-
Tell a friend
-
Topics
-
1
By விவசாயி விக்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, திருமாவளவன் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் பிரத்யேகப் பேட்டியில், வரவிருக்கும் இந்தத் தேர்தலின் மையப் பிரச்சனை என்ன, இந்து வாக்கு வங்கி இருக்கிறதா, தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது, பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் வி.சி.கவின் நிலைப்பாடு என்ன என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார் திருமாவளவன். அவரது பேட்டியின் முதல் பகுதி இது: கே. வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக, மையப் பிரச்சனையாக எது இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்? ப. எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் இந்தியாவும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். சனாதன சக்திகள் மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும். அ,தி.மு.கவைப் பொறுத்தவரை, பா.ஜ.கவிடம் சிக்கி அவர்களது விருப்பப்படி செயல்படும் ஒரு பொம்மலாட்ட அரசாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தலித் ஊராட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை நுகர முடியவில்லை. இந்த மாநில அரசையும் மோடி தலைமையிலான சனாதன அரசையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான் எங்களது முதன்மையான செயல்திட்டமாக இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை நிறுவதற்கான முயற்சியை இந்தக் கூட்டணி மேற்கொள்ளும். கே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்களும் இடம்பெற்றிருந்த தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. அதே கூட்டணி அப்படியே மீண்டும் தொடருமென நினைக்கிறீர்களா? ப. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கூட்டணிக்குள் உரசலோ, கருத்து மாறுபாடோ இல்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அண்மையில்கூட எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மக்கள் பிரச்சனைகளுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நல்லிணக்கம் இந்தக் கூட்டணிக் கட்சிகளிடம் நிலவுகிறது. பா.ஜ.க. இங்கே காலூன்ற அ.தி.மு.கவைப் பயன்படுத்தி வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. எனவே அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவதும் இந்தக் கூட்டணியின் முக்கியமான செயல்திட்டமாக இருப்பதால், கூட்டணிக் கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படும் என்று நினைக்கிறேன். கே. 2019ல் இருந்த வாக்காளர் மனநிலைக்கும் இப்போதுள்ள வாக்காளர் மனநிலைக்கும் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குமென நினைக்கிறீர்கள்? இந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்தில் கடுமையாகப் பணியாற்றியிருக்கிறது... பட மூலாதாரம், PIB IN TAMILNADU TWITTER PAGE படக்குறிப்பு, (கோப்புப்படம்) ப. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர்களின் மனநிலை மாறும். ஒவ்வொரு முறையும் புதிய வாக்காளர்கள் வருகிறார்கள். அவர்கள் மாற்றம் வேண்டுமென நினைப்பார்கள். ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் இருக்கத்தான் செய்யும். பாரதிய ஜனதா இங்கே மக்கள் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. அம்மாதிரி பிரச்சனைகளுக்காக எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக, பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக, பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்ததில்லை. எல்லா இடங்களிலும் செய்வதைப் போல இங்கேயும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான அரசியலைத்தான் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் இங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்பினால் ஏமாந்து போவார்கள். தமிழ்நாடு பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, பக்குவப்பட்ட மண். ஆகவே. பா.ஜ.கவின் மத அரசியல் இங்கே எடுபடாது. கே. பா.ஜ.கவின் தீவிர செயல்பாடுகளால் இந்து வாக்கு வங்கி என்ற ஒன்று உருவாகியிருப்பதாக நம்பப்படுகிறது. நீங்கள் அதை ஏற்கிறீர்களா? ப. அது ஒரு மூடநம்பிக்கை. தமிழ்நாட்டில் அப்படி மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்க நினைக்கிறார்கள். நீண்ட காலமாக அதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் மதத்தின் பெயரால் பிளவுபட்டதில்லை. தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார்கள். தனியே நின்றார்கள். ஏதேதோ செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால், இந்த முறை மட்டும் தாங்கள் சாதித்துவிடுவோம் என அவர்கள் நம்புவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. கலைஞர் இல்லை; ஜெயலலிதாவும் இல்லை. இந்த இரண்டு தலைவர்கள் இல்லாததால் மக்களைக் கவர்ந்துவிட முடியும்; வாக்குகளை தம் பக்கம் இழுத்துவிட முடியுமென நினைக்கிறார்கள். நிச்சயம் அப்படி நடக்காது. எம்.ஜி.ஆர். இறந்த பிறகும், ஜெயலலிதா இறந்த பிறகும் அ.தி.மு.க. இருக்காது எனக் கருதினார்கள். ஆனால், அ.தி.மு.க. இங்கே இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதேபோல, அண்ணாவுக்குப் பிறகு, கலைஞருக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என கணக்குப்போடுகிறார்கள். அப்படி அல்ல. இரண்டு கட்சிகளுக்குமே கீழ் மட்ட அளவில் மக்கள் அமைப்பாக திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாக்குவங்கி இருக்கிறது. இரண்டு தலைவர்களும் இல்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை, மதம் சார்ந்த வாக்கு வங்கியை உருவாக்கிவிட முடியுமென நம்புகிறார்கள். அது தப்புக்கணக்காகத்தான் முடியும். கே. சமீபகாலமாக இந்துக்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கட்சிகள் மிகுந்த கவனமாக இருப்பதால்தான் இந்தக் கேள்வி... ப. யாருக்குமே அந்த நோக்கம் கிடையாது. கட்சி நடத்துகிறவர்களுக்கு, பொதுவான நலனை முன்னிறுத்துபவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளைக் காயப்படுத்துவது என்பது எப்படி ஒரு செயல்திட்டமாக இருக்க முடியும்? தி.மு.கவுக்கோ, விடுதலைச் சிறுத்தைகளுக்கோ, இடதுசாரிகளுக்கோ எப்படி இது செயல் திட்டமாக இருக்க முடியும்? பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு, தி.மு.கவும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான கட்சிகள் என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, (கோப்புப்படம்) நாங்கள் தத்துவார்த்த அடிப்படையில் சில விமர்சனங்களை வைக்கிறோம். சங்க பரிவார அமைப்புகளையும் பாரதிய ஜனதா கட்சியையும் அம்பலப்படுத்துகிற வகையிலே அதனை முன்வைக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசுவதையெல்லாம் மொத்தமாக இந்துக்களைப் பார்த்துப் பேசுவதைப் போல திசை திருப்பப் பார்க்கிறார்கள். தி.மு.கவில் 80-90 சதவீதம் இந்துக்கள்தான். அ.தி.மு.கவிலும் அப்படித்தான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் அப்படித்தான். யதார்த்தத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த சமூகத்தில், ஒவ்வொரு கட்சியிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்க முடியும். என்னுடைய கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களே இந்துக்களாக இருக்கும்போது, இந்துக்களைப் புண்படுத்துவதை எப்படி திட்டமிட்டு செயல்படுத்த முடியும்? பா.ஜ.கவை நாம் அம்பலப்படுத்துகிறோம். அவர்களை காயப்படுத்துகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக அதை திசைதிருப்பிவிட்டு அரசியல் ஆதாயம் பெறப்பார்க்கிறார்கள். கே. சனாதன தர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். தேர்தல் நெருக்கத்தில் எங்கள் கட்சியில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என நீங்களும் சொல்கிறீர்கள், பெரிய கட்சியான தி.மு.கவும் சொல்கிறது... ப. சனாதன எதிர்ப்பு என்பது எப்படி இந்துக்களை எதிர்ப்பதாகும்? சனாதனம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டம். ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.கவும் மதத்தை மட்டும்தான் கையில் எடுக்கிறார்கள். பிறப்பின் அடிப்படையிலான உயர்வு - தாழ்வை நியாயப்படுத்தக்கூடிய சமூகக் கட்டமைப்பாக சனாதனம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும். பெண்களுக்கு கல்வி, அதிகாரம் போன்ற உரிமைகள் தேவை; இதற்குத் தடையாக இருக்கக்கூடியது சனாதனம் என்கிறோம். இது எப்படி இந்துக்களுக்கு எதிராக இருக்க முடியும்? உண்மையில் இந்துக்களுக்கு எதிராக இருப்பது பா.ஜ.கதான். நீட் தேர்வால் யார் பாதிக்கப்படுவது, வேளாண்மை சட்டங்களால் யார் பாதிக்கப்படுவது... பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் யார் பாதிக்கப்பட்டது... இவற்றில் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டது இந்துக்கள்தான். அப்பாவி சமூகமாக இருக்கக்கூடிய இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டிவிடுகிறது; வன்முறையை ஏற்படுத்துகிறது. இதில் பாதிப்பை எதிர்கொள்வது இந்துக்கள்தான். ஆகவே, இந்துக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான். கே. இந்து, மதம் குறித்த கேள்விகளுக்கு இந்தத் தேர்தலில் உங்களைப் போன்ற கட்சிகள் பதில் சொல்ல வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்கிறீர்களா... ப. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி, தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் இந்துக்களுக்கு எதிரி என்ற பிரசாரத்தை பா.ஜ.க. திரும்பத் திரும்ப செய்கிறது. இதனை இந்து மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் வேறு எந்தப் பிரச்சனையையாவது பேசியிருக்கிறார்களா? மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? எதற்கெடுத்தாலும் இந்துக் கடவுள்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பேசி, இந்த மக்களை மதவெறிக்குள் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஓட்டுக்காக இதைச் செய்கிறார்கள். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் கே. தி.மு.க. கூட்டணியில் இந்தத் தேர்தலில் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறீர்கள்... ப. பேச்சு வார்த்தை நடப்பதற்கு முன்பாக இது குறித்து ஊடகங்களில் பேசுவது சரியாக இருக்காது. கே. கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. உங்களுக்கு அப்படி அழுத்தம் இருக்கிறதா? ப. இதுவும் தி.மு.கவைக் குறிவைத்து, திட்டமிட்டு செய்யப்படும் சதிவலை என நான் நினைக்கிறேன். பதிவுசெய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒன்று சுயேச்சை சின்னத்தில் நிற்கலாம். அல்லது கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் நிற்கலாம். இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, எந்தச் சின்னம், எந்தச் சின்னம் என்ற கேள்வியை ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதும், மற்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு, இதைப் பெரிதுபடுத்தி விவாதிப்பதும் ஏதோ உள்நோக்கம் இருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால், நான் இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசிவிடுகிறேன். நாங்கள் பதிவுசெய்யப்பட்ட கட்சி. ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சி. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே. ம.தி.மு.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. இப்போது அந்த அங்கீகாரம் போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிலும் இதுபோல கட்சிகள் உண்டு. ஆனால், யாரும் சென்று அங்குள்ள கட்சிகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லையே... அது ஏனென்று தெரியவில்லை. ஆகவே, உள்நோக்கம் இருக்கிறது. அல்லது டிஆர்பிக்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை. தி.மு.க. தான் மட்டும் ஜெயித்தால் போதுமென்று நினைத்தால், கூட்டணிக் கட்சிகளிடம் எந்தச் சின்னத்திலும் நின்றுகொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். 2006ல் அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருக்கும்போது மறைந்த எம். நடராஜன் என்னிடம் பேசினார். "கடைசி நேரத்தில் சுயேச்சை சின்னத்தை வாங்கி, 10 தொகுதிகளையும் இழந்துவிடாதீர்கள். மக்களிடம் அந்தச் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை வரலாம்; நம்மோடு இணக்கமாக இருக்கும் சூழலில் இரட்டை இலையிலேயே நின்று ஜெயித்துவிட்டு, சுயேச்சையாக செயல்படுங்களேன். இதற்கு முன்மாதிரிகள் இருக்கிறதே" என்றார். "நாங்களும் ஒரு சக்தியாக வளர வேண்டுமென நினைக்கிறோம். அங்கீகாரம் பெற வேண்டுமென நினைக்கிறோம். அதனால், சொந்த சின்னத்திலேயே நிற்கிறோம்" என்று நான் சொன்னேன். அதன் படி மணி சின்னம் கிடைத்தது. 14 நாட்களில் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து 2 இடங்களில் ஜெயித்தோம். அப்போது அ.தி.மு.க. எங்களைக் கட்டாயப் படுத்தியதாக சொல்ல முடியாது. அது ஒரு ஆலோசனைதான். 2001ல் கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தபோது, தமிழ்நாட்டில் 8 இடங்கள், புதுச்சேரியில் இரண்டு இடங்கள் என மொத்தமாக 10 இடங்களை எங்களுக்குக் கொடுத்தார்கள். அப்போதும் தி.மு.க. தரப்பில் எங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்கள். "நீங்கள் குறைந்த நாட்களுக்குள் சின்னத்தை வரைய வேண்டியிருக்கும். பிட் நோட்டீஸ் அடிக்க வேண்டியிருக்கும். போஸ்டர் அடிக்க வேண்டியிருக்கும். கடைசி நேரத்தில் பெரிய வேலையாக இது மாறிவிடும். அதனால், நீங்கள் உதயசூரியனில் நின்றுவிடுங்களேன்" என்று சொன்னார்கள். அந்தத் தருணத்தில் அரசியல் எங்களுக்குப் புதிது. உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். நான் மட்டும் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்றேன். ஆகவே அங்கீகரிக்கப்பட்ட சின்னம் மட்டும் வெற்றியைத் தந்துவிட முடியாது. இரட்டை இலையே பல இடங்களில் தோற்றுப் போயிருக்கிறது. எம்.ஜி.ஆர். இருக்கும்போதே நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் தோற்று 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றார்கள். ஆகவே பிரபல சின்னம்தான் வெற்றிபெறும், புதிய சின்னம் வெற்றிபெறாது எனச் சொல்ல முடியாது. இப்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு சின்னத்தை உடனடியாக பிரபலப்படுத்திவிட முடியும். பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, (கோப்புப்படம்) 2009ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னார்கள். விழுப்புரம் உள்பட இரண்டு இடங்கள் கிடைத்தன. உச்ச நீதிமன்றம் சென்று நட்சத்திரம் சின்னத்தை வாங்கினோம். சின்னத்தை வாங்கிய பிறகு 10 - 12 நாட்கள் இடைவெளிதான் இருந்தது. இருந்தபோதும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். இந்த முறை கடைசி நேரத்தில்தான் பானைச் சின்னத்தை வாங்கினோம். தேர்தலுக்கு பத்து நாட்கள் இருக்கும்போதுதான் சின்னம் கிடைத்தது. ஆனால், ஐந்து லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றோம். ஆகவே சின்னம் என்பது பெரிய பிரச்சனை கிடையாது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் தோழமைக் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குகிறார்களே தவிர, அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. ஆலோசனையைச் சொல்கிறார்கள். அதை ஏற்பதும் ஏற்காததும் நமது விருப்பம். எங்கள் சின்னத்தில் போட்டியிட்டால்தான் இத்தனை இடங்களைத் தருவோம் என்று சொல்வதில்லை. ஆகவேதான் இம்மாதிரி கேள்வி கேட்கப்படும்போது, "அவர்கள் கேட்பார்கள். நாங்கள் அதை பரிசீலனை செய்து, எங்கள் கண்ணியம் குறைவுபடாதபடி முடிவெடுப்போம்" என்று சொல்வோம். நாளை என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது அல்லவா? நாங்களும் ஒரு அரசியல் சக்தியாக இந்த மண்ணில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் முடிவு இருக்கும். நாங்கள் பெரும்பாலும் தனிச் சின்னத்தில் நிற்பதையே விரும்புவோம் என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நாங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். (தொடரும்) https://www.bbc.com/tamil/india-55784652 -
By உடையார் · பதியப்பட்டது
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன் 18 Views எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் காணி அபகரிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள க.வி.விக்னேஸ்வரன், “இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன. 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை ,வற்றுள் உள்ளடங்கும். எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு ,ருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும். இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40மூ நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ,வற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான டழடிடிலiபெ ஆதரவு நாடி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் டழடிடிலiபெ ஆதரவு நாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றிய முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான். எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்ட்டமான நிலைமையே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான ழுசநn லுகைவயஉhநட என்பவர் அவற்றை நவாழெஉசயவiஉ டயனெ pசயஉவiஉநள என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை நவாழெஉசயவiஉ சநபiஅந என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு நவாழெஉசயவiஉ நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.ilakku.org/?p=40178 -
By உடையார் · பதியப்பட்டது
தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் கலந்துரையாடல் -விக்கினேஸ்வரன்,சிவாஜிலிங்கம் கருத்து 23 Views தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். Video Player 00:00 02:54 வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Video Player 00:00 03:01 நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/?p=40183 -
By விவசாயி விக் · Posted
1) Conducting provincial council polls – 0.3% 2) Boosting tourism – 1.1% 3) Repatriating migrant workers - 2.8% 4) Obtaining Covid 19 vaccine - 8.2% 5) Resolve dispute over burial and cremations – 87.6% A large majority (87.6%) had voted demanding a resolution to the dispute over burial and cremation எனக்கென்னவோ இது நம்பிற மாதிரி தெரியேல்லை!? 87% உடல் தகனம் செய்ய கேட்கினமாம்! எங்கேயோ வாக்கு ஊழல் நடந்திருக்கு -
By உடையார் · பதியப்பட்டது
இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள். என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள். ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்: அத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார். '6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது. தங்கத்தை போல மின்னும் பெண்கள் : அடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது. எட்டு திசையும் பாராட்டும்: நெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல. https://www.dailythanthi.com/Advertorial/AdvertorialNews/2021/01/23185647/advertorial-Jos-Alukkas-shine.advt
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.