Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிப்பது அவசியம். விசிறியில் வயர் ஏதாவது படுவதால் வரலாம். ஹாட் டிஸ்க் இல் இருந்து வருகிறது எனில் உங்கள் கோப்புக்களை Back Up எடுப்பது நன்று. CD Writer ல் இருந்தும் வரலாம். கம்பியூட்டரை திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறது என கண்டு பிடியுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply

நல்ல கேள்ளி வலைஞன். எனது கணனியிலும் இருந்தது. நான் கழற்றிப்பார்த்தேன். வயர் விசிறியில் முட்டிக்கொண்டிருந்தது. எனது பிழைதான் திருத்தம் செய்யும்போது தவறுதலாக அப்படி பூட்டிவிட்டேன்.

அப்படியும் இன்னும் சத்தம் வந்தால் மருத்துவரை அழையுங்கள். இது குறட்டை சத்தம்

Link to comment
Share on other sites

விசிறியை சுத்தம் செய்தீர்களா..................

அடிக்கடி நிற்குதே எண்டுதான் எல்லாம் அழித்துவிட்டு புதுசா எல்லாம் போட்டன்.

பிறகும் இப்படி நடக்குது.

Link to comment
Share on other sites

இணைய உறவுகளிற்கு வணக்கம்

சிறிய உதவி

எனக்கு வித்தியாசமான ஒலி (baground sounds and sounds effects ) மற்றும் Video Bagrounds (naturals and graphics) தேவை. இணையத்தில் தரவிறக்க முடியுமாயின் அவற்றிற்கான இணையத்தளங்களையும் தாருங்கள்.

நட்புடன் பரணீதரன்

Link to comment
Share on other sites

கூகிளில் தேடவும்.

நிறையவே கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இருக்கிறது. தரவேற்றியபின் இணைப்பு தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதை கேட்டுப்பாருங்கள்.. இதைப் போன்ற ஒலிவேண்டுமாயின் மிகுதிப் பகுதியையும் இணத்துவிடுகிறேன்.
Link to comment
Share on other sites

நன்றி நண்பரே

மிகவும் பிரயோசனமாக இருந்தது.

மிகமிக நன்றி.

இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஏன் இப்படி?[/b]

என் கணனியில் பாடல் கேட்கும் போது Address வருகுதில்லை. ஆனால் என் நண்பனின் கணனியில் வருகிறதே. ஏன்? அபப்டி Address வருவதற்கு என்ன செய்யணும்?

untitledyt7.jpg

52260220ey6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் வேறு வேறு பதிப்புக்கள். அதனால்தான் அவ்வாறு தோன்றுகின்றது என நினைக்கிறேன்.

comrh3.jpg

Link to comment
Share on other sites

ஆனால் பாடல் கேட்க முடிகிறதுதானே. அட்ரஸ் பார் மட்டும் தானே வருதில்லை. 2 உம் இன்ரநெட் எக்ஸ்புளர் தானே.

Link to comment
Share on other sites

நான் கணனி சம்பந்தமாக படிக்க விரும்புகிறேன். முக்கியமாக, வலைப்பக்கம் ஒன்றை வடிவமைப்பதோடு, லேஅவுட் மற்றும் எனது கணனி சம்பந்தமான சிறிய திருத்தவேலைகளையும் நானே செய்ய விரும்புகிறேன். அதற்கு நான் என்னென்ன பாடங்கள் எடுப்பது நல்லது? புரொகிராமிங் படிப்பதற்கு எந்தப் பாடத்தை முதலில் எடுக்கவேண்டும்? இவற்றை நான் பகுதிநேரமாகத்தான் படிக்கப்போகிறேன். டிப்ளோமா இல்லாமல் வெறும் பாடங்கள் மட்டுமே படிக்க விரும்புகிறேன். நான் இதுவரையிலும், மென்பொருள்களைப் பாவித்திருக்கிறேனே தவிர, கணனி பற்றிய எதனையும் கல்லூரியில் படித்ததில்லை. முதலில் எந்தப் பாடத்திலிருந்து தொடங்குவது நல்லது? புரோகிராமிங்கில் தொடங்குவது நல்லதா? அல்லது வலைப்பக்கம் சம்பந்தமான பாடங்களோடு தொடங்குவது நல்லதா? நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் பாடல் கேட்க முடிகிறதுதானே. அட்ரஸ் பார் மட்டும் தானே வருதில்லை. 2 உம் இன்ரநெட் எக்ஸ்புளர் தானே.

உங்களுடையது IE 6 அடுத்தது IE7 ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கணனி சம்பந்தமாக படிக்க விரும்புகிறேன். முக்கியமாக, வலைப்பக்கம் ஒன்றை வடிவமைப்பதோடு, லேஅவுட் மற்றும் எனது கணனி சம்பந்தமான சிறிய திருத்தவேலைகளையும் நானே செய்ய விரும்புகிறேன். அதற்கு நான் என்னென்ன பாடங்கள் எடுப்பது நல்லது? புரொகிராமிங் படிப்பதற்கு எந்தப் பாடத்தை முதலில் எடுக்கவேண்டும்? இவற்றை நான் பகுதிநேரமாகத்தான் படிக்கப்போகிறேன். டிப்ளோமா இல்லாமல் வெறும் பாடங்கள் மட்டுமே படிக்க விரும்புகிறேன். நான் இதுவரையிலும், மென்பொருள்களைப் பாவித்திருக்கிறேனே தவிர, கணனி பற்றிய எதனையும் கல்லூரியில் படித்ததில்லை. முதலில் எந்தப் பாடத்திலிருந்து தொடங்குவது நல்லது? புரோகிராமிங்கில் தொடங்குவது நல்லதா? அல்லது வலைப்பக்கம் சம்பந்தமான பாடங்களோடு தொடங்குவது நல்லதா? நன்றி :D

ஏற்கனவே கல்லூரியில் படிச்சவர் என்றால் இதில இருக்கிற எல்லா course யும் நீங்களே படியுங்கோ. வருடம் ஒரு $10 க்கு, domain ஜ் பதிவு செய்யுங்கோ. மாதம் ஒரு $5 க்கு hosting எடுங்கோ. வகுப்புக்கெண்டு வீண்செலவு இல்லாமல் நீங்களே உங்கள் வலைப்பக்கத்தை வடிவமைக்க கற்றுக்கொள்ளலாம். காசு குடுத்தாதான் படிப்பு வரும் எண்டால் என்னுடைவ வங்கிகணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டு இதில் உள்ளதை சுயமா படியுங்கோ. ஏதாவது விளங்கவில்லை எண்டால் கேளுங்கோ, முடிஞ்சளவு உதவி பண்ணுறேன்.

http://www.w3schools.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு உதவி

நான் நீண்ட நாள்களாக wifi வலைத்தொடர்பு பயன் படுத்துகிறேன்(other people)

ஆனால் இப்பொளுது என்னால் முடியவில்லை(they use password)

உங்களிடம் எதாவது வளி இருக்கிறதா (any softwere)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாராவது உதவி பண்ணுங்களேன்,

எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ

Link to comment
Share on other sites

  • 4 months later...

எனக்கு தமிழ் இணையத்தளங்களை திறக்கும் போது மேலே இணையத்தின் பெயர் தமிழில் தெரியாது பெட்டி பெட்டியாகவே தெரிகின்றன. இதற்கு எந்த Unicode Font ஐ இன்ஸ்ரோல் செய்தால் இப்பிரைச்சினை தீரும். ஏற்கனவே இ-கலப்பை பாமினி தரவிறக்கம் செய்தும் சரிவரவில்லை. எனவே தயவுசெய்து இதுபற்றித் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா ... நீங்கள் Unicode Font எல்லலாம் தறவிறக்ககம் தேவயில்லை .... சுரதா கீமோன் டவுண்லோட் பண்ணிப்பாருங்கோ (www.suratha.com/vanni.zip ) தரவிறக்கம் செய்துட்டு அதில் Keyman Configuration என்றதுக்குள் இருக்கும் Optinons ல போய் யுனிகோட் தமிழ் ல தெரிய ஒரு சரி போடனும் .இ-கலப்பை யில் அப்படி செய்யலாம் எண்டால் செய்து பாருங்கள் .Optinons க்கு போனாலே உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்..... உள்ள போய் செய்து பாருங்க முடியாவிட்டால் நாளைக்கு படத்துடன் போட்டு விடுறன்...!இத விட வேற வழியும் இருக்கு ... இது ஈஸி எண்டே நினைக்கிறன்.

»Startmenü: Start ~» Alle Programme ~»Tavultesoft Keyman ~»Keyman Configuration ~»Optinons

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அனிதா

நான் செய்து பார்த்துவிட்டு மீண்டும் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அனிதா

நீங்கள் சொல்லியபடி செய்தேன். இப்போது சரிவந்துவிட்டது. மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

இ-கலப்பை யில் செய்து பார்த்தனீங்களா ? அல்லது சுரதா கீமோன் லயா ?

இ-கலப்பையில் முயற்சிக்கவில்லை. சுரதா கீமானில் முயற்சித்தேன் சரிவந்தது. அப்படியே விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இ-கலப்பையில் முயற்சிக்கவில்லை. சுரதா கீமானில் முயற்சித்தேன் சரிவந்தது. அப்படியே விட்டுவிட்டேன்.

சுரதா கீமான் இ/கலப்பை போன்றதா அல்லது வித்தியாசமா? எனது கனினி cd வேலை செய்யவில்லை தெரிந்தால் உதவுங்கள் கீழ் உள்ள தொட்ரியில் போய்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.