Jump to content

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்


Recommended Posts

நான் தாலியறுப்பு என்று நகைச்சுவையாய் எழுதிய பதிவிற்கு தூண்டு கோலாய் இருந்த சாந்தி ரமேஸ்வவுனியனின் கட்டுரையை இங்கு இணைக்கிறேன். ஏனெனில் நகைச்சுவைப் பகுதியில் பலர் தீவிரமாக கருத்தாடுவதால் அந்தக் கருத்தாடலை இங்கு இந்தக் கட்டுரையை படித்துவிட்டு தொடர்ந்தால் அது பிரயோசனமாகவும் இருக்கும்

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'

24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.

45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.

நோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.

ஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.

நித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்புவும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.

சின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.

தேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்ட

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி.

நன்றி நீங்க இதை இங்கை போட்டது நல்லது.

நான் கூட இதை எடுக்கசொன்னவன்.

இல்லை எடுக்கவேண்டாம்.அபிக்கு மட்டும் இல்லை பலருக்கும் "சாந்தி றமேஸ்"

என்ன சொல்லவந்துள்ளார் என்பதை பொறுமையாக வாசிக்கஉதவும்.

எனக்கே பலவிசயங்கள் "சாந்தி றமேஸ்" அவர்களுடன் உரையாடும்போதுதான் தெரிந்துகொண்டேன்.

உண்மையில் பலவிடயம் நடந்திருக்கு நாகரீகம் கருதி அதை இந்தவிடயத்தில் அவர்எழுதவில்லை.இது உண்மைதான் .நானும் அங்குவசிப்பவன்.

தனது மனஉளைச்சலுக்கு காரணமாக இருந்த அனைவரையும் "சாந்தி றமேஸ்"மன்னிப்பாராக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி,

சாந்தி ரமேசின் ஆதங்கம் மிகுந்த கட்டுரையை வாசித்தேன். அவ்விடத்தில் நான் இருந்தால்க்கூட சாந்தியின் மனோநிலையைத்தான் அடைந்திருப்பேன்.

பெண்கள் சமூகத்தைப் பொறுத்தவரை தாலி என்பது இரு நிலைப்பாட்டைக் கொடுக்கிறது.

1. அன்புச்சின்னம்

2. அடிமை விலங்கு

இங்கு சாந்தி ரமேசின் கட்டுரையில் தாலியை அன்புச்சின்னமாகத்தான் காண முடிகிறது. கணவனின் இழப்பு என்பது எங்கள் சமுதாயத்தைப் பொறுத்தவரை மிகப்பாரிய இழப்பாகவே கருதப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு அகத்திலும் புறத்திலும் இவ்விழப்பின் தாக்கம் அதிகம். ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கரமிணைத்த தோழனாக கருத்தொருமித்து வாழ்ந்த உறவு மரணத்தின்பால் பிரிகையில் அப்பிரிவு அவளை மானுடவாழ்வின் வெறுமைக்குள் புகுத்திவிடும். சம்பிரதாயங்கள் அவளுக்கு வெறுமையை புகுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஒரு மனைவி இறந்தால் ஆணிடம் இருந்து எவற்றை இந்தச் சம்பிரதாயம் பறிக்கிறது என்றால் கேள்விக்குறிதான் மிஞ்சும். அதே நேரம் ஒரு கணவன் இறந்தால் அக்கணவனை இழந்த பெண்ணிடம் மட்டும் எல்லாவற்றையும் களையச் சொல்லும் சம்பிரதாயம் யாரால் உருவாக்கப்பட்டது? ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் உலகம் வேறு. நான்கு சுவர்களுக்குள் முடக்கப்படுவதல்ல அவர்கள் வாழ்வு. ஆனால் பெண்களின் உலகம் அவ்வாறல்ல. இயல்பாகவே வளர்ப்பு முறையாலும், வாழ்க்கை முறையாலும் சிறுவயதில் பெற்றோர், சகோதரர்களையும், பின்னர் கணவன் நிழலிலும் வாழப் பழக்கப்படுத்தப்பட்டவள். அத்தகைய பெண்ணுக்கு கணவனின் இழப்பு என்பது முற்றிலும் தனித்துவிடப்பட்டதைப் போன்ற சூழலைத்தான் தோற்றுவிக்கும். எதிர்காலத்தைப் பற்றியே அச்சமயத்தில் அப்பெண்ணால் நினைத்துப்பார்க்கமுடியாத விடயமாக இருக்கும்.

இங்கு தாலி அவிழ்ப்பு என்ற சம்பிரதாயச்சடங்கு என்பது ஏற்கனவே கணவனின் இழப்பால் உடைந்து ஒடுங்கி இருக்கும் ஒரு பெண்ணை மென்மேலும் காயப்படுத்தும். ஒரு பெண் தாலியை ஆதிக்கச் சின்னமாக நினைத்திருந்தாளானால் எப்போதோ தூக்கிப்போட்டுவிட்டுப் போயிருப்பாள். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்ட இழப்பிற்கு ஆளானவர் அதை தன் கணவனின் அன்புச்சின்னமாக நினைத்திருக்கிறார். எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் கணவனின் இழப்பிற்குப் பிறகும் தாலி அணிந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அத்தாலியின் வடிவில் தன் கணவன் தன்னுடன் வாழ்வதாக என் நண்பி நம்புகிறாள். சம்பிரதாயம் என்ற போர்வையில் அந்த மானசீக வாழ்வை அழிப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சு கருத்தெழுதியவர்கள் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த சாந்தி ரமேஸ் வவுனியன் என்ற தனிநபரின் ஆதங்கம் என்பதையே வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர் கண்டத்துக்கு ஏற்பதான் சம்பவம் நிகழ்ந்தது.. அல்லது விபரிக்கப்பட்டுள்ளது... அல்லது இவர் ஆதங்கப்படும் படியான வடிவில் தான்.. அல்லது நோக்கோடுதான் சம்பவம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

குறித்த பெண்மணி உட்பட அபி போன்ற கள உறவுகளின் குற்றச்சாட்டே.. இச்சம்பவம்.. மிகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதுதான்..!

(குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பெண்மணி தனது கைப்பட எழுதி அனுப்பிய கடிதங்கள் ஸ்கான் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நேற்றைய தினம் மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்டுள்ளதாக கள உறவு அபி தெரியப்படுத்தியுள்ளார். அபி எனக்கு தந்த விளக்கத்தில் கூட குறித்த பெண்மணியால் இக்களத்தில் தனது கருத்தை எழுதும் வழிமுறை தெரியாது என்பதாலேயே இங்கு இடப்பட்ட கருத்துக்காக (சாந்தியின் கட்டுரை சார்ந்து) அவரின் (குறித்த பெண்மணி) கருத்தைத் தான் (அபி) பதிவதாகக் கூறி இருந்தார். அதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயப்பக்கம் உள்ளது. ஆனால் சாந்தியோ.. நெடுக்காலபோவனும் அபியும் இவ்விடயத்தை ஊதிப் பெருப்பிகின்றனர் என்று இச்சம்பவத்தோடு எவ்வகையிலும் தொடர்பற்ற..எம்மீது குற்றம் சாட்டுவது.. அவர் எதையோ மறைக்க முற்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது..?!)

1. தாலியை அன்புச் சின்னமாகக் காண்பவரின் எண்ணவோட்டம் வேறு..

2. தாலியை அடிமைச் சின்னமாகக் காண்பவரின் எண்ணவோட்டம் வேறு..!

ஒரு தாலி அணிந்த பெண்ணைப் பற்றி.. இந்த இரு வேறு எண்ண ஓட்டமுள்ள இருவரிடம் ஒரு கட்டுரை எழுதவிட்டால்.. அவர்கள் தங்கள் எண்ணத்தைப் பிரதிபலிப்பார்களா.. தாலி அணிந்திருக்கும் பெண்ணின் எண்ணவோட்டத்தை சொல்வார்களா..???!

அபி போன்ற கள உறவுகள் ஆதங்கப்படுவதும் இந்த வகையில் தான்..!

எல்லாவற்றையும் பெண்ணிலைவாதக் கண்ணோடு காண்பவர்களால் சம்பவம்.. சரியான வடிவத்தில் தான் சமூகத்தை நோக்கிக் கொண்டு வரப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது..! :D

(நகைச் சுவைக்குள் உள்ள தலைப்பில் எழுதிய அம்சங்களை இங்கு நகர்த்தினால்.. இவ்விடயத்துக்கு ஒரு முழுமையான பார்வை இங்கு கிடைக்கும்..! இரு தலைப்பில் ஒரே விடயத்தைப் பற்றிக் கருத்தாடுவதில் அர்த்தமில்லை. கள நிர்வாகம் இதைக் கருத்தில் கொண்டால் நல்லம்.)

Link to comment
Share on other sites

சகாராவின் கருத்துக்கும் நாத்திகனின் கருத்துக்கும் நன்றிகள்.

சொல்லப்படாத சேதிகள் நிறைய எனது கட்டுரையுடன் தொடர்புபட்ட நிகழ்வு. தொடர்புபட்ட பெண்ணின் நலன்கருதி பலவிடயங்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. தேவையேற்படின் அவை எழுத வேண்டிய நிலை வந்தால் எழுதுவேன்.

ஒரு பெண்ணுக்கு இரக்கப்பட்டே கடிதம் போட்டோம் கருத்திட்டோம் என யாரும் கதை சொல்ல வேண்டாம். திட்டமிட்ட சதிதான் அது.

தொடர்புபட்ட மரண நிகழ்வில் ஒரு வயதானவர் வந்து நின்று ஏதோ முறையைச் சொன்னார் மூளையைக் கொடுத்தார் என்றவரின் அநாகரிகம் மிக்க சம்பந்தப்பட்ட பெண்ணை வதைக்கும்படியான வார்த்தைகளை இங்கு எழுதினால் இன்னும் சர்ச்சைகள் எழும். ஆனால் அது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நிம்மதியைக் கொடுக்காது அதனாலேயே பல விடயங்கள் எழுதப்படாமல் பொதுவாக எழுதினேன்.

வயதில் மூத்தால் மட்டும் போதாது சிந்தனையிலும் மூப்பு வேணும். மரண வீட்டில் ஆசியுரை வழங்குகிறேன் கேளுங்கள் என்றும் தான் சொல்லும் கதைகளுக்கு ஐயா நீங்கள் சொன்னதெல்லோ விசயம் என்று கைதட்டியோருக்கும் தான் இவை வெளிச்சம்.

ஒரு சாவின் முடிவு இன்னொரு உயிரை வதைத்து அவரது மகிழ்ச்சிகளைப் பறிப்பதல்ல. வதைப்புகளை சம்பிரதாயம் சாமியென்று மெழுக்கிட்டு தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு இனிமேல் சட்டத்தின் மூலம் தான் தீர்வுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நீங்கள் பெண்ணாயின் உங்களிடம் ஒருரிரு கேள்விகள்?நீங்கள் தமிழ்முறைப்படி திருமணம் முடித்தவரா?அப்படியாயின் எந்த மத முறைப்படி?தாலி,கூறை அவ்வப்போது அணிந்து வந்திருக்கின்றீர்களா?உங்கள் பிள்ளைகளுக்கு அல்லது உறவினர்களுக்கு எந்த முறையில் திருமணம் நடந்தால் நல்லது என நினைக்கின்றீர்கள்?அல்லது நீங்கள் குறிப்பிடும் பெண்ணின் நிலைமை உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?முற்போக்குவாதியாக காட்டிக்கொள்ளும் உங்களிடமிருந்து நியாயபூர்வமான பதிலை எதிபார்க்கின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்புபட்ட மரண நிகழ்வில் ஒரு வயதானவர் வந்து நின்று ஏதோ முறையைச் சொன்னார் மூளையைக் கொடுத்தார் என்றவரின் அநாகரிகம் மிக்க சம்பந்தப்பட்ட பெண்ணை வதைக்கும்படியான வார்த்தைகளை இங்கு எழுதினால் இன்னும் சர்ச்சைகள் எழும். ஆனால் அது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நிம்மதியைக் கொடுக்காது அதனாலேயே பல விடயங்கள் எழுதப்படாமல் பொதுவாக எழுதினேன்.

வயதான மனிதரைப்பற்றி நிறைய எழுதுங்கள் அம்மணி . திருத்தக்கூடிய சீர்திருத்தங்களை செய்யுங்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணை விட்டு விடுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது விவாதத்திற்கு அப்பால் ஒரு சம்பவம் குறித்த நெருடல் மனதில் இருந்து கொண்டிருந்தது. அது தமிழ்செல்வனின் வீரச்சாவின் போது வெளியான ஒரு புகைப்படத்திற்கு தமிழ்நெற் கொடுத்திருந்த விளக்கம் தொடர்பானது.

Thamilchelvan's wife Sasiroaja, who is an LTTE member, placing her yellow thread of marital tie on the remains of her husband

அதாவது தமிழ்செல்வனின் மனைவி தனது தாலியை கழற்றி தமிழ்செல்வனிடத்தில் வைப்பது போல அந்த செய்தி வெளியாகியிருந்தது. அதனை ஒரு நிகழ்வாக புலிகள் கைக்கொள்கிறார்களோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.

ஆயினும் அவ்வாறான சம்பவம் எதுவும் நடைபெறவில்லையெனவும் அது தமிழ்நெற்றின் செய்தி த் தவறு எனவும் அருகிருந்தவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது விவாதத்திற்கு அப்பால் ஒரு சம்பவம் குறித்த நெருடல் மனதில் இருந்து கொண்டிருந்தது. அது தமிழ்செல்வனின் வீரச்சாவின் போது வெளியான ஒரு புகைப்படத்திற்கு தமிழ்நெற் கொடுத்திருந்த விளக்கம் தொடர்பானது.

அதாவது தமிழ்செல்வனின் மனைவி தனது தாலியை கழற்றி தமிழ்செல்வனிடத்தில் வைப்பது போல அந்த செய்தி வெளியாகியிருந்தது. அதனை ஒரு நிகழ்வாக புலிகள் கைக்கொள்கிறார்களோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.

ஆயினும் அவ்வாறான சம்பவம் எதுவும் நடைபெறவில்லையெனவும் அது தமிழ்நெற்றின் செய்தி த் தவறு எனவும் அருகிருந்தவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட படம் இதுதான்

http://www.tamilnet.com/img/publish/2007/1...3_64994_435.jpg

அங்கிருந்து இதை உறுதிப்படுத்தியவர்கள் விபரங்களை வெளியிட முடியுமா..??!

இதை உறுதிப்படுத்தியவர்கள் தமிழ்நெட் எனும் சர்வதேச அபிமானமிக்க செய்தித் தளத்துக்கு அதை மெய்ப்பித்து.. இக்கருத்தை அதிலிருந்து அகற்றச் செய்ய முடியுமா..???!

தமிழ்நெட் செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தல்களை வழங்கி மாற்றத்தை தருவியுங்கள்.

******

யார் உங்களுக்கு இதை உறுதிப்படுத்திய செய்தியை வழங்கியவர் என்பதைக் குறிப்பிட்டால் தமிழ்நெட்டுக்கு ஒரு மின்னஞ்சல் செய்து விளக்கமும் கோரலாம்..! :D

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில், அப்பெண்ணையே முடிவெடுக்க விட்டிருக்கவேண்டும். கட்டுரையை வாசிக்கும்போது, அப்பெண் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்போல் தெரிகிறது. அதனால்தான், அவரால் மற்றவர்களை எதிர்க்க முடியாமல் போய்விட்டது. வயதானவர்கள், தாங்கள் வயதில் மூத்தவர்கள் என்பதால் தமக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல நடந்து கொள்வார்கள். அந்தப் பெண் சொன்னதுபோல, அவரவருக்கு வந்தால்தான் தெரியும். இதுவே, அவர்களது பிள்ளைகளாக இருந்திருந்தால் இப்படிச் செய்திருப்பார்களா? முக்கியமாக, முதிய ஆண்கள் இதிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அவர்களால் ஒருபோதும், அப்பெண்ணின் மனநிலையை அறிந்திருக்கமுடியாது. இப்படியான நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.

என்னைப் பொறுத்தவரை, தாலி என்பதே ஓர் அடிமைச் சின்னம்தான். பண்டைய காலங்களில், திருமணத்தை அடையாளப்படுத்துவதற்குப் பலவிதமான ஆபரணங்கள் அணியப்பட்டன. பனை ஓலையால் செய்யப்பட்ட ஆபரணங்கள்கூட திருமண அடையாளமாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றன. கொலுசுகள், சிலவகையான பூக்கள் சூடுதல், கெண்டைக்கால்களில் வளையங்கள் அணிதல் போன்றன அவ்வடையாளங்களாக இருந்தன. அதேபோல் ஆண்களுக்கும் திருமண அடையாளங்கள் இருந்தன. ஆனால், காலப்போக்கில் ஆண்களுக்கான அடையாளங்கள் அழிந்து பெண்களுக்கான அடையாளங்களைத் தொடர்ந்தும் பேணிவரப்பட்டுள்ளது. பெண்கள், தங்கள் கால் விரல்களில் அணியும் மெட்டி, ஆண்களுக்கான திருமண அடையாளமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், அதையும் பெண்கள் அணியவேண்டி வந்து விட்டது. :D:D

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணை,

*****

அந்த சம்பிரதாயத்தைக்காட்டி ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்துவது தவறு. நான் இங்கே சொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்துச் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்.

சம்பிரதாயம் காலம் இடம் இவற்றுக்கேற்ப மாறவே செய்யும். கனடாவில் -40 டிகிரி குளிரில் மாப்பிள்ளையை நடத்தி மண்டபத்துக்குக் கூட்டி வர முடியாது. அப்படி வலுக்கட்டாயமாகக் கூட்டிவந்தால் மணமகள் மாப்பிள்ளையை பிறகு விவாகரத்து செய்யவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். :lol: எனவே மாப்பிள்ளை அழைப்பு சடங்கில் ஒரு மாற்றம் செய்யவேண்டியது அவசியமாகிறது.

இப்போதெல்லாம் வெளிநாடுகளில் தமிழ்ப்பெண்கள் பொருளாதார ரீதியில் ஓரளவுக்கேனும் சுயசார்பைப்பெற்றுள்ளார்கள். அவர்கள் மற்றவர்களின் திணிப்பை ஏற்கவேண்டியதில்லை. இந்தமாதிரியான வன்முறை முயற்சிகள் மனத்தளவில் பாதிப்பை உண்டாக்கி அப்பெண்ணை ஒரு கடினமான பேர்வழியாக மாற்றவே வழிசமைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக, முதிய ஆண்கள் இதிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அவர்களால் ஒருபோதும், அப்பெண்ணின் மனநிலையை அறிந்திருக்கமுடியாது. இப்படியான நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.

பெண்கள், தங்கள் கால் விரல்களில் அணியும் மெட்டி, ஆண்களுக்கான திருமண அடையாளமாக இருந்தது.

மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு சிந்தனையோட்டம் இருக்கும். முதியவர் சிறியவர் என்று ஒதுக்கி வைச்சிட்டு இளந்தாரியளும் குமரியளும் தான் உலகத்தில பேசனும் வாழனும் என்றால்... என்ன அநியாயமான சிந்தனையா இருக்குது..!

இந்த முதியவர்களை ஒதுக்கிற சிந்தனைதான் இன்றைக்கு பல முதியவர்கள் பராமரிப்பில்லாமல் வீதியில விடப்படக் காரணமாகியுள்ளது.

முன்பெல்லாம் முதியவர்கள் மதிக்கப்பட்டார்கள். இன்று மிதிக்கப்படுகிறார்கள். மேற்கு நாடுகளில் முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தான் அதிக சலுகைகள். காரணம் இந்த இரு தரப்பும் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் தயவை வேண்டி நிற்பவை என்பதால்.

முதியவர்கள் புரிந்துணர்வற்றவர்கள் அல்ல. அவர்களுடன் அவர்களுக்கு ஏற்ற வகையில் விடயங்களை விளக்கும் போது மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வார்கள். எவ்வாறு சிறுவர்களை அணுகிறமோ அதே மாதிரி முதியவர்களையும் தனித்தன்மையோடு அணுகி அவர்களையும் சமூகத்துக்குள் இயங்க வைக்க வேண்டும்.

எந்த மனிதனையும் ஒதுக்கி வைக்கும் சிந்தனை.. அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

நீங்கள் முதியவர்களை ஒதுக்கி வைக்கக் கோரின் அப்படியே சிறுவர்கள் உடல்நலக் குறைவுள்ளோர் பொருண்மியக் குறைவுள்ளோர் கல்வி அறிவில் குறைவுடையோர் நாகரிக உயர்வற்றோர் என்று பாகுபாடுகளும் ஒதுக்கி வைப்புக்களும் மனங்களில் விதைக்கப்படும்..! அது சமூக ஏற்றத்தாழ்வுக்கு வித்திடும்.

எனவே தமிழச்சி முதலில் முதியோர்களை ஒதுக்கி வையுங்கள் என்ற சிந்தனையை குப்பையில் போடுங்கள். அவர்களையும் உங்கள் நண்பர்களாக்கிப் பழகிப் பாருங்கள்.. நிச்சயம்.. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு வியப்படைவீர்கள்..! அவர்கள் அனுபவத்தால் முதிர்ந்தவர்கள். அனுபவமற்றவர்களால் அவர்களை இலகுவில் புரிந்து கொள்ளவும் முடியாது. முயன்று பாருங்கள்.

அதேபோல் சிறுவர்களையும் புறக்கணிக்காதீர்கள். அவர்கள் பயில்வாங்கள். அதாவது சூழலைப் பார்த்துப் பயில்பவர்கள். நீங்கள் அவர்களைப் புறக்கணித்துச் செய்யும் காரியங்கள் அவர்களைத் தவறாக வழிநடத்தக் கூடும்.

-------------------

இன்றைய பெண்கள் ஆண்கள் உடுக்கும் ஜீன்சில் இருந்து சவ்லார்.. சுடிதார் ஈறாக எல்லாம் அடிமையின் சின்னம் தான். எவையும் தமிழர்களுக்குரியவையல்ல. பிறருக்கு உரியவை.

இன்றைய பெண்கள் அணியும் ஆபரணங்கள் பெரிதும் கூட அந்நிய நாகரிகத்தின் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துபவை. அதற்காக அவற்றைக் கைவிடத் தயாரில்லை.

ஆனால் தமிழர்கள் பாரம்பரியமாக அணிந்துவரும் தாலி மட்டும் பெண்களுக்கு அடிமைச் சின்னமாகத் தெரிகிறது. காரணம்.. அதை கணவன் அன்புப் பரிசாக்கி அணிவதால். இதையே ஒரு காதலன் நெக்கிளசா வாங்கிக் கொடுத்தால் வழிஞ்சு கொண்டு போடுவம்..!

தமிழச்சி..தண்டை என்பதுதான் ஆண்கள் காலில் அணியும் அணிகலன். மெட்டி அல்ல. மெட்டி அன்றும் இன்றும் பெண்களதே. தோடு பெண்களது. கடுக்கன் ஆண்களது. பண்டைய காலத்தில் ஆண்களும் தாலி அணிந்திருக்கின்றனர். அந்நிய ஆதிக்கங்களின் தாக்கத்தால் பெண்களிடம் நிலைத்த தாலி ஆண்களிடம் இல்லாமல் போய்விட்டது. அதற்குக் காரணம்.. ஆண்கள் வெளியில் சென்று வரும் போது ஆபத்துக்களைத் தவிர்க்க.. அந்நியரால் அதிகம் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு... அந்நியப் கலாசாரப் புகுத்தலுக்கு இலக்கானதால் என்று பல காரணங்கள். பெண்கள் கற்காலத்தில் இருந்து குகைகளில் தாம் இருக்க.. ஆண்களை வெளியில் அனுப்பி தான் வாழ்க்கையை ஓட்டினர்.

ஆனால் தொழில்புரட்சி தொழில்நுட்பப் புரட்சி என்பன ஏற்படுத்திய மனித வலுத் தேவையை சரிக்கட்ட சட்டவாக்கங்கள் மூலம் பெண்களை பாதுகாத்தால் பெண்களின் மனித வலுவையும் தொழில்புரட்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற ஆண்களின் சிந்தனைதான் பெண்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர தூண்டுதலாக அமைந்தது.

பெண்கள் ஏற்றுக் கொண்டால் என்ன விட்டால் என்ன உயிரியல் உடலமைப்பியல் படி அவர்கள் ஆண்களை விடப் பலவீனமாக இருந்ததால்.. ஆண்கள் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் கடமையைக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் ஆண்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு.. சட்டங்களும் சட்டத்தைக் காக்க உள்ளவர்களும் பெண்களை - மனிதர்களை பாதுகாக்க வகை செய்வதால் பெண்கள் சுதந்திரமா வெளிய வரலாம் என்று அழைக்கப்பட்டதன் விளைவே "பெண் விடுதலை" என்பது. பல பெண்களுக்கும் சில ஆண்களுக்கும் இந்த உண்மை புரிவதில்லை.

உண்மையில் தொழில்புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி ஏற்படுத்திய மனித வலுத்தேவை தான் பெண்களை வீட்டுக்குள் இருந்து வெளிய வர வைத்ததே தவிர.. ஆண்கள் அடக்கி பெண்களை அடிமைப்படுத்தி வீடுகளுக்குள் அடைத்து வைக்க பெண்கள் போராடி வெளிய வந்து சுதந்திரம் அடைந்ததாக அடைவதாகச் சொல்வது சுத்தப் பித்தலாட்ட வாதம்.

பண்டைய காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியில் போக விடார்கள். காரணம் பெண்களுக்கு தங்களைத் தற்காக்கும் திறன் ஆண்களை ஒத்ததான உடல் வலிமையோடு இல்லாதிருந்தமையே. மனிதரால் மட்டுமன்றி விலங்குகளாலும் மனிதர்கள் தாக்கப்பட்டதால் இந்த நிலை இருந்தது.

ஆனால் தொழில்புரட்சியும், அதன் பின்னான தொழில்நுட்பப் புரட்சியும்.. ஆண்களின் வழித்துணை பெண்களுக்கு அவசியமில்லை என்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் ஆண்களால் மனித செயற்கைச் சூழல் உருவாக்கப்பட்ட பின் தொழில்புரட்சிக்கும் தொழில்நுட்பப் புரட்சிக்கும் அதிகரிக்கும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கவும் பெண்களின் மனித வலுவைப் பாவிக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்ததால் பெண்கள் வீட்டுக்குள் பதுங்கி இருக்க வேண்டிய நிலை களையப்பட்டு.. சுதந்திரமளிக்கப்பட்டனர். இதை வேற்றுக் கிரகவாசிகள் வந்து செய்யவில்லை. ஆண்கள் தான் செய்தனர். இப்படிப்பட்ட ஆண்களை இன்று பெண்கள் எப்படி இனங்காண்கிறார்கள் தெரியுமா.. பெண்களை அடிமைப்படித்திய ஆதிக்க சக்திகளாக..??! இது பெண்களின் சிந்தனையாற்றல் குறித்த கேள்விக்குறியையே எழுப்பி நிற்கிறது.

இன்றும் பெண்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ஆண் தான் உடல்பலமானவன். அதை உலகெங்கும் காணலாம். எனவே பெண்கள் ஆண்களுக்கு சரி நிகர் என்ற நிலை ஏற்புடையதல்ல. சமூகவியல் சார்ந்து இருவரும் ஒரு நிலைக்குரியவர் என்பதே உண்மை. மனிதன் என்ற அடிப்படையில் இருவருக்கும் ஒரே உரிமைகளே உண்டு. இன்றைய உலகு அதை இருவரும் பாவிக்க இடமளித்தே உள்ளது.

இந்த நிலையில் ஒரு அன்புப் பரிசான தாலி பெண்களை அடிமைப்படுத்தும் சின்னம் என்பது கேலிக்குரிய விடயம். பெண்கள் அன்பளிப்பாக அளிக்கும் மோதிரத்தை அணியும் எந்த ஆணும் அது அடிமைச் சின்னம் என்று சொல்வதில்லை. பெண்கள் ஆண்களுக்கும் அன்புப்பரிசு அளிக்கலாமே. விடுபட்டுப் போன ஆண்களும் தாலி அணியும் நிலை தொடரப்படலாமே..!

அது இரண்டு வகைக்கு நல்லது. ஒன்று ஆண்களிடமும் தனிமனித ஒழுக்கம் வளர உதவும். இரண்டாவது அன்பின் கனதி உணரப்படும்.

அதைவிடுத்து எதற்காக.. நெக்கிளஸை ஏற்கிற கழுத்துகள்.. தாலியை மறுக்கின்றன..??????! பெண்கள் தனிமனித ஒழுக்கத்தை இழக்க அவை தடையாக இருக்கும் என்பதாலா..???!

இப்ப எல்லாம் திருமணமான பெண்கள் திருமணமான பின் இன்னொருவரைக் காதலிச்சு ஓடுறது சர்வ சாதாரணமாகி வருவதற்கு தாலி தடையென்பதாலா. நிச்சயமா அதற்கு தாலி தடையில்ல. தாலி ஒன்றும் உடலோட ஒட்டி உள்ள அம்சமல்ல. அல்லது ரகசியக் கமராவோ அல்ல. நீங்கள் கழற்றி வைச்சிட்டு உங்கட தனிமனித ஒழுக்கத்தை மீறிறதைச் செய்யலாம். அது உங்கட மனசு சம்பந்தப்பட்ட விடயம். அதை அடிமைச் சின்னமாப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அன்புச் சின்னமாப் பாருங்க..! அந்தச் சின்னம் நீங்கள் தவறிழைக்க சிந்திக்கும் போது உங்களுக்குள் ஒரு உறுத்தலைத் தரும் தான். என்ன செய்வது.. தவறிழைக்கப் போறவனையும் தடுக்க ஒரு வழி வேணும். அதையும் மீறிச் செய்வன் என்றவனை.. தடுக்கவே முடியாது.

ஜெயிலுக்க போறவனுக்கு ஏன் ரக் கட்டினம்.. தொடர்ந்து தவறிழைக்க மாட்டான் அல்லது கண்காணிக்க என்றுதான். அதற்காக தாலியை ரக் என்று சொல்ல வரேல்ல. அதேபோல் ஆண்களுக்கு அணிவிக்கப்படும் மோதிரம் கூட ரக் இல்ல. கைதிட ரக்கை கழற்றுவது குற்றம். தாலியை மோதிரத்தை கழற்றுவது அவரவர் விருப்பம். ஆனால் அது உங்களின் தனி ஒழுக்கத்தைப் பற்றி உங்களின் மனச்சாட்சியை தட்டிக்கேட்கிற.. ரக் ஆகவும் இருக்கலாம். வெறும் அன்புப் பரிசு என்று மட்டும் இல்லாமல்..!

உண்மையான அன்பிருந்தா.. அதை மாட்டிக்க உருவமில்லை என்பதால தாலியை மாட்டிக்கிறாங்க. ஆண்கள் பெண்களுக்கு மாட்டிகிறாப் போல.. பெண்களும் ஒன்றை ஆண்களுக்கு மாட்டிக்குங்க. அது வாஸ்தவம். அன்பில்லாதவங்க.. போலியா எவ்வளவு காலந்தான் ஏமாற்ற ஏலும் ஒருவரை.. எனவே.. தாலியை அறுக்க வேண்டியதுதான் கணவன் இருக்கும் போதே.. அல்லது வேலியைப் பாய வேண்டியதுதான்.. தாலி இருக்கும் போதே..!

ஒருவர் செய்யும் குற்றத்தை அவர்தான் முழுமையாக உணர முடியும். இயற்கை ஒன்றைச் செய்திருக்குது.. எவனொருவன் அல்லது ஒருத்தி தவறு செய்தாலும் அவன் அல்லது அவள் தான் அதற்காக முழுமையாக வருந்துவான் அல்லது வருந்துவாள்...! அதை தாலியும் அறியாது.. பிறரும் அறியார். தாலியைப் போய் திட்டாதீங்க. அது சடப்பொருள்..! அது சாட்சி சொல்லவும் லாய்க்கற்றது.அது எந்தவகையிலும் உங்களை அடிமைப்படுத்தி வைக்கும் ஆற்றலைக் கொண்டதல்ல. அது வெறும் தங்க ஆபரணம்... அல்லது ஒரு மஞ்சள் கிழங்கு அவ்வளவும் தான். அன்பின் அடையாளமா இருக்குது.. தற்ஸோல். :wub::lol:

Link to comment
Share on other sites

தண்டை என்பது எல்லா ஆண்களும் அணியும் ஒரு அணிகலன். ஆனால், மெட்டி என்பது பண்டையகாலத்தில் திருமணமான ஆண்கள் அணிவது. ஏனென்றால், அந்தக்காலத்துப் பெண்கள், தலை நிமிர்ந்து பார்ப்பதில்லை. தலைகுனிந்து வரும் பெண்கள், திருமணமான ஆண்களை அடையாளம் காண்பதற்காகவே மெட்டி வந்தது. ஆனால், காலப்போக்கில், அதுவும் பெண்கள் தலையில் (மன்னிக்கவும் - காலில்) கட்டிவிட(பூட்டிவிட)ப்பட்டது.

நிமிர்ந்து வரும் ஆண்கள் திருமணமான பெண்ணை தாலி மூலம் அறிந்து கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டை என்பது எல்லா ஆண்களும் அணியும் ஒரு அணிகலன். ஆனால், மெட்டி என்பது பண்டையகாலத்தில் திருமணமான ஆண்கள் அணிவது. ஏனென்றால், அந்தக்காலத்துப் பெண்கள், தலை நிமிர்ந்து பார்ப்பதில்லை. தலைகுனிந்து வரும் பெண்கள், திருமணமான ஆண்களை அடையாளம் காண்பதற்காகவே மெட்டி வந்தது. ஆனால், காலப்போக்கில், அதுவும் பெண்கள் தலையில் (மன்னிக்கவும் - காலில்) கட்டிவிட(பூட்டிவிட)ப்பட்டது.

நிமிர்ந்து வரும் ஆண்கள் திருமணமான பெண்ணை தாலி மூலம் அறிந்து கொள்கிறார்கள்.

பண்டைக் காலத்தில் தண்டை ஆண்களால் அணியப்பட்டது. இன்று மெட்டி, தண்டை, கொலுசு எல்லாமே பெண்கள் அணியுறாங்க. அவங்க எதையும் விட்டு வைக்கல்ல. பெண்களை யாரும் வற்புறுத்தாமலே அவர்கள் ஆடம்பரப் பொருட்கள் மீது நாட்டத்தைக் கொண்டிருப்பது உலகெங்கும் தெரிந்த விடயமே..!

அதுமட்டுமன்றி பெண்கள் அணியும் ஆபரணங்கள் பார உலோகங்களால் ஆனவை. அவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடியவை.

கீழுள்ள கட்டுரையைப் படியுங்கள்.. பெண்கள் நீடித்த ஆயுளைப் பெற அவங்க அணியும் ஆபரணங்களும் காரணமோ தெரியல்ல..! :lol:

http://tamil.sify.com/amudhasurabi/august0...php?id=13535035

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் செய்யப் படும் சடங்குகள் பொதுவாக இழப்பின் துயரைத் துடைப்பதாக இருக்க வேண்டுமேயொழிய வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கக் கூடாது. மதச்சடங்கு, பெரியோரின் வழிநடத்தல், பெண்ணியப் புரட்சி இப்படியெல்லாம் பார்க்காமல் அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சாந்தி தலையிட முயன்றதும் முடியாத நிலையில் செய்தவர்களைக் காயப் படுத்தியதும் பாராட்டப் படவேண்டிய விடயங்கள்.இப்படி ஒரு தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் இதே மாதிரியான சம்பவம் (அது அறுப்போ, வன்பறிப்போ அல்லது கழட்டச் செய்தலோ, அணிந்திருப்பவரின் அனுமதியின்றிச் செய்தலைச் சொல்கிறேன்!)புலத்திலோ அல்லது கு.சா அக்கறைப் படுவது போல தாயகத்திலோ எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கலாம் என நம்புகிறேன். அந்தரங்கத்தில் சம்பவத்தைப் பற்றி எழுதியவர் தலையிட்டார் என்கிறார்கள். அவர் தலையிட முன்னமே ஒரு நூறு சனத்துக்கு முன்னால் அந்தப் பெண்ணின் அந்தரங்கம் மிதிக்கப் பட்டிருப்பதை சௌகரியமாக மறந்து விட்டார்கள் பெரியவர்கள் (?). தாலி கழட்டும் சடங்கு மட்டுமல்ல, வேறு சில சடங்குகளும் எங்கள் மரணவீடுகளில் இழப்பின் துயரத்தைக் கூட்டுவது போல நான் கண்டிருக்கிறேன். அப்பா இறந்து விட்டாரா அல்லது தூங்குகிறாரா என்று தெரியாமல் நிற்கும் பச்சிளம் பாலகனை, மொட்டையடித்து அவன் கையாலேயே உறங்கும் அப்பாவுக்குக் கொள்ளி போட வைக்கும் முறைமையும் இதில் அடக்கம். தவிர்க்க முடியாத மரணத்தை, வாழும் மனிதர்களுக்கு ஒரு பயனுள்ள செய்தியாக மாற்றும் நடைமுறைகளை மேற்கு நாட்டுக் காரர்கள் செய்கிறார்கள்.எத்தனை விஷயங்களை நமது சௌகரியம் கருதி மேற்கு நாட்டுப் பாணியில் மாற்றியிருக்கிறோம்? இது மாதிரியான எதிர் விளைவுகள் தரும் சடங்குகளை விட்டு விட்டு வித்தியாசமாகச் செய்தால் இழப்பைத் தாங்க வேண்டிய உறவுகளுக்கு நன்மை செய்ததாக ஆகாதா?தாலி கழட்டியே ஆக வேண்டுமென்று வன்பறிப்புச் செய்தவர்களும் அதைப் பார்த்து வாளாவிருந்தவர்களும் நூறு வீதம் இன மதக் கலாச்சாரத்தைப் பேணும் தமிழ்க்குடிகள் தானா என எத்தனை பேருக்குத் தெரியும்? வாரக் கடைசி ஒன்று கூடல்களும், குத்தாட்டங்களும், எம்மவர் புலத்தில் மூழ்கியெழும் வைன், சம்பெயின் போத்தல்களும் நமது சௌகரியத்திற்காக உள்நுழைந்த மேற்கு நாட்டுக் கலாச்சாரமாக இருக்கையில், ஒரு வேண்டாத முறைமையை ஒதுக்கி வைக்க கலாச்சாரப் பேணலைக் காரணமாகக் காட்டுவது எம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளும் செயல்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், முதியவர்களை ஒதுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அவர்களின் பிற்போக்கு சிந்தனைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறியவர்களும்தான். அவர்களுக்கு நிச்சயமாக அனுபவம் இருக்கிறதுதான். ஆனால் அவர்களின் அனுபவங்கள் பெரும்பாலும் தாயக வாழ்க்கைக்கே பொருந்தும். இன்றைய சூழலில் அவர்களின் அறிவுரைகளும், அனுபவங்களும் புலம்பெயர்ந்த நாடுகளுக்குப் பொருத்தமற்றவை.

பலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல, தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிப்பதைத்தான் நான் எதிர்க்கிறேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து பார்க்க மறுக்கிறார்கள். எத்தனையோ பெண்கள் கணவன் இறந்தபிறகு, தமக்கு இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்பது போல வாழுகிறார்கள். அது அவர்கள் தானாக எடுத்த முடிவாக இருக்கவேண்டுமே தவிர, மற்றவர்களின் தலையீட்டால் இருக்கக்கூடாது. இச்சம்பவத்தின்போது, அப்பெண் மறுத்த பின்பு, அவரை அப்படியே விட்டிருக்கவேண்டும். தாலியைக் கழட்டுமாறு நிர்ப்பந்தித்திருக்கக் கூடாது. துயர்நிறைந்த ஒரு மரணச்சடங்கின்போது, இவ்வாறு நடந்து கொண்டவர்களை அனுபவம் மிக்கவர்கள் என்று கூறமுடியுமா? எல்லோருமே, சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சம்பவம் நடந்தபோது, அவர்கள் கழட்டுமாறு கூறியபோது, அப்பெண் தாலியைக் கழட்டியிருந்தால், இவ்விடயம் விவாதத்திற்குரிய ஒரு விடயமாக இருந்திருக்காது. இதற்குக் காரணம் அங்கிருந்து அறிவுறுத்திய முதியவரே. அப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் முதியவர்களில் பலர் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, மற்றவர்களைச் சார்ந்து வாழ்ந்தோ அல்லது வயதான காலத்திலும் வேலை செய்தோ வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்களின் வாழ்வு வேதனைக்குரியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், முதியவர்களை ஒதுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அவர்களின் பிற்போக்கு சிந்தனைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறியவர்களும்தான். அவர்களுக்கு நிச்சயமாக அனுபவம் இருக்கிறதுதான். ஆனால் அவர்களின் அனுபவங்கள் பெரும்பாலும் தாயக வாழ்க்கைக்கே பொருந்தும். இன்றைய சூழலில் அவர்களின் அறிவுரைகளும், அனுபவங்களும் புலம்பெயர்ந்த நாடுகளுக்குப் பொருத்தமற்றவை.

பெரியவர்களின் சிந்தனை பிற்போக்கு.. இளையவர்களின் சிந்தனை முற்போக்கு என்று எப்படிச் சொல்லுறீங்க..??!

நான் பார்த்த அளவில இளையவர்களின் சிந்தனை கற்காலத்துக்க நிற்குது...???! கற்காலத்தில மனிதன் அறிவுவளர்ச்சி இன்றி உடையின்றி அலைந்தான்.. இல்ல அரைகுறையோட அலைந்தான்.. இன்று மேற்கில.. நாகரிகம் என்ற போர்வையில அப்படித்தான் அலையுறான்..

கற்காலத்தில உறவுமுறை என்பதன் சிந்தனை இன்றி கண்டதும் புணர்ந்து வாழ்ந்த மனிதன்.. மேற்கில இப்பவும் அப்படித்தான் வாழ்கிறான்...(எல்லாரும் இல்ல.. மேற்கிலும் சிந்திக்கிற மக்களும் சமூகக் கட்டுக்கோப்பை விரும்பிற வெள்ளியின மக்களும் இருக்கினம்)..

கற்காலத்தில ஏனைய உயிரினங்களைப் போல இயற்கையாக எழும் உணர்வுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தான்.. இன்று சிந்தனையால் தன்னைக் கட்டுப்படுத்தி வாழ வேண்டிய மனிதன் போதை ஊட்டி உணர்விழந்து சிந்தனை இழந்து வாழ்கிறான்...

இவையெல்லாம் எந்த வகையில் முற்போக்கு...

ஆணும் பெண்ணும் ஒரே கூட்டத்தில கும்மாளம் அடிக்கிறது முற்போக்கு.. ஆணும் பெண்ணும் தூர இருந்து சிந்திக்க செயற்பட செய்வது பிற்போக்கா...???! என்னே வரைவிலக்கணங்கள்.. ஆளாளுக்கு ஏற்றது போல...!

கள்வன் சாதாரணமானவைப் பார்த்துக் கேட்டானாம்.. ஜெயில் போல் மாளிகையில் நீ வாழ்ந்திருக்கிறாயா என்று.. இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளையவர்களின் முற்போக்கு...???! :(:lol:

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் முதியவர்களில் பலர் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, மற்றவர்களைச் சார்ந்து வாழ்ந்தோ அல்லது வயதான காலத்திலும் வேலை செய்தோ வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்களின் வாழ்வு வேதனைக்குரியதுதான்.

நீங்கள் உங்களுக்குள் ஒரு தீர்க்கமான முடிவோடு இருக்கிறீர்கள்.. முதியவர்கள் மேற்குல வாழ்க்கை முறையோடு ஒட்டி வாழ முடியாதவர்கள்.. வாழக் கூடிய வகையில் அவர்கள் ஊரில் தயார்ப்படுத்தப்படவில்லை என்று..

இதுதான் இளையவர்கள் பலரின் சிந்தனை. இது முற்றிலும் தவறான தம்மைப் பற்றிய ஒரு மிகைப்படுத்திய சமூக நிலை...!

மேற்குலகில் இருக்கும் வெள்ளையின முதியவர்கள் கூட இன்றைய அவர்களின் இளைய சமூகம் குறித்து மிகுந்த கவலையும் வேதனையும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை உங்களை வந்தடைத்திருக்கிறதா...???!

எங்கையேன் தமிழாக்கள் மட்டும் உலவுகிற ஊருக்குல்ல இருந்தா இதைக் காண முடியாது..!

வன்முறைத்தனமான சிந்தனை நிறைந்த சமூகக் கட்டமைப்புப் பற்றிய சிந்தனையற்ற ஒரு இளம் சமூகம் உருவாகியுள்ளத்தை இட்டு மேற்குலக மக்கள் கவலைப்படாமல் இல்லை. அவர்கள் அதற்காக வெறுமனவே கவலைப்பட்டுக் கொண்டு.. கட்டுரை எழுதிக் கொண்டு மட்டும் நிற்கவில்லை. அப்படியான இளைய சமூகத்துக்கு ஏற்ப சூழலைத் தயார் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு கொண்டுள்ளனர்.

அதேபோதான்.. முதியவர்கள் பிற்போக்கானவர்கள்.. அவர்கள் மேற்கில் எம்மைப் போல.. வாழ லாக்கில்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களை மட்டம் தட்டி உங்களைப் பற்றி ஒரு மேன்மையை போலியாகக் காட்டுவதிலும்.. அந்த முதியவர்களும் வாழத்தக்க சூழலை அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை. அது உங்களிடம் இருக்கிறதா...???! இல்லை என்பதையே உங்கள் கருத்து சுட்டிக்காட்டுகிறது..!

ஈழத்தில் முதியவர்களை சிறுவர்களுக்கு ஈடாக நடத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதை இளைய சமூகம் தான் செய்கிறது. அது அந்த இளைய சமூகத்தின் சமூக நலன் நோக்கிய முற்போக்கான சிந்தனையின் வெளிப்பாடு. ஆனால் புலம்பெயர்ந்துள்ள நீங்க.. என்னத்தைச் சிந்திக்கிறீங்க என்று பாருங்கள்..???! இதுவா முற்போக்கு... கடைஞ்செடுத்த.. பிற்போக்குத்தனம்..! :(

Link to comment
Share on other sites

மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களைப் பெரியவர்கள் என்று எவ்வாறு அழைக்கலாம்.ஒருவர் பெரியவர் ஆவதும் சிறுயவர் ஆவதும் அவரின் வயசால் அல்ல, அவர்களின் செய்கைகளால்,சிந்தனைகளால்.

காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட ஒருவரை பெரியவர் என்று சொல்ல முடியாது.

ஒரு துயரமான நிலையில் மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் வேண்டப்படும் நிலையில் ஒருவர் தனது காட்டுமிராண்டிகளின் கால நெறிகளை மதத்தின் பெயரால் செய்ததை இங்கு , மத வெறியின் பாற்பட்டு நியாயப்படுத்த முயல்பவர்கள் மனித நேயம் அற்றவர்கள்.

இந்த மனித நேயம் அற்ற காடுமிராண்டிகளின் சமயத்தை இன்னும் ஏன் பின் பற்றுகிறீர்கள்?

இந்தக் காட்டுமிராண்டிகளை மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைப்பதே இவர்களுக்கான பாடமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைய தலைமுறை, முற்போக்கு எண்டவுடன் நெடுக்கருக்குத் தெரிவதெல்லாம் ஆணும் பெண்ணும் கூடிக் கூத்தடிப்பது மட்டும் தான். மேற்குலகில் முற்போக்கு எப்படியான வடிவங்களில் இருக்கிறது என்ற தேடலும் அறிவும் இல்லாமல் பொதுவான கருத்திலிருந்து தன் கருத்தைச் செதுக்கி வைத்திருக்கும் ஒருவரிடம் இதைத் தான் எதிர்பார்க்க முடியும். மதம், கலாச்சாரம் என்ற எந்தப் போர்வை போர்த்திக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பது மேற்கு நாட்டவரின் முற்போக்குக்கு அடிப்படையாக இருக்கிறது. இதனால் இளம் பிள்ளைகள் சில சமயம் தமது பெற்றோரின் வழிநடத்துதலையே இழக்க வேண்டி ஏற்படுவதும் அதனால் சிலர் தடம் மாறி வாழ்வை இழப்பதும் இங்கே நடப்பது தான். ஆனால் அவர்களது சமூக முன்னேற்றம், பொருளாதார வளம் என்பனவும் இந்த முற்போக்கின் விளைவுகள் தான். முன்னோர் எழுதி வைத்து விட்டுப் போனதைக் காப்பதற்காக நாம் அர்த்தமில்லாததை எல்லாம் இன்னும் காவித்திரிவதும் கலாச்சாரம் பேணுகிறோம் என்று கொண்டாடுவதும் எந்த வகையில் எம் இளையோரை வழிப் படுத்தும் என்று மட்டும் நெடுக்கர் போன்றோர் விளக்க மாட்டார்கள்.ஏனெனில் நாம் காவித்திரியும் வெற்றுச் சடங்குகள் அர்த்தமற்றவை என்பது இவர்களுக்கும் தெரியும், பிறகெப்படி அதை நியாயப் படுத்துவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் யஸ்ரின்

எனக்கும் பேசாமல் அல்லுலோசாக்காரன் தாற காசை வாங்கிக் கொண்டு மதம் மாறிடலாம் போலத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் யஸ்ரின்

எனக்கும் பேசாமல் அல்லுலோசாக்காரன் தாற காசை வாங்கிக் கொண்டு மதம் மாறிடலாம் போலத் தோன்றுகின்றது.

இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? இது ஒரு பதில் கருத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய மத கலாச்சார இன கருத்தாடல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எமது ஈழம் எதிர்காலத்தில் எப்படி உருவாக வேண்டுமென அவரவர் சிந்தனைகளை இங்கே சிந்திக்குமாறு வேண்டுகின்றேன். :lol:

Link to comment
Share on other sites

ஆமாம் யஸ்ரின்

எனக்கும் பேசாமல் அல்லுலோசாக்காரன் தாற காசை வாங்கிக் கொண்டு மதம் மாறிடலாம் போலத் தோன்றுகின்றது.

இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? இது ஒரு பதில் கருத்தா?

பொதுவான பதில் இதுவாகத்தான் உள்ளது. அம்பேத்கார் வழிகாட்டலில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் பொளத்த மதத்திற்கு தழுவினார்கள் அவர்களை பொளத்த மதம் அழைக்கவும் இல்லை காசு கொடுக்கவும் இல்லை. அவர்களாக போய்சேர்ந்தார்கள். இந்து மதத்தின் கொடுமையில் இருந்து விடுபடும் போரட்டத்தில் அது ஒரு அம்சமாக இருந்தது. பிராணிகளை விட மோசமான வகையில் கோட்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்ட இற்றைக்கு 17 மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தை சார்ந்தவர்கள்.

மதம் மாறுபவன் எல்லாம் காசுக்கு மாறுகின்றான் என்பதே பதில். இந்த பதில் ஏன் என்பது உலகறிந்த உண்மை. இந்து மதத்தில் பற்று வைத்திருப்பவன் அந்த மதத்தில் உள்ள அழுக்கை போக்க முன்வந்திருக்கின்றானா? அல்லது அழுக்கை போக்க முற்பட்டவனை ஏற்றுக்கொண்டிருக்கின்றான? இரண்டையும் செய்யமாட்டான். இதற்கு யாழ்களத்தில் இது சம்மந்தப்பட்ட பல விவாதங்கள் சாட்சியாக உள்ளது. குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமிய மக்களின் இடுகாட்டுக்கு சென்று கல்லறைகளை தோண்டி எலும்புகளை எடுத்து பெற்றோல் ஊற்றி கொழுத்திய வெறி பிடித்த மோடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குபவனும் இங்கு உண்டு. எம்பெருமானின் பசு பதி பாசத்தில் ஊறி பக்தியில் பழுத்த குழந்தைகள் அவர்கள்?

Link to comment
Share on other sites

உண்மையில் நல்லதொரு கருத்து சுகன்.ஆனால் இந்து மததத்திலிருந்து மதம் மாறுபவனை பணத்திற்காகவும் பாணுக்காவும் மாறுகிறான் என்று தூற்றுபவர்கள் அவன் மதம் மாறுவதற்கான அடிப்படை பிரச்சனைகளை ஆராய்வதில்லை; அதே போல சில எழுந்தமனதாக மதம் மாறியவனும் தான் தன்னுடைய மதத்திலிருந்தே தன்னுடைய மதத்தின் சீர்கேடுகளை சீர்தூக்க எந்தளவு முயற்சி செய்தேன் என்றும் சிந்தித்து பார்ப்பதில்லை.மதத்தை மாறிவிட்டு தன் சார்ந்த பழைய மதத்தை திட்டுவது என்பது.இதைதவிர்த்து சாமியும் இல்லை மதமும் இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களோ புதியதொரு மதத்தை உரு வாக்குகின்றார்கள். உதாரமாக எனக்கு தெரிந்த முதல் நாத்திகன் புத்தன் ஆனால் இன்று புத்தன் பெயராலே ஒரு மதம் சாத்திரம் சம்பிரதாயம் வழிபாட்டு முறை என்று எல்லாத்தையும் எதிர்து அன்பே கடவுள் அடுத்தவனை அன்பு செய் என்கிற அந்த மதத்தை நிலை நிறுத்த எத்தனை கொலைகள் அதே பேல சிலையை உடைத்து சிலையில் கடவுள் இல்லை மனிதனே கடவுள் என்ற பெரியாரிற்கு சிலை வைத்து அவரை ஒரு கடவுளாக்கும் கூட்டம.; இதே சிலைக்கு நாளையொருவன் மாலையிடுவான் இன்னொருவன் பால் வார்ப்பான் இதே சிலை கடவளாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைய தலைமுறை, முற்போக்கு எண்டவுடன் நெடுக்கருக்குத் தெரிவதெல்லாம் ஆணும் பெண்ணும் கூடிக் கூத்தடிப்பது மட்டும் தான். மேற்குலகில் முற்போக்கு எப்படியான வடிவங்களில் இருக்கிறது என்ற தேடலும் அறிவும் இல்லாமல் பொதுவான கருத்திலிருந்து தன் கருத்தைச் செதுக்கி வைத்திருக்கும் ஒருவரிடம் இதைத் தான் எதிர்பார்க்க முடியும்.

இளைய தலைமுறை தானாகச் சிந்தித்து செயற்பாட்டில் காட்டிக் கொண்டிருக்கும் முற்போக்குகள் கொஞ்சம் பட்டியலிட்டு விட்டு.. அதன் பின்னர் கருத்தாளர்களை அளவீடு செய்வதைத் தொடர்வது மேலானது என்று நினைக்கிறேன்.

எனக்கென்றால் எம் முன்னோர் சிந்தித்த அளவுக்கு இன்றைய இளைய சமூகத்திடம் தூர நோக்குள்ள முற்போக்குச் சிந்தனை அருகி வருகிறதாகவே தென்படுகிறது..! பல விடயங்களில்.. பார்த்திருக்கிறேன்.

ஆணும் பெண்ணும் கூடிக் குலாவுறதில கண்ட சுதந்திரத்தைத்தான் உங்க கன பேர் தனிமனித சுதந்திரம் என்று பினாத்திட்டுத் திரியினம்.

தனி மனித சுதந்திரம் என்ற ஒன்று அங்க ஒன்று விசித்திரமா இல்லை. சட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் சமூக விதிமுறைகளும் அடங்கிய உலகில் வரையறுக்கப்பட்ட உரிமையோடுதான் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அப்படி தனிமனித சுந்திரம் கதைக்கிறதென்றால்.. ஒரு பெண்ணை வற்புறுத்தி சேருறதும்.. அவனின் சுதந்திரம் என்றுவியள் போல இருக்கே..! விட்டா.. தலையில மிளகாய் அரைச்சு சட்னி சாம்பாரோட விருந்தே வைச்சிருவியள் போலக் கிடக்கு..! :(:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.