Jump to content

ஆறாயிரம் படை நடுவே அடிக்கல் நாட்டும் கோத்தபாய!


Recommended Posts

மட்டு வேலவன்.

மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற்றுமுதல் கிட்டத்தட்ட ஆறாயிரத்திற்;கும் மேற்பட்ட படையினரை அந்த பகுதியில் குவித்து வைத்து இந்த பாலத்தை அண்டிய சுற்றுப்பரப்பில் மிகப் பெரும் இராணுவ வேலி ஒன்றையும் இராணுவத்தினர் அமைத்துள்னர். இந்த பகுதிக்குள் எந்த ஒரு தமிழ் மகனுக்கும் போக அனுமதி கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால் கிழக்கை புலிகளிடமிருந்து கைப்பற்ற உதவிய தமிழ் ஓட்டுக் குழுக்கழுக்கும் அங்கு போக அனுமதி இல்லையாம். ஆறாயிரம் படையினர் பாதுகாப்பு மத்தியில் இன்னும் சில மணித்துளிகளுக்குள் கோத்தபாய சகோதரர்களிள் ஒருவர் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பாலம் அடிக்கல்லுடன் இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கப்போகிறதோ என்று மட்டு வாசிகள் அங்கலாய்க்கிறார்கள். பாலம் கட்டி முடிகிறதோ இல்லையோ கோத்தபாய சகோதரர்களுக்கு வருமானம் மட்டும் நல்லாக வரும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

http://www.orunews.com/?p=28

Link to comment
Share on other sites

பாலத்தின் அடிக்கல் நடுகைக்குப் பாதுகாப்பிற்கு ஆறாயிரம் படையினர். விடுதலைப்புலிகள் இல்லை யென்ற இடத்தில் இவ்வளவென்றால், விடுதலைப்புலிகளுள்ள கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைக்குப் படையினர் பற்றாக்குறையை எவ்வாறு நிவர்த்தி செய்வது. <_<:)

Link to comment
Share on other sites

50 செல் போய் விழுதில்லை. மோட்டு சிங்களவங்கள் கோவணத்தோடு ஒட வேண்டாமோ. <_<:)

Link to comment
Share on other sites

பதவியும் அதிகாரமும் இருக்கும் வரை 6000 8000 10000 எல்லாம் வரும் வருவாங்கள்...

காற்று மாறி வீசும் போது பதவி போனபிறகு ஒண்டும் உதவிக்கு வராது... இது ஒண்டும் வெருட்டலுமில்லை எச்சரிக்கையும் இல்லை... உங்களின் முன்னோரினது அனுபவம்..

உதாரணம் வேண்டுமா? லலித், ரஞ்சன் விஜேரத்தின, அருத்தரத்வத்தை, அதிலும் மேல சந்திரிக்கா.

Link to comment
Share on other sites

செலவை குறைக்குறதூகு போட்டோ கொப்பி அடிக்கலாம்.

எங்கே எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ... :unsure: (அடுத்த இலங்கையின்ட நிதி அமைச்சர் எங்கன்ட சூறாவளி அண்ணா தான் :D )...எப்படின்னா இப்படி எல்லாம் உங்களாள திங் பண்ண முடியுது... :lol: (என்னால முடியல :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.