-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
கிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி, இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. https://www.virakesari.lk/article/98746 -
By கிருபன் · பதியப்பட்டது
கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது. பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/ -
விறுவிறுப்பான இறுதி ஓவர்களில் இந்தியா மூன்று விக்கட்டுக்களால் வெற்றி!
-
By கிருபன் · பதியப்பட்டது
முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை -மொஹமட் பாதுஷா முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவிலித்தனமான, பக்குவப்படாத வேலைகளை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகளால் முஸ்லிம் அரசியலானது ஓர் அடிகூட முன்நகராமல் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது. அத்துடன், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக அது தம்மைப் புடம்போட்டுக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் இணக்க அரசியலுக்குப் பழக்கப்பட்டவர்கள். பெருந்தேசியம், தமிழ்த் தேசியத்தோடு இணைந்து அரசியலில் பயணித்த வரலாறு உள்ளது. அதேபோன்று தேவையான சந்தர்ப்பங்களில் பெருந்தேசியத்தையும் தமிழ் அரசியல்வாதிகளையும் விமர்சிக்கின்ற, எதிர்த்தாடுகின்ற பாங்கிலான அரசியலையும் கையிலெடுப்பதுண்டு. அந்த வகையில், முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, நீதி நியாயம், சமத்துவம், பாரடபட்சம் இன்மை, ஒற்றுமை பற்றியெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் பேசப்படுகின்றது. சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமின்றியும் நியாயபூர்வமாகவும் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். தமிழர்கள், முஸ்லிம்களின் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றோம். முஸ்லிம்களின் இன, மத உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம். பாரபட்சமும் பாகுபாடும் இன்றி இவ்வுரிமைகளை வழங்குமாறு குரல் கொடுக்கின்றோம். இதனை மறுதலிப்போரையும் இனவெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்களையும் பெரும்பாலும் இனவாதிகளின் பட்டியலுக்குள் சேர்த்து விடுகின்றோம். இவையொன்றும் தவறான செயற்பாடுகள் அல்ல. இரண்டாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில், நீண்டகாலமாகவே இச் சமூகம் பெரும் இனத்துவ நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. இது மதம்சார்ந்த ஒடுக்குமுறையாக, இப்போது பரிணாமம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு சமாந்திரமாக, அரசியல் ரீதியாக முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதற்கான நெருக்குதல்கள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் மேற்குறிப்பிட்ட விதத்தில் முஸ்லிம்கள் சமவுரிமைக்காக பாடுபடுவதும் இனப் பாகுபாடற்ற ஆளுகைக்காக குரல்கொடுப்பதும் தவிர்க்க முடியாதது. முஸ்லிம்களுக்கு உரிய கௌரவத்தை, பங்கை, அந்தஸ்தை வழங்குமாறு போராடுவது சமூகக் கடமை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், ஆட்சியாளர்களிடமிருந்தும் சிங்கள, தமிழ் தேசியங்களிடம் இருந்தும் நீதியையும் நேர்மையையும் இனவெறுப்பற்ற போக்குகளையும் எதிர்பார்க்கின்ற முஸ்லிம் அரசியலானது, தமக்குள் உள்ளகமாக எப்படி இருக்கின்றது என்பதே, இங்கு எழுகின்ற கேள்வியாகும். இரு கட்சிகளுக்கு இடையிலும், ஏன் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உள்ளகமாகக் கூட இங்கிதமான அரசியல் கலாசாரம் இருக்கின்றதா என்ற வினாவுக்கு, விடை தேட வேண்டியுள்ளது. உண்மையைச் சொன்னால், இது விடயத்தில முஸ்லிம் அரசியல் மிகவும் கெட்டுச் சீரழிந்துள்ளது. போட்டி அரசியலையோ மாற்று அரசியலையோ எப்படி நாகரிகமாகச் செய்வது என்று, அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. அவர்கள் தங்களது தீவிர ஆதரவாளர்களுக்கும் கட்சிப் போராளிகளுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியலைக்காத்திரமான வழிமுறைகளில் நாகரிகமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதைச் செய்யாமல், பெருந்தேசியத்திடம் இவ்வாறான பண்புகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நிஜம் வேறு மாதிரியாகத்தான் இருக்கக் காண்கின்றோம். முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அரசியல் என்பது மிகவும் மட்டரகமான ஒன்றாக மாறியிருக்கின்றது. உண்மையில் மக்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு சேவையாற்றுவதன் மூலம், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், கனதியான அரசியல் நகர்வுகளை ஆளுக்காள் போட்டாபோட்டி அடிப்படையில் மேற்கொள்வதன் மூலம் எதிர்ப்பு அரசியல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று கீழ்த்தரமான பிரசாரத்தாலும் பக்குவமற்ற எதிர் நடவடிக்கைகளாலும் எதிரணியினரை எதிர்த்தாடுகின்ற ஓர் இழிநிலைக்கு வந்திருக்கின்றது. இதில் முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ ஏனைய முஸ்லிம் கட்சிகளோ, பிரபல அரசியல்வாதிகளோ.... யாரும் விதிவிலக்கல்லர். முஸ்லிம் அரசியல் கட்சிகள், வேறு வேறு அணுமுறைகளைக் கையாண்டாலும் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மக்களுக்குச் சேவையாற்றுவதற்கும் மக்களை தமக்குப் பின்னால் அணிதிரள வைப்பதற்கும் ஆயிரம் உபாயங்கள் உள்ளன. மாறாக, மாற்று முஸ்லிம் அணியை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்தல் நல்லதல்ல. ஒரு முஸ்லிம் கட்சியையே இன்னும் ஒரு கட்சியினர் எதிரிகள் போல பார்த்தால், சிங்கள ஆட்சியாளர்கள் எம்மை அரவணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களான ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா மட்டுமன்றி தெற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்ற பெரிய, சிறிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பரஸ்பரம் தமக்கிடையில் இவ்விதமான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர். தேசிய அரசியலில் ஒரு முஸ்லிம் கட்சியை ஆளும் கட்சியுடன் இணைக்கும் போது, இடம்பெறும் பேரம் பேசல்களில் இடம்பெறும் குழிபறிப்பு போன்ற பெரிய நகர்வுகள் தொடக்கம், பொத்துவிலில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் வரை, இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால், அவர்களது ஆதரவாளர்கள், பேஸ்புக் சண்டியர்கள் படுகின்றபாடு இதைவிடக் கேவலமாக உள்ளது. தமது தலைமையை, தாம் ஆதரிக்கும் அரசியல்வாதியை உயரத்தில் தூக்கிப் பிடிப்பதும், எதிரணியில் உள்ளவர்களைத் தூற்றுவதும், நையாண்டி செய்வதும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரே கட்சிக்குள்ளும் இவ்வாறான உள்குத்துகள் தலைதூக்குகின்றன. மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. விளக்கமறியலில் இருந்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அது குறித்து பெரும்பாலான முஸ்லிம்கள் கவலை கொண்டனர். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா எம்.பி.க்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்பதும் அவருக்கு உரிய கௌரவம் தரப்பட வேண்டும் என்ற எண்ணமும் பரவலாக இருந்தது. அதுபோல மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்பது பொதுவாக முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஒரு கவலையான செய்தியாகும். அவர் குணமடைய வேண்டும் என்று மாற்றுக் கட்சியில் உள்ள பலரும் எண்ணுகின்றார்கள். ஆனால், அதையும் தாண்டி, மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்களில் ‘மகிழ்ச்சியை’ வெளிப்படுத்தியவர்களும் அதனை ‘நையாண்டி’ செய்த குறுகிய மனப்பாங்கு கொண்டவர்களும் கூட முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்றார்கள். இவையெல்லாம் ஆகப் பிந்திய உதாரணங்கள் மட்டுமே. அரசியலில் காத்திரமான, கனதியான விமர்சனங்கள் முக்கியமானவை. எதிர் அணியில் உள்ள அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை மட்டுமன்றி தாம் ஆதரிக்கின்ற அரசியல் தலைவர்களின் போக்குகள் குறித்தும் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். அதுபோல முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான ஏட்டிக்குப் போட்டியான அரசியலும் பக்குவமான, முதிர்ச்சியடைந்த தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதைவிடுத்து, முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு இடையில் ஆளுக்காள் குழிபறித்துக் கொள்வதும், கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களின் மறுதரப்பை தூசித்தும், அவமதித்தும் நையாண்டி செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும். நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரணியில் உள்ளவனுக்கு இரண்டு கண்ணும் கெட வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் விடிவைத்தராது. முதலில் முஸ்லிம்கள், அரசியல் ரீதியாகவும் சிவில் சமூக ரீதியாகவும் தமக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலை நாகரிகமாகவும் இங்கிதமாகவும் மேற்கொள்ள வேண்டும். அதனை அரசியல்வாதிகள் கற்றுக் கொள்வது மட்டுமன்றி தமது அடிவருடிகளுக்கும் பழக்க வேண்டும். தமக்குள் எல்லா விடயங்களிலும் நீதியையும் பாகுபாடற்ற தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள், பாரபட்சங்கள் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுமாறு, சிங்கள தேசியத்திடமும் தமிழ் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுப்பதற்கான ஓர் அடிப்படைத் தகுதியாகவே இது அமையும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-எதிர்ப்பு-அரசியலின்-இழிநிலை/91-263994 -
By கிருபன் · பதியப்பட்டது
மட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (19) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதன்போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது . https://newuthayan.com/மட்டு-போதனாசாலை-தாதியர்/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.