-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பண கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர் வீதத்தினை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு தற்போது கொரோனா தொற்று நிலமை காரணமாக வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கின்றபோது எமது இளைஞர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பிரதேச செயலகங்கள், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழில் பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன தங்களுடைய பணிகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துத்து வருவதோடு தொழில் நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மற்றும் துறைசார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில் வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன எனினும் இவ் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படலாம். இவ் வேலை தேடுவோர் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரதிற்கும் குறைந்த என்னும் பெறுபேறுகளின் அடிப்படையில் காணப்படுகின்றார்கள். மேலும் மூன்றாம் நிலை கல்வி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுகின்ற துறைசார் உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தி இளைய சமூகத்தை சரியான பாதையில் வழிப்படுத்த இச் செயற்குழுக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு ஏழு உப குழுக்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
இது இப்படியிருக்க சீனனின் நண்பனான இலங்கையின் இன்றைய ரூபாயின் பெறுமதி 1 C$ = Rs. 165.50. அடுத்த ஆறு மாதங்களில் .. 1 C$ = Rs. 200.00 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கககபோ.... 😂
-
By விவசாயி விக் · Posted
அண்ணா அவ்வளவும் கடந்த 100 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் பெயர்கள் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனக்கு விவரண படம், சரித்திர கட்டுரைகள் என்றால் உயிர். 😀 இயற்கையின் நியதி படி எப்போதும் 5% விகிதம் தான் காளைகளாக இருக்கும். மனிதன் தான் சமயத்தை தொடக்கி ஒருவருக்கு ஒருவர் என்று சட்டம் போட்டு 50% விகிதமாக இருக்கின்றோம். அந்த காலம் மாறுகிறது. நாங்கள் பெண்களின் யுகத்திற்குள் செல்கின்றோம். கோழிகள் மாடுகளை அடைத்து வைத்து ஒவ்வொரு நாளும் அண்டிபயோடிக் போட்டு உடல் பருமன் குறையாமல் வைப்பது இலாபம் பார்க்க தான். எப்போது ஒரு சமூகம் தனக்கு உணவு அளிக்கும் உயிர்களை இப்படி கொடுமை படுத்துகிறதோ அந்த சமூகத்தின் ஆன்மாவும் அப்படியே மாறும். அவர்களும் அந்த பாவவினையை அனுபவிப்பார்கள். -
By பிழம்பு · பதியப்பட்டது
அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.