Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் 75

பிறவிப்பயன்

உன்னைக் கண்டது

என்று நினைத்தேன்....

உன் இதயமறிந்ததும்

புரிந்து கொண்டேன்...அது

முற்பிறவி தீவிiளென்று!

அன்பே

உன் வாய்வரை

வந்த காதலை..

வார்த்தையாக்கி என்

காதுகளில் துப்பாமல்

தப்பித்துக்கொண்டிருக்கிறாய

Link to comment
Share on other sites

தூறல் நாள் 76

இரவில் விழித்து

பகலில் தூங்குவதால்தான்

நிலவு சூரியனிடம்

கடனாளியாகியதோ

ஒளி வாங்கி...

காரணம் சொல்லத்தெரியாத

கண்களே...நீ

ஏன் கோபத்தைக் கக்குகிறாய்..

அங்கே..கவிதையை நாடும் நான்

நல்ல காதலை மட்டும் தேடுகிறேன்..

காயம் செய்யும் கூரிய ஈட்டிகளையல்ல

பேச இதழ் இருந்தாலும்

விழிகளை மட்டும் உபயோகிக்கும்

பேரழகுப் பெண்களே..

உங்கள் கண்களின் பரிபாஷை

பல இளைஞர்களை..

குழப்பத்துள் நுழைத்து

பித்தர்களாவும்..

சித்தர்களாகவுமாக்கிவிடுகிற

Link to comment
Share on other sites

தூறல் நாள் 77

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

மோது..மோது எரிமலையோடு...

முட்டிப்பாரெதிரில் எதுவும் இருக்காது..

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

காலைக்கட்டி குதிரையை

வைத்தால் கனவுகள் என்னாகும்..

குண்டுச்சட்டிக்குள் ஓடென்று

சொன்னால் பாவம் அது பாவம்..

ஆகாயம் விரிந்திருக்கிறதே

அது மேல பறந்திட வா

அதிகாலை விடிந்திருக்கிறதே

கடல்நீரில் குளிப்போம் வா

இளமைக்காய் வேண்டாம் வாய்க்காலே

காட்டாறைத் தடுத்திட முடியாதே

இளமைக்காய் வேண்டாம் வாய்க்காலே

காட்டாறைத் தடுத்திட முடியாதே

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

பூக்களை இலைகளில் மூடிவைத்தால்

வண்டுகள் பசி கொள்ளும்..

பசித்திடும்போது பனித்துளி தா

தேன்துளிக்கது ஏங்கும்.

வாழ்வில் தேன்மழை பொழிகிறது

சந்தோசத்தில் நனைந்திடலாம்..

வன்முறையென்பது வலிமையல்ல

அன்பால் ஆண்டிடலாம்..

மலையைப் போர்த்திட முடியாது

மனதுக்கு சிறையா அட அது ஏது?..

மலையைப் போர்த்திட முடியாது

மனதுக்கு சிறையா அட அது ஏது?..

வா வா வா வந்து விளையாடு

வானவிலேறி பந்து விளையாடு

பழமையோடென்ன தகராறு..

இளமை இருக்கிறதே நம்மோடு...

இளமை இருக்கிறதே நம்மோடு...

Link to comment
Share on other sites

தூறல் நாள் 78

இந்த அன்புக்கு

அர்த்தம் தெரியவில்லை..

தோழமையால் தோன்றியதா..

மோதலினால் முளைவிட்டதா

காதலினால் கருவுற்றதா

இரத்தவுறவால் தொற்றிக்கொண்டதா..

உன்முத்த இரவால் பற்றிக்கொண்டதா

உன் அழகால் அலைபாய்கிறதா...

உன் சிரிப்பால் சிந்தை சேர்ந்ததா..

உன் அருகாமையால் அணைஉடைந்ததா..

உன் தொடுகையால் தோற்றம் பெற்றதா..

உன் நினைவால் பரவிக்கொண்டதா..

உன் நிழலாய் ஒட்டிக்கொண்டதா...

பிறர் கேட்டே உருவானதா..

சிலர் தடுத்தே பெரிதானதா...

ஆனால் பெண்ணே...

எங்கோ தவறு இருக்கிறதென்று

மனது சொல்ல நினைக்கிறது..

ஆனாலும்

மறக்கமுடியாமல் மனம் தவிக்கிறது..

உன்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டேன்

நினைப்பதை தவிர்க்கமுடியவில்லை

உன்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டேன்

உன் பெயரை உதடுகள் உச்சரிப்பதனை நிறுத்தமுடியவில்லை

நான் நிம்மதியில்லாமல் இருக்கிறேன்

உன் நினைவை அழித்து நிம்மதி தர

மாத்திரை வேண்டும்..அமைதியான நித்திரை வேண்டும்

யாரிடம் வாங்கலாம்?..எங்கே வாங்கலாம்..?

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு!..

பெண் பார்க்க வந்தபோது

என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்

அழகாய் இருக்கிறேனோ

என்று பெருமையாய் இருந்தது..

முதலிரவில்தான் சொன்னாய்..

குறை ஏதாவது தென்படுகிறதா என்று

தேடிக்கொண்டிருந்ததாய்..

பெண்கள்.. விசயகாரர்கள்..

நேரச்சுழலுக்குள்

நான்

சிக்கித்தவித்தாலும்..

என் தாய்ப்பற்றும்

தமிழ்ப்பற்றும்

தூரம் போகாது

பிறந்தது தாயால் என்றால்

வளர்ந்தது தமிழால்..

மூச்சாலும் பேச்சாலும்..

செயலாலும் சிந்தையாலும்..

என்னை மாற்றிக்கொள்ளமாட்டேன்

அழகான பெண்ணுக்கு அலங்காரம் தேவையில்லை

அறிவுள்ள ஆணுக்கு அடியாள் தேவையில்லை

மின்சார அடுப்புக்கு தீப்பெட்டி தேவையில்லை

சம்சார வழக்கிற்கு மத்தியஸ்தம் தேவையில்லை

காதலர் கண் பேசும்போது மொழிகள் தேவையில்லை

காளையராய் ஆனபின்பு அச்சங்கள் தேவையில்லை

குழந்தை குளிக்க குற்றாளம் தேவையில்லை

கூதல் குறைய கொடைக்கானல் தேவையில்லை

சூரிய வெளிச்சத்தில் விளக்கொளி தேவையில்லை

சுட்டெரிக்கும் வெயில் குறைக்க கம்பளி தேவையில்லை

ஆற்றில் குளிக்க வெந்நீர் தேவையில்லை

ஆடல் களிக்க ஆடத்தேவையில்லை

காலம் கடந்தபின் கவலையுறத்தேவையில்லை

யாவும் இழந்தபின் அழுதிருக்கத்தேவையில்லை

விதை போடாமல்

முளைவிடும்...

நீரூற்றாமல்

கிளைவிடும்...

விண் பார்க்காமல்

விருட்சமாகும்

வேரின்றியே வளர்ந்துவிடும்..

காதல் புயல் இன்றியே

முறிந்தும் விடும்...

பெண்ணின் சிறப்புக்கு

சான்று சீதனம் வழங்காமை..

ஆணின் சிறப்புக்கு

சான்று சீதனம் கேளாமை

பெற்றோரின் சிறப்புக்கு

சான்று அத்தகைய பிள்ளைகளை

வளர்த்தமை...

Link to comment
Share on other sites

கறுப்புநாள்

ஈழத்தமிழனை

கலங்கடித்த நாள்...

வன்முறையின் உச்சத்தை

வெறிநாய்கள் அப்பாவித்தமிழன் மேல்

கட்டவிழ்த்துவிட்ட நாள்...

சுடுதாரில் தமிழன் உயிருடன்

உருட்டப்பட்ட நாள்...

டயர் போட்டு தமிழினினப்

பச்சைக்குழந்தை கூட எரியூட்டப்பட்ட நாள்...

மனிதநேயம் சிங்களவரில் மனிதரை தேடத்தொடங்கிய நாள்...

ஓடி ஒளித்த தமிழனையும்...

தேடி வெட்டிக்கொன்ற திகிலான நாள்...

விடுதலையின் தேவையை

இளைஞரின் நெஞ்சில் விதைத்த அந்த நாள்..

ஆண்டுகள் போனாலென்ன..

ஆட்சிகள் மாறியென்ன

வடுக்களைக்கூட காயவிடாமல் தொடரும்..

கொடுங்கோலாட்சியில்

தமிழன் குமுறத்தொடங்கிய நாள்...

இந்தக் கறுப்பு நாள்..

அழுவதற்கல்ல...

குமுறுவதற்கு

இந்தக் கறுப்பு நாள்..

தேம்புவதற்கல்ல

வீம்பு கொள்வதற்கு

இந்தக் கறுப்பு நாள்..

முடங்'கித்தூங்குவதற்கல்ல

எதிர்த்தவன் தலை வாங்குவதற்கு...

எம்மண்ணை தொட்டவனையும்...

எம் பெண்ணைத் தொட்டவனையும்..

தலைவன் பார்த்துக்கொள்வான்..

நாம் அவரோடு கை சேர்த்துக்கொள்வோம்..

இந்தக் கறுப்பு நாள்..

கவலைகளின் நாட்குறிப்பல்ல

விடியலின் தேவைக்கான அலாரம்..

புரிவோம்..முயல்வோம்..செயலாற்ற

Link to comment
Share on other sites

நன்றி வெண்ணிலா...

ஒளிப்பது = மறைவது

ஒழிப்பது = இல்லாது அழிப்பது

http://www.google.co.uk/search?source=ig&a...earch&meta=

Link to comment
Share on other sites

பெண்ணின் சிறப்புக்கு

சான்று சீதனம் வழங்காமை..

ஆணின் சிறப்புக்கு

சான்று சீதனம் கேளாமை

பெற்றோரின் சிறப்புக்கு

சான்று அத்தகைய பிள்ளைகளை

வளர்த்தமை...

விகடகவி...உங்க தினசரி தூறலின் தினசரி வாசகி நான்.

யாழ் கொஞ்ச காலம் வரவில்லை என்றாலும். வாசகியாக கன காலமாக இருக்கிறேன்.

ரொம்ப அழகான கவிதைகள்.

அதுவும் எல்லா விடயங்களும் கவிதையாக தூறுறீங்க.

சில கவிதைகளை 2 தடவை வாசித்து தான் புரிந்து கொள்வேன்.

நிஜம்மாவே அருமை. சொல்ல வார்த்தைகள் இல்ல.

தொடருங்கள்.................. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூறல் நாள் 78

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு!..

நான்கு வரிகளுக்குள் அடக்கப்பட்ட அழகான காதல் யாசகம்.

நன்றாக இருக்கிறது விகடகவி. உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுமா?

Link to comment
Share on other sites

விரலிடுக்கில் மாட்டிக்கொண்ட

பேனாவுக்கு விடுதலை வேண்டும்..

கைகளுக்குள் கசங்கும்

காகிதத்துக்கு மறுவாழ்வு வேண்டும்

இவனிடம் கவிதை என்ற பெயரில்

மூச்சுத்திணறும் தாய்தமிழ்

காப்பாற்றப்படவேண்டும்..

பெண்ணே தயவு செய்து

இதற்காகவாவது இவனைக்

காதலித்துவிடு

உண்மையில்

என் பேனாவுக்கு விடுதலை

வாங்கிக் கொடுத்தால்

காகிதங்களுக்கு

புது வாழ்வு கிடைக்க

உதவி செய்தால்

நிஐமாகவே

என்னால் மூச்சுத்திணறிய தமிழை

காப்பாற்றினால்

எப்படித் தெரியுமா...

என்கவியவள் என்னைக்

காதல் செய்து கரம்பிடித்து

என் துணைவியானதால்

விகட கவி உங்கள் தினசரி தூறலின்

வாசகனில் நானுமொருவன்

உங்கள் கவியத்தனையும் மிகயழகு

தொடருங்கள் உங்களிடமிருந்து

இன்னும் கவிதைகளை எதிர்பார்கிறேன்

Link to comment
Share on other sites

நன்றி யாழ்அகத்தியன்...

உங்கள் கருத்துக்கும் கவிக்கும்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.. :icon_idea:

Link to comment
Share on other sites

தூறல் நாள் 79

காதல் சுயநலமில்லாதது

என்பதனை உன்னை

உன் புதுவாழ்விற்கு வழியனுப்பி

வைத்துவிட்டபிறகும்...

என்னிதயம்

உணர்த்திக்கொண்டிருக்கிறது..

நாடு விட்டு

நாடு நகரந்த அகதி

நான்...

என் முற்றத்து மல்லிகை

வாசத்தை மறந்து

பதினான்கு ஆண்டுகளாகிறது...

மீண்டும் அந்த

சுவாசத்தை சுகமானதாக்கும்..

நறுவாசத்தை நுகர

பாழாய்ப்போன மனது

ஏங்கிக்கொண்டிருக்கிறது!!

நான் உன்னை

முதன்முதலாய் பாரத்தபோது

இல்லாத ஆனந்தம்...

உன்மீது எனக்குண்டான

காதல் தராத ஆனந்தம்...

என் காதலை நீ

ஏற்றுக்கொண்ட கணம்

வராத ஆனந்தம்..

முதல்முத்தம்...

எங்கள் திருமணநாள்...

முதல்இரவு..

எதுவுமே தராத ஒரு

பேரானந்தம்...

எங்கள் குழந்தையை

நான் முதன்முதலாய்

கையேந்தியபோது

உள்ளம் உணர்த்தியது!!

பெண்களுக்கு இதயம்

இருக்கிறதென்பதனை

நிரூபிக்க கேட்டால்...

அன்னை தெரசா புகைப்படத்தை

தேடுகிறார்கள் பெண்கள்!!

எழுகின்ற கதிரவனின்

கதிர்க்கைகளை முடக்கமுடியாமல்

முகிலை முறைக்கின்ற

கடலைப்போல்

பெண்மையின் தன்மையைப்

பேணமுடியாத பெண்பிள்ளைகளை

முறைக்கும் பெற்றோர்...

பொங்கி அடங்குவார்..

கடலின் பேரலைகள் போல்!!

அம்மா என்ற சொல்

மொழிக்குள் அடங்கிப்போனாலும்...

அதன் அரத்தம் உலகத்தை

அடக்கிவைத்திருத்தல்..

ஆச்சர்யமில்லாத

அழகான அற்புதம்!!

கண்ணாடி பாத்திரத்தில்

ஊற்றப்பட்ட

வண்ணத்திரவம் போல

உன் பளிங்கு முகத்தில் தெறிக்கும்

சின்னச் சின்ன உணர்வுகள் போதும்

என் மூன்று வேளை உணவாக

என் செல்லக்குழந்தையே..

வாய்மை ஊமையாய்

இருப்பது கூட

ஒரு வகைப் பொய்யுரைப்புதானே...

அப்படியென்றால்..

அடிப் பெண்ணே..

என் மீதான காதலை

சொல்லாமல் வைத்திருந்து

நீயும் பொய்காரியாகப் போகின்றாயா...

Link to comment
Share on other sites

தூறல் நாள் 80

ஆயிரமாயிரம்

வன்முறைகளுக்கிடையில் சுட

வேதனையாக அமைதிப்புன்னகை

செய்துவிட்டுப்போகின்ற

வெள்ளைப் புறா அவள்..

உலகம் முன்னேறிவிட்டதாம்..

மூடநம்பிக்கைகள் மூட்டைக்குள்ளாம்..

முற்போக்குசிந்தனை பெருகிவிட்டதாம்...

இளம்விதவைப்பெண்ணை

மட்டும் வாழவிடாத

இந்த வரட்டு வனாந்தரத்தில்

ஏன் உள்ளுக்குள் அழுதுகொண்டு

வெளியில் சிரித்துகொண்டு

நாடக வாழ்வு உனக்குப் பெண்ணே...

உன் விடுதலைக்கான சாவி..

உன்னிடம்தான் இருக்கிறது...

உணர்வுகள் புரியாத உறவுகள்..

வேண்டாமடி வேண்டாம்..

வாழ்ந்து பார்க்கலாம்...புறப்படு

அன்பு உலகமொழி

கண்கள் அதற்கு வழி

ஈரம் நிரம்பி

இதயம் ததும்பி

இனிமை பொங்க

மனிதனை மனிதன் நேசித்து

ஒற்றுமையாய் வாழும்

ஒரு நாள் வருமோ?...

எழுதி எழுதி

தள்ளிக்கொண்டிருக்கும்

என் பேனா கூடத் தளரவில்லை

என்றுமே உனக்கு

என்பால் இருக்கும்

அன்பால்..

உன்

அரணைப்பால்..

நீ

ஆற்றித் தரும் பாலால்...

புத்துணர்வும் சத்துணவும் பெறும்

என் இதயமா அன்பே களைத்துவிடும்..

உன் பெயரெழுதி?

பிறப்பு முன்னுரை...

இறப்பு முடிவுரை..

பெரிய நாவல் ஒன்றின்

முதல் பதிப்பாய்...

மானுடவாழ்க்கை!..

கோடிமுறை சந்தித்துக்கொண்டு

இருந்த நம்மிரு

ஜோடிக்கண்கள்..

அப்படி என்னதான்

பேசிக்கொண்டிருந்தனவோ...

தெரியவில்லை..ஆனால்..

நீ போகும்போது

போட்டுவிட்டுப்போன

புன்னகை முத்துக்களை மட்டும்..

எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டது..

நினைவுப்பேழையில்.

இசையோடு சங்கமித்த

மனித வாழ்வில்

ஸ்வரத்தை பறிப்பதுபோல்

ஏன் தனிமனித சுதந்திரத்தைப

பறிக்கிறீர்கள்..பேராசைக்காரர

்களே..

ஏறுபோல் நட

எண்ணுவதைப் பேசு

உனக்கு உண்மையாயிரு

அன்பில் வாழ்ந்துவிடு..

ஏழ்மைக்கு இரங்கு

எளியோர்க்கு உதவு..

குழந்தையிடம் குழந்தையாயிரு..

தீயவர்க்கு தீயிடு

தூய்மையுடன் வாழ்..

உனக்கே உன்னைப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 81

மண் போல் தாங்கிக்கொண்டு...

தாய் போல் தந்துகொண்டு..

மரம் போல் வளர்ந்த பின்னே..

வளர்த்த காதலியே.. வேரோடு

புடுங்கி எறியும் கொடுமை காதலில்

தொன்றுதொட்ட வழமை..

விட்டில் பூச்சிகளின்

வீண்மரணத்துக்கு..காரணம் மட்டும்

இருந்திருந்தால்.. அவை கூட

வீரமரணமாகி இருக்கும்..

உன் பார்வைக்கும்

பேச்சுக்கும்.. உள்ள

வேறுபாடு..

உன் அம்மா பேசுவதற்கும்..

உன் அப்பா பேசுவதற்கும்

உள்ள வேறுபாடு..

உன் பார்வை போல்

உன் அம்மா பேசிக்கொண்டே இருப்பார்..

உன் பார்வைபோல்

உன் அப்பா மெனளமாகவே இருப்பார்..உன் பேச்சுபோல்

உன் அப்பாவிற்கு தைரியம் வருமா என காத்திருக்கிறேன்..

கணணிக்கருகே காலையில் குந்தி

மின்வலையில் மான் பிடித்து

யாரின் அழைப்புக்கும்

காது கொடுக்காமல்..

பெற்றவரின் திட்டையெல்லாம்

பொட்டலங்களாக்கி...அருகே..

போட்டுவிட்டு

அலட்சியமாய்.. இருந்தால்

இலட்சியத்தை இழந்தால்..

உனக்கு உணவும் பானமும்

ஊட்டி விடுமோ உன்

கணணிக்காதலி..

பசிப்பது போல் தோன்றியும்..

உண்ணமுடியவில்லை...

நடுநிசி தாண்டியும்

தூக்கம் வரவில்லை

சுற்றிநிற்போர் திட்டுகள்

காதில் விழவில்லை

இது காதல் கோளாறல்ல

இது பரீட்சைமதிப்பெண் குறைபாடு

இந்த வாழ்க்கையின்

நூலில்

வனாந்தர வாசங்களும் உண்டு

சிலர் அதில் கூட

வாழ்ந்தி காட்டி அசத்திவிடுவார்...

சிலர் அதில்

நொந்து காட்டி பயமுறுத்திவிடுவார்..

எதிரே தெரியும்..சுமை

மலையென்று நினைத்தால்

சுமக்க கஸ்ரப்படுவாய்..

மலரென்று நினைத்தால்

சுமக்க இஸ்ரப்படுவாய்..

நேரிய எண்ணங்களால்..

எதிர்நீச்சல் போட்டு

நிஜத்தை வென்றுவிடு நண்பா

உன் கனவுக்குள்..

உன் நினைவுக்குள்

வராததால் நான்

துரதிரஸ்டசாலி என

ஏங்கிக்கொண்டிருந்தேன்..சில

பெண்கள் பார்வையற்றவர்கள் என்பதனை

புரிந்துகொள்ளும்வரை

Link to comment
Share on other sites

தூறல் நாள் 82

தமிழன் என்பவன்

அடிமைத்தனத்தின்

அகராதியின்..

பக்கங்களில்

தெரியப்போபவனல்ல..

விடுதலையின் விளக்கத்தை

விளாவரியாக சொல்லப்போபவன்

களத்தில் தீக்

குளித்துக்கொண்டிருக்கும்..

புலிச் சகோதரியே...

தாலி தூங்க வேண்டிய

கழுத்தில் நஞ்சைத்

தொங்கவிட்டிருக்கிறாளே என்றழுத

உன் தாய் கூட உன்னை நினைத்து

மார் தட்டிக் கொள்கிறார்கள்

தமிழச்சியின் பிறப்பின்

அர்த்தத்தை எடுத்துரைத்தவளே...

விடுதலை ஓர்மத்தை

ஓங்கி விழித்தவளே...

கலிகாலன் அண்ணாவின்

அசைவுகளையெல்லாம் அங்கீகரித்வளே..

உன் சிரமங்கள..;

உன் வலிகள்..

உன் குருதித்துளிகள்..

எங்களைத் துடிக்க வைக்கிறது...

ஆனால் உன் இலட்சியம்

உன் உறுதிப்பாடு..

உன் நேர்மை..

உன் அர்ப்பணிப்புகள்..

உன் உழைப்பு..

எங்களை தலை

நிமிரவைக்கிறது தாயே...

உனக்கு தலை வணங்குகிறோம்

மும்முனை வழியில்

அடி மேல் அடி

அடித்து எதிரி வருவான்

முன்னெதிர் எழுந்து

அவன் மூச்சை நிறுத்தி

புலி வீரன் நிமிர்வான்

எமது மண்ணில் காலை

வைத்தாய் அதிலும் எகத்தாளம்...

எம் தாய்மண் மீதிலே

தான்நின்று குதிக்கிறாய்..அகந்தையின் வெறிக்கோலம்....

நிம்மதி பறித்தாய்..

நித்திரை பறித்தாய்..

நிலத்தைப் பறித்தாய்..

உணவைப் பறித்தாய்..

உறவைப் பறித்தாய்..

உயிரைப் பறித்தாய்..

கனவினைப் பறித்தாய்..

கல்வியைப் பறித்தாய்..

காலத்தைப் பறித்தாய்..

இழந்ததெல்லாம் எண்ணியழும்

எம் கண்ணீரில்

கரையப்போகிறாய் நீ

எம் கோபத்தில் சாம்பலாவாய் நீ

எம் வீரத்தில் வீழந்து போவாய் நீ

குட்டிக்குட்டி

குனிய வைக்கப்பட்ட

தமிழ்க்குடிகளில்..

நெஞ்சுநிமிர்த்தி..களம் குதித்த

கரிகாலன்..தடியெடுத்த

தண்டல்காரனல்ல

சகல தகுதிகளுமுள்ள

தமிழினத்தலைவன்..

கண்ணியம் இவன் கண்கள்..

நேர்மை இவன் நெஞ்சம்..

வீரம் இவன் உரம்..

மதிநுட்பம் இவன் திட்டம்

தமிழீழம் இவன் இலட்சியம்

மொத்தத்தில் தமிழனுக்காய்

தோன்றிய யுகபுருஷன் இவன்

Link to comment
Share on other sites

களத்தில் தீக்

குளித்துக்கொண்டிருக்கும்..

புலிச் சகோதரியே...

தாலி தூங்க வேண்டிய

கழுத்தில் நஞ்சைத்

தொங்கவிட்டிருக்கிறாளே என்றழுத

உன் தாய் கூட உன்னை நினைத்து

மார் தட்டிக் கொள்கிறார்கள்

தமிழச்சியின் பிறப்பின்

அர்த்தத்தை எடுத்துரைத்தவளே...

விடுதலை ஓர்மத்தை

ஓங்கி விழித்தவளே...

கலிகாலன் அண்ணாவின்

அசைவுகளையெல்லாம் அங்கீகரித்வளே..

உன் சிரமங்கள..;

உன் வலிகள்..

உன் குருதித்துளிகள்..

எங்களைத் துடிக்க வைக்கிறது...

ஆனால் உன் இலட்சியம்

உன் உறுதிப்பாடு..

உன் நேர்மை..

உன் அர்ப்பணிப்புகள்..

உன் உழைப்பு..

எங்களை தலை

நிமிரவைக்கிறது தாயே...

உனக்கு தலை வணங்குகிறோம்

அற்புதம்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 83

எனக்கான வரலாற்றுக்கடமைகளை

நான் மறப்பதில்லை..

காலை..மதியம்..மாலை என்று

மூன்று வேளைகளிலும்

மூக்குமுட்டச் செய்துகொண்டிருந்தாலும்..

என் தந்தை மட்டுமே

என்னை பொறுப்பில்லாதவன் என்று

எளிமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்..

இட்லி..தோசை..இடியப்பம்..பிட்டு

என்று பலவகை சாப்பாட்டு

அட்டவணைகளை பராமரிக்கும்

என்னை அவர்

தண்டச்சோறு என்று

பெருமையாக அழைபபதை

பெரும் கௌரவமாகவே

எடுத்துக்கொள்கிறேன்..

சிலவேளைகளில்..

சுரணையற்ற எருமை என்று

என்னையழைத்து எனக்காக

தன்னிலையை தாழ்த்தி..

தன்னைக்கூட கால்நடையாக்கிக்கொள்ளும்..

என் தியாக தந்தைக்கு

அந்த அரும்பெரும் மனிதருக்கு

இவ்வரிகள் சந்தோசம் தரட்டும்!

விடுமுறையில்

வந்து போகும்

குட்டி மழைத்துளிகளால்

பூங்காவனமாகத் துடிக்கும்

ஏழைப் பாலைவனம் போல் நான்!

அழகாக இருப்பவை

எல்லாம் உன்னை

நினைவுப்படுத்துவதால்..

அந்த இனியசுகம் வேண்டி

என் அறை முழுவதையும்

கண்ணாடிகளால்

நிரப்பி வைத்திருக்கிறேன் !

உண்மையிலேயே

உனக்கும் என் போல்

வைர நெஞ்சம்தான் நண்பா

வைரத்தை வைரத்தால்தான்

அறுக்கமுடியுமாம்..உன்

எண்ணங்களால் என்னை

இப்படி அறுக்கிறாயே..

என்கிறார் என் நண்பர்

விழிகள்

ஈரம் துளிர்த்து

எதையும் வென்றதில்லை

ஆண் பெண்ணைப்போல்

Link to comment
Share on other sites

அழகாக இருப்பவை

எல்லாம் உன்னை

நினைவுப்படுத்துவதால்..

அந்த இனியசுகம் வேண்டி

என் அறை முழுவதையும்

கண்ணாடிகளால்

நிரப்பி வைத்திருக்கிறேன் !

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

போர் போர் போர் என்று

முழக்கமிடும் எதிரி..முற்றத்தில்

பதுங்கியிருக்கிறது புலியென

பார்வையாளரில் ஒரு கூட்டம்..

முடங்கிப்போனது புலியென

முட்டுவோரில் நகையாட்டம்

மக்கள்புரட்சிக்கான மதியுக

நடைநுட்பம் என அரசியல் விமர்சனம்...

மக்களின் துன்பம்

மனதில் வாட்டம்

ஏனிது என சிலர் விசனம்

திக்கெல்லாம் வழி திறக்கும்

திகைப்பார் எதிரி என்று அபிமானிகள் கூட்டம்

நம்பிக்கை சிறு ஊட்டம்

நடப்பதில் ஏமாற்றம்..

எதிரியின் எறிகணை கூரையில் வீழும்

தூரத்தில் வந்துவிட்டான்..

அவன் கூக்குரல் காதில்

கேட்கும்போது என்ன செய்வோம்...

எங்கே போவோம்..

நம் மண்ணுக்குள்ளேயே...நாப்பது முறை

இடப்பெயர்ந்தோம்..

இனி நாதியுமில்லை

திராணியுமில்லை...

வன்னிவிட்டு வாழ இடம்

ஏதும் காணோம்...

பணம் படைத்தோர்..புலம் பெயர்ந்தார்..

அங்குமிங்கும் அகதியாய் அல்லல்பட்டார்..

இந்தியா..இந்தியா என்றோடி அங்கும்

இன்னல்பட்டார் அவமானப்பட்டார்..

தமிழன் வாழ வழி செய்வார் யார்..

தமிழ்க்குழந்தை அழுகை

துடைக்கபோகும் கடவுள் யார்?..

ஒளி பிறக்குமா?...இருள் விலகுமா?..

இன்னல் மறையுமா?..

சந்தோசம் என்ற சங்கீதம்...

தமிழ்க்குடிமனைகளிலும் கேட்கும் நாள் வருமா?.

யாரிடம் யார் கேட்பது?...

பதில் சொல்லும் தகைமை யாருக்கு உள்ளது?..

சூரியத்தேவா...பதில் சொல்லு..தலைவா...

பகைமைக்கும் சேர்த்து

பதில் சொல்லு தலைவா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.