-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
4 நாள்களில் 140 மில்லியன் வருமானம் இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம் -
By nunavilan · பதியப்பட்டது
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk) -
இந்த வீடியோ பார்த்த பின்னர், தமிழகத்தின் அடுத்த முதல்வர், எடப்பாடியா? ஸ்டாலினா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. வேறு கட்சிகளில் இருந்து ஓடி வந்தவர்களை நம்புவது ஆபத்தானது. செந்தில் பாலாஜியின், '11 மணிக்கு பதவி ஏற்பு, 11.05 க்கு மண் அள்ள போங்கள், அதிகாரிகள் தடுத்தால், அவர்கள் இருக்க மாட்டார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்' கதை, வேண்டும் என்று அளவாக சொல்லி செய்த ஆப்பு என்று வேறு வீடியோவில் சொல்லப்படுகிறது. இவர், தங்கத்தமிழ்பாண்டியன் அனைவரும், mla ஆனபின் கட்சி பாய தயங்க மாட்டார்கள். அதேபோல, ராசாவின், எடப்பாடி தாயார் கதை, கூட, அவரை வழக்கில் இருந்து தப்ப வைக்கும் நோக்கத்துடன் பிஜேபி போட்ட டீல் என்கிறார்கள். ஸ்டாலின், விக்கினை, கழட்டி, தலையை சொறிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
-
சுவி அண்ணா குருட் லக் சிலது உங்களுக்கு இரண்டு புள்ளிய பெற்று தரக் கூடும் ஹா ஹா 😀😁
-
By nunavilan · பதியப்பட்டது
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின்போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ளபோது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இந்திய டேலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்றபோது தமிழ் நாட்டு மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது. இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்றபோது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்றபோது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம் – Athavan News
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.