Jump to content

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங்


Recommended Posts

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங்

[29 - January - 2008] [Font Size - A - A - A]

இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அடிலெய்ட் டெஸ்ட் மூலம் அதிக சதமடித்த 2 ஆவது வீரர் என்ற நிலைக்கு அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கிபொண்டிங் உயர்ந்துள்ளார்.

காவஸ்கர் சாதனை சமன் டெஸ்ட் போட்டிகளில் நேற்று முன்தினம் 34 ஆவது சதம் அடித்தார். அவுஸ்திரேலியக் கப்டன் ரிக்கிபொண்டிங். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கவாஸ்கர் (34) மேற்கிந்தியாவின் லாராவுடன் (34) பொண்டிங் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் சச்சின் (39) உள்ளார்.

* அடிலெய்ட் மைதானத்தில் 5 ஆவது சதம் அடித்துப் புதிய சாதனை படைத்தார் பொண்டிங். இதற்கு முன் ஆலன் போர்டர், டேவிட் பூன் தலா நான்கு சதம் அடித்துள்ளனர்.

* இந்தியாவிற்கு எதிராக மட்டும் 1,500 ஓட்டங்கள் (19 டெஸ்ட், சராசரி 49.06) கடக்கும் மூன்றாவது அவுஸ்திரேலிய வீரரானார். பொண்டிங் முன்னதாக ஹைடன் (14 டெஸ்ட் 1,654), ஆலன் போர்டர் (20 டெஸ்ட் 1,567), இந்த மைல்கல்லை எட்டினர்.

இந்தியாவுக்கு எதிராக நான்காவது விக்கெட்டுக்கு பொண்டிங் கிளார்க் இணைந்து 210 ஓட்டங்கள் எடுத்துச் சாதனை படைத்தார். முன்னதாக சென்னையில் 1987-88 இல் நடந்த போட்டியில் டீன் ஜோன்ஸ் அலன் போர்டர் சேர்ந்து 178 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

* டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்கள் கடக்கும் 43 ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க், 6 ஆவது சதமடித்த இவர் இந்தியாவிற்கு எதிராக 2 ஆவது சதம் பதிவுசெய்தார்.

கில்கிறிஸ்ட் உணர்ச்சிமயம்: கனத்த இதயத்துடன் டெஸ்ட் போட்டிகளுக்கு `குட்பை' சொன்னார். கில்கிறிஸ்ட் நேற்று முன்தினம் இவர் களமிறங்கியதும் அடிலெய்ட் அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்திய வீரர்களும் அவரது செல்லப் பெயரான `கில்லி.. கில்லி' என அழைத்து உற்சாகப்படுத்தினர். இவர் வெளியேறியபோது எல்லைக்கோட்டில் இருந்து ஓடி வந்து இஷாந்த் சர்மா கைகொடுத்த ஒவ்வொரு சம்பவமும் உணர்ச்சி மயமாக இருந்தது.

டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்குக் காரணமாக கீப்பர் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரரான கில்கிறிஸ்டின் ஓய்வு அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாக அமைந்துவிட்டது. ஒருவேளை நேற்று இந்தியா நிர்ணயிக்கும் இலக்கை விரட்டும் நிலை ஏற்பட்டால் கில்கிறிஸ்ட் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்திருப்பார்.

முக்கோணத் தொடருக்குப் பின் ஒருநாள் போட்டிக்கும் விடை கொடுத்திருக்கிறார். இவரது ஓய்வு குறித்து முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கானன் கூறுகையில்;

`விக்கெட் கீப்பர் - துடுப்பாட்ட வீரரான தனி முத்திரை பதித்தவர். மெக்ராத். வோர்னை கில்கிறிஸ்ட் ஓய்வு பெறுவது பெரும் இழப்பை ஏற்படுத்தும்' என்றார்.

பிரதமர் ஆதங்கம்

தனது கோரிக்கையை கில்கிறிஸ்ட் நிராகரித்து விட்டதாக அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் தெரிவித்தார். `பிரதமர் என்ற முறையில் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டேன். இதனை ஏற்க மறுத்து விட்டார்' என்றார்.

பதான் `100 நேற்று முன்தினம் பிரட் லீயை வெளியேற்றியபோது டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார் இர்பான் பதான். இதன் மூலம் டெஸ்டில் 100 விக்கெட் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த ஏழாவது இந்தியப் பந்துவீச்சாளரானார். இதற்கு முன் வினு மன்கட், கபில்தேவ், ரவி சாஸ்திரி, அனில் கும்ளே, ஷ்ரீநாத், ஹர்பஜன் ஆகியோர் இச் சாதனை புரிந்துள்ளனர். தவிர 100 விக்கெட் வீழ்த்தும் 16 ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார் .

இது நான்கவாது முறை

இந்தியாவுக்கு எதிராக ஒரே இனிங்சில் நான்காவது முறையாக மூன்று அவுஸ்திரேலிய வீரர்கள் (ஹைடன்-103, பொண்டிங்-140, மைக்கேல் கிளார்க்-118) சதம் அடித்துள்ளனர்.

thinakural.com

Link to comment
Share on other sites

வெல்டன் காய்ஸ்...யூ காய்ஸ் ரியலி பிளே வெரி வெல்.. :rolleyes: .பொன்டிங் அண்ணாவிற்கும் அவரின்ட டீமிற்கும் ஜம்மு பேபியின்ட விசஸ் :wub: ...சொன்ன மாதிரி சீரிசை கைப்பற்றிவிட்டீங்க..பாட் லக் வோ இந்தியா பெட்டர் லக் நெஸ்ட் டைம் என்று சொல்ல ஏலாது (ஏனேன்றா நெஸ்ட் டைம் மட்டும் என்னவாம் :huh: )...பட் இந்தியன் பிளேயர்ஸ் கடைசி இரண்டு மச்சிலையும் நல்லா விளையாடினவை அதை பாராட்ட தான் வேண்டும் :lol: ...சரி ஒன்டே சீரிசில நம்ம யாழ்கள பிளேயர்சை சந்திப்போம்... :wub:

ஓசி...ஓசி...ஓசி...ஓய்...ஓய்...ஓய்!! :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வெற்றி என்பதை போட்டியா நினைத்தா வெல்ல ஏலாது அதுவே குறிகோளா இருந்தா அசைக்க ஏலாது" :mellow:

Link to comment
Share on other sites

யப்பா.... :lol: பாண்டிங்கை விட நம்ம ஜம்மு பே* நல்லா இங்கிலிஸ் கதைக்குது.... :rolleyes::mellow:

அடங்கொய்யால சிம்புவை விட பஞ்ச் டயலக் வேற நல்லா புலம்புறா சா பேசுறா?? :o:huh:

Link to comment
Share on other sites

பின்னே ஏ,பி,சி படிபித்துவிட்டதே நீங்க தானே மாமா அதை மறப்பேனா :mellow: என்ன...சிம்பு என்ன சிம்பு ஜம்முவிற்கு முன்னால மற்றது எல்லாம் ஜிஜிப்பி :lol: ...உது எப்படி இருக்கு சங்கு மாமா வெறி சாறி டங்கு மாமா... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.