Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

 

உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சில வேலைகளை சுலபமாக்க இதோ சில எளிய வழிகள்

 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • Replies 460
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பார்த்தீர்களா நம் தமிழ் மொழியின் அருமையை. Doctor -- வைத்தியநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Pediatrist -- குழந்தைசாமி Psychiatri

13 எல்லைகளை கொண்ட நாடு.. எது தெரியுமா?            

259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

 

 

இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை
15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள். 

சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.

இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ - சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. "வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்" என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார். 

முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார். ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார். நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. "இந்த பொடிப் பயலா, நமக்கு 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் "என்று கோபம் கொப்பளிக்க... ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது. இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய் போன்ற வீர முழக்கங்களுக்கு எத்தனை பேரின் உயிரையும், ரத்தத்தையும் விலை கொடுத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

ஜெய்ஹிந்த்...!

http://starramesh.blogspot.ca/2017/01/blog-post.html

 • Like 1
Link to post
Share on other sites

மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம்
=================================
பசுபிக் கடலின் அடியில், 7 மைல் ஆழத்தில், உலகில் மிகவும் ஆழமான பகுதி இது.

மரியானா அகழி என்னும் இந்த பகுதியில் என்னவெல்லாம் வாழ்கின்றன என்பது குறித்து இப்போது அமெரிக்க கடலாய்வு நிறுவன விஞ்ஞானிகள் முதல் தடவையாக பார்க்க முயற்சித்திருக்கிறாகள்.

தொலைவில் இருந்து இயக்கக்கூடிய நீர்மூழ்கியின் மூலம் எடுக்கப்பட்ட இவை குறித்த வீடியோ நேரடியாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது.

அந்த அழகான காட்சிகள் குறித்த காணொளி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடலின் ஏழு மைல்  ஆழத்தில், இவ்வளவு அழகிய உயிரினங்களா...
பகிர்விற்கு.. நன்றி நுணா.

 • Like 1
Link to post
Share on other sites

சுத்தமான தேன் எது கலப்பட தேன் எது அறிந்துகொள்ள....

 
beet.png

1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை, தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும், மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாமல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத்தேன் என்பதை அறியலாம்.

3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்க‍ வாட்டில் உள்ள‍ மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்ப‍ற்றி எறிந்தால், அது அசல்தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படம் தேன் என்பதை அறியலாம்.

http://sinthanaikl.blogspot.ca/2015/12/blog-post_75.html

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இது.... உண்மையா நுணாவிலான்.
பலரும் செய்யும் தவறு, இது.  முன்பு ஊரில்... பல இடங்களில்,
சின்ன கரண்டி மாதிரி... ஒன்றும், பல்லில் உள்ள அழுக்கை எடுக்க ஊசி மாதிரி ஒன்றும்,
நடை பாதைகளில் வைத்து,  விற்றுக் கொண்டு இருப்பார்கள்.  ஒரு  ரூபாய்க்கு விற்றுக்  கொண்டிருப்பார்கள்.
அது... நல்ல பொருள் போல் உள்ளது.

Link to post
Share on other sites

உண்மை. அண்மையில் ஒரு நண்பரின் மனைவிக்கு சத்திரசிகிச்சை மூலம் காது சுத்தம் செய்யப்பட்டது.காதில் infection ஆக்கி காது கிட்டத்தட்ட கேட்காமல் போய் விட்டது.

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 

உலகின் முதல் கப்பல் சுரங்கம்

 
 

நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது.

இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது.

ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது.

இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.

இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது

.http://www.bbc.com/tamil/science-39535177?ocid=socialflow_facebook

 

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 ::நாவல் பழம்
   

நாவல் பழம் (சைஜிஜியம் கியும்நி)

jamun_thumb.png
jamun_icon.png அறிமுகம் jamun_icon.png ஊடுபயிர்
jamun_icon.png மண் jamun_icon.png கவாத்து செய்தல்
jamun_icon.png காலநிலை jamun_icon.png பூச்சிகள்
jamun_icon.png வகைகள் jamun_icon.png நோய்கள்
jamun_icon.png இனப்பெருக்கம் jamun_icon.png பூத்தல் மற்றும் காய் பருவம்
jamun_icon.png நடவு jamun_icon.png அறுவடை மற்றும் மகசூல்
jamun_icon.png உரமிடுதல் jamun_icon.png சேமித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
jamun_icon.png நீர்ப்பாசனம் jamun_icon.png பயன்கள்
jamun_icon.png அறுவடை பின்சார் தொழில் நுட்பம்

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயிரிடுவது குறைவாக உள்ளது ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும்.

1.அறிமுகம்

      நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.

இதன் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகள் ஆகும். இது தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர் மற்றும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. இது புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இமயமலையில் 1300 மீட்டர் வரை மற்றும் குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றது. இது பரவலாக கங்கை சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை வளர்க்கப்படுகிறது.

2.மண்

           நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும்  தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது.

3.காலநிலை

           நாவல் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளரும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. மித வெப்ப மண்டல பகுதிகளில், மழைப் பொழிவு பழம் பழுக்கும் தருணத்தில் இருப்பதால்  பழங்களின் எடை, நிறம் மற்றும் சுவை அதிகரிக்கும்.

4.வகைகள்       

            இந்தப் பழ சாகுபடியில் எந்த வகைகளும் இல்லை. பொதுவாக வட இந்தியாவில் வளர்க்கப்படும் வகை “ராம் நாவல்” ஆகும். பழங்கள் பெரியதாகவும், நீள்சதுர வடிவாகவும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்திலும் இருக்கும். நன்கு பழுத்த பழத்தின் கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம் அதிக சாறுடையதாகவும் இனிப்பாகவும் இருக்கும். கொட்டை அளவு சிறியதாக இருக்கும். இந்த வகைகள் ஜ%ன், ஜ%லை மாதங்களில் பழுக்கும். இவை கிராமப்புற மற்றும் நகர்புற சந்தைகளில் அதிகமாக காணப்படும். 
மற்றொரு வகையானது, பழங்கள் சிறிய அளவாகவும், சற்று உருண்டையாகவும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறம் அல்லது கருமையாகக் காணப்படும். சதை ஊதா நிறமாக இருக்கும். இது குறைவான சாறுடையது, எடை மற்றும் சதையின் இனிப்புத் தன்மை ராம் நாவலைவிடக் குறைவு ஆனால் கொட்டை அளவு பெரியதாக இருக்கும். பொதுவாக இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும். 
தற்பொழுது, பல வகைகள் இந்தியாவில் உள்ளதால் நல்ல இரகங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

jamun1.jpg jamun2.jpg
                        ராம் நாவல்                   மற்றொரு வகை
5.இனப்பெருக்கம்

           விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல கருவாக்கம் இருப்பதால், இது மூல விதை மூலம் உருவாகிறது. தாவர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் இந்த முறை காய் பிடிக்க தாமதமாகும் என்பதால் அறிவுறுத்தப்படுவதில்லை. எனவே விதை இனப்பெருக்கமே பரிந்துரைக்கப்படுகிறது. 
புதிய விதைகளை விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம். 
நாவல் இனப்பெருக்கம் செய்வது எளிதானது. 10 - 14 மி.மீ தடிமனாக இருக்கும்  ஒரு வயதான நாற்றுகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய வேண்டும். குறைவான மழை உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய சிறந்த மாதம் ஜ%லை முதல் ஆகஸ்ட் ஆகும். மழை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் மே - ஜ%ன் மாதங்களில் செய்யலாம். 
வளைப்பதியம் கட்டுதல் மூலமும் நாவலை இனப்பெருக்கம் செய்யலாம், ஆனால் இது வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த முறையில் தாய் மரத்திலிருந்து எடுத்த மரக் குச்சியை ஒரு தொட்டியில் வைத்து ஜ%ன் மற்றும் ஜ%லை மாதங்களில் வளைப்பதியம் கட்டப்பட்டு ஒரு வருட நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. நல்ல வேர் பிடிப்பிற்கு இடைப்பட்ட மூடு பனியில் பதியம் பெறப்படுகிறது. 

6.நடவு

           நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜ%லை - ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜ%ன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும். 
நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ  குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும். பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன.

7.உரமிடுதல்

            நாவலுக்கு பொதுவாக உரமிடுவதில்லை. ஆண்டுக்கு 19 கிலோ தொழுஉரம் இட வேண்டும். மரம் நன்கு வளரும் நிலையில் மரம் ஒன்றுக்கு 75 கிலோ அளிக்க வேண்டும். 
பொதுவாக, நாற்று மூலம் நட்ட செடி காய் பிடிக்க 8 முதல் 10 வருடமாகும். ஒட்டுக்கட்டுதல் மூலம் நட்ட செடி காய் பிடிக்க 6 முதல் 7 வருடமாகும். மண்ணில் அதிக ஊட்டசத்து இருந்தால் இலைகள் அதிகமாக வரும், ஆதனால் காய் பிடிப்பதற்கு தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரம் மற்றும் பாசன அளவு மிகக் குறைவாக வழங்கப்பட வேண்டும். செப்டம்பர் - அக்டோபர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நிறுத்திவிட வேண்டும். இந்த முறை நாவலில் மொட்டு அரும்புவதற்கும், காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. சில சமயங்களில் இவையும் பயனுள்ளதாக இருக்காது. அந்த சமயம் வேரை கவாத்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் வளர்ச்சி மற்றும் காய் பிடிக்கும் அளவைக் கொண்டு உரத்தை அளிக்க வேண்டும்.

8.நீர்ப்பாசனம்

            ஆரம்ப காலத்தில், தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின்னர் பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஒரு ஆண்டில் 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு மே - ஜ%ன்  மாதங்களில் 4 முதல் 5 முறை நீர்ப்பாசனம் போதுமானது. இலையுதிர் மற்றும் குளிர் மாதங்களில் மண் உலர்ந்த போது மட்டும் பாசனம் செய்தல் போதுமானது. இது குளிர் காலங்களில் பனியின் மோசமான விளைவுகளில் இருந்த மரத்தைக் காக்கும்.

9.ஊடுபயிர்          

           நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில், தோட்டத்தில் அதிக இடைவெளி காணப்படும்பொழுது அதற்கான ஊடுபயிராக பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களை மழைக்காலங்களில் பயிரிடலாம்.

10.கவாத்து செய்தல்

     நாவலுக்கு வழக்கமான கவாத்து செய்தல் தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்கப்பட வேண்டும். தாவரத்தின் கிளைகளை தரைமட்டத்திலிருந்து 60 முதல் 100 செ.மீல் வளர விட வேண்டும்.

11.பூச்சிகள்

            பூச்சிகளில், வெள்ளை ஈ மற்றும் இலைகளை உண்ணும் கம்பளிப் புழுக்கள் மரத்திற்கு அதிக சேதத்தை விளைவிக்கின்றன.
i. வெள்ளை ஈ (டையலியுரொடெஸ் யுஜினிய) 
நாவல் மரத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை ஈ சேதப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பழங்கள் மேற்பரப்பில் வெம்பிக் காணப்படும். வெள்ளை ஈக்களை பின்வரும் வழிகளில் கட்டுப்படுத்த முடியும்.

 • மரத்தைச் சுற்றி சுகாதார நிலையை பராமரிக்க வேண்டும்.
 • அனைத்து பாதிக்கப்பட்ட பழங்களையும் பறித்து அளிக்க வேண்டும்.
 • மரத்தின் தண்டுப் பகுதியைச் சுற்றிலும் மண்ணில் குழி தோண்ட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பழங்களில் உள்ள புழுக்களின் முட்டைகள் மற்றும் பூச்சிக் கூடு மண்ணில் விழுந்து அழிந்துவிடும்.

ii. இலை உண்ணும் புழு (கேரிய சப்டில்லிஸ்)

         இந்தப் புழு அதிகமாக கோயமுத்தூரில் மட்டுமே காணப்படுகிறது. புழுக்கள் இலைகளை தாக்கும் அதனால் இலைகள் உதிர்ந்துவிடும். ரோகர் 30 EC அல்லது மாலத்தியான் 1 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

iii. மற்ற பூச்சிகள்                                                                                 
          மேலே கூறிய பூச்சிகளை தவிர, நாவல் மரம் அணில், கிளி மற்றும் காகம் போன்றவைகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. முரசு மூலம் சத்தத்தை ஏர்படுத்தியும், கற்களை சுழற்றியும் கட்டுப்படுத்தலாம்.

12.நோய்கள்

i. பழம் அழுகல் நோய்
         பூஞ்சையால், இலைப்புள்ளி ஏற்படும் அதனுடன் பழமும் அழுகும். பாதிக்கப்பட்ட இலைகளில் சிறிய சிதறிய புள்ளிகள் பழுப்பு மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும். இறுதியில் பழங்கள் அழுகி சுருங்கிவிடும். டைதேன் Z - 78ஐ 0.2% அல்லது போர்டியாக்ஸ் கலவை 4:4:50 செறிவை தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

13.பூத்தல் மற்றும் காய் பருவம்

    மலர்கள் சிறுகிளைகளின் கணு இடுக்குகளில் தோன்றுகின்றன. வட இந்திய சூழலில், பூத்தல் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை தொடர்கிறது. பருவத்தின் ஆரம்பத்தில் மகரந்த சேர்க்கை அதிகமாக இருக்கும். நாவல் அயல் மகரந்தச்சேர்க்கைப் பயிராகும். மகரந்தச்சேர்க்கை தேனீக்கள், ஈக்கள் மற்றும் காற்று மூலம் நடைபெறுகிறது. 

     பூ மலர்ந்த மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு உதிர்தல் அதிகமாக இருக்கும். பூ மலர்ந்த பின் ஜிஏ3 60 பிபிஎம் (GA3 60 ppm) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து காய்பிடிப்பிற்குப் பின் ஒரு முறை தெளிப்பதன் மூலம் காய் உதிர்தலைக் குறைக்கலாம்.

     நாவல் மரத்தின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்: முதல் கட்டமாக காய் பிடித்ததிலிறூந்து 15 முதல் 52வது நாள் காய் மெதுவாக வளரும் பருவம், இரண்டாவது கட்டம் 52 முதல் 58வது நாள் காய் வேகமாக வளரும் மற்றும் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் 58 முதல் 60ம் நாள் காய் வளர்ச்சி மெதுவாக இருக்கும். காயின் எடை கூடும். 
jamun3.jpg
14.அறுவடை மற்றும் மகசூல்

            நாவல் மரத்தில் நாற்று 8 முதல் 10ம் ஆண்டிலும் ஒட்டுச்செடி 6 முதல் 7ம் ஆண்டிலும் பலன் கொடுக்கும். எனினும், முழுமையான மகசூல் 8 முதல் 10ம் ஆண்டில் கிடைக்கும். தொடர்ந்து 50 முதல் 60 வயது வரை பலன் கிடைக்கும். ஜ%ன் மற்றும் ஜ%லை மாதங்களில் பழம் பழுக்கும். முழுவதும் பழுத்த பழம் பெரிதாக அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும்.
            பழம் பழுத்தவுடன் மரத்திலிருந்து பறித்துவிட வேண்டும். பழுத்த பழங்களை தோளில் பைகளை தொங்கவிட்டபடி மரத்தின் மீது ஏறி ஒவ்வொன்றாக பறிக்க வேண்டும். பழங்களைப் பறிக்கும்போது சேதம் ஏற்படாமல் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். நாற்று நடவில் நன்கு வளர்ந்த மரத்திலிருந்து வருடத்திற்கு 80 முதல் 100 கிலோ வரையிலும் ஒட்டுச்செடி மரத்தில் வருடத்திற்கு 60 முதல் 70 கிலோ வரையிலும் பழம் கிடைக்கும். 

15.சேமித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்

          நாவல் பழங்கள் இயற்கையில் விரைவில் அழுகக்கூடியது. பழங்களை சாதாரண வெப்ப நிலையில் 3 முதல் 4 நாட்களுக்கு மேல் சேமிக்க முடியாது. எனினும், குளிர்விக்கப்பட்ட பழங்கள் பாலித்தீன் பைகளில் குறைந்த வெப்பநிலை 8 முதல் 100C மற்றும் 85 முதல் 90% ஈரப்பதத்தில் மூன்று வாரங்கள் வரை சேமிக்கலாம். 
            சந்தைப்படுத்த நன்கு பழுத்த தரமான பழங்களை தேர்வு செய்ய வேண்டும். சேதமடைந்த, நோயுற்ற மற்றும் சரியாக பழுக்காத பழங்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பழங்கள் கவனமாக மரக் கூடைகளில் அடுக்கப்பட்டு உள்ளூர் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.

16.பயன்கள்

            நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர இதில் இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளது. இப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண் ஊட்டச்சத்து சதவிகிதம்
1 ஈரம் 28.2
2 புரதம் 0.7
3 கொழுப்பு 0.1
4 தாது 0.4
5 நார் 0.9
6 மாவுச்சத்து 19.7
7 கால்சியம் 0.02
8 பாஸ்பரஸ் 0.01
9 இரும்பு 1.0
10 கலோரி பெறுமானம் 83/100 கிராம்
ருசியுடைய மற்றும் நறுமணமுடைய பழங்கள் உணவிற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன. பழம் பொதுவாக உப்புடன் சேர்த்து உண்ணப்படுகிறது. நாவல் பழம் பொதுவாக சற்றே புளிப்பு சுவையுடன் இருக்கும்.
பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், நாவல் பழத்தைக் கொண்டு சுவையான பானங்கள், ஜெல்லி, ஜாம், பழக்கூழ், வினிகர் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம். சிறிய அளவு பழச்சாறு வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழச் சாறு மற்றும் மாம்பழச் சாறை சமஅளவு கலந்து சர்க்கரை நோயளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும். நாவல் பழம் குறிப்பாக கோவாவில் மது தயாரிக்கப் பயன்படுகிறது.
சற்று பழுத்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியை தூண்டும். இறைப்பை குடல் வழி நீக்கி, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமான பண்புகளையும் கொண்டுள்ளது. 
மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நோக்கத்திற்காகப் பயன்படுகிறது. இம்மரத்தின் இலைகள் மற்றும் பழங்கள் தென் அமெரிக்காவில் வயிறு கோளாறு சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.பொடி செய்யபட்ட விதைகள் சர்க்கரை நோயைக் குணப்படுத்த உதவுகிறது. 

நாவல் விதைகள் மிக விரைவில் நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின்  அளவைக் குறைக்க உதவுகிறது. இது படர்தாமரை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கவும் உதவுகிறது. நாவல் விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச் சத்து மற்றும கால்சியம் உள்ளதால் விலங்குகளுக்கு அடர் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. இதன் மரம் இரயில்களில் படுக்கைகள் அமைக்கப் பயன்படுகிறது. இம்மரம் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களால் தாக்கப்படாது. இதைத்தவிர நாவல் பழங்களில் அதிக பயன்பாடுகள் உள்ளன.

http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_fruits_jamun_ta.html

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

உலகை தமிழன் ஆண்டான், என்று சொன்னால் நம்ப முடியவில்லையா? காணொளி  பாருங்கள். 
உலகில்... 19000 தமிழ்ப்  பெயர்களை கொண்ட, பெரிய ஊர்கள்.

Link to post
Share on other sites
 • 3 weeks later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. https://vanakkamlondon.com/cinema/2021/01/98688/
  • இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்கை விலகியுள்ளதாகவும் எட் டேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூறச் செய்ய முடியும். இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான ஒரு படியாகவும் இந்த விசாரணை அமையும் எனவும் டேவி கூறியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து தமிழ் சமூகங்கள் விடுத்துள்ள அழைப்பை அடுத்து டேவி இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார். டேவியின் அழைப்புக்கு சாம் டாரி மற்றும் சியோபைன் மெக்டோனாக் உள்ளி்ட்ட பல பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையில் தமிழ் தரப்பைச் சோ்ந்த முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்த வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர். இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்யுமாறும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரிதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/16/21611/
  • தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.! கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு, ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் கொழும்பு ரோயல் கல்லூரி - 187 டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179 பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178 இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174 யாழ். இந்துக் கல்லூரி - 166 யாழ். மத்திய கல்லூரி - 161 மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160 ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160 சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160 திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159 புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157 பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181 பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174 யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173 கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170 யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169 வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169 கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166 ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166 பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163 திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160 கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181 மூதுர், மத்திய கல்லூரி - 171 கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168 கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167 ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166 சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165 கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164 மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164 கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164 ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164 விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164 கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163 கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162 கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162 மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162 அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162 மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161 அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161 கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161 http://aruvi.com/article/tam/2021/01/16/21604/
  • நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள். சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்... நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம்   
  • அதென்ன "ரொச் லைற்" சின்னமே தான் வேணுமா.? அதுக்கும் அண்னை பெற்றர் மாஸ் லைற் இருக்கு .. ☺️..😊 அதுகும் இல்லை என்றா தீ-பந்தம் இருக்கு..! பிடிப்பது என்டு முடிவு செய்த பிறகு எதுவா இருந்தா என்ன.?👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.