Jump to content

ஜயோ என்ட கோமணம்....நான் கழற்றமாட்டேன்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முமுமுமுமுமுமுமுமுமுமும

Link to comment
Share on other sites

டேய் ஜமுனா! உந்த சின்ன வயதிலையே பழம் திண்டு கொட்டை போட்டுட்டாயடா :rolleyes:

இது மற்றவர்களின் பிரச்சனையில் குளிர்காய்பவர்களுக்கு சாட்டையடியல்ல உலக்கை இடி :rolleyes: எனக்கு உந்த இருபேப்பர் கதை ஊரிலை "தீப்பொறி"பேப்பர் பார்த்த மாதிரி இருக்கு :lol:

என்னயிருந்தாலும் கோவணத்திலை இருக்கிற சுவாரசியம் மற்ற ஒண்டுலையுமே இல்லை(காற்றோட்டமானது) :rolleyes:

எழுதடாச்செல்லம் எழுது இந்த கிழவன் எப்பவும் உன்ரை பக்கந்தான் :D

ஆமா தண்னியடிச்சிட்டு மப்பில விழுந்துகிடக்கும் போது நாய் உங்க கோமணக்தை இழுத்திட்டு போன நாய் வாசம் தாங்காம மயக்கம் போட்டு விழுந்திச்சாம் உண்மையா குசா தாத்தா?

Link to comment
Share on other sites

வணக்கம் ஜம்மு அண்ணா,

இரு பேப்பருக்காக நீங்கள் எழுதிய நேரடியாக பார்த்த சம்பவம் :rolleyes: மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரு பேப்பருக்கான அப்பப்போ வரும் விசேட நிருபராக என்னையும் இணைக்கும் படி உங்களிடம் விண்ணப்பித்திருந்தேன்(சம்தி??் கூட கொடுத்தேனே ).ஆனால் நீங்கள் என்னை இணைக்கவில்லை.என்னை இணைக்காததையிட்டு நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.

இந்த கவி வரிகளைப்பாருங்கள்.

டெனீம் ஜீன்ஸ் போடலாம்

என்ற கனவில்

அவுஸ்ரேலியா வந்த

தாத்தாவிற்கு

கட்டி வந்த

கோவணமும்

எரிக்கப்பட்டதுதான்

மிச்சம்.

இனி என்னை நிருபராக இணைத்தாலும் நான் இணைந்து கொள்ள மாட்டேன் .

நன்றி.

அட மருமோண் அண்ணா வாங்கோ வாங்கோ எப்படி சுகம் அட நல்லா இருந்ததோ எனக்கு ஏதாச்சு விருது கிடைக்குமோ :lol: ..அப்ப தான் என்ட மம்மிக்கு விருதை காட்டி மம்மியிட்ட நல்ல பிள்ளை பெயர் எடுக்கலாம் அது தான் :rolleyes: ..அட உங்களை இணைக்காமலா நீங்க எங்களின்ட விசேட நிருபர் அல்லவா பாதுகாப்பு காரணம் :D (அது தான் மற்றவை உங்களை விலை கொடுத்து வாங்கிட்டாலும் என்று :rolleyes: )...வெளியாள பெயரை போடவில்லை இதுக்கு போய் கோவித்து கொண்டு.....அட கவிதையில பின்னீட்டீங்க போங்கோ அட ஏற்கனவே இணைத்தாச்சு தானே சோ எனி இப்படி எல்லாம் கோவிக்கபடாது சரியோ :D ..இரு பேப்பரிற்கான அடுத்த ஆக்கத்தை நீங்களே எழுதுங்கோ மருமோண் அண்ணா இப்ப சந்தோசம் தானே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அட ஜம்முக் கண்ணா

அப்படியே நெஞ்சை நக்கிட்டீர் போம். கோமண விசயம் எழுதப்போய் எங்கே நிர்வாக ஆசரியர் என்பதை நிர்வாண ஆசிரியர் என்று எழுதிடுவீரோ என்று பயந்திட்டன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

வசபண்ணா!!

நெஞ்சை நக்கினானோ எப்ப (அட வாசிக்கிறவை தப்பா நினைக்க போகீனம் இரு பேப்பரை பற்றி :lol: )...சா..சா அப்படி எல்லாம் எழுதுவேனா என்ன நம்ம வசபண்ணா ஆச்சே..அது சரி வசபண்ண நிர்வாண ஆசிரியர் என்றா என்ன நேக்கு தெரியாது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு அப்போ உங்கட நண்பனும் உந்த பரம்பரை என்ற வரிசைக்குள் அடங்குவாரோ

அட எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுறியளோ

அதுசரி எப்ப உந்த "இருபேப்பர்" வரத்தொடங்கினது ஜம்முபேபி? வாராவாரம் வெளியிடுங்கோ பேப்பரை.

நல்லா இருக்கு உங்கள் இதழியல் பயணம்

நிலா அக்கா எப்படி இருக்கிறியள் சுகமோ :lol: ...அக்சுவலா அந்த தாத்தாவோட (கோமண) பரம்பரை முடிந்து போட்டு நிலா அக்கா ஆனா யாருக்கு தெரியும் நண்பணும் அதை தான் போடுறாறோ இல்லையோ என்று :rolleyes: (இதை அடுத்த இருபேப்பரில ஆராய்வோம் என்ன)...

இது எல்லாம் கீ போர்ட்டில தான் எழுதுறனான் நிலா அக்கா :rolleyes: ......அட நேற்று நள்ளிறவு 12 மணியில் இருந்து தான் இருபேப்பர் வெளி வர தொடங்கியது....அட இருபேப்பருக்கு இவ்வளவு வரவேற்பா கண்டிப்பா வாராவாரம் இல்லாட்டியும் மாசதிற்கு ஒருக்காவது வருவதிற்கான முயற்சியை செய்கிறேன்... :D .

அப்ப நான் வரட்டா!!

ஐயோ.. பேராண்டி.. முடியல்ல.. நான் உண்மையில இந்த உலகிலதான் இருக்கேனா... என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிறேன்...ஐயோ ஐயோ ஐயோ... என்ன பதவி... எத்தனை உயர்வு.. ஒரே நொடியில.. இந்தளவுக்கு உயர்ந்திட்டனா...என்ன ஒரு தகுதி எனக்கு... ஆஆஆஆஆஆஆஊஊஊஊஊஊஊஉ

என்னப் பெத்த ஆத்தா.. நான் சாதிச்சிட்டன் ஆத்தா... இதையெல்லாம்.. நீ இணையத்தில காணாமல் இருக்கிறியே ஆத்தா.......

யாரது பிடரில தட்டிறது.. வாழ்க்கையில சந்தோசமா இருக்கவும் விடுறாங்கல்லையே..... ஓ.. மோகன் சாரா... சாறி சார்.. கண்மின் தெரியாமல் உளறிட்டனா.... எல்லா பேராண்டி தந்த இலவசப் பதவி எனும் சம்பைன்.. செய்த வேலை..!

( இதை அப்படியே வீட்டுக்க கொள்ளையடிக்க ஒரு ஊசி போட்டு பூட்டைத் திறந்து நுழைஞ்ச உடன வீட்டில் உள்ள சாமாங்களைப் பார்த்து வடிவேல்... சொல்லுவாரா அதோட அப்படியே ஒத்திக்குங்க..!)

அட தாத்தா ஆர் யூ ஓல் ரைட் தாத்தா :rolleyes: ........ அட தாத்தாவை கொஞ்ச நேரம் கூட சந்தோசமா இருக்க விடுறார் இல்லை மோகண் அண்ணா :lol: ...தாத்தா இரு பேப்பரில நீங்க அடுத்து என்ன ஆக்கம் எழுத போறியள் சொல்லவே இல்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

தண்ணி போட்டு பினாத்துற மாதிரி இருக்கே

இது தான் இருபேப்பரில எழுதுறதிற்கான பெரிய தகுதியே கறுப்பி அக்கா இப்படி சொல்லி போட்டியள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

டேய் ஜமுனா! உந்த சின்ன வயதிலையே பழம் திண்டு கொட்டை போட்டுட்டாயடா

இது மற்றவர்களின் பிரச்சனையில் குளிர்காய்பவர்களுக்கு சாட்டையடியல்ல உலக்கை இடி எனக்கு உந்த இருபேப்பர் கதை ஊரிலை "தீப்பொறி"பேப்பர் பார்த்த மாதிரி இருக்கு

என்னயிருந்தாலும் கோவணத்திலை இருக்கிற சுவாரசியம் மற்ற ஒண்டுலையுமே இல்லை(காற்றோட்டமானது)

எழுதடாச்செல்லம் எழுது இந்த கிழவன் எப்பவும் உன்ரை பக்கந்தான்

அட கு.சா தாத்தா நான் பழம் சாப்பிட்ட மாட்டர் தாத்தாவிற்கு எப்படி தெரியும் :D .....அட கு.சா தாத்தாவே இரு பேப்பரை பாராட்டி போட்டார் பிறகென்ன..."தீ பொறி" என்று பேப்பர் வாரதோ தாத்தா முந்தி எனக்கு தெரியாது :lol: ...அப்ப தாத்தா இப்பவும் கோமணம் தான் கட்டுறனியள் என்று சொல்லுங்கோ....... அட தாத்தா நம்ம பக்கமா (அரைவாசியில விட்டு போட்டு போயிட மாட்டியள் தானே பாவம் நானே பேபியாக்கும் :lol: )...அட..அட இரு பேப்பரில எழுதுறபடியா நம்ம புகழ் எங்கே எல்லாம் போகுது என்னால முடியல!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா,

நான் HFC பள்ளிக்கூடத்திக்கு எதிர்ல இருக்கும் பஸ் ஸ்டொப்பில அடிக்கடி ஒதுங்கினேனாக்கும்.... வாழ்கையை படிக்க....

அட நீங்க அங்கையோ ஒதுங்கினீங்க நான் வந்து சைவமங்கைய கழக பஸ் ஸ்டோப்பில :lol: அட வாழ்கையை படிக்க எல்லாம் இல்லை....வேறேன்னதிற்கு சைட் அடிக்க தான் :rolleyes: (ஏனென்றா இங்கே தான் நமக்கு நண்பிகள் கூட :lol: )

அப்ப நான் வரட்டா!!

ஜம்முண்டா ஜம்மு தான். நல்லா உன்னிப்பா கவனிச்சு எழுதி இருக்கிறியள்.

இரு பேப்பர் எனக்கு நல்லா பிடிச்சிருக்கு தொடர்ந்து எழுதுங்கோ

வாழ்த்துக்கள் ஜம்மு உங்கள் சமூக பணி தொடரட்டும்

அட நம்ம தங்காவிட்ட இருந்து வாழ்த்து :rolleyes: ...அட தங்காவிற்கே இருபேப்பர் பிடித்து போயிட்டு என்றா என்னால முடியல :D ...ம்ம் தங்கா நன்றாக செய்யிறேன் என் சமூக பணியை நன்றி தங்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒரு விடயத்தை இன்னொரு கோணத்தில் நையாண்டியாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமில்லை. இதற்குத்தான் சொல்வது வெண்ணெய் தடவி சாட்டையால் அடிப்பது என்று . பேபி வஞ்சகம் இல்லாமல் இரண்டு பக்கத்தையும் வாரி இருக்குது! உ+ம் - இருபேப்பரின் பேபிகள் யாரும் பல்கலைக்கழகம் போய் ஊடகவியல் படிக்கவில்லை என்னும் வரி. இதன் மூலம் இருபேப்பரின் பிரதம் ஆசிரியரையே பேபி வாரிவிட்டிருப்பது அழகு! பேபியின் திறமைகள் வளர வாழ்த்துக்கள்

அட நம்ம வெற்றிவேல் அண்ணா எப்படி சுகம் அண்ணா நீங்களும் எங்களின்ட இருபேப்பரில இணைந்து கொள்ளுறது தானே :D ...நன்றி அண்ணா அது சரி பிரதம ஆசிரியரை எல்லாம் வாறவா முடியும் பிறகு நமக்கே எழுத ஏலாம போயிடும் வெற்றிவேல் அண்ணா... :lol: (பட் நம்ம நெடுக்ஸ் தாத்தா அப்படி இல்லை :rolleyes: )....

அப்ப நான் வரட்டா!!

அய்யோ நான் கழட்டமாட்டன் எண்டு கத்தினது நான்தான். அதைஉருவினது முனியம்மா. என்ன இருந்தாலும் ஜம்மு இதை வெளியிலை சொல்லியிருக்கக்கூடாது

அட சாத்திரி அங்கிள் என்ன இருந்தாலும் உங்க பெயரை நான் சொல்லவில்லை பாருங்கோ :lol: .....இப்படி வெளியால சொன்னா தானே என்ட புகழ் நாலு இடத்திற்கு போகும் என்ன நான் சொல்லுறது!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

எல்லாரும் உங்கட உங்கட கோவங்கள ஆக்களுக்கு முன்னால கழற்றாமல் இருக்கிறது எப்பவும் நல்ல விசயம். இது நாகரிகம் இல்லை எண்டுறதுக்காக சொல்ல இல்ல. நீங்கள் உங்கட கோவணங்கள கழற்ற பிறகு நாற்றம் தாங்கமுடியாமல் ஒவ்வொரு நாளும் குளிச்சு சுத்தம் சுகாதாரமா இருக்கிற அப்பாவிச் சனம் மயங்கி விழுந்துபோடுங்கள். பிறகு பூச்சி மருந்து அடிக்கிறதுக்கு 911 வேற வரவேணும். இதவிட இதால கொஞ்ச காலத்துக்கு முன்னம் சீனாவில சாஸ் எண்டு ஒரு வியாதி வந்தமாதிரி ஏதாவது தொற்று வியாதிகள் வரவும் வாய்ப்பு இருக்கிது. சோ கீப் யுவர் கோவணம் அட் ட சேப் சீக்கிரட் பிளேஸ்! டோண்ட் சோ இட் இன் புரண்ட் ஒவ்ப் ட பப்ளிக்

ஜெனரல்!!

நீங்க சொல்லுறது சரி தான் அப்பாவி சனங்க மயங்கி விழுந்திடுவீனம் என்று ஆனா எல்லாரும் கோமணம் போட்டு தான் இந்த நிலைக்கு வந்தவை என்பதை மறக்க கூடாது தானே... :lol: (பிறகு நானும் கோமணம் போட்டதா தப்பா நினைத்து போடுறதில்லை சொல்லிட்டேன் :rolleyes: ).... சீக்கிரட் பிளேசில கோமணத்தை வைத்திருந்தாலும் அடிகடி வெளியாள எடுக்க வேண்டும் அப்ப தான் பழைய ஞாபகம் வரும் இல்லாட்டி கிஸ்ரியையே மாற்றி போடுவாங்க நம்ம ஆட்கள் அது தான் :D ....அது சரி நீங்களும் கோமணமோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கழட்டி கழட்டி என்னத்தைக் கண்டது? தற்சேலாய் வாந்தி கீந்தி வந்தா.. அதையும் இஞ்சை வந்து எடுத்துப் போடுங்கோ..

கோமணதிற்கும்...வாந்திக்கும் என்ன சம்மதம் சோழியன் மாமா நேக்கு விளங்கவே இல்லை... :lol:

அப்ப நான் வரட்டா!!

காலையா.. அங்கும் மயிரில்லையே வார. நம்ம பேராண்டி தானே.. பேராண்டியப் பற்றி தெரியாதா என்ன...!

அட நெடுக்ஸ் தாத்தாவிற்கு பேராண்டியை பற்றி நல்லாவே தெரிந்திருக்கு :rolleyes: ...அட நாம வார எல்லாம் மாட்டோம் அக்சுவலா நேக்கு காலில விழுறதும் பிடிக்காது காலை வாறுறதும் பிடிக்காது தாத்தா!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ரொம்ப நன்றி ஜம்மு பேபி இருபேப்பரில எனக்கும் பதவி தந்ததிற்கு இது உங்களிற்கே ரொம்ப ஒவரா தெரியவில்லை

பதவி தந்ததிற்கு எல்லாம் ஏனப்பா நன்றி சொல்லுறியள் புத்து மாமா :rolleyes: ....அட உங்களுக்கு பதவி தந்தது உங்களிற்கே ஓவரா தெரியுதா பட் நேக்கு ஓவரா தெரியவில்லை மாமோய்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முமுமுமுமுமுமுமுமுமுமும
Link to comment
Share on other sites

உங்களுக்கு நகைச்சுவை, நையாண்டி, கிண்டல் போன்றவைகள் என்ன என்று சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

நீங்கள் "ஒரு பேப்பரை" கிண்டல் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. "ஒரு பேப்பர்" செய்யாத நையாண்டியா? நீங்களும் தாராளமாக செய்யுங்கள்.

இங்கே உள்ள கள உறவுகளை நையாண்டி செய்வதும் தவறு இல்லை. நான் எத்தனையோ பேரை கிண்டல் அடித்திருக்கிறேன். அதே போன்று என்னைப் பற்றிய கிண்டல்களும் வருவது இயல்பானது. வஞ்சகம் இல்லாமல் எல்லோரையும் கிண்டல் அடித்திருக்கிறீர்கள். படித்து ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அனால் ஒரு பெண் இந்த சமூகத்தால் சித்தரவதை செய்யப்பட்ட போது, கதறிய கதறலை கிண்டல் செய்திருக்கிறீர்களே! அங்கேதான் உங்களுடைய வக்கிரபுத்தி வெளிப்படுகின்றது.

சாத்திரியும் இச் சம்பவத்தை வைத்து நகைச்சுவையாக எழுதியிருந்தார். அதில் அவருடைய நையாண்டி சமூகத்தை நோக்கியதாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியதாக இருக்கவில்லை.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுடைய மதச் சம்பிரதாயத்தை கிண்டல் அடித்துவிட்டார்கள் என்பதற்காக இரக்கமே இன்றி ஒரு பெண்ணின் அழுகையை கிண்டல் செய்கின்றீர்கள்.

உங்களுடைய மதவெறியை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்லது! தொடருங்கள்!

சபேசன் அங்கிள் ம்ம் நான் பேபி தானே நேக்கு இந்த நையாண்டி,நக்கல் எல்லாம் வடிவா தெரியாது தானே..ஆனா அடுத்த வரியில நீங்களே சொல்லி இருக்கிறியள் ஒரு பேப்பரை கிண்டல் அடிப்பதில் பிரச்சினை இல்லை என்று.அப்ப நான் அடித்தது கிண்டல் மாதிரி பிறகு தெரிந்ததோ சபேசன் அங்கிள் :rolleyes: (போங்கோ என்னை குழப்பிட்டியள்)...அட..அட சபேசன் அங்கிளே ஒரு பேப்பரை கிண்டல் அடிக்க அனுமதி தந்திருக்கிறார் (அங்கிள் நீங்க அனுமதி தராட்டியும் கரக்டா அதை நாம செய்வோம் அது கிண்டலா இருக்கிறது இல்லையோ அதை பற்றி நேக்கு தெரியாது :rolleyes: )...ஆனாலும் ஒரு பேப்பர் அடிக்காத கிண்டலா என்று ஒரு பேப்பரில இருக்கிற நீங்களே பில்டப் காட்டுறது கொஞ்சம் ஓவர் (விஜகாந் படம் பார்த்த எவக்ட்).... :lol:

அட கள உறவுகளை நையாண்டி பண்ணி இருக்கிறீர்களா (அக்சுவலா நீங்க சொல்லி தான் உந்த விசயம் எனக்கு தெரியும்...அப்ப நீங்க சீரியசா கதைக்கிறது எல்லாம் சும்மா நையாண்டியா அப்ப சரி சபேசன் அங்கிள்)...அட பார்த்து ரசித்து கருத்து சொன்னதிற்கு மிக்க நன்றி சபேசன் அங்கிள்!!

அட ஒரு பெண்ணா சமூகத்தால் சித்திரவதைக்கு ஆளாக்க பட்டா என்று நான் எழுதவில்லையே ஒரு தாத்தா பாட்டியால் சித்திரை செய்யபட்டதை அல்லவா எழுதி இருந்தேன்...(ஓ அப்ப உங்களுக்கு விளங்கி போச்சோ :lol: )...சபேஷ் அங்கிள் ம்ம் எனக்கு சரியான வக்கிரபுத்தி தான் அந்த தாத்தா பாதிக்க பட்டிருக்கிறார் (பெண்)...அவர் கதறிய அழுகையை அங்கே தேற்றாம இங்கே வந்து இரு பேப்பரில எழுதி புகழ் தேட நினைக்கிறேன் அது வக்கிரபுத்தி தான் சபேசன் அங்கிள்...அத்தோட அந்த தாத்தாவை எப்படி தேற்றுவது என்று நினைக்காமல் அவரின் கோமணதிற்கும் இந்து மததிற்கு முடித்து போட்டு பக்கம் பக்கமா எழுதி அந்த தாத்தாவின் (பெண்ணிண்) மனதை இன்னும் பாதிப்படைய செய்தது என்னுடைய வக்கிரபுத்தி தான் சபேசன் அங்கிள் :D ...கண்டதிற்கெல்லாம் இந்து மதம் தான் எனக்கு கிடைத்தது (கோமண விசயதிற்கு கூட ஏனென்றா இந்து மதத்தில இருக்கிறவை எல்லாம் ரொம்ப நல்லவை என்ன சொன்னாலும் ஒன்றும் சொல்ல மாட்டீனம் தானே)..அந்த தைரியத்தில கோமணதிற்கும் இந்து மததிற்கும் ஒரு லிங்கை ஏற்படுத்தியது என்ட வக்கிரபுத்தி தானே சபேசன் அங்கிள்..

சரி எனி சபேசன் அங்கிள் எனி விசயதிற்கு வாரேன் ஒரு ஊடகம் என்று ரீதியில இரு பேப்பர் என்ன செய்திருக்க வேண்டும்...அந்த தாத்தாவின் பிரச்சினையை எப்படி கையாண்டு இருக்க வேண்டும்...அடியடா பிடியடா என்று இரு பேப்பரில எழுதி பெயர் எடுக்க முற்படாம அந்த தாத்தாவின் மனநிலையை மாற்றி அவருக்கு அறிவுரைகளை சொல்லி அல்லது அந்த பாட்டிக்கு எடுத்து கூறி சுமூகமான தீர்வை ஏற்படுத்தி இருக்கலாம் அப்படி செய்யாதது என்ட வக்கிரபுத்தி தான்..... :)

எஸ்கீயூஸ் மீ அந்த பெண்ணிண் அவலத்தை வேடிக்கையாக்கியது யார் சபேசன் அங்கிள்...அதையும் பக்கம் பக்கம் எழுதி இன்னும் வேடிக்கையாக்கியது யார்...ஒரு பெண் கணவணை இழந்திருக்கா எனி அவா தன்னுடைய வாழ்க்கை பாதையை எப்படி கொண்டு செல்ல போகிறாள் என்று யாராவது சிந்தித்து ஏதாவது கருத்தை பகிர்ந்தீர்களா...அப்படி பார்க்கும் போது...நான் தாத்தாவின் கோமணத்தை எழுதியது வக்கிரபுத்தி மாதிரி எனக்கு தெரியவில்லை :rolleyes: மாறாக...(அதை வேற என்ட வாயால சொல்ல தான் வேண்டுமா)...

ம்ம் சாத்திரி அங்கிள் பற்றி எனக்கு நல்லா தெரியும் அவர் சமுகத்தை பற்றிய பார்வையும் நேக்கு நல்லா தெரியும் சபேசன் அங்கிள்....ம்ம் அவர் பெண்ணை நோக்கி நையாண்டி பண்ணவில்லை உண்மை தான் என்ட பார்வை நிச்சயமா சமூகத்தை நோக்கி இருக்கவில்லை என்று எப்படி சொல்லுவியள் ஏனென்றா ஒரு பத்திரிகை சமூகதிற்கு நல்லதை செய்ய வேண்டும் நான் சொல்லுறது சரி தானே... அப்படி இருக்கும் போது ஒரு பெண் கணவணை இழந்து துடிக்கும் வேளையிள் அவரை வைத்து புகழ் தேடி கொள்வது எந்த விதத்தில் நியாயம் நீங்களே சொல்லுங்கோ அப்படிபட்ட விசயத்தை நம்ம இரு பேப்பர் சொல்லி இருக்கு அதுவும் ஒரு விதத்தில் சமூக விசயத்தை தான் அணுகி இருக்கு!! :D

அட பார்த்தீங்க இப்ப கூட மத சம்பிராதயத்தை இழிவு படுத்திய படியா தான் நான் அந்த பெண்ணின் அழுகையை கிண்டல் செய்யிறேன் என்று சொல்கிறீர்கள்....ஆகவே உங்களிற்கு மதத்தை பற்றி பேசி புகழ் பெற ஆசை ஆகவே தான் பெண்ணிண் அவலகுரலை மதத்துடன் பிணைக்கிறீர்கள்...சபேசன் அங்கிள் நேக்கு உந்த மத சம்பிரதாயம் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை பட் வலோ பண்ணுறது உண்மை தான்...இப்ப கூட காலம சர்சிற்கு போனனான் பிரண்ஸ்சோட பிறகு அப்படியே சுற்றி போட்டு வீட்டை வந்து குளித்து விபூதியை பூசி போட்டு சபேசன் அங்கிளிற்கு ரீபிளை பண்ணுறேன்....சபேசன் அங்கிள் வீட்ட இப்படி எல்லாம் நடக்காது தானே.....தெரியாமல் தான் கேட்கிறேன் சபேசன் அங்கிள் மதத்தை பற்றி கதைத்தா பெரிய ஆட்கள் ஆகிடுவோமா (ஏன் கேட்கிறேன் என்றா நானும் அதை பற்றியே எனி உங்களோட சேர்ந்து கதைக்க தான்)....பார்தீர்கள் என்றா உங்கள் சொற் பிரயோகம் "மத வெறி" போன்றவற்றில் இருந்து உங்கள் நிலைபாடு நன்கு புரிகிறது....(எனக்கு அதை பற்றி கவலை இல்லை)....ஏனென்றா சொல்லுற எல்லாரும் 100% சுத்தம் என்றா சொல்லலாம்......அத்தோட நேக்கு இன்னொரு டவுட் சபேசன் மாமா வீட்டை நீங்க மட்டும் தான் இப்படி மதத்தை எதிர்க்கிறனீங்களோ இல்லை எல்லாரும் அப்படி தானே இல்லை டவுட் அது தான் கேட்டனான்...உங்களுடைய சில முற்போக்கு சிந்தனைகள் பிடித்திருந்தாலும் அவசியமற்று மத திணிப்பு போன்றவை உங்கள் சில நல்ல சிந்தனைகளையும் மறைத்துவிடுகின்றன சோ இனியாவது கவனம் எடுங்கோ!! :lol:

அத்தோட சபேசன் அங்கிள் குறிபிட்ட ஒரு மதத்தை பற்றியெ நீங்கள் விமர்சித்து கொண்டிருப்பதால் அந்த மதத்தை பின் பற்றுபவர்கள் அந்த மதத்தின் மீது உங்கள் கருத்தால் மேலும் தீவிர ஆதரவாளர்கள் ஆகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை ஒரு விதத்தில நீங்க இந்து மதத்தை நன்கு வளர்க்கிறீங்க என்றே சொல்லலாம்....சோ எனியாவது இந்த மாட்டரில கவனம் செலுத்துங்கோ சபேசன் அங்கிள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் சோங் (ஜம்மு பேபிக்கே)-

"உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உந்தன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது

பாடும் பறவை..

பாயும் மிருகம்...

இவைகளுக்கு எல்லாம் பகுத்தறிவு இல்லை

ஆனால் அவற்றிற்கிடையே சூழ்ச்சிகள் இல்லை".....

Link to comment
Share on other sites

ஜமுனா!

உங்களுடைய பதிலுக்கு நன்றி

நாம் எமது இலக்கு எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சாந்தியோ அல்லது சாத்திரியோ அல்லது நானோ இந்தத் தாலியறுப்பு விடயத்தில் எமது இலக்காக சமூகத்தைக் கொண்டிருந்தோம்.

சமூகத்தை நோக்கியதாகத்தான் எமது விமர்சனம், கோபம், கிண்டல் அனைத்துமே இருந்தது.

சமூகத்தை நோக்கிய எமது விமர்சனம் சில வேளைகளில் அந்தப் பெண்ணிற்கு மறைமுகப் பாதிப்புக்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதற்காக சமூகத்தின் இழிவான செயல்களை நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஆகவே எமது கருத்துக்களும் அந்தப் பெண் மீதான மறைமுகத் தாக்கங்களை கொடுத்திருந்தாலும், எமது இலக்கு அவர் அல்ல.

சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற போது, இலக்கு வைக்கப்படாத தனிநபர்கள் பாதிக்கப்படுவது பல முறை நடக்கின்ற ஒன்றுதான். இது தவிர்க்க முடியாது.

ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அவரின் கதறலை இலக்கு வைத்து நையாண்டி செய்திருக்கிறார்கள்.

இதுதான் என்னை உறுத்துகிறது.

ஒருவருடைய அழுகைக் குரலை நகைச்சுவையாக மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. நல்ல சிந்தனை உள்ள மனிதன் இதைச் செய்ய மாட்டான்.

நீங்கள் தாத்தாவின் அழுகை, அது இது என்று காரணம் சொன்னாலும், எல்லோருக்கும் நீங்கள் எதை இங்கே நையாண்டி செய்கின்றீர்கள் என்பது தெரியும்.

சிலருக்கு ஒரு குணம் இருக்கிறது. யாரவது கிழே விழுந்தால் உரத்து சிரித்து விடுவார்கள். உங்களுக்கு அது போன்ற பிரச்சனை இருக்கிறதா? அதனால்தான் சாவுவீட்டு அழுகையை நகைச்சுவை ஆக்கியிருக்கிறீர்களோ என்று சந்தேகப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா!

உங்களுடைய பதிலுக்கு நன்றி

நாம் எமது இலக்கு எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சாந்தியோ அல்லது சாத்திரியோ அல்லது நானோ இந்தத் தாலியறுப்பு விடயத்தில் எமது இலக்காக சமூகத்தைக் கொண்டிருந்தோம்.

நீங்கள் சொல்லும் படி கேட்கவும் நடக்கவும் வேண்டும் என்ற தலைவிதி சமூகத்துக்குக் கிடையாது. நீங்கள் சொல்வதெல்லாம் ultimate truth என்பது மோசமான உங்களின் கற்பனை. அதை சமூகம் ஏற்கக் கூடிய நிலையில்லை.. என்பதை தெளிவாக உணர முடிகிறது.

சமூகம் பல முனைகளில் பல திசைகளில் பல ரகங்களில் சிந்திக்கும் குழுமத்தைக் கொண்டது. ஒரு சிலரின் சிந்தனையின் படிதான் சமூகம் ஒழுக வேண்டும் என்ற நிற்பந்தம் சமூகத்துக்குக் கிடையாது.

உங்கள் எழுத்துக்களை வாசித்திவிட்டு.. கசக்கி வீசுபவனும் இருக்கிறான்.. வாசிக்காமலே தன் உழைப்பில் கவனம் செலுத்திறவனும் இருக்கிறான்.. வாசித்து.. வீணாப் போனவனும் இருப்பான்..!

நாங்கள் இங்கு சுட்டிக்காட்டுவது... குறித்த பெண்ணின் துன்பத்தை இனங்கண்டவர்கள்.. அந்தப் பெண்ணுக்கு துன்பத்தை இழைத்தவர்கள் அவரைச் சூழவுள்ள போது.. ஏன்.. பத்திரிகைகளில் கொக்கரிக்க வேண்டும்..??!

குறித்த பெண்ணுக்கு உள்ள தேவைகள் என்பதை அறியக் கூடிய சூழலில் உள்ளவர்கள்.. நேரடியாக அவரை அணுகி பிரச்சனைக்குத் தீர்வு தேட உதவி செய்யாமல்.. ஏன்.. கட்டுகரைகளில் பிரச்சனையை ஊருக்குச் சொல்ல வேண்டும். என்ன ஊராக் கூடி வந்து தலையிட வேண்டும் என்று நினைக்கிறார்களா..??!

அந்தப் பெண்ணோ வாழ்வது ஒரு அந்நிய தேசத்தில். அந்த நாட்டுச் சட்டதிட்டத்துக்கு கீழ். அப்படி இருக்க அந்த நாட்டு நடைமுறைகளுக்குள் நின்று தீர்க்க வேண்டிய பிரச்சனையை.. லண்டனில் இருந்து ஓசியில் விளம்பரம் தேடிப் பிழைக்கும் இதழுக்கு அவரின் பிரச்சனையை கொண்டு வந்து சாதித்தது என்ன..??!

வன்முறை ரீதியில் "தாலி அறுப்பு" என்பதை இங்கு கூட பல உறவுகள் தற்போதுதான் அறிகின்றனர். அசாதாரணமான ஒரு நிகழ்வை சமூகத்தின் மீது ஒட்டுமொத்தமான குற்றமாக இனங்காட்ட வேண்டிய தேவையென்ன..??!

ஒரே தேவைதான்.. தாலிய எதிர்ப்பு என்ற பெண்ணிலைவாத அர்த்தமற்ற விளம்பரமும்.. இதை அடிப்படையாக வைத்து வளர்க்கக் கூடிய இந்து மத துவேசியமும் தான்.

குறித்த பெண்ணுக்காக அனுதாபப்படுபவர்கள்.. செயற்பட வேண்டிய களம்.. யாழோ.. ஒரு பேப்பரோ அல்ல. ஜேர்மனியில் அப்பெண் வாழும் சூழலில் தான் அது இருக்கிறது...!

ஆனால் இவர்கள்... செயற்படுவதோ.. வேறெங்கேயோ..??! இதன் நோக்கம் தான் தவறெங்கிறோம். இந்த அணுகுமுறைதான் தவறெங்கிறோம்.

சாத்திரி பல சமூகப் பிறழ்வுகளைப் பற்றிச் சொல்கிறாரே தவிர.. அதற்கான பின்னணிகளை ஆராய்ந்து... அந்த மக்கள் பிறழ்வுகளைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவுகளுக்கு பரிகாரம் காட்டினாரா..???! அல்லது பிறழ்வுகள் எனியும் நடக்காது என்று உத்தரவாதம் பெற்றுக் கொடுத்தாரா.. இல்லவே இல்லை.

செய்திகளை வெளியிட்டு.. எங்கோ இருந்த சாத்திரி.. ஒரு பேப்பரில் இடம் பிடித்ததுதான் மிச்சம்..! இதை விட.. எதைச் சாதித்தார்.

எமது நேசக்கர அமைப்பு செயற்பட்ட வடிவத்தை நாம் உதாரணமாக்கும் போது அங்கு காணும் சாத்திரிக்கும்.. ஒரு பேப்பரில் காணும் சாத்திரிக்கும் இடையில் என்னால் வேறுபாட்டை உணர முடிகிறது. நேசக்கர அமைப்பில்.. விளம்பரமோ.. பிரச்சாரமோ கிடையாது. பங்களிப்பும் செயலும் தான். உதவி தேவை என்று எழுதி எழுதி.. விளம்பரம் செய்து கொண்டிருப்பதல்ல நோக்கம். இயன்றதைச் செய்து பயனாளிக்கு நேரடியாக உதவிப் பயனை அளிப்பதுதான் நோக்கம். அதுதான் தேவை. அதுதான் சமூகத்தில் மாற்றத்துக்கான வித்து..!

அதைவிட்டு விட்டு.. காலங்காலமா பக்கம் பக்கமா.. தாலியை பிடுங்கு..பொட்டை எறி.. கடவுளைத் தொழாத.. கோவிலை இடி.. பார்பர்னனை அழி.. இதெல்லாம் செயலுக்கு சாத்தியமற்ற.. வெறும் விளம்பரச் சுரக்காய்கள்..! தங்களின் பெயரை நிலைநாட்ட செய்யப்படும் விளம்பரங்கள். இவர்களை முதலில் சமூகம் தெளிவாக இனங்கண்டு.. அடித்து விரட்ட வேண்டும். இவர்களால் தான் செயலில் இறங்க விரும்புறவனும்.. அதைச் செய்யாமல் ஒதுங்கிப் போறான்..!

எமது சமூகத்துக்குத் தேவை.. சொல்லுக்கு முதல் செயலில் இறங்கத் துணித்த ஒருவனே தவிர.. சொல்லிச் சொல்லி.. தன்னை விளம்பரப்படுத்தும் ஒருவனையல்ல..! :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தாலியறுப்பு என்பது தேவையா அதனை நீங்கள் ஆதரிகின்றீர்களா.அப்படி கணவர் இறந்த பின்னர் பெண் தாலியறுக்க வேண்டுமாயின் மனைவி இறந்த பின் கணவன் என்னத்தை அறுக்கிறான்.ஏன் இந்த பாரபட்சம் நமது சமுகத்துக்கு?

இனி தாலிகட்டிவதை நிறுத்த சொல்லி நடக்கபோவது சில விழுக்காடுகள்தான் ஆனால் இப்படியான அசிங்கமான சடங்குகளை நிறுத்த முடியும்தானே.சிலதை மதம் சாராமல் சராசரி மனிதனாக இருந்து பாருங்கள் உண்மைகள் விளங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

அப்போதே அந்தத் தலை;பபுப் பற்றி உங்களிடம் கேட்டேன். மார்வாடிக் கும்பல்கள் இதை தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்று. அதற்கு அப்படி ஒன்றும் ஆகாது. சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கை பற்றித் தான் சொல்கின்றேன் என்றும், மதம் பற்றியல்ல என்றும் சொன்னீர்கள். ஆனால் இங்குள்ளவர்கள் சிலர் தங்களுடைய பெயர் பெருமையடிப்பதற்காக இதைப் பாவித்துக் கொள்கின்ற, மதத் தூசிப்புக்கு உங்களின் பதிலை எதிர் பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாலியறுப்பு என்பது தேவையா அதனை நீங்கள் ஆதரிகின்றீர்களா.அப்படி கணவர் இறந்த பின்னர் பெண் தாலியறுக்க வேண்டுமாயின் மனைவி இறந்த பின் கணவன் என்னத்தை அறுக்கிறான்.ஏன் இந்த பாரபட்சம் நமது சமுகத்துக்கு?

இனி தாலிகட்டிவதை நிறுத்த சொல்லி நடக்கபோவது சில விழுக்காடுகள்தான் ஆனால் இப்படியான அசிங்கமான சடங்குகளை நிறுத்த முடியும்தானே.சிலதை மதம் சாராமல் சராசரி மனிதனாக இருந்து பாருங்கள் உண்மைகள் விளங்கும்

தனி மனித ஆளுமையில் திறமையில் செல்வாக்குச் செய்யாத எந்த பாரம்பரிய நடைமுறையையும் களையனும் என்ற அவசியமில்லை. பாரம்பரியம் அப்படியே காக்கப்பட முடியல்லை என்றாலும்.. அப்படியொரு பாரம்பரியம் இருந்தது என்ற அடையாளப்படுத்தலாவது அவசியம். அது நாம் ஓர் தனித்துவ மனித நாகரிகத்தின் வழி வந்துள்ளோம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்வதோடு மனிதர்களாயினும் எமக்கென்றான தனித்துவ இன அடையாளம் பாரம்பரியமாக இருந்துள்ளது என்பதையும் சொல்லும். அதற்காக நாம் ஏனைய மனிதர்களுடன் சகோதரத்துவத்தையோ.. நட்பையோ இழக்க வேண்டும் அல்லது ஏனையவர்களின் பாரம்பரியம்... நவீன நாகரிகத்தையோ நாம் விரும்பக் கூடாது..என்பதல்ல.. இங்கு எதிர்பார்க்கப்படுவது. அவற்றை விரும்பினும்.. எமக்கானவற்றில் எமக்குரியவற்றையும் நாம் பாதுகாக்கனும் என்பதுதான் கோரப்படுகிறது. கட்டாயப்படுத்தப்படவில்லை.

தமிழர்கள் ஆண் பெண்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களை இனங்காட்டி இருப்பினும் இவற்றால் அவர்களின் தனிமனித ஆளுமை திறனுக்கு பாதிப்பை உண்டு பண்ண வழிகாட்டவில்லை. மாறாக தனி மனித ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தியுள்ளனர்..!

இன்றைய சூழலுக்கு ஏற்ப பாரம்பரிய அடையாளத்தை தெரிவு செய்வதும் விடுவதும் ஒரு தனி மனிதனின் சொந்த விருப்பிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் வற்புறுத்தித் திணிக்க முடியாது. ஆனால் மக்களை நோக்கி பாரம்பரியக் காப்பின் அவசியத்தைச் சொல்வது.. திணிப்பு என்றாகாது. அவர்கள் அக்கருத்துக்களின் அடிப்படையில் சுயமாக சிந்தித்து சுய முடிவுகளை எடுக்கவே கேட்கப்படுகின்றனர்.

எனவே தாலி அணிவதை தீர்மானிப்பதும் தனி மனிதனே.. அதை கழற்றி வைப்பதும் அவனே. தாலியை நிராகரிப்பதையும் தனி மனிதன் தனக்குரிய சுய சிந்தனையின் படி செய்ய வேண்டுமே தவிர.. தாலி என்பது அடிமைச் சின்னம். அதைக் கழற்றி எறி என்று வற்புறுத்துவது.. அல்லது தாலியைக் கணவர் இறந்தும் கழற்றாதே என்பது வறுபுறுத்தல்களே அன்றி சமூகத்தை நோக்கி சிந்திக்க வைக்கப்படும் கருத்தல்ல. அவை ஒரு அறிவுபூர்வமான வாதமல்ல..அவை கருத்தியல் திணிப்பு..! இவ்வகையான கருத்தியல் திணிப்புக்களை அல்லது தனி நபர்களின் நிலைப்பாடுகளை பிறருக்குள் திணிக்க விளைவதையே நாம் தெளிவான இனங்கண்டு எதிர்கின்றோம்.

தமிழ் ஆண்களும் மண மேடையில் மணப்பெண்ணின் கையால் அணிகலன்கள் அணியும் வழங்கம் தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்துள்ளது. அதை சரியான சான்றுகளோடு மக்களின் முன் வைக்கலாம். தமிழரின் பாரம்பரியத்தை ஒரு அடையாளமாக்க விரும்புகின்ற தமிழ் மகன் அதை பின்பற்றலாம். இல்லை அது தனது ஆளுமைக்கு.. ஆண்மைக்கு இழுக்கு என்றவர் விட்டிட்டுப் போகலாம்.

அதேபோல் தான் தாலியும்..! வேண்டாம் வேண்டாம் என்ற எந்த பெண்ணையும் இழுத்து வைத்துத் தாலி கட்டிறதில்ல. அப்படிக் கட்டினால் அது கட்டாயத் தாலி என்று சட்டத்துக்கு விரோதமானதென்று கழற்றப்படுகிறது..! பாரம்பரிய நடைமுறைகள் ஏற்பதும் விடுவதும் முழுக்க முழுக்க ஒரு தனி மனிதனின் விருப்பிலேயே தங்கியுள்ளது. இதற்காக சமூகத்தை குற்றம் சுமத்துவது போலித்தனமானது..!

சிறுநீர் கழிக்க விருப்பமில்லை என்றதுக்காக.. சமூகம் கழிக்க விடவில்லை என்று சொல்ல முடியாது. தனிமனித ஆளுமை.. திறனில் உறுதியற்ற மனிதர்கள் தான் தமது பலவீனத்தை மறைக்க சமூகத்தின் மீது பழிபோடுகின்றனர். சமூகம் என்பது ஒன்றும் அதிசமோ அல்லது பயங்கரமோ அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தான் அதன் அடிப்படை அலகே..!

ஒவ்வொருவனும் தான் விரும்பிறதை சொல்லுறதும் செய்யுறதும் தான் சமூகத்தில் பிரதிபலிக்கிறதே தவிர.. இன்னொருவர் சொன்னார் என்றதுக்காக நான் செய்யல்லை என்பதற்கு சொன்னவர் பொறுப்பல்ல... சிந்தனையற்று சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை தான் அதற்குப் பொறுப்பு. கட்டாயப்படுத்தல்.. அல்லது வன்முறைத்தனமான அணுகுமுறைகளால் ஒரு தனிமனிதனின் வருப்பம் செயற்பாட்டில் பிரதிபலிக்கச் செய்யப்படாமை குற்றச் செயல்களில் அடங்கும்.

அதேபோல் தான் தாலி கழற்றலும். ஒரு பெண் தனது விருப்புக்கு ஏற்ப கணவனிடமிருந்து பெற்ற தாலியை கணவனுக்கு அஞ்சலி செய்ய கழற்றி வைக்க விரும்பின் வைக்கலாம். சோகமான வேளையில் சுயமாக சிந்திக்க முடியாத சூழலில்.. பிறர் அவரின் விருப்பத்தைக் கேட்பதும் அதன் படி நடக்கச் சொல்வதும் தவறில்லை. கழற்று என்று வற்புறுத்துவது.. வன்பறிப்புச் செய்வது தான் குற்றம்..!

அதேபோல் இல்லாத பொல்லாத காரணங்களை ( மத ரீதியா இழிவுபடுத்தக் கூடிய திரிவுகளை.. தாலியை வெறு பெண்ணே அது உன்னை அடிமையாக்கும் சின்னம்..என்றெல்லாம் பொய்களை பிரமைகளை சோடிப்புக்களை அவிழ்த்துவிட்டு) கழற்றாதே என்று வற்புறுத்துவதும் குற்றம்..! இப்போ விளங்கும் என்று நினைக்கிறேன்.. எமது தெளிவான நிலைப்பாடு என்ன என்பது..!

உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

எனவே தாலி அணிவதை தீர்மானிப்பதும் தனி மனிதனே.. அதை கழற்றி வைப்பதும் அவனே. தாலியை நிராகரிப்பதையும் தனி மனிதன் தனக்குரிய சுய சிந்தனையின் படி செய்ய வேண்டுமே தவிர.. தாலி என்பது அடிமைச் சின்னம். அதைக் கழற்றி எறி என்று வற்புறுத்துவது.. அல்லது தாலியைக் கணவர் இறந்தும் கழற்றாதே என்பது வறுபுறுத்தல்களே அன்றி சமூகத்தை நோக்கி சிந்திக்க வைக்கப்படும் கருத்தல்ல. அவை ஒரு அறிவுபூர்வமான வாதமல்ல..அவை கருத்தியல் திணிப்பு..! இவ்வகையான கருத்தியல் திணிப்புக்களை அல்லது தனி நபர்களின் நிலைப்பாடுகளை பிறருக்குள் திணிக்க விளைவதையே நாம் தெளிவான இனங்கண்டு எதிர்கின்றோம்

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன் ஜேர்மனியில் நடந்த அந்த சம்பவம் தாலியை வலுக்கட்டாயமாக கழட்ட முனைந்த சம்பவம் அதாவது தனிமனிதனுக்கு எதிராக ஆகவே அந்த சம்பவம் பற்றி எழுதியதில் என்ன பிழை

.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன் ஜேர்மனியில் நடந்த அந்த சம்பவம் தாலியை வலுக்கட்டாயமாக கழட்ட முனைந்த சம்பவம் அதாவது தனிமனிதனுக்கு எதிராக ஆகவே அந்த சம்பவம் பற்றி எழுதியதில் என்ன பிழை

.

கணவன் மறைவின் பின் தாலியை கழற்றுவதும், பூவையும் பொட்டையும் தவிர்ப்பதும் என்னை பொறுத்தவரையில் தேவையில்லாதது தான். ஆனால் அந்த குறிப்பிட்ட சம்பவம் நடந்த அன்று பலவந்தமாக கழற்ற முயற்சி செய்தார்களா இல்லையா என்பதை சம்பந்தபட்டவர்களை விசாரிக்காது எப்படி உறுதியாக கூற முடியும்? பத்திரிகைகளில் தவறான செய்தியே வருவதில்லையா?

அது மட்டும் அல்ல இது போன்ற மரண நிகழ்வுகளில் சோகத்தின் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு விடயங்களையும் கூறி அழுது குளறலாம். ஆனால் அப்படி குளறியவர்களே அடுத்த நாள், நான் துக்கத்தில் ஏதேதோ கூறி இருப்பேன், அதற்காக அப்படியே விட்டு விடுவதா? பெரியவர்கள் எதற்கு இருக்கிறீர்கள் என்று சொன்னதை அப்படியே மாற்றிப்போட்ட சந்தர்ப்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எது எப்படியானாலும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த சம்பவத்தை எழுதும் போது அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் எப்படி எழுதலாம்?

சம்பவம் நடந்த இடத்தையோ நபர்களையோ குறிப்பிடாது இது போன்ற பெண்ணுரிமை பற்றிய விடயங்களை பத்திரிகைகளில் ஆணித்தரமாக எழுத, ஒரு நல்ல எழுத்தாளரால் நிச்சயம் முடியும். ஏன் அப்படி செய்யவில்லை என்பது கேள்விக்குரியது தான்

Link to comment
Share on other sites

ஜமுனா!

உங்களுடைய பதிலுக்கு நன்றி

நாம் எமது இலக்கு எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சாந்தியோ அல்லது சாத்திரியோ அல்லது நானோ இந்தத் தாலியறுப்பு விடயத்தில் எமது இலக்காக சமூகத்தைக் கொண்டிருந்தோம்.

சமூகத்தை நோக்கியதாகத்தான் எமது விமர்சனம், கோபம், கிண்டல் அனைத்துமே இருந்தது.

சமூகத்தை நோக்கிய எமது விமர்சனம் சில வேளைகளில் அந்தப் பெண்ணிற்கு மறைமுகப் பாதிப்புக்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதற்காக சமூகத்தின் இழிவான செயல்களை நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஆகவே எமது கருத்துக்களும் அந்தப் பெண் மீதான மறைமுகத் தாக்கங்களை கொடுத்திருந்தாலும், எமது இலக்கு அவர் அல்ல.

சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற போது, இலக்கு வைக்கப்படாத தனிநபர்கள் பாதிக்கப்படுவது பல முறை நடக்கின்ற ஒன்றுதான். இது தவிர்க்க முடியாது.

ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அவரின் கதறலை இலக்கு வைத்து நையாண்டி செய்திருக்கிறார்கள்.

இதுதான் என்னை உறுத்துகிறது.

ஒருவருடைய அழுகைக் குரலை நகைச்சுவையாக மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. நல்ல சிந்தனை உள்ள மனிதன் இதைச் செய்ய மாட்டான்.

நீங்கள் தாத்தாவின் அழுகை, அது இது என்று காரணம் சொன்னாலும், எல்லோருக்கும் நீங்கள் எதை இங்கே நையாண்டி செய்கின்றீர்கள் என்பது தெரியும்.

சிலருக்கு ஒரு குணம் இருக்கிறது. யாரவது கிழே விழுந்தால் உரத்து சிரித்து விடுவார்கள். உங்களுக்கு அது போன்ற பிரச்சனை இருக்கிறதா? அதனால்தான் சாவுவீட்டு அழுகையை நகைச்சுவை ஆக்கியிருக்கிறீர்களோ என்று சந்தேகப்படுகின்றேன்.

சபேசன் அங்கிள்!!

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ..சபேசன் அங்கிள் தாலியறுப்பு என்ற வார்த்தையை நான் இன்றைக்கு தான் கேட்கிறேன் அக்சுவலா நான் பேபி என்றபடியாலோ தெரியவில்லை (நான் மம்மியிட்ட தாலியறுப்பு என்னவென்று கேட்க அவாவிட்ட நல்ல ஏச்சு :( )...ஆகவே இது ஒரு சமுக பிரச்சினையாக என்னால் கருத முடியாது அத்தோடு இந்த தாலியறுப்புடன் நீங்க முடிச்சு போட்ட விசயங்கள்....என்னவோ நடந்ததை எழுத வேண்டும் இந்த இசுவை பேமஸ் ஆகிட வேண்டும் என்ற ஒரு ரீதியில் எழுதிய மாதிரி தான் எனக்கு தென்பட்டது மற்றவர்களின் பார்வையை பற்றி எனக்கு தெரியாது...(நெடுக்ஸ் தாத்தா உங்க பார்வை எப்படி என்ன மாதிரி தானோ.. :lol: .)...

சமூகத்தை நோக்கி உங்கள் விமர்சனம்,கிண்டல் இருந்ததாக நீங்க சொல்கிறீர்கள் அப்படியாயின் ஒரு பெண்ணின் அவலத்தில் நீங்களும் புகழ் தேடி இருப்பதை ஒத்து கொள்கிறீர்கள் பகிரங்கமாக :D ...இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்..ம்ம் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நீங்களே சொல்கிறீர்கள் அப்படியாயின் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க நீங்க வழிமுறைகளை கையாளாம வெறுமனே அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அந்த துர்பாக்கிய சம்பவத்தை கொண்டு புகழ் தேட நினைப்பது எவ்வளவு அசிங்கம் சபேசன் அங்கிள்!! :lol:

ம்ம் அந்த மரணவீட்டில் அந்த பெரியவர் நடந்து கொண்ட விதம் இழிவான முறை என்று குறிபிட்டு இருந்தீர்கள் சரி ஒத்து கொள்கிறேன் ஆனால் குறிப்பிட்ட ஒரு மூளையில் நடந்த ஒரு சம்பவத்தை வெளிகொண்டு வந்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்தாலும் என்னவோ எல்லா பெண்களிற்கு இப்படியே நடப்பது போல குறிபிடபட்டிருந்தமை என்ன என்று சொல்ல..... :D அத்தோடு ஏன் இந்த சம்பவத்தை அங்கே வைத்து தீர்வு காணாம இங்கையும்,ஒரு பேப்பரிலையும் எழுதினா போல அந்த பெண்ணிற்கு தீர்வு கிடைத்திடுமா நீங்கள் எழுதிவிட்டு போயிடுவீர்கள் அந்த பெண்ணிற்கு என்று ஒரு வாழ்கை இருக்கு அதனை கொஞ்சம் சிந்தித்து பார்த்தீர்களா... :lol:

சபேசன் அங்கிள் என்ன சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற போது இலக்கு வைக்கபடாத சில தனிமனிதர்கள் பாதிக்கபடுவது வழமையோ நல்லா இருக்கு உங்க சிந்தனை...மற்றவையின்ட பிரைவசி மேல நீங்க எப்படி தலையிடுவீர்கள் தனி மனித உரிமை சுகந்திரம் என்று எல்லாம் இருக்குது அல்லோ அப்படி இருக்கும் போது தனிமனித சுகந்திரத்தில் உங்கள் தலையீட்டை எப்படி செலுத்த முடியும்... :lol: இது நீங்கள் இருக்கும் நாட்டின்ட சட்டதிட்டத்தை மீறும் ஒரு செயல் தானே (இலங்கையில இருந்தா அது பிரச்சினை இல்லை)..

பாதிக்கபட்ட அந்த பெண்ணை நான் நையாண்டி பண்ணியது உங்களை உறுத்துகிறதா சபேசன் அங்கிள்...ஜ யாம் றியலி சொறி...பட் அந்த பெண்ணின் அவலத்தை அவலமாக கருதாது உங்கள் சிந்தனையை (அதாவது உங்கள் கருத்துகளை திணித்தமை) மற்றும் நீங்கள் சொல்லும் கருத்தை தான் ஏற்க வேண்டும் என்ற விதத்தில் கருத்துகளை பகிர்ந்தமை என்பனவெல்லாம் உங்களை உறுத்தவில்லையா சபேசன் அங்கிள்!! :D

சிலருக்கு யாரும் விழுந்தா சிரிக்கும் குணம் இருக்கும் ஆனா சிரித்து விட்டு விழுந்தவரை எழுப்பிவிடுவார்கள் ஆனால் சிலர் விழுந்தவரை எழுப்புவோம் என்றும் இல்லாம அவர் எப்படி விழுந்தார் என்று ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள் அவர்களை விட சிரித்து விட்டு விழுந்தவரை எழுப்பும் நான் எவ்வளவோ மேல் அல்லவா!! :)

இப்ப பாருங்கோ ஒரு மரணவீட்டிற்கு நீங்களும் போறீங்க,நானும் போறேன் அதாவது எங்களிற்கு இறந்தவர் அவ்வளவு நெருங்கிய சொந்தம் அல்ல ஏதோ தெரியும் என்ற ரீதியில் போனா அங்கே சபேசன் அங்கிள் ஒரு ஜோக் அடிக்கிறார் அப்ப பக்கதில இருந்த நான் சிரிக்கிறேன்...இப்ப நீங்க சொல்வதை பார்த்தா ஜோக் அடித்த நீங்க அப்பாவி போன்றும் அதை கேட்டு சிரித்த நான் குற்றவாளி போலும் அல்லவா இருக்கு சபேசன் அங்கிள்??ஆனா மரணவீட்டிற்கு வந்த சனதிற்கு தெரியும் தானே யார் மேல பிழை இருக்கு என்று சபேசன் அங்கிள்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் படி கேட்கவும் நடக்கவும் வேண்டும் என்ற தலைவிதி சமூகத்துக்குக் கிடையாது. நீங்கள் சொல்வதெல்லாம் ultimate truth என்பது மோசமான உங்களின் கற்பனை. அதை சமூகம் ஏற்கக் கூடிய நிலையில்லை.. என்பதை தெளிவாக உணர முடிகிறது.

சமூகம் பல முனைகளில் பல திசைகளில் பல ரகங்களில் சிந்திக்கும் குழுமத்தைக் கொண்டது. ஒரு சிலரின் சிந்தனையின் படிதான் சமூகம் ஒழுக வேண்டும் என்ற நிற்பந்தம் சமூகத்துக்குக் கிடையாது.

எமது சமூகத்துக்குத் தேவை.. சொல்லுக்கு முதல் செயலில் இறங்கத் துணித்த ஒருவனே தவிர.. சொல்லிச் சொல்லி.. தன்னை விளம்பரப்படுத்தும் ஒருவனையல்ல..!

நெடுக்ஸ் தாத்தா உங்கள் கருத்து அருமை ஜ லைக் இட் :lol: ....தாத்தாவிட்ட இருந்து பல விசயங்களை பேபி படிக்க வேண்டும் :lol: ..அட தாத்தா செயலில எல்லாம் ஒருத்தரும் இறங்கமாட்டார்கள் இப்படி கும்பலிலே கோவிந்தா தான் :lol: ...அப்படி மீறி ஒருத்தன் இறங்கிட்டான் என்றாலும் அவரையும் ஒதுக்கிடமாட்டோம் என்ன தாத்தா நான் சொல்லுறது சரி தானே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இங்கு ஜம்முவின் பதிவை மட்டும் குறைசொல்லி தமது பதிவுகளை ஏதோ சமுதாயச் சிந்தனை போல் காட்ட முயல்வது நகைப்பிற்குரியது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விடயத்தில் அக்கறை காட்டி அநியாயத்திற்கு நியாயம் கேட்பது போல் தம்மை முன்னிலைப்படுத்தவே பலர் முனைந்திருக்கின்றார்கள். சாத்திரியும் தனது பாணியில் இதை நகச்சுவையாக்கினாரே தவிர சமுதாயத்தை கிண்டலடித்திருப்பதாக நினைப்பதும் அதைவிட நகைச்சுவை!! குறிப்பிட்ட அப்பெண்ணின் பிரைச்சினைபற்றி பலர் தமது பாணியில் தமது திறைமையைக் காட்ட முயன்றிருக்கின்றார்கள் அதற்காக அப்பெண் பற்றிய விடயத்தை மிகையாகவே தம் கற்பனைகளைக் கலந்து விளையாடியிருக்கின்றார்கள். தவிர அப்பெண்ணிற்கு ஏற்பட்டது போல் எதிர்காலத்தில் எப்பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் வாசிப்பவர்களுக்கு ஏற்பட வைக்கவில்லை, மாறாக அப்பெண்ணை விவாதப் பொருளாக்கி அப்பெண்ணையே கலங்க வைத்தது தான் மிச்சம்.

இவற்றைப் சாட்டையடியாக புரியவைக்கவே ஜம்மு இப்பதிவை இங்கு இடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதைவிடுத்து ஏதோ இதனை இந்துமதப் பிரைச்சினையாக்கி சிலர் குளிர்காயப் பார்ப்பதை என்னவென்று சொல்வது??

குறிப்பாக எங்கு இந்துமதம் சொல்லியுள்ளது தாலி தங்கத்தில் அணிய வேண்டும் என்று. ஆரம்பத்தில் தாலியை வெறும் மஞ்சள் கயிறாகவே அணிந்து வந்தார்கள். அதனை தமது இஷ்டத்திற்கு பவுணாகவும் பின்பு பெண்ணிற்கு எத்தனை வயதோ அல்லது பெண்ணின் நிறையை வைத்தோ தாலிக்கொடியின் நிறையை மாற்றியமைத்தது யார். இப்படியான கேலிக்கூத்தான விடயங்களைச் சுட்டிக்காட்ட எவரும் முனையவுமில்லை.

அதுபோல் தாலியென்பது மஞ்சள் கயிற்றிலிருந்தபோது அது ஒரு அடையாளமாகவும் எப்போது பவுணாக மாறியதோ அது அலங்காரப் பொருளாகவே மாறிவிட்டது. குறிப்பிட்ட அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியும் மஞ்சள் கயிறாக இருந்திருந்தால் ஒருவேளை அப்பெண்ணும் கதறிய சம்பவமும் ஏற்பட்டிருக்காது. சும்மாவே வெறுவாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைக்கவும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா தண்னியடிச்சிட்டு மப்பில விழுந்துகிடக்கும் போது நாய் உங்க கோமணக்தை இழுத்திட்டு போன நாய் வாசம் தாங்காம மயக்கம் போட்டு விழுந்திச்சாம் உண்மையா குசா தாத்தா?

தம்பி வானவில்!!!!! உங்கடை கருத்துக்கு நான் ஒழுங்கான முறையிலை பதில் எழுதுவனெண்டால் மோகன் ஐயாவும் அவற்ரை கூட்டுகளும்(மப்பு உறுப்பினர்)ஆவி அடிச்சமாதிரித்தான் திரிவினம் :lol:

Link to comment
Share on other sites

இங்கு ஜம்முவின் பதிவை மட்டும் குறைசொல்லி தமது பதிவுகளை ஏதோ சமுதாயச் சிந்தனை போல் காட்ட முயல்வது நகைப்பிற்குரியது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விடயத்தில் அக்கறை காட்டி அநியாயத்திற்கு நியாயம் கேட்பது போல் தம்மை முன்னிலைப்படுத்தவே பலர் முனைந்திருக்கின்றார்கள். சாத்திரியும் தனது பாணியில் இதை நகச்சுவையாக்கினாரே தவிர சமுதாயத்தை கிண்டலடித்திருப்பதாக நினைப்பதும் அதைவிட நகைச்சுவை!! குறிப்பிட்ட அப்பெண்ணின் பிரைச்சினைபற்றி பலர் தமது பாணியில் தமது திறைமையைக் காட்ட முயன்றிருக்கின்றார்கள் அதற்காக அப்பெண் பற்றிய விடயத்தை மிகையாகவே தம் கற்பனைகளைக் கலந்து விளையாடியிருக்கின்றார்கள். தவிர அப்பெண்ணிற்கு ஏற்பட்டது போல் எதிர்காலத்தில் எப்பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் வாசிப்பவர்களுக்கு ஏற்பட வைக்கவில்லை, மாறாக அப்பெண்ணை விவாதப் பொருளாக்கி அப்பெண்ணையே கலங்க வைத்தது தான் மிச்சம்.

இவற்றைப் சாட்டையடியாக புரியவைக்கவே ஜம்மு இப்பதிவை இங்கு இடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதைவிடுத்து ஏதோ இதனை இந்துமதப் பிரைச்சினையாக்கி சிலர் குளிர்காயப் பார்ப்பதை என்னவென்று சொல்வது??

குறிப்பாக எங்கு இந்துமதம் சொல்லியுள்ளது தாலி தங்கத்தில் அணிய வேண்டும் என்று. ஆரம்பத்தில் தாலியை வெறும் மஞ்சள் கயிறாகவே அணிந்து வந்தார்கள். அதனை தமது இஷ்டத்திற்கு பவுணாகவும் பின்பு பெண்ணிற்கு எத்தனை வயதோ அல்லது பெண்ணின் நிறையை வைத்தோ தாலிக்கொடியின் நிறையை மாற்றியமைத்தது யார். இப்படியான கேலிக்கூத்தான விடயங்களைச் சுட்டிக்காட்ட எவரும் முனையவுமில்லை.

அதுபோல் தாலியென்பது மஞ்சள் கயிற்றிலிருந்தபோது அது ஒரு அடையாளமாகவும் எப்போது பவுணாக மாறியதோ அது அலங்காரப் பொருளாகவே மாறிவிட்டது. குறிப்பிட்ட அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியும் மஞ்சள் கயிறாக இருந்திருந்தால் ஒருவேளை அப்பெண்ணும் கதறிய சம்பவமும் ஏற்பட்டிருக்காது. சும்மாவே வெறுவாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைக்கவும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது.

வசபண்ணா பின்னீட்டீங்க போங்கோ :lol: ....வெறும் வாயை மெல்பவர்களிற்கு அவல் மட்டுமா கிடைத்தது கூடவே வடை பாயசமும் சேர்த்து கிடைத்தது என்ன நான் சொல்லுறது சரி தானே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

தம்பி வானவில்!!!!! உங்கடை கருத்துக்கு நான் ஒழுங்கான முறையிலை பதில் எழுதுவனெண்டால் மோகன் ஐயாவும் அவற்ரை கூட்டுகளும்(மப்பு உறுப்பினர்)ஆவி அடிச்சமாதிரித்தான் திரிவினம் :(

தாத்தா என்ட காதிற்குள்ள மட்டும் சொல்லுங்கோ :D என்ட தாத்தா அல்லோ இல்லாட்டி நேக்கு நித்திரையே வராது... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா என்ட காதிற்குள்ள மட்டும் சொல்லுங்கோ :( என்ட தாத்தா அல்லோ இல்லாட்டி நேக்கு நித்திரையே வராது... :(

அப்ப நான் வரட்டா!!

நோ

:D

Link to comment
Share on other sites

நோ

:D

அவ்வளதிற்கு மோசமான வார்த்தையோ அப்ப வேண்டாம் தாத்தா பிறகு நேக்கு நித்திரையே வராது :( ....இப்ப பாவனா கனவில வாறபடியா நிம்மதியா நித்திரை கொள்ளகூடியதா இருக்கு தாத்தா :( ....அது சரி உங்க கனவில யார் வாறது தாத்தா!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளதிற்கு மோசமான வார்த்தையோ அப்ப வேண்டாம் தாத்தா பிறகு நேக்கு நித்திரையே வராது :unsure: ....இப்ப பாவனா கனவில வாறபடியா நிம்மதியா நித்திரை கொள்ளகூடியதா இருக்கு தாத்தா :wub: ....அது சரி உங்க கனவில யார் வாறது தாத்தா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

சந்திரிகா :lol:

Link to comment
Share on other sites

சந்திரிகா :D

ஒரு காலத்தில சிறிலங்கா பிரசிடன்ட்டா இருந்த சந்திரிக்காவோ கு.சா தாத்தா :lol: என்ன கொடுமை இது :lol: போயும்..போயும் அவாவோ கனவில வாறா இல்லாட்டி 5 கிளாசில தாத்தா கூட ஒன்றா படித்த சந்திரிக்காவோ பட் அவாவும் இப்ப கிழவி ஆகி இருப்பாவே!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.