Jump to content

2008 இல்...


Recommended Posts

காலக் கலண்டரில்

ஒருநாள் கிழிக்கப்பட

ஓராண்டு

ஓடிப் போனது!

வெளிநாட்டிலிருந்து

வரும் அப்பாவை

எதிர்பார்க்கும்

குழந்தை போல

நானும்

புதுவருட

எதிர்பார்புடன்...

வழக்கப் போல

"இந்த வருஷத்திலாவது

செய்யவேண்டியவை"

என ஒரு பட்டியல்

ரெடி...

கண்மடலில்

காதல் எழுதி

வருவாள் ஒரு வஞ்சி...

நேர்த்திக்கடன்

செய்தவைபோல

மொட்டத்தலையோடு

முணுமுணுக்கும்

என்னூர் மரங்கள்

துளிர்க்கும்...

இரத்தத்தில் உடல்

நனைந்து...

வெட்க்கத்தில்

முகம் மறைத்து...

ஏக்கத்தில் வாடும்

வெண்புறா...

சிறகு கழுவி

உலர்த்தும்...

புண்பட்ட

ஈழ மண்ணின்

காயங்கள் ஆறும்!

"Gun" இல்

பூக்காது

சமாதானம்

"கண்"கள்

திறக்கட்டும்

இனியாதல்...

உதட்டில் ரெடிமேட்

புன்னகை

வழக்கமான ஹலோ...

என்ன இது

நாமும் இயந்திரமாய்

ஆகிப் போனோமா?

வாருங்கள்

தோழர்களே...

போலிகளை

களைவோம்...

சபதம் செய்வோம்

சத்துள்ள

உலகம் செய்ய...!

Link to comment
Share on other sites

சபதம் செய்வோம்

சத்துள்ள

உலகம் செய்ய...!

கவி ரூபன் கவிதை நன்று. உங்கள் விருப்பம் தான் என்னுடையதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டில் ரெடிமேட் புன்னகை

வழக்கமான ஹலோ

என்ன இது

நாமும் இயந்திரம்

ஆகிப் போனோமோ

யதார்த்தமான கவி வரிகள் பாராட்டுக்கள் கவிரூபன்

Link to comment
Share on other sites

கண்மடலில்

காதல் எழுதி

வருவாள் ஒரு வஞ்சி...

புதுவருட வாழ்த்துகள் கவிருபன் அண்ணா :wub: ...உங்கள் கவிதையில் கண்ட பட்டியல் நனவாக வாழ்த்துகள் :lol: எனக்கு கூட ஒரு பட்டியல் இருக்கு ஆனா உங்களை மாதிரி எல்லாம் இல்லை பிகோஸ் நாம பேபி தானே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை

ஒவ்வொரு வருட இறுதியிலும்

பட்டியல் போட்டதை

தேற்றி கொண்டு

அடுத்த வருட இறுதியிலும்

பட்டியல் போட மனதால்

எப்படி தான் முடிகிறதோ!! :rolleyes:

Link to comment
Share on other sites

நுநாவிலான்,காவலூர் கண்மணி நன்றிகள்....

ஜம்மு பேபி (நடிகைகள் வயது சொல்வது போல என்றும் பேபியா?) உங்க பட்டியல் எப்படி இருக்கும்? இப்படி இருக்கலாமோ?

- புது சூப்பி போத்தல்

- தினமும் சொக்கிலேட்

- விளையாட ஒரு தம்பி/தங்கை பாப்பா வேணும் என்று அம்மாவிடம் வேண்டுகோள்

- நிலா முதுகில் சவாரி (அட வான நிலா ...)

அடிக்க வர முதல் நான் ஓடிடுறன்...

Link to comment
Share on other sites

வெளிநாட்டிலிருந்து

வரும் அப்பாவை

எதிர்பார்க்கும்

குழந்தை போல

நானும்

புதுவருட

எதிர்பார்புடன்...

அட ரூபன்.............. ரொம்ப தான் எதிர்பார்க்கிறீங்க. பாவம் ரூபன்..... ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். கடவுள் காக்க.. ஹீஹீ

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி (நடிகைகள் வயது சொல்வது போல என்றும் பேபியா?) உங்க பட்டியல் எப்படி இருக்கும்? இப்படி இருக்கலாமோ?

- புது சூப்பி போத்தல்

- தினமும் சொக்கிலேட்

- விளையாட ஒரு தம்பி/தங்கை பாப்பா வேணும் என்று அம்மாவிடம் வேண்டுகோள்

- நிலா முதுகில் சவாரி (அட வான நிலா ...)

அடிக்க வர முதல் நான் ஓடிடுறன்...

அட நடிகை வயசு சொல்வது போல இல்லை கவிரூபன் அண்ணா பிகோஸ் நிசமா பேபியாக்கும் அல்லோ :D ..அட பேபி நினைத்த சிலவற்றை கரக்டா சொல்லிட்டியள்..........வானத்து நிலா முதுகில எப்படி சவாரி செய்யலாம் :wub: கவிருபன் அண்ணா நேக்கு இந்த யோசணை வரவே இல்லை :wub: ஆனா நல்ல யோசணை போல இருக்கே மிக்க நன்றி ருபன் அண்ணா!! :lol:

இன்னும் சில யோசணைகள்!!

1)சைட் அடித்தல்

2)மொண்டசூரியில் பக்கத்தில் இருக்கும் பிகரை டாவடித்தல் :D

இப்படி பல பட்டியல் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தில் உடல்

நனைந்து...

வெட்க்கத்தில்

முகம் மறைத்து...

ஏக்கத்தில் வாடும்

வெண்புறா...

சிறகு கழுவி

உலர்த்தும்...

பெரிய விடயத்தை சிறிய வரிகளுக்குள் கட்டியவிதம் பாராட்டுக்குரியது.

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. எதற்காகப் பிடித்திருக்கிறது என்று கேட்டால் புரியவைக்க முடியாது. காற்றை கண்ணால் பார்க்க முடியாது. யாராவது சொல்லலாம் இந்த மரங்களின் அசைவில் காற்றைப்பார்க்கலாமே என்பார்கள். அசைவை வைத்து காற்றின் பயணத்தை உணரலாம். காற்றின் நிறத்தைக் காட்ட முடியுமா? அதுபோல் இந்த யாழ்க்களத்தில் எழுதும் இளைய தலைமுறையின் எழுத்துக்களும் பல சந்தர்ப்பத்தில் காரணம் புரியாமலே இரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. அந்த வகையில் உங்களுடைய வரிகளும் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

கெளிரிபாலன் வருகைக்கு நன்றி...

வெண்ணிலா, என்ன தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

//ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். //

உங்க கரிசனையை கடவுள் கணக்கில் எடுத்து ரூபனை காப்பாற்றுவார் என்று நம்புவோம்... (அவருக்கு வேற வேலை இல்லை?)

அது சரி வெண்ணிலா தமிழில் ஏதேனும் சீர்திருத்தம் செய்திருக்கினமா? 'மை' யை 'மம' என்று எழுதலாம் என்று ? (கவனிக்க அமமய... )

வல்வைசாகரா(ம் வித்தியாசமான பேர் தான்...) நீங்கள் சொல்வது சரி ... சில விசயங்கள் ஏன் பிடிக்கிறது என்றே புரியாது... காதலி திட்டுவதைக் கூட சிலர் ஆகா... அற்புதம் ... என்று ரசிக்கும் போது வேறு சிலருக்கு என்ன அபத்தம் இது என்று தோன்றுவதும் உண்டல்லவா?

கவிதை மலரைப் போல நேரத்திற்கு ஒரு அழகு காட்டவேணும்... ஆக வல்வைசாகரா ரசனை முக்கியம்... ஏன் என்பது அவசியமற்றது... (உங்க பேர் ரொம்ப பிடிக்குது... ஏன்? தெரியலையே... :lol: ) வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி... _/\_/\_

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Gun" இல்

பூக்காது

சமாதானம்

"கண்"கள்

திறக்கட்டும்

இனியாதல்...

அழகான வரிகள் .

உதட்டில் ரெடிமேட்

புன்னகை

வழக்கமான ஹலோ...

என்ன இது

நாமும் இயந்திரமாய்

ஆகிப் போனோமா?

இயந்திரமாய் அமைந்து விட்டது வாழ்க்கையும்.

வாழ்த்துகள் நன்றாய் இருக்கு கவிதை

Link to comment
Share on other sites

க.பி அக்கா நன்றி வந்து பின்னூட்டல் இட்டதற்கு...

Link to comment
Share on other sites

வெண்ணிலா, என்ன தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

//ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். //

உங்க கரிசனையை கடவுள் கணக்கில் எடுத்து ரூபனை காப்பாற்றுவார் என்று நம்புவோம்... (அவருக்கு வேற வேலை இல்லை?)

அது சரி வெண்ணிலா தமிழில் ஏதேனும் சீர்திருத்தம் செய்திருக்கினமா? 'மை' யை 'மம' என்று எழுதலாம் என்று ? (கவனிக்க அமமய... )

:lol: தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா என என்னைக் கேட்டால் எபப்டி ரூபன்? தீட்டிட்டு பாருங்கோ கூரோ இல்லையோ என்று

ம்ம் அவருக்கு வேலையே இல்லையாமே. உது தெரியாதோ? இப்ப உங்களைக் கவனிக்கிறதுக்காக1 கிழமை லீவு எடுத்திருக்கிறாராம் :)

ஆஹா உங்கட கண் நல்லா வேலை செய்யுதுப்பா. கடவுளுக்கு முதல் நன்றி சொல்லணும்.

ம்ம்ம் இனிமேல் கவனிக்கிறேன். நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.