Jump to content

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன யஸ்டின், நக்கலா....? அதுவும் நம்மட நெடுக்கை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாமோ?

நான் நினைக்கிறன் நெடுக்கரின்டை மூளை சிந்திக்க தொடங்க முன்னர் அவரின்டை கை எழுதத் தொடங்கீடுது போல!

இப்ப எல்லாம் நான் நெடுக்கரின்டை கருத்துகளை(?) வாசிக்கிற பஞ்சியில அவருக்கு எழுதப்பட்ட பதில்களில இருந்துதான் அதன் சாராம்சத்தை தெரிஞ்சு கொள்ளுறனான் என்றா பாருங்கோவன்!

:huh:

ஜோவ் சாணக்கியன்.. நான் நாலு வரியிலதான் எழுதி வந்தனான்.. அந்த நாலு வரியில உள்ளதை சனம்.. தங்கட இஸ்டத்துக்கு 40 வரிக்கு எழுதி.. நான் எழுத வந்ததின் நோக்கத்தையே தலை கீழாக்க வெளிக்கிட்டுதுகள். இப்ப 40 வரில எழுதிறதைக் கூட 80 வரிக்கு நீட்டி.. அதையும் தலை கீழாக்குதுகள்.

இப்படி இருக்கேக்க எப்படிப்பா.. 4 வரியில.. நாலடியார் பாடி விளங்க வைக்க முடியும்...! சாணக்கியமான உங்களைப் போல ஆக்களுக்கு ஓகே.. ஆனால்..??! :o:(

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிணறுகள் குறித்து ஒரு உதாரணத்திற்குகுத்தான் சொல்லப்பட்டது. ஆயினும் எவரும் அவ்வாறு குளிப்பவர்களைத் தடுப்பவர்களை கண்டிப்பது குறித்துப் பேசவில்லை.

அவர்கள் சொன்னதெல்லாம்

குழாய் மூலம் தண்ணீர் அல்லது புதிய கிணறு -

தவிர கிணறு குறித்து எழுதும் போது தனியாருக்குகுச் சொந்தமான கிணறுகளை மனதில் நிறுத்தாமல் கோயில்களுக்குச் சொந்தமான பொதுக் கிணறுகள் குறித்துத் தான் கேட்டேன். ஏனெனில் அவ்வாறான நேரடி அனுபவங்களை 95 களில் அடைந்தவன் நான்.

இதுவரை ஒரு ஆசாமி கூட சாதியத்தின் பெயரால் ஒரு மனிதனின் உரிமைகளை மறுப்பவனை கண்டிக்க இயலவில்லையென்பதுவும் எதை உணர்த்துகிறது.

தவிர இங்கே வெள்ளாளர் மீது மட்டும் இத்தகைய குற்றச்சாட்டுகள் இல்லையென்பதையும் சொல்லியே ஆக வேண்டும். சாதியப் படிமுறையில் கீழ் நோக்கிய வகையில் இது தொடர்கிறது. வெள்ளாளர் தம்மூரின் கரையாரை ஏளனமாக பார்ப்பதுவும் பின்னர் கரையார் ஏளனமாகப் பார்ப்பதுவும் என்ற தொடர்ச்சியில்தான் இது நடைபெறுகிறது.

ஆக சமூகத்தில் வலிந்து பிரிக்கப்பட்ட படி நிலைகளில் ஆக கடைசியில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்

Link to comment
Share on other sites

சோழியன் சாதியத்தின் அடிப்படையில் இப்ப ஊரில இருக்கிற பிரச்சனை என்ன வென்று கேட்டிருந்தார்.

சமாதான காலத்தில் புனர்நிர்மான மீள் குடியேற்ற வேலைகள் ஓரளவு நடந்த போது உருவான கட்டுமானம் சம்பந்தப்பட்ட பல (உங்கள் பாசையில் சொல்வதானால் முன்பு ஒரு காலத்தில் ஆனால் தற்பொழுது இல்லாத சாதி அடிப்படையிலான) வேலைகளிற்கு மோசமான ஆட் தட்டுப்பாடு இருந்தது தாயகம் எங்கும்.

உதாரணமாக கட்டடத்துறை, மரவேலை. இந்தப் பிரச்சனை எதிர்காலத்தில் ஒரு நிரந்தர அல்லது இடைக்காலத் தீர்வு வரும்பொழுது இன்னமும் பெரிதாக இருக்கும். ஏன் இன்று கூட சிகை அலங்காரம் செய்பவர்கள் தட்டுப்பாடு கொஞ்சம் நிலவுகிறது.

இவற்றை எப்படித் தீர்க்கலாம்? சமூகத்தில் அவர்களை சமமாக மதியாது சாதி அடிப்படையான வேலைகள் என்ற முத்திரை உள்ளதுடன் இவற்றிற்கு கொடுக்கப்படும் ஊதியங்கள் என்றும் இரண்டுமே இவர்களிற்கான தட்டுப்பாடுகளை உருவாக்கி வருகிறது என்பது எனது அபிப்பிராயம்.

நீங்கள் விவாதிக்கலாம் பல வருடங்கள் நீண்ட தொடர்ச்சியான போர்க்காலங்களின் அபிவிருத்தியின்மை கட்டுமானத்துறையில் இருந்தா ஆட்களை வெளிநாடுகளிற்கு செல்ல வைத்துவிட்டது அல்லது வாழ்வாதாரத்தை வேறு துறைகளில் தேட வைத்துவிட்டது என்று. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஏனைய பல இவ்வாறு சாதிய அடிப்படையில் முத்திரை குத்தப்படாத துறைகளுக்கும் இந்த நிலையில்லை? உதாரணம் மின்னாசரத்துறை நீர்க்குழாய் பொருத்துதல். இவர்களிற்கு சம்பள ஓகே என்று இல்லை என்றாவிட்டாலும் கட்டத்துறை மரவேலை போல் தட்டுப்பாடு இருக்கவில்லை. இதற்கான காரணம் என்ன இதை எப்படித் தீர்க்கலாம்? "வெள்ளாளர்" என்று சொல்லிக் கொள்வோரும் கல்லடுக்க மரம் சீவ முன்வருவார்களா?

Link to comment
Share on other sites

ஜோவ் சாணக்கியன்.. நான் நாலு வரியிலதான் எழுதி வந்தனான்.. அந்த நாலு வரியில உள்ளதை சனம்.. தங்கட இஸ்டத்துக்கு 40 வரிக்கு எழுதி.. நான் எழுத வந்ததின் நோக்கத்தையே தலை கீழாக்க வெளிக்கிட்டுதுகள். இப்ப 40 வரில எழுதிறதைக் கூட 80 வரிக்கு நீட்டி.. அதையும் தலை கீழாக்குதுகள்.

இப்படி இருக்கேக்க எப்படிப்பா.. 4 வரியில.. நாலடியார் பாடி விளங்க வைக்க முடியும்...! சாணக்கியமான உங்களைப் போல ஆக்களுக்கு ஓகே.. ஆனால்..??! :huh::(

ஓம்...ஓம்....நீங்கள் எழுதிய அந்த நாலுவரியை வைச்சு உங்களை நாறடிக்கிறாங்கள்.....நீங்களும் கழுவுற தண்ணில நளுவுற மீனாக பதில்கருத்தில இருக்கிற பலவீனமாக இடங்களை மட்டும் போட்டுத் தாக்கிறீங்க என்றுதான் என்ற சிற்றறிவுக்கு விளங்குது....

இந்த தலைப்போடு சம்பந்தப்படாத என்னுடைய இரண்டு கேள்விகள்,

1) நீங்கள் இந்த திரியை ஆரம்பத்தில இருந்து பொறுமையா இந்த இறுதிக் கருத்துவரைக்கும் முழுமையா ஒரு தரம் வாசித்தீர்களா?

2) யாழ்களத்தில எப்பவாவது கருத்தாடலின்டை இறுதியில உங்கடை கருத்துகள் ஏதாவது சிறு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதா?

இப்ப இந்த தலைப்போடு சம்பந்தப்பட்டதாக ஒரு கருத்து:

இதை வாசிச்சுப் போட்டு என்னை நானே ஒரு கேள்வி கேட்டுப்பாத்தன், "நான் வழமையா முடிவெட்டும் எனக்கு மிகவும் பிடித்த அந்த பொடியனை நான் என்ற தங்கச்சிக்கு கட்டிக் கொடுப்பனா?" இந்தக் கேள்வியே எனக்கு நெஞ்சில சுருக்கெண்டு குத்திச்சு! பதில் நிச்சமா இல்லை எண்டு எனக்குத் தெரியும். ஆனால் ஏன் எனக்கு இந்த மனப்பான்மை, இதை எப்படி நீக்கலாம் என்ற கேள்விகளுக்கு விடை தெரியேலை!

Link to comment
Share on other sites

சுகன் என்பவரே.. முதலில் உங்கள் சாதியக் கண்ணாடியைக் கழற்றி வைச்சிட்டு இதைப் பாருங்கள். தாழ்வுச்சிக்கலில் உள்ள குழும மக்கள் என்று அக்குழும மக்களிடம் இனங்காணப்படும் இயல்புகளை வெளிப்படுத்தி.. இவற்றை இனங்கண்டு.. அவர்கள் இப்படியான பலவீன நிலையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளேன்.

இந்த நிலை சமூகத்தில் இல்லை.. என்று சொல்ல வருகிறீர்களா..???! எமது சமூகத்தில் மட்டுமல்ல.. மேற்குலக சமூகத்தில் கூட வெள்ளைக்காரன் சொன்னா பேசமாகக் கேட்டுக் கொண்டு வேலை செய்யும் நம்பவர்கள்.. கறுப்பன் சொல்லிட்டான் என்றால்.. அல்லது இன்னொரு ஏசியன் சொல்லிட்டான் என்றால் சண்டைக்கு நிற்பார்கள்.. காரணம் என்ன.. இதே தாழ்வுச் சிக்கல் தான்...!

நான் இனங்காட்டிய பிரச்சனைக்கு நானே தீர்வும் எழுதிவிட்ட பின்.. சுகன் என்பவர்.. அதற்குள் சாதியத்தை திணிக்க நிற்பது எதைக் காட்டுகிறது...???! அவருக்கும் தாழ்வுச்சிக்கல் உள்ளது எனப்தைத்தான்..!

சாதியம் வாயிலாக மக்களை பார்ப்பது நான் அல்ல நீங்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன். நீங்கள் சொல்லும் இயல்புகள் ஒரு குழுமத்துக்குரியது என்றும் என்னுமொரு குழுமம் அப்படி அல்ல என்பதை நிறுவி உள்ளீர்கள்.

நான் அவதானித்திருக்கிறேன்.. ஊரில் தாழ்வுமனச் சிக்கலுக்குள் வாழும் குழும மக்களின் நடத்தை என்பது சற்று மாறுதலானதாக இருக்கும். பண்பாகக் கதைக்கமாட்டார்கள்..! ஏமாற்றும் குணம் அதிகம் இருக்கும். பொதுச் சுகாதாரம் குறைவா இருக்கும். உடை நடையில் கவனமின்மை. கல்வியில் நாட்டமின்மை. சினிமா மோகத்தில் கிடப்பார்கள். இது அவர்கள் தனிமைப்பட்டுப் போக மேலும் வகை செய்கிறது.

உங்களுடைய இந்த கருத்தில் குழும மக்களின் நடத்தை என்று வந்திருக்காவிடின் இந்த விவாதத்திற்குள் நான் வந்திருக்கவும் வாய்பில்லை.

உங்கள் கருத்தில் குழும என்ற சொல்லை எடுத்துவிட்டு கருத்தை பார்த்தால் அதன் அர்த்தம் வேறானது.

ஊரைப்பற்றி கருத்தெழுதி சாதிகளை குழுமம் என்று சுட்டிக்காட்டுகின்றீர்கள். இது வெளிப்படையனது.

நீங்கள் குழும மக்கள் எதர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி எழுதவில்லை அவர்களின் நடத்தை பற்றி எழுதியுள்ளீர்கள் என்பது முக்கியமானது.

எங்கள் நாட்டில் பார்த்த ஏமாற்று குணம் கொண்ட குழுமம் எது?

பண்பாக கதைக்க மாட்டார்கள். எந்த குழுமம்?

சினிமாவில் மோகம் கொண்டு கிடக்கும் குழுமம் எது?

தாழ்வுமனச்சிக்கலுக்குள் உள்ள குழுமம் எது? மேலும் நீங்கள் சாட்டிய குற்றங்களுக்கு சம்மந்தப்பட்ட குழுமம் எது?

மேற்கண்ட பிரச்சனைகளால் தனிமைப்பட்டு போக வகை செய்கின்றது என்கின்றீர்கள். நீங்கள் சொன்ன நடத்தைக்கு புறம்பான நல்நடத்தை உள்ள குழுமம் எது? அதனிடம் இருந்து தனிமைப்பட்டு போகும் குழுமம் எது?

ஒரு தனிநபர் ஏமாற்று வேலை செய்தால் சமூகத்தில் மதிப்பிழந்து தனிமைப்பட்டு நிற்பது சாத்தியப்படும். இது ஒரு தனிமனித குணம் குழுமத்துக்கு பொருத்துவது அபத்தம் என்று சொல்லி களைத்துவிட்டது. தனிமைப்பட்டு போகும் குழுமம் எது?

வறுமைப்பட்ட மக்கள் என்று செல்வந்த மக்கள் என்ற அடிப்படையில் முன்னர் நியாயப்படுத்த வெளிக்கிட்டீர்கள். வறுமைப்பட்ட மக்கள் ஏமாற்றுக்காரர் என்று சொல்லவா முடியும். வறுமைக்கு காரணம் ஏராளம். அது தாழ்வுமனச்சிக்கலில் அணுகும் விடயமும் அல்ல.

எனக்குத் தெரியும் சுகன் என்பவருக்கும்.. தலித்தியம் சாதியம் பேசி விளம்பரம் தேடும் அர்ப்ப மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு. அவர்களின் வலைப்பூவில் இவரும் கவிதை எழுதி சைக்கிள் கப்பில விளம்பரம் தேடுறார். இல்ல.. இவருக்குள்ள உள்ள தாழ்வுச் சிக்கல் முற்றிய நிலையில்.. அவர்களிடம் வடிகால் தேடி ஓட முனைகிறார்...!

பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் போது சிலரால் பயன்படுத்தப்படும் கடசி அஸ்திரம் இது என்பதில் எனக்கு தெளிவுண்டு. உங்கள் மன நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பழிசுமத்தல்கள் ஊகங்கள் சாதாரணமானது. அதையே ஒரு குழுமம் மீது திணிப்பது பிரச்சனைக்குரியது. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகின்றேன். நான் ஒரு குழுமத்தின் அடயாளமல்ல. தனிமனிதர்களின் குணங்களை ஒரு குழுமம் என்ற போர்வையில் சாதிகள் மீது சுமத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்,

உந்த வி(தண்டா)வாதங்களில் ஒண்டுமட்டும் விளங்கீச்சு.

எப்பிடி தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை தலித் என்றோ தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ கருதியதால் அப்பிடியே முன்னேறாமல் இருந்தார்களோ,

எப்பிடி மலையக மக்கள் தாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் முன்னேறாமல் அப்பிடியே இருந்தார்களோ,

அதேபோல தான் ஈழத்தமிழர்களும் சிங்களவர்களால் அடக்கப்படுகிறோம் என்ற உணர்வுடனிருப்பதால் தொடர்ந்தும் அடக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

தாம் சிங்களவர்களால் அடக்கப்படுகிறோம் என்ற உணர்வினை அனைத்து ஈழத்தவர்களும் விட்டொழித்தாலே போதும் தமிழீழம் மலர்ந்துவிடும்.

இந்த அருமையான கருத்தை யாழ்க்களத்தில் தோற்றுவிக்க தூண்டுகோலாக இருந்த சபேசனுக்கு நன்றி.

உடனடியா வன்னிக்கொரு கடிதம் எழுதி தமிழீழத்தை உடனயே அடையவேண்டிய வேலைகளைப் பார்ப்போம்.

இப்பிடி மாறிமாறி வாதம் செய்யிறதை விடுவம்.

~~~~~~~~~~~~~~~~~

இதில எனக்கொரு சின்னச் சந்தேகமும் வந்திட்டுது.

தங்களை 'பஞ்சமர்' என்றோ அல்லது என்னென்ன சாதியப் பெயர்களால் தங்களை அழைக்கிறார்களோ அந்தந்தப் பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தாமல், ஒடுக்கப்பட்ட மற்றவர்களோடும் தம்மை இணைத்து, தமது பலத்தை அதிகரிப்பதற்காக 'தலித்' என்ற பெருங்குழுமத்தின் பெயரில் தம்மை அடையாளப்படுத்துவதை காரசாரமாக எதிர்த்துக்கொண்டிருந்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்ராப்பா பத்துவருசத்தை இரு நூற்றாண்டுகள் எண்டோ சொல்லிறது நெடுக்கால போவாரே?

நான் இருநூறு வருசத்தைத்தான் இரு நூற்றாண்டுகள் எண்டுறது எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறன்.

திரும்ப ஒருக்காப் போய் படிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுகன்,

கிணறு பாவிக்கிறதில சாதிப்பிரச்சினை இருக்குது எண்டதைக் காட்டினதும் இடப்பெயர்வுகள்தானப்பு. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தவர்களிட்ட கேட்டுப்பாரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சோழியன் சொல்லிற ஒரு வாதம், தமிழகத்தில் பார்ப்பனர்களால் வைக்கப்படும் ஒரு வாதத்தை ஒத்திருக்கிறது.

இரட்டைக் குவளை முறை (இதை ஒழிக்க இன்றும் மிகக்கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார் கொளத்தூர் மணி) பற்றிய விவாதத்தில் அவர்களிடமிருந்து வரும் பதில்,

" இதற்கெல்லாம் எதற்குப் போராட்டம்? போடா ஜாட்டான் என்றுவிட்டு நீங்களும் தேனீர்க்கடை வையுங்கள்"

அதுசரி, சாதியைப் பற்றிக் கதைக்கிறதாலதான் சாதி இன்னும் இருக்கு எண்டு சொல்லிற கூட்டமே இதையும் சொல்லிறது வேடிக்கையாக இல்லை?

அவன் குளிக்க விடுறானில்லை எண்டு இவனும் கிணறு வெட்டுறதும், அவன் சம அந்தஸ்து தாறானில்லை எண்டு இவனும் தனித் தேத்தண்ணிக் கடை வைக்கிறதும் சாதியத்தை இன்னும் கட்டிக்காப்பாத்தும் எண்டெல்லோ எனக்குப் படுது?

சாதியம் இன்னும் வலுவாக இருப்பதற்கு மதம் எப்படிக் காரணியாக இருக்கிறதென்பதில் இதற்கான பார்வை விரியும். தொழில்முறையடிப்படையில் சாதியம் வெளிப்படுத்தப்படுவது அருகிவரும் காலத்தில் கோயில் அடிப்படையில் அது வெளிப்படுத்தப்படுகிறது. சாதிக்கொரு கோயிலை வைத்திருக்கும் நடைமுறை ஒழிக்கப்படுவதும்போதுதான் சாதியொழிப்புக்கான போராட்டத்தில் சிறு முன்னேற்றமாவது ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில சாதிப்பிரிவினையில்ல எண்ட புரட்டை எத்தினதரம் தான் தம்பிமாரே சொல்லப்போறியள்?

உங்களுக்கே அலுத்துப்போகேலயோ?

சும்மா வன்னியை மட்டும் வைச்சுக்கொண்டு (அங்ககூட முற்றாக நீக்கப்படேல) ஒட்டுமொத்த ஈழத்துக்கும் கருத்துச்சொல்லக்கூடாது. நாங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப்பிறகு யாழ்ப்பாணம் போய் வந்தனாங்கள்தான்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததற்கும

Link to comment
Share on other sites

சோழியண்ணை கேக்கிறார் அது ஏன் எங்கட கிணத்தில தண்ணி அள்ள வேணும் எண்டு.

நான் கேக்கிறன் அது எப்படி அண்ணை ஊரில இருக்கிற நல்ல தண்ணிக் கிணறெல்லாம் வெள்ளாளரிண்ட காணிக்க கிடக்கு? எப்படி அது இவையின்ர காணிக்க கிடந்தது.இயற்கையாக இருக்கிற நீர் வளம் எப்படி வெள்ளாளரின் காணிக்கை மட்டும் தான் அண்ணை கிடக்குது?

உந்தக் காணிகள் அப்ப எப்படி அண்ணை பங்கிடப்பட்டது?அது ஏன் ஊர் ஒதுக்குப்புறத்தில நீர் வளம் அற்ற காணிகள் கீழ் சாதிகளிட்டக் கிடக்குது? இயற்கையாகக் கிடைக்கும் நீர் வளம் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.அது ஒரு தனி நபரோ தனிச் சாதியோ உரிமை கொண்டாட முடியாது.வெளி நாட்டில் இருக்கிற வெள்ளாரின்ட காணிகளைப் பாதுகாக்க ஊரில இருக்கிற கீழ் சாதிகள் ஏன் உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும்? வெளி நாட்டில இருக்கிற வெள்ளாளரின் காணிகளைத் தமிழீழ அரசு சூவீகரித்து அரச உடமையாக்கி தமிழீழ மக்கள் எல்லோருக்கும் நன்னீர் வளங்க வேண்டும்.

மேலும் இந்தில் இனொரு பகிடியும் கிடக்கு வெள்ளாளர் என்னும் சாதியே யாழ்ப்பாணத்தில் தான் உருவாக்கப்பட்டதாம்.தமிழ் நாட்டில் கீழ் சாதிகள் என்று கருதப்படுவோர் யாழ்ப்பாணத்திற்க்கு இடம் பெயர்ந்து தங்களை வெள்ளாளர் என்று உருமாற்றியதாக சிலர் பண்டைய குடிசன மதிபீடுகளின் அடிப்படையில் கூறி உள்ளனர்.ஆகவே இங்கே உயர் சாதி என்பது தாழ்ந்த சாதி என்றும் இருந்திருக்குமானால் ,குறிப்பிட்ட சாதிக்கு இந்தக் குணம் என்று கண்டுபிடித்து எழுதும் யாழ்க் கள நாசிய சாதி வெறியர்களை என்ன என்று சொல்வது.

மரபணுவியல், அறிவியல் என்று கதை விடும் ஒருவர் ஓம் ஓம் இந்தக் 'குழுமம்' இப்படித் தான் கீழ் நிலையானது ஊத்தையானது என்று எழுதுகிறார்.இவரின் அறிவியலும் மண்ணாங் கட்டியும்.கீழ் நிலையான எண்ணங்களை உடைய பலரது சாதிய எண்ணங்கள் வெளிவருவதற்கு இந்தத் தலைப்பு உதவி உள்ளது.

Link to comment
Share on other sites

இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்கு முன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர் (நெசவுப்பறையர்), தவஷிகள் ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர்.

இது வரலாற்றின அடிப்படையிலும் நடைமுறைச் செய்ற்பாடுகளின அடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக் கொணரப்படாமல் இருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப் பெரும்பான்மை தேவையாயி இருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்து வந்துள்ளது.

இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன். அன்று யாழ்மாவட்டத்தில் இருந்த சாதிக் குழுக்களின் தரவுகள் (census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச் செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:

Burgher ——-477

Bramman ——-1935

Chetty ——— 1807

Madappally —12995

Vellalas —4565 Moors —2166

Paradesy — 1830

Mallagam — 1501

Cariar —- 7562

Brassfounder — 105

Masons —- 47

Tuners — 76

Welper —50

Cycolas — 1043

Chandar —- 2173

Dyers —902

Chevia — 1593

Pandaram—- 41

Parawa — 35

Tannecaras — 1371

Silversmith — 899

Blacksmith — 904

Carpenters — 1371

Barbers — 1024

slave of Burgher — 18

Washermen — 2152

Moquah —2532

Malayalam —210

Covias — 6401

Company Nalum — 739

Pallas —6313

Parayars — 1621

Torampas — 197

Weavers — 272

Cawere chetty —18

Tawesy — 437

Nattowen — 22

Oil monger — 4

Tunmilah — 1291

Pallevely —376

Simpadawer — 40

cadia —970

Nallua — 7559

Potters — 329

Ship carpenter — 33

Marava — 54

Choyaroot-Digger —408

Paramber — 362

Free slaves — 348

இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக் கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் சிரிப்புக்குரியது. வெள்ளளாளர் என்றால், வெள்ளத்தை அடக்கி ஆள்பவெரன்றும், மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும். வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக் கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்து வ்௫கின்ற்னர். ஏனென்றால் அவரகளில் பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.

இந்த வரலாற்றாதாரங்கள் அதனை மெய்ப்பிக்கும். இந்த இலட்சணத்தில் இவர்கள் தங்களை உயர் சமூகமென்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் வரலாற்றில் மோசடி செய்து பழக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலும் வரலாற்று மோசடிக் கும்பலகளுண்டு. சங்க இலக்கியங்௧ளில் ஓரிடத்திலேனும் காணப்படாத அந்நியர்கள், சேர, சோழ, பாண்டியரகளின் வீழ்ச்சிக்குக் காரணமான இந்த அந்நியர்களும் சொல்கிறாரகள், தங்௧ளுக்கும் சேர, சோழ, பாண்டியர்களோடு உறவி௫ப்பதாக.

அன்று யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் ௭னப்படுவோர் நான்கு வீதத்தினராகவே இருந்துள்ளதனை வரலாறு பலவிடங்களில் நிரூபிக்கின்றது. வரலாறுகளில் மாததிரமல்ல இலக்கியங்களிலும் இந்தச் சாதிமாற்ற மோசடிகள் பற்றிய உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன். கள்ளர் மறவர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர் என்ற வரலாற்றிலக்கிய வரிகள் பல உண்மைகளை இங்கு மெய்ப்பிக்கின்றது.

வெள்ளாளர் கீழ் சாதிகளென்று மனு சாஸ்த்திரமும் பழந் தமிழ் இலக்கியங்களும் சொல்கின்றன. வேளாளர் அல்லது வெள்ளாளர் வர்ணாச்சிரம தர்மத்தின் படி கடை வர்ணத்தினர். அதாவது, சூத்திரர்கள். சூத்திரர்கள் (வெள்ளாளர்) இழி சாதிகளென்றும், இன்னும் இங்கு நான் இப்பொழுது குறிப்பிட வரும்பாத இன்னும் பலவற்றினை மனு சாஸ்த்திரமும், பிராமணர்களுடைய வேதங்களும சூத்தர வேளாளர் பற்றிச் சொல்கின்றன். தேவைற்படின் அவைகளையும் இங்கு வழங்குவேன்.

நான் விமர்சகனே. தவிர, தலீத்வாதியல்ல. பழந்தமிழ் இலக்கியம் சொல்வதென்ன? “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே “(தொல் : பொருள் : கற்பியல் : 142)

பொருள் : இளம்பூரணர் உரை : மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.

எஸ்.ஜெயக்குமார்

வரலாற்று ஆய்வுப்பணியில்

Jeya

http://thesamnet.co.uk/?p=251#comments

மடப்பள்ளிகளே முதலியார் பட்டங்களுடன் முன்பு யாழ்ப்பாணத்தில் சமூக பொருளாதாரத்தில் முன்னிலை வகித்தவர்கள். அன்று யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை (12995)யினராகவுமிருந்தவர்கள. வெள்ளாளர்களல்ல. வெள்ளாளர் ஆக நான்கு வீதத்தினரே. வெள்ளாளர் என்ற பெயர்களுடன் வெவ்வேறு பிரிவினர் சங்கிலியன் காலத்திலும் மற்றையவரகளின் நில புலங்களை அதிகளவில் மானியங்களாகப் பெற்றுக் கொண்டார்களென்று யாழ்ப்பாணச் சரித்திரங்களிலேயே நிறைய ஆதாரங்களிருக்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருநது கொடிகாமம் வரையான கரையோர நிலக்காணிகள் முழுவதும் கரையார் சமூகத்திற்ககுச் சொந்தமாக இருந்ததென்றும் பினபு அவைகள் அவர்களிடமிருந்து ப்றிக்கப்பட்டு அவரகளும் அவ்விடங்களை விட்டுத் துரத்தப்பட்டார்களென்று யாழ்ப்பாணச் சரித்திரம் மிகத் தெளிவாகவே பதிந்து வைத்திருக்கின்ற்து. யாழ்ப்பாணத்தில் முன்னைய பெரும்பான்மைச் சமூகங்கள் மடப்பள்ளி, கரையார், மள்ளர்(பள்ளர்) நளவர், கோவியர் ஆகியோரே.

நான் சவால் விடுகிறேன் இந்தச் சமூகப் பிரிவினரைத் தவிர பிற சமூகம் எதுவும் பெரும்பான்மையினராக இருந்ததில்லை. ஆ.முத்துத்தம்பிக்கு இவ்ற்றைப் பார்த்து மனம் கொதிக்கின்ற்து. தான் எழுதிய சரித்திரப் புத்தகத்ததில் மடப்பள்ளிகளையும் வெள்ளாளர்களையும் இணைத்து அன்றைய வெள்ளாளர் 15000 என எழுதியுள்ளார். சரித்திரங்களை நேர்மையாக ஆய்வு செய்பவர்களுக்கு முத்துத்தம்பியின் குளறுபடிகள் நன்கு விளங்கும்.

யாழ்ப்பாணக் குறுநிலத் தலைவர்களுடைய ஆட்சின்போதும், போர்த்துக்கேய ஆளுமையின் ஆரம்ப, இடை நிலைகளிலும் முதலியார் பட்டம் தரித்து சமூக முன்னிலை வகித்த மடப்பள்ளிகளின் கைகள் ஓங்கியது. பள்ளர் நளவர்களுடைய குடிமனைப் பெருநிலங்கள் பறிக்கப்பட்டு வடுகர்களுடைய நிலங்களுக்கருகில் கூலிச் சுரண்டல்களுக்கு ஏதுவாக குடியிருத்தப்பட்டனர். குறைந்தபட்சம், அரண்மனையில் வாயில்காக்கும் உத்தியோகம் வகித்த மள்ளர்(பள்ளர்) நளவர் ஆகயோரின் உரிமைகள் மேலும் ப்றிக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி சாதித் திமிரும்..................... சாதிக் கொழுப்பும் பிடிச்சு அலையிற சாக்கடையள சவுக்கால அடிக்கோணும்............................... தமிழினத்தின்ர தரித்திரங்கள் உதுகள்......................

அந்த சாதிக்காரர் இப்பிடி............... இந்த சாதிக்காரர் இப்பிடி................... அவையளோட பழகாத எண்டு தங்கட பிள்ளையளுக்கும் சொல்லிக்குடுத்து வளக்குதுகள் உந்த தறுதலைக் கூட்டங்கள்.......................... இப்பிடி சொல்லி சொல்லி அடுத்த சந்ததிட்டயும் சாதியக் காவிக்குடுக்குதுகள் மானங்கெட்ட இழிபிறப்புகள். அதுகள் அப்பிடி................ அதுகளுக்கு ஒண்டும் தெரியாது............. எண்டு சொல்லித் தங்கட சாதிரித்திமிரயும் கொழுப்பையும் காட்டுற இந்தக் கூட்டத்தின்ர பிள்ளையள் காவாலியளாவும் கழிசடையளாவும் திரியுது.................

இந்த சாதித் திமிர் பிடிச்ச கூட்டங்களுக்கு நிறைய உளவியல் பிரச்சனையள்.................... ஊரில எங்களுக்கு கீழ இருந்தவங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு வந்து நல்லா இருக்கிறாங்கள்................... அதுகளின்ர பிள்ளையள் நல்லாப் படிக்குதுகள் எண்டு மனசில பொறாமை..................... வக்கிரம்........................... குரூரம்................ நாங்கள் கோப்பை கழுவுறம்.......................... அவங்கள் கடையள் வைச்சு பிசினஸ் பண்ணுறாங்கள் எண்டு மனசுக்குள்ள உளவியல் ரீதியா பாதிக்கப்பட்டுட்டுதுகள்...........

............................ இப்பிடியானதுகளின்ர உளவியல் நோய் கன இடங்களில வெளிப்படும்...................... இதுகள பாத்தா பயித்தியங்கள் எண்டுதான் சொல்லத் தோணும்.......................... உதாரணமா வீட்டில இந்த சாதித் திமிர் பிடிச்சவையின்ர பிள்ளை பள்ளிக்கூடத்தில மார்க்ஸ் குறைய எடுத்துக்கொண்டு வரும்................ அப்ப தகப்பன் இல்லாட்டி தாய் பிள்ளைய பேசுவினம்............ எப்பிடி எண்டு நினைக்கிறியள்................. அங்க ஊரில அந்த தொழில் செய்துகொண்டிருந்தவங்கட பிள்ளையளெல்லாம் யூனிவர்சிட்டிக்கு போகுதுகள்.................... நீயும் இருக்கிறியே.......... எண்டுதான் பேசுவினம்............... அந்தளவுக்கு இருக்கு இந்த சாதித் திமிரும் சாக்கடையும் நிறைஞ்ச கழிசடைக் கூட்டத்தின்ர மனிநிலை.................... இதுகளுக்கு சாதித் திமிர் முத்தி உளவியல் ரீதியா சரியா பாதிக்கப்பட்டிட்டுகள்................. இவை ஊரில குறைஞ்சவை குறைஞ்சவை எண்டு தாழ்த்தி வைச்ச சனமெல்லாம்.......... வெளிநாட்டில பொருளாதார ரீதிலயும் கல்வி ரீதிலயும் நல்ல நிலைக்கு வந்திட்டுதுகள் எண்டத ஏற்றுக்கொள்ள முடியல....................... அந்தளவுக்கு பொறாமையால இதுகள் சாகுதுகள்.............

வெளிநாட்டுக்கு வந்து கோப்பை கழுவியும் தன்ர பிள்ளையளின்ர மயிரை தாங்களே வெட்டியும் தங்கட கழிப்பறைய தாங்களே கழுவியும்............... ஊரில இவை எதெஎதெல்லாம் இந்த இந்த சரதிக்காரன் தான் செய்யணும் எண்டு சொல்லித்திரிஞ்சினமோ.............. அந்த வேலையள இளக்காரமா பாத்திச்சினமோ............. அதெல்லாத்தையும் இதுகள் இங்க வந்து செஞ்சுமு்................... இன்னும் இதுகளுக்கு சாதித் திமிர் விட்டுப்போகேல.-............................ அந்தளவுக்கு மனிநிலை பாதிக்கப்பட்டிருக்குதுகள்.....

......................

சிங்களவன் தமிழன பாத்து என்னத்த சொல்லிறானோ அதத்தான் இந்த சாதித்திமிர் பிடிச்ச சாக்கடையளும் சொல்லுதுகள்............................. சிங்களவன் சொல்லுறான் உனக்கு நாடுவேணுமெண்டா வேற எங்கயும் போய் உருவாக்கு........ நாங்க தடுக்கல எண்டு...................... அதத்தான் இந்த கூட்டமும் சொல்லுது............... உனக்கு கிணறுவேணுமெண்டா நீ போய் வெட்டன் எண்டு...................... அந்தக் கிணற ஏதோ இவைதான் வெட்டின மாதிரி கதையளக்குதுகள்.........................

வெளிநாட்டுக்கு வந்து ஏதோ சூழ்நிலையால எல்லாரோடயும் பழகவேண்டி கட்டாயமேற்பட்டதால இந்த சாதித் திமிர் பிடிச்ச சாக்கடைக் கூட்டங்கள் வேற வழியின்றி பழகுது................... பிறகு சாதி எங்க இருக்கெண்டு கேக்கும்.................. ஆனா இதுகளுக்கு இரட்டை முகம்................... போய் எல்லாரோடயும் பழகும்............. வீட்டில பிள்ளையளிட்ட சொல்லி வளக்கும்.......... நீ யாரவேணுமெண்டாலும் லவ் பண்ணு ஆனா சாதி குறைஞ்சதுகள லவ் பண்ணிடாத............... அவையின்ர இவையின்ர பெடியங்கள பெட்டையள லவ் பண்ணிடாத எண்டு சொல்லிச் சொல்லி வளக்கும்.......................... சாக்கடை பிடிச்ச கூட்டம். சாதி எங்க இருக்கு........... சாதியெல்லாம் இப்ப இல்ல................. கல்யாணத்தில மட்டும் தான் சாதி இருக்கெண்டு சொல்லுற இன்னொரு சாம்பிராணி கூட்டமும் இருக்கு.................... இதுகள் தாங்கள் கண்ணை மூடிக்கொண்டா உலகமே இருண்டிடும் எண்டு நினைக்கிற கூட்டம்.......................... பள்ளுிக்கூடத்தில நிறைய தமிழ் பிள்ளையள் படிச்சா............... தாய் தகப்பன் பிள்ளைக்கு சொல்லிக்குடுக்குங்கள்....... அந்த பிள்ளையோளடா பழகாத............... அதுகள் என்ன சாதியோ தெரியாது................. இப்பிடித்தான் சொல்லிக்குடுத்து வளக்குதுகள் இங்க.................

சாதி வெறி பிடிச்ச இந்த கூட்டங்களுக்கு மனநிலை சரியா பாதிக்கப்பட்டு................. பொறாமையால தவிக்குதுகள்................... இதுகளின்ர சாதிக் கொழுப்புக்கு............... தமிழீழம் கிடைச்சா பிறகு புலியள் நல்ல பாடம் சொல்லிக்குடுப்பினம்....................

............... சாதித் திமிர் பிடிச்ச இந்தக் கூட்டங்கள் சாதி வெறியில வெளிப்படுத்துற ஒரு வார்த்தைக்கும் மரணதண்டனை குடுக்கோணும்............................. வெளிநாட்டுக்கு ஓடிவந்தும் சாதித் திமிர் பிடிச்சு அலையுற இந்தக் கூட்டத்த சரியான முறையில தண்டிக்கோணும்................ வரும் அதுக்கொரு காலம்...............

இந்த சாதித் திமிரும் சாதிவெறியும் பிடிச்சு அலையுற கூட்டத்தால காலம் காலமா தாழ்த்தப்பட்டும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டும் வந்த மக்களைப்பற்றி தங்கட அடுத்த சந்ததிக்கும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி தங்கட சாதியத் திமிரை தக்கவைக்கிறது தான் இந்த சாதிவெறி பிடிச்ச மனநோயாளர்களின்ர வேலை.............. கோப்பை கழுவியும் சாதிக் கொழுப்பு குறையாத (கோப்பை கழுவுறத குறைவா நான் சொல்லல.............. திமிர் பிடிச்ச கூட்டம் அத குறைவா கருதுறதால குறிப்பிடுறன் இங்க) கூட்டத்தின்ர மனநோய்க்கு என்ன தீர்வு???????????????????????? புலத்தில வந்து சாதியத்த வெளிப்படையா வளக்கேலாது எண்டதால நுணுக்கமா மறைமுகமா சாதிய காவி வளக்க முற்படுற கூட்டத்தை இனங்கண்டு தண்டிக்கோணும்............................. விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் எதிரான இந்த சாதிய அடையாளங் காவுறதுகள் தமிழினத் துரோகிககள்............................ தமிழர்களின்ர தரித்திரங்கள்.........................................

...... :(:huh: மனநோய் பிடித்த கூட்டம் இதுகள்..................... வக்கிரமும் குரூரமும் துவேசமும் பிடிச்ச சாக்கடையள் இதுகள்............................. தமிழினத்தின்ர சாபக்கேடுகள் இதுகள்...........

பி.கு: மேல எழுதின கருத்து தமிழ் சமூகத்தில இருக்கிற சாதித் திமிர் பிடிச்ச சாக்கடைகள நோக்கி எழுதப்பட்டிருக்கு

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி பூனைக்குட்டிதான்.. :huh:

யார் என்ன சளாப்பல் கதை சொன்னாலும் சாதிவெறி என்பது புலம்பெயர்ந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது, குறிப்பாக திருமணங்களில். எனக்குத் தெரிந்த ஒரு பெண் விரும்பியது சாதி குறைந்ததாகக் கூறப்பட்ட ஒரு படிப்பிலும், குணத்திலும், அறிவிலும், வளத்திலும் சிறந்த ஒரு வாலிபனை. அடேயப்பா விட்டார்களா பெண்வீட்டுக்காரர். குய்யோ முறையோ எண்டு கத்தி ஒரே கலாட்டா.

பிறகு சமாதான காலத்தில் பெட்டையைக்கூட்டிக்கொண்டு நாட்டுக்குப் போனவை. அங்க ஏற்கனவே ஒரு தங்களின்ர சாதிப் பெடியனை செற் பண்ணி வச்சிட்டு அங்க வச்சுக் கட்டிக் குடுக்கப் பாத்தினம். பெட்டை அழுது குழற பிறகு அந்த ஐடியாவை விட்டுட்டினம். பிறகு இங்க கூட்டிக்கொண்டு வந்து பலவிதமா வெருட்டி இப்ப தங்களின்ர சாதியில கட்டிக் குடுத்திட்டீனம்...

ஆகவே சாதி புலம்பெயர் நாடுகளில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேணும்.. :(

Link to comment
Share on other sites

ஆகவே சாதி புலம்பெயர் நாடுகளில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேணும்.. :(

பின்ன இஞ்சையெங்க சாதியிருக்கு எல்லாத்தையும் எப்பவோ அழிச்சிட்டம். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) நீங்கள் இந்த திரியை ஆரம்பத்தில இருந்து பொறுமையா இந்த இறுதிக் கருத்துவரைக்கும் முழுமையா ஒரு தரம் வாசித்தீர்களா?

2) யாழ்களத்தில எப்பவாவது கருத்தாடலின்டை இறுதியில உங்கடை கருத்துகள் ஏதாவது சிறு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதா?

1. பொறுமையா வாசிக்கிற அளவுக்கு புதுமையா எதுவும் இல்லையே. கடைஞ்ச கீரையையே வழமையாக் கடையிறவைதான் கடையினம்..! இவைட கடைச்சல ஒருக்கா வாசிச்சா காணாதோ..!

2. வாற கருத்துக்கெல்லாம் என்னுடைய கருத்தியலை மாத்தனும் என்றது.. என்னவோ.. கருத்தியல் தெளிவில்லாம களமாட வாறது போல காட்ட நினைக்கிறியள் போல. என்னைப் பொறுத்தவரை எனது கருத்தியலுக்கு மாற்றம் தரவல்ல கருத்துக்களை நான் இங்கு உணரல்லை என்றால்.. எனக்கு மாற்றங்களைத் தேட வேண்டிய அவசியதுக்கு இடமில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்ல...!

நான் எனது கருத்தியலில் தேவையான அளவுக்கு தெளிவாத்தான் இருக்கிறன். அந்த தெளிவை துலக்கக் கூடிய.. கருத்துக்கள் இங்க வாற அளவு ரெம்பக் குறைவு..! :huh::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியை பற்றி ஒருத்தரும் கதைக்காமல் இருக்கிறது தான் சாதியை ஒழிக்கும். முடிஞ்சால் குழும மக்கள் கோயில் கட்டி கிணறு வெட்டி முன்னுக்கு வரட்டும். இல்லாட்டி குழாய் நீர் வரும். அது வரையும் பொறுத்திருக்கட்டும்.

மற்றும் படி இப்பிடி பப்ளிக்காக சாதியைப் பற்றி கதைச்சால் சாதி இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும்.

அதனாலை கதைக்காமல் இருக்கிறதுதான் எங்கடை ஒற்றுமைக்கு நல்லது. மற்றும் படி சாதி இருக்கிறதுக்கு தாழ்வு சிக்கல்தான் காரணம் நாங்கள் காரணமில்லை. அப்பிடி தாழ்வுச் சிக்கல் வாறதுக்குரிய சமூக காரணிகளை நாங்கள்தான் உருவாக்கினம் எண்டதை கடைசி வரைக்கும் எங்களால ஏற்றுக் கொள்ள மாட்டம். குளிக்காத ஆட்கள்தான் காரணம்.

குளிக்கிற ஆட்கள் குளிக்காத ஆட்களைத் திட்டுறது சகஜம் தான். அதுக்கு சாதிய பூச்சு பூச வேண்டாம்.

சாதியே இல்லை. சாதியை ஒழிச்சாச்சு. இதுக்குப் பிறகும் ஆராவது வெள்ளாளா மீது குற்றம் சுமத்தினால் நான் சும்மா இருக்க மாட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியெண்டது நல்ல விசயம்......................... சாதியெண்டது நல்ல நோக்கத்தில தான் சொல்லப்பட்டுது...................................

.. சாதியெண்டது இந்துக்களின்ர அறிவியல் கண்டுபிடிப்பு .............. சாதி எண்டது எங்கட கலாசாரம்...................... எண்டு விஞ்ஞான விளக்கம் குடுக்கிறதுக்கும் வெளிநாட்டில சில மனநோய் பிடிச்ச சாக்கடையள் இருக்கு தெரியுமோ???????????????? இதுகளுக்கு சின்னனில இருந்தே மனநோய் பிடிச்சிருக்கோணும்....................... இப்ப வளந்தோடன இன்னும் சாதிய மனநோய் முத்திட்டுது...................... வெளிநாட்டுக்கு ஓடிவந்து வெள்ளைக்காரனின்ர கால்நக்கிற இந்த சாதித் திமிர்பிடிச்ச விசுக்கோத்துக் கூட்டங்களுக்கு என்ன கவலையெண்டால்.......................... தங்களுக்கு ஊரில சேவகம் செஞ்சவங்கள் இங்க வந்து தங்கள மிஞ்சி வளந்திட்டாங்கள் எண்டது தான்............ இப்பிடியே மனம்புழுங்கியே சாகப்போதுகள்......................................... :(:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதியை பற்றி ஒருத்தரும் கதைக்காமல் இருக்கிறது தான் சாதியை ஒழிக்கும். முடிஞ்சால் குழும மக்கள் கோயில் கட்டி கிணறு வெட்டி முன்னுக்கு வரட்டும். இல்லாட்டி குழாய் நீர் வரும். அது வரையும் பொறுத்திருக்கட்டும்.

மற்றும் படி இப்பிடி பப்ளிக்காக சாதியைப் பற்றி கதைச்சால் சாதி இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும்.

அதனாலை கதைக்காமல் இருக்கிறதுதான் எங்கடை ஒற்றுமைக்கு நல்லது. மற்றும் படி சாதி இருக்கிறதுக்கு தாழ்வு சிக்கல்தான் காரணம் நாங்கள் காரணமில்லை. அப்பிடி தாழ்வுச் சிக்கல் வாறதுக்குரிய சமூக காரணிகளை நாங்கள்தான் உருவாக்கினம் எண்டதை கடைசி வரைக்கும் எங்களால ஏற்றுக் கொள்ள மாட்டம். குளிக்காத ஆட்கள்தான் காரணம்.

குளிக்கிற ஆட்கள் குளிக்காத ஆட்களைத் திட்டுறது சகஜம் தான். அதுக்கு சாதிய பூச்சு பூச வேண்டாம்.

சாதியே இல்லை. சாதியை ஒழிச்சாச்சு. இதுக்குப் பிறகும் ஆராவது வெள்ளாளா மீது குற்றம் சுமத்தினால் நான் சும்மா இருக்க மாட்டன்.

ஏன் உங்களுக்கு சாதிக் காய்ச்சல் வாறத்துக்கும் யாரோ தான் காரணமோ..??!

செக்கு மாட்டை கட்டி வைச்சுத்தான் சுழல விடனும் என்றில்லை. பழக்க தேசத்தில அதுவே சுழலும்..! இந்த நிலையில உள்ள தாழ்வுச் சிக்கல் குழும மக்களை அதிலிருந்து விடுவியுங்க.. அவை உருப்பட்டு.. சாதாரண மனிசராகிடுவினம்.

எங்க இருந்திட்டு புற்றீசல் போல கிளம்பிறியளோ தெரியாது. சாதி என்ற உடன.. விழுந்தடிச்சு ஓடிவாறியள்.

அங்கால நேசக்கர அமைப்பு என்று ஒன்றை உருவாக்கி தாயக மக்கள் எல்லாரையும் மனிசரா மதிச்சு.. மனிதாபிமான உதவி செய்யுங்கோ என்றா.. ஓடி ஒளிச்சிடுறியள்..! :(

உங்கட தாயகப் பற்று.. சாதிக்குள்ள தான் இருக்கோ என்னோ..! :huh:

எனக்கென்றால் ஊரில உள்ளவங்கள் எல்லாரும் மனிசராத் தான் தெரியுறாங்க. அவைக்குள்ள சிலர் தங்க தங்க முயற்சியால தங்களுக்க உள்ள தாழ்வுச்சிக்கலில இருந்து வெளி வந்திட்டினம் என்றாலே போதும். இப்படி அடுத்தவனைச் சாட்டி சாதிப் பாதுகாப்பும்.. சாதிச் சங்கமும்.. தலித்திய இயக்கமும் ஆரம்பிச்சு.. தலித்திய உரிமை பாதுகாப்பு என்று.. புதிசா.. முழங்கத் தேவையில்ல...!

மனிசருக்கு உள்ள உரிமையையே நாட்டில சரியா அனுபவிக்க முடியல்லையாம். அதுக்கு குரல் கொடுக்க வக்கில்ல... மனிசரைப் பிளவு படுத்தி.. சாதி காவி.. அதால ஒரு உரிமை மீட்கப் போகினமாம்.. இந்த வேடிக்கையும் ஒருக்கா கேளுங்கோவன்.

அடிப்படையில எல்லாரையும் சக மனிதனமா மதிக்க இடமில்லாத மனசுகளில் உள்ள தாழ்வுச் சிக்கலாலதான் இந்தச் சாதிய உச்சரிப்பு வெளில வருகுதே தவிர.. சாதி என்ற ஒன்று உருவத்திலும் கிடையாது.. மனித உரிமைகளிலும் கிடையாது. மனிசருக்கையும் கிடையாது.

ஒருத்தன் அடக்கினா.. ஏன் அடங்கிப் போகனும்...???! அடக்கிறவனும் மனிசன் அடங்கிறவனும் மனிசன் தானே. பிறகெதற்கு அடங்கனும்..???! அந்த அடங்கிப் போற குணம் ஏன் வருகுது.. எப்படி வருகுது..??! ஏன் தன்னை மற்றவனைப் போல மனிசனா நிலைநிறுத்திக்க முனையல்ல...???! ஏன் அடக்கிறவை எதிர்த்து தன்ர உரிமையை தக்க வைக்கல்ல...???! இதுக்கெல்லாம்.. விடை தேடினிங்கண்ணா... உவையிட வண்டவாளங்கள்... வெளிச்சத்துக்கு வரும்..! சாதி என்ற மாயைக்குள்ள இருந்து அனுபவிச்ச.. சுகங்களும்.. வெளில தெரியும்..! :D:o

Link to comment
Share on other sites

சாதியை பற்றி ஒருத்தரும் கதைக்காமல் இருக்கிறது தான் சாதியை ஒழிக்கும். முடிஞ்சால் குழும மக்கள் கோயில் கட்டி கிணறு வெட்டி முன்னுக்கு வரட்டும். இல்லாட்டி குழாய் நீர் வரும். அது வரையும் பொறுத்திருக்கட்டும்.

மற்றும் படி இப்பிடி பப்ளிக்காக சாதியைப் பற்றி கதைச்சால் சாதி இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடும்.

அதனாலை கதைக்காமல் இருக்கிறதுதான் எங்கடை ஒற்றுமைக்கு நல்லது. மற்றும் படி சாதி இருக்கிறதுக்கு தாழ்வு சிக்கல்தான் காரணம் நாங்கள் காரணமில்லை. அப்பிடி தாழ்வுச் சிக்கல் வாறதுக்குரிய சமூக காரணிகளை நாங்கள்தான் உருவாக்கினம் எண்டதை கடைசி வரைக்கும் எங்களால ஏற்றுக் கொள்ள மாட்டம். குளிக்காத ஆட்கள்தான் காரணம்.

குளிக்கிற ஆட்கள் குளிக்காத ஆட்களைத் திட்டுறது சகஜம் தான். அதுக்கு சாதிய பூச்சு பூச வேண்டாம்.

சாதியே இல்லை. சாதியை ஒழிச்சாச்சு. இதுக்குப் பிறகும் ஆராவது வெள்ளாளா மீது குற்றம் சுமத்தினால் நான் சும்மா இருக்க மாட்டன்.

சாதியோ அப்பிடியெண்டா எங்கடை புலத்துப் பிறவிகள் கேட்கிற நிலையில இருக்க சும்மா பொய்யெல்லாம் பேசப்படாது. இவோன் நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ாதியெண்டு சும்மா சாயம் பூசுகினம் சிலபேர்.

முடிஞ்சா சொந்தக்கிணறு வெட்டி குளிக்கட்டும் இல்லாட்டி குளிக்காமல் இருக்கட்டும்.

இவோன் சொன்னது -

சாதியே இல்லை. சாதியை ஒழிச்சாச்சு. இதுக்குப் பிறகும் ஆராவது வெள்ளாளா மீது குற்றம் சுமத்தினால் நான் சும்மா இருக்க மாட்டன்.

பறவாயில்லை கத்தியெடுத்துக் கொண்டு வாங்கோ இல்லை துவக்கெடுத்துக்கொண்டு போங்கோ. சாதியே இல்லை பிறகென்ன கதை வேறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி-- சாதியெண்டதே இல்லையெண்டு நான் சொல்லுறன். தாழ்வு சிக்கலில இருக்கிற சனம் இலவசக் கல்வியை பெற்று பனை மரம் சீவுறதுக்கும் பறை மேளம் அடிக்கிறதுக்கும் நவீன விஞ்ஞான அறிவியல் நுட்பங்களை கண்டு பிடிச்சு அதை செய்யட்டும். நாங்கள் வேண்டாம் எண்டே சொல்லுறம்.

இப்ப எங்கடை பயமெல்லாம்.. எங்கை இதுகளை கதைக்க வெளிக்கிட்டால் எங்கடை முன்னோர் செய்த கொடுமையள் எல்லாம் தெரிய வந்து விடுமோ எண்டதுதான்.

அதுதான் சொல்லுறம்.. சாதியை பற்றி கதைக்க வேணாம்.

அதைப் பற்றி கதைக்காமல் விடுறதாலை பிறகு வாற தலைமுறைக்கு சாதிக் கொடுமையளை தெரியாமல் போகும். ஆனா நாங்கள் வீட்டில பிள்ளைக்கு சொல்லிக் குடுப்பம். இன்னார் வீட்ட போ.. இன்னார் வீட்டை போகாதை.. ஏனென்டால் நாங்கள் குளிச்சு முழுகிற குழுமம் பாருங்கோ.. குளிக்காத ஆட்களைக் கண்டால் காறித் துப்பத்தானன் செய்வம். உது சகஜம்.. உதுக்கு சாதிய பூச்சு பூசாதேங்கோ..

நாங்கள் படிச்ச ஆட்கள்.. படிக்காத ஆட்களை கண்டால் நக்கல் அடிக்கத்தான் செய்வம்.. அது சகஜம்.. அதெற்கெதுக்கு சாதிய பூச்சு பூசுறியள்..

நீங்கள் உங்களுக்கொரு கிணத்தை வெட்டி தண்ணியெடுங்கோ.. அதுக்காக நாங்கள் வெளிநாடு வர பெரிய இடங்களைப் பிடிச்சு எங்கடை காணியை எடுத்து கிணத்தை வெட்டாதீங்கோ -

கடைசியா சொல்லுறனன்.. சாதி இல்லை. அதை ஒழிச்சிட்டம். பிறகும் வந்து வெள்ளாளர் மேலை சும்மா புறணி சொல்லிக்கொண்டிருந்தால்.. வெள்ளாளர் சும்மா இருக்க மாட்டினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டுக்கு ஓடிவந்து வெள்ளைக்காரனின்ர கால் நக்கிற கூட்டம் தாயகப்பற்று பற்றி கதைக்குதுகள்.................... என்ன கொடுமையோ :(:huh::o

தாயகத்துக்கு இதுவரைக்கும் பங்களிக்காததுகள்....................... தாங்கள் தான் பங்களிக்கிறம் எண்டு காட்டுறதுக்கும்............. show காட்டுறதுக்கு................. யாழில நேசக்கர அமைப்புக்கு 5 பவுண்ஸ் 10 பவுண்ஸ் எண்டு பிச்சைக்கார காசக் குடுத்திட்டு தங்களுக்கு பற்றிருக்கிறதா காட்டுறத என்னவெண்டு சொல்லுறது................................... :D

உழைக்கிற காசு எவ்வளவு................ அதில பதுக்கிற காசு எவ்வளவு.......................... கொடுக்கிற காசு எவ்வளவு......................... சும்மா யாழில வந்து எங்களுக்கு ஒருதரும் உதவி செய்யுறம் எண்டு show காட்டாதேங்கோ .............................. :D

பூனைக்குட்டி-- சாதியெண்டதே இல்லையெண்டு நான் சொல்லுறன். தாழ்வு சிக்கலில இருக்கிற சனம் இலவசக் கல்வியை பெற்று பனை மரம் சீவுறதுக்கும் பறை மேளம் அடிக்கிறதுக்கும் நவீன விஞ்ஞான அறிவியல் நுட்பங்களை கண்டு பிடிச்சு அதை செய்யட்டும். நாங்கள் வேண்டாம் எண்டே சொல்லுறம்.

இப்ப எங்கடை பயமெல்லாம்.. எங்கை இதுகளை கதைக்க வெளிக்கிட்டால் எங்கடை முன்னோர் செய்த கொடுமையள் எல்லாம் தெரிய வந்து விடுமோ எண்டதுதான்.

அதுதான் சொல்லுறம்.. சாதியை பற்றி கதைக்க வேணாம்.

அதைப் பற்றி கதைக்காமல் விடுறதாலை பிறகு வாற தலைமுறைக்கு சாதிக் கொடுமையளை தெரியாமல் போகும். ஆனா நாங்கள் வீட்டில பிள்ளைக்கு சொல்லிக் குடுப்பம். இன்னார் வீட்ட போ.. இன்னார் வீட்டை போகாதை.. ஏனென்டால் நாங்கள் குளிச்சு முழுகிற குழுமம் பாருங்கோ.. குளிக்காத ஆட்களைக் கண்டால் காறித் துப்பத்தானன் செய்வம். உது சகஜம்.. உதுக்கு சாதிய பூச்சு பூசாதேங்கோ..

நாங்கள் படிச்ச ஆட்கள்.. படிக்காத ஆட்களை கண்டால் நக்கல் அடிக்கத்தான் செய்வம்.. அது சகஜம்.. அதெற்கெதுக்கு சாதிய பூச்சு பூசுறியள்..

நீங்கள் உங்களுக்கொரு கிணத்தை வெட்டி தண்ணியெடுங்கோ.. அதுக்காக நாங்கள் வெளிநாடு வர பெரிய இடங்களைப் பிடிச்சு எங்கடை காணியை எடுத்து கிணத்தை வெட்டாதீங்கோ -

கடைசியா சொல்லுறனன்.. சாதி இல்லை. அதை ஒழிச்சிட்டம். பிறகும் வந்து வெள்ளாளர் மேலை சும்மா புறணி சொல்லிக்கொண்டிருந்தால்.. வெள்ளாளர் சும்மா இருக்க மாட்டினம்..

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.................. சாதி இல்லை சாதிய ஒழிச்சிட்டம் எண்டு சொல்லுற கூட்டம் என்ன சாதி எண்டு எனக்கு தெரிஞ்சாகணும்................................. :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தன் அடக்கினா.. ஏன் அடங்கிப் போகனும்...???! அடக்கிறவனும் மனிசன் அடங்கிறவனும் மனிசன் தானே. பிறகெதற்கு அடங்கனும்..???!

அதைதான் நானும் சொல்கிறேன் - அடங்கி போக கூடாது. திருப்பி அடிக்கணும் - அதன்மூலம் அடக்குமுறையை உடைக்கணும் -

சக மனிதருக்குள்ள உரிமையைத்தான் கேட்கிறேன்..

அதைத் தடுத்தவர்களுக்கு என்ன தண்டனை எனக் கேட்கிறேன்..

ஆகக் குறைந்தது முன்னாளில் தமது கைங்கரியங்களால்த்தான் சாதி ஒடுக்குமுறை நிகழ்ந்தது என்பதை ஏற்கக் கூட முடியாத மனத்தடை படைத்தவர்களை தெளிவாக உணர்கிறேன்.

சாதிய பூச்சு பூசாமல் கேட்கிறேன். எவரெல்லாம் சக மனிதனின் உரிமையை தடுக்கிறார்களோ அவர்களையெல்லாம் கடுந் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை நெடுக்ஸ் ஏற்றுக்கொள்கிறார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியறியிறதுக்காக எவனாவது அல்லாட்டி எவளாவது உங்கட ஊரெது எண்டு கதை தொடங்கினா............. மற்றவன சாதி ரீதியா அடையாளப்படுத்தி அவை அப்பிடித்தான் அவையின்ர குணம் அப்பிடித்தான் எண்டு கதைச்சா...................... அப்பிடிக் கதைக்கிற ஆக்களின்ர முகத்துக்கு நேரா அவையின்ர தந்தையையும் தாயையும் இழிபிறப்பெண்டு சொல்லணும்................... நாக்கறுக்கணும்........................... பேசின வாயை கிழிக்கணும்.................. முடிஞ்சா இனத்துவேசம் காட்டிக் கதைக்கினம் எண்டு சொல்லி வழக்கு போட்டு தண்டனை வாங்கிக் குடுக்கணும்........................

மானங்கெட்ட இழிபிறப்புகள்.............. வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஐரோப்பியனின்ர கால்நக்கிக்கொண்டு சாதியத்துக்கு விஞ்ஞான விளக்கும் குடுக்கிற சாதிவெறிபிடித்த சாக்கடைக்கூட்டங்களின்ர பிறப்பே இழிபிறப்பாகத்தான் இருக்கவேணும்..................... இவர்களின்ர இனத்துவேச கதையளுக்கு எதிரா வழக்குத் தொடுத்து மானநட்டஈடு வாங்கணும்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக் குட்டி

குளிக்கிற ஆட்கள் குளிக்காத ஆட்களைப் பார்த்து திட்டுறதுதான் சகஜம்.

குளிக்காத ஆட்கள் குளிக்கிற ஆட்களைப் பார்த்து திட்டுறது சகஜமில்லை. அது பண்பாடற்ற நாகரீகம் தெரியாத நிலை. அந்த நிலையில இருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

சோழியன் சாதியத்தின் அடிப்படையில் இப்ப ஊரில இருக்கிற பிரச்சனை என்ன வென்று கேட்டிருந்தார்.

சமாதான காலத்தில் புனர்நிர்மான மீள் குடியேற்ற வேலைகள் ஓரளவு நடந்த போது உருவான கட்டுமானம் சம்பந்தப்பட்ட பல (உங்கள் பாசையில் சொல்வதானால் முன்பு ஒரு காலத்தில் ஆனால் தற்பொழுது இல்லாத சாதி அடிப்படையிலான) வேலைகளிற்கு மோசமான ஆட் தட்டுப்பாடு இருந்தது தாயகம் எங்கும்.

உதாரணமாக கட்டடத்துறை, மரவேலை. இந்தப் பிரச்சனை எதிர்காலத்தில் ஒரு நிரந்தர அல்லது இடைக்காலத் தீர்வு வரும்பொழுது இன்னமும் பெரிதாக இருக்கும். ஏன் இன்று கூட சிகை அலங்காரம் செய்பவர்கள் தட்டுப்பாடு கொஞ்சம் நிலவுகிறது.

இவற்றை எப்படித் தீர்க்கலாம்? சமூகத்தில் அவர்களை சமமாக மதியாது சாதி அடிப்படையான வேலைகள் என்ற முத்திரை உள்ளதுடன் இவற்றிற்கு கொடுக்கப்படும் ஊதியங்கள் என்றும் இரண்டுமே இவர்களிற்கான தட்டுப்பாடுகளை உருவாக்கி வருகிறது என்பது எனது அபிப்பிராயம்.

நீங்கள் விவாதிக்கலாம் பல வருடங்கள் நீண்ட தொடர்ச்சியான போர்க்காலங்களின் அபிவிருத்தியின்மை கட்டுமானத்துறையில் இருந்தா ஆட்களை வெளிநாடுகளிற்கு செல்ல வைத்துவிட்டது அல்லது வாழ்வாதாரத்தை வேறு துறைகளில் தேட வைத்துவிட்டது என்று. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஏனைய பல இவ்வாறு சாதிய அடிப்படையில் முத்திரை குத்தப்படாத துறைகளுக்கும் இந்த நிலையில்லை? உதாரணம் மின்னாசரத்துறை நீர்க்குழாய் பொருத்துதல். இவர்களிற்கு சம்பள ஓகே என்று இல்லை என்றாவிட்டாலும் கட்டத்துறை மரவேலை போல் தட்டுப்பாடு இருக்கவில்லை. இதற்கான காரணம் என்ன இதை எப்படித் தீர்க்கலாம்? "வெள்ளாளர்" என்று சொல்லிக் கொள்வோரும் கல்லடுக்க மரம் சீவ முன்வருவார்களா?

தேவை ஏற்பட்டால் போவார்கள். 2005ல் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லை, வன்னியில் வேலை கொடுக்கிறார்கள் என்று வன்னிக்கு சென்ற பலரை நேரடியாக அவதானித்திருக்கிறேன்.. அதுமட்டுமல்ல.. புலிகளை சாதியை கருத்திலெடுக்காமல் பல வெள்ளாள பெண்கள் மணமுடித்துள்ளார்கள்.. அவர்களின் மகப்பிரசவம் போன்றவற்றிற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வன்னிக்குச் சென்றதையும் கண்டிருக்கிறேன். ஆதாரம் வேண்டுமென்றால் அது தமிழ்ச்செல்வனது குடும்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரது மனைவி எனது உறவினர்தான்.

இன்னொருத்தர் சொல்லுறாரு.. ஒருவனது நிலத்தில் உள்ள கிணற்று நீர் பொது சொத்தாம்.. கிணற்றுக்கும் நதிக்கும் வித்தியாசம் தெரியாமல் சாதி வெறி கண்ணை மறைத்தவிட்டது.

சாதி இருந்து கொண்டுதான் இருக்கிறது.. இருந்து கொண்டுதான் இருக்கும்.. ஆனால் சாதி ஒடுக்குமுறை தற்போது இல்லை.. இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

மற்றும்படி, இன்ன தொழிலை செய்ய தயாரா என கேட்பதெல்லாம் விதண்டாவாதம்.. மேற்கத்திய நாடுகளில் செய்பவர்கள் அங்கேயும் தகுந்த ஊதியம் கிடைத்தால் செய்யலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.