Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.beediagram.jpgதகவல்களை தேடி பகிர்றது, ஒரு ஆர்ட்! அது எல்லாருக்கும் வருமா? தாங்க்ஸ் நுணாவிலான்! :)

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 months later...
 • Replies 451
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு    

தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.   “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை*  தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“ம

மனிதனின் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் எத்தனை சதவிகிதத்தை பயன்படுத்துகிறான்?

86392067.jpg

மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.

அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.

சாதாரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.

கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு' ஆகும். அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?

உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

http://wwwnathiyalai.blogspot.com/2012/01/blog-post_3265.html

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...

 • அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
 • ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.
 • இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.
 • புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.
 • இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது.

 • முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்.

 • மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ.

 • தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது.

 • கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர்.

 • சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.

 • கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண்

 • கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல்அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.

 • கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது.

 • சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.

 • தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
 • சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.
 • சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
 • இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.

 • வெள்ளை ரோசா என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
 • எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
 • மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும்.
 • இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.
 • திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது.

 • ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் .
 • கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
 • இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
 • கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது.
 • இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 months later...

 • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.

 • யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.

 • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது

 • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.

 • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.

 • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

 • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.

Edited by nunavilan
Link to post
Share on other sites
 • 3 weeks later...

ஆங்கில மொழியின் வரலாறு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்தஆங்கிலோ-சக்சன் (

Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன.tamil_language.jpg

 • உலகின் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்களால் பேசப்படும் ஆங்கிலம் அமெரிக்கா , பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து , கனடா (பகுதி) முதன்மை மொழியாகவும் அயர்லாந்து , தெனாபிரிக்கா நாடுகளின் பெருமளவில் பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
 • இதுவரை ஆக்ஸ்போஃட் அகராதி (Oxford English Dictionary) 500,000சொற்களை உள்ளடக்கியுள்ள போதிலும் பல புதிய சொற்கள் தினமும் உருவாகின்றன.
 • உலக தபால் தொலைத் தொடர்பு மூன்றில் ஒருபகுதியிலும் மற்றய தகவல்கள் 80%கணனியிலும் (பலவடிவில்) உள்ளடக்குகின்றது.
 • உலகில் தமது தாய்மொழி தவிர்ந்த 2 ம் மொழியாக 700 மில்லியன் மேலான மக்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர்.
 • தினம் வெளியாகும் சஞ்சிகைகள் மற்றும் ஊடகங்கள் (CBS, NBC, ABC, BBC and CBC) ஆங்கிலமொழியில் வெளியிடும் தகவல்கள் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களை சென்றடைகின்றது.
 • ஐ.நா வில் அங்கம்வகிக்கும் 163 நாடுகளில் ஆங்கிலம் (45), பிரஞ் (26 ), ஸ்பனிஷ் (21), ஆரபிக் (17) இவற்றுடன் மீதமாகவுள்ளவை தமது தாய் மொழியையும் அரச கருமத்தில் உபயோகிக்கின்றன.
 • ஆங்கிலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இனையத்தின் தாய்மொழியாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விடையத்தில் வல்லமையுள்ள மொழியாகவும் இருந்துவருகின்றது.
 • ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.
 • ஆங்கில அகர எழுத்துக்களில் மிகவும் அதிகமாக பாவிக்கப் படுவது - E , மிகவும் குறைவாக பாவிக்கப்படுவது - Q ஆகும்.
 • ஆங்கில மொழியில் மிகவும் சிறியதும் முழுமையானதுமான வசனம் " I am." என்பதே.
 • இரு முறை " i " எனும் எழுத்து அடுத்துவரும் ஒரே ஒரு சொல் " skiing " மட்டுமே.
 • " mt " எனும் சொல் மட்டுமே " dreamt " இல் முடிவடையும் சொல் என்பதும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும்.
 • ஆங்கிலமொழியில Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis (Silicosis) எனும் சொல் மிக நீளமானது. அதிகார பூர்வமாக ஏற்க்கப்பட்ட இந்த சொல்லில் 45 எழுத்துக்கள் உண்டு. இதை விடவும் பலநூறு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆனால் அகராதிகளில் சேர்க்கப்படாத சொல்கள் உள்ளன

http://aruvam.com/2009-06-03-10-55-29/2009-06-03-10-52-15.html

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நுணாவிலான்.

இந்தத்தலைப்பு, நல்லதொரு அறிவுப் பெட்டகம்.

மேலோட்டமாக, வாசித்த போது... சுவராசியமான பல விடயங்கள் கிடைத்தன.

Link to post
Share on other sites
 • 1 month later...

கணிதத்தின் ஆச்சரியமான சில வடிவங்கள்

[size=4]

[size=3]>> 1 x 8 + 1 = 9[/size]

[size=3]>> 12 x 8 + 2 = 98[/size]

[size=3]>> 123 x 8 + 3 = 987[/size]

[size=3]>> 1234 x 8 + 4 = 9876[/size]

[size=3]>> 12345 x 8 + 5 = 98765[/size]

[size=3]>> 123456 x 8 + 6 = 987654[/size]

[size=3]>> 1234567 x 8 + 7 = 9876543[/size]

[size=3]>> 12345678 x 8 + 8 = 98765432[/size]

[size=3]>> 123456789 x 8 + 9 = 987654321[/size]

[size=3]>>[/size]

[size=3]>> 1 x 9 + 2 = 11[/size]

[size=3]>> 12 x 9 + 3 = 111[/size]

[size=3]>> 123 x 9 + 4 = 1111[/size]

[size=3]>> 1234 x 9 + 5 = 11111[/size]

[size=3]>> 12345 x 9 + 6 = 111111[/size]

[size=3]>> 123456 x 9 + 7 = 1111111[/size]

[size=3]>> 1234567 x 9 + 8 = 11111111[/size]

[size=3]>> 12345678 x 9 + 9 = 111111111[/size]

[size=3]>> 123456789 x 9 +10= 1111111111[/size]

[size=3]>>[/size]

[size=3]>> 9 x 9 + 7 = 88[/size]

[size=3]>> 98 x 9 + 6 = 888[/size]

[size=3]>> 987 x 9 + 5 = 8888[/size]

[size=3]>> 9876 x 9 + 4 = 88888[/size]

[size=3]>> 98765 x 9 + 3 = 888888[/size]

[size=3]>> 987654 x 9 + 2 = 8888888[/size]

[size=3]>> 9876543 x 9 + 1 = 88888888[/size]

[size=3]>> 98765432 x 9 + 0 = 888888888[/size]

[size=3]>>[/size]

[size=3]>> And look at this symmetry:[/size]

[size=3]>>[/size]

[size=3]>> 1 x 1 = 1[/size]

[size=3]>> 11 x 11 = 121[/size]

[size=3]>> 111 x 111 = 12321[/size]

[size=3]>> 1111 x 1111 = 1234321[/size]

[size=3]>> 11111 x 11111 = 123454321[/size]

[size=3]>> 111111 x 111111 = 12345654321[/size]

[size=3]>> 1111111 x 1111111 = 1234567654321[/size]

[size=3]>> 11111111 x 11111111 = 123456787654321[/size]

[size=3]>> 111111111 x 111111111 = 12345678987654321[/size]

[/size]

வரவுக்கு நன்றிகள் கு.மா அண்ணா, தமிழ் சிறி,உடையார்.

 • Like 2
Link to post
Share on other sites
 • 1 month later...

[size=4]இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது. [/size]

[size=4]கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. [/size]

[size=4]மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ [/size]

[size=4]நீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. [/size]

[size=4]இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. [/size]

[size=4]பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. [/size]

[size=4]உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். [/size]

[size=4]இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. [/size]

[size=4]சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. [/size]

[size=4]ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. [/size]

[size=4]எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.[/size]

[size=4](மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)[/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=1]

இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.

கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ

நீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.

இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.

உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.

இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது.

சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

[/size]

உலகத்திலேயே அதிசயமெண்டால்......இந்த இயற்கைதான்.....அதுக்கையும் மனிச இனம் அதிசயத்திலையும் அதிசயம்.தம்பி நுணாவில் இணைச்சதுக்கு நன்றி.

Edited by குமாரசாமி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நுணுக்கமானதும் அதிசயமுமான தகவல்கள்.

இணைப்புக்கு நன்றி.

Link to post
Share on other sites

ஆர்க்கிமிடிஸ்

[size=2]

[/size][size=3]

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

express-submarine-archimedes.gif

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

archimedes.jpg

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

domenico-fetti_archimedes_1620.jpg

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

Edouard_Vimont_%25281846-1930%2529_Archimedes_death.jpg

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

images+%25284%2529.jpg

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும்.

(தகவலில் உதவி - ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

நன்றி

 • Like 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...

டைட்டானிக் - புதைந்த வரலாறு

[size=3]

[/size][size=3]

titanic_bow_2004.jpg

[size=4]உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது.[/size]

[size=4]1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.[/size]

[size=4]பிரமாண்ட கப்பல்:[/size]

[size=4]டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல். 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.[/size]

[size=4]சம்பவத்தன்று...[/size]

[size=4]1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.[/size]

[size=4]வியாபாரமான டைட்டானிக்:[/size]

[size=4]விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.[/size]

[size=4]1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.[/size]

[size=4]டைட்டானிக் 2:[/size]

[size=4]டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.[/size]titanic.jpg[/size]

http://excitingearth.blogspot.in/

Link to post
Share on other sites

நாம் நிமிடத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?

[size=2]

[/size][size=3]

earth_africa.gif

நீங்கள் இப்போது நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? உங்கள் நாற்காலியை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விடுங்கள். இந்த நேரத்தில் (4 வினாடிகள்) நீங்கள் 100 கிலோ மீட்டர் தாண்டி விட்டீர்கள். மீண்டும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விடுங்கள். இப்போது மேலும் 100 கிலோ மீட்டர் தூரம் தாண்டிவிட்டீர்கள். இது உண்மை.

நாம் வசிக்கும் இப்பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு (per second) 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமி இந்த குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதனால்தான் சூரியனின் பயங்கரமான ஈர்ப்பு சக்தியினால் இழுக்கப்பட்டுச் சூரியனுடன் மோதி அழிந்து விடாமலிருக்கிறது.

இதைவிட சற்றுக் குறைந்த வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனால் இழுக்கப்பட்டு எரிந்து விடும். இதைவிட சற்று அதிக வேகத்தில் சுற்றினால்கூட போதும். பூமி சூரியனைவிட்டு அதிக தூரம் விலகிப்போய் மிகவும் குளிர்ந்து விடும். விறைத்துச் சாகவேண்டியதுதான் (பனிக்கட்டி மூடிவிடுவதினால்).

ஆகவே, பூமி சுற்றும் வேகம் சிறிது மாறினால் கூட போதும். பூமியின் மீது எந்த ஜீவராசியும் (தாவரம், மிருகம், மனிதர்) உயிர் வாழவே முடியாது. இவ்விதமாகவே இப்பூமி இவ்வித இரண்டு பயங்கர ஆபத்தான நிலைமைகளுக்கு இடையே மயிரிழையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நம்மால் பிரயாணம் பண்ணக் கூடுமானால், நாம் ஐந்தரை நிமிட வேகத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்தையோ அல்லது தென் துருவத்தையோ அடைந்துவிடலாம். ஆனாலும் அப்பிரயாணம் அலுப்பு மிக்கதாகவும், சலிப்புடையதாகவும் இருக்கும்.

ஏன் தெரியுமா? அவ்வளவு வேகத்தில் செல்லும்போது நம் கண்களால் எதையுமே பார்க்க முடியாது. பார்த்தாலும் எல்லாமே மிகவும் மங்கலாகவும், அதிவேகமாகவும் ஓடுபவையாகவும் காணப்படும். சாதாரணமாக இப்பூமியின் மீது நாம் எங்கேனும் பிரயாணம் செய்யும்போது, நாம் கடந்து செல்கின்ற பொருட்களைக் கொண்டுதான் நாம் பிரயாணம் செய்யும் வண்டியின் வேகத்தையும், அசைவையும் நம்மால் அறிய முடிகிறது.

நாம் தொடர்ந்து செய்யும் விண்வெளிப் பிரயாணத்தைக் குறித்த உணர்வு நமக்கு ஏன் இல்லாமல் இருக்கிறது என்பது இதிலிருந்து நமக்கு புரிகிறதல்லவா? இந்த பூமி எப்போதுமே இப்படித்தான் தொடர்ந்து அண்டவெளியில் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிறது.

நாம் யாவரும் இதன்மீது பிறந்தவர்களும், இப்பூமியின் வாழ்வாகவும் இருக்கிறோம். வேகத்தைப் பொறுத்தமட்டில் நாமும் இப்பூமியும் ஒன்றுதான். மேலும் இப்பூமியானது அருகிலுள்ள அநேகப் பொருட்களினூடே கடந்து செல்லுமானால் பூமியும் நாமும் அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் உணர முடியும். அப்படியில்லாது பூமிக்கருகில் நாம் காணக்கூடிய எப்பொருளும் இல்லாதிருப்பதினால் நாம் இப்பூமியோடு சேர்ந்து அதிவேகமாகப் பிரயாணம் செய்வதை நம்மால் சற்றேனும் உணர முடியவில்லை. எவ்வளவு வியப்பாக இருக்கிறது. இல்லையா?[/size]

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்

சர்க்கரை 5 கிராம்

நார்சத்து 3 கிராம்

கொழுப்புச் சத்து 0.2 கிராம்

புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)

பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)

வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)

வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)

வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)

வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)

வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)

வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)

இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)

மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)

பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)

பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)

சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

 • Like 1
Link to post
Share on other sites
 • 1 month later...

im0901-106_hoopoe.jpg

-

-

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள்

கொத்தும்.

-

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை

ஒன்பது நிறத்தில் தெரியும்.

-

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

-

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே

இருக்கும்.

-

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

-

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும்

திறன் படைத்தது.

-

நன்றி:

http://vidhai2virutc....com/2012/06/22

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவில்.

Link to post
Share on other sites
 • 4 weeks later...

Secrets of the CIA

-------------------------------------------------------------------------------------

ஈழபிரியன், கு.மா அண்ணா உற்சாகமூட்டலுக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் மிகப் பயனுள்ள திரி நன்றி நுனாவிலான்.பல நூல்களைப் புரட்டவேண்டிய தேவை இனி இல்லை. நிறுத்தாது தொடருங்கள்

Link to post
Share on other sites
 • 1 month later...
15 வது வாய்பாடு உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லைன்னா கவலை விடுங்கள்... எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் அதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்... ரொம்ப ரொம்ப சிம்பிள்.
உதாரணத்துக்கு ஒரு இரண்டு இலக்க எண்ணை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
 
உதாரணம் 23. இதை 15ஆல் பெருக்க வேண்டும். 23 X 15
தேர்வு செய்த எண்ணுடன் ' 0 ' சேர்த்துக்கொள்ளுங்கள். 230.
230 எண்ணை '2' ஆல் வகுக்க வேண்டும். 230 / 2 = 115.
இப்போ 230 ஐயும் 115 யும் கூட்ட வேண்டும். 230 + 115 = 345.
இதுதான் விடை, 23 X 15 = 345.
இதே போல் மூன்று, நான்கு, ஐந்து இலக்க எண்ணையும் பெருக்கலாம்.
 
--- தினமலர் இணைப்பு , 30 . 3 . 2012.
Link to post
Share on other sites
மேஜிக் கணக்கு !
 
 
மேஜிக் கணக்குல எத்தனை பெரிய எண்ணையும் 5ஆல் ஒரே வரியில் வகுக்க முடியும்.
உதாரணம்: 123456789 எண்ணை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போ இந்த எண்ணை 5ஆல் வகுக்க வேண்டும். அதுக்கு தேர்வு செய்த எண்னை 2 ஆல் பெருக்க வேண்டும்.
123456789 X 2 = 246913578 என்று வரும். கடைசி இலக்க எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு போட வேண்டும். இதுதான் விடை. 24691357.8.
இதே போல் எந்த எண்ணாக இருந்தாலும் இரண்டால் பெருக்கி வரும் விடையின் கடைசி எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு ( புள்ளி ) போட வேண்டும்.
 
--- தினமலர் இணைப்பு , 6 . 4 . 2012.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Quote "பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே
இருக்கும்."

 

அதை மறைக்கதானா கறுத்த கண்ணாடி அணிக்கின்றவர்கள்?

 

நல்ல திரி தொடருங்கள்
 

Link to post
Share on other sites
 • 5 weeks later...

இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்

 
மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ  அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் .

உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில்  உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து  விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு  சென்றமை .

எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 ))  கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும்  குறிக்கப்பட்டுள்ளது .

 
S_MaskOfKingTut.jpg

இவை அனைத்தையும்  பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த குறிப்புகளையும் எழுதி வைக்க வில்லை . எழுதி வைக்காததன் மர்மம் என்ன ? அதற்க்கான கேள்வி மனதில் நிற்கட்டும் . இவ்வாறு  எழுதி வைக்காத முறைமை கிரேக்க சுற்றுலாப்பயணி(கி மு 2500 ) ஒருவரால் அடிப்படை விடயங்களை வைத்து ஊகித்து எழுதப்பட்டது தான் மம்மிபிகேஷன் .

அனைத்து  தொழில்நுட்பவியலாளர்களும் , தற்ப்போதைய கட்டிட நிபுணர்களும் பார்த்து வியந்த பிரமிட்டுகள் ஆயிரமாயிரம் தொழிலாளர்களை வைத்து கட்டப்பட்டது . அதற்க்கான காரணம் அவர்களது இறந்த உடல்களை பாதுகாக்கவும் இறந்த பின்னரான வாழ்க்கையை உறுதி செய்யவுமே .

இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் முறையில்  எகிப்தியர்களை பார்த்து வியந்து நிற்க்கிறது மருத்துவ உலகம் . மம்மிபிகஷோன் நடந்த மம்மி 18 ஆம் நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைப்பது தான் மம்மிபிகாஷோன் .

மம்மிபிகேஷன்

நைல்   நதியை தாண்டி கொண்டு செல்லப்படும் இறந்த உடல்களுக்கான மம்மிபிகாஷோன் உயர்ந்தமலையில் வைத்து நடத்தப்படுகிறது . மம்மிபிகேஷன் ஆரம்பமாக அவர்களுடைய குருமார்களால் பிரார்த்தனை நடத்தப்படுவதுடன் ஆரம்பிக்கிறது  .

mummification_process.jpg

பின்னர் மூக்கினூடாக ஒரு நீண்ட கம்பி போல ஒன்றை வைத்து மூளை இழுத்து எடுக்கப்படும் . வயிற்றிலிருந்து ஏனைய முக்கிய உறுப்புகளும் எடுக்கப்படும் . அவை தான் உடல் கெட்டுப்போக காரணமானவை .

anubis_mummification_dead.jpg

பின்னர் கழுவப்பட்ட உடல் நீரை உடலில் இருந்து உறிஞ்சும் உப்புக்களால் முழுமையாக மூடி நாப்பது நாட்களுக்கு விடப்படும் . நாற்ப்பது நாட்களுக்கு பின்னர் நைல் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரால் உடல் கழுவப்பட்டு உடலை லாஸ்டிக் போல வைத்திருக்க எண்ணெய் வகை பூசப்படுகிறது .

எடுக்கப்பட்ட உள் உறுப்புகளிட்க்காக வேறு பொருட்கள் இட்டு உடல் நிரப்பப்பட்ட பின்னர் , எடுக்கப்பட்ட உறுப்புகள் சாடிகளில் இடப்படும் . அதாவது அவர்கள் வணங்கிய கடவுள் ஹோறச்சின் நான்கு மகன்கள் என அழைக்கப்படும் ஜாடிகளில் இட்டு  வைக்கப்படும் .

kanobi.jpg

வாசமான திரவியம் உடலை சுற்றி பூசப்பட்ட பின் துணியால் சுற்றப்படும் .

pro06.jpg
 
அவர்களின் சுற்றும் முறையே தனி . சுற்றிய பின் சடங்குகள் இடம் பெற்று அவை உறவினர்களிடம் விடப்படும் . அங்கு அவர்களுக்கு இறுதி உணவு , இறுதி சடங்குகள் அனைத்தும்  செய்யப்பட்டு அவர்களுக்காக செய்யப்பட்ட பிரமிட்டுகளில் வைக்கப்பட்டு மூடப்படும் .

 
S_Mummification.jpg

இதில் நெகிழ வைக்கும் விடயம் என்னவென்றால் . அரசன் மறுபடியும் வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை இருந்தவர்கள் பணம், பொருள் , உணவு என அணித்தையும் இட்டு அனுப்புவர் .அதனுடன் வேலை செய்பவர்களையும் காவலாளிகளாக உயிருடன் வைத்து மூடுவதே . காரணம் இறந்த பின்னரும் அரசன் உயிரித்து எழுந்தால்  காவலுக்கு காவலாளிகள் தேவை என்பதே .

எகிப்தியர்கள் இறந்த உடல்களை வரிசையாக பிரமிட்டுகளுக்குள் இறக்கும் விதம் . அப்போதே இத்தகைய தொழில் நுட்பம் .

 
pyramid-17.jpg

ஆனால் நமக்கெல்லாம் தெரிந்தது எகிப்திய மம்மிகள் தான் . அவை தான் பிரபல்யமும் கூட . ஆனால் தேன் அமெரிக்காவில் கடற்க்கரை பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதுவரை கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் 6000 ஆண்டுகள் பழமையான சின்ன குழந்தை ஒன்றின் மம்மியே மிக மிக பழமையானது .

எகிப்திய ராஜாக்களால் தாம் இறக்கும் முன்னர் தாம் இறந்ததன் பின்னான வாழ்க்கைக்கு தேவையான இடத்தை அவர்களே இருந்து கட்டுகின்றனர் . மிகவும் பணம் செலவழிக்கும் விடயம் என்றால் இது தான் .

sacred-egyptian-tomb-515635-sw.jpg

நவீன மம்மி (லெனின் )

உலக புரட்ச்சியாளன் லெனின் இறந்த பின்னர் (1924 ) அவருடைய உடலை பக்குவப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது . காரணம் மக்களால் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்டவர் , தம்முடனேயே இருக்க வேண்டும் என முடிவு செய்தனர் .

முதலில் அடியில் வைத்து -30 டிகிரியில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் மேலும் நிறைய காலம் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது .

The+emporer%27s+new+clothes.jpg

ஆனால் அவரது உடலுக்கு மம்மீகளுக்கு  செய்யப்பட்ட அதே வேலைகள் மாற்றமில்லாமல் இடம் பெற்றது . ஆனால் ரகசியமாக ஒரு முறை இன்று வரை பேணப்பட்டு வருகிறது ரஷ்ஷியர்களால் . இறந்த அவரது உடல் 70 வருடங்களாக அப்படியே இருக்கிறது . இப்போதும் பேணப்பட்டு வருகிறது .

ஒரு வேலை லெனினின் உடலும் நிலத்துக்கடியில் செல்லலாம் . காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை . அனைத்து மம்மிகளும் , அது எகிப்திய மும்மியோ ,6000 வருடங்கள் பழமையான குழந்தை மம்மியோ!!. இவை அனைத்தும்  காலத்தால் கூறும் ஒரே பதில் . எமது இறந்த காலத்துக்கான எயக்ச்டயினின் நேர பயணம் . பல விடயங்கள் மர்மமாகவே தொடர்கிறது .

 

http://ethamil.blogspot.ca/2010/05/blog-post_20.html

 • Like 1
Link to post
Share on other sites
தீக்கோழி தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளும் என்பது உண்மையா?

ஆபத்து வரும் போது தீக்கோழி மண லுக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ளும் என்று கூறுவது உண் மையல்ல. எந்த  தீக்கோழியும் அவ்வாறு தலையை மணலுக்குள் நுழைத்துக் கொண் டதை எவரும் பார்த்த தில்லை. அவ்வாறு செய் தால் அதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். ஆபத்து அச்சுறுத்தும்போது மற்ற விலங்குகளைப் போல தீக்கோழியும் ஓடிச் சென்றுவிடும்.

அவை,  தங்கள் கூடுகளில் (தரையில் உள்ள பள்ளங்கள்தான் அவற்றின் கூடுகள்) சில நேரங்களில் படுத்திருக்கும் என்பதிலிருந்து இந்த கட்டுக் கதை எழுந்திருக்கலாம். அப்படிப் படுத்திருக்கும்போது தங்கள் தலையை பள்ளத்துக்கு மேலே நீட்டிக்கொண்டு, ஏதேனும் ஆபத்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்கும். அதைக் கொல்லக்கூடிய விலங்கு ஏதேனும் அருகில் வந்தால், அது எழுந்து ஓடிப்போய்விடும். மணிக்கு 65 கி.மீ. (40 மைல்) வேகத்தில் அதனால் ஓடமுடியும்.

உலகிலேயே மிகவும் பெரிய பறவை தீக்கோழிதான். ஒரு ஆண் பறவை 2.7 மீட்டர் (9 அடி) உயரம் வரை வளரும். ஆனால் அதன் மூளையோ ஒரு வாதுமைப் பருப்பைப் போன்ற அளவில்தான், அதன் கண்களை விடக் சிறியதாக,  இருக்கும்.

தீக்கோழி ஒட்டகக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. பாலைவனங்களில் வாழ்வதாலும், அதன் கழுத்து ஒட்டகத்தின் கழுத்து போல் நீளமாக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். தீக்கோழி மணலில் தலையை நுழைத்துக் கொள்ளும் கதை முதன் முதலாக ரோம் நாட்டு வரலாற்றாசிரியரான பிளினியால்  தெரிவிக்கப்பட்டது. தீக்கோழி உற்றுப் பார்த்தே முட்டையைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடும் என்றும் அவர் நினைத்தார். கண்ட கண்ட பொருட்களையெல்லாம் விழுங்கிவிடக்கூடிய அதன் குணத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

கல், இரும்பு, செம்பு, செங்கல், கண்ணாடி என்று எதனை வேண்டுமானாலும் தீக்கோழி விழுங்கிவிடும். லண்டன் விலங்கியல் பூங்காவில் இருந்த ஒரு தீக்கோழி ஒரு மீட்டர் நீளமுள்ள கயிற்றையும், ஒரு படச்சுருளையும், ஒரு அலாரம் கடிகாரத்தையும், ஒரு பென்சிலையும், ஒரு சீப்பையும், மூன்று கையுறைகளையும், ஒரு கைக்குட்டையையும், தங்க நெக்லசின் துண்டுகளையும், ஒரு கைக்கடிகாரத்தையும், ரூபாய் நாணயங்கள் பலவற்றையும்  விழுங்கியதை மக்கள் கண்டுள்ளனர். நமீபியாவில் உள்ள தீக்கோழிகள் வைரங்களைக் கூட சாப்பிடும்.

 

http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=2190:2012-02-13-06-10-07&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60

Link to post
Share on other sites


_44059461_india_bose.jpg


1919 ஆம் ஆண்டு ஜாலியான்வாலாபாக்கில் ஒரு  மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ,துப்பாக்கி குண்டுகள் தீரும் வரைக்கும் சுடச் சொல்லி சுட்டுக் கொல்ல ஆணையிட்டான், ஜெனரல் டயர் ஆங்கிலே பரங்கித் தலையன்.350 பேருக்கும் மேல் செத்துப் போனார்கள்..!
இந்த படுகொலையை....
மனசு வெடிக்க...
உதடுகள் துடிக்க துடிக்க ... 
 தன் மகனுக்கு சொல்லிப் போனாள்,தாய்!

அந்த சிறுவன் அந்த மைதானம் போய் ,அந்த  ரத்தம் தோயிந்த மண்ணை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான் .

இளைஞானாக வளர்ந்து,இங்கிலாந்துக்கு கப்பல் ஏறினான்.
ஜெனரல்  டயர் முன்னால் தோன்றி கேட்டான். 
ஜாலியான்வாலாபக் நினைவிருக்கிறதா என்று 
"இந்தா,இந்திய பரிசு!" என்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்!

இங்கிலாந்து நீதி மன்றத்து ,நீதிபதி கேட்டான்.
"உன் கடைசி ஆசை என்ன?"
நான் இறந்த பிறகு என் உடலை இங்கிலாந்து மண்ணில் புதைக்க வேண்டும்!

வியப்படைந்து காரணம் கேட்டான் ,நீதிபதி.
"6 ஆயிரம் கிமீ பரவியுள்ள இந்தியாவை நீங்கள்  200 ஆண்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டீர்கள்!
இங்கே புதைக்கப்பட்டால் ,இங்கிலாந்தின் 6 அடி மண்ணையாவது ,நான் ஆக்கிரமிப்பேன்!"என்று சொன்னான்.
 
அந்த இளைஞனின் பெயர் தான் உத்தம்சிங்!

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மக்களுக்கு சேவையாற்றவே இருபதுக்கு ஆதரவளித்தேன்   மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது. இதனை எதிர்க் கட்சியில் இருந்து நிறைவேற்ற முடியாது. ஆகவே மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு இருபதுக்கு ஆதரவளித்தேன் என்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=135670
  • மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர்          by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளை காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது இந்தியாதான் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். http://athavannews.com/மருத்துவ-துறையில்-2030ஆம்-ஆண/
  • ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) – என்.சரவணன் Bharati    பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம். இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம். பண்டாரநாயக்கவின் சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு பதிலீடாக மறுபக்கம் தமிழ் – சைவ தேசியவாத போக்கை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்னெடுத்தார். சிங்கள மகா சபை, தமிழ் காங்கிரஸ் ஆகியன இரண்டுமே அப்போது துருவமயமாகிக்கொண்டு போன இரண்டு சமூகத்தினரின் இனத்துவ தேசியவாத அமைப்புகளாக உருவெடுத்தன. அப்போது இரு இனங்களின் மத்தியிலும் இலங்கைக்கான தேசியவாத உணர்வை மீறிய இனத்துவ தேசியவாத எழுச்சியுணர்வு கூர்மை பெறத் தொடங்கிய காலம் அது. இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு (1934) ஒரு தசாப்தத்தின் பின்னர் தான் தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது இனத்துவ தேசியவாதம் மேலும் பட்டைதீட்டப்பட்டிருந்தது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த இன்னொரு அடிப்படி வித்தியாசத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்கள மகாசபையானது கண்டியச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்று பிளவுபட்டிருந்த சிங்கள இனத்தை ஒன்றிணைத்து சிங்கள பௌத்தத்தனத்தோடு சேர்த்து இலங்கைக்கான தேசியம், காலனித்துவ எதிர்ப்பு, சுதேசிய கலை, கலாசார, விவசாய, மருத்துவ, பொருளாதாரக் காரணிகளை முன்னிறுத்தினார். ஆனால் ஜி.ஜி.யின் காங்கிரஸ் அத்தகைய சுதேசிய அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிராதது; அக்கட்சியை ஒரு இனவாரி கட்சியென நேரடியாக அடையாளம் காட்ட சுலபமாக இருந்தது. குறைந்தபட்சம் சிங்களத் தேசியத்துக்குப் பதிலீடாக தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பி வழிகாட்டும் ஒரு உறுதியான கொள்கையோ, திட்டமோ, நிகழ்ச்சிநிரலோ இருக்கவில்லை. 1931 டொனமூர் திட்டம் இலங்கையருக்கு போதிய திருப்தியை அளிக்காத ஒரு அரசியல் திட்டமாக இருந்தது. அத்திட்டத்தின் கீழ் 2வது தேர்தல் 1936 ஆம் ஆண்டு நடந்தது. இதே காலப்பகுதியில் இன்னொரு சீர்திருத்தத்தை ஆராய்வதற்கான ராஜரீக ஆணைக்குழுவொன்றை (Royal commission) பிரித்தானிய அரசு அமைத்தது. அதாவது 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதமே புதிய அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்குவதற்கான பரிந்துரையை அமைச்சர்கள் கையெழுத்திட்டு குடியேற்ற செயலாளருக்கு அனுப்பி விட்டனர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக பல கட்ட விவாதங்களையும், முயற்சிகளையும், மாற்றங்களையும் கண்டு “சோல்பரி யாப்பாக” அது வெளிவந்தது. ஜி.ஜி.யின் பிரவேசம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இந்த முயற்சிகளின் தொடக்கப் பகுதியில் தான் ஜி.ஜி.பொன்னம்பலத்தில் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது. அவர் 1934 ஆம் ஆண்டு பருத்தித்துறை இடைத்தேர்தலின் மூலம் அவர் தெரிவானார். ஆனால் அவர் அதற்கு முன்னரே 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னார் முல்லைத்தீவு தொகுதிகளில் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் அவரால் அவரின் சொந்தத் தொகுதியான பருத்தித்துறையில் போட்டியிட முடியவில்லை. ஏனென்றால் அங்கே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அத்தேர்தலை பகிஸ்கரித்து பிரச்சாரம் செய்திருந்தது. அரசாங்க சபை பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினர்; குறிப்பாக தமிழர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எடுத்துச் சொல்லியும் டொனமூர் திட்டம் அதை சரி செய்யவில்லை என்பதால் டொனமூர் திட்டத்தின் கீழான முதல் தேர்தலை அவ்வாறு பகிஷ்கரித்திருந்தது. இராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் இறப்புக்குப் பின்னர் அந்த இடைவெளியை ஒரு குறிப்பட்ட காலம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தான் நிரப்பியது. அதுவும் அது இடதுசாரி சிந்தனையுள்ள முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது. பின்னர் யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association) 08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு தமது குறையை பற்றி விரிவான நீண்ட கடிதத்தில் பல விளக்கங்களைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த தரவுகளையும் இங்கே குறிப்படலாம். மொத்த சனத்தொகை 5,400,000 சிங்களவர் – 3,016,154 இலங்கைத் தமிழர் – 600,000 இந்தியத் தமிழர் – 700,000 இதன்படி மொத்த சனத்தொகையில் 54% வீதத்தினர் மாத்திரமே சிங்களவர்கள் இருந்தனர். ஆனால் டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபையில் கீழ்வரும்வகையில் பிரதிநிதித்துவம் அமைந்தது. இதன் பிரகாரம் 71% வீதம் சிங்களவர்களும், 15% மட்டுமே தமிழர் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது. சனத்தொகையில் ஏறத்தாள 50% சதவீதத்தினர் சிங்களவராகவும், தமிழர்கள் 25% வீதமாகவும், ஏனைய சிறுபான்மையினர் 25% சத வீதத்தினராகவும் இருந்தும் பிரதிநிதித்துவம் அவ்வாரான விகிதாசாரத்துடன் சமத்துவமாக இல்லை என்பதை யாழ்ப்பாண சங்கம் சுட்டிக்காட்டியது. இந்த விகிதாசாரக் கணக்கில் சற்று பிழை இருந்தபோதும் அவர்களின் தர்க்கம் நியாயமானதாகவே இருந்தது. தமிழர் பிரதிநிதித்துவம் பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் அதை சரி செய்வதற்கான கோரிக்கை வலுவாக இருந்த காலத்தில் தான் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசித்திருந்தார். 1936 பொதுத் தேர்தலிலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தனது தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1936ஆம் ஆண்டு தேர்தலில் அரசாங்கசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளில் 38 பேர் சிங்களவர். 7 இலங்கைத் தமிழரும், 2 இந்தியத் தமிழரும், 2 ஐரோப்பியரும், 1 முஸ்லிமும் தான் தெரிவானார்கள். அரசாங்க சபையில் தமிழரின் பிரதிநிதித்துவம் ஐந்தில் ஒன்றாக குறைந்திருந்தது. சிங்களப் பிரதிநிதிகள் அந்த எண்ணிக்கையைக் கொண்டு 10 பேரைக் கொண்ட தனிச்சிங்கள மந்திரி சபையை அமைத்துக்கொண்டார்கள். ஒரு தமிழர், முஸ்லிம் இனத்தவருக்கும் கூட அமைச்சரவையில் இடம்கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு மிகப் பெரும் பாரபட்சத்தை செய்கிறார்கள் என்பதை மேலும் உறுதிபட தெளிவுறுத்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இது அமைந்தது. 1924 சீர்திருத்தத்தின் போது கூட 23 பிரதிநிதிகளில் 16 சிங்களவர்களும், 7 தமிழர்களும் காணப்பட்டனர். ஆக டொனமூர் திட்டம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்துவிட்டது தமிழர் அரசியல் பரப்பில் ஒரு முக்கிய பேசுபோருளாக இருந்தது. இதன் எதிரொலிப்புகள் அடுத்த சீர்திருத்தத்துக்கான விவாதங்களில் முக்கிய இடத்தை வகித்தது. 50:50 ஐ ஆதரித்த சிறுபான்மையினர் பிரித்தானிய அரசுக்கு காட்டுவதற்காக ஒரு கண்துடைப்பாக டபிள்யு.துரைச்சாமியை அரசாங்க சபையின் சபாநாயகராக ஆக்கினர். அதற்கு வெளியில் அவருக்கு எந்த பலமும் கிடையாது. அதுபோல ஜி,ஜி,பொன்னம்பலம், ஆர்.ஸ்ரீ.பத்மநாதன், மகாதேவா போன்றோரை அமைச்சரவையின் துணைக்குழுவில் துணை அமைச்சர்களாக பதவி வழங்கி ஆசுவாசப்படுத்தினர். எனவே இந்த தமிழ் தலைவர்களும் பிரித்தானிய அரசிடம் இத்தகைய குறைகளை முன்வைக்கத் தவறினர். சிங்களவர்களுக்கு சமமாக தமிழரின் பிரதிநிதித்துவத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கோரினார் என்கிற ஒரு புனைவு இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழர், முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதை நாம் அறிவோம். ஆனால் அன்றைய அந்த விவாதத்தையும் அதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறுபட்ட அன்றைய உரையாடல்களையும் நாம் கவனித்தால் அது அப்படியல்ல என்பதை அறிய முடியும். இதன் விளைவாகத் தான் 50:50 சூத்திரத்தை ஜி.ஜி.முன்வைத்தார். மேற்படி வாலிபர் காங்கிரஸ் முன்வைத்த கருத்தின் விரிவாக்கம் தான் பிற்காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்கிற சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையாக அமைந்தது. அரசாங்க சபையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு 50 சதவீத ஆசனங்களும், ஏனைய தமிழ், முஸ்லீம், இந்திய, பறங்கி, ஐரோப்பிய சிறுபான்மை இனக்குழுக்களுக்கு 50 சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சிங்கள ஆதிக்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்வதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் சிங்களவரல்லாத ஏனைய சமூகங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தத்தைக் கெர்டுக்கக்கூடிய வகையில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடிய ஒரு முறைமையாகவே அக்கோரிக்கையை அவர் முவைத்தார். இந்தக் கோரிக்கையை ஒரு இனவாத கோரிக்கையாக இன்று பலர் வியாக்கியானம் செய்தாலும் அன்று ஏனைய சிறுபான்மை இனத் தலைவர்களோடும் உரையாடி அவர்களையும் ஒன்றிணைத்து தான் அக்கோரிக்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்தார். 08.06.1935 அன்று லண்டனில் உள்ள குடியேற்ற செயலாளருக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி இருபது சிறுபான்மைப் பிரதிநிதிகளின் கையெழுத்துகளுடன் ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. அந்த மகஜரில் வடபகுதித் தமிழர்கள் சார்பில் மகாதேவா, நடேசன் ஆகியோர் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதியாக எம்.என். சுப்பிரமணியமும், தலவாக்கொல்லை பிரதிநிதியாக எஸ்.பி. வைத்திலிங்கமும் முஸ்லீம்கள் சார்பில் டி.பி.ஜயாவும், மாநகரசபை உறுப்பினர் அப்துல் காதரும் இந்தியர்கள் சார்பில் ஐ.எக்ஸ்.பெரேராவும் இந்தியத் தமிழர் சார்பில் ஜி.ஆர்.மேத்தாவும், முஸ்லீம் லீக் சார்பில் எம்.சி.எல். கலீலும் கையெழுத்திட்டார்கள். சிறுபான்மை இனங்களின் அந்த ஐக்கியம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டாலும் அது நாளடைவில் பலவீனமடைய ஆரம்பித்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் அக் கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1939 மார்ச் 9ஆம் திகதியன்று அரசாங்க சபையில் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூவ் கல்டேகொட் (Sir Andrew Caldecott) முன்வைத்த அரசியல் சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் பல நாட்கள் நடந்தன. இறுதியில் மே மாதம் 9 ஆம் திகதி அந்த முன்மொழிவுகளின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி கண்டது. அந்த யோசனைகளை தமிழர்களும் ஆதரிக்கவில்லை. சிங்களவர்களும் ஆதரிக்கவில்லை. இறுதியில் ஆதரவாக 9 பேரும், எதிராக 30 பெரும் வாக்களித்திருந்தனர். 21 மேலதிக வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது. ஜி.ஜி.யின் சாதனை உரை இந்த விவாதங்களின் போது ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 மார்ச் மாதம் இரண்டு நாட்களாக 9 மணித்தியாலத்துக்கும் மேல் உரையாற்றினார். இந்த உரை பிற்காலத்தில் நூலாகவும் (The Marathon Crusade for ‘FIFTY, FIFTY’ – Balanced representation – in the State Council – 1939) வெளிவந்ததது. அந்தளவு நீண்ட உரையை அதற்கு முன்னர் இலங்கையின் சரித்திரத்தில் வேறெவரும் ஆற்றியதில்லை என்பதால் அந்த உரை சாதனையாக பதியப்பட்டது. அதற்கு முந்திய சாதனையாகக் கருதப்பட்டது சேர் பொன் இராமநாதனின் உரை. 1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஆங்கிலேய அரசு நடத்திய கொடுங்கோன்மையை எதிர்த்து அவர் 8 மணித்தியால உரையை ஆற்றியிருந்தார். பண்டாரநாயக்க இந்த உரையை எதிர்த்து உரையாற்றியவர்களில் முக்கியமானவர் பண்டாரநாயக்க. அவரும் நீண்ட உரையை ஆற்றினார். 21.03,1939 அன்று அவர் ஆற்றிய அந்த உரை இப்போதும் அவருக்காக உருவாக்கப்பட்ட அவரின் நூதனசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.swrdbandaranaike.lk/ இல் உள்ளது. ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய அந்த உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாற்பது பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ஒரு முக்கியமான உரை. பல இடங்களில் நக்கல் நையாண்டி செய்து தான் அவ்வுரையை நகர்த்துகிறார். அதில் இப்படி குறிப்பிடுகிறார். “கௌரவ பருத்தித்துறை பிரதிநிதி ஒரு முக்கிய வழக்கொன்றில் வாதிடும் ஒரு வழக்கறிஞரின் உரையைப் போலவே இருந்தது. தன் தொண்டை நோக அவர் கதைத்தார். கௌரவ உறுப்பினர் பல தடவைகள் குளிர் தண்ணீர் கலன்கள் பாவிக்க நேரிட்டதால் லபுகம நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருக்கும்… இந்த நாட்டில் மிகவும் கௌரவம்மிக்க தலைவராக இருந்த சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் இருந்திருந்தால் அவர் இந்த உரையையிட்டு அதிருப்தியடைந்திருப்பார்… சேர் பொன் இராமநாதன் அவர்களும் இந்த சபையில் நீண்ட உரையை ஆற்றி சாதனை படைத்தவர். அந்த சாதனையை கௌரவ பருத்தித்துறை உறுப்பினர் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் அவரின் சிறந்த சாதனையை இவரால் தகர்க்க முடியவில்லை என்றே நான் நம்புகிறேன். சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் 9 மணித்தியாலங்கள் உரையாற்றினார். ஆனால் அப்போது அவர் சிங்களவர்களுக்காக அந்த உரையை ஆற்றினார். சிங்களவர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநியாயங்களையும், பாரபட்சங்களையும் எதிர்த்து ஆற்றிய உரை அது. வயோதிப நிலையில் பலவீனமாக இருந்தபோதும் சற்று கூட இடை நிறுத்தாமல் ஒரே நாளில் அவர் ஒன்பது மணித்தியாலம் உரையாற்றினார். ஆனால் அவரைவிட வயதில் இளமையான, பலமான பருத்தித்துறை உறுப்பினர் தனது உரையை தொடர்வதற்கு சபையை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டும், களனி கங்கையின் அசுத்த நீரை குடித்துக்கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டு உரையாற்றினார். இதெல்லாம் எதற்கு? சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் பாதுகாக்கப்பட்ட மக்களைத் தாக்குவதற்கும், இராமநாதன் அவர்கள் தனது ஆதரவாளர்களுக்கு எது நேரக்கூடாது என்று எண்ணினாரோ அதற்கு எதிரானதை புரிவதற்குத் தானே எனது நண்பர் இந்தளவு முயற்சிக்கிறார். சேர் பொன் இராமநாதன் அவர்களின் ஆத்மா இந்த சபையில் உலவிக்கொண்டிருந்தால் அவரின் ஆதரவாளர்கள் வேதனைக்குரலைக் கேட்டு மீண்டும் பிரம்மலோகத்துக்கே திரும்பியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை…. அவர் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் கூட மிகவும் நெருக்கமாக பழகும் முக்கிய நண்பர்களில் பருத்தித்துறை உறுப்பினர் அவர்களின் இனத்தைச சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லக் கடமைபட்டுள்ளேன். அதுமட்டுமில்லை தலைவர் அவர்களே… தற்போது அவரின் மனைவியாக ஆகியிருக்கும் அழகிய பெண்ணை அவருக்கு முன்னரே நான் அறிவேன். இதை அவரும் அறிவார். அப்பெண்ணின் சகோதரரும் நானும் பள்ளியில் நெருங்கிய தோழர்கள். யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவர்களுடன் இரு நாட்கள் தங்கியிருக்கிறேன். முஸ்லிம், பரங்கி இனத்தவர்களும் கூட எனக்கு நண்பர்களாக உள்ளனர். இந்த சபையில் நுழைந்ததன் பின்னர் தான்; இப்படியான சண்டைகளுக்குள் நுழைய வேண்டியேற்படுகிறது… சிங்களவர்களுக்கு 20 இடங்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு 17 இடங்களும், முஸ்லிம்களுக்கு 1 இடமும், ஏனைய இனத்தவருக்கு 1 என்று வைத்துக்கொள்வோம். இது அவரின் நோக்கத்துக்கு இணையானது. சிங்களவர்களுக்கு 20உம், தமிழர்களுக்கு 17, முஸ்லிம்கள் மற்றும் பிற தேசங்களுக்கு 3 இடங்கள் எனும்போது சிங்களவர்களின் எண்ணிக்கை மற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காது. மேலோட்டமாக பார்த்தால் சரியென்று இது தோன்றினாலும் சிங்களவர்களுக்கான எண்ணிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்….” என்று இந்த உரை நீளுகிறது. அதுபோல ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50:50 சூத்திரத்தை எதிர்த்து கடுமையான தர்க்கங்களை அவர் வைக்கிறார். மேலும் சிங்கள மகா சபை பற்றி சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டு போகிறார். 1942 இல் அரசாங்க சபைத் தலைவராக டீ.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் சிறுபான்மையினரிடத்தில் ஏற்பட்ட ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் வகையில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அவர் அருணாசலம் மகாதேவாவை உள்நாட்டு அமைச்சராக நியமித்தார். அதன் பிறகு மகாதேவா ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறி அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பிரதிநிதியான சேர் ராசிக் பரீத் சிங்களவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறி ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறினர். அத்துடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியான பெரி. சுந்தரம் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்த டீ.பி. ஜயா ஆகியோரும் வழங்கிய ஆதரவும் பலவீனப்பட ஆரம்பித்தது. டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் பிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்கு முன்னர் இருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அதற்கான நியாயங்களை ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் விவாதித்து முடிவெடுத்திருந்த பிரிட்டிஷார் மீண்டும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜி.ஜி.யின் கோரிக்கையை எடுத்த எடுப்பில் நிராகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்று அரசியல் என்ன என்பது தொடர்பிலும் ஜி.ஜி.க்கு எந்தவித உறுதியான திட்டமும் இருக்கவில்லை. முஸ்லீம் தரப்பு, மலையக இந்திய தரப்பு மகாதேவா குழுவினர் ஆகியோரின் ஆதரவு விலக்கப்பட்ட பின்பும் கூட ஜி.ஜி. பொன்னம்பலம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவில்லை. ஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைத்த போது சிங்கள மகாசபை அதற்குப் பதிலாக அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம்; மகாதேவாவின் அறுபது நாற்பது கோரிக்கையை நிராகரித்தது போன்று சிங்கள மகாசபையின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டார். சோல்பரி அணைக்குழு விசாரணை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்; அதாவது 1944 ஓகஸ்ட் மாதம் தான் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 1944 டிசம்பர் – 1945 ஏப்ரல் வரை நடந்த சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணையின் போது ஜி.ஜி. பொன்னம்பலம் 50:50 சமபல கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதேவேளையில் மகாதேவா அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தார். சிங்கள மகாசபை சாட்சியம் வழங்கவில்லை. சோல்பரி ஆணைக்குழு ஜி.ஜி.யின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. 08.11.1945 இல் சோல்பேரியின் அறிக்கை அரசாங்க சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் போதுமானதாக இருந்தபோதும் 90 வீதமான வாக்குகளுடன் அது நிறைவேறியது. ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது, அறுபதிற்கு நாற்பது பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த தமிழ் தரப்பினர் குத்துக்கரணம் அடித்து சோல்பரி திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். ஜி.ஜி. அப்போது இலங்கையில் இருக்கவில்லை. அவர் அப்போது தன் ஆட்சேபனையை வெளியிடவும், சோல்பேரி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்படிக் கோரவும் லண்டன் புறப்பட்டிருந்தார். அவர் இலங்கை திரும்பியிருந்தபோது அவரோடு இருந்த அனைவராலும் 50:50 கோரிக்கை சாகடிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் சோல்பரிப் பிரபு தன்னால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாரபட்சம் குறித்து விரிவான கடிதமொன்றை சுந்தரலிங்கத்துக்கு எழுதியிருந்ததையும் இங்கு நினைவுக்கு கொணர முடியும். இத்தகைய பின்னணியின் நீட்சி தான் 1939 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரம் வரை இட்டுச் சென்றது. அடுத்த வாரமும்.. https://thinakkural.lk/article/83345
  • மூன்றாம் பக்கத்திலேயே அந்தப் படம் போட்டாயிற்று...... நீங்கள் காஜலிசத்தை  சரியாகப் படிக்காமல், பார்க்காமல் கருத்து வைக்கின்கிறீர்கள்....இது மருதரிடம் நீங்கள் பொறாமை கொள்வதைப் பறை சாற்றுகின்றது.....!   😁  
  • தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?   Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:25   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான்.  இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர்,  ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான்.  இன்று, அந்தப் புரட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.  இப்போது ‘எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன’ என்ற பழைய பல்லவியை, திரும்பத் திரும்பக் கேட்கிறோம். ஆனாலும், இன்றும் இலங்கையின் வடபுலத்தில் புரையோடிப் போயுள்ள ஒரு சமூகப் பிரச்சினை சாதியம் சார்ந்தது. நுழையமுடியாத கோவில்கள், பிடிக்க முடியாத வடங்கள், பாட அனுமதியில்லாத தேவாரங்கள் எனக் கடந்த சில ஆண்டுகளில், எத்தனையோ உதாரணங்களைக் கண்டிருக்கிறோம். இனியாவது, பேசாப் பொருளைப் பேசத் துணிவோம்.  அண்மையில், இதே ஒக்டோபர் மாதத்தில், கிளிநொச்சியின் பெரிய பரந்தனில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில், பாடசாலை மாணவனுக்கு, அவனது சாதிய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது தனித்த நிகழ்வல்ல.  தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், முன்புபோல இன்றும் தமிழ்ச்சமூகத்தில் தகர்க்கப்படாத அம்சமாக இருப்பது சாதியமே. தமிழ் மக்கள், சொல்லொணாத் துயரங்களைக் கடந்த 40 ஆண்டுகளில் அனுபவித்துள்ளார்கள். உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை என எல்லாவற்றிலும், அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகள் தலைமைப் பாத்திரமேற்ற போராட்டத்திலும், சாதியம் தகர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.  இலங்கைச் சமூக அமைப்பின் அசைவியக்கத்தில், சாதியம் ஒரு கூறாக நிலைத்து, நீடித்து வந்துள்ளது. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களிடையே சாதியமும் அதன் உடன்பிறப்பான தீண்டாமையும், தீவிரமான சாதிய முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் இருந்து வந்துள்ளன.  இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமொன்று, இதே வடபுலத்தில் வெற்றியடைந்த கதையை, அடுத்த தலைமுறைக்குச் சொல்லியாக வேண்டும். 1966ஆம் ஆண்டு ஒக்டோபரில், வடபுலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன.  1966-71 வரையான காலப்பகுதியில், நடத்தப்பட்ட கடுமையான போராட்டங்களால், இலங்கையின் வடபுலத்தில் பொது இடங்களில், தீண்டாமை ஒழிக்கப்பட்டதுடன் சாதியத்தின் தீவிரமும் பலமான எதிர்வினைகளின் மூலம் பலமிழக்கச் செய்யப்பட்டது. ஈழத்தமிழர் வரலாற்றின் சில முக்கியமான பக்கங்களை, இப்போராட்டங்களும் அதுசார்ந்த அரசியல் நிலைப்பாடுகளும் நிரப்பியுள்ளன. ஆனால், இன்றும் ‘அடக்கி வாசிக்கப்படுகின்றது’, ‘இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது’ என்றவாறாகவே, இந்த வரலாறு இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையின் பெயரால், இந்த மறைப்புகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், இவை கட்டாயம் பேசப்பட வேண்டியவை.  மனிதனை மனிதன், சாதியத்தின் பேரால் ஒடுக்குகின்றதும், புறந்தள்ளுகின்றதுமான ஒரு சமூகம், அரசியல் விடுதலைக்கு இலாயக்கற்றது. சமூக விடுதலையை பெறாத, சமூகநீதியை வலியுறுத்தாத ஒரு சமூகம், அரசியல் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. அகஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவராமல், புறஒடுக்குமுறைகளின் பேரால், ஈழத்தமிழ்ச் சமூகம் அகஒடுக்குமுறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ச்சியாகப் பணயிக்க முடியாது.   செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குழுவினருக்கான அடையாளத்தை மட்டுமின்றி, அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு விடயங்களை, அவர்கள் மறுதலிக்க முடியாதவாறு தீர்மானிக்கின்ற சமூகக் கட்டமைப்பாகச் சாதியம் தோற்றம் பெற்றது. இது, கீழைத்தேய குழு வாழ்க்கை முறையின் பாதகங்களின் ஒன்றாகும்.  இச்சமூகக் கட்டமைப்பு, தேசிய அரசுகளின் தோற்றத்துடன், எவ்வாறு அரச அதிகாரக் கட்டமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதைப் பார்த்தால், தேசிய அதிகாரத்தின் உருவாக்கமும் நிலைப்பும் சாதியக் கட்டமைப்புகளுக்கூடாக இயங்குவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏனெனில், இந்தப்பிரிவுகள் சமூகங்களில் நிலைப்பதை, ஏகாதிபத்திய உலகமயமாதல் விரும்புகிறது. தமிழ் மக்களின் அரசியலும் போராட்டமும் வாழ்க்கையும் பண்பாட்டுக் கூறுகளும், சாதியத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டவையாகவும் அதனடிப்படையில் வழிநடத்தப்படுபவையாகவே இன்றும் இருக்கின்றன. இதன் பின்புலத்தில், 1960களில் நடந்த சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தல் தகும்.  அஹிம்சை வழியில் போராட்டம், சத்தியாக்கிரகம் எனத் தமிழ்த் தேசிய அரசியல், பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் பரந்துபட்ட எழுச்சியுடன், வடபுலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கப்படக் கூடாத பக்கங்களை உடையன.  சுமார், ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போராட்டங்கள், சாதியத் தீண்டாமையை உடைத்தெறிந்தன. தேநீர்க் கடைகள், கோவில்கள், பாடாசாலைகள், பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டன. சட்டரீதியாகவும் சட்டமறுப்பாகவும் ஆயுதங்களைக் கையாண்ட அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில், 15 பேர் தமது இன்னுயிர்களை இழந்து, தியாகிகள் ஆகினர். 46 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான போராட்டங்களும், பெறுமதிமிக்க அனுபவங்களையும் பட்டறிவுகளையும் தந்துள்ளன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம், பின்னடைவைச் சந்தித்திருக்கும் இன்றைய சூழலில், அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் அனுபவங்கள், மிகக் கனதியும் பெறுமதியும் மிக்கவையாகும். சாதிய மறுப்பே, இன்றும் யாழ். உயர்சாதியினரின் ஆயுதமாக இருக்கிறது. அவர்கள் இன்றும், பழைமைவாதத்தையும் சாதியத்தையும் கொண்டிருப்பவர்களைத் தூக்கி நிறுத்திப் புகழ் பாடுகிறார்கள். அதேவேளை, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை நிராகரிப்பதுடன், இருட்டடிப்பும் செய்கிறார்கள். உதாரணமாக, பொன்னம்பலம் இராமநாதனைப் போற்றிப் புகழுவோர், அவரது தம்பியான அருணாசலத்தைக் கவனிப்பதில்லை. காரணம், தனது சூழலையும் மீறிய வகையிலான சமூகச் சார்புக் கருத்துகளை, அருணாசலம் முன்வைத்தமையே ஆகும்.  அவ்வாறே, எஸ்.ஜே.வி செல்வநாயகம் சாதியத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்று கூறும் தமிழ்த் தேசியவாதிகள், அவரது காலத்தில், கண்ணெதிரே இடம்பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி வாயே திறப்பதில்லை. சாதியம், இழிவாகவும் ஒடுக்கு முறையாகவும் இருப்பதையிட்டுத் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதை அம்பலப்படுத்துவதும் எதிர்த்துப் போராடுவதும் தான், அவர்களுக்குப் பிரச்சினையாகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், இச்சாதியம் இப்போதும் பேணப்படுவதைக் காணலாம். இவை, வளமான ஒரு சமூகத்தின் நற்கூறுகளல்ல.  சாதியத்தின் தாக்கம் என்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிரச்சினைகள் தான். ஆனால், அதற்கு எதிரான போராட்டங்களும் தீர்வுகளும் அவர்களுக்குரிய பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலல்ல. சாதியம் என்பது, இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள விசேட சமூகக் கட்டுமானமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும், இலங்கையின் சாதியக் கட்டமைப்பு, இந்தியக் கட்டமைப்பிலும் வேறுபட்டதாகும். இலங்கையிலும் வடக்கு, சாதியக்கட்டமைப்பு கிழக்கிலிருந்து வேறுபடுவதுடன் சிங்கள, மலையகத் தமிழ் மக்களிடமும் முஸ்லிம்களிடமும் வித்தியாசமான சாதியம் இருப்பதை அவதானிக்க முடியும். ஆனால், ஒடுக்கப்படும் சாதிகளும் ஒடுக்கும் சாதிகளின் ஆதிக்கமும் அரசியலிலும் பொருளாதார சமூகப் பண்பாட்டு அம்சங்களிலும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான அம்சமாகும். தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் என்ற பொதுவான கோஷத்துக்குள், சாதியம் முற்றாக தகர்க்கப்படாது மறைக்கப்படுகிறது; மறைந்து கொண்டுள்ளது. பொதுவாக, தேசிய அரசுக்கான  அல்லது சுயாட்சிக்கான போராட்டம் என்பதால் மட்டும், அதற்குச் சாதியத்தைத் தகர்க்கும் வலிமை வந்து விடுவதில்லை. ஏனெனில், தேசிய அரச அதிகாரம் கொலனித்துவ, ஏகாதிபத்திய அதிகாரம் ஏகாதிபத்திய உலகமயமாதலின் ஆதிக்கம் ஆகியன வேறுவேறு விதங்களில், சாதிய சமூகக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றன.  சமூக மாற்றத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டங்களே, உண்மையான சாதியத் தகர்ப்பைக் கொண்டிருக்க முடியும். அதற்கான கொள்கை நடைமுறைகளே, வெறும் சுலோகங்களையும் வார்த்தைகளையும் விட, அர்த்தம் நிறைந்ததாகும். போராட்டங்களின் பொதுவான போக்கும் எதிர்பார்ப்பும் ஆயுத நடவடிக்கைகளும் சாதியமைப்பை வலுக்குறைந்துள்ளதாகத் தோன்றினாலும், அது உண்மையல்ல என்பதை, இன்று நடைமுறையில் காண்கிறோம். போர் ஓய்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. கடந்த பத்தாண்டுகளில், சாதியம் மீண்டும் முனைப்புப் பெற்றுள்ளது. அதனிலும் மேலாக, இப்போது அது வெளிவெளியாகத் தென்படுகிறது. நாங்கள் மீண்டும் பழைய காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். வடபுலத்தில் இன்னொரு தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன இயக்கத்துக்கான தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்றும் பேசாப் பொருளாய், பேச விரும்பாத ஒரு பொருளாய் சாதியம் தமிழ்ச்சமூகத்தில் இருக்கிறது. எமது மனங்களில் ஆழப்பதிய வைக்கப்பட்ட எண்ணங்களில் இருந்து, நாம் வெளிவரல் வேண்டும். சமூகநீதி குறித்துப் பேசாமல், செயலாற்றாமல் தமிழ் மக்களின் விடுதலை என்று பேசுவது பயனற்றது.  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்ச்-சமூகத்தில்-சாதியம்-பேசாப்-பொருளை-பேச-நாம்-துணிவோமா/91-257440
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.