Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

 • 2 weeks later...
 • Replies 453
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

13 எல்லைகளை கொண்ட நாடு.. எது தெரியுமா?            

Amazon..   அமேசான் என்கிற ஆச்சர்யம்!   வருடமெல்லாம் கொட்டும் மழை!    சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!    மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ண

259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

 • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு ஒரு வயது வரையறை இருக்க வேண்டும்.

 • Like 1
Link to post
Share on other sites

புரை ஏறுவது ஏன்?

நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis).

நாம் உணவை விழுங்கும்போது, எபிகிளாட்டிஸ் என்ற மூடி கிளாட்டிஸை மூடிக்கொள்ள, மூச்சுக் குழாயும் மூடிக்கொள்கிறது. இதனால் உணவுக் கவளம் உணவுக் குழாய்க்குள் போகிறது. சுவாசிக்கும்போது எபிகிளாட்டிஸ் திறந்துகொள்ள, கிளாட்டிஸ் வழியாக மூச்சுக் குழாய்க்குள்காற்று போகிறது. இப்படிச் சாதாரணமாகக் காற்றும், உணவும் ‘சண்டைபோடாமல்’ ஒவ்வொன்றும் ‘தனி வழி’களில் செல்கின்றன. இதனால் பிரச்சினை ஏற்படுவது இல்லை.சில காரணங்களால், குரல்வளை சரியாக மூடப்படவில்லை என்றால், உணவுக் குழாய்க்குள் செல்ல வேண்டிய உணவுக் கவளம் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடும். அப்போது மூச்சுக் குழாய் தடைபடும். நம்மால் மூச்சுவிட முடியாது.இப்படித் தடை உண்டாக்கிய பொருளை வெளியேற்ற, நம் உடலில் இயற்கையாக இருக்கிற மெக்கானிஸம், இருமல். இருமும்போது, நுரையீரலில் இருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால் மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு பலமாக வெளியே உந்தி தள்ளப்படும். இதைத்தான் ‘புரையேறி விட்டது’ என்று சொல்கிறோம்.

என்ன காரணம் ?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது, உணவுக் குழாய்ப் புற்றுநோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும்.குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப் பொருள்கள் கூடச் சுவாசக் குழாயை மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவற்றை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

# இதில் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்துங்கள். இப்படி முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாறி மாறிச் செய்யுங்கள். உணவுப் பொருள் வெளியேறிவிடும்.

# அப்படியும் உணவுப் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரைமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘பிராங்காஸ்கோப்’ கருவி மூலம் உணவுப்பொருளை மருத்துவர் வெளியே எடுத்துவிடுவார்.

https://sciencemgv.wordpress.com/2014/10/09/புரை-ஏறுவது-ஏன்/

Link to post
Share on other sites
 • 2 weeks later...

 

தமிழக முன்னோர்களின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. ஊற்றிய நீர் எங்கு சென்றது என்பது புரியாத புதிராக உள்ளது. இது போன்ற பல கலைகள் இன்று அழிந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.

 

 

 • Like 1
Link to post
Share on other sites
30 minutes ago, nunavilan said:

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

என்ரை பூட்டப்பிள்ளையள் இன்னுமொரு 50 வருசத்தாலை சிறிலங்காவுக்கு போனால் உதே வசனத்தைத்தான் சொல்லுமெண்டு நினைக்கிறன். Sad

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை பூட்டப்பிள்ளையள் இன்னுமொரு 50 வருசத்தாலை சிறிலங்காவுக்கு போனால் உதே வசனத்தைத்தான் சொல்லுமெண்டு நினைக்கிறன். Sad

ஏன் பூட்டப்பிள்ளை வரை காத்திருப்பான்?
ஏற்கனவே இந்த நிலைமை வந்தாச்சு என்பதை வேதனையுடன் சொல்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தமிழர்கள்திகம் வாழும் அதிசய தீவு

ஒரு காலத்தில் வெளிநாட்டவர் வந்து அழைத்துப் போனார்கள்.
இப்போது நாமாகவே இடம் பெயருகிறோம்.
இணைப்புக்கு நன்றி நுணா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது.
இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.

 

இது பிரான்ஸிற்கு சொந்தமான‌ ஒரு தீவுதானே இணையவன் ஆகவே இந்த குடிமக்களும் பிரான்ஸ் குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள். இப்பொழுது சிங்களவர்கள் வள்ளங்களில் இங்குதான் சட்ட விரோதமாக செல்கின்றார்கள்.

இவர்கள் பொரும்பாலும் இந்தியாவின் பாண்டிச்சேரி  மாநிலத்தை செர்ந்தவர்கள். இது மொறிசியஸ் தீவுக்கு அண்மையில் உள்ளது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

1841 தை  மாதம் 7´ம் திகதி... யாழ்ப்பாணத்தில்,  உதயதாரகை   பத்திரிகை  தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப் பட்டது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, outdoor and nature

 

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன் 
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம் 
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ( manas hussain )

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா

முதலில் பாடசாலை நாட்களில் படத்த ஞாபகம்.நீண்ட காலத்தின் பின் இப்போது படிக்கிறேன்.இணைப்புக்கு நன்றி.

எல்லாமே சரியோபிழையோ இந்த 40வது மட்டும் ஏனோ குடையுது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் பாடசாலை நாட்களில் படத்த ஞாபகம்.நீண்ட காலத்தின் பின் இப்போது படிக்கிறேன்.இணைப்புக்கு நன்றி.

எல்லாமே சரியோபிழையோ இந்த 40வது மட்டும் ஏனோ குடையுது.

ஆம்... ஈழப்பிரியன். அதை என்னாலும்   ஏற்றுக் கொள்ளவே முடியாமல் உள்ளது.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மனித உடலைப் பற்றிய, பொது அறிவு.

No photo description available.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower and text

பேசும் முறைகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஒரு யானை, தன்  வாழ்நாளில்  18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகின்றது. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது வேறை லெவல்...... ⁑ ⁑ ⁑ தேத்தண்ணி கடையிலை வேலை செய்திருப்பாரோ? 😂    
  • தைமாதத்துக்கு பிறகு  மற்றவர் வெள்ளைமாளிகைக்கு வந்தாப்பிறகு என்னென்ன திருவிளையாடல் நடக்குதோ ஆருக்குத்தெரியும்? 🙃
  • பகிர்வுக்கு நன்றி சுமே.  இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன். சம்பவம் 1:  அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர். திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு. ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார். சம்பவம் 2: இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். சம்பவம் 3: விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி  (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது. சம்பவம் 4: சுமேயின் அனுபவம் ------------ கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை ,  வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது. முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.
  • சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது. எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விடை இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.