Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ!

என் நிழலல்ல நிஜம்! நான் நிகழ்த்திவந்த காதல்

தவத்தின் வரம்! உள்ளத்தில் செதுக்கிவைத்த உருவத்தின்

உயிர் வடிவம் நீ! அள்ள அள்ளக் குறையாத அன்பு தந்து என்

ஆயுள் வளர்க்கின்ற அமுதமும் நீ! எப்படிச் செல்லம் நீ எனக்குள்

புகுந்தாய்?

கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே

என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில்

சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில்

மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா?

!எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி

கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!!

எந்தன் தமிழே என் உயிரின் வடிவே! கன்னச் சிவப்பே! கவிந்தேன் மொழியே!

மட்டில்லாப் பெருஞ்செல்வம் மாணிக்கப் பொன் வைரம் பட்டுப் பீதாம்பரம்

பவளம் அத்தனையும் உன் கற்கண்டுச் சொற்களிலே கண்டு களிக்கின்றேன்!

காதலின் மகத்துவத்தை உன் மகரந்தச் சொற்களிலே உணர்கின்றேன்!

என் சிணுங்கலின் ஒலிகொண்டே கவி சமைக்கும் என் நளனே!

என் சிரிப்பினை செவிசாய்த்து பாவடிக்கும் பாவலனே

மடிசாயும் வேளைதனில் மனம் நிரப்பும் மன்மதனே!

என்றென்றும் என்வாழ்வில் எனக்கான என்னவனே!!

உன்னோடு இருக்கின்ற நொடியாவும் பூரணமே!

Link to comment
Share on other sites

ஆஹா கவிதை அந்தமாதிரி சூப்பரா இருக்கிது. :) நீங்கள் யாழில எழுதாட்டியும் இன்னும் போர்மிலதான் இருக்கிறீங்கள்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ககோதரி! கவிதை மிக நன்று!!!! :huh::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா கவிதை அந்தமாதிரி சூப்பரா இருக்கிது. :lol: நீங்கள் யாழில எழுதாட்டியும் இன்னும் போர்மிலதான் இருக்கிறீங்கள்.. :huh:

கலைஞா,,,,உங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி.."காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா? " :wub:)

ககோதரி! கவிதை மிக நன்று!!!! :lol::lol:

மிகுந்த நன்றி..உங்கள் வாழ்த்துக்கு!

Link to comment
Share on other sites

கலைஞா,,,,உங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி.."காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா? " :huh:)

அதானே! காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா? ஆனா யாழில இருக்கிற நிறையப்பேருக்கு இது தெரியுது இல்லையே! காதல் ஒழிப்புச் சங்கம் எண்டு வேற துவங்கி இருக்கிறீனம்.

Link to comment
Share on other sites

எந்தன் தமிழே என் உயிரின் வடிவே! கன்னச் சிவப்பே! கவிந்தேன் மொழியே!

மட்டில்லாப் பெருஞ்செல்வம் மாணிக்கப் பொன் வைரம் பட்டுப் பீதாம்பரம்

பவளம் அத்தனையும் உன் கற்கண்டுச் சொற்களிலே கண்டு களிக்கின்றேன்!

காதலின் மகத்துவத்தை உன் மகரந்தச் சொற்களிலே உணர்கின்றேன்!

ஆகா என்ன அற்புதமான வரிகள்.

பாராட்டவே வார்த்தைகளில்லை.

Link to comment
Share on other sites

கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே

என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில்

சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில்

மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா?

!எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி

கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!!

உள்ளத்துணர்வின் உண்மையே கலைகளின் ஒளியாகும். உங்கள் காதலை அது காவியமாக்குது.

நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

என் சிணுங்கலின் ஒலிகொண்டே கவி சமைக்கும் என் நளனே!

என் சிரிப்பினை செவிசாய்த்து பாவடிக்கும் பாவலனே

மடிசாயும் வேளைதனில் மனம் நிரப்பும் மன்மதனே!

என்றென்றும் என்வாழ்வில் எனக்கான என்னவனே!!

உன்னோடு இருக்கின்ற நொடியாவும் பூரணமே!

ஆகா..என்ன அருமையான வரிகள் ரசித்தேன் சுவைத்தேன் கவிதையை வாழ்த்துக்கள் தமிழ்தங்கை அக்கா... :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.