Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

தூறல் நாள் -24

நானா..நீயா

முதலில் மௌனத்தைக் கலைப்பது

என்ற இருவரது

இறுமாப்பையும்..

இரு மாதங்களில்.

புதிதாய் ஒருவன் வந்து

கலைப்பான் என்று

நான் எதிர்பார்க்கவேயில்லை!

அன்பே..

என் பிள்ளைக்கு நீ

தாயாகி என்

இதயக் கரும்பாறையை

இலகவைத்து உன் காலடியில்

இலவம் பஞ்சாக்கி

உனை நிதம் சுமக்க

வைத்தாய்!..

உன்னைப் பார்த்த

பிறகு நான்

மரணம் என்ற

வார்த்தைக்கு அஞ்சுகிறேன்!.

உன் வரவால்

என் படுக்கையறைகூட

படு வெளிச்சமானது

தேவதையே..

என் மனைவி

எவ்வளவு அடக்கமாம்..

அமைதியாய் இருக்கிறாறாம்..

பேச்சோ மிகக்குறைவாம்..

பெரியவர்களிடம் மிக

மரியாதையாக நடந்து

கொள்கிறாளாம்..

என் பெற்றோரின் புகழாரத்தை

ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன்..

தனிக்குடித்தனம் வந்த பிறகு..

நான் அதே மாதிரி

நடந்து கொள்ள

கற்றுக்கொண்டேன்..ஆனால்

அவள்? :rolleyes:

காதலியே..

காதல் சம்மதத்தை தர

ஐந்து வருடங்கள் எடுத்துக்கொண்டாய்.

நான் கல்யாண சம்மதத்தை தர

ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டதற்கா

இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

கற்கண்டு கூட

கசந்தது..நீ

என்னை நிராகரித்த

பொழுதுகளில்..

வேப்பங்காய் கூட

அமுதமாயிருக்கிறது..

நீ என்னிடம்

சம்மதம் சொன்ன பிறகு...

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் -25

கனவில் நீ வந்தாய்..

விடிந்தும்..இமைகளைத்

திறக்காமலே நான்..

உந்தன் வசீகரமான விழிகள்

என்னைப் பார்த்து

ஆசையுற்றதில்..பிறருக்கு

ஆச்சரியம்...என்னே

என் பேரதிர்ஸ்டம்!

நானும் அவளும்

மௌனிகளாய்

இருந்தபோதும்..எங்கள்

விழிகள் ஓயாது

பேசிக்கொண்டேயிருக்கின்றன..

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

"என்னிடம் ஒரு

கெட்ட பழக்கம் இருக்கிறது..

அழகான பெண்களுக்கு

ரோஜாப்பூ கொடுப்பது" என்றாவாறு

அவன் அவளிடம்

ரோஜாவைக் கொடுத்தான்..

"என்னிடம் ஒரு

கெட்டபழக்கம் இருக்கிறது..

என்னிடம் யாராவது காதல்கடிதம்..

ரோஜாப்பூ என்று தந்தால்.."என்ற

அவள் குனிந்து நிமிரும்முன்..

அவன் ஓடி வந்துவிட்டான்..

என்னெதிரே ஏதோ சத்தம்

என் நிலைக்கண்ணாடிதான்

காறித்துப்ப எத்தனிக்கிறதோ..

உலகமே திரண்டிருந்தாலும்

உள்ளம் துவண்டிருக்கமாட்டேன்..

என் காதலி நீயே..

உயிரோடு உயிராக என்றவள்..

உன் உறவுகளோடு..

ஊமையாயிருப்பதால்தான்..

உடைந்துபோய் நிற்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

அழகாக சொல்லி இருக்கிறீங்க யதார்த்தத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கச் சுகமாயிருக்கிறது கவிஞரே!!! வளரட்டும் தினமும் தூறல்கள்!!!

Link to comment
Share on other sites

நிலா சுவி..நன்றிகள்..உங்கள் ஊக்கங்களே....மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது..

தூரல் நாள் 26

உன் காதலை

ஏற்கும் மனோநிலை

எனக்கில்லை

என் பேச்சைக்

கேட்கின்ற பக்குவம்

உனக்கில்லை..

நான் சமுதாயம் என்ற

சுழலில் நிற்கவில்லை

எதிர்காலம் என்ற

சிக்கலைச் சிந்திக்கிறேன்..

புரிவாய் சிறியவளே..

தொடாமல் சுகம் தரும்

தொலைபேசி உரையாடல்களும்..

எட்டி நின்று பார்த்து

ஏங்குகின்ற விழிகளும்..

கட்டில்வரை இழுத்துவிட

காளை படும் பாடுகளும்..

காதலனை நம்பிவிட்டு

கலங்கிநிற்கும் கன்னிகளும்..

தற்காலக் காதல் கண்காட்சி.

கருவளர்த்த தாய்..

கண்ணாய் வளர்த்தவள்..

உயிர் கொடுத்த தந்தை

உழைப்பால் காத்தவன்..

வாழ்வு முழுவதும்

கேட்டதெல்லாம் கொடுத்தவர்கள்...

நீ கேட்டிருக்கலாம்

காதலுக்கா மறுத்திருப்பார்கள்..

பெற்றமைக்கு நன்றிக்கடன்..

வளர்த்ததற்கு செய்நன்றி..

ஓடிப்போனாய்..இவளே..

இரண்டே மாதம் மட்டும்

பல்லிலளித்த பையனோடு..

பெற்ற பாவத்திற்கு பலன்..

வளர்த்த பாவத்திற்கு பிராயச்சித்தம்..

பிரமை பிடித்த அம்மாவையும்..

பேச்சிழந்த அப்பாவையும்;..

அவர்கள் ஆன்மா..கணமும்..

அணுஅணுவாய் அழவைக்கிறதே..

உன் வார்த்தைகள்

வலித்தபோதெல்லாம்

மௌனம் காத்தேன்..

உன் செயல்கள்

சினந்தந்த போதெல்லாம்

பொறுமை காத்தேன்..

என் மௌனமும் பொறுமையும்..

திருமணத்திற்கு முதலே..

கலைக்கப்பட்டிருந்தால்

விவாகரத்திற்காக..நான்..

அலையவேண்டி இருந்திராதே...

வண்டு தேனைக்

குடித்துவிட்டு இளைப்பாறும்..

பூக்கள் தேனைக்

கொடுத்துவிட்டு களைப்பாகும்..

நாகரீகம்..

நீ உன்னை ரசிப்பதல்ல..

மற்றவர்கள் உன்னை மதிப்பது.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 27

பார்வையிலே பதிலை வந்து சொல்லடி-உனைப்

பார்த்தபின்னே பசியேயில்லை ஏனடி

பாயதிலே தூக்கமில்லை பாரடி -உன்னால்

பாதியுடல் தேய்ந்துவிட்டேன் நானடி

அள்ளும் அழகு துள்ளும் இளமை

சொல்லும் காதல் வேதம்

ஆசைநூறு பேச நூறு

தேடும் ஜோடிப்பாதம்..

பூக்களை பார்த்து இரசிக்கும்

கிளையின் காதல் தெரியும்

பூக்களைத் தொட்டு செல்லும்

தென்றல் காதல் தெரியும்

பூக்களை ஆண்டு செல்லும்

வண்டின் காதல் தெரியும்

பூக்கள்தானே பெண்கள்

நாம் என்றும் ஊமைகள்.

காதல்தன்னை நானே..வந்து

எப்படி சொல்வேன்..மூங்கில்

பாட்டைப்போல காற்றினில் சொல்வேன்

உன்னைப் பார்த்த

கண்ணைப் பார்த்தேன்

இன்னும் மறையா வதனம்

மண்ணைப் பார்க்கும்

பெண்ணைப் பார்த்தேன்.

மென்மை கொண்ட நாணம்..

காலை மாலை காலமெல்லாம

காலடியில் பூக்கள் தூவுவேன்.

நீரை நெருப்பை நெருஞ்சி முள்ளை

உனக்காய் நெஞ்சில் சூடுவேன்..

எந்த மண்ணில் இருந்தபோதும்

எந்தன் எண்ணம் நீயடி

நாடி நரம்பு உரைக்கும் பேரை

தேடி ஓடும் காதலனாய் நான்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 28

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

சர்வதேச தீவிரவாதியே..

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

சிரிப்புக்கும் அழுகைக்குமிடையில்

கடவுளைத்தேடும் மனிதைனை

நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்குமிடையில்

கடவுள் தேடுவதால் தேடல் தொடர்கிறது...

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

உலகமென்ற அரங்கிலே..

ஓராயிரம் நாடகம்...இறுதிக்

காட்சியென்பது..மரணக்காட்சியா

ய்விடும்..

புரிந்திடாமல் அழுதுவாடும் மனிதம்..

பிறர் சிரிக்க ரசிக்க மறந்திடும்..

உனக்கும் எனக்கும்..

தெரிந்த கதை..

உனக்கும் எனக்கும்

தெரியாத முடிவு

நம் காதல்?..

இந்த பேனாவுக்கு

மட்டும் ஏனடி..

உன்னில் இவ்வளவு

காதல்..அதை

எதற்காக எடுத்தாலும்

உன் பெயரை மட்டுமே..

எழுதிக்கொண்டிருக்கிறதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

ஆ........இந்தனை பெயர்களா :)

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

யதார்த்தம்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 29

காதல் மாயம்

உன்னைக் காதலிக்கவில்லையென்று

உலகத்திற்கு சொன்னேன்..

உண்மை அது இல்லை உயிரே..

உள்ளே உறவேயென்று உருகுகிறேன்..

உரிமையிருந்தும் ஊமையாய் துடிக்கின்றேன்..

உள்ளே எப்படி வந்தாய்..

உயிருக்குயிராய் எப்படியானாய்..

இது என்ன மாயம் பெண்ணே..

சிதறும் முத்துகளோ..

திறந்த சிப்பி

நிரம்பி விழுந்த

முத்தோ உன் விழி

நீர்த்துளிகள்..அழகியே..

சிந்தாமல் சிதறாமல்

கைகளில் ஏந்திக் கொள்வேன்..

வாழ்வின் மேன்மை

தாயின் கருவறையில்

இருந்து..தூங்கும்

கல்லறை வரை..

கூட வரும்..அன்பு

தியாகம்

இந்த இரவுகள்

தூங்குவதற்காக..

மின்மினியாய் எரிகின்றன

நட்சத்திரங்கள்..

நிலவின் காதல்

ஏய் வானமே..

உன்னை இரவில்

வந்து காதலிப்பதற்காக..

பகலவனிடம்

வெளிச்சத்தை இரவல்

வாங்குகிறேன்..அதையறிந்தே..

அவனிடம் சிரித்து பிரகாசமாய்

கொஞ்சி விளையாடும் நீ..

என்னை ஓடவிட்டுத்

தேயவும் விடுகிறாய்?..

பெண்மனம் மாறுமா?

கல்மனதில்

காதல் எறிந்தவளே..

ஏன் இப்போது-என்

காதல் மனதில்

கல் எறிகிறாய்?..

உன் குற்றவுணர்வா இது?..

பலருக்கு முன்

அவமானப்படுத்திவிட்டு..

தனிமையிலே

மன்னிப்பு கேட்கிறாய்..

பிழையில்லாமல்..

சரிந்துபோன என்

நிலையை உன்

மன்னிப்பு என்ன

சரிசெய்யுமா நண்பா?..

காதல்மொழி

மௌனமொழி பேசி

மனதைக் கலைத்தவளே..

என் மரணமொழியாவது..

உன் மௌனத்தைக் கலைக்குமா?

Link to comment
Share on other sites

தூறல் நாள் 30

உனக்காக

பனித்துளிகளை

சேமிக்கிறேன்..

நீராட விரும்பினால்..

பகலவன் பார்க்கமுன்

வந்திடுவாய்..

சிட்டுக்குருவியே..

நீ காதல் பேசிய

மணித்துளிகளை

என் ஆயுளிலிருந்து

வருடங்களாகவே..

எடுத்துக்கொள்..

நீ தந்த சந்தோசத்திற்கு

என் நன்றிக்கடனாய்

இருக்கட்டும்!!!

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

நீ அந்தப்பக்கமும்

நான் இந்தப்பக்கமும்..

பேசவும் தெரியாமல்..

வைக்கவும் விரும்பாமல்..

தொலைபேசிக்கட்டணங்களை

கன்னாபின்னாவென

ஏற்றிக்கொண்டால்..

கண்ணே..அது காதலடி!!

கம்பராமாயணம்..

சொல்லிக்கொண்டிருந்த...

பாட்டியை..டாமும் ஜெர்ரியும்

காட்டி தூங்க வைத்தான்..

ஐந்துவயதேயான சமர்த்துப்பேரன்!!

இருபது வருடங்களைக்

கடக்கமுடிந்த எனக்கு

உனக்காகக் காத்திருக்கும்..

இந்த இருபது நிமிடங்கள்..

பெரும் சுமை பெண்ணே...

நாதியற்று மனிதன்

அடிபட்டுக்கிடந்தான்..

சட்டத்தின் பிரகாரம்..

கைகொடுக்கமுடியாத

மனிதம்..நாய்களுக்கும்..

பூனைகளுக்குமான உரிமையை

சட்டத்தை நூறுவீதம்..

கடைப்பிடிப்பது மனிதநேயம்...

Link to comment
Share on other sites

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

ஐயோ அவள் கேட்கிறாள் என்பதற்காக நீங்கள் தீக்குளிக்க போறியளா விகடகவி? பாவம் பா நீங்கள்

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

ஒவ்வொரு தூறலும் நல்லாகவே இருக்கு. அதிலும் எனக்கு பிடிச்ச தூறல் இதுவே. நல்லாக எழுதுறீங்கள். உங்கள் தூறல் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 31

ஒரு கிண்ணச் சொர்க்கமும்

ஒரு விரல் ஊறுகாயும்..

சின்னத்துயரத்தை மறக்க செய்யும்...

மெல்ல நரகத்திற்கு அழைத்துச்செல்லும்..

வேண்டாப்பொண்டாட்டியைப்போல

தண்டச்சோறென..எப்போது

கண்டாலும் வைவார் தந்தை

மகனை காணாமல் அழுவதும் விந்தை

ஆறுநாள் உபவாசம்..

ஏழாம்நாள் பாரணை..

எட்டாம்நாள் ஆட்டிறைச்சி..

அவா அடக்கமுடியா.. ஆசைமனிதனின்..

வெளிவேசம்..மகா அபத்தம்..

பேயென்று தலைவிரித்தாடி..

கோழியைப் பலிகொண்டு..

மகாபலம் காட்டி

மண்ணோடு வீழ்ந்து..

வெளிப்போகுமாம் பேய்..

மனவியாதிகளுடன் நாம்

மருத்துவமறியா மூடராய்..

கனவுப்பூங்காக்களில்

கூட கண்ணயர

விடாத வெளிநாடு

வெளியே உல்லாசம்..

போலி சந்தோசம்

எல்லாம் வேசம்..

Link to comment
Share on other sites

தூறல் நாள் 32

புன்னகைக் காட்டுக்குள்

பூத்த சிவப்பு சூரியன்

தலைவன் வீரம்

ஆயிரம் நெறிகளும்

அற்புத வழிகளும்..

தலைவன் பலம்..

ஆயுள்நேரத்து உழைப்பும்..

ஈழத்து நினைப்பும்

தலைவன் தியாகம்

நெஞ்சுடைத் திடமும்

நேர்மையின் இடமும்

தலைவன் இதயம்

மக்களின் கைகளும்

மாவீரரின் ஆசியும்

தலைவன் பக்கம்

மூடரின் நெறியும்

மூத்தவர் அறிவும்

தலைவன் ஞானம்

போராளிகள் வரையும்

போர்முனைக் காவியம்

தலைவன் மதி விம்பம்

தமிழராய் இணைவோம்

ஈழத் தமிழராய் நிமிர்வோம்

தமிழ்ஈழத்தலைமகன் வெற்றிக்கு

விரைந்து வழிகள் சமைப்போம்..

Link to comment
Share on other sites

நன்றி வெண்ணிலா....

தூறல் நாள் 33

பசியோடு விழித்தாலும்..

பசியோடு தூங்காத

மனிதர்கள் மத்தியிலே

பசியோடே தூங்கிப்போகும்..

பாலகர்கள் மேல்கூட..இறைவா

உனக்கென்ன கொடுங்கோபம்?

சுதந்திரத்திற்காக

உயிர் கொடுத்துப்

போராடிய நாடுகளே..

தமிழன் சுதந்திரத்தை எதிர்த்து

போராடுகிறது!!!

நாய்க்கு அடிபட்டால்

"அச்சச்சோ" என்கிறாய்..

ஒரு நாள் சாப்பிடாத உன்

பிள்ளைக்காய்..நொந்துபோகிறாய்

..

தொடர் நாடகங்கள் பார்த்து

அழுதுவடிக்கிறாய்..

ஈழமண்ணில் தினமும்..நிஜமாய்

குண்டடிபட்டும்...வெறிக்குரங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தூறல்களும் வித்தியாசமாக நல்லா இருக்கு விகட கவி.

அதிலும் இந்த தூறல்கள் சூப்பரா இருக்கு.

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Link to comment
Share on other sites

விகடகவி மாமாவின் தூறள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் :o வாழ்த்துக்கள் மாமா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

மாம்ஸ் இது என்னோட பஞ் இல்லை நம்ம கறுப்பி அக்காவின்ட பஞ் அல்லோ :wub: ....எப்படி இருக்கு கறுப்பி அக்காவின்ட பஞ் சும்மா அதிருதிலலல.... <_<

"குரங்கின் கையில் கிடைப்பதால் மாலை நாராகிவிடுகிறது அதையே இதயதிற்கு பிடித்தவனிடம் கொடுத்தாள் நாராகுது மாமா" :lol:

"யார் அந்த நம்மாள் மாமா சொல்லவே இல்லை <_< சொன்னா நான் புரியவைத்து விடுறேன் இருவருடைய மொழியையும் அவருக்கு" :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 34

உறவுகளைச்சேர்த்துக்

கொள்ள உள்ளம் ஏங்கும்..சில

உறவுகள் சேர்ந்து கொண்டு

உயிரை வாங்கும்..

செல்வத்தால் சேர்ந்த உறவு

ஏழ்மையால் விலகும்

காதலின்

காதலி

காதலில்

காதலே..

காதலையும்

காதலித்து

காதலா..

காதலைக்

காதலி!!!

துறுதுறுக்கும் காதலி

விழிகள்..

அலைபாயும் காதலன்

விழிகள் கலந்து

இதயத்தில் இன்ப

ஈட்டி நுழையும்.

கண்முழித்தபிறகும்

கலையாத கனவாய்..

கண்மூடிய பிறகும் அழியாத

நினைவாய்..என்னுள் நீ!!

என் அழகானவளே..

உன் கோப அழகையும்..

கொவ்வைச் செவ்வாயழகையும்..

என்னுள் புதைத்துவைத்திருக்கிறேன்..

அசைபோடும் வேளைகள் மீட்டி..

நினைவுகளுக்கு உயிரூட்டி

ஆனந்தப்பட்டுக்கொண்டே..நான்!!

எண்ணுவாளா எனத்

தவமாய்த் தவங்கிடந்து

ஏற்றவள் எண்ணும்போது

சற்றும் கணக்கெடான் ஆண்..

அலையட்டும் எனத் தவிக்கவிட்டு

ஆமென்று தாலிக்குத்

தலை நீட்டி...அங்கே..

கணப்பொழுதும் தவமாய்த்

தவங்கிடப்பாள் பெண்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 35

மேன்மக்களென்போர்

உள்ளத்தாலும்...

செயலாலும் உயர்ந்தவர்கள்

என்பதை

பலத்தாலும்

பதவியாலும் என

மாற்றியவர்கள்..

வாழ்வால் சபிக்கப்படுகின்றனர்..

வந்தாரை வாழவைப்பான்

தமிழன்...அந்த தமிழன்

நாதியற்று..நாடுநாடாய்..

தஞ்சம் கேட்டு..உயிர்மெய்

வாடிக்கிடக்கிறான்..

நாடிழந்து!!

சொல்லாதே..

சொல்லக்கூடாதெனச்

சொன்னால்

சொல்ல மறக்காத பிள்ளை

சொல் இதை யென்றாலும்

சொல்லும்..விடுங்களேன்

சொல்லிவிட்டுப்போகட்டும்!

என் ஆண்மையை

அழவைத்தது..உன்

அன்பு..அதனால் நீ

என் எதிரியா..தோழியா?..

சோகம் வரும்போதெல்லாம்

தனிமையை விரும்பும் மனம்..

சந்தோச வேளைகளில்

பகிர்ந்துகொள்ள உறவைத் தேடும்

இயல்பாகவே..உத்தமமானமனிதம்!!

பாடத்தூண்டுகின்ற

புன்னகை விடாமல்

இருக்கியழுத்துகின்ற இதழ்கள்..

முரண்பாட்டு அழகி நீ!!!

மெல்லிய இடையும்..

மெல்லென நடையும்..

சின்னதாய் குடையும்..

சீரிய உடையும்..

பின்னிய சடையும்..

பெண்ணே.. என்னே அழகடி நீ!!

பெருந்துன்பமடி அது எனக்கு !!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 36

மின்னும்.. கன்னங்களுக்கும்

வண்ணமிட்டு..அவள்

வளர்த்தாள் அழகை

கள்ள எண்ணங்களுக்கு

வண்ணமிட்டு அவன்

வடித்தான் கவிதை

கவிதை அழகைக்

காதலித்தது.. பாவம்..

அழகோ கவிதையைக்

காதலிக்கவில்லை!!!

உன்னால் என்னை

மறக்கமுடியாது..ஆனால்

என்னால் உன்னை

மறக்கமுடியுமென்று சொன்னாய்..

நானும் மெய்தானோ என நினைத்தேன்..

ஆனால் பைத்தியக்காரா

உன் மகளுக்கு என் பெயரை

ஏன் வைத்தாய்?

வண்ணத்துப்பூச்சிகளின் வசீகரம்..

வானவில்லின் வளைவுகள்..

கார்மேக நிறத்துக்கூந்தல்..

கொடியினளில் இடை..

மல்லிகையின் வாசம்..

முல்லைமொட்டுச்சிரிப்பு...

கிளிமூக்கு...சங்கெனக்கழுத்து..

எல்லாம் எதிர்பார்த்தால்..

கவிஞனே..உன் மணப்பெண்..

ஓவியத்தில்தான் அப்பனே..

இரவுக்கு வெள்ளையடித்தான்

ஆதவன்..அவன்

நிழலுக்கு..இருள் கொடுத்தாள்

இராமகள்!!

உன் நட்பு..

என் சோம்பல் துலக்கியது..

என் உழைப்பை ஊக்குவித்தது..

என் சாதனையை சாத்தியமாக்கியது..

என் வெற்றிப்பொழுது புலர்ந்தபோது...

நட்பு வாழ்ந்துகொண்டிருக்கிறது...

நணபனே.. நீதான் அருகிலில்லை..

குழந்தை மனது..

ஈரமான வெள்ளைச்சேலை

எதையெறிந்தாலும் ஒட்டிக்கொள்ளும்..

பூ விதைத்தால் பூ முளைக்கும்..

முள் உதிர்த்தால் முள் செழிக்கும்...

அன்பும் பண்பும் வளமாகும்..

முத்தமும் அணைப்பும் உரமாகும்..

தட்டிக்கொடுத்தால் சிறப்பாகும்..

சொல்லிக்கொடுத்தால் சுகமாகும்..

நல்ல செயல்களைப் பதிவு செய்து..

நலம் வாழத் துணை செய்வோம்..

Link to comment
Share on other sites

kifr_kili_22208_4.jpg

:lol::D:D

விழியில் கனவுகள்

விரியும் முன்னே..

விழிகள் மூடினா யஞ்சுகமே..

கொடூரமென் பதிதுதானோ...

கொஞ்சிய குழந்தைகை

கொய்தது முறைதானோ..

பிஞ்சே மணியே.. ஆருயிரே.

பெருந்துயரை விதைத்துனை

போக்கடித்தனரோ..

நீ மண்ணில் சிந்திய இரத்தங்கள்

நெஞ்சுக்குள் வெறிதரும் பூவே

நாளை பூத்திடில் ஈழத்தில் பூத்திடுவாயே..

அழிந்திடப்பிறந்தவன் தமிழனா..

அலைந்திடப்பிறந்தவன் தமிழனா

அழுதிடப்பிறந்தவன் தமிழனா..-இல்லை

ஆழப்பிறந்தவன் தமிழன்..நாளை

ஆழ்வான் ஈழத்தமிழன்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 37

உன் விழி நீரை..

சிந்தும் காதலியே.. என்னை

வலி செய்யும் வழி அறிந்தது

எப்படியோ?...

அவள் விதைத்த காதலை

முளையிலே கொய்தாள்..

அவளை துயரை அவளே

அறுவடை செய்தாள்..

ஆணை அலையவிட்டு

துன்பம் காணவெண்ணி

துயரக்கடல் குளித்தாள்..

ஆணை அசண்டை செய்து

பெருமிதம் கொண்டே

வாழ்வை இழந்து நின்றாள்..

இறங்கிப் போவதில்

அன்புக்கு இழுக்கா?..

இகழ்வாரெண்ணி

இணையாமை யழகா?...

வாழ்க்கைஎன்பது வாசப்பூங்கா

வழுக்கிவிழுந்தால்

சேற்றில் ரோஜா..

அழகே ஆனாலும்

அழுக்குப்பட்டால்..

தலையிலா சூடுவார்..

குப்பையில் போடுவார்!

அமைதியான இதழ்கள்..

அலைபாயும் கண்கள்..

என்னை ஏழையாக்கிய

அழகு..அவள் பெண்மை...

என்னை கோழையாக்கிய

அழகு அவள் புன்னகை..

இரண்டு வரியில் சொன்னால்..

என் காதல் திருக்குறள்...

நான்கு வரியில் சொன்னால்..

நாலடியார்....நீயே..வந்து

ஒரே வார்த்தையில் சொன்னால்

அன்பே அது "வரம்"

மேகங்கள் ஓடாத போது

நிலவு அதைத் திரத்துவதில்லை

நீ என்னை விலகாதபோது

நான் உன்னைத் தேடுவதும் இல்லை

அருகில் அருமை தெரிவது இல்லை

அன்பு மனங்கள் புரிவதுமில்லை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.