-
Tell a friend
-
Topics
-
0
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2021ஆம் ஆண்டுக்கான 14ஆவது தொடரானது எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது அணித் தலைமையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைவராக இளம் வீரர் சஞ்சு சம்சன் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பணிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை குமார் சங்கக்காரவின் நெருங்கிய நண்பரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்த்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://viral48post.com/?p=6867&fbclid=IwAR3jMSpzgaFZ5hNJH0DBk8Rk--PC4LPKb-kwWNMXOMRre14fDnFPZGrcxUk -
By பெருமாள் · பதியப்பட்டது
வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழுவினர் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்குச் செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது "ஓம் நமசிவாய " என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் எனத் தடைவிதித்துள்ளனர். வந்தவர்களை சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர். அங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். வருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர். புலனாய்வாளர்கள், இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். கடந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடையில்லை எனவும் அங்கு சூலம் உடைக்கப்படவில்லையெனவும் பக்தர்கள் அங்கே சென்று தடையின்றி வழிபடலாம் எனவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/267406?ref=home-top-trending வேட்டியை கழட்டி கோவணத்துடன் நின்ற மறவன் புலவு என்கையப்பா ? -
By ஈழப்பிரியன் · Posted
நாம் போன இடத்தில் மரியாதை கிடைக்கவில்லை என சொல்வது தவறு மரியாதை இல்லாத இடத்துக்கு நாம் போனது தான் தப்பு தவறு நம் மேல தான்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.