Jump to content

ஆஸ்திரேலியா 62 ரன்


Recommended Posts

ஆஸ்திரேலியா 62 ரன்

Friday, 25 January, 2008 09:44 AM

.

அடிலெய்டு, ஜன.25: அடிலெய்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட்டில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.

.

இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் 16 ரன்கள் எடுத்திருந்த டோனி, ஜான்சன் பந்துவீச்சில் சைமன்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கருடன் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார்.

இந்திய அணி 359 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹாக்கிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவர் தனது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்தார். இதுவரை 39 சதங்கள் அடித்துள்ள சச்சின் 150 ரன்களை கடந்திருப்பது இது 17வது முறையாகும். சச்சின் ஆட்ட மிழந்தவுடன் அவருக்கு பதிலாக களமிறங்கிய ஹர்பஜன் சிங், கும்ப்ளேவுடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார்.

தனது 4வது அரை சதத்தை இன்று அடித்த ஹர்பஜன் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆர்.பி.சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தேனீர் இடைவேளைக்கு பின்னர் அனில் கும்ப்ளே 87 ரன்கள் எடுத் திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஜான்சன் பந்துவீச்சில் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். இஷாந்த் சர்மா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 526 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.

ஹர்பஜன் சிங், கும்ப்ளே ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்து இந்திய அணி வலுவான நிலையை எட்டுவதற்கு வழி வகுத்தனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஆட்ட நேர இறுதியில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன் எடுத்து ஆடி வருகிறது. ஹைடன் 36 ரன்களும், ஜாக்கிஸ் 21 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்

malaisudar.com

Link to comment
Share on other sites

அடிலெய்ட் டெஸ்டில் சச்சின் அபார சதம் வலுவான நிலைக்கு இந்தியா முன்னேற்றம்

[25 - January - 2008] [Font Size - A - A - A]

அடிலெய்டில் நேற்று வியாழக்கிழமை தொடங்கிய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்துள்ளார். இந்தியா முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர சேவாக்கும் இர்பான் பதானும் களமிறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 7 ஓவர்களில் 34 ஓட்டங்கள் குவித்தனர். அப்போது ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கில் கிறிஸ்டிடம் பிடிகொடுத்து பதான் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் ராவிட் 18 ஓட்டங்கள் எடுத்து ஜான்சன் பந்து வீச்சில் பொண்டிங்கிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணி 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளையின் போது இந்தியா 89 ஓட்டங்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த சேவாக் 75 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது கடந்த 11 டெஸ்ட்களுக்கு பின் சேவாக் எடுத்துள்ள அரைசதமாகும். எனினும் சேவாக் 63 ஒட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிரெட் லீ பந்துவீச்சில் ஹைடனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழ்ந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சௌவ்ரவ் கங்குலி 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிரட் ஹொக் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் லஷ்மண் ஆட வந்தார். லஷ்மண் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். சச்சின் அதிரடியாக ஆடி ஒட்டங்களை குவித்தார். பவுண்டரிகளாக விளாசிய அவர், சதத்தை பூர்த்தி செய்தார். 92 ஓட்டங்களிலிருந்து சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அவர் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தத் தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 39 ஆவது சதமாகும். லஷ்மண் சிறப்பாக ஆடி அரைச்சதம் அடித்தார். எனினும் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் பிரெட் லீ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

முதல் நாள் ஆட்டம் முடிவடையும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சச்சின் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

thinakural.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.