Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். :rolleyes:

சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்.

பாடல் 1

பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்

படம்: இது எப்படி இருக்கு (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் இருந்த ஞாபகம் வரும். அந்த ஒரு மகிழ்ச்சிக்காகவே இம்மாதிரியான பாடல்களைக்கேட்பதில் ஆர்வம் செலுத்துகிறேன்.

பாடலில் பிரதானமாக உபயோகிக்கப்பட்டுள்ள வாத்தியங்கள் கிட்டார், புல்லாங்குழல், தபலா, வயலின் போன்றவை. இவற்றில் கிட்டாரை எடுத்துக்கொண்டால் பேஸ் மற்றும் ரிதம் வகை கிட்டார்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பேஸ் கிட்டாரை தமிழ் சினிமா இசையில் பெருமளவில் உபயோகிக்கத்தொடங்கிய ராஜா இந்தப் பாடலிலும் அதன் மூலம் தன் முத்திரையைப் பதிக்கின்றார். பேஸ் மற்றும் ரிதம் கிட்டாரில் நடை பழகும் அழகே அழகு. குறிப்பாக எங்கும் நிறைந்த அந்தப் பல்லவியில் இதனை அவதானிக்கலாம்.

இரண்டாவது இடையீட்டு இசை ஒரு இசைப்பிரவாகம்.குறிப்பாக 2:25 நிமிட நேரத்தில் தொடங்கும் கிட்டார் இசையும் அதனைத்தொடர்ந்த வயலின் குறிப்புகளும் மெய்சிலிர்க்க வைப்பவை. இவற்றுக்கான இசைக்குறிப்புக்கள் என்னிடம் உள்ளன. தேவையுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள்.

என்னிடம் இதுமாதியான பாடல்கள் MP3 வடிவில் உள்ளன. யாழில் தரவேற்றம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். மோகன் அண்ணை கவனிப்பாரா?

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல் 2:

பாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்

படம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா

இந்தப்பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம் கேட்டபோது..அடேயப்பா.. அந்த ஆனந்தம் இருக்கிறதே.. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. :rolleyes:

பாடலைக் கேளுங்கள் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அதிக வருடங்களுக்கு முன் கேட்ட பாடல். நன்றி டங்குவார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து எம்பீ 3 யாக தரவேற்றம் செய்யுங்கள் தரம் குறையாது.

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :lol:

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

பலர் உதவி செய்வார்களென நினக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

அண்ணை, இன்னொரு கொள்கணினி வாங்கிப் போடுறதுதானே.. :D

கொள்கணினி = சேர்வர் (என்னுடைய கண்டுபிடிப்பாக்கும்.. :lol: )

Link to comment
Share on other sites

பாடல் 3:

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இது ராஜாவின் மூன்றாவது படம். இந்தப்படமும் ஒரு உதவாத படம் என்பதால் பாடல் பிரபலமாகவில்லை. இந்தப்பாடலின் மெட்டு மிகவும் இனிமையானது. எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு மெட்டு. பின்புல இசையும் அதற்கேற்றாற்போல் மென்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பாடலை இங்கே கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

மிக நல்ல பாடல் டங்குவார். என்னைப்பொருத்தவரை இளையராஜா + பாலா + ஜானகி கூட்டணிதான் மிகவும் சிறந்த பாடல்களைத்தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டங்கு.தொடருங்கள் .இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் இனிமையையும் தரும்.

Link to comment
Share on other sites

நன்றி ஈஸ் மற்றும் குமாரசாமி... :)

Link to comment
Share on other sites

பாடல்: 4

பாடல்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்

படம்: உறவாடும் நெஞ்சம் (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி

இதுவும் ஒரு அருமையான பாடல். பல்லவி முடிந்து முதல் இடையீட்டு இசையின் ஆரம்பம் அமர்க்களம்.

இனி வெங்கட்டின் "உள்ளும் புறமும்" வலைப்பதிவிலிருந்து...

பாலூட்டி வளர்த்த கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.

முதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.

ஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார்? நிமிர்ந்து நின்றார். படம் - பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.

பாடல் இங்கே.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

ஈஸ், நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அது ஒரு வலைப்பதிவிலிருந்து அப்படியே சுட்டது. நானும் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

:D

Link to comment
Share on other sites

மன்னிப்பதற்க்கு ஒன்றுமில்லை. உங்கள் தேடல் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

பாடல் 5:

பாடல்: வெள்ளி நிலாவினிலே

படம்: சொன்னது நீதானா(1978)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பிரபலமாகாத இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் அற்புதமாகப் பாடியிருப்பார். மிகவும் இனிமையான இதன் மெட்டு ஒரு குழந்தையை நோக்கிப் பாடப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இனிமையான மெட்டுக்களை பல்லவியிலும் சரணத்திலும் கொண்டுள்ளது.

பொதுவாக பேஸ் கிட்டாரின் உபயோகம் பாடல்களில் வெளியே மற்ற வாத்தியங்களைப்போல் தெரியாது. ஆனால் அதுவே ராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உயிர் நாடியாகும். பலருக்கு அது என்ன வாத்தியமென்றே தெரிந்திருக்காது. மேடையில் பாடல்களைப் பாடும்போதும் பெரும்பாலும் பேஸை உருப்படியாக வாசிக்காதிருப்பதால்தான் அசலைப் போல நகல் இருப்பதில்லை.

இந்தப்பாடலில் உதாரணத்துக்கு,

வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது.. என்ற பல்லவியில் வந்தது என்றவரியின் து என்ற சொல்லில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சுரம் பேஸ் கிட்டாரில் வாசிக்கப்படுகிறது. அது அடுத்த வரியான அது பாடும் பாடல் நீ ராஜா.. என்ற வரிக்கு முன்னோட்டமாகும். அந்த மாதிரி சுரமாற்றங்கள் வரும்போது ஒரு இனம் புரியாத இனிமை பிறக்கும். இதுவே ராஜாவின் மிகப்பெரிய பலம். ராஜாவின் அனேகமான பாடல்களில் இதனைக் கவனிக்கலாம்.

அலட்டல் போதும். இனி பாடலை இங்கே கேளுங்கள். :D

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 6:

பாடல்: மேகமே தூதாக வா

படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், P.சுசீலா

எந்த நாழிகையில் கேட்கவைத்தாலும் எனக்கு சலிக்காத ஒரு பாடல். இதுவரை எத்தனை நூறுதடவைகள் கேட்டிருப்பேனோ தெரியாது. பாடலின் பல்லவியும் சரணமும் இருவித சுர ஸ்தாயிகளில் அமைக்கப்பட்டிருப்பதும், சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் போது வரும் சுரமாற்றமும் இனிமையைக் கொடுக்கின்றன.

பாடலின் வரிகள் இங்கே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல் 7:

பாடல்: சிந்து நதியோரம்

படம்: மலர்களிலே அவள் மல்லிகை

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: P.ஜெயச்சந்திரன், P.சுசீலா

ஆரம்பத்தில் மிகச் சாதாரண பாடல் போல இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்க மிக இனிமையாகக் தோன்றும். பாடலைக் கேளுங்கள் இங்கே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

Link to comment
Share on other sites

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

நடா,

இதுவரை நான் குறிப்பிட்ட பாடல்களெல்லாம் என்னால் தரவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தளங்களில் உள்ளவை. என்னிடமும் பல பாடல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சொன்ன முறையில் தரவேற்றம் செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டங்குவார். பாடல்கள் கோடி கோடி அவை கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் கிடைப்பவை தரமானதாக இருந்தால் நல்லது. நீங்கள் பாடல்களை இணையுங்கள் நானும் தரமானதாக என்னிடமிருந்தால் இணைக்கின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

பாடல் 8:

பாடல்: மாலை மயங்கினால்

படம்: இனிக்கும் இளமை (1979)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்கள்: P.B. சிறீநிவாஸ், S.P. சைலஜா

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல.. :mellow:

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.