Jump to content

தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

Recommended Posts

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

அடடே.. இலண்டனில் நமது மக்கள் டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் பொருளாதார வல்லுனர்களாகவும் விஞஞானிகளாகவும் விமானிகளாகவும் நீதிபதிகளாகவும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

திருமதி நவத்தின் தமிழ்ச்தேசிய சிந்தனையை மெச்சுகிறேன்.

(அப்புறம் இதிலேதும் வஞ்சப் புகழ்ச்சி இல்லையென நம்புகிறேன்)

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இலண்டனில இருந்து தேசத்திற்கு சார்பாக மக்கள் குரலாக தொலைக்காட்சி இயக்குவது பொய்யான வேலை.

புலிகளை தடை செய்துள்ள நாடு. இப்ப கூட நிகழச்சிகளில் விடுதலை பற்றி பாடக்கூடாது இது பொலிஸ் வாய் மொழி உத்தரவு.

வெண்புறா இன்னிசை நிகழ்வில் நடனத்திற்காக பாடப்பட்ட பாட்டு எத்தனையோ சொற்கள் வெட்டப்பட்டு போடப்பட்டன. பிறகு விசாரித்ததில் அந்த சொற்கள் விடுதலை பற்றி கூறுகின்றனவாம் அவற்றிக்கு தடையாம்.

அத்தோடு தமிழர் தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழர்கள் புலம் பெயர் நாட்டில் அதிகம் இருக்கும் நாடு இலண்டன்.அவர்கள் இங்கு அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள்.

தமிழருக்கு எதிராக செயற்படும் பலம் கொண்ட சிங்களதூதுவராலயம் இருக்கும் நாடு இலண்டன்.இப்ப தமிழர்களின் விடுதலைக்கு சார்பானநடவடிக்கைகளை கண்காணித்து அவற்றை குழப்ப முயற்சிப்பது அல்லது நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசின் உதவியை நாடுவது போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த தூதுவராலயத்தில் ஒரு சிறிலங்கன் இராணுவ அதிகாரி பொறுப்பாக வந்து வேலை செய்கின்றார்.

அப்படி எல்லாம் இருக்கும் போது தரிசனம் நாங்கள் எதிர்பார்க்கின்றதை தர முடியாது.இலண்டனில் இருந்து விடுதலைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு தொலைக்காட்சி நடத்துவோம் என்றால் பொய் வேலைதான்.

Link to comment
Share on other sites

பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம். அப்படி இருக்கிறது ஒரு சிலரின் எண்ணம். ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டது காணாது போலுள்ளது. போன காலம் திரும்பி வரமலா போகப்போகிறது?

Link to comment
Share on other sites

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இதென்ன நவமண்ணை சின்னப்புள்ளத்தனமாத் தெரியேல்லயா ?

Link to comment
Share on other sites

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

விடைகளை தேடுவதாக எண்ணி விருட்சத்தை வேரோடு அழிக்கும் எண்ணப்பாடுகளை மனங்களிலிருந்தும் நினைப்புகளிலிருந்தும் இல்லாமல் செய்யுங்கள்.

தேசியம் தாத்தாவீட்டுச் சொத்து என்ற எண்ணம் என்று உந்த செயற்பாட்டாளர்களிடமிருந்து போகிறதோ அன்றுதான் நாங்கள் விடிவுபெறுவோம்.

எங்கள் முதுகில்தான் எல்லாம் ஏறி நிற்க வேண்டும். மற்றெல்லாம் எச்சில்கள் இழிவுகள் என்ற வசைகள் நிறுத்தப்பட வேண்டும்.

(உங்கள் கருத்தை விளங்காமல் பதில் எழுதியதாக எண்ண வேண்டாம் நவமண்ணை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

தயவு செய்து அவரவர் செய்யும் தொழில்களை இங்கே இழுத்து வராதீர்கள்

விவாதியுங்கள் ஆனால் தொழிலை வைத்து விவாதிக்காதீர்கள்

இந்தப்பிரச்சனைதான் இன்று எம்மவரிடம் சாதிப்பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது

அது சரி திருமதி நவம் அவர்களே!

மலசலகூடம் கழுவுதல்,கோப்பை கழுவுதல் உங்களுக்கு அவ்வளவு இழக்காரமாக தெரிகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வட அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லலை. TVI , ATN(JeYa TV), SUN TV, KTV இந்த ஒளிபரப்புகள் தாங்களும் தங்களுடைய பாடும் என்று பிரச்சனை இல்லாமல் நடக்கின்றது.

இந்த ஜரோப்பாவில் சும்மா வார காசை எடுத்து தான் சனங்களுக்கு கொழுப்பு கூடி அலையுதுகள் :lol:

ஆமாடா. இப்பிடியே தமிழனை ஐரோப்பியத் தமிழன் அமேரிக்கா தமிழன் என்று பிரித்து பிரிவினையை வளவுங்கடா.

Link to comment
Share on other sites

உண்மையான தமிழ்தேசியவாதிகளை நாங்கள் இடத்தின் பெயரால் பிரிக்கலாம் என்று சொல்லுவது அற முட்டாள் தனம் இருந்தாலும் அப்படி துரோகி கூட்டம் சொல்லும் அளவுக்கு சின்ன சின்ன விடயத்தை எல்லாம் முரன்பட்டு காட்ட கூடாது.............

Link to comment
Share on other sites

அஜீவன் இப்போது ஒரு சற்றலைற் இருக்கின்றது. ஒரு மெல்லிய பெட்டி போன்றிருக்கும்

. அதை நீங்கள் பாவிக்கலாம்.

சற்றலைற் போல் தெரியாது. 300 சுவிஸ் பிராங் மீடியா மாக்கற்றில் விற்பனையாகின்றது.

தகவலுக்கு நன்றி நடா

Link to comment
Share on other sites

QUOTE (AJeevan @ Jan 9 2008, 02:00 PM)

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

இதை ஒரு முறை பாருங்கள்..............

Karuna implicates Gotabaya in false passport – report

[TamilNet, Friday, 25 January 2008, 15:33 GMT]

Tamil paramilitary leader Karuna (Vinayagamoorthi Muralitharan) was sentenced Friday to nine months in prison for entering Britain on a Sri Lankan passport under a different name. Pleading guilty, Karuna had implicated the government of Sri Lanka and the defence secretary Gotabaya Rajapaksa of providing the travel documents including the diplomatic passport for him to enter the UK, the BBC Sinhala service reported.

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK, the Sandeshaya reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24419

உள்ளதை உள்ளபடி சொன்னா போதும்

மேலே தமிழ் நெற்றில்

வேறு ஏதாவது வார்த்தைகள் உண்டா?

இதே நிலை

இன்னும் யார் யாருக்கு வருமோ? :icon_mrgreen:

U 2? :lol:

இவங்களையும் என்னென்று எல்லாமோ கூப்பிட்டாங்க!

அம்மான் என்று எல்லாம்..........

இன்று..............? :icon_mrgreen:

தரிசனத்தோட காட் புதுப்பிக்காதீங்க

தேசிய தொலைக் காட்சி வரப் போகுது என்கிறாங்களே

அப்போ விரைவில தரிசனத்துக்கும்

அதே நாமம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

என்ன அஜீவன் எந்தக் காலத்தில் நிற்கின்றீர்கள். தரிசனம் தொலைக்காட்சியின் காட்டைப் புதுப்பிக்க வேண்டாம் எண்டு மட்டுமல்ல அது துரோகத் தொலைக்காட்சி என்ற நாமகரணமும் எப்போதோ சூட்டியாகிவிட்டது. காரியம் ஆகும்வரை நல்லவர் காரியம் முடிஞ்சதும் துரோகியென்பது தான் வாடிக்கையான விடயமாயிற்றே. இப்ப TTN னுக்குள்ளும் உள் குத்துவெட்டுகள் ஆரம்பித்து ஒருவரையொருவர் துரோகிகள் என்று அறிக்கைகள் வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாகத் துரோகிகள் என்றால் வெளியில் தானே இருப்பார்கள். ஆனால் இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு அட்டகாசம் பண்ணுகின்றார்கள். இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா சொல்ல்வதில் பல உண்மைகள் மறைந்து இருந்தாலும் வசம்பு போன்ற சந்தர்பவாதிகள் நக்கல் பன்னும் அளவுக்கு நிலமை மோசம் ஆகிவிட்டதே..........

Link to comment
Share on other sites

சசி, வசம்பு என்ன சொல்கின்றார்? அவர்கூறிய விசயங்களிற்கு உங்கள் பதில் என்ன? அதாவது சந்தர்ப்பவாத அரசியல் செய்வது பற்றி?

வசம்பு சொன்ன இந்த விடயத்திற்கு உங்கள் பதில் என்ன? புலம் பெயர்ந்த தமிழர்கள் இளிச்சவாய்களா?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

வசம்பு, தங்களை எப்ப இருந்து "பரபரப்பு" கிளையின் சுவிஸ் செய்தியாளர் ஆக்கினவங்க??? :icon_mrgreen::icon_mrgreen: கேக்கிறவன் கேனையன் எண்டால் வசம்புவும் ஏரோப்பிளேன் ஓட்டுவாராம்.. :lol:

Link to comment
Share on other sites

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்பது உள்ளுக்குள் இருப்பவரை தான் துரோகிகளாக மாற்றுவது. sri lankan intelligence உம் அதைத் தான் செய்யும். செய்கிறது. வெளியிலிருப்பவனை மாற்றுவதால் பயன் அதிகம் இல்லை. உ.ம்: கருணா, உண்டியல் ஜயதேவன்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்டமைப்புகளில் துரோகிகளை உருவாக்குதல் உளவு நிறுவனங்களிற்கு இலகுவான காரியம். ஏனெனில் பணம் எதையும் செய்ய வைக்கும். ஊரிலிருந்தாலாவது மண்டையில் போடப்படும் என்ற பயமிருக்கும். இங்கு தான் எந்தப் பயமும் இல்லையே.

ஆகவே உள் வீட்டு குத்துவெட்டு என்று நாம் ஒதுங்க முடியாது. துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள். துரோகிகளைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் இருத்தல் அவசியம்.

Link to comment
Share on other sites

தப்பு செய்பவர்களுக்கு இங்கு சிலர் வக்காலத்து வாங்கி அவர்களை நியாயப்படுத்த முயல்வது மேலும் மேலும் அவர்கள் தப்புச் செய்வதை ஊக்குவிக்குமே தவிர திருந்த வைக்காது. சசி போன்றவர்களின் கவலை கூட தப்பு செய்தவர்கள் ஏன் அவற்றை மற்றவர்கள் தெரியும் படி செய்தார்கள் என்பதே தவிர ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதல்ல!!! மொத்தத்தில் தங்கள் சந்தர்ப்பவாதங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்து போனதால் மற்றவர்களையே சந்தர்ப்பவாதிகள் எனச் சொல்லி தாம் தப்பிக்கலாமென கனவு காணுகின்றார். டண் இங்கு ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கப் பார்ப்பது போல் தன் இருப்பை இப்படி இடைக்கிடை காட்டியவாறு தவறு செய்பவர்களையும் காப்பாற்ற எண்ணியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல் காட்டாறு CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்று சப்பைக்கட்டுக் கட்டி சாதாரண உள்வீட்டுக் குத்துவெட்டுக்களைக் கூட நியாயப்படுத்த முயன்றிருக்கின்றார். இதன் மூலம் காட்டாறு எம்மைவிட எதிரிகள் புத்திசாலி என்று சொல்ல வருகின்றாரா??

Link to comment
Share on other sites

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

வணக்கம் கலைஞன்

நான் நெற் இல்லாத ஒரு ஊருக்கு போயிருக்கிறன்.............. :icon_mrgreen:

வரும் போது தகவல்களை பார்க்கிறன்.

அதுதான் காண முடியல்ல.........?

பிரிவினை என்பது தமிழர் தலைவிதி போலும்.

நாட்டை விட்டு வெளிக்கிட்டவைகளை

ஆரம்பத்தில் அகதிகள் என்றார்கள்?

அதிலும் அரசியல் அகதிகள்

பொருளாதார அகதிகள் என்று

அகதியாக வந்தவர்களே தரம் பிரித்தார்கள்?

வந்த நாட்டில கூட

போட்டுக் கொடுத்தவனே

நம்மோடு இருந்தவைதான்?

அதற்கு பிறகு ஏதோ புலம் பெயர்ந்தோர் என்றார்கள்?

இப்போ வந்த நாட்டு பாஸ்போஸ்போட் கிடைத்ததும்

அந்த அந்த நாட்டை சொல்லி பிரிவினை வேற?

பாஸ்போட் கிடைக்க முன்னமே அதை ஆரம்பிச்சவங்க இதில வேற?

இதை எல்லாம் தமாஸா எடுத்து ரசிங்க! :D

இதில முதல்ல ஐரோப்பாவில வந்த டீவியை எல்லாரும்

எங்கட டீவியெண்டு நம்பினாங்க!

பாவம் சனங்கள் ஏமாறினதுதான் மிச்சம்?

செய்தி - பரப்புரைகள் அதிலாவது வருது எண்டு விட்டாங்க.............

ஓ..........அது நாங்கதான் என்றாங்க?

அந்த வளர்ச்சி வெகு நாளைக்கு இல்லாமல் போச்சு?

அடிச்சு பிடிச்சாங்க!

ஏமாந்தது மக்கள்தான்! ^_^

எந்த ஊடகம் வந்தாலும் மக்கள் அவதானமா இருக்க வேணும்?

கொடுத்தா காசு திரும்பி வராது?

சுவிஸ் வர்த்தகர்கள் பலர் பல லட்சங்களை இழந்தாங்க?

தனிப்பட்ட மக்களும்தான்?

அதுக்கும் அதே பேர்தான்?!

தமிழருக்கு ஒரு ஊடகம் என்று நினைத்து உதவிய அனைவரும்

துரோகிகளானார்கள்?

சும்மா உதவியதால் வந்த வினை?

தமிழை வச்சு பிளைப்பு நடத்துற கூட்டங்களால் வரும் வினை?

அவங்க காரில நிம்மதியா போவாங்க.

உதை : ஏச்சு : பேச்சு எல்லாமே நடந்து போற

ரசிச்ச அப்பாவிக்குதான்?

இதில எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு

மாட்டி வெளியில வந்தவன்

அடுப்படி சூடுபட்ட பூனை போல

வெளியில நிற்பான்?

அடுத்த அப்பாவிகள் நிறைய பேர்

இன்னமும் வரிசையில நிக்கிறாங்க! :icon_mrgreen::lol::(

அந்த அந்த நாட்டில உள்ள டீவீக்கள்

நடக்கிற மாதிரி நடக்கிறதுக்கு விடுறது நல்லது கலைஞன்.

அதிக கலைஞர்களுக்கு வாய்ப்பாவது கிடைக்கும்.

ஒரே ஒரு டீவீ வந்து

அதை மூடினா

எல்லாமே கோவிந்தாதானே?

அதை விட பல ஊடகங்கள் வர வேணும்

ஏதாவது ஒருநாள் மிஞ்சும்.

நல்லதா இருந்தா!

ரேஸ் பார்க்கிறது நல்லது.

தெரியாமல் கூட

விபரம் தெரியாதவன் ரேஸ்கோசுக்குள்ள

தவறியாவது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்களுக்கு எந்த ரீவி ஓசியிலை போகுதோ அவையெல்லாம் தேசிய தொலைக்காட்சிதான்.

உதாரணத்துக்கு ஒருசில வீடுகளிலை யெகோவாக்காரற்றை ரீவியும் தேசிய தொலைக்காட்சிதான் :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.