Jump to content

அமரதாஸ் -- நேர்காணல்


Recommended Posts

கிராமங்களுடாகவும் மண்பட்டினங்களுடாகவும் கடற்கரை ஓரக் கிராமங்களுடாகவும் அவர் மண்ணையும்,மனிதர்களையும்,மரம் செடி கொடிகளையும்,சூரியனையும், நிலவையும்,கடலையும் தரிசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். புகைப்படங்கள் மூலம் வரலாற்றை எழுதுதல்,மனித வாழ்வை பேசுதல்,ஒளிப்படம் மூலம் கதை சொல்லுதல்,ஆவணப் பிரதி எழுதல் போன்ற விடயங்களிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். இவருடைய கவித்துவம் நிறைந்ததும் கலைத்துவம் மிக்கதான பல ஒளிப்படங்களை எரிமலை மூலமும் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். அமரதாஸ் அவர்களை நாம் எரிமலை சஞ்சிகைக்காக நேர்காண விரும்பினோம். அதற்குத்

தூண்டுதலாக அவரது இயல்பினை அவாவுதல் எனும் கவிதைத் தொகுதி அமைந்தது. மு.பொ அவர்களும் அவர் பற்றி என்னுடன் சிலாகித்திருந்தார். தவபாலன் அவர்களும் இவருடனான நேர்காணலை காண்பதற்கு உற்சாகம் அளித்தார். இருவருமாக அவரிடம் கேள்விகளை தொடுத்தோம். அத்தகையதொரு கலைப் பயணியின் நேர்காணலை நாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பரப்பை அகலப்படுத்தியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே.

1.ஒளிப்படக்கலையில் தங்களுடைய பாணி எத்தகையது?கலைகள் எல்லாவற்றிற்குமிடையே அந்தரங்கமான ஆழமான ஊடாட்டம் இருக்கிறது

ஒளிப்படக்கலையில் எனது பாணி என்று எதையும் நான் வகுத்துக் கொண்டு ஈடுபடவில்லை. ஒளிப்படக்கலையில் என் இஸ்ரப்படி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் அவ்வளவு தான். என் இஸ்ரப்படி என்பதற்குள் என்பாணி இருக்கக் கூடும். பயணங்களின் போது எனது கமெராவை எடுத்தச் செல்வேன். எனது கமெரா எப்போதும் என்னுடனேயே இருக்கும். என்னை ஈர்க்கும் பாதிக்கும் அம்சங்களை ஒளிப்படங்களாக்குவேன். எனது தரிசனங்களைச் சக மனிதருக்குத் தரமுனையும் எனது கலைச் செயற்பாடுகளில் ஒன்று தான் ஒளிப்படக் கலைச் செயற்பாடு கலைஞனின் விருப்பு வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வரையறையினுள்ளோ நெகிழ்ச்சித் தன்மையற்ற இறுகிய கோட்பாட்டினுள்ளோ நான் சிக்குப்படுவதை விரும்பவில்லை. எனது ஒளிப்படங்களின் கோணங்கள் ஒளியமைப்பு காட்சியமைப்பு போன்றவற்றில் எனது ஆளுமை தனித்துவம் மிளிரக்கூடும் அதுவே எனது பாணியாக இனங்காணப்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் எனது பாணி இதுவென்று எதையாவது சொல்லிக் கொண்டு படைப்புச் செயலில் நான் ஈடுபட விரும்பவில்லை.

2.போர்கால வாழ்பனுபவங்களையும் தாங்கள் கலைப்படைப்புக்களாகவும் கொணர்ந்திருக்கிறீர்கள். போர் வாழ்வியல் அனுபவம் ஒன்றை கலைபடைப்பாக்கும் உந்துதல் உங்களுக்குள் எவ்வாறு கிளர்ந்தது?

நான் வாழும் காலம் போர்க்காலமாக வாய்த்திருக்கின்றது. அனுபவங்களே படைப்புகளை வழிநடத்துகின்றன. அப்படி இருக்கையில் போர்க்கால வாழ்வனுபவம் எனது படைப்பகளில் பிரதிபலிக்கக் கூடும். போர்;க்காலத்தில் போர் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. போரானது தனது சூழலை மனித வாழ்வெங்கும் படரவிடக் கூடியது தான். எனினும் போர்க்காலத்திலும் மனித வாழ்வு சந்தோசங்களையும், காதலையும், முரண்களையும் மற்றும் பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கிறது தானே. எனது படைப்புக்களை வாழ்வனுபவங்களின் பிறப்புக்களாகவே காண்கிறேன். வாழ்வில் விதம் விதமான அனுபவங்களைத் தேடியலைபவன் நான் எனது அனுபவங்கள் எல்லாமே படைப்புகளாகி விடவில்லை படைப்பாக்கத்திற்கு அவகாசம் தேவை தேவையும் நல்ல சூழ்நிலையும் கூடி வரும்போது தான் நல்ல படைப்புக்கள் தோன்ற முடியும்

3.கவிதா ஆளுமையை உங்களுக்குள் எப்போது கண்டடைந்தீர்கள். தங்களின் கவிதைகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனக் கருத்துக்கள் தங்களை வந்தடைந்திருக்கின்றனவா?

எனது கவிதா ஆளுமையை எப்போது கண்டடைந்தேனென்று கூறுவது கடினம். எனது கவிதைகளை நானே ஒரு வாசகனாக அல்லது விமர்சகனாக இருந்து பார்க்கும் போது எனது கவிதைகள் பிறரால் விமர்சிக்கப்படும் போதும் எனது கவிதா ஆளுமையை உணர முடிகிறது. தவிர்க்க முடியாமல் எனது படைப்புகளுக்கான விமர்சகனாகவும் நான் இருந்து விட நேர்கிறது. இதுவே எனது பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது. என்னுள்ளிருக்கும் விமர்சகன் அல்லது வாசகன் எப்போதும் என்னைத் தட்டிக் கொண்டிருந்தபடியும் நொட்டிக்கொண்டிருந்தபடியும் இருப்பவன். எனது கவிதைகள் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் செவிசாய்ப்பதுண்டு. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாடு எனக்குண்டு. பிறரின் கருத்துகளை எனது கருத்துக்களில் உரசிப்பார்த்துக் கொள்வேன். எனது கருத்துக்களை வளப்படுத்திக் கொள்ள மாற்றுக்கருத்துக்களைக் கண்டடைய பிறரின் கருத்துக்கள் தேவைப்படுகின்றன. எனது கவிதைகள் குறித்த கருத்துக்களையும் பலர் ஊடகங்கள் வழியாகவும் நேரிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்க

Link to comment
Share on other sites

. அமரதாஸ் அவர்களை நாம் எரிமலை சஞ்சிகைக்காக நேர்காண விரும்பினோம். .

http://www.erimalai.info

அரச பயங்கரவாத ஒடுக்குத்ல்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தளராது செயபட்டுவரும் எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய வன்னிக் கலைஞரின் பேட்டியை வெளியிட்டமைக்கு நுணாவிலானுக்கு எனது நன்றி. என் ஞாபகத்தில் கலைஞனின் பெயர் அமலதாஸ் எனவே பதிவாகி இருக்கு. தயவுசெய்து உறுதிப் படுத்தவும்.

Link to comment
Share on other sites

அமரதாசின் ஒளிப்படங்கள் நூலாக வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டையொட்டி அவருடைய ஒளிப்படக் காட்சி கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஒளிப்படக் காட்சியையொட்டி நூல் வெளியிடப்பட்டதா அல்லது நூல் வெளியீட்டையொட்டி ஒளிப்படக் காட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை நூலிலுள்ள படங்களில் தேர்வு செய்யப்பட்டு ஒரு தொகுதிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நூல் மதிப்பு மற்றும் வெளியீட்டையும் ஒளிப் படக்காட்சியையும் தமிழீழ நண்கலைக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கின்றது. ஐந்து நாட்கள் முழுநாட்காட்சியும் இறுதிநாள் விமர்சன அரங்கிற்கும் ஏற்பாடு.

நுண்கலைக்கல்லூரி முன்னர் கேணல் கிட்டுவின் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தது. அந்த அனுபவத்தை ஆதராமாகக் கொண்டு அல்லது முன்னனுபவமாக வைத்துக் கொண்டு இந்தக் காட்சியையும் ஒழுங்கமைத்து இருக்கிறது.

அமரதாஸ் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக ஒளிப்படங்களை ஆர்வத்தோடு எடுத்து வந்திருக்கிறார். தனக்கு சாத்தியமான எல்லைவரையில் இயங்கி எடுத்த படங்களை இப்போது பார்வையாளர்களுக்கு அளித்திருக்கிறார்.

அமரதாஸ் ஒளிப்படத்துறையில் ஈடுபடத் தொடங்கிய காலம் ஈழத்தில் கடுமையான யுத்த நிகழ்ந்து கொண்டிருந்தது. தினமும் வீரச்சாவுகளும் சனங்களின் தொகையான மரணங்களும் இடம்பெயர்வு அகதிவாழ்க்கை என்று முற்றிலும் வாழ்க்கை எதிர் முகத்தோடு இயங்கியது. குண்டு வீச்சுகளும் படை நடவடிக்கைகளுமே பெரும் செய்திகளாக இடம்பெற்றிருந்த வேளை அது. அவ்வறான சூழலில் ஒளிப்படங்களை எடுக்கத்தொடங்கிய அமரதாஸ் தேட்டத்தை திரட்டி இப்போது அளிக்கின்றார்.

அமலதாஸ் ஒளியை அதன் நுட்பங்களோடும் வினோதங்களோடும் ஆளவிரும்பும் தன்மையை தன்படங்ளினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளியை வைத்துக் கொண்டு சாகாஸங்களை நிகழ்த்துகிறது வித்தைத்தனம் இது ஒளியை அதன் இயல்பும் தொழிலும் சிதையமல் படமாக்குவது ஒருவகை ஒளியை மெருகூட்டி வித்தையாக வினோதமாகக் காண்பிப்பது. இன்னொருவகை இரண்டுவகையிலும் தனித்தன்மைகளும் சிறப்புகளும் உண்டு. ஆனால் இரண்டும் எதிரெதிர் அடையளமும் இயல்புமுடையவை.

இயல்போடு எளிமையோடும் யதார்த்தம் தொனிக்க ஒளியைக் கையாண்டு அதைக்கலையாக முன்வைப்பது மிகச்சிறப்பானது. இதில் புனைவைவிடவும் யதார்த்தம் நிலை பெறுகிறது. ஆனால் எல்லோரும் இந்த முறையைத்தான் பின்பற்றவேண்டும் என்றில்லை அதேவேளை எப்படியும் படம் எடுக்கலாம் என்றுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒளியை மெருகூட்டி படத்தை எடுக்கும் போது யதார்த்தை மீறிய அழகு புனைவினூடாக கிடைக்கின்றது. இந்த அழகு மனம் காணவிரும்பும் அதீத நிலைகளையும் கனவின் தாகத்தையும் நிரப்பலாம். ஆனால் சூழலின் முகத்தையும் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் உள்ளீட்டையோ அதன் குருதியையோ காணமுடியாது.

அமரதாசின் படங்கள் அநேகம் இந்த வகையைச் சேர்ந்தவை ஒளியினுடாக அவர் எல்லவற்றையும் அழகாக்கும் உத்தியை பின்பற்றுகிறார். இந்த முறையில் தான் அவருக்கு அதிகம் நம்பிக்கையும் உண்டு தமிழில் இதற்கான நல்ல உதாரணம் பாலுகேந்திரா.

பாலுகேந்திரவின்கமெரா எப்போதும் எதையும் அழகாக்கும் கண்ணும் பார்வையும் கொண்டவை. அவரால் ஊட்டியை அழகான ஊட்டியாகவே கான்பிக்கமுடியும் அவருடைய மனிதர்கள் அழகான சூழலும் அழகான நிலைகளிலும் இருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அப்படியெல்லாம் இருக்குமென்றில்லை ஆனால் அழகு ஈர்ப்பும் கவர்ச்சியும் மிக்கவை. அவருடைய காண்பிய முறைமை திரைக்கு வெளியே ஒன்றாகவும் திரையில் இன்னொன்றாகவும் இருக்கும் இருநிலைக் கொண்ட காண்பியங்கள் அமரதாசின் ஒளிப்படங்களும் இந்த அடிப்படையைக் கொண்டவையாகவே இருக்கின்றன.

பார்க்கும் போது அழகாக இருக்கின்றன வியப்பை ஊட்டுகின்றன குறிப்பாக சிலகாட்சிகள் மற்றும் இயற்கைச் சித்திரங்கள். இந்தப்படங்களில் உள்ள காட்சிகளைப் பின்தொடந்து காட்சிகள் பதிவாகிய இடத்தை என்றேனும் ஓருவர் பார்க்கமுயன்றால் அவருக்கு அங்கே அந்த மாதிரியான இடம் தோற்றம் ரூபம் எதுவும் கிடைக்கும் என்றில்லை இந்தப்படங்களின் வழியாக தன் ஞாபகங்களை மீட்டுக் கொண்டு ஒருவரின் நினைவுப்பரப்பில் இந்தக் காட்சிகளுக்கும் அவரின் பதிவிலுள்ள காட்சிக்கும் இடையில் தொடர்பிருக்கும் என்றில்லை.

அமரதாஸ் தன் திறன்மூலம் ஒளியை தூரிகையாக்கி தனது படங்களை அழகாக்கியிருக்கிறார். அமரதாசின் படங்களில் பொதுக்குணமும் தீவிர நோக்கமும் அழகுதான் அமரதாஸ் அழகுபடுத்தலிலேயே குறியாக இயங்குகிறார். அழகுப்படுத்தல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் பொருந்திவிடாது அது உண்மையிலிருந்து சமயங்களில் விலகியும் விடுகிறது.

உதாரணமாக அமரதாசின் ஸ்கந்தபுரம் பற்றிய படங்களை இங்கே கவனிக்கலாம் படங்களிலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும் யதார்த்தத்திலுள்ள ஸ்கந்தபுரத்துக்கும்மிடையில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.