Jump to content

கடவுள் என்னும் மாயை


Recommended Posts

எம்மவர்களில் பெரும்பாலானோருக்கு பொழுது போக்கு விடையமாக socialising platform ஆக இருப்பது இவைதான். ஆனால் அதை மதம் மதம் புனிதம் புனிதம் என்று கூச்சலிட்டு பூச்சாண்டி காட்டி மற்றவர்களை ஏமாற்ற பின்னுக்கு நிக்கமாட்டார்கள். அவர்களுடைய போலியான பதவிகள் தகமைகள் கொளரவங்கள் கூட்டங்கள் கட்டமைப்புகளை தக்க வைக்க அதை நம்பி ஏமாரும் கூட்டம் ஒன்று தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் சமூக இயங்குதளங்களாக (socialising platform) பப்புகளும் கிளப்புகளும் இருந்து அற்ககோலால் நிரப்பி மகிழ்ச்சி எனும் மாயை வளர்க்கிறதைக் காட்டிலும்... கோவில்களும் சேர்ச்களும் மசூதிகளும் சொல்வது ஒன்றும் அத்துணை ஆபத்தானதாக தெரியவில்லை. அற்ககோல் மாயையில் மூழ்கி தினமும் வன்முறைக்கு இலக்காவோரின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மதங்களின் கொள்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவே. அதுமட்டுமன்றி இன்று மக்கள் தாமாகவே சிந்திக்கக் கூடிய அளவுக்கு கல்வி அறிவைப் பெற்று வருகின்றனர். விடயங்களை மக்களே சுயசிந்தனையால் தீர்மானிக்க வேண்டும்.. திணிக்க முடியாது.

மீண்டும் மூடநம்பிக்கைக்கும் மதங்களுக்குமிடையே முடிச்சுப் போடாதீர்கள். மதங்களைப் பின்பற்றாதோரும் மூடநம்பிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அதற்குக் காரணம் சரியான விளக்கங்களைப் பெறவல்ல சிந்தனையைத் தூண்டவல்ல அல்லது சிந்தனையை திசைப்படுத்தவல்ல கல்வி அறிவினின்மையே..!

மாயை என்பது எம்மை எப்பவும் சூழ்ந்து கொண்டுள்ளது. விஞ்ஞானம் உள்ளதை ஆராய்கிறதே தவிர மூலத்தைக் கண்டறியவில்லை. டி என் ஏ என்ற உள்ளதை விளங்கிக் கொள்ளவே விஞ்ஞானம் இத்தணை பாடுபடுகிறது. அந்த டி என் ஏ யை ஆக்கியுள்ள கூறுகளை கண்டறியும் விஞ்ஞானம் அதை ஆக்கியுள்ள விடயங்களின் அதன் முதலின் ஆரம்பம் பற்றி இன்னும் விளக்கங்களால் விடுவிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. விஞ்ஞானம் இன்னும் பரிபூரணத்துவமாக எதையும் அறிதிட்டு விளக்கவில்லை எமது போரண்டம் தொடர்பில்.

எனவே.. மனிதன் இதுவரை பெற்றுக்கொண்ட விளக்கங்களின் படி தர்க்கிப்பதுதான் பூரணத்துவமானது என்பது சிக்கற்தன்மை வாய்ந்த நிலைக்கு வாதங்களை எடுத்துச் செல்வதோடு.. எல்லையிட முனைகிறது. அது தவறானது. மனிதன் இன்னும் பல விடயங்களை பல கோணங்களில் ஆராய வேண்டி இருக்கிறான்.

மதங்கள் மனித சிந்தனைகளைக் கட்டிப் போடவில்லை. காரணம்.. மதங்கள் என்பவை மனித சிந்தனையின் வெளிப்பாடுகளாக உள்ளனவே தவிர இயற்கையின் வரம்புநிலைகள் அல்ல. ஏன் கடவுள் என்ற வரையறையைக் கூட மனிதன் தான் செய்துள்ளான். அவனே அதை நிராகரிக்கவும் விளைகிறான். இது மனிதன் தொடர்சியாகச் சிந்திக்கிறான் என்பதைக் காட்டுகிறதே தவிர மனித சிந்தனை கட்டுப்பட்டுக் கிடப்பதாக சிலர் கவலைப்படுவது அவர்களின் சிந்தனையை அவர்கள் மட்டுப்படுத்தி இருப்பதால் என்பதால் இருக்கும். மனிதன் நங்கு சிந்திக்கத் தெரிந்தவன். அவன் தீர்மானிப்பான் எது அவனுக்கு அவசியம் அவசியமில்லை என்பதை அது இயற்கையில் வாழ்வியலுக்காக அவனின் தப்பிப்பிழைப்புக்காக அமைவது..!

கடவுள் என்ற பதத்தைப் படைத்த மனிதனே இன்று அதனை மாயை என்பது உலகில் இயற்கையில் இருந்த கடவுள் என்ற ஒன்றை இல்லாது காட்டுகிறான் என்பது போன்ற போலித் தோற்றம் காட்டப்படுகிறது. அது கூட அடிப்படையில் மனித சிந்தனையில் இருந்து எழும் ஒரு மாயைக் காட்சிதான்..!

கடவுள் காணப்படவும் இல்லை.. காட்சிப்படவும் இல்லை. கடவுளை சிருஷ்டிப்பதும் மனிதன் தான் இல்லை என்பதும் அவன் தான். மனிதனுக்கு ( ஏன் மனிதன் என்று தன்னைத்தானே வரையறுத்ததும் அவன் தான்) முன்னாள் உள்ளது இயற்கை என்ற அற்புதமான ஒரு இயங்கு நிலை காலம் சார்ந்த ஒரு பெளதீக, இரசாயன அம்சமே அன்றி.. வேறல்ல. அதை வைத்து மனிதன் உருவாக்கிக் கொண்டவற்றை அவனே விவாதிப்பதும் நிராகரிப்பதும் மொத்த மாயைத்தனம் தான். அப்படிப் பார்த்தால் நாடுகள் தேசங்கள் போர்கள் சாவுகள் எல்லாமே அநாவசியமானவை. ஏன் வாழ்க்கை என்பது கூட நிலையற்ற ஒன்றுக்கான தேவையற்ற ஒரு போட்டி.. சுமை..!

நாளை வரவிருக்கும் மரணம் என்ற இயற்கை நிலையைக் கடக்க முடியாத மனிதன்.. அதற்குள் கட்டுண்டு கிடக்கும் வரை.. அவனுக்குள்.. கடவுள் என்ற சிந்தனை உருவாகும் என்பது தான் அவன் கடவுளை தேடக் காரணம். கடவுள் என்பது மனிதன் இயற்கையில் கண்ட வடிவம் என்று நினைப்பதே தவறு..! அது முழுக்க முழுக்க மனித சிந்தனை தந்த ஒன்று. சூரியனை கடவுளாக்கினதும் மனிதன் தான். கல்லைக் கடவுளாக்கினதும் மனிதன் தான். இல்லை என்பதும் அவன் தான்.. இயற்கையன்று..!

மரணம் என்ற நிலையாமை உள்ளவரை.. மனிதன்.. கடவுளை சிருஷ்டிப்பதைக் கைவிடான். மரணத்தை ஒருக்கால் விஞ்ஞானம் விளக்கின் மாயை என்பது... கலையலாம்..!

தானே தனது சிந்தனையால் கட்டியுள்ள மாயைத்தனம் சூழ்ந்த நிலைக்குள் மனித தன்னை இறுமாப்புடன்.. நிலைநிறுத்த இப்படியான விவாதங்களைச் செய்வது அவனின் சிந்தனை அவன் சிருஷ்டித்ததன் மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமன்றி மனித சிந்தனை என்பது எல்லையிடப்பட்டதன்று என்பதை தெளிவாக்கி நிற்கிறது. மூடநம்பிக்கையை தந்த மனிதனே பின்னர் தனது சிந்தனை மாற்றத்தால் அதைத் தெளிவாக மூடநம்பிக்கை என்று இனங்காட்டும் போது தனது நிலைகளிடையே தான் தெளிவற்றிருப்பதை இனங்காட்டுகிறதே தவிர இயற்கையில் அது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இது மனிதனின் சிந்தனை என்பது தொடர்சியானது.. தேடிக் கொண்டிருப்பது.. மாறுபடுவது என்று காட்டி நிற்கிறது. இதை உணராத வகைக்கு சிலர் தங்களைத் தாங்களே சிந்தனையால் சோடித்துக் கொண்டு மற்ற மனிதனை நோக்கி.. சிந்தனையை சிந்திவிட்டு.. குய்யோ முறையோ என்பது சிந்தனை உள்ள மனிதனுக்கு நகைப்புக்கு இடமானதாகவே இருக்கிறது.! இயற்கை என்பது மனிதனின் எந்தச் சிந்தனை பற்றிய கவனிப்பும் இன்றி தானும் தன்பாடும். இடையில் மனிதன் தானே ஒன்றை வரையறுப்பதும்.. பின்னர் இல்லை என்பதும்.. என்று குழம்பித் தெளிந்து தனது நிலையாமைக்குள் நிலைத்திருக்க ஒரு மாயைத் தோற்றத்தை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறான்..! இதைப் புரிஞ்சு கொண்டிருந்தால்.. மதங்கள் மீது சீறிப்பாய வேண்டிய நோக்கம் மனிதருக்குள் மனிதருக்கே எழுந்திராது. ஒரு மனிதனை அடுத்த மனிதன் முட்டாளாக்க நினைக்கும் செயலின் பெறுதியே இது. இயற்கையை மனிதன் உணர்ந்து கொண்டதற்கான அடையாளம் அல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களில் பெரும்பாலானோருக்கு பொழுது போக்கு விடையமாக socialising platform ஆக இருப்பது இவைதான். ஆனால் அதை மதம் மதம் புனிதம் புனிதம் என்று கூச்சலிட்டு பூச்சாண்டி காட்டி மற்றவர்களை ஏமாற்ற பின்னுக்கு நிக்கமாட்டார்கள். அவர்களுடைய போலியான பதவிகள் தகமைகள் கொளரவங்கள் கூட்டங்கள் கட்டமைப்புகளை தக்க வைக்க அதை நம்பி ஏமாரும் கூட்டம் ஒன்று தேவை.

மதமில்லை என்று சொல்வது கூட இதே பாணி தான். பெயர் வாங்கவும், மக்களை முட்டாளாக்கிக் கூட்டம் சேர்க்கவும் செய்கின்ற கூத்துத் தான். நெடுக்ஸ் சொல்வது போல, மனிதனுக்கு .வை தேவையில்லாத நேரத்தைப் போக்காட்டும் வேலை என்றால் அற்ககோல் பார்ட்டி, சுதந்தினம், இன விடுதலை என்ற எவ்வித களியாட்டங்களும் இல்லாமல் உண்மையான வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொள்ள வேண்டியது தானே?

இதை விட மனைவி, குழந்தை குட்டி, வைப்பாட்டி என்று எதுவுமே தேவைப்படாமல் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

ஆம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏனயவை போன்றது தான் கடவுள் நம்பிக்கையும் அதை மய்யப்படுத்தி கட்டியெழுப்பப்பட்ட மதங்களும். ஏனையவை விமர்சனத்திற்கு விவாதத்திற்கு கேள்விக்கு ஆய்விற்கு உட்படுத்தப்படுவது போன்று மதங்கள் சொல்லும் விபரங்களும் அதன் கருவான கடவுள் நம்பிக்கையும் உட்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் பகுத்தறிவாளர்களும் சொல்கிறார்கள்.

விஞ்ஞானம் எதையும் முடிந்த முடிவாக கூறவில்லை. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அவதனிக்கப்பட்டவையின் அடிப்படையில் இது தான் விளக்கம் என்கிறது. அதற்கு ஆதாரங்களை முன்வைக்கிறது. முடியாதவற்றை ஏற்றுக் கொள்கிறது. அதற்காக மேற்கொண்டு முயற்சிக்கிறது. இது தான் மனிதனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞான அறிவியல் அணுகுமுறையின் சுதந்திரமும் நேர்மையும். Richard Dawkins கூட தன்னடக்கமாகச் சொல்கிறார் Supernatural creator almost certainly does not exist என்று தானே அன்றி Supernatural creator certainly does not exist என்றோ அல்லது Supernatural creator does not exist அல்ல.

இந்த almost என்பது தரும் uncertinity அய் தாங்கிக் கொள்ள முடியாது ஏற்றுக் கொள்ள முடியாது அதிலும் பார்க்க விளக்கள் இன்றி முடிந்த முடிவாக வரையறைப்படுத்தும் மதங்கள் மிகவும் இலகுவான பாதுகாப்பைத்தருவதாக மனதைச் சாந்தப்படுத்துகிறது. அந்தப் போலியான பாதுகாப்புத்தான் மாயமானது ஒருவகை மனநோய் என்கிறார் . இங்கு இறுதியாக மதங்களிற்கு கொடுக்கப்படும் நியாயப்பாடு யாராவது தேடி விஞ்ஞானத்தில தெரியாததுகளிற்கு எல்லாம் விளக்கங்களை கண்டு பிடியுங்கோ அதுக்கு பிறகு மதம் தரும் பாதுகாப்பை விட்டு விஞ்ஞானத்திட்டை வாறம். அதுவரை மதத்தின் பெயரால் நேர மனித பொருள்வளம் செய்து கொண்டு இருப்பம் அது மனிதன் உருவாக்கின காலம் கடந்து விட்ட மாயைய் என்றாலும் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்துப்படி பற்று, பாசம், பந்தமில்லாமல் திரியவேண்டுமானால் முனிவர்கள், தவசிகள் போல மாறவேண்டியது தான். அப்படிப் பார்த்தாலும் கடைசியில் இந்து மதத்தினுள் தான் வந்து சேருவீர்கள்.

மனிதனைப் பொறுத்தவரைக்கும், அவன் தவறு என்று தெரிந்தாலும் அதைச் செய்து கொண்டு தான் இருப்பான். அணுகுண்டு, சுற்றாடல் மாசு பெறல், இயற்கைவளங்களை அழித்தல் போன்றவை அவனுக்கு அதன் பின்விளைவுகள் தெரிந்தாலும் செய்வதை நிறுத்துவதாக இல்லை. இதனால் தான் நீங்கள் சொன்ன மனநோயான கடவுள் தேவைப்படுகின்றார். அப்படிப்பட்ட ஒருவரால் தான் இப்படியான தன்னிலை கெட்ட மனிதனை அடக்குவதற்கு முடியும்.

அப்படிப் பார்த்தாலும் கடைசியில் இந்து மதத்தினுள் தான் வரவேண்டும். தன்னிலை மறந்து செயற்பாடும், ஆணவம் கொண்டு இயற்கையைப் பேணாதவர்களை அடக்க கடவுள் வருவதைப் போல புராணக்கதைகளும் உண்டு. அதை நம்பச் சொல்லவில்லை. ஆனால் இயற்கையை மதிக்க மனிதனுக்கு அவன் மேலே ஒரு சக்தி தேவை. அதைத் தான் கடவுள் என்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மனிதனை மனிதன் கட்டுப்படுத்த மதங்கள் மட்டுமே மென்மையான புரிந்துணர்வுக்கான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன. மதங்களைப் போன்றே.. மனிதனால் உருவாக்கப்படும் சட்டங்களும்.. இராணுவங்களைப் பேணி ஆயுத முனையில் மனிதனை மனிதன் அச்சுறுத்திப் பணிய வைத்தல் கொள்கைகளும் செய்வதற்கு மேலாகவே மனிதனின் சுயசிந்தனையின் பால் அவனைச் சிந்திக்க விட்டு அவனை அவனே கட்டுப்பாட்டுக்குள் வைக்க மதங்கள் போதிய அளவுக்குப் பங்களிக்கின்றன. கடவுளை மட்டும் மாயையாக இனங்காணும் விஞ்ஞானி.. மனிதன் வழங்கும் பட்டத்தின் அடிப்படையில் தன்னை டாக்டர் என்று அழைக்கின்ற மாயைத் தனத்துள் இருந்து கொண்டு கருத்துரைப்பது கூட அவர் தன்னைச் சுற்றியுள்ள மாயையை உணராத்தனம் தானே..! குறிப்பிட்ட விஞ்ஞானி முதலில் இந்த மாயையில் இருந்து விடுபடத் தயாராக இருக்கிறாரா..??!

மனித சிந்தனைப் பெருக்கத்துக்கும் அது செயல்வடிவமாவதற்கும்.. பட்டங்கள் வழங்கி.. ( டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்ற நியதி இயற்கையில் கிடையாது..).. மனிதன் தானே தனது மனதை மகிழ்விக்க உற்சாகப்படுத்த முனைகிறான். இதேதான் கடவுள் சார்ந்து மதங்கள் என்பனவற்றின் மனித உருவாக்கத்தின் நோக்கமும்.

இயற்கையில் டாக்டர் என்பது செய்யும் தாக்கம் என்ன..???! அந்த டாக்டர் என்பது விஞ்ஞானத்துக்குச் செய்யும் பங்கென்ன..??! ஒரு தனிமனிதனின் முயற்சியை பிற மனிதனுக்கு இனங்காட்டத்தான் அந்த டாக்டர் என்ற மாயைக் குறியீடே..! அதேபோல் தான்.. மதங்கள் என்பதும் ஒரு மாயைக் குறியீட்டை கடவுள் என்றாக்கி அதன் மூலம் கோட்பாட்டியல் சிந்தனைகளை கருத்துருவாக்கம் செய்து மனிதனுக்கு வழங்கி மனிதனை மனிதன் வழிநடத்தி ஒரு கட்டுப்பாடுமிக்க சமூக வாழ்வியலுக்குள் மனிதனை இட்டு வைக்க.. மனித வாழ்க்கையில் சச்சரவுகள்.. இடர்பாடுகளைக் குறைத்து மனிதனின் வாழும் காலத்தை சிறப்புற அமைப்பதுதான் நோக்கம். அதுதான் மதம் என்றதன் சமூக இருப்பின் நோக்கம்.

மாயை என்ற நிலையை மனிதன் உருவகித்த கடவுளில் மட்டும் தான் காண முடியும் என்றில்லை.. மாயை என்பது மனித வாழியலில் மனிதன் உருவாக்கியுள்ள போலிச் சூழலில் எங்குமே காணலாம்..!

எனவே மாயை என்பதினூடு மதங்களைப் பலவீனப்படுத்துவது என்பது மாயை நிறைந்த மனித உலகில் இருந்து மனிதனை விடுவிப்பதாகக் கருதிட முடியாது என்பதுடன்.. இது மதங்கள் மீதான வெறுப்புணர்வின் அடிப்படையில் எழும் மாயைத் தோற்றம் பேணல். காரணம்.. மனிதக் கொள்கைகள் அடிப்படையில் மாயைத் தனத்தில் இருந்து விளைந்தவைதான். நாம் கட்டுப்பட்டுள்ள ஜனநாயகம் என்ற கொள்கை என்பது கூட ஒரு மாயைச் சூழலை மனிதனை நோக்கி உருவாக்கி வைத்திருக்கிறதே தவிர அது இயற்கையினதல்ல..!

மாயைகள் பல பரிமானங்களில் மனிதனை ஆண்டு கொண்டுதான் உள்ளன. அவை இன்றேல் மனிதன் ஒரு கட்டுக்கோப்பு மிக்க சமூக நடத்தைக்குள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கட்டுக்கோப்புகளை இன்று அவரவர் தங்கள் தங்கள் சுயவிருப்பு வெறுப்புக்கு ஏற்ப மாயைகளாகவும் உண்மைகளாகவும் சித்தரிக்க விளைகின்றனரே தவிர.. அடிப்படையில் மனிதன் வாழும் இயற்கையான இயங்குநிலை பெளதீக இசாரயனச் சூழலை விட மிகுதி அனைத்தும் மாயைகளே. இதில் மனிதனின் இயற்றுகை கடவுளும்.. மதங்களும் மட்டுமே அடங்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவற்றை மட்டும் உள்ளடக்குவது என்பது தவறான அர்த்தக் கற்பிப்பாகக் கூட அமையும்..! மாயை என்பது மதங்களுக்கும் அப்பால் மனிதன் உருவாக்கியுள்ள செயற்கைச் சூழலில் பல பரிமானங்களில் அவனால் இலகுவாக உணரப்பட முடியாதபடிக்கு விரிக்கப்பட்டே உள்ளன.

ஒரு விளம்பரத்தைக் கண்கவர விரித்து.. பொருட்களை நாட வைப்பதில் இருந்து மாயைத்தனம் எங்கும் நிறைந்தே உள்ளது..! :)

Link to comment
Share on other sites

இயற்கையைப் பேணவும் சூற்றாடல் மாசுபடுத்தலை கட்டுப்படுத்தவும் இதுவரை வெற்றகரமாக நடந்த முயற்சிகள் அனைத்தும் அறிவியலின் விஞ்ஞானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையே அன்றி கடவுளின் பெயரால் அச்சுறுத்தி மனநோயை உருவாக்கி அல்ல.

காடுகள் அளிக்கப்படுகிறது காலநிலை மழை வீழ்ச்சி வெப்பங்களில் மாற்றம் வருகிறது சூழல் மாசடைகிறது என்பவற்றை அவதானித்தல்.

உயிரினங்களில் எவை அழிக்கப்படுகிறது எண்ணிக்கை குறைவடைகிறது முற்றாது இல்லாது போகும் ஆபத்தில் இருக்கிறன என்ற தேடல்.

இவற்றிற்கான காரணங்கள் என்ன என்ற ஆய்வு அவற்றிற்கான தீர்வு என்ன அதைப் எப்படி நடை முறைப்படுத்துவது மீளக் காடுகளை உருவாக்குதல், பாதுகாப்புச் சரணாலயங்களை உருவாக்குவது போன்றவை எல்லாமே இதுவரை அறிவியலில் அடிப்படையில் தான் நடந்தேறி இருக்கிறது. கடவுளின் அடிப்படையிலும் மெஞ்ஞானத்திலும் அல்ல.

மதத்தில் இயற்கையாக இருப்பது எல்லா விலங்குகளிலும் இருக்கும் பயன் என்பதை அடிப்படையாகக் கொண்டு மனிதரால் மனிதருக்காக கட்டியெழுப்பட்டதே அன்றி வேறொன்றும் இல்லை. இதற்கு அப்பால் மதத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் மனிதன் உருவாக்கிய மொழி, கலை, கலாச்சாரம், கல்வி, வேலை, பொருளாதாரம், தேசியம், அரசு, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, அரசியல், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றவை எவ்வாறு செயற்கையானதோ அப்படி செயற்கையானது தான். அந்த செயற்கைத்தன்மையை புனிதம் கடவுள் என்பவற்றால் அச்சுறுத்தி மூடிமறைப்பது தவறு என்பது தான் பகுத்தறிவாளர்களின் வாதம். அதை நேர்மையாக செயற்கையானது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தனிமனிதர் தெரிவிற்கு ஏனையவை போன்று விடுங்கள் அந்த மதம் என்ற செயற்கையையும் ஏற்றுக் கொள்வதா விடுவதா என்று.

டாக்டர் பட்டம் முதல் ஏனைய பட்டப்படிப்புகள் எவ்வளவு செயற்கையானது என்பதை அறிவிற்கு அன்றி பட்டத்திற்கா நேரம் செலவிட்டுப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டம் என்பதோடு அறிவும் வரும் அல்லது பட்டம் இருந்தால் அறிவு இருக்கு என்பவர்கள் மாயையில் தான் இருக்கிறார்கள். அதுபோலவே சமூகத்தின் அடிமட்டம் என்பதும் செயற்கையானது தான். மற்றவர்களை சமூகத்தின் அடிமட்டம் உயர்மட்டம் என்று தரப்படுத்துவதும் அவரவர் தமது மாய உலகில் இருந்து கொண்டு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன சுற்றுச்சூழல் பேணல் எவ்வகையில் வெற்றியளித்தன என்பது குறித்துப் பகிர முடியுமா? வருடாவருடம் மூடிய அறையில் நின்று விவாதித்துப் விட்டுப் போவதும், அமெரிக்காவும் சீனாவும் முரண்டு பிடி;தது ஏற்றுக் கொள்ள மறுப்பதையுமா சொல்ல வருகின்றீர்கள்.

இப்படி மனிதன் இயற்கையைக் காப்பாற்ற முடிந்திருந்தால் சென்ற மாதம் அந்தாட்டிக்காவில் பனியுருகுவதைப் பார்த்து ஐநா செயலாளர் கண்ணீர் வடித்திருக்கமாட்டார்.

மாலைதீவு போன்ற சிறிய தீவுகளில் வசிக்கின்ற மக்கள் மூட்டை முடிச்சைக் கட்டி வேறு நாடு தேடி ஓடுகின்ற அவலம் வந்திருக்காது.

அமெரிக்காவும் யப்பான் மீது குண்டு வீசித் தாக்கியிருக்காது. இன்று நச்சு ஆயுதங்களைப் பாவித்து யாரும் போர்புரியவும் மாட்டார்கள். இந்தியா போன்ற வசதிகுறைந்த நாடுகளில் தங்கள் நாட்டு;க கழிவுகளை மேற்குலக நாடுகள் கொட்டவும் மாட்டாது.

இயற்கையழிவு பற்றி எல்லோரும் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் அதைக் கட்டுப்படுத்த எவனுமே இல்லை. அதற்குத் தான் 3ம் சக்தி ஒன்று தேவைப்படுகின்றது. ஆனால் அது கூட நம்பிக்கையால் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இந்து மதம் அறிவியலை என்றைக்குமே வேண்டாம் ன்று சொன்னதுமில்லை. அதை விட விஞ்ஞானம் பக்திக்கு எதிரானதுமல்ல.

Link to comment
Share on other sites

இயற்கை அழிவுகள், வள விரையங்கள், நோய்களில் இருந்து பாதுகாப்பு, இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்புக் என்ற விடையங்களில் இதுவரை சாதிக்கப்பட்டவை எல்லாம் மக்களை அறிவூட்டியே அன்றி 3ஆம் சக்தி என்ற மூடநம்பிக்கைகள் மூலம் பயப்படுத்தி அல்ல. இவற்றிற்கான பொறிமுகைள் ஏதிர்வுகூறல் முயற்சிகள் அறிவுறுத்தல்கள் எல்லாமே அறிவியல் விஞ்ஞானம் என்பவற்றின் அடிப்படையிலேயே அன்றி கடவுள் மதங்கள் என்பவற்றின் அடிப்படையில் அல்ல.

இந்தச் சவால்களை 3ஆம் சக்தி அவதாரம் கடவுள் மதங்களின் அடிப்படையில் அணுகும் இனங்களும் சமூகங்களும் தேசங்களும் தான் இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக கடந்த காலத்திலும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் மாசடைவதை இனங்கண்டதும் அறிவியல் விஞ்ஞானம் தான் அதற்கான பொறிமுறைகளை உருவாக்க முன்னிப்பதும் அறிவியலும் விஞ்ஞானமும் தான் வெற்றிகாணப் போவதும் அறிவியலும் விஞ்ஞானமும் தான். ஈழத்தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வு தனிநாடாகத்தான் இருக்க முடியும், உலகில் உள்ள 60 லட்சத்திற்கு மேற்பட்டதமிழரிற்கு குரல்கொடுக்க ஒரு தனிநாடு வேண்டும் என்பவையும் பகுத்தறிவின் வெளிப்பாடே அன்றி 3ஆம் சக்த்தியின் அறிவுரையே பயமூட்டலோ அல்ல. அந்த விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும் அறிவியல் விஞ்ஞான அணுகுமுறைகளின் அடிப்படையில் தான் தங்கியிருக்கிறது. எமது போராட்டம் தோற்றுவிட்டது என்று சொல்ல முடியுமா? அதுபோலவே சூழல்மாசடைவதை தடுப்பதற்கான போராட்டமும் தோற்றுவிடவில்லை. இரண்டிலும் அரசியல் பொருளாதாரம் இராஜதந்திரம் உலக ஒழுங்கு என்று பல சிக்கல்கள் இருக்கிறது. இவை தரும் சவால்களை பகுத்தறிந்தால் தான் தீர்விற்கான வழியைக் கண்டறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச்சூழல் அழிவதை;த தடுக்க மனிதனின் அறிவியல் என்ன செய்தது என்று கேட்க அதற்குப் பதிலளிக்காமல் என்னவோ எல்லர்ம சொல்கின்றீர்கள். முதலே சொன்னது போல விஞ்ஞானததிற்கு பக்தி என்பது எதிhனது அல்ல, என்பதை பக்தி தொடர்பாக விஞ்ஞானிகள் சொன்ன கருத்தினை சாட்சியாக்க கொள்ளலாம்.

மேற்குல விஞ்ஞானிகளுக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் நடந்த மனக்கசப்பால் உந்தப்பட்ட கருத்தே தவிர, அது இதர மதங்களுக்குப் பொருந்தாது. இன்றைய யூதர்களின் வளர்ச்சி மத எதிர்ப்புக்கு அப்பால் அல்ல. எல்லோரையும் விடத் தீவிரமாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்கள் தாம்.

தங்களுக்குச் சொத்துச் சேர்க்க மனிதன் பயன்படுத்தும் சுயநல விஞ்ஞானம் என்றைக்கு மனிதனைக் காப்பாற்றாது. அதற்கு நிச்சயம் 3ம் சக்தி தேவைப்படும்.

அதுபோலவே சூழல்மாசடைவதை தடுப்பதற்கான போராட்டமும் தோற்றுவிடவில்லை. இரண்டிலும் அரசியல் பொருளாதாரம் இராஜதந்திரம் உலக ஒழுங்கு என்று பல சிக்கல்கள் இருக்கிறது. இவை தரும் சவால்களை பகுத்தறிந்தால் தான் தீர்விற்கான வழியைக் கண்டறியலாம்

இதற்குத் தான் 3ம் சக்தியின் தேவைப்பர்டு பற்றிச் சொல்கின்றேன். என்றைக்குமே இந்த அரசியல்....ராசதந்திரம் என்று எதுவுமே தீரப்போவதில்லை. அவன் அடங்கி நடக்கின்ற 3ம் சக்தி நிச்சயம் வேண்டும்.

Link to comment
Share on other sites

சூழல் மாசுபடுகிறது அழிவுகளைச் சந்திக்கிறது வெப்பநிலை ஏறுகிறது எப்படி ஏறும் என்பதை எல்லாம் கடந்த 15 வருடங்களிற்கு மேலாக அவதானித்து குரல் எழுப்பியது விஞ்ஞானிகளும் அறிவியல்ரீதியில் வாழ்கையை அணுகியவர்கள் தான். அதற்கான காரணங்களை கண்டறிந்து மாற்றீடுகளை பிரேரணை செய்வது அறிவியல் விஞ்ஞானம் தான். எனவே இன்றைக்கு நீங்கள் சூழல்மாசடைகிறது என்ற தகவலை பெற்றது விஞ்ஞானத்தால், வாழ்க்கை என்பதன் யதார்த்தத்தை அறிவியலூடாக அணுகியவர்களின் உழைப்பால். அப்படி பிரச்சனை என்று ஒன்று இருக்கு என்று கண்டு பிடித்த விஞ்ஞானத்தையும் அறிவியலையும் பார்த்து ஏதோ முதலே தெரிந்தவர் மாதிரி இதுவரை அதை தீர்க்க என்ன செய்திருக்கிறார்கள் என்று இலகுவாக கேள்வி கேக்கிறீர்கள். பிரச்சனை இருக்கு என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான மூலங்களை ஆராய்பவர்களால் தான் தீர்வையும் தர முடியும். அதற்கான ஒப்பீடு தான் நான் "என்னென்னவோக" எழுதிய எமது போராட்டம்.

யூதர்கள் எல்லோரும் மதவாதிகள் அல்ல. இஸ்ரேலின் உருவாக்கத்திற்கும் அதன் இன்றைய இருப்பிற்கும் உறுதுணையாக இருப்பது அறிவியல் விஞ்ஞானரீதியான அணுகுமுறைகளில் நம்பிக்கை கொண்டு இன்றய உலக ஒழுங்கின் நியதிகளை ஏற்றுக் கொண்டு அதன் வழி உழைத்து தமது தேசியத்திற்கு பங்களித்தவர்களாலே அன்றி மதவெறியில் திழைத்து நின்றவர்களும் 3ஆம் சக்தி ஒன்றால் அரசியல் இராஜதந்திரங்களை எல்லாம் வெட்டி விழுத்த முடியும் என நினைப்பவர்களாலல்ல. மத வெறியில் திழைத்து நிற்கும் யூதர்கள் மாறாக ஜெரூசலத்தை விட்டுக் கொடுக்க முடியாது முதல் ஏனைய மதரீதியான நிபந்தனைகளை வைத்து பிரச்சனையை இன்றும் இழுத்துக் கொண்டிருப்பவர்கள்.

நிச்சயமாக மேற்குல விஞ்ஞானிகளிற்கு அவர்களது சமூகத்தில் பெரும்பான்மையாக தாக்கம் செலுத்தும் கிறீஸ்தவ மதத்தோடுதான் முரண்பாடு நடைமுறையில் தோன்றும் ஏனைய மதங்களோடு அல்ல. அதேபோலவே ஒவ்வொரு சமூகங்களின் அறிவியல்ரீதியான முன்னேற்றத்திற்கு அதன் பெரும்பான்மையான மதம் தான் தாக்கம் செலுத்தும் தடையாக இருக்குமே அன்றி வேறு மதங்களாக இருக்க முடியாது. சமூக முன்னேற்றத்திற்கு எது தடையாக இருக்கோ அதை அந்தந்த சமூகத்து பகுத்தறிவாளர்கள் எதிர்கொள்கிறார்கள். இது ஒரு குறித்த மதம் பற்றிய பிரச்சனை அல்ல.

Link to comment
Share on other sites

கடவுளை இகழ்ந்துநீ ..

எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்

கடவுள் உள்ளாரா இல்லையா என்று சந்தேகிப்பதை விட கடவுளாய் எதனை அல்லது எவரை நினைக்கின்றோம் என்பதை நாம் கவனித்தல் நல்லது. இந்தக் கடவுள் நம்பிக்கை என்பதே வீணானது என்றும் தீமையை மட்டுமே பயப்பது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் தாங்கள் வாழுகின்ற சூழ்நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மத நம்பிக்கை கொண்ட மக்களின் மத்தியில் நிலவுகின்ற மத வர்த்தகர்களாகிய மூடநம்பிக்கையில் சுயநலம் பேணுகின்ற கள்ளர்களை மட்டுமே முன்வைத்துச் சிந்தித்துக் கொண்டு, முழு உலகையுமே அந்த வட்டத்துக்குள் வைத்து பழி தேடி நிற்பதும் வைது மகிழ்வதுமாக எழுதிப் பேசி மகிழ்வதைக் காண தொட்டிக்குள் நீந்தும் மீன் சமுத்திரத்தை அளந்து விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு மருகுவதற்கே ஒப்பானதாக இருக்கின்றது.

திட்ட வேண்டும். தீமைகளைத் திட்ட வேண்டும். சாட வேண்டும். அநீதிகளைச் சாட வேண்டும்.

காட்சிகளின் பொய்மைகளை உணர்வுகளின் மெய்மையுடன் ஒப்பிடுவது நியாயமல்ல. மதங்களுக்குப் பந்தம் பிடித்து ஆடுவது எத்துணை தவறாகுமோ அதற்குக் கிஞ்சித்தும் குறையாத தவறுதான் காக்க வேண்டிய நம்பிக்கைகளை மறுத்துத் தள்ளுவதுமாகும்.

மக்களுக்குள் நல்லெண்ணங்களும் ஒழுக்க நம்பிக்கைகளும் கடவுள் நம்பிக்கையினால் துளிர்விடவும் நிலை பெறவும் வழியுண்டு என்பதை ஒரு மதவியாபாரி சொன்னால் சந்தேகிப்பதில் நியாயமிருக்கலாம். ஆனால் சர்வ சாதாரணமான, எதுவித எதிர்பார்ப்புமே இல்லாத ஒரு மனிதன் அதைச் சொன்னால் அவனிடம் சந்தேகம் வர நியாயமே இல்லை. காரணம் அது அவனது சொந்த வாழ்க்கையின் பதிவுப் புத்தகத்தில் அவனது அனுபவங்களாகப் பல பக்கங்களில் நிச்சயம் பதிவாகி இருக்கக் கூடும்.

சும்மா கடவுளைக் காட்டடா என்றால் அது முடியாதுதான் உணர்ந்து பாரடா என்று சொன்னால் அதைச் செய்யும் தனித்துவமான ஒரு தகுதி தேவைப்பட்டாலன்றி அது சாத்தியமே அல்ல.

இன்றைய உலகை ஆட்டிப் படைக்கின்ற இயற்கை அழிவுகளின் மத்தியிலும் இறைவனை உணருபவர்கள் அந்த அழிவுகளுக்கிடையிலேதான் இருக்கின்றார்கள். உணர்ந்து அடையாளம் காட்டுகின்றார்கள். சும்மா வெளியிலிருந்து கொண்டு வேடிக்கையாக நையாண்டி செய்வர்களுக்கு அந்த உணர்வின் தாற்பர்யம் புரியாமலிருக்கின்றது பரிதாபத்துக்குரியது என்று மட்டும்தான் சொல்ல முடியும்.

கடவுளை நம்பினவர்களின் இடங்கள்தானே அதிகம் அழிந்துள்ளன என்று வாதித்து கடவுள் நம்பிக்கை வீண் என்னும் வாதத்தை வைக்கையிலே அதற்குள் அகப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அந்த அவல நிலையிலும் ஏன் அந்த நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கின்றார்கள்?

அதுதான் மடைமையா?

அழிந்த பின் காரணம் தேடிக் கண்டு பிடிக்கும் அறிவியலுக்கு அது வருவது தெரிந்த பின்னும் தடுக்கின்ற ஆற்றல் இல்லாமல் இருப்பதை எப்படி அழைப்பது?

நாத்திகம் மனித உருவில் தேடி ஏமாறுகின்ற இந்தக் கடவுள் ஒரு வேளை அதே உருவிலே வந்து தானே இதைச் செய்த கடவுள் என்று சொன்னாரென்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? அவரைப் பிடித்து சித்த சுவாதீனமற்றவர்களின் மருத்துவ மனைக்குள் தள்ளி அடைப்பார்கள். காரணம் அந்த நம்பிக்கைக்கு உண்மைகளை ஏற்கின்ற சக்தியில் சற்று வலம் குறைந்தே இருப்பதனால்தானே!

"மலரை முகர்ந்து மகிழ்பவனை „அந்த மணத்தைக் காட்டு!“ என்று கேட்டால் அவனால் அது முடியாது. அதற்காக மணம் என்பதே இல்லை என்பதா? உணர்ந்தாலன்றி இயலாத இந்தச் சிறிய விடயத்தை இந்த விடயத்திலும் வைத்துச் சிந்திப்பதில் மடைமையென்ன இருக்கின்றது? மிகவும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் நாத்திகவாதிகளின் கண்கள் அவர்களின் சிறிய வட்டத்தில் நடக்கின்ற மதவேட நயவஞ்சகங்களை மட்டுமே முன்வைத்துச் சிந்திப்பதும் அதை வைத்து மதநம்பிக்கஇயாளர்களின் எல்லா சொற்களும் செயற்பாடுகளுமே பிழையானவைதான் என்று நிரூபிக்க முயல்வதும் புலம்பெயர் உலகில் தற்குறிகளையும் பகுத்தறிவாளர்களாகத் தலைக்கனம் கொள்ள வைப்பதைக் கவனிக்க வருத்தமாகவே இருக்கின்றது.

சுனாமி முதல் அனைத்துப் புதிய அழிவுகளின் அத்திவாரங்களும் இறைவன் அனுப்புகின்ற தண்டனைகளல்ல. இறைவனாகிய இயற்கை ஏற்கனவே அமைத்து, வகுத்து, முடித்து வைத்திருக்கின்ற முறைமைகளைச் சீண்டிப் பார்க்கும் மனித அறிவியலின் தலைதெறித்த தான்தோன்றித்தனங்களினால் விளைந்து வருகின்ற எதிர்விளைவுகள் மடடுமேயாகும்.

முழு உலகமுமே அழிவுகளை வர வர எதிர் கொள்ளவே போகின்றன. நம்மையே கேட்காமல் நாமே வகுக்காமல் நமது உடல் இயங்குகையில் அதைத் தவறாக வழி நடத்தினால்தானே நோய்கள் வெல்லுகின்றன? பலவீனம் வராதபடிக்கு தடுத்தாலும் இறப்பைத் தடுக்க இயலுமா?

மூச்சை நிறுத்திச் சாவை நிகழ்த்தும் இயற்கையின் வழிநடத்தலில் அடுத்த சந்ததிக்கான இடைவெளி ஏற்படுத்தப்படுவதை எவராலாகிலும் அறிவியலால் தடுக்க முடியுமா?

தன் அளவே தெரியாத நிலையில் உலகளவை மாற்றிட நினைப்பதில்தான் மடைமையின் வித்தே இருக்கின்றது. காரணமின்றேல் காரியமில்லை என்பது சும்மா கதையல்ல அனுபவத்தின் படிக்கல் அது.

அந்த வழியில் பார்த்தால் அழிவுகளுக்கெல்லாம் அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் கேலி செய்து தேடியலையும் இயற்கையான கடவுளின் உருவிலேயே பதில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்லலாம்.

கடவுளை இகழ்ந்துநீ தலைதெறித்தால்

உன்விரலால் உன்கண்ணைக் குத்த வைப்பார்

உடலமும் உன்னாலே இயங்கவில்லை

உனைக் கேட்கா துனக்காக இயங்கிக் கொள்ளும்

கடவுளும் இயற்கையை அப்படித்தான்

கண்காணா தியக்குதல் உணர வேண்டும்

கடவுளின் இயக்கத்தில் பிழை வகுத்தால்

அழிவொன்றே நிலையாகும் ; புரிதல் வேண்டும்.

http://tamilamutham.net

Link to comment
Share on other sites

கலைஞன் சொல்லுறது சரிபோலத்தான் படுது!!

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

இணைபிரியாத இறைவனை மறந்தனையோ

இணைபிரியாத இறைவனை மறந்தனையோ - உனை

ஈன்றவர் முறைமை மீறவும் துணிந்தனையோ - உனை

ஈன்றவர் முறைமை மீறவும் துணிந்தனையோ - உன்

மொழியறிவாலே பலபேர் அறிவு வீணே பொய்த்ததுவோ

மொழிதான் விளையாடியதோ?

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

கனவிலும் மறவா கடவுள் நினைவுடனே

கனவிலும் மறவா கடவுள் நினைவுடனே - உன்

கண்டறியாத விசமக் கருத்துடனே - மன

வேதனை என்னும் தீயதுசூழ வெந்தே வாழ்வதா - இது

நன்றோ மானுடா...

எல்லாம் மாயைதானா - வேத

நூல்கள் யாவும் வீணா

மனித ஜென்ம வாழ்வு - இனி

சீராய் போமோடா?

:D :D

சோழின் அங்கிள் உது நீங்கள் எழுதினதோ? நல்லா இருக்கிது.. :huh::D

நாரதர் அண்ணை... கடவுள் மாயையோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனா.. எண்ட கவலை, பயம் எல்லாம் கண்டபடி சிந்திச்சு நடமுறை வாழ்க்கையில இருந்து நான் விலகிபோய் விடக்கூடாது என்பதே.

நான் இதுக்குமேல உதுக்க விவாதத்துக்கு வர இல்ல. அப்புச்சாமி மாயை எண்டு ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

அப்புச்சாமி மாயையாகக் கூட இருந்துவிட்டு போகட்டும். அது எனக்கு பிரச்சனை இல்லை. ஐ லவ் யூ அப்புச்சாமி.. கர்த்தரே இந்தப் பாலகர்களை மன்னிப்பீராக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தில் இயற்கையாக இருப்பது எல்லா விலங்குகளிலும் இருக்கும் பயன் என்பதை அடிப்படையாகக் கொண்டு மனிதரால் மனிதருக்காக கட்டியெழுப்பட்டதே அன்றி வேறொன்றும் இல்லை. இதற்கு அப்பால் மதத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் மனிதன் உருவாக்கிய மொழி, கலை, கலாச்சாரம், கல்வி, வேலை, பொருளாதாரம், தேசியம், அரசு, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, அரசியல், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றவை எவ்வாறு செயற்கையானதோ அப்படி செயற்கையானது தான். அந்த செயற்கைத்தன்மையை புனிதம் கடவுள் என்பவற்றால் அச்சுறுத்தி மூடிமறைப்பது தவறு என்பது தான் பகுத்தறிவாளர்களின் வாதம். அதை நேர்மையாக செயற்கையானது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தனிமனிதர் தெரிவிற்கு ஏனையவை போன்று விடுங்கள் அந்த மதம் என்ற செயற்கையையும் ஏற்றுக் கொள்வதா விடுவதா என்று.

டாக்டர் பட்டம் முதல் ஏனைய பட்டப்படிப்புகள் எவ்வளவு செயற்கையானது என்பதை அறிவிற்கு அன்றி பட்டத்திற்கா நேரம் செலவிட்டுப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டம் என்பதோடு அறிவும் வரும் அல்லது பட்டம் இருந்தால் அறிவு இருக்கு என்பவர்கள் மாயையில் தான் இருக்கிறார்கள். அதுபோலவே சமூகத்தின் அடிமட்டம் என்பதும் செயற்கையானது தான். மற்றவர்களை சமூகத்தின் அடிமட்டம் உயர்மட்டம் என்று தரப்படுத்துவதும் அவரவர் தமது மாய உலகில் இருந்து கொண்டு தான்.

குறுக்காலபோவன் என்பவரின் வாதம்.. எப்படி இருக்குன்னு பாருங்க.., நாங்கள் சொல்கிறோம்.. மனிதன் இயற்றியுள்ள செயற்கைச் சூழலில் எல்லாம் மாயையே என்று. மதம் கடவுள் என்பதெல்லாம் மனித சிந்தனையின் வெளிப்பாடே அன்றி இயற்கையினதல்ல என்று. மாயைத் தனம் தான் பல சந்தர்ப்பங்களில் மனிதன் இயற்றியுள்ள மாயைச் சூழலில் மனிதனை மனிதனாக வாழ வைக்க உதவி இருக்கிறது. மனிதனின் சிந்தனைக்கு திசைகாட்டி வந்திருக்கிறது. அப்படி மாயையில் இருந்து விடுபட வேண்டின் எல்லாவற்றையும் திறந்திட்டு.. துறவுக்குத்தான் செல்ல வேண்டும். இயற்கையோடு ஒட்டி வாழ்வேன் என்று..!

நாம் சொல்வதில் இருந்து எடுத்துக் கொண்டதையே நமக்குத் திருப்பிச் சொல்கிறார் குறுக்காலபோவன்.. இதுதான் இவரின் வாதம்...! டாக்டர் பட்டமும் மாயையே என்று இனங்காட்டி.. அந்த மாயையை உணராது அதைக் காவிக் கொண்டு.. கடவுள் மாயை என்று வலியுறுத்தும் நகைப்புக்கிடமான மனித சிந்தனையை இனம் காட்ட நாம் விளைய, குறுக்காலபோவனும்.. அதையே இறுதியில் செய்கிறார்...! நல்லது. அவர் இப்போ தனக்காக வாதிடுகிறாரா.. இல்லை எமது வாதத்துக்கு பக்கபலமாக இருக்கிறாரா...??! :D:huh:

அடிமட்டம் என்பது மனிதன் இயற்றியுள்ள செயற்கைத்தனமான சூழலில் உண்டு. அது இயற்கையினதல்ல. இன்றைய உலகில் மனிதன் இயற்கையின் விதிக்கு அப்பால் மனிதன் இயற்றியுள்ள மாயைச் சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது அடிமட்டம்.. விடுதலையற்ற மக்கள்.. அடிமைப்பட்ட இனம் என்பதெல்லாம் வெளிப்படும். காரணம்.. மனித இயற்றுகைகள் மனிதரிடையே மனிதரை சமனாக மதிக்கவில்லை.. என்பதால். ஆனால் இயற்கை அப்படியன்று. அது எல்லா மனிதரையும் ஒரே வகையில் வைக்கிறது..! மனித மாயை தந்த அளவுகோல்களை வைத்துக் கொண்டு மனிதன் தோற்றுவித்துள்ள செயற்கைத்தனமான உலகில் வாழும் நாம்.. அவற்றில் இருந்து 100% விடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில்... மனிதனை மனிதன் சமனாக மதிக்கவாவது கோர வேண்டிய நிலை இருப்பதுடன் மனித அளவுகோல்களால் மனிதர்கள் எல்லாம் சமனாக மதிப்பிடும் படியான நிலையை உலகில் உருவாக்க வேண்டும் என்பதைக் கோருவதே நியாயம். அதுவரை மனிதன் இயற்றியுள்ள மாயைத்தனமான சமூக அளவுகோல்களால் மனிதன் பிரித்தாழப்படுவது தவிர்க்க முடியாதது. அது பல மட்டங்களில் பல பரிமானங்களில் விரிந்து கிடக்கிறது. அதன் பயனாய் எழுவதே அடிமட்டம்... வகுப்புப் பிரிவினைகள்.. என்று எல்லாம். இவை மனிதன் தன்னைச் சுற்றி தானே உருவாக்கியுள்ள மாயைத்தனமான சூழலால் விளைந்ததே.. அன்றி இயற்கையினதல்ல..! கடவுள் என்பதனதல்ல... அதுவும் மனிதனின் சிந்தனை தந்த மாயையே தான்..!

கடவுள் என்பதை இயற்கையாகக் காண்பவனே உண்மையில் மாயை கடந்து கடவுளை (இயற்கையை) தரிசிக்கிறான்..!

கடவுளை மட்டும் மாயை என்பதாக இனங்காட்டுவதைத்தான் நான் இங்கு தவறானது எங்கிறேன். கடவுள் மட்டும் மாயை அல்ல. மனிதன் இயற்றியுள்ள செயற்கைச் சூழலில் எல்லாமே மாயைதான். அதை உணராமல் நாம் கடவுள் என்ற மனித சிந்தனையை மட்டும் மாயை என்று கூறிக் கொண்டு அதைப் புனிதமில்லை என்பது தவறு..!

வாழும் பூமி எல்லாமே இயற்கையின் சொத்தாக இருக்க.. குறுக்காலபோவன் மட்டும் ஏன் தாயகத்தில் வாழாமல் பிரித்தானியாவில் வாழ விரும்புறார். காரணம்..வாழ்க்கைச் செழிப்பு என்ற ஒரு மாயை அவருக்குள் குடிகொண்டிருப்பதால். இப்படி வாழ்ந்தால் அது கூடிய சந்தோசம் என்ற சிந்தனையை அச்சூழல் அவருக்குள் ஏற்படுத்தி உள்ளதால்.. அவர் இந்த மாயைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்து வாழ விளைகிறார். அப்படித்தான் கடவுள் என்பதையும் புனிதமாகக் காண்பவன் மனதளவில் உணரும்.. நிம்மதிக்காக சந்தோசத்துக்காக.. கடவுள் என்ற மாயை நம்புவது தவறன்று. ஒரு நொடியில் சீரழியக் கூடிய மேற்குலக செழிப்பை உண்மை என்று நம்ப வேண்டும்... ஆனால் கடவுள் என்றதை மட்டும் மாயையாக உணர வேண்டுமாம்...???! என்ன மக்களின் காதில் எத்தின கிலோ பூச்சுத்திற திட்டம் போட்டிருக்கிறீங்க...??!

மனிதர் நாம் மனித சிந்தனை கட்டி வளர்த்துவிட்ட மாயை நிறைந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையை விட்டு நாம் பல தூரம் விலகி வந்துவிட்டோம். மரணம் வரை அதற்குள் இருந்துதான் எமது மகிழ்ச்சி.. துக்கம்.. துன்பம்.. என்று எல்லாத்தையும் மாயை காட்டுவதற்கினங்க பெற்று வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 1000 மாயைகளோடு கடவுளும் ஒரு மாயையாய் இருந்து மனிதனை வழி நடத்திட்டுப் போகட்டன் விடுங்களன்..! இவ்வளவு மாயைகளை மறைச்சுக் கொண்டு விஞ்ஞானத்தால் கடவுள் என்ற மனித சிந்தனை தரும் மாயை மட்டும் தேடல் செய்வதன் நோக்கம் தான் என்னவோ..??! இருக்கிறது.. மேலும் மேலும் மனிதரை மாயைக்குள் கட்டி வைக்கத்தான் இதுவே அன்றி மனிதரை மாயையில் இருந்து விடுவிக்க வேண்டின்.. எல்லோரும்.. புத்தன் சரணம் கச்சாமே என்று கொண்டு.. மரநிழல்களை நாட வேண்டியதுதான் பாக்கி...! குறுக்காலபோவன் செய்யத் தயாராமோ...??! ஆக தாங்கள் மட்டும் மனித உருவாக்கியுள்ள மாயை உலகில் சுகிக்க வேண்டும் கடவுள் என்ற மாயை நம்புறவனை மட்டும் பழிக்க வேண்டும். இதுவும் ஒரு மாயைத்தனத்தின் வெளிப்பாடே..!

அறிவியல் என்பது இயற்கையை ஆய்வு செய்து விளங்கிக் கொள்வது..! இயற்கையின் பெளதீக இரசாயன விடயங்களை இனங்கண்டு மனிதனை மேலும் மேலும் மாயைச் சூழலுக்குள் கட்டி வைக்க அவற்றைப் பாவிப்பதே இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தலையாய நோக்கம்..! அதுதான்.. ரீவி இல்லைன்னா வாழ்க்கை இல்ல.. என்ற நிலைக்கு மக்களைக் கொண்டு வந்திட்டமில்ல...! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் எல்லோரும் மதவாதிகள் அல்ல. இஸ்ரேலின் உருவாக்கத்திற்கும் அதன் இன்றைய இருப்பிற்கும் உறுதுணையாக இருப்பது அறிவியல் விஞ்ஞானரீதியான அணுகுமுறைகளில் நம்பிக்கை கொண்டு இன்றய உலக ஒழுங்கின் நியதிகளை ஏற்றுக் கொண்டு அதன் வழி உழைத்து தமது தேசியத்திற்கு பங்களித்தவர்களாலே அன்றி மதவெறியில் திழைத்து நின்றவர்களும் 3ஆம் சக்தி ஒன்றால் அரசியல் இராஜதந்திரங்களை எல்லாம் வெட்டி விழுத்த முடியும் என நினைப்பவர்களாலல்ல. மத வெறியில் திழைத்து நிற்கும் யூதர்கள் மாறாக ஜெரூசலத்தை விட்டுக் கொடுக்க முடியாது முதல் ஏனைய மதரீதியான நிபந்தனைகளை வைத்து பிரச்சனையை இன்றும் இழுத்துக் கொண்டிருப்பவர்கள்.

சென்ற வருடம் என நினைக்கின்றேன். இந்தியாவில் பிரச்சனைகள் காரணமாக ஓடிவந்த யூதர்களை, உண்மையான யூதர்களாக ஏற்றுக் கொள்கின்ற சடங்கு நடந்தது. அவர்களுக்கு ஹப்ரு மொழி பயிற்றிவிக்கப்பட்டும், யூடிஸ் ஆக மதமாற்றம் செய்யப்பட்ட பின்னருமே, அவர்களை யூதர்களாக ஏற்றுக் கொண்டார்கள். எனவே ஒருவன் யூதனாக மாற மதம் நிச்சயம் அவசியம்.

ஒருவருடைய வாழ்க்கையில் மொழியை விட மதம் தான் ஆழமாக ஊடறுக்கின்றது. இந்தியாவில் இருந்து வேலைக்கு அமர்த்தப்பட்ட கஜானாத் தமிழர்கள் சிலபேரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனால் அவர்கள் இந்துக்கள் என்ற அடையாளம் தான் குழுமமாக, தங்களின் நாட்டில் ஒரே இனம் என்ற எண்ணத்தைக் கொண்டு வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. இது அவர்களை மட்டுமல்ல, தென்னாபிரிக்கா, மொரிசியஸ், பிஜித் தமிழருக்கு எல்லாம் பொருந்தும். அவர்கள் இன்றும் இனக்குழுமமாக வாழ மொழிi விட, மதம் தான் துணை புரிகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.