Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

 • Replies 473
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு    

Amazon..   அமேசான் என்கிற ஆச்சர்யம்!   வருடமெல்லாம் கொட்டும் மழை!    சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!    மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ண

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.   “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை*  தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“ம

 • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

தமிழ் உயிர் எழுத்துக்களின், வளர்ச்சி. 

 • Like 1
Link to post
Share on other sites

“சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்”

 

Tamil_News_1547466516495.jpg

தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.

“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.

140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.

வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்

வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

நன்றி
“சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்”
(கட்டுரையிலிருந்து..)

தினத் தந்தி – இளைஞர் மலர்.
http://sirippu.wordpress.com/page/2/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

திருக்குறளின்  அதிசயங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிதன் இறந்த பின்... நடப்பது என்ன தெரியுமா?

Bild könnte enthalten: Text

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Meme und Text

 • Like 1
Link to post
Share on other sites

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!


வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.


“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.


1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.


நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார். 

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ

http://uthayakumarthamizhan.blogspot.ca/2013/04/1954-2013.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: 1 Person, Text

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி, தமிழ் மொழி தான்…! 
அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ”தம்பிரான் வணக்கம்”. 
வெளிவந்த ஆண்டு 1578.

 • Like 2
Link to post
Share on other sites
ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – 
சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்
ஷாப்பிங், சினிமா, கோயில், 
குடும்பவிழாக்கள். 
என்று மணிக்கணக்கில் நீளும் 
நிகழ்வுகளுக்காக செல்லும் போது, சிறுநீர் 
கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் 
பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது.
‘பாத்ரூம் சரியில்லை …’, ‘நேரமே இல்லை…’, ‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போக முடியும்?’ என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. 
இவர்களில் நீங்களும் ஒருவரா?
“இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்” என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார். 
சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் 
சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் Dr. பி.சௌந்தர ராஜன்.
”சிறுநீரக நோய்த்தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 
இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களு க்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!” என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்சனை ஏற்படுவதற்கான 
காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படு பவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.

ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர் வெளியேற்றம்!
”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. 
உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக்
கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுட ன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறு நீர். 
தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. 
வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப்பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். 
இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். 
எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?
கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. 
குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர்கிடைத்து விடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! 
ஏ.சி. அறையில் இருப்பவர்கள், 
ஏ. சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். 
என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க 
வேண்டும்.
தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. 
ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பதுநல்லதல்ல. 
இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். 
கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர்குடிக்கக்கூடாது. 
இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போகும். 
அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளி களும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. 
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.

சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம் … என்று பல காரணங்களால் சிறு நீர்த் தொற்று ஏற் படக்கூடும். 
சாதாரணமாக ‘யூரினரி இன்ஃபெக்‌ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. 
இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்சனைகளின் பட்டியல் நீளும். 
நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் 
வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியா த வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். 
கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்சனை யால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்…
ஜாக்கிரதை! 
சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. 
ஆனால், 5 – 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். 
குறிப்பாக, ஆண் குழந்தைகள். 
நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற் று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும்.
யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.
சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!
சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறு நீரை அடக்கக் கூடாது.
நன்றாக கை கழுவுவது மிகமிக முக்கியம். 
குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். 
மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகா தாரமாக பயன்படுத்த வேண்டும்.
தாம்பத்யத்துக்குப்பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். 
உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிர ச்சனைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது”என்று விளக்க ங்களைத் தந்த டாக்டர், 
”சிறுநீரகங்கள் தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. 
நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு 
ஆளாகிற து? 
நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!” என்றுகேட்டார்.
‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ 
என்று நினைக்காமல், இனி ‘நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்!
________________________________
தினமும் எவ்வளவு தண்ணீர்?
கோடை காலத்தில் 3 லிட்டர்.
மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர்.
ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1 2 லிட்டர்(தாகம் எடுக்காவிட்டாலும்)
________________________________
எவ்வளவு சிறுநீர்?
ஆரோக்கியமான மனிதன் 4 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். 
ஒன்றிரண்டு மணி நேரத்து க்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக் வன்ஸி என்கிற வகையில் வரும். 
(அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத் துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). 
சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். 
இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்‌ஷன், எரிச்சல்ஏற்படும். 
அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளி யேறுவதுதான் இயற்கை. 
மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவ து, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். 
பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.
Link to post
Share on other sites

ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்!

 

ஐ.பி!

* நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா?

* புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா?

* முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா?

* உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை?


ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும்.
ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று.

 

இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது!

அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ...

"கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில்காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?.

'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள்.

நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை.


கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார்.


"கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது.

டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார்.

இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது.

இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்:
பெயர்
மொபைல்
சஞ்சீவ் யாதவ்
9810058002
லலித் மோகன்
9811980604
ஹர்தேவ் பூஷான்
9811980601
மாஜித் (எ) காலித்
9810702004
அஃப்தாப்
9810702004

 

தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்:

"இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார்.

தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார்.

ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார்.

முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார்.


'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள்.

'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார்.

***
புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர்.

தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.....
நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!அசத்துகிறது ஐபி!
ஜெய் ஹிந்த்!

 

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்திய  இன்ரலிஜன்ஸ்  பியூரோ (அலுவலகம்)  என்பது, சகுனி  போல்...
அப்பாவிகளை... பயங்கரவாதியாக்கி,  
குற்றம் செய்ய தூண்டியவர்களை.... அரசியல்வாதியாக்கி, அழகு பார்க்கும்  நாடு. 

இதற்குள்...  மகாத்மா காந்தியின் அகிம்சை என்று,
சொல்லி.... அப்பப்ப எடுத்து விட்டு,  அந்த  120 கோடி மக்களையும்..
மூளைச் சலவை செய்து, பைத்தியக்காரர்களாக  வைத்துள்ளது என்பதே உண்மை. 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.