kavi_ruban

என் தேசம்

Recommended Posts

குருதி ஓடையும்

பிண வாடையும்

என் தேசத்து

தெருக்களில்...

உயிர் சுமந்து

இருப்பதில் சில

சுமந்து

இடையில் குழந்தை

சுமந்து

நடையில் என் தேசத்து

எல்லை கடக்கின்றனர்

மக்கள்!

என் மண்ணின்

உயிர்

ஆயிரமாயிரம்

'பூட்ஸ்' கால்களின்

காலடியில் நசுங்குண்டு

சுதந்திர தாகத்தோடு

காத்திருக்கிறது!

பலிகள் பல கொடுத்து

நரிகளின் ஊளை கேட்டு

பரிகளாகி மேனி விடைத்து

அரிகளின் தேகத்தை

'ரவை' களால் கிழித்து

கரிகாலன் கண்ணசைவில்

பாய்கின்றனர் புலிகள்!

இருந்தும்

அரசு கட்டில்

அமர்ந்திருக்கும்

ஆந்தைகள் அலறும்

ஒலி கேட்டு

காது பொத்தி

'அடைத்த செவியினர்'

ஆக வெளிநாடுகள்!

படை மட்டும்

நடாத்தி

கிடைப்பதல்ல வெற்றி!

சடை நிறைய

ஈரோடு பேன்

ஓடும்

அரசியல் அரங்கமேறி

உரை செய்தெம்

ஞாயம் சரியென

செவிகள் தோறும் சொல்லி

மரை கழண்ட

எம் நாட்டு

அரசியல் வாதிகளின்

செவிகள் திருகி

ஞானம் தருவதே

வெற்றி!

நான் ஒரு

கோழையாய்

சில சேதிகள்

சொன்னேன்!

ஆனாலும்

மறுபடியும்

மனசுக்குள் கனவொன்று

விரியும்...

அது

என் கடவுச் சீட்டில்

என் நாடு

'தமிழீழம்'

என்றிருப்பது!

--------------------

புரட்டாதி 2007

Share this post


Link to post
Share on other sites

ஆஹா ரூபன் உங்கள் கனவு சூப்பராக இருக்குப்பா. கனவு நனவாக வாழ்த்துகிறேன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 70 களில் கல்லூரியில் படிக்கும்பொழுது "ஸ்டெப் கட்" என தலை அலங்காரம் மிகப் பிரபலம்.. நானும் அப்பொழுது காதை பாதி மூடும்படி ஸ்டெப் கட் வைத்திருந்தேன். (இப்பொழுது பின்பக்கம் லேசா வழுக்கை விழுந்துவிட்டது என்பது எனக்கு கவலையான விசயம்..!  ) சலூனுக்கு சென்று இருக்கையில் உட்கார்ந்து முதன்முதலாக "ஸ்டெப் கட் வெட்டிவிடுங்கள்.." என சொல்லும்போது உள்ளே இந்தப்பாடல் மெல்லிதாக ஒலித்தது..! அந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சிறு துளியாக இருக்கலாம், ஆனால் இன்னமும் மறக்க முடியாத வண்ண நினைவுகளில் ஒன்று..    
  • பக்கத்து வீட்டுக்காறன் ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியின்றி இருப்பான். நாமோ மூன்று நேரமும் மூக்குமுட்ட உண்டுவிட்டு உண்ட களையில் படுத்துவிடுவோம். எழும்பிப் பார்க்கையில்  பக்கத்து வீட்டுக்காறன் படலையில் ஒரு கூட்டம் நம்பிக்கையளித்துக்கொண்டிருக்கும். நமக்கோ பத்திக்கொண்டு வரும். நான் இஞ்ச இருக்கிறன் என்ர வாசலுக்க வந்து அவங்கள் மதம் பரப்புவதோ 😡... ம்...ம்ம்ம்ம்ம். உடனே தொடங்கவேண்டியதுதான்.....   குமாரசாமி, போல், எப்போதும் தமிழன், ராஜேஸ், மீரா, ரதி, விளங்க நினைப்பவன் மற்றும் இன்னோரன்ன....... மத காப்பாளர்களே உங்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி. (பலருடைய பயர்கள் நினைவிற்கு வரவில்லை.... ஆனா வரும்....வரும்....😀) சமயம் என்றவுடன் ஒன்றுசேரும் நீங்களெல்லோரும் ஏன் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நிற்கிறீர்கள். சமயத்திற்காக சகல வேறுபாடுகளையும் கழைந்து ஒன்றுசேரும் உங்களால் ஏன் சாதி, பிரதேசவாதம் போன்ற தமிழரை காவுகொள்ளும் விடயங்களில் ஒன்றாய் குரல் கொடுக்க முடியாது ? 🤔 இத்ல முடியுமெண்டா அதிலயும் முடியும்தானே  🤔    
  • தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லை. உண்மைதான். . ஆனால் உதவியை எல்லோரும் செய்யலாம். அல்லேலூயாக் கூட்டங்கள்தான் செய்யவேண்டுமென்பது இல்லை. ஒவ்வொரு ஊரிலுமிருக்கும் தேவஸ்தானங்கள் தங்கள் ஊரிலிருக்கும் நலிந்தவர்களுக்கு தங்கள் செயல்களால் நம்பிக்கையூட்டினால் அந்த ஊர்ப்பக்கம் அல்லேலூயாக் கூட்டங்கள் திரும்பிப் பார்க்கவும் ஏலாது.🙂 ஆனால், நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் என்று கூக்குரல் மட்டும்தான் இடுவோம். அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்று சொல்வோம். சட்டம் போடுவோம். றூள்ஸ் கதைப்போம். உதவிபுரிய விரும்புவோரை டிக்ரேற் பண்ணுவோம். ஆனால் வடையை வாயால்தான் சுடுவோம் 😜. தேவை எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். அதனை நிவர்த்தி செய்வது எவ்வாறு என்றும் தெரியும். ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டோம். 😡
  • சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால்  எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி.  சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா.  இங்கே, சற்று  கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மிக முக்கியமாக கறுக்க விடாமல், நிறம் மாறி, வாசனை வரும் போது, எண்ணெய் சேர்த்து பின்னர் வெங்காயம் முதல் ஏனைய வழக்கமான தாளித பொருட்களை சேர்த்து வதங்கி வரும் போது அசைவகாரர் எனில், றால், மாசி சேர்க்கலாம். இல்லாவிடில் வதங்கி வரும் போது , மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட சுரைக்காய் அல்லது முள்ளங்கி சேர்த்து, சட்டியை மூடி வேக வைக்க வேண்டும். வெந்ததும், பால் சேர்க்கலாம். அந்த பெண்மணி, டபுள் கிரீம் சேர்த்து இருந்தார். வறுத்த வெந்தய வாசனை அந்த பால் கறியினை தூக்கி நிறுத்தி இருந்தது. இன்னோரு விதமாக சொல்வதானால், வழக்கமான தாளித்ததுக்கு வறுத்த வெந்தயம் சேர்த்தல் போல எனலாம். முயன்று பாருங்கள்.    முள்ளங்கி  (Moole or Radish)   சுரைக்காய் (Bottle Gourd)    
  • கொழும்பில் நான் அலைச்சேன் சிறி 😀😀🥰, மஞ்சள் காமாலைக்கு கீழான் நெல்லி நல்ல மருந்து. ஒரு முறை நான் கொழும்பில் படிப்பித்த பிள்ளைக்கு இந்த வருத்தம் வந்திட்டுது, நான் கல்கிசை முதல் வெள்ளவத்தை வரை நடந்து (குச் ஓழுங்கையெல்லாம்) இதை பிடிங்கி அவர்களிடம் கொடுத்தேன், அவிஞ்சு குடுக்க விரைவில் சுகமடைந்தார்