• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

இந்துநாகரிகமும் சூனியமும் (0).

Recommended Posts

இந்தத் தலைப்பின் நோக்கம்.. இந்து நாகரிகத்தின் வழி எப்படி சூனியம் பிறந்தது என்பதுடன் உலக நாகரிகத்தில் இந்து நாகரிகத்தின் பங்களிப்பின் உண்மையான வடிவம் என்ன என்பதைக் காட்டுவதுதான்..!

ஆனால் இந்தத் தலைப்பு வேண்டும் என்றே இந்துமதத்துக்கு எதிரான பிரச்சாரக் களமாக மாற்றப்படிருக்கிறது. இன்னொரு தலைப்பில் ஈ வெ ராமசாமி பற்றிக் கருத்துரைத்தற்கு விழுந்தடித்து ஓடிவந்து பூட்டுப் போட்ட மோகன் சார் இது இந்து மதம் சார்ந்த எதிர்ப் பிரச்சாரமாக மாறியதை இட்டு மிகுந்த மகிழ்வுடன் அனுமதிச்சிருக்கிறதைக் காணலாம். இப்படியான ஒரு நிர்வாகத் தலைமையின் கீழ் தான் நாம் கருத்தெழுதிட்டு இருக்கிறம் என்பது கேவலமான ஒரு நிலை..!

தற்போது இதற்கெல்லாம் ஒரு படி மேல போய் தனது விளம்பரத்துக்காக ஈ வெ ராமசாமியை அடைமொழியாக்கிக் கொண்டு இந்து மதத்தின் எந்தக் கோட்பாடுகளையும் உருப்படியா விளங்கிக் கொள்ள முயலாமல்... வெறுமனவே போறவன் வாறவன் எல்லாம் தன் இஸ்ரத்துக்கு ஆளுக்குக்கு ஆள் அச்சடிச்சு விட்ட நூல்களின் உதவிகளோடு இந்துமதத்தின் மீது கீழ்த்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வீடியோக்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இவை இத்தலைப்பை எப்படியாவது இந்துமதத்துக்கு எதிரான பிரச்சாரத்தளமாக பாவிக்க வேண்டும் என்பதன் நோக்கோடு செய்யப்படுகிறது.

இந்தப் பேச்சில் சூனியத்துக்கும் இந்து நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பை அல்லது விடயங்களை ஆராய்கிற எந்த ஒரு வரியும் இடம்பெறவில்லை. மாறாக ஈ வெ ராமசாமியின் உளறல்களை அப்படியே பிரதியாக்கம் செய்கிறார் குறிப்பிட்ட நபர். அதுவும் சாதியக் கண்ணோட்டத்தோடு.

இது இத்தலைப்புக்குள் வேண்டும் என்றே சாதியக் கண்ணோட்டத்தில் அமைந்த இந்து மத எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கொண்டு வரும் கீழ்த்தரமான எண்ணத்தின் வெளிப்பாடு. யாருக்கு இப்போ சாதியம் அவசியம் என்பதைப் பாருங்கள். யார் ஒருவனை உயர்த்தி மற்றவனைத் தாழ்த்தி சாதிய வெறியை இந்துமதத்தை எதிர்க்க என்று வளர்க்கிறார்கள் என்று பாருங்கள். இப்படியான கீழ்த்தரமான பிரச்சார அணுகுமுறையூடு சாதியை ஒழிக்கும் அரும்பணியை ஆற்றுகின்றோம் என்று இந்து மதத்தை பகடைக்காய் ஆக்கும் இந்த விளம்பர புருசர்கள்.. ஆதார சான்றிதழோடும் ஆழந்த அறிவோடும் இந்து மதத்தைப் பகுத்தாய்ந்த பின் தான் பேசுகிறார்கள் என்று மோகன் சார் அடித்துச் சொல்கிறார். அவருக்கு அதில் நியாயங்கள் இருக்கிறதாயும் தெரியும்.

எம்மிடம் கேட்பார்.. உங்களின் கூற்றுப்படி இந்துமதம் அவர் பேசுவது போல இல்லை என்று நிறுவ ஆதாரங்கள் கொடுங்கள் என்று. நிச்சயமா அவற்றுக்கு ஆதாரம் எடுக்க முடியாது. காரணம் இட்டுக்கட்டிப் பேசுவதற்கெல்லாம் இந்துமதம் பதில் சொல்ல என்று தனது கோட்பாடுகளை வகுத்திருக்கவில்லை. திரிபுகளுக்குப் பதில் சொல்ல என்று இந்துமதம் உருவாக்கப்படவில்லை. ஆனால் இந்துமதம் விமர்சனத்துக்கு அப்பால் படிக்கப்படுகிறது என்பதற்கு இந்துநாகரிகம் என்பது யாழ் பல்கலைக்கழகத்திலும் இலங்கையின் உயர்கல்வியிலும் ஒரு பாடமாகவே இருக்கிறது. அதுமட்டுமன்றி இந்து மதம் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன.

ஆனால் உலகில் எந்த நாட்டிலும் ( தமிழ்நாடு உட்பட) ஈ வெ ராமசாமியின் இந்துமதத்துக்கும் பிராமண சமூகத்துக்கும் எதிரான காழ்புணர்ச்சிகளைக் கொட்டும் ஒரு வரிதானும்.. படிப்பிக்கப்படுவதில்லை. மோகன் சாருக்கு இது தெரிஞ்சும்.. அவர் மேலதிக தெளிவுகளை குறித்த கீழ்த்தரமான பிரச்சாரப் பேச்சுக்களில் இருந்து பெறக்கூடும்..!

எல்லாம் அறிந்தவர்களாக மோகன் சாருக்கு நாம் சேட்டிபிக்கட் காட்டிட்டு இங்கு வந்து எழுதனும் என்ற அவசியமில்லை. மோகன் சாரை விட எமக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எனவே அவர் தன்னுடைய விமர்சனங்களை பண்போடு வைத்துக் கொள்வது சிறப்பானது..! இப்படியான திட்டமிட்ட திசை திருப்பல்களை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கும் அவர்.. ஈ வெ ராமசாமியைப் பற்றிய கருத்து மட்டும் தனது களம் தொடர்பான தப்பபிப்பிராயத்துக்கு இடமளித்துவிடும் என்று கவலைப்படுவது நம்பும்படியாக இல்லை..! இந்துக்களின் மன உழைச்சல்கள் அவருக்கு பெரிதாகத் தெரியவில்லை.. அதன் பாதிப்பு தமிழ் தேசியத்தில் எவ்வகையில் தாக்கம் செய்யும் என்பதை உணர முடியவில்லை.. சிறுகுழுக்களாக உள்ள ஈ வெ ராமசாமி வால்பிடிகளின் ஈனக்குரல் மட்டும் அவரின் களத்தை மெருகூட்டுகிறதா அவர் நம்புகின்றார் போலும்..!

மேலே வீடியோவில் உள்ளவரினதும்.. அவர் போன்றோரினதும் பேச்சுக்களின் நோக்கம் என்ன என்று ஒரு இந்திய நண்பன் விபரிக்கின்றான் பாருங்கள்...

---------

பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது

இன்னும் எதுக்குய்யா பார்ப்பன எதிர்ப்புன்ன்னு புளிச்சி போன பல்லவியயே பாடிக்கிட்டு இருக்கீங்க... ஒரு சாதி மேல காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஜாதி துவேஷத்த மக்கள் மனசுல தீயா மூட்டி குளிர் காஞ்ச நம்ம so called "தலைவர்" களுக்கும் , ஒரு இனத்து மேல துவேஷத்த வளர்த்த ஹிட்லருக்கும் என்னய்யா வித்தியாசம். ரெண்டு பேருமே வன்முறைய தன் மீது திருப்பி பிரயோகிக்காத ஒரு கூட்டத்து மேல வன்முறைய பிரயோகிக்க சொல்லி ஆதாயம் தேடிக்கிட்டாங்க.... யார் யாரெல்லாம் இன்னமும், இந்த 2005லயும் பார்ப்பன எதிர்ப்புன்னு சொல்றாங்களோ அவுங்கள்லாம் ஹிட்லர் செஞ்சத தப்புன்னு சொல்றதுக்கு என்ன அருகதை இருக்கு.

வலைப்பூவில இது ஒரு வியாதியாவே ஆயிடுச்சி... கருத்து வேறுபாடு இருக்க வேண்டியதுதான் ஆனா தனி மனித திட்டு அதுவும் சாதிய சொல்லி திட்டறது கேவலமா இருக்கு. நான் கேட்ட வரையில , நீ எந்த வகையிலடா அய்யிருனால பாதிக்கப்பட்டுறுக்கன்னா சம்பந்தமே இல்லாம "அய்யன்கிட்ட ஒரு வேலைன்னு போ.. சட்டைய தடவி பாத்துத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்" ன்னு குருட்டுத்தனமா ஒரு வியாக்கியானம் கொடுப்பாய்ங்க. அதாவது பார்ப்பணர்கள் தன் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாங்கன்னு அர்த்தமாம். அவன சொல்லி குத்தமில்ல, காலம் காலமா நம்ம தலைவர்க்ள் இதத்தான விதச்சிருக்காங்க....

10 வருஷத்துக்கு மேல தமிழகத்துல சகல அதிகாரமும் கொண்ட ஆட்சிபீடத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி இன்னமும் பார்ப்பண எதிர்ப்புன்னு பேசிகிட்டு இருந்தா எப்படி?? தான் அதிகாரத்துக்கு கையாலாகதவர்னு ஒத்துக்கறாரா? இல்ல மறுமலர்ச்சி உண்டாக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேக்கறாரா? எவ்வளவு வருசம் வேணுமாம்... ஸ்டாலின் ஆட்சிலயாவது மறுமலர்ச்சி வந்திடுமாமா?? இப்ப 40 எம்.பி 200க்கு மேல எம்எல்லே... எல்லாம் என்ன அய்யருங்களா இல்ல இவங்க சமுதாய திட்டங்களுக்காக போராடுறத அய்யருங்க தடுக்கறாங்களா? எல்லா அதிகாரிங்களும் அய்யருங்க... ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு கீறல் விழுந்த ரெக்கார்ட மறுபடி போடாதீங்க. இப்ப எம்பி எம்எல்லே எல்லாம் என்ன பண்ணுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

சரி அப்படியே அய்யருங்க சுயநலவாதின்னு வச்சிகிட்டாலும் இப்ப யாரு யோக்கியம்... கருணாநிதி:: தயாநிதிக்கு வேற சாதின்னுட்டா முக்கிய மந்திரி வாங்கி கொடுத்துருக்கார். தன் ரத்தம், தன் சொந்தம்னு பாசம் வரல? இல்ல தி.க வீரமணி யாராவது ப்ராமணருக்கு தி.க.ல முக்கிய பதவி ஏதாவது கொடுத்திருக்காரா? ஆக definition படி கருணாநிதியையும் வீரமணியையும் பார்ப்பான்னு சொல்லலாமா?

ராமதாஸ பத்தி கேக்கவே வேணாம்... முதலியார் MBC ஆகணும்னா போராடுனாரு, தன் ஜாதியான வன்னியருக்கு MBC வாங்கத்தானே போராட்டம்... உயர் நீதி மன்றத்துல நீதிபதியா வன்னியர் வரணும்னு ஒரு போராட்டம், தன் மகன் முக்கிய மந்திரியாக்குவதுன்னு - இவங்க எல்லாம் மத்த சாதிக்க்காகவா போராடுராங்க... (ஒரு காலத்துல ராமதாஸ் ராணுவத்துல வன்னியர்கள் அதிக அளவுல இருக்கறதுனால வன்னியர் ரெஜிமெண்ட்னு ஓன்னு ஆரம்பிகனும்னு ஒரு அறிக்கை கொடுத்தார்... சீக்கியர், கூர்க்காவுக்கு எல்லாம் ரெஜிமெண்ட் இருக்கும் போது வன்னியருக்கு ஏன் கூடாதுன்னு ஒரு விளக்கம் வேற... சீக், கூர்க்கா எல்லாம் மதம். வன்னியர்னா ஜாதின்னு யாராவது சொன்னாங்களா)

எல்லாருக்கும் தன் இனம், தன் சாதின்னு ஒரு பாசம் இருக்கத்தான்யா செய்யும்... அதுல பார்ப்பனர மட்டும் எதுக்கு திட்டிகிட்டு (அது சரி, பார்ப்பான் பார்ப்பான்னு கூசாம எழுதிறீங்களே, சக ஜாதிங்கற முறையில ஒரு தலித் சாதிய... உதாரணத்துக்கு பறையன்னு சொல்லி யாராவது எழுதறாங்களா...)

இப்பதிவில் எல்லா சாதியையும் ஒரு அடையாள குறியீடாகத்தான் சொல்லியிருக்கிறேன்... யார் மனமும் புண்படுத்துவது நோக்கம் இல்லை

இத படிக்கிற எல்லாம் அட்லீஸ்ட் காலேஜுக்காவது போயிர்ப்பீங்க... outside the box திங்க் பண்ண முடியலன்னாலும் பரவாயில்ல இன்னும் ஜாதி ஜாதின்னு குண்டு சட்டிக்குள்ள குதிர ஒட்டிக்கிட்டே இருந்தா கல்வியில குத்தமா இல்ல பிரச்சினை வேற எங்காவதா?? இந்த உலகத்துல சாதின்னா ரெண்டுதான்... என் முன்னேற்றத்த எவனாலயும் தடுத்து நிறுத்த முடியாது, என் குறிக்கோள அடஞ்சே தீருவேன்னு முன்னேற்ற ஜாதி, தான் முன்னேறலன்னா தப்பு என் மேல இல்லன்னு வேற ஏதாவது காரணம் கண்டு அதனால தனக்கு தானே தடை ஏற்படுத்திக்கிற ஜாதி. சந்தேகம் இருந்தா, நாவலர்கிட்ட கருணாநிதி & அன்பழகன் பத்தி கேட்டு பாருங்க - அவர் சொல்வாரு:: உலக நியதி இதுதான் தம்பி "வாழ தகுதியுள்ளதே வாழும்... தகுதியிருந்தால் வாழ்ந்தே தீரும்" ( தயாநிதி, அன்புமணிக்கெல்லாம் என்ன தகுதின்னு கேட்டு யாரும் அளும்பு பண்ண கூடாது) அதனால யாரயாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்காம தகுதிய வளத்துக்குவோம்...

பிகு :

1)யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தா விவாதம் பண்ணலாம். ஆனா அத கண்ணியமான முறையில சொல்லுங்க... நடுராத்திரி வயக்காட்டுகுள்ள இருட்டுல ஊளையிடுற நரி மாதிரி அனானிமஸா தனி மனித, சாதி அடையாள தாக்குதல் எல்லாம் வேணாம்.

2)எனக்கு ப்ராமண அடையாளம் குத்தனும்னு நினைக்கிறவங்க இத்தயும் படிங்க: சின்ன வயசுல ஸ்கூலுக்கு போவ சொல்லோ அர நிஜார் பசங்க எல்லாம் ஓணான் புடிப்பாய்ங்க - வெளக்குமாத்து குச்சில சுறுக்கு செஞ்சி ஓணான புடிச்சி அதும் கண்ணில என்னமோ ஒரு செடியோட பால வுடுவானுங்க... அதுக்கு பைத்தியம் புடிச்சிறும் - அத பாத்தா நான் அவனுங்க கிட்ட சண்டைக்கு போவேன். அதுக்கு ஒரு சூப்பர் வெளக்கம் கொடுப்பானுங்கோ பாரு... ராமர் சீதைய தேடிக்கிட்டு லங்கைக்கு போவ சொல்சோ தாகமா இருந்திச்சின்னு தண்ணீ கேட்டாரம்... ஓணான் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்திச்சாம். அணில்தான் எளனி கொண்டாந்து கொடுத்திச்சாம்.. அதனால ஓணானுக்கு பாடம் சொல்லிதரோம்... ஆமா நீ என்னா ஓணானுக்கு வக்காலத்து வாங்கற, நீ ராவணன் ஜாதியான்னுவானுங்க... அவிங்க வயசும் மூளையுந்தான் உங்களுக்கா??

http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_20.html

-----------

குறித்த தலைப்பு கள நிர்வாகத்தின் பரிபூரண ஆதரவுடன் தலைப்பு விடயத்துக்கு மாறாக இந்துமதத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பயன்படுத்த எத்தனிக்கப்படுவதால் எனி மேற்கொண்டு இத்தலைப்பில் கருத்தெழுதுவதை தவிர்த்துக் கொள்கின்றோம்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

சிந்து வெளி நாகரிகத்தை 'இந்துமத' நாகரிகம் என்று ஒரு புலுடா, பின்னர் இந்து கலாச்சாராம் வேறு சிந்து வெளி நாகரிகம் வேறு என்று இன்னொரு புலுடா.சைன மத்தவரின் கண்டுபிடிப்பை இந்து நெறியில் வந்தவரின் கண்டு பிடிப்பென இன்னொரு புலுடா.

இந்து மதம் சூனியத்தைக் கண்டு பிடிக்கவில்லை, இந்து மதம் என்னும் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் ஜனனாயக விரோதமான மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட சாதியத்தை நிலை நிறுத்துவதன் மூலம் ,இந்திய அரசு இந்து அரசாக சுத்த சூனியமாக செயற்படுகிறது என்பதைச் சொல்வது தலைப்பிற்க்கு சம்பந்தமானது.இந்து மதத்தின் உருவாக்கம் அதன் வரலாறு நோக்கம் அதன் வடிவம் இவை எவையும் அறிவியலுடன் சம்பந்தப்படாதா சூனியமான மதம் இந்து மதம் என்று சொல்வது மிக மிக அவசியமானது.

இந்து மதத்திற்க்கு அறிவியற் சாயம் பூச முயலும் எந்த சதிகளும் தொடர்ந்தும் இங்கு அம்பலப்படுத்தப்படும்.

Share this post


Link to post
Share on other sites

சிந்து வெளி நாகரிகத்தை 'இந்துமத' நாகரிகம் என்று ஒரு புலுடா, பின்னர் இந்து கலாச்சாராம் வேறு சிந்து வெளி நாகரிகம் வேறு என்று இன்னொரு புலுடா.சைன மத்தவரின் கண்டுபிடிப்பை இந்து நெறியில் வந்தவரின் கண்டு பிடிப்பென இன்னொரு புலுடா.

இந்து மதத்திற்க்கு அறிவியற் சாயம் பூச முயலும் எந்த சதிகளும் தொடர்ந்தும் இங்கு அம்பலப்படுத்தப்படும்.

தானே குழம்ப வேண்டியது. பின்னர் வேலையில பிசி பிழையா எழுத்திட்டன் மன்னியுங்கே என்றது. அப்புறம்.. இங்க வந்து அதைச் சமாளிக்க ஒட்ட வேண்டியது.

நான் இணைத்த கட்டுரையும் சரி நானும் சரி தெளிவாகவே விடயங்களைச் சொல்லி இருக்கின்றோம். இந்து நாகரிகம் என்பதாக கட்டுரை சொல்வது இந்து மதம் சார்ந்த நாகரிகம் என்பதையே. அங்கு சிந்து வெளி நாகரிகத்தையோ.. அங்கு வாழ்ந்த மக்களையோ மையப்படுத்தி இந்து நாகரிகம் என்பது குறிப்பிடப்படவில்லை.

அது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம். மேலே மேற்கோள் காட்டப்பட்டது வாசகர்களைக் குழப்பி குறித்த கருத்து வாசகர்களை அடைய விடாமல் தடுக்கும் கீழ்த்தரமான நோக்கோடு திரிக்கப்பட்ட ஒன்று..! அதில் தெளிவான தன்மையை மோகன் சார் காண முடிவதால்.. இத்தலைப்பை இயலுமானவரை இந்துமதத்துக்கு எதிராக பிரச்சாரப்படுத்த அனுமதித்திருக்கிறார். அவ்வளவே..!

வாசகர்களுக்காக இப்பதிவைச் செய்கின்றேன்..!

எனிமேல் என் பதிவு இடம்பெறாது..! எனவே இவை தொடர்பான குழப்பகரமான கருத்துக்கள் வரின் புரிந்து கொண்டு செயற்பட வாசகர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்..!

நன்றி..!

Share this post


Link to post
Share on other sites

tamilnumberslu3.jpg

என்ன சபேசன் அங்கிள் பகுத்தறிவு பற்றி எல்லாம் கதைக்கிறீங்கள். பிறகு இப்பிடி எல்லாம் படமும் போடுறீங்கள். உங்கட படத்தில நம்பருகள் ஏன் அகரவரிசையின் வரிசைக்கிரமத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது? நீங்கள் உலகத்தில இருக்கிற ஏதாவது ஒரு மொழியிண்ட எழுத்துகள காட்டுங்கோ. நானும் உது மாதிரி ஓண்டு ரெண்டு மூண்டு எழுதி படம் போட்டு காட்டுறன் அந்த எழுத்துகளுக்கு மேல..

அன்பான அடியார் பெருமக்களே, இன்னும் சிறிது நேரத்தில் இங்கு ஆலயத்தில் பூசை ஆரம்பமாக உள்ளது. கோயிலினுள் பிரவேசிக்கும் ஆடவர்கள் தயவுசெய்து உங்கள் மேலாடைகளை கழற்றிவிட்டு வெறும் மேலுடன் உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்யவும். குளிகாதவர்கள் தயவுசெய்து உங்கள் உடைகளை கழற்றி நாற்றத்தை ஏற்படுத்தி மக்களை மயங்கி விழச்செய்யாது கோயிலுக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கவும்.

நெடுக்கு சாமிக்கு அரோகரா! அரோகரா! அரோகரா! எழுதுங்கள் சாமி எழுதுங்கள். உங்கள் தரிசனத்தை காண ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதீர்கள் சாமி.

Share this post


Link to post
Share on other sites

ஜைன மதத்தைச் சேர்ந்த பிங்களரால் சூனியம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் மகாவீரர் மூலம் உருவாக்கப்பட்ட ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்கள், முன்னர் இந்து மதத்தைப் பின்பற்றியதால் சூனியம் என்பது இந்துமதத்திற்கே உரியது என்று இலகுவாக நிறுவலாம்.

இதைப் போலவே உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரையும் ஆபிரிக்கர்களாகவும் நிறுவலாம்!

Share this post


Link to post
Share on other sites

தானே குழம்ப வேண்டியது. பின்னர் வேலையில பிசி பிழையா எழுத்திட்டன் மன்னியுங்கே என்றது. அப்புறம்.. இங்க வந்து அதைச் சமாளிக்க ஒட்ட வேண்டியது.

நான் இணைத்த கட்டுரையும் சரி நானும் சரி தெளிவாகவே விடயங்களைச் சொல்லி இருக்கின்றோம். இந்து நாகரிகம் என்பதாக கட்டுரை சொல்வது இந்து மதம் சார்ந்த நாகரிகம் என்பதையே. அங்கு சிந்து வெளி நாகரிகத்தையோ.. அங்கு வாழ்ந்த மக்களையோ மையப்படுத்தி இந்து நாகரிகம் என்பது குறிப்பிடப்படவில்லை.

அது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம். மேலே மேற்கோள் காட்டப்பட்டது வாசகர்களைக் குழப்பி குறித்த கருத்து வாசகர்களை அடைய விடாமல் தடுக்கும் கீழ்த்தரமான நோக்கோடு திரிக்கப்பட்ட ஒன்று..! அதில் தெளிவான தன்மையை மோகன் சார் காண முடிவதால்.. இத்தலைப்பை இயலுமானவரை இந்துமதத்துக்கு எதிராக பிரச்சாரப்படுத்த அனுமதித்திருக்கிறார். அவ்வளவே..!

வாசகர்களுக்காக இப்பதிவைச் செய்கின்றேன்..!

எனிமேல் என் பதிவு இடம்பெறாது..! எனவே இவை தொடர்பான குழப்பகரமான கருத்துக்கள் வரின் புரிந்து கொண்டு செயற்பட வாசகர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்..!

நன்றி..!

மீண்டும் ஒருமுறை வந்து நன்றி சொன்ன நெடுக்காலபோவானுக்கு நன்றிகள்.

சிந்து வெளி என்பது சிந்து நதியில் இருந்து வந்தது, அதுவே பின்னர் இந்துவெளி என மருவியது. நான் எழுதும் போது சிந்து நதியையை இந்து நதியென எழுதி இருந்தேன்.அது எழுத்துப் பிழை,அதற்கும் நீங்கள் செய்யும் கருத்தியல் வரலாற்றுத் திருகுதாளங்களுக்கும் உள்ள வித்தியசத்தை வாசிப்பவர்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.

கட்டுரை இந்து நாகரிகம் என்று சொல்வது சிந்து வெளி நாகரீகத்தை, வெற்றிவேல் முதற்கொண்டு அது தான் வேதகால ஆதாரங்களைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.வேத காலம் என்பது சிந்து வெளி நாகரிகத்தின் முடிவில் இருந்தே தொடங்குகிறது .இங்கே கட்டுரை சொல்லிய இந்து வெளி அல்லது சிந்து வெளி நாகரிகத்தை 'இந்து சமய' நாகரிகம் எனத் திருத்து மோசடி செய்தவர் நீங்கள்.இது தான் உங்கள் கருத்தியல் மோசடி.

:lol::D:D

Share this post


Link to post
Share on other sites

கொஞ்ச ஆக்களுக்கு வெளிநாடு வந்ததுக்குப் பிறகுதான் சுடலைஞானம் பிறந்திருக்கு.ஊரிலை கோயில்கோயிலாய் திரிஞ்சு போட்டு இஞ்சை வந்து காணாணதை கண்டுட்டினம்.எல்லாம் கண்ணை மறைச்சுப்போட்டுது.

Share this post


Link to post
Share on other sites

கலைஞன்!

தமிழர்கள் எண்களுக்கு நான் கொடுத்த எழுத்துகளையோ உபயோகித்தார்கள்.

1 என்பதை "க" என்றும் 2 என்பதை "உ" என்றும் 3 என்பதை "ங" என்றும் அப்படியே நான் தந்த எழுத்துக்களாக எழுதினார்கள். இவைகைளை நானாக கற்பனை செய்து இங்கே தரவில்லை.

அந்த எழுத்துக்களுக்குள்ளே இன்றைக்கு பாவிக்கின்ற எண்களின் வடிவம் இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

தமிழர்கள் ஏன் அகரவரிசைப் படி ஒழுங்காக எழுத்துக்களை எண்களுக்கு பாவிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அன்றைக்கு இருந்து வரிவடிவங்கள் வேறு. இப்பொழுது அதில் பல வரிவடிவங்கள் இல்லாமல் போய்விட்டது.

இந்த வரிவடிவங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை இருந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் ஒருமுறை வந்து நன்றி சொன்ன நெடுக்காலபோவானுக்கு நன்றிகள்.

சிந்து வெளி என்பது சிந்து நதியில் இருந்து வந்தது, அதுவே பின்னர் இந்துவெளி என மருவியது. நான் எழுதும் போது சிந்து நதியையை இந்து நதியென எழுதி இருந்தேன்.அது எழுத்துப் பிழை,அதற்கும் நீங்கள் செய்யும் கருத்தியல் வரலாற்றுத் திருகுதாளங்களுக்கும் உள்ள வித்தியசத்தை வாசிப்பவர்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.

கட்டுரை இந்து நாகரிகம் என்று சொல்வது சிந்து வெளி நாகரீகத்தை, வெற்றிவேல் முதற்கொண்டு அது தான் வேதகால ஆதாரங்களைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.வேத காலம் என்பது சிந்து வெளி நாகரிகத்தின் முடிவில் இருந்தே தொடங்குகிறது .இங்கே கட்டுரை சொல்லிய இந்து வெளி அல்லது சிந்து வெளி நாகரிகத்தை 'இந்து சமய' நாகரிகம் எனத் திருத்து மோசடி செய்தவர் நீங்கள்.இது தான் உங்கள் கருத்தியல் மோசடி.

:lol::D:D

வாசகர்கள் குழம்பக் கூடாது என்பதுதான் இக்கருத்தின் நோக்கம்.

ஓரிடத்தில் பிழை வந்திருந்தால் அது தவறு. பல இடத்தில் பிழை நேர்ந்திருப்பது தவறல்ல திரிவுக்கா திட்டமிட்ட முயற்சி..!

Indus civilisation..

http://en.wikipedia.org/wiki/Indus_Valley_Civilization

Hindu culture..

http://en.wikipedia.org/wiki/Hindu

Hindu is derived from the Persian pronunciation of the Sanskrit word Sindhu (Sanskrit: सिन्धु, the name for the Indus River), located in what is now Pakistan.[10] The Persians, using the word "Hindu" for "Sindhu", referred to the people who lived near or across the Sindhu River as "Hindu", and their religion later became known as "Hinduism." The religion had previously been known as Santana dharma (the eternal law), Vaidika dharma (law of the Vedas), Arya dharma (the noble religion), or Mnava dharma (the religion of mankind)[citation needed]. Eventually the word "Hindu" came into common use among Hindus themselves,[2] and was adopted into Greek as Indos and Indikos ("Indian"), into Latin as Indianus.[11] and into Sanskrit, as Hindu, appearing in some early medieval texts.

மேலுள்ள குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து என்ற சொல் சிந்து என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பது என்று. ஆனால் இந்து மதம் என்பது சிந்து வெளி நாகரிகத்துள் பிற்பாடு நுழைந்தது என்றும் அதற்கு முன்னர் அது வேறு நிலைகளில் (பெயர்களுனூடு) இருந்திருக்கிறது. அப்போதே வேத மார்க்கங்கள் இருந்துள்ளன. எனவே சிந்து வெளி நாகரிகத்துக்குள் மட்டுமே இந்து மதம் அடங்கி இருக்கவில்லை.. மட்டுப்பட்டிருக்கவில்லை இந்து மத நாகரிகம்.. இந்து நாகரிகம் என்று நான் தந்த கட்டுரை விளம்புவது இந்து மதம் சார்ந்த ஆதாரங்களை எடுத்தாண்டே. இந்து என்ற சொல் எப்போ நுழைந்ததென்பதல்ல இங்கு வாதம். இந்து என்ற சொல் சேர முதலே இந்து மதம் அனுட்டிக்கப்பட்டிருக்கிறது..! வேதங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன..!

The Indus Valley Civilization (c. 3300-1700 BCE, flourished 2600-1900 BCE), abbreviated IVC, was an ancient civilization that flourished in the Indus and Ghaggar-Hakra river valleys primarily in what is now Pakistan and western India, extending westward into Balochistan. The mature phase of this civilization is known as the Harappan Civilization, after the first of its cities to be excavated, Harappa. Excavation of IVC sites has been ongoing since the 1920s.

Share this post


Link to post
Share on other sites

என்ன சபேசன் அங்கிள் பகுத்தறிவு பற்றி எல்லாம் கதைக்கிறீங்கள். பிறகு இப்பிடி எல்லாம் படமும் போடுறீங்கள். உங்கட படத்தில நம்பருகள் ஏன் அகரவரிசையின் வரிசைக்கிரமத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது? நீங்கள் உலகத்தில இருக்கிற ஏதாவது ஒரு மொழியிண்ட எழுத்துகள காட்டுங்கோ. நானும் உது மாதிரி ஓண்டு ரெண்டு மூண்டு எழுதி படம் போட்டு காட்டுறன் அந்த எழுத்துகளுக்கு மேல..
கலைஞன்

சபேசன் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் தான் முதலில் 1-9 அராபிய இலக்கம் என்றும் குழம்பியுமுள்ளார்.

நீங்கள் சொல்வது போல மற்றய மொழிகளில் 1,2,3... வடிவங்களை எடுக்கமுடியும் என்பது உண்மை தான். ஆனால் தமிழில் உள்ள விசேடம் என்னவென்றால் அவர் தமிழில் சொன்ன இலக்கங்கள் தான், தமிழரின் பழைய இலக்க அமைப்புக்கள். ஆனால் நீங்கள் சொல்ல வாற உருவமைப்புக்கள் மற்றய மொழிகளில் எண்களாகப் பாவிக்கப்படவில்லை. அப்படிப் பாவித்திருநு;தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாமே தவிர, எழுந்தமான உருவமைப்புக்கள் எல்லாம் அடையாளப்படுத்தி விடமுடியாது

Share this post


Link to post
Share on other sites

இந்து என்ற சொல் சேர முதலே இந்து மதம் அனுட்டிக்கப்பட்டிருக்கிறது..!

:lol::D:D:D

இந்து என்ற சொல்லே இல்லாத நிலையில் இந்து மதம் எவ்வாறு இருந்திருக்க முடியும்?

இந்து மதம் எவ்வகையில் இன்று அனுட்டிக்கப்படுகிறது? வேத காலத்தில் கோவில்களும் இருக்கவில்லை இன்றைய கடவுளர்களும் இருக்கவில்லை. ஆரியர் வாழ்ந்த இடங்களில் வேத கால மதம் தான் வேத காலத்தில் இருந்தது இந்து மதம் அல்ல.

:D

Share this post


Link to post
Share on other sites

மேலே உள்ள கருத்தில் இருந்து உதிர்த்த ஞான உதயம்:

பிள்ளை பிறந்து பெயர் வைக்க ஒரு மாதம் எடுக்கும் காலங்களில் பிள்ளை பிறந்தது என்பது பொய். ஏனென்றால் பிள்ளை பெயரில்லாமல் தான் அக்காலத்தில் இருந்தது

Share this post


Link to post
Share on other sites