Jump to content

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.


Recommended Posts

நெடுக்காலபோவான்!

மனு தர்மம் பற்றி உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

உங்களுக்கு என்ன நடந்தது?

இத்தனை காலம் வாதங்களை கெட்டிக்காரத்தனமாக திசை திருப்பி இந்து மதத்தை காப்பற்றிக் கொண்டிருந்தீர்கள்

ஆனால் அண்மைக் காலமாக நீங்கள் தருகின்ற கருத்தக்களும், கட்டுரைகளுமே இந்து மதத்தின் முகமூடியைக் கிழிப்பதற்கு உதவி செய்கின்றன.

இப்பொழுது மனுதர்மம் பற்றிப் பேசுகின்றீர்கள். இந்து மத நம்பிக்கையாளர்கள் கூட மனு தர்மத்தை ஆதரித்துப் பேசுவதை கைவிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் மனுதர்மத்திற்கு ஆதரவாக நீங்கள் பேசினால், அதன்பிறகு உங்களால் எந்த ஒரு சமாளிப்பையும் செய்ய முடியாது போய்விடும்.

மனுதர்மம் அத்தனை மோசமானது. ஒரு நல்ல மனிதன் மனுதர்மத்தைப் போற்ற மாட்டான்.

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

மனு தர்மம் பற்றி உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

உங்களுக்கு என்ன நடந்தது?

இத்தனை காலம் வாதங்களை கெட்டிக்காரத்தனமாக திசை திருப்பி இந்து மதத்தை காப்பற்றிக் கொண்டிருந்தீர்கள்

ஆனால் அண்மைக் காலமாக நீங்கள் தருகின்ற கருத்தக்களும், கட்டுரைகளுமே இந்து மதத்தின் முகமூடியைக் கிழிப்பதற்கு உதவி செய்கின்றன.

இப்பொழுது மனுதர்மம் பற்றிப் பேசுகின்றீர்கள். இந்து மத நம்பிக்கையாளர்கள் கூட மனு தர்மத்தை ஆதரித்துப் பேசுவதை கைவிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் மனுதர்மத்திற்கு ஆதரவாக நீங்கள் பேசினால், அதன்பிறகு உங்களால் எந்த ஒரு சமாளிப்பையும் செய்ய முடியாது போய்விடும்.

மனுதர்மம் அத்தனை மோசமானது. ஒரு நல்ல மனிதன் மனுதர்மத்தைப் போற்ற மாட்டான்.

மனு என்றால் என்ன..??!

மனு என்பதற்கு நீதியை வகுத்தல் அல்லது உரைத்தல் என்ற ஒரு பொருள் உண்டு. மானுட நீதியை வகுக்கத்தக்க / உரைக்கத்தக்க தர்மங்கள் நிறைந்தது இந்து மதம் என்பதே எனது எழுத்தின் பொருள்..!

மனுக் கொடுத்தல் என்போம். அதாவது நீதியை உரைக்கும் ஓலையைக் கொடுத்தல் என்று பொருள் கொள்ளலாம் அதில்..!

இந்து மதம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன (கிமு 2000 தொடங்கி 1000 ஆண்டுகள் கால இடைவெளியில்). ஆனால் காலத்தே சுமந்து வரப்பட்ட சமூகப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மனுவால் (தனி மனிதன் ஒருவர் என்று கொள்ளப்படுகிறது) எழுதப்பட்ட "மனுதர்மம்" என்ற நூலின் அடிப்படையில் (இது எழுதப்பட்டது கிமு 200 ஆண்டுகளுக்கு முன்னரே) நீங்கள் இந்துமதத்தின் கருத்துருவாக்கத்தை செய்ய விளைவது மிகத்தவறான செயல்..!

இந்து மதம் பிராமணர்களுக்கோ பார்பர்னியருக்கோ மட்டும் சொந்தமானதல்ல..! அது மானுடர் அனைவருக்கும் பொதுவானது..! அதன் நீதி என்பது உலகில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவின் நிலையையும் சமனாகக் கருதி எழுகிறது..!

இந்து மதத்தின் உண்மையான உட்பொருளை திரிபுகளால் களங்கப்படுத்துவதில் இரு தரப்பினர் முன்னிற்கின்றனர். ஒருவர் இந்துமதமே தமதென்று சொல்லுவோரும்.. அதனடிப்படையில் இந்துமதத்தை எதிர்ப்போரும் (இரண்டாமவர்).

ஆனால் இந்துமதம் அதையெல்லாம் தாண்டி.. மானுட தர்மமாக (மனுதர்மம் என்பதைச் சிலர் தவறாக இனங்காட்ட விளைவதால் அதை எதிர்காலத்தில் எழுதுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். அதுமட்டுமன்றி மனு இயற்றிய மனுதர்மம் பற்றி இந்துமதக் கோட்பாடுகளுக்குள் அதைக் கலப்படும் செய்யாது விவாதிக்க நான் தயாராகவே இருக்கின்றேன். மனு இயற்றிய மனுதர்மத்துக்கும் இந்துமதத்தின் கோட்பாட்டியலுக்கும் இடையில் பலமான வேறுபாடுண்டு. எனினும் மனுதர்மத்தை எழுதியவர்கள் இந்துமதக் கோட்பாட்டினை அறிந்திருந்து அதை தமது சொந்தக் கருத்துக்களுடன் கலப்படம் செய்து பொதுகருத்துக்களாக வெளியிட்டிருக்கலாம். இன்று கூட புத்தரின் போதனைகளில் இந்துமதக் கோட்பாடுகளை இனங்காண முடிகிறது.. அப்படியாக. ஆனால் மனு இயற்றிய மனுதர்மச் செய்யுள்களுக்கு விளக்கம் அளிப்போராலேயே மனுதர்மம் கூட தவறாகப் புரியப்பட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளதாகவும் ஒரு பலமான கருத்தியல் உண்டு..!) உலகில் பரிணமித்திருக்கிறது. திருக்குறள் போல இந்துவும் அதன் அம்சமான சைவமும் எமக்களித்த மானுட தர்மக் கோட்பாடுகள் விலைமதிக்க முடியாத செல்வங்களாகும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

இராவணன் சிவ பக்தன். சிவன் இந்துக்களின் கடவுள்களில் முதன்மையானவர். சைவத்தின் முழுமுதற் கடவுள்.. என்று அடையாளமிடப்பட்டுள்ளார்..!

அதுமட்டுமன்றி இராவணன் சிவபூசை செய்யும் அந்தணனும் கூட..! :lol::rolleyes:

சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள் இராவணனும் சைவன் ஈழத்தில் பெரும்பாண்மையாணவர்களும் சைவர்கள் இது பொருள்பட குறுக்ஸ் பேசி இருகிறார் என நினைகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள் இராவணனும் சைவன் ஈழத்தில் பெரும்பாண்மையாணவர்களும் சைவர்கள் இது பொருள்பட குறுக்ஸ் பேசி இருகிறார் என நினைகின்றேன்

சைவமும் இந்துவும் ஒரு வேறு மதங்கள் அல்ல. அவை இரண்டும் கோட்பாட்டியல் அடிப்படையில் பல ஒற்றுமைகளைக் கொண்டவை என்பதால் தான்.. சைவம் இந்துமதத்தின் ஓர் அங்கமாகியுள்ளது.

இது தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டி விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. :lol:

Link to comment
Share on other sites

அண்ணாமார்களினை மீறி இந்த தங்கை கதைக்கமாட்டாள். ஆனாலும்

ஆன்மீக பாதை வேறு, மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சமயப்பாதைகள் வேறு.

காரணம் சமயவழிபாடு வேறு. அது ஒரு வாழ்க்கைமுறை. அதில் இருக்கும் கதைகள் வாழ்க்கையினூடு பினைக்கப்பட்ட கதைகள். விமானங்கள் என்பவை ஒரு கற்பனா பாத்திரம், உலகத்தில் வேறு கிரகங்கள் இருக்கின்றன என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வானியல் சாஸ்திரங்கள் சொல்லிநிற்கின்றன. ஆகவே இந்த உலகத்தினை பார்த்து, மனிதன் தன் அனுபவத்தினையும் கோர்த்து, பல தரப்பட்ட மக்கள் சேர்ந்து ஒரு குழுமாக, வாழையடி வாழையாக வாய்மூலம் சொல்லப்பட்டு வந்த கதைகள், பின்பு கிரேக்கமக்களின் விஞ்ஞான தொழில்நுற்பத்தினையும் அடிப்படையாக வைத்து புனையப்பட்டது என்றே நான் விளங்கிக்கொள்ளுகின்றேன்.

இப்போது எமக்கு பிரச்சனை என்ன? மதம் என்பதும் அதனை ஒட்டிய மனிதனின் கற்பனை பாத்திரங்கள், கதைகள் எல்லாம் மனிதனால் படைக்கப்பட்டது என்பது தானே. ஆம், அது உண்மை.

கிருஸ்ணபகவான் கீதையில் சமயத்தினைப்பற்றி கூறினாரா? இல்லை

புத்தர் சம்யத்தினைப்பற்றிக்கூறினார

Link to comment
Share on other sites

அண்ணாமார்களினை மீறி இந்த தங்கை கதைக்கமாட்டாள். ஆனாலும்

ஏன் நீங்கள் கதைக்கக்கூடாது? எல்லாரும் எல்லாவற்றைப் பற்றியும் கதைக்கலாம்,தராளமாக, உங்கள் கருதுக்களை வரவேற்கிறேன்.உங்கள் சிந்தனையில் இருக்கும் சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகிறேன், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆன்மீக பாதை வேறு, மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சமயப்பாதைகள் வேறு.

ஆன்மீகப் பாதை என்றால் என்ன? அது யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அதற்கும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சமயப் பாதைக்கும் என்ன வித்தியசம்?

சிவன் என்ற கதாபாத்திரமும், விக்கிரக வழிபாடுகளும் ஒரு சமயத்தில் தேவைக்காக உருவாக்கப்பட்ட கொன்செப்ட். ஒரு மனதின் நெறிப்படுத்தலுக்கு, புனிதமான உறவு முறை, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அப்பு, ஆச்சி, மாமா,மாமி மனைவி, இரண்டு மனைவி, பிரமச்சாரிபோன்ற பாத்திரங்களை அமைத்து, ஒருத்தரை ஒருத்தர் அடித்துத்திண்ணும் இந்த உலகில், அன்பை வளர்த்து, ஒரு குடும்ப சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்ததுதான் இந்துமதம்.

இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்வதை ,அன்பை வளர்த்து ஒரு குடும்பச் சூழலை வளர்க்கும் என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று விளங்கவில்லை.மேலும் மற்றைய மதங்களைப் பின் பற்றுவோரோ அல்லது மதங்களையே பின் பற்றாதாவர்களும் அன்பாகவும் குடும்பம் மனைவி, பிள்ளைகள் என வாழ்வதை எங்கனம் விளங்கப்படுத்துவீர்கள்? உலகில் பல போர்களுக்கு மதமே மூல காரணாமாக இருப்பதுவும் மதத்தின் பெயரால் பல கொலைகள் நடப்பதை எங்கனம் விளக்குவீர்கள்? மதம் என்பது மனிதன் உருவாக்கிய ஒரு கொன்செப்ட் என்று முன்னர் வரையறை செய்திருந்தீர்கள்.ஆகவே இந்த மதம் என்பது நடைமுறைப் பிரயோகத்தில் சமூகத்தில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில ,மனிதன் தான் உருவாக்கிய இந்தக் கொன்செப்ட்களை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்.மனிதன் அவ்வாறு தான் முன் நேறினான்.கடவுள் என்னும் இல்லாத ஒன்றை வைத்து சட்டம் ஒழுங்கையோ பொது ஒழுங்கையோ நிலை நாட்ட வேண்டிய தேவை இப்போது இல்லை.சட்டம் ஒழுங்கைஈ நிலை நாட்ட அதற்கான நிறுவனங்களும் அரச அதிகாரமும் இருக்கிறது.ஆகவே காலவதியான நடைமுறையில் தீங்கு பயக்கும் கடவுள்,மதம் என்னும் கொன்செப்டுக்களை தூக்கி எறிவதே அறிவார்ந்த செயல் ஆகும்.

இந்த இந்துமதத்திற்கும் கடவுளுக்கும், ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருக்கும் எப்போது, அதை முறையாக வாழ்க்கையில் உபயோகிப்பவனுக்கு.

இன்று உலகில் என்ன நடைபெறுகின்றது.

கிருஸ்னர் காட்டிய கீதை வழியில், போக மனமே இல்லாதவன், அதை படித்து தன் மனதை ஒடுக்கி ஏதேனும் இந்த உலகத்திற்கு நன்மை செய்ய முடியாது, பொறுமை இல்லாது, அதைக்கூறிய கிருஸ்னரை கடவுள் என்று வணங்குகிறான். ஆனால் கிருஸ்ண தத்துவத்தினை மறந்துவிடுகின்றான்.

புத்த சமய போதனைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, புத்தரை வணங்குகிறான்.

இந்துமதத்தத்துவங்களை வாழ்க்கையில் பின்பற்றாமல் கோவிலகளினைக்கட்டி வியாபாரம் பண்ணுகின்றான். மதவெறி கொண்டு ஆடுகின்றான். காரணம் எல்லோரும் குறுக்கு வழியில் இல்லாத ஒரு கடவுளை இருக்கு என்று நினைத்து, அந்த கடவுளையே நேடிடையாக வணங்கத்தலைப்பட்டதால் தான். இங்கே தான் பாப்பனர் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். ஒரு சாதி இந்துமதத்தினை தம் குல விருத்திக்காக, பாவிக்க தலைப்பட்டார்கள். சாஸ்திரங்கள் என்ற போர்வையில் வாழ்க்கையின் அனுபவங்களை கோர்த்து எழுதிவைத்த கையுடன், சில சங்குகளையும் சொல்லி வைத்து ஊரை ஏமாற்றினார்கள்.

மதம் எவ்வாறு சமூகத்தில் தீங்கான வகையில் செயற்படுகிறது என்று கூறி உள்ளீர்கள். நடைமுறையில் சரிவராதா ஒன்றை ஏன் கட்டி அள வேண்டும். நடைமுறையில் சரிவருவதை உபயோகிக்க வேண்டும். பழமையான நம்பிக்கைகளைத் துறந்து அறிவியல் ரீதியான மனித அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் அமைந்த நடைமுறைகளை அரசு, சட்டம் ஒழுங்கு என்னும் நிறுவனங்கள் மூலமே அமுல் படுத்த முடியும், அவ்வாறு தான் உலகெங்கும் நடந்தும் வருகிறது.

Link to comment
Share on other sites

ஆன்மீகப்பாதையில் செல்பவனுக்கு சமயப்பாதை அவசியமில்லை. சமய வழிபாடு மனிதனால் உறுவாக்கப்பட்டது. ஞானத்தினைத்தேடுவதற்கு சமயம் சில வழிமுறைகளைச்சொல்லியிருக்கி

Link to comment
Share on other sites

//துன்பம்-இன்பம என்ற இரண்டு நிலைகளிலும் அமைதியாக ஒரு மனிதனால் இருந்து உயிருடன் இருக்கும் போது சொர்க்கத்தினை இந்த உலகத்தில் பெறவேண்டும். இது தான் கொன்ஸெப்ட் மதம் தோன்றுவதற்கு.//

சொர்க்கம்- நரகம் பற்றியும் ,மறுபிறவி பற்றியும் பேசும் இந்து மதம் நிச்சயமாகா இந்த உலகத்தைப் பற்றிப் பேசவில்லை.மதங்கள் தோன்றுவதற்கு பல்வேறு சமூகக் காரணங்கள் இருந்திருக்கலாம்.ஆனால் நான் சொல்வது இன்று மதம் என்பது தேவை இல்லாத ஒன்றாக ஆகி விட்டது என்பதையே.இன்று மதங்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஏற்கனவே பேசி விட்டோம்.தீமையான ஒன்றை காலவதியான் ஒன்றை இன்றும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஏன் அழ வேண்டும்?

//உண்மையாகவே, இயற்கையாகவே அமைதியாக இருப்பவன் கோவிலுக்கு செல்லத்தேவையில்லை.//

மத நம்பிக்கை உடையவர்களே அதிகம் அமைதி அற்று இருக்கின்றனர் இன்று.இயற்கையாகவே அமைதியாக இருப்பவன் கோவிலுக்குச் செல்லத் தேவை இல்லை, மதங்களைப் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை.ஒருவவனால் எவ்வாறு இயற்கையாகவே அமைதியாக இருக்க முடிகிறது.தேவையானது தமது சுய சிந்தனையைத் தெளிவாக அமைத்துக் கொள்வதே.சுய கட்டுப் பாடும் சுய சிந்தனையும் இருக்கும் ஒருவனுக்கு மதம் என்பது அவசியம் அற்றது.பண்டைய சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் மதங்கள் அந்தக் காலகட்டத்தின் நியதிகளையே கொண்டிருக்கின்றன.இன்று மனித உரிமைகள், மனித குணாம்சியங்கள்,ஒழுக்க நெறிகள் என்பன மாறி விட்டன.இவற்றை எந்த மதமும் உள்வாங்கவில்லை.ஆனால் மனித சிந்தனை, பொதுப் புத்தி ,அரசு, நீதி மன்றம்,சட்டவாக்கம், சட்ட அமுல் படுத்தல்கள் ,சர்வதேசிய நிறுவனக்கள் என்பனவற்றால் இவை இன்று நிறுவனப் படுத்தப்படுள்ளன.

இப்படியாக மனித நாகரிகத்தையும் சக வாழ்வையும் வலியுறுத்தும் சூழல் நிலவும் போது ,மனித சமூகமானது அமைதியான வாழ்வை வாழத் தலைப்படுகிறது,அவ்வாறான சூழலை நாடித் தான் இன்று நீங்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து உள்ளீர்கள்.

இன்னொரு தலைப்பில் சாந்தி ராமேஸ்வரன் எழுதிய உண்மைச் சம்பவம் நல்ல உதாரணம்.எவ்வாறு பண்டைய கால பழக்க வழக்கங்கள் நெறிகள் இன்று இங்கு பொருந்தாதனவாய் இருக்கிறன என்று.இன்று ஜேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தால் மனித உரிமைகளின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்தால் உந்தப் பெரியவர்கள் என்று சொல்லப்படும் காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவார்கள்.காட்டு

Link to comment
Share on other sites

(மற்றைய மனிதரை மதிக்கும் மனித உரிமை, சகோரத்துவம், சமத்துவம் என்னும் பொதுவான ஒழுங்கியலின் அடிப்படையில் வாழ்வதே உண்மையான அமைதியை எல்லா மனிதருக்கும் தர வல்லது.)

அண்ணா, சரி நீங்க ஒரு வசனத்தில சொல்லிப்போட்டீர்கள். ஒரு மனிதனை இந்த வழிகளில் செல்ல, எப்படி தூண்டலாம். சும்மா மனித உரிமை என்று சொல்லுகின்றோம். இத்தனை பெரிய நாடுகளிற்கு ஈழதமிழர்களினைப்பார்த்து ஒரு இரக்கம் வரவில்லை. இவர்கள் எல்லோரும் மதத்தினை சார்ந்தா இருக்கிறார்கள். பெரும் உலக தலைவர்கள். அப்போது இவர்களுக்கு இவற்றினை எப்படி அதாவது நீங்கள் மேலே சொல்லியவற்றை எப்படி சொல்லிக்கொடுப்பது. முடியாதண்ணா, சுயநலம் பார்க்காது இருப்பவனாலேயே இதுகளை கடைப்பிடிக்கமுடியும். ஒருவன் சாப்பிட வசதியில்லாது என் வீட்டுத்திண்ணையில் இருக்கிறான். நான் கடும் பசியில் வீட்டிற்குள் இருக்கிறேன். என் தாயார் எனக்கு வயராற உணவு தருகின்றாள். ஆசையான உணவு. அதில் நான் பாதியை வெளியே உக்கார்ந்திருக்கும், அந்த ஆளுக்கு கொடுத்துச்சாப்பிடவேண்டுமென

Link to comment
Share on other sites

(மற்றைய மனிதரை மதிக்கும் மனித உரிமை, சகோரத்துவம், சமத்துவம் என்னும் பொதுவான ஒழுங்கியலின் அடிப்படையில் வாழ்வதே உண்மையான அமைதியை எல்லா மனிதருக்கும் தர வல்லது.)

அண்ணா, சரி நீங்க ஒரு வசனத்தில சொல்லிப்போட்டீர்கள். ஒரு மனிதனை இந்த வழிகளில் செல்ல, எப்படி தூண்டலாம். சும்மா மனித உரிமை என்று சொல்லுகின்றோம். இத்தனை பெரிய நாடுகளிற்கு ஈழதமிழர்களினைப்பார்த்து ஒரு இரக்கம் வரவில்லை. இவர்கள் எல்லோரும் மதத்தினை சார்ந்தா இருக்கிறார்கள். பெரும் உலக தலைவர்கள். அப்போது இவர்களுக்கு இவற்றினை எப்படி அதாவது நீங்கள் மேலே சொல்லியவற்றை எப்படி சொல்லிக்கொடுப்பது. முடியாதண்ணா, சுயநலம் பார்க்காது இருப்பவனாலேயே இதுகளை கடைப்பிடிக்கமுடியும். ஒருவன் சாப்பிட வசதியில்லாது என் வீட்டுத்திண்ணையில் இருக்கிறான். நான் கடும் பசியில் வீட்டிற்குள் இருக்கிறேன். என் தாயார் எனக்கு வயராற உணவு தருகின்றாள். ஆசையான உணவு. அதில் நான் பாதியை வெளியே உக்கார்ந்திருக்கும், அந்த ஆளுக்கு கொடுத்துச்சாப்பிடவேண்டுமென

Link to comment
Share on other sites

நாரதரண்ணாவின் பேச்சால இந்த திரி சும்மா அதிருதில்ல. சபாஸ் ஆனாலும் அண்ணா சிலதுகளுக்கு மேலும் விளக்கம் தேவை. ஒரு குடும்பத்தில 6 பேர் இருக்கிறார்கள். ஆனால் சிறு வயதில் இருந்து வளரும் இவர்களில் வேற்றுமைகள் வருகின்றதே, ஒற்றுமையீனம் இருக்கிறதே? 5 பிள்ளை ஒழுங்கா இருக்க, ஏதோ ஒன்றுக்கு பிரச்சனை வருகுதே? தம்பி அண்ணனை அடிக்கும் வரை சமதர்மம் அங்கே தலைகீழாக இருக்கிறது. போட்டி இருக்கிறது, பொறாமை இருக்கிறது.

ஆனால் இதற்கு எதிர்மறையாக என்னுமொரு குடும்பத்தில் 6 பிள்ளைகளும் ஆளாளுக்கு அணுசரித்து ஒற்றுமையாக தம் குடும்பத்தினை கொன்டு செல்லிறார்களே. ஆனால் அவர்களுக்குள்ளும் அக்கா, அண்ணா, தம்பி பேதங்கள் உண்டு. தம்பிக்கு கொடுக்காது அண்ணா சில விடயங்களில் சமதர்மம் பார்க்காமல் நடந்தாலும், தம்பி அனுசரித்துப்போகின்றானே அந்த அனுசரிப்பு எங்கிருந்து வருகிறது. ஒரு தனிமனிதனின் அடக்கத்தில் இருந்தா அல்லது தாய் தகப்பன் சொல்லிக்கொடுத்த பழக்க வழங்கங்களில் இருந்தா?

ஆகவே இப்படிப்பட்ட குடும்பங்கள் சேரும் போது அது சமூகமாக மாறுகின்றது. வீடினுள் இருக்கும் இந்த பக்குவமாக அறிவு, வெளியே சமூகங்களில் ஊடுறுவும் போது அது சமூகங்களிடையே பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட ஒற்றுமையான சமூகங்கள் இருக்கும் இந்த தேசத்திலே ஏன் தமிழர்கள் மாத்திரம் அவதிப்படுகின்றார்கள். அவர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகளில் ஏதோ தவறு இருக்கிறதா? ஒருபோதும் ஒற்றுமையாக வாழ்வில்லையே? ஆனால் பல நாடுகளில் சண்டை சச்சரவுகள் தம் சமூகத்தினுள் இருந்தாலும். ஒரு சப்பிரதாய வழக்கங்களிற்கு உட்பட்டு அவர்கள் ஒற்றுமையாக வாழ்வில்லையா? இங்கே மதம் என்ற ஒரு வாழ்க்கை முறை சமூகங்களை இனைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்லுவது உதாரணத்துக்கு இந்தியாவில் பாப்பன சமூகம். பாப்பன சமூகம் மூளை கூடியுள்ள சமூகமாக இருப்பதற்கு அவர்கள் பழக்கவழக்கங்கள் காரணம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

Link to comment
Share on other sites

நாரதரண்ணாவின் பேச்சால இந்த திரி சும்மா அதிருதில்ல. சபாஸ் ஆனாலும் அண்ணா சிலதுகளுக்கு மேலும் விளக்கம் தேவை. ஒரு குடும்பத்தில 6 பேர் இருக்கிறார்கள். ஆனால் சிறு வயதில் இருந்து வளரும் இவர்களில் வேற்றுமைகள் வருகின்றதே, ஒற்றுமையீனம் இருக்கிறதே? 5 பிள்ளை ஒழுங்கா இருக்க, ஏதோ ஒன்றுக்கு பிரச்சனை வருகுதே? தம்பி அண்ணனை அடிக்கும் வரை சமதர்மம் அங்கே தலைகீழாக இருக்கிறது. போட்டி இருக்கிறது, பொறாமை இருக்கிறது.

ஆனால் இதற்கு எதிர்மறையாக என்னுமொரு குடும்பத்தில் 6 பிள்ளைகளும் ஆளாளுக்கு அணுசரித்து ஒற்றுமையாக தம் குடும்பத்தினை கொன்டு செல்லிறார்களே. ஆனால் அவர்களுக்குள்ளும் அக்கா, அண்ணா, தம்பி பேதங்கள் உண்டு. தம்பிக்கு கொடுக்காது அண்ணா சில விடயங்களில் சமதர்மம் பார்க்காமல் நடந்தாலும், தம்பி அனுசரித்துப்போகின்றானே அந்த அனுசரிப்பு எங்கிருந்து வருகிறது. ஒரு தனிமனிதனின் அடக்கத்தில் இருந்தா அல்லது தாய் தகப்பன் சொல்லிக்கொடுத்த பழக்க வழங்கங்களில் இருந்தா?

நீங்கள் சில விடயங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள், சற்றுத் தெளிவாகப் பார்ப்போம்.

முரண்பாடுகள் ஏன் வருகின்றன? வளங்கள் அறுதியானவை.வளப்பங்கீடு என்பது சமனாக நடைபெறாத போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.எல்லோருக்கும் சமனனான வாய்ப்புக்கள் வசதிகள் இருக்கும் போது சமத்துவம் ஏற்படுகிறது.இந்த சமத்துவம் தானாக ஏற்படுமா?இல்லை ஒவ்வொரு வரும் தமக்குத் தாமே எல்லாம் வேண்டும் என்று போட்டி போடும் போது இந்த சமத்துவம் அற்று விடுகிறது.இந்த சமத்துவத்தை நிலை நாட்ட ஒரு பொதுவான நியதி தேவைப்படுகிறது.இங்கு தான்ன அரசும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சட்டம் ஒழுங்கு என்பன வருகின்றன.இங்கே தாய் தகப்பன் என்று நீனீங்கள் உருவகப்படுத்துவது இந்த அரச அதிகாரம் தான்.

ஆகவே இப்படிப்பட்ட குடும்பங்கள் சேரும் போது அது சமூகமாக மாறுகின்றது. வீடினுள் இருக்கும் இந்த பக்குவமாக அறிவு, வெளியே சமூகங்களில் ஊடுறுவும் போது அது சமூகங்களிடையே பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட ஒற்றுமையான சமூகங்கள் இருக்கும் இந்த தேசத்திலே ஏன் தமிழர்கள் மாத்திரம் அவதிப்படுகின்றார்கள். அவர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகளில் ஏதோ தவறு இருக்கிறதா? ஒருபோதும் ஒற்றுமையாக வாழ்வில்லையே? ஆனால் பல நாடுகளில் சண்டை சச்சரவுகள் தம் சமூகத்தினுள் இருந்தாலும். ஒரு சப்பிரதாய வழக்கங்களிற்கு உட்பட்டு அவர்கள் ஒற்றுமையாக வாழ்வில்லையா? இங்கே மதம் என்ற ஒரு வாழ்க்கை முறை சமூகங்களை இனைக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்லுவது உதாரணத்துக்கு இந்தியாவில் பாப்பன சமூகம். பாப்பன சமூகம் மூளை கூடியுள்ள சமூகமாக இருப்பதற்கு அவர்கள் பழக்கவழக்கங்கள் காரணம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா?

குடும்பங்களுக்குள் எழும் முரண்பாடுகளைத் தீர்க்கவே இன்று நீதிமன்றங்கள் இருக்கின்றன.மனைவியை கணவன் அடிக்க முடியாத படி சட்டங்கள் இருக்கின்றன.அமுல் படுத்த காவற் துறை இருக்கிறது.

தமிழர்கள் ஆகிய நாம் மட்டும் அவதிப்படுவது எமக்கென ஒரு நியாயமான அரசு இல்லாததால்.எமது உரிமைகளைப் பாதுகாக்கிற சமத்துவத்தை நிலை நாட்டக் கூடிய அரசு ஒன்று இல்லாததால்.அது தான் புலிகளின் அடிப்படை அரசியற் குறிக்கோளாக 'சமதர்மத் தமிழீழம்' இருக்கிறது.

அடுத்தாக பார்ப்பன சமூகம் மூளை கூடிய சமூகம் என்னும் உங்கள் கருத்துக்கு வருவோம்.அறிவியல் ரீதியாக இது தவறான கருத்து என்பதை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு,வரலாற்றைப் பார்ப்போம்.

பார்ப்பனோர் என்போர் யார்?இவர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்கள் எங்கனம் சக்தி மிக்கவர் ஆகினர் என்று பார்த்தால் கிடைக்கும் ஒரே பதில் , இந்து சமயம் என்னும் மூட நம்பிக்கை தான்.

ஆரியர் என்று அழைக்கப்படும் மக்கட் கூட்டத்தினர் நாடோடிகள் ,அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து குடிப்பரம்பி பல்வேறு பிரதேசங்களிற்கு ஊடாக ஈற்றில் தென் இந்தியாவை வந்தடைந்தார்கள்.தொடர்ச்சியா

Link to comment
Share on other sites

மேலே எழுதப்பட்ட "மதம்", மதம் "சாரா" எனும் விவாதங்களுக்கு ஒன்றும் சொல்ல இல்லை. ஆனால் இந்த வார்த்தைக்கு மட்டும் சொல்ல ஒன்று இருக்கிறது.

சமதர்மமான ஒரு சமூகத்தை ?

அது இது :lol::(

Link to comment
Share on other sites

மேலே எழுதப்பட்ட "மதம்", மதம் "சாரா" எனும் விவாதங்களுக்கு ஒன்றும் சொல்ல இல்லை. ஆனால் இந்த வார்த்தைக்கு மட்டும் சொல்ல ஒன்று இருக்கிறது.

அது இது :lol::(

குளம் என்ன சொல்ல வாறியள் எண்டதை விரிவாயும் விளக்கமியும் சொன்னா பதில் எழுத முடியும் இப்படி அது இது என்று எழுதினால் என்னத்தை விளங்கிக் கொள்வது?

மேலும் எதுவித கருதுக்களும் இன்று கருத்து எழுதுபவர்கள் மேல் அவதூறுகளை மட்டுமே எழுதித் திரிவோர் மேல் நிர்வாகம் கள விதி முறைக்களுக்கு அமைவாக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் இங்கே மினக்கெட்டு பதிகளை எழுதுவதில் எது வித பயனும் இல்லை என்பதை மீண்டும் ஒரு தடவை நிர்வாத்துக்கு அறியத் தருகிறேன்.

இவ்வாறு செய்பவர்கள் ஒரு சிலரே இவர்கள் எல்லாக் கருதாடல்களிலும் இதனையே செய்கிறார்கள்,இவர்களை அடையளம் கணுவதும் இவர்கள் மேல் நடவைக்கை எடுப்பதும் அப்படி ஒன்றும் கடினமான நிர்வாகச் செயற்பாடகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணா எனக்கு நீங்கள் சொல்லியது அத்தனையிலும் உடன்பாடு இருக்கு. ஆனால் எனக்கு ஒரு சிறு உதவி செய்யவேண்டும். இப்போது நான் கோவிலுக்கு செல்வதால் தான் என் சிதறுப்படும் மனத்தினை ஒருங்கிணைப்பது தெரியாமல், நாளொருமேனி பொழுதொருவண்ணம் அடக்கி என் வாழ்க்கையில் சேமிக்கப்படும் சத்தியை வைத்து என் வாழ்க்கையினை வெற்றிகரமாக கொன்டு போகின்றேன். இதை நான் கதைப்புத்தகங்கள், அல்லது ஓவியம் வரைவது அல்லது விளையாட்டு போன்றவற்றினூடு கூட செய்யலாம்தான். ஆனால் சிறுவயதில் இருந்து இப்படி என் மனதை அமைதியாக்கி பழகிய எனக்கு, உடனடியாக என்னை மாற்றவே முடியாது. காரணம் என் மூளை, மனம் எல்லாம் இந்த மதம் சார்ந்த பழக்கத்தில் ஈடுபட்டு பழகிவிட்டது. நான் நாளை இதைச்செய்வேன் என்று என் மனதை அமைதிப்படுத்தி, என் குல தெய்வத்தினை நினைத்து சென்றால் அது நடைபெற்றிருக்கின்றது. ஆகவே நடைபெறும் என்ற நம்பிக்கையே என் வாழ்க்கை. இப்போது உங்கள் கொள்கைகளின் படி நீங்கள் சொல்லுவதும் தியரியில சரியாக இருக்கு. அதை எப்படி பிரக்டிக்கலாக செய்யலாம். அது தான் மனித மனத்தினை அமைதியாக்கி, சிந்தை இல்லாத நிலையில் வைத்து மனதின் சக்திகளை மீளே ரீசார்ஜ் செய்வது. இந்த ரீசார்ஜ் செய்யும் பழக்கம் குறைந்தால், மனித வாழக்கை கீழமுகமாக போவதை நாம் எல்லோரும் பார்க்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது விளங்கிறது.பழகிய பழக்கங்கள் நம்பிக்கைகளை விட்டு விலகுவது என்பது கடினமான விடயம் தான்.மெதுவாகச் சிந்தியுங்கள் சுயமகாச் சிந்தியுங்கள் கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வது சரியா என்று சிந்தியுங்கள் ,மேலும் வாசியுங்கள், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.மற்றவர்களுக்காக எதனையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

மனிதன் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. மெதுவாக நீங்களே மாற்றங்களைக் கொண்டு வரப் பழகி விடுவீர்கள்.

நன்றி,வணக்கம்.

Link to comment
Share on other sites

(நீங்கள் சொல்வது விளங்கிறது.பழகிய பழக்கங்கள் நம்பிக்கைகளை விட்டு விலகுவது என்பது கடினமான விடயம் தான்.)

நாரதர் அண்ணை, நீங்கள் முன்னம் சொல்லியவைகளும், பரசி அண்ணா சொல்லிய எமக்கு கிடைத்த அனுபவமே உண்மை, மற்றையது எல்லாம் ஒரு பிரியோசனத்துக்கும் உதவாத குப்பைக்களஞ்சியம். அதாவது எனக்கு சரி என்று தெரிவது பிறருக்கும் சரிவராது. இதிலிருந்து பார்க்கும் போது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குண இயல்பில் இந்த உலகில் பிறந்துவிட்டார்கள். ஆகவே ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவிதமானது. ஆகவே ஒவ்வொருவரும் தம் தம் வாழ்க்கை அனுபவத்திற்கூடாக ஒரு வரையறை வைத்து, வாழ்க்கையினை கொன்டு செல்ல முயலவேண்டும். இதைத்தான் நீங்கள் சொல்ல வந்தீர்கள். சரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவம் பெறும் போது, சிலர் கூடாத அனுபவமும், சிலர் நல்ல வாழ்க்கைக்கு உயர்வைத்தருகின்ற அனுபவத்தினையும் வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ பெறுகிறார்களே. இது எப்படி நடக்கிறது? அப்படி தம் வாழ்க்கையில் அதிசயக்கத்தக்க விதத்தில் நடந்தவைகளை சான்றி எழுதியவைகளே எமது வாழ்க்கை வழிகாட்டிகள். உதாரணத்துக்கு திருக்குறள், பதஞ்சலியோகம், திருமந்திரம், பைபிள், குர்ரான், கீதை,புத்தரின் ஞான் அனுபவங்கள். இவைகள் எம்முன் இருக்கும் போது, எமக்கு பிரச்சனிகள் வரும் போது, எடுத்து வாசித்தால், தெரியாமலோ, தெரிந்தோ குற்றம் செய்ய எம் மனத்துக்கு ஒரு ஒத்தடம் தரப்படுகின்றது. ஆகவே நாம் சிகிச்சை பெற்று குனமடைகிறோம் ஒரு கணத்திற்கு. அதன் பின் எமக்கு பசிப்பது போல மீண்டும், நாம் அதே பிழைகளை விடுகின்றோம். இப்படி மனிதன் மாறி, மாறி பிழைகளை விடுவதும், புத்தகங்களையோ, அல்லது கோவிலுக்கு சென்று வருவதாலோ, ஒரு தற்காலிக மன அமைதி பெறுவது எமக்கு தெரிகிறது. வாழ்க்கை வாழ்க்வதற்கே என்பது புரிகிறது. ஆகவே இது காலம் காலமாக இந்த மக்களிடையே நிலைத்துநிற்கிறது.பாவம் செய்த மனிதன், யேசுவிடம் வந்து \" எம் பிதாவே என்னை மன்னித்துவிடு என்று வேண்டினால்\" அந்த பாவம்களை யேசு ஏற்றுக்கொள்ளுகின்றாராம் என்ற கொன்ஸ்செப்ட்டினை பல கோடி மக்கள் நம்புகிறார்களே. இதிலே பெரிய மனித தத்துவம் இல்லாமலா? அதே நேரம் இதுகள் ஒன்றுமே இல்லாது, தன் சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை, சுய முயற்ச்சி என்று ஏன் இவர்களால் சிந்திக்கமுடிவதில்லை. காரணம் பிறக்கும் போது மனிதர்கள் வித்தியாசமான இருதய பலத்தினூடு பிறக்கிறார்கள். அதில் பலர் ஆரம்பகால வாழ்க்கையிலேயே தம்மை ஒரு மொடரேசனான வாழ்க்கைக்கு உட்படுத்தி, மனத்தினை அடக்குவதால் வாழ்க்கையுண்டு என்றதை வாழ்க்கையாக இணைத்திருக்கிறார்கள். இது தான் வெள்ளைக்காரனின் வாழ்க்கைத்தத்துவம். அவனின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக, வசதி படைத்து வாழுவதற்கு காரணம் இந்த அடக்கமான வாழ்க்கை. குடிப்பதிலும் ஒரு அளவு வைத்திருக்கிறார்கள், இப்படி வாழ்க்கையில் வெற்றிபெற்று நடக்கும் பிறநாட்டவர்கள். ஆனால் எம் வாழ்க்கை என்ன? கண்டதையும் திண்ணும் கலாச்சாரம். குடிப்பதென்றால் மூக்குமுட்ட குடிப்பது அது பியராக இருக்கட்டும், தேனீராக இருக்கட்டும் அல்லது குளிர்பாணமாக இருக்கட்டும்.

வெள்ளைக்காரன் தன் இன பந்துகளுடன் ஒற்றுமையாக வாழ்கின்றான். தன் தாய் தந்தையரை மதிக்கின்றான். தன் சகோதர சகோதரிகளை மதிக்கின்றான். காரணம், இந்த வெள்ளைக்காரன் 18 வயது வந்தவுடன் தன்னை நம்பி வாழ்வேண்டும் என்று, வீட்டை விட்டு கலைத்துவிடுகிறார்கள். வெளியில் போன இந்த மனிதன், தன்னை நம்பி வாழ்கிறான், சொந்த முயற்ச்சி எடுத்து முன்னேறுகிறான். காசினை சேமிக்கின்றான். வீட்டை வேண்டுகின்றான். இப்படி எல்லோரும் சமமாக ஒரு குடும்பத்தில் வளரும் போது, சமதர்மம் பேணப்படுகின்றது. அதுவே சமூகமாக மாறும் போது ஒற்றுமையான பலமான சமூகமாக இருக்கிறது. வளர்ச்சி பெறுகின்றது.

இப்போது நாம் இருக்கும் நிலை அப்படியல்ல. ஆனால் எம் சந்ததிகள் இப்படியே வளருவார்கள் என்றால் அதுவும் இல்லை. 25 வருடங்கள் வரும் மட்டும், எல்லாம் அம்மா, அப்பாவின் தயவில் அனேகமானோர் வாழுகின்றார்கள். காரணம் என்ன பாசத்திலே காட்டப்படும் ஓவர் ரியக்ஸ்ஸன். அப்போது வெள்ளைக்காரரினை தாய் தந்தையர் கலைத்து விடுகிறார்களே. அங்கே பாசம் இல்லையா? இருக்கிறது. ஆகவே சமதர்மமான ஒரு சமுதாயம் ஒன்று இங்கே உருவாக இவர்கள், தம் பாசத்தினை சக்க்ரிபைஸ் செய்கிறார்கள். ஆனால் நாமோ? முடியாது. ஆகவே மாற்று வழி என்ன?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது விளங்கிறது.பழகிய பழக்கங்கள் நம்பிக்கைகளை விட்டு விலகுவது என்பது கடினமான விடயம் தான்.மெதுவாகச் சிந்தியுங்கள் சுயமகாச் சிந்தியுங்கள் கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வது சரியா என்று சிந்தியுங்கள் ,மேலும் வாசியுங்கள், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.மற்றவர்களுக்காக எதனையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

மனிதன் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. மெதுவாக நீங்களே மாற்றங்களைக் கொண்டு வரப் பழகி விடுவீர்கள்.

நன்றி,வணக்கம்.

:D:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.