநீர் மரம்..எவ்வளவு ஏறி ஆடினாலும் அசையாத சேலன் மாங்கொப்பு..பச்சைத்தண்ணி மாங்காய்..அடிக்கடி தேனீக்கள் கட்டும் தேன்கூடுகள்..அம்மாவோடு தென்னோலை பின்னப் பழகிய பின்னேரங்கள்...அண்ணாவோடு போட்டிக்கு அலவாங்கில் தேங்காய் உரித்த நாட்கள்..கருப்பட்டி கஞ்சியும்..பனங்காய் பலாகாரமும்..பக்கத்துவீட்டு சினேகிதங்களும்..கந்தசுவாமி கோவிலில் சூரன் போரும்..அம்மன் கோவில் திடலில் வண்ணவிளக்குகள்..வறுத்தகடலை..கோணைஸ்கிறீம்..கூத்துநாடகம்...பக்கத்துதெரு கிறிஸ்தவ ஆலயத்தில் நத்தார் பண்டிகை சிறப்புபொண்டாங்கள்..நாடங்கள் குதூகலங்கள்..தோடம்பழ இனிpப்புடன் தேநீர்...ரோஸ் பாணும் சம்பலும்..கொன்றல் மரமும் கோயில்குளமும்..நெல்லிமரமும் புளியமரமும்..அரட்டை அடிக்கும் முச்சந்தியும்...தாவணிகள் உரசிச்செல்லும் திருவிழாக்காலங்களில் பெண்களுக்காக தண்ணீர் இறைக்கும் இளவட்ட தியாகங்களும்..சைக்கிள் சவாரியில் சாதனைகளும் சாட்சிகளும்..கடற்கரை காற்றும் காலாற்றும் உப்புநீர் அலைகளும்...வயல் வரப்பும்..தோட்டமும் துரவும்..உற்றமும் உறவும்..நண்பர்களும்..ஆசான்களும்..அள்ளிஅள்ளித் தந்த பள்ளியும் படிப்பும்..கன்ரீன் வடையும் ரீயும்..எல்லா சுகங்களும் கனவாய்..தூரத்து சொர்க்கமாய் ஆகுமென்று அம்மா வெளிநாடு போகவென அழைத்து சென்றபோது..அறிந்திரேனே..இன்று இந்த ஏக்கம் இப்படித் தாக்குமென நான் எண்ணியிருக்கவில்லை...

Link to comment
Share on other sites

உன் விழிகளுக்கள் கூர்மையான ஈட்டிகள்...உன் கோப பார்வையில் குத்திக்கிழிக்கிறது! உன் விழிகளுக்குள் சக்தி வாய்ந்த காந்தங்கள் என்விழிகள் தொட்டதுமே கவர்ந்து இழுக்கிறது! உன் விழிகளுக்குள் ஈரச்சாரல் அருகில் வீசி அசத்துகிறது! உன் விழிகளுக்குள் எரிமலை உக்கிரகோபத்தில் வெடித்து சிதறுகிறது ! உன் விழிகளுக்குள் பௌர்ணமி நிலவு இரவிலும் ஒளி வீசுகிறது ! உன் விழிகளில் அம்மா மடி துவண்ட என்னை தூரம் இருந்தே தூங்க வைக்கிறதே! இப்படி அழகு விழிகளில் ஆயிரமாய் கொண்டதனால்தானோ என்னவோ அன்பே நீயும் பூமித்தாய போல் பொறுமையானவளாய் இருக்கிறாய் !!

Link to comment
Share on other sites

விகடகவி உங்களது அனைத்து கவிதையும் நன்றாக உள்ளது. ஆனால் படிப்பதற்கு பந்தி பந்தியாக இல்லாததால் இலகுவாக இல்லை. நீங்கள் கீழே இணைத்திருக்கும் முகவரிக்குச் சென்று உங்களது கவிதைகளை பந்தியாக மாற்றி பின்பு அதை படிவேடுத்து இங்கு பதியலாம். முயன்று பாருங்கள்.
 
 

 

Link to comment
Share on other sites

உன் விழிகளுக்கள் கூர்மையான ஈட்டிகள்...

உன் கோப பார்வையில் குத்திக்கிழிக்கிறது!

 

உன் விழிகளுக்குள் சக்தி வாய்ந்த காந்தங்கள் என்விழிகள்

தொட்டதுமே கவர்ந்து இழுக்கிறது!

 

உன் விழிகளுக்குள் ஈரச்சாரல்

அருகில் வீசி அசத்துகிறது!

 

 

உன் விழிகளுக்குள் எரிமலை

உக்கிரகோபத்தில் வெடித்து சிதறுகிறது !

 

உன் விழிகளுக்குள் பௌர்ணமி நிலவு

இரவிலும் ஒளி வீசுகிறது !

 

உன் விழிகளில் அம்மா மடி

துவண்ட என்னை தூரம் இருந்தே தூங்க வைக்கிறதே!

 

இப்படி அழகு விழிகளில் ஆயிரமாய் கொண்டதனால்தானோ என்னவோ

அன்பே நீயும் பூமித்தாய போல் பொறுமையானவளாய் இருக்கிறாய் !! 


இந்த ஏக்கம் இப்படித் தாக்குமென நான் எண்ணியிருக்கவில்லை...

புலர்ந்தும் புலராத காலைப் பொழுதுகளில்..

பழுத்த மாங்கனிகள்..

விழுந்த நுங்குகள்..

கூரையோடு வளர்ந்த வேப்பமரத்தில் விளையாடும் அணில்கள்..

காற்றுக்கும் மழைக்கும் சலவைக்குப் போன வெள்ளை மணல் முற்றம்..

வெளிக்காணிக்குள் நாம் பராமரித்த எங்கள் அம்மன் கோவில்..

குப்பைக்கிடங்கருகே நின்றதாலோ என்னமோ வளமாய் கொழியும் கொய்யாமரம்..

நானே ஏற வசதியாய் சரிந்து வளர்ந்த செவ்விளநீர் மரம்..

எவ்வளவு ஏறி ஆடினாலும் அசையாத சேலன் மாங்கொப்பு..

பச்சைத்தண்ணி மாங்காய்..அடிக்கடி தேனீக்கள் கட்டும் தேன்கூடுகள்..

அம்மாவோடு தென்னோலை பின்னப் பழகிய பின்னேரங்கள்...

அண்ணாவோடு போட்டிக்கு அலவாங்கில் தேங்காய் உரித்த நாட்கள்..

கருப்பட்டி கஞ்சியும்..

பனங்காய் பலாகாரமும்..

பக்கத்துவீட்டு சினேகிதங்களும்..

கந்தசுவாமி கோவிலில் சூரன் போரும்..

அம்மன் கோவில் திடலில் வண்ணவிளக்குகள்..

வறுத்தகடலை..கோணைஸ்கிறீம்..கூத்துநாடகம்...

பக்கத்துதெரு கிறிஸ்தவ ஆலயத்தில் நத்தார் பண்டிகை சிறப்புபொண்டாங்கள்..

நாடங்கள் குதூகலங்கள்..

தோடம்பழ இனிpப்புடன் தேநீர்...

ரோஸ் பாணும் சம்பலும்..

கொன்றல் மரமும் கோயில்குளமும்..

நெல்லிமரமும் புளியமரமும்..

அரட்டை அடிக்கும் முச்சந்தியும்...

தாவணிகள் உரசிச்செல்லும் திருவிழாக்காலங்களில் பெண்களுக்காக தண்ணீர் இறைக்கும் இளவட்ட தியாகங்களும்..

சைக்கிள் சவாரியில் சாதனைகளும் சாட்சிகளும்..

கடற்கரை காற்றும் காலாற்றும் உப்புநீர் அலைகளும்...

வயல் வரப்பும்..

தோட்டமும் துரவும்..

உற்றமும் உறவும்..

நண்பர்களும்..

ஆசான்களும்..

அள்ளிஅள்ளித் தந்த பள்ளியும் படிப்பும்..

கன்ரீன் வடையும் ரீயும்..

எல்லா சுகங்களும் கனவாய்..

தூரத்து சொர்க்கமாய் ஆகுமென்று அம்மா வெளிநாடு போகவென அழைத்து சென்றபோது..

அறிந்திரேனே..

இன்று இந்த ஏக்கம் இப்படித் தாக்குமென நான் எண்ணியிருக்கவில்லை... 

Link to comment
Share on other sites

நன்றி 

இப்போது 

சரியாக 

வருகிறது

எல்லோரும் கேட்கிறார்கள்..

காதலைத்தவிர

வேறோன்றும் கவிதையில் வராதா என்று...

என் கவிதையே

காதலால்தானே வந்தது... 

உன் சிரிப்பினும் அழகிய கவிதை இல்லை ....

உன் வார்த்தையை மிஞ்சிய வருடல் இல்லை.....

உன் கோபத்தை மீறிய கோடை இல்லை....

உன் அன்பினை தாண்டி ஓர் சொர்க்கமில்லை....

உன் நினைவில்லா பொழுதுகள் இருந்ததில்லை...

என் காதலானவளே

என்னை இதயத்தில் கரைத்து வை

எந்த அன்னப்பட்சி கூட பிரிக்கமுடியாமல் 

வானமாய் பரந்து கிடந்த இருண்ட மனதில்

பால் நிலாவாய் வந்தவளே...

நட்சத்திரங்களையே பார்க்காத ஆகாயம்

உன்னை பார்த்ததும் அசந்து போனது ...

உன் பால்ஒளியை பூசி ஆனந்தித்தது..

இடிகள் போல் மத்தள ஓசையிட்ட மனது..

மின்னல் போல் பிரகாசித்தது...

ஆனால் அன்று தெரியவில்லை

அந்த ஆனந்தத்த்துக்கும் அந்தமுண்டு என்று ..

அந்த நிலவு போலவே

தரிசனங்கள் தேயந்து காணாமல் போனாய்...

மீண்டும் வளர்ந்து

என்மனவானில்

வருவாயென காத்து கிடக்கிறேன்

பத்திரு ஆண்டுகள் பறந்து போயும்

வரவில்லை என்னிலவு.!! 

பனித்துளிகள் தொட்டுப்பார்த்தேன்...

சில்லென்ற காலை..

ஹார்மோனி வாசிக்கும் பறவைப்பாஷைகளில் லயித்துப்போனேன்..

இந்தப்பூக்கள் அழகை சொல்கிறது..

இந்தப்புற்கள் பாதங்களைப் பழகச் சொல்கிறது..

மேலே பஞ்சுமுகில்கள் ஊர்ந்துபோகிறது.

என் நெஞ்சும் சேர்ந்து போகிறது..

இரசிக்கின்ற மனமும்..

இரசனையான இடமும் தந்த

தாய்தந்தையே..

என்றும் நன்றிகள் 

அதிகமாக கசக்கி எறியப்பட்ட காகிதங்கள்..

காதலுக்காக எழுத முனைந்த கடிதங்களாக தாம் இருக்கும்..

 

அதிகமாக சென்று சேராத கடிதங்களும்

காதல் கடிதங்களாகதான் இருக்கும்...

 

அதிகமான கவிதைகள் 

காதல் கவிதைகளாகத்தான் இருக்கும்..

 

அதிகமான ஏமாற்றங்கள் காதலில்தான் இருக்கும்..

 

அதிகமான தியாகங்கள் காதலில்தான் இருக்கும்..

 

ஆதலால்தான் காதல் சந்ததி சந்ததியாக

வாழ்ந்துகொண்டிருக்கிறது போலும் 

இனிப்பு பாண்டத்தை முற்றுகை இடுகின்ற எறும்புகள் போல்..

சில மனிதர்கள் சுற்றிக்கிடப்பார்கள்..

உன் பணமும் பதவியும் இல்லாதபோது

காணாமல் போகும் சுயநலவாதிகள்..

அவர்கள் அப்படித்தான்..

இல்லை பெரும்பாலும் அப்படித்தான்..

வெறுப்பை அவர்களில் காட்டாமல்..

உன்னை உயர்த்திக்கொள்..

கனமாயிரு..

தனமோடிரு..

தரைமீதிரு..

தரணி போற்றுமொரு குணவானாயிரு..

இடைவிடாத உழைப்பும்..

இனிய சொல்லும்..

சிரித்தமுகமும்

இலகு மனமும் கொண்டால்

இறந்தபின்னும் இருப்பாய்

எல்லோரின் மனதிலும்.. 

ஒரு சிங்கம் போல் மிடுக்குடன் பகலிலே...

இரவிலே பூனையாய் முடங்கிப்போகும் மனசு..

ஊருக்கு காட்டும் திமிரை..

ஊதித்தள்ளுமோர் அடிமனசின் தேவை..

தூக்கி எறிந்துவிடும் கர்வமும் தனித்ததும் கண்ணீர் விடும்..

இந்த பாசத்தின் சேவை..

தேவை என்பதை கண்ணாடி கேட்கும்...

வெளி வேசம் கலைந்தபின்..

வாழ்நாள்..கடந்து போய்விடும்

காட்டாற்றைப்போல்...

வீறாப்பை பிடித்துக்கொண்டு தங்க முடியாது..

கனிந்தும் இனிந்தும் கலந்தும் வாழ்ந்துவிட

ஏங்கும் மனங்கள்

தமக்குள் கட்டும் இறுமாப்பு சுவரில்

எத்தனை சோடிகள் ஏறித் தவிக்கிறது!!! 

நீ நீர் சொட்டும் கூந்தலோடு..

நாணம் சேர விழியால் வளைத்தாயே...

அதுதானடி ஆசையின் உச்சம்!.......

 

வேறு நண்பன் பற்றி

என்னிடம் பேசி

என்னை வெறுப்பேற்றினாயே..

அதுதானடி பொறாமையின் உச்சம்!.....

 

உன் கைவிரல்கள் கோர்த்து

அழுத்திக்கொண்டாயே

அதுதானடி தேவையின் உச்சமடி!...

 

மூச்சுகள் கலந்து

முற்றும் நனைந்து

முகத்தினை இழுத்து

மார்பினில் புதைத்த கணம்

இன்பத்தின் உச்சமடி!...

 

நோயுற்ற என்னை

விழிகள் மூடாது

மடியினில் சுமந்தாயே

பாசத்தின் உச்சமடி!...

 

அனைத்தும்

பெற்றவனாய்

உன்னை மறந்தகணம்

துரோகத்தின் உச்சமடி!.....

 

அதைக்கூட மறந்து

அன்பே என்றழைத்து

உயிராய் சுமக்கிறாயே..

உயிரே இதுதான் காதலின் உச்சமடி!... 

காதல் கடலில்

அவனும் அவளும்

காதலை மட்டும்

கட்டையாக பிடித்துக்கொண்டு...

விதி என்னும் பேரலை

பிரித்தது அவர்களை.....

வெவ்வேறு கரைகளில் ஒதுங்கியும்

காதலை நம்பி ஓடினார்கள்...

தேடினார்கள்...

வாடினார்கள் 

காலங்களும் கரைந்தது

கனவுகளும் கலையத்தொடங்கியது...

முதுமை முளைக்கின்ற தருணத்தில்

அவள்

ஒரு கோவிலில்

அவனை அடையாளம் கண்டுகொண்டாள்

அவனப் பார்க்கவும்

அருகில் செல்லவும்

ஆன்மா தவித்தது

யாரோ ஒரு பெண்

அவனருகில்

ஓ... திருமணம் செய்துவிட்டானா..

பாவி..

நான் மட்டும் ....

 

அவள் பார்த்த அவனில்லை...

வழுக்கை விழுந்துருந்தது

உப்பி போயிருந்தான்

முகத்தில்

ஆனந்தரேகைகளின் தடயங்களே இல்லை

 

அந்தப்பெண்ணுக்காக

வரிசையில் நின்று

பிரசாதம் வாங்கிவந்து தருகிறான் ...

 

அன்பானவளே

உன்னை ஒரு பூப்போலே தாங்கிக்கொள்வேன்

கண்போல காத்துக்கொள்வேன்...

அவன் எப்போதோ சொன்ன வார்த்தைகள்

ஆயிரமாம் தடவையாக

இதயசுவர்களில் எதிரொலித்தது .

 

உனக்காகவே

உன்னை எண்ணியே

முதிர் கன்னியாய் நிற்கிறேனே..

ஒரு பெண்ணாய் இந்த உலகில்

எவ்வளவு சவால்களை தாண்டி

உன்னையே தேடினேனேயடா..

 

உள்ளம் குமுற

அவள் மயங்கிச்சரிந்தாள்

யாரோ தண்ணீர் தெளிக்க விழித்த

அவள் விழிகளில்

அவன் படவில்லை...

 

ஆம்

மீண்டும் அவன் காணாமல் போனான்...

இனி

அவனை

அவள் தேட மாட்டாள்

 

காதலில்

 தோற்றது அவன்தான் 

அவளில்லை 

Link to comment
Share on other sites

உன் மேல் விழுகின்ற பூக்கள்

உன்னைக் காயம் செய்துவிடுமா

என தடுக்கத்துடிக்கின்றனவே கைகள் ...

ம்

பூவினும் மெல்லினம் நீயடி 

காதலி காணாமல் போவாள்...

காதல் ...

ஆமையாய் நாட்கள் போனாலும் -உள்ளே 

ஊமையாய் ஒளிந்திருக்கும்... 

நேரம் தேவையான நேரங்களில்

முயலாகவும் ....

காத்திருக்கும் நேரங்களில்

ஆமையாகவும்...

ஆமைதான் இதிலும் வெல்கிறது

எல்லோரும் சேர்ந்து

என் காதலை புதைத்துவிட்டதாய்

மகிழ்ந்தார்கள்

பாவம்...

ஓட்டுக்குள் புகுந்த

ஆமையின் தலையாய்-அது

எட்டிப் பார்த்தபடி...

அவ்வப்போது 

நீல வானம்

திறந்து கிடக்கிறது- நெஞ்சம்

அலைவதில்லை கொஞ்சமும்

நீ மூடி வைக்கிறாய் -முகம்தனை

கண்கள் மட்டும்

கண்டே

தவித்துத்துப்போனேன்- என்னை

மதம் கொள்ள வைப்பது

மதம்தான்

அதை மாற்றுமொரு வார்த்தை

உன் சம்மதம்தான் 

Link to comment
Share on other sites

மேகமூட்டங்களில்

மறைந்து மறைந்து பார்க்கும்....

நிலவை .....

சாய்நாட்காலியில்

ஓய்ந்திருந்து இரசிக்க...

கூதலோடு கலந்த

வேப்பமரக்காற்றில்..

தேகம் சுகப்பட...

மெல்லனக்கேட்கும்

இனிய தமிழ்ப்பாடல் சுகம்

மழை வரக் கலைவது போல்..

வாழ்வின் சுகங்கள் யாவும்...

சுயத்தை தொலைத்தபோதே

மறைந்து போகிறதே

மெல்ல மெல்ல..

பிறர்க்காக 

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால்  அழுதபோதெல்லாம்...

கண் மூடிக்கிடந்தவனோ

காலணியாய் கலையுளிகள்

செதுக்கியதைச் சிதைப்பதை

சினங்கொண்டு தடுப்பான்...

தமிழ் உணர்வுகள் காயப்படல்...புதிதல்ல

கொடுங்கோலர் கொக்கரித்தல் முதலுமல்ல..

நீதியின் பயணம் முடங்காது முடியாது

உள்ளுக்குள் அழுதாலும்

உன்னுரம் ஏற்று

சிந்தித்தாற்று உன்பணி..

கயவர் சிதைத்தாலும்..

நெஞ்சிலுண்டு..

வானுயர...நினைவுத்தூபி. 

Link to comment
Share on other sites

கனமான நகர்வுகளுடன் கடிகார முட்களும். கண்கள் துருத்துகின்ற மெழுகுவர்த்தி வெளிச்சமும் சுவரில் பெரிதாகி விழுந்த நாட்காலி நிழலும் காற்றோட்டமில்லாமல் திறந்த ஜன்னலூடே உள் வரும் காற்றும் இராக்காலத்து மின்வெட்டால் விளைந்த வரவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.