Jump to content

சுதந்திர தினம்!


Recommended Posts

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ...

---------------------------------------------------------------------------------

வாலைச் சுருட்டிக்

கொண்டு

அவரவர் வீட்டுக்குள்ளே

பதுங்கி இருங்கள்

இன்று

சுதந்திர தினம்!

சுருட்டு வாங்கப் போகும்

தாத்தாவும் கவனம்!

உன்னையும்

சுருட்டிக் கொண்டு

சென்றிடுவர்!

சட்டப்புத்தகம்

சட்டக் கோவைகளால்

கொழுத்திருந்தாலும்

நடைமுறைப் படுத்துவதில்

இன்னும்

அதே மெலிவு தான்!

சும்மா

உதடுகளால்

உச்சரிக்கப்படுவதெல்லாம்

உயிர்த்தெழும் என்பது

உதவாத கதை!

வெறும்

கோஷங்களையும்

கொள்கை

முழக்கங்களையும்

கக்கத்தில்

வைத்து கொண்டு

களமிறங்கிய

காரசாரமான

அரசியல்வாதிகள்!

மீசை

இருக்கின்றதே என்று

முறுக்குவதைத் தவிர

வேறெதையும்

மிடுக்காக முடிக்கத்

தெரியாதவர்கள்!

சகல பாதுகாப்புடனும்

அரச தலைவர்

கொடியேற்றுவார்!

சுதந்திர தின உரை

படிக்கப்படும்...

வீடுகளில் மக்கள்

தொலைக்காட்சி

முன்னமர்ந்து

வேடிக்கை பார்ப்பர்!

நம்பினால் நம்புங்கள்

இன்று சுதந்திர தினம்!

Link to comment
Share on other sites

அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு

வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே

பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம்

இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்!

முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன்

கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்!

கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம்

தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது!

கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை

பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு

வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள்

விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்!

நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம்

ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம்

குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க

கொடுங்கோல் மன்னன் மகிந்தன் மகிழ்கின்றான்!

உண்பதற்கு ஒருபிடி சோறு இல்லை படுத்து

உறங்குவதற்கு பாதுகாப்பான இடமும் இல்லை

படிப்பில்லை தமிழர் இதயங்களில் துடிப்புமில்லை

விடிவுதேடி புறப்பட்ட வேங்கைகளைத் தேடுகின்றார்!

பணவீக்கம் ஊதிப்பெருத்து ஊழிக்கூத்து ஆட

ஊழல்கள் பெருகியரசு நிருவாகம் ஊசலாட

ஆட்கடத்தல் கொலை கொள்ளைகளும் மலிந்துவிட

இலங்காவின் இழவுகூறி இரைகிறது கிபீர்விமானம்!

கிபீர்விமானத்து மலத் துவாரத்தூடு

பீச்சிக்கொண்டு பாயும் கழிவுகள்!

உடலை முறுக்கிவந்து வாந்தியெடுக்கும்

மிக்27இன் ஆகாயத் துப்பல்கள்!

கடுவன்நாய் போல் காலைத்தூக்கியடித்து

பெல்ஹெலி வானிலிருந்து பெய்கின்ற சிறுநீர்!

ஒரு புத்தனாக பறவை யாத்திரை செய்யும்

ஆளில்லா விமானத்தின் எழுந்தமானத் தும்மல்கள்!

ஆட்லறித்தளங்களில் இருந்து விழும் ஆட்டுப்புழுக்கைகள்!

மல்ட்டிபெரல் தொப்பெனத் தள்ளும் மாட்டுச் சாணங்கள்!

கவசவாகனங்கள் கரைந்து இடும் காக்காய்ப்பீய்கள்!

டோராப்படகுகள் கொக்கரித்து இறக்கும் கோழிஎச்சங்கள்!

நொருங்கி வீழ்ந்த விமானஓட்டியின் உருக்குழைந்த உடலம்!

சிறைப்பிடிக்கப்பட்ட காவல்துறையின் வியர்வை நாற்றம்!

மூழ்கும் கப்பலினூடு வரும் கடற்படையின் மரணஓலம்!

குண்டடிபட்ட இராணுவச் சிப்பாயின் குருதித் துளிகள்!

சூ தந்திர சிறீ லங்காவை வாழ்த்தும் வண்ணப்பூக்கள்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

குரங்குக் கூட்டங்கள் கொடிபிடித்து கூத்தாடி

கொழும்பில் ஒன்றுகூடி வேடிக்கை பார்ப்பதற்கு

பிடித்தடைத்தார் சிலநூறு தமிழர்களை சிறைகளில்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

திறந்தவெளிக் காவலில் குடாநாட்டு தமிழர்

வருந்த வழிசெய்த எம்.பிகள் திருடும் கள்ளன்

நாயகனாகி நாட்டுக் கொடியை ஏற்றுகிறான்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

பள்ளிக் குழந்தைகளின் உயிர்குடித்த விமான

சாகசங்ககளை கண்டு கைதட்டி மகிழ்ந்து

ஆகாயத்தை நோக்குகுகின்ற புத்த பிக்குகள்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

மன்னாரில் தாயைத் தந்தையைப் பிள்ளையை

மரஞ்சீவும் உளியால் உருக்குழைத்த கொலைகாரன்

மரியாதை அணிவகுப்பில் முதல்வனாய் செல்கிறான்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

தமிழீழக் கடற்பரப்பில் மீனவரைத் துன்புறுத்தும்

சிங்களக் குண்டர்கள் சீராக உடையுடுத்தி

அளங்கார பவணியில் அன்னம்போல் நடக்கிறார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

ஊழல்களால் உடம்பு ஊதிப்பெருத்துப் பொய்

கையெழுத்தின் சாட்சியில் வழக்கெழுதும் காவல்துறை

பவ்வியமாய் தலைகுணிந்து மணவறைக்கு(?) போகிறது!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

ஆட்கடத்தும் பணம்பறிக்கும் கொலைபுரியும் கும்பல்கள்

நாட்டுத் தலைவனுடன்முன் இருக்கையில் அமர்ந்து

ஒருமைபாட்டிற்கு புது அர்த்தம் கற்பிக்கிறார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

காவல்கடல் விமான இராணுவ படைகளின்

தளபதிகள் ஒன்றுசேர்ந்து தமிழர் வாழ்விடங்களை

சூரையாட சூழ்ச்சிகள் சூ தந்திரமாய்ச் செய்கிறார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

Link to comment
Share on other sites

இலங்கையின் 60வது சுதந்திர தினம்

ஈழ தமிழ் மக்களின் 60வது துக்கதினம்

வெள்ளையர்களிடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள்...

தமிழ்ர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள்...

சுதந்திரம் மட்டுமில்லை....

சுகம், தூக்கம், நிம்மதி எல்லமே பறித்தெடுக்கப்பட்டநாள்

தலைவனின் வரவு மட்டும் இல்லையென்றால்

ஈழத்தமிழினமே அழிந்து போயிருக்கும்........

தம்விடுதலையை பற்றியே சிந்தித்தவர்கள் மத்தியில்

தமிழின விடுதலையெனும் தீயை எல்லோர்மனதிலும் வளர்த்தவன் எம் தலைவன்

அடுத்த வருடத்துக்குள் எமக்கும் சுதந்திரம் கிடைக்கும்

தமிழர் தாயகமெல்லாம் தமிழர்கொடி பறக்கும்

முன்னால் நின்று கண்ணீரைத்துடைத்துவிட்டு

பின்னால் மறைந்திருந்து எம்மைக்குத்துவதற்க்கு

கத்தி கொடுத்தவர்கள் எல்லோரும்

எம்முன்னால் தலைகுனிந்துகொண்டு நிற்க்கும் காலம் வரும்

எம் மாவீரர்களின் கனவு பலிக்கும்....

மகிந்த சிந்தனையெல்லம் சிதைந்து சின்னா பின்னமாகும்......

அது வெகு விரைவில் நடக்கும்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.