Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

நேரக்குறைவு ஒரு காரணம்.. இப்பாடல்களில் பலருக்கு ஆர்வம் இல்லையோ என்ற ஒரு எண்ணமும் வந்துவிட்டது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

இதனை இங்கு இணைக்கலாமோ தெரியவில்லை. விதிகளுக்கு முறண் எனில் நீக்கி விடவும்.

பின்வரும் இணைய தளத்தில் இளையராஜாவின் எல்லா பாடல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். 99% மான அவரின் பாடல்கள் உள்ளது. 'ரொரன்ட்ஸ்' தொழிட்னுப்பதில் உள்ளது

இணையம்: TMS"]TMS

thread

Link to comment
Share on other sites

இறைவன் கேட்ட "அழகே தமிழே.." பாடல், தரவிறக்கம் செய்து மகிளுங்கள்

Click_Here

Link to comment
Share on other sites

பாடல் 12:

பாடல்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்

படம்: சாட்டை இல்லாத பம்பரம் (1983)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், S. ஜானகி

இந்தப்பாடல் தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. கேட்டபோது பல ஆண்டுகளுக்கு முன் நாட்டில் கேட்ட ஞாபகம் வந்தது. பிறகென்ன நினைவு மீட்டல்தானே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 13:

பாடல்: கலையோ சிலையோ

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பகலில் ஓர் இரவு படத்தில் மிகவும் பிரபலமான பாடல் இளமையெனும் பூங்காற்று. அந்த அலையில் அடிபட்டு பெரிதும் பிரபலமாகாமல் போன ஒரு இனிய பாடல் இது. சரணத்தின் மெட்டு அழகு. குறிப்பாக முடிவில் வரும்,

வடிவமோ கன்னிக் கோலம்

வாலிபம் பூமழை

என்ற அழகிய வரிகள் இனிமையான மெட்டுடன் சரணத்தை நிறைவு செய்கிறது.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

இறைவா,

இந்தப் பாடல்களில் கிடைப்பதை எடுத்து நடாவின் கேளுங்கள் கொடுக்கப்படும் பகுதியில் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல் 14:

பாடல்: ஹேய் வெண்ணிலா

படம்: இது ஒரு தொடர்கதை (1986?)

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

இந்தப்பாடல் முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும் போகப் போக இனிமை கூடி சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக சரணத்தில் வரும் வயலின் ஒலி உணர்வுகளை எங்கோ இட்டுச் செல்கிறது.

பாடல் ஈசுக்குப் பிடிக்குமோ தெரியாது. :unsure: எதுக்கும் அதனுடைய ஒளிக்காட்சியையும் இணைத்து விடுகிறேன்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி டங்குவார். 12/13/14 நல்ல பாடல்கள். 13 கேட்ட பாடல். 12 கேட்டதில்லை.

14, நான் பார்த்த படம். மோகன், அமலா, ரேகா நடித்தது என்று நம்புகிறேன். ஆனால் பாடல் ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

பாடல் 15:

பாடல்: பொல்லாத ஆசை வந்து

படம்: குவா குவா வாத்துக்கள் (1984)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

குவா குவா வாத்துக்கள் ஒரு சிரிப்புப் படம். இதிலுள்ள பாடல்கள் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன. இன்று ஒரு தேடலில் பின்வரும் பாடல் கிடைத்தது.

பாடலின் ஆரம்பம் அதாவது பல்லவி வழக்கமான இளையராஜா பல்லவி போன்றே சாதாரணமாக இருக்கும். ஆனால் அதிலும் ஒரு பரீட்சார்த்த முயற்சி செய்திருக்கிறார். அதாவது தென்னிந்திய வாத்தியமான மிருதங்கத்தை மேற்கத்திய டிரம்ஸ் மற்றும் கிட்டாருடன் கலந்து அசத்துகிறார். மேலும் பாடலில் வீணைக்குறிப்புகளும் உள்ளன. பாடல் முழுவதும் பேஸ் கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இடையீட்டு இசை மூலம் பாடலை வேறு ஒரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்று சரணத்தை பிரமாதமாக மாற்றியிருக்கிறார் இளையராஜ.

இரண்டாவது இடையீட்டு இசை அந்தக்கால இளையராஜாவின் மேற்கத்தைய இசை ஈடுபாட்டைக் காட்டுகிறது. அதிலும் அவர் எடுத்துக்கொண்ட சுரவரிசைகளை சுமூகமாக சரணத்தோடு இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அங்கேதான் ராஜாவின் இசை மற்றும் சுரக்கோர்வை மேலான ஆளுமை வெளிவருகிறது. வயலின்களைக் கொண்டு சுரங்களைத் தொடுத்து அதை லாவகமாகவும் அதே சமயம் இனிமையாகவும் சரணத்தோடு தொடுத்து விடுகிறார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 16:

பாடல்: பூந்தென்றலே

படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

படத்தில் ஏமாற்றுப் பேர்வழி சிவகுமார் ஏமாற்றப்படும் கதாநாயகியுடன் பாடும் பாடல். எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று.

இசையைப் பொறுத்தவரையில், சில வித்தியாசமான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, முதல் சரணத்தில் உபயோகிக்கப்படும் தாள வாத்தியம் இரண்டாவது சரணத்தில் அதிகபட்சம் உபயோகிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரிதம் கிட்டார் உபயோகிக்கிறார் ராஜா. மற்றும்படி பாடலின் மெட்டும் இனிமையானதே.

இனி, பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பாடல் 17:

பாடல்: சித்திரமே உன் விழிகள்

படம்: நெஞ்சிலே துணிவிருந்தால் (??)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: K.J. யேசுதாஸ்

சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் வெளிவந்த பல நல்ல பாடல்களில் ஒன்று இது. இனிமையான மெட்டுக்கு யேசுதாஸ் அவர்களின் பாந்தமான குரல் இன்னும் சிறப்பு.

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

இறைவன்,

இந்தப் பக்கத்தைப் பல நாட்கள் பாராததினால் பதிலளிக்க முடியவில்லை. உங்கள் பாட்டு நடாவிடம் கிடைத்து விட்டது தானே.. :huh:

Link to comment
Share on other sites

பாடல் 18:

பாடல்: தாம்த தீம்த

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழுவினர்

ஓரளவு கேட்ட பாடல்தான் என்றாலும், சில வருடங்களுக்கு முன்னர்தான் இந்தப் பாடலில் உள்ள ஒரு சிறப்பு விளங்கியது. அதாவது இப்பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியங்களை எடுத்துக் கொண்டால், தபலா, மேஸ் கிட்டார் மற்றும் சிம்பல்ஸ் மட்டுமே அடங்கும். வயலின் புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் உபயோகிக்கப் படவில்லை. அந்தக் கால கீபோர்ட் ஆரம்ப இசையில் கொஞ்சம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் கோரஸ் இசையை வைத்து பாடலை சரி செய்திருக்கிறார் ராஜா.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 20:

பாடல்: தென்ன மரத்தில

படம்: லட்சுமி (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, P. சுசீலா

ஆரம்ப இசையைக் கேட்ட்டவுடனே கிராமத்துக்குச் சென்ற உணர்வு வராதோர் யார்? அந்தக்கால கிராமத்து ராஜாவின் குரலில் பாடல் அமர்க்களம். சுசீலா அவர்களும் சேர்ந்துகொண்டால் இனிமைக்குக் குறைவென்ன..!

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 21:

பாடல்: நெஞ்சத்தில்

படம்: உணர்ச்சிகள் (1976)

இசை: ஷ்யாம்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

பாடலின் ஆரம்ப இசையில் பாடகர்கள் இருவரினதும் குரல்களும் பின்னிப் பிணையும் அழகே அழகு. பாடலின் மெட்டு இனிமையோ இனிமை. அந்நாளில் கேட்ட ஞாபகம் வருவதைத் தவிக்க இயலாது. :lol:

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல் 22:

பாடல்: ஞாயிறு ஒளி மழையில்

படம்: அந்தரங்கம் (1975)

இசை: தேவராஜன்

பாடியவர்: கமல்ஹாசன்

கமலின் குரலில் வெளிவந்த ஆரம்பகாலப் பாடல். பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது. இனிமையான இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்துள்ளார் தேவராஜன்.

இனி பாடல் இங்கே...

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 23:

பாடல்: தண்ணி கறுத்திருச்சு

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது ()

இசை: இளையராஜா

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

மிக வித்தியாசமான மெட்டமைப்பில் கிராமத்து இசை அட்டகாசம். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜாவின் கட்டுரையிலிருந்து..

(நன்றி: முத்தமிழ் மன்றம்)

மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

"சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.

"வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.

"மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.

"உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 24:

பாடல்: அழகே உன்னை

படம்: வாலிபமே வா வா (1982)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. சுசீலா, மலேசியா வாசுதேவன்

மெல்லிசைப் பிரியர்களுக்காக இந்தப் பாடல். ஒரு தேடலில் வலைத்தளத்தில் கிடைத்தது.

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 25:

பாடல்: நாள் நல்ல நாள்

படம்: பணக்காரப் பெண்

இசை: M.S. விஸ்வநாதன்

பாடியவர்கள்: T.M. சௌந்திரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையான இந்தப் பழைய பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல்#26

பாடல்: சந்தன மார்பிலே

படம்:நாடோடித்தென்றல்

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: மனோ, ஜானகி

சந்தன மார்பிலே

http://2luo.com/watch?v=Zpy08SYB3rY

Link to comment
Share on other sites

பாடல் 27: நினைப்பது நிறைவேறும்

படம்: நினைப்பது நிறைவேறும் (1976)

இசை: எம். எல். ஸ்ரீகாந்த்

பாடியவர்கள்: எம். எல். ஸ்ரீகாந்த் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையானதொரு பாடல்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.