Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

 

தன் கூட்டத்திற்கு தலைவனாக அனைவரையும் வழி நடத்தும் காளை ... !!

 

Link to post
Share on other sites
 • Replies 460
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பார்த்தீர்களா நம் தமிழ் மொழியின் அருமையை. Doctor -- வைத்தியநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Pediatrist -- குழந்தைசாமி Psychiatri

13 எல்லைகளை கொண்ட நாடு.. எது தெரியுமா?            

259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

 

தன் கூட்டத்திற்கு தலைவனாக அனைவரையும் வழி நடத்தும் காளை ... !!

 

Wow 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

20638123_1932917243664099_7586928031976092194_n.jpg?_nc_cat=0&oh=4e4ef8856b5aac6c592fbce1597e29c9&oe=5BFBA3FE

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...

நாட்டின் அனைத்து இரயில்களும் காற்றாலை மின்சாரத்தால் இயங்குகின்றன – நெதர்லாந்து நாட்டில்

அடுத்த நிறுத்தம், தூய்மையானக் காற்று.

துவக்கத்தில், 2018 ம் ஆண்டுக்குள் அனைத்து இரயில்களும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் என்று நெதர்லாந்து அரசு அறிவித்திருந்தது, ஆனால் அந்த இலக்கை ஏறக்குறைய ஒருவருடத்திற்கு முன்பாகவே அடைந்துவிட்டனர் அந்நாட்டு அரசாங்கத்தினர். 2017 ம் ஆண்டு சனவரி மாதம் முதல் அந்நாட்டின் அனைத்து இரயில்களும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை, குறிப்பாக காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கத் துவங்கிவிட்டன.

https://i2.wp.com/static-v3a.raileurope-world.com/local/cache-vignettes/L760xH533/netherlands-amsterdam_centraal_station-_c_darq-shutterstock_21016321-89757.jpg

காற்றாலை மின்சாரத்தில் முன்னோடியாக விளங்கும் தேசத்தில் தற்போது 2,200 காற்று விசையாழிகள் இருக்கின்றன. 2.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு அவற்றின் மின்னுற்பத்தி இருக்கிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 1.2 பில்லியன் கிலோவாட் மணி மின்சாரத்தை அந்நாட்டு இரயில்கள் பயன்படுத்துகின்றன, இது ஏறக்குறைய அந்நாட்டின் பெரிய நகரமான ஆம்ஸ்டர்டமில் இருக்கும் அனைத்து வீடுகளும் பயன்படுத்தக்கூடிய மின்சார அளவிற்கு இணையானது.

எனிக்கோ (Eneco) என்னும் நிலையான மின்னாற்றலை வழங்கும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த இலக்கானது எட்டப்பட்டுள்ளது. “இந்த ஒப்பந்தம் மற்றும் கூட்டாண்மை தனித்தன்மையுடன் விளங்குவதற்கான காரணம் இத்துறையில் கரியமில வாயுவின் தடம் குறைந்துள்ளது என்பதே” என்கிறார் எனிக்கோ நிறுவனத்தின் கணக்குகள் துறை மேலாளர் திரு. மைக்கேல் கெர்கோஃப்.

காற்றின் வேகத்தில் செயல்பாடுகள்:

காற்றாலை மின்சாரம் நெதர்லாந்தில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது, பிற நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்காட்லாந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் அந்நாட்டில் இருக்கும் காற்றாலை மின்சார வயல்கள் தங்களது நாட்டின் தேவையை விட 6% அதிக மின்னாற்றலை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2020-க்குள் 100% கார்பன் இல்லாத நாடாக ஸ்காட்லாந்து மாற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விலக்கை எட்ட அலைமின் ஆற்றலின் உற்பத்தியில்  அந்நாடு தனது முதலீடுகளைச் செய்துவருகிறது.

அமெரிக்காவும் காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அமெரிக்க காற்றாற்றல் அமைப்பு (AWEA) வழங்கும் தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 48,800 விசையாழிகள் செயல்பட்டு வருகின்றன, இவற்றின் மூலம் 73,992 மெகாவாட் மின்சாரத்தைக் கடந்த 2015ம் ஆண்டு உற்பத்தி செய்திருக்கிறது அமெரிக்கா. பிற நாடுகளைவிட அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் மின்சாரத் தேவை அதிகம் இருக்கிறது.

தூய்மை ஆற்றல் புரட்சி நிகழும் காலகட்டத்தில்  இருக்கிறோம். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் 2050க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்கின்றன சில ஆய்வுகள்.

Futurism.com என்னும் ஆங்கில இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க சொடுக்குங்கள்.

Link to post
Share on other sites
அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று  `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார்.
 
1.JPG


பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு.

சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutrition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது.
 
ANA_Crest_General%2B%25282%2529.jpg
 
american-nutrition-association.jpg


அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. 
 
`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். 
 
நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. 
 
7307494508_7e1241237e_o.jpg
 
 
பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. 
கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். 
 
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம்.
 
images.jpg
 
 
 
தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும். 
 
பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... 
 
IMG_0953.jpg
 
 
வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு. 
 
அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். 
 
pazhaya-sadam-recipe.jpg
 
 
பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம். 
 
 
 
அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்... 
 
* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. 
* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். 
* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். 
 
* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும். 
முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும். 
* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். 
* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். 
* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். 
* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். 
 
 
பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், "பழைய சோறு". 
 
பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! - நன்றி விகடன்
 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, text, nature and outdoor

"அத்தி  பூத்தாற் போல..." என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்  பட்டிருப்பீர்கள்.
அந்த... அத்திப் பூவை, நீங்கள் பார்த்ததுண்டா? மேலே படத்தில் உள்ளது தான்... அத்திப் பூ.  

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

தெரிந்து கொள்வோம்...

Link to post
Share on other sites
 • 2 weeks later...

விக்கல் தும்மல் கொட்டாவி உடல் சொல்லும் நற்செய்திகள்

நம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் கொண்டுவரும்போது என்ன நடக்கும்? நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவிவிட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை... 

*மயிர்க்கூச்செரிதல்* 

விலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும். இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும். 

மனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம். 

மயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். 

*கொட்டாவி* 

மிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இதுதான். 

*விக்கல்* 

ஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும்? `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா?’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான் துரதிர்ஷ்டம். 

*திடீர் விழிப்பு* 

அடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! 

மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும். 

*விரல்களில் தோல் சுருக்கம்!* 

தண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது. 

*தும்மல்* 

பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது. 

*சோம்பல் முறித்தல்!* 

இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும். 

உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது! *விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் *`இயற்கை’* என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்!

https://eluthu.com/kavithai/322692.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

குரங்கிலிருந்து மனிதன் எப்படி வந்தான் என்று தெரியுமா....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text

"ராமன் விளைவு"  என்றால் என்ன?

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

நவ ரத்தினங்களை.. எப்படி கண்டறிவது தெரியுமா?

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

 

எனக்கு இந்த மீன் ரொம்பவும் விருப்பம்.கொஞ்சம் எண்ணெயில் வதக்கி வெண்காயமும் போட்டெடுத்தால் ரொம்பவும் சுவை.
இணைப்புக்கு நன்றி நுணா.

 • Like 1
Link to post
Share on other sites

மறுநிர்ணயம் காலத்தின் கட்டாயம்!
   "சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட இந்திய நேரத்தைவிட , ஒரு மணி நேரம் அதிகம் இருக்குமாறு அசாமில் உள்ளூர் கடிகாரங்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, தனி நேர மண்டலம் உருவாக்கப்படும் " என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் தருண் கோகோய்.
      அசாமில் கோடைக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் நன்கு இருட்டிவிடுகிறது.  அசாமிலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தில், அசாமில் சூரிய உதயம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சூரியன் உதயமாகிறது.
     இந்தியாவின் கால அளவு உத்தரப்பிரதேசத்தின் மீர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி தீர்க்க ரேகையை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்படுகிறது.  இந்தக் கோட்டுக்குக் கிழக்கே உள்ள மாநிலங்களுக்கு, மேற்கே உள்ள  மாநிலங்களைவிட மிகக் குறைவான பகல் பொழுதே கிடைக்கிறது.
     பகல் பொழுதை வீணாக்காமல் இருக்க பிரிட்டிஷார் 150 ஆண்டுகளுக்கு முன் 'சாய் பகான்' எனும் காலமுறையைக் கடைப்பிடித்தனர்.  அதை அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமல்படுத்தினர்.  அதனால் தொழிலாளர்கள் சூரிய உதயத்துக்கு ஏற்ப அதிகாலையிலேயே எழுந்து, வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தோட்ட வேலைக்கு வந்துவிடுவர்.  இதனால், அவர்களுடைய உழைப்பு நேரமும் உற்பத்தித் திறனும் இன்றளவும் வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
     இந்தியா மிகவும் பரந்துவிரிந்த தேசமாக இருப்பதால், இங்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரே நேரத்தில் எல்லா
மாநிலங்களிலும் நடப்பதில்லை.  பொதுவான நேர நிர்ணயத்தால் சிற்சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
-- 'தி இந்து' நாளிதழ். தலையங்கம். ஜனவரி 8,2014.  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மக்களையே அபகரிக்கத் தெரிந்தவனுக்கு அவர்கள் வீட்டை அபகரிக்கத் தெரியாதா....? என்னங்க விசுகு அவர்களே.!
  • காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே! -தமிழ் நிலா.
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. நல்ல மப்பிலை சொல்லுறார், கண்களும் சொல்லுது.
  • லைலா வலையை பாவிச்சு மீன் குஞ்சுகளையும் வழிச்சுக்கொண்டு போனால் மீன்வளம் அழியாமல் என்ன செய்யும்?
  • தமிழக மீனவர்கள் கேரள கடற்பரப்புக்குள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மலையாளிகள் அடித்து இவர்களை விரட்டி விடுவார்கள் என்று தெரியும், புத்தளம் போன்ற பகுதி கடற்பரப்புக்குள் கூட செல்ல மாட்டார்கள், சிங்கள மீனவர்கள் விரட்டி விடுவார்கள் என்ற பயம் (ஆனால் மன்னார் தமிழ் மீனவர்கள் செல்ல முடியும்). இவர்கள் வருவது எல்லாம் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் மட்டுமே. யுத்தகாலத்தில் தமிழ் மீனவர்களின் எல்லை மிகச் சுருங்கி இருந்தது. ஆழ்கடல் மீன் பிடிப்பு அறவே இல்லாமல் இருந்தது. யுத்தகாலப் பகுதியில் தமிழக மீனவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான இந்த ஆழ்கடல் எல்லாம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இப்ப யுத்தம் இல்லாமையால் வடக்கு தமிழ் மீனவர்கள் தமக்குரிய கடற்பரப்பில் மீன் பிடிக்க முனையும் போதுதான் இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்கின்றது. 30 வருட யுத்தத்தாலும், சுனாமியாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எம் மீனவர்களின்  வயிற்றில் அடிப்பது மட்டுமல்லாமல், மீன்வளத்தையே நாசம் செய்யும் தமிழக மீனவர்கள் வந்து கொள்ளையடித்து போகட்டும் என்று சொல்லும் அளவுக்கு உடையார் போன்றோருக்கு தமிழக விசுவாசம் பெருகியிருப்பது தான் வேதனை. இது வரை காலத்தில் ஒரு தமிழக அரசியல் தலைவர்களாவது, ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு தமிழக தலைவர்களோ செயற்பாட்டாளர்களோ, தமிழக பிரமுகர்களோ, தமிழக மீனவர்களைப் பார்த்து, ஈழத்தமிழர்களின் மீன் வளத்தை அடாத்தாக பறிக்க வேண்டாம், எல்லை தாண்டி அவர்களின் கடற்பரப்பிற்குள் (கரையில் நின்று பார்த்தாலே தெரியக் கூடிய அளவுக்கு) சென்று, கடல்தாயின் அடி வயிற்றில் இருந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டும் உபகரணங்கள் கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்களா? சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா?  அவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால் மிகவும் நலிவுற்று இருக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள் தான் மேலும் மேலும் குனிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.  நலிந்தவன் முதுகில் சவாரி செய்வது தொப்புள் கொடி உறவுகளாலும் நடைபெறுவது தான் யதார்த்தம்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.