Jump to content

லிங்காஷ்டகம்


Recommended Posts

நீங்கள் விவாதிப்பதை விட ராமசாமியை திட்டுவதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் அப்படித்தான் தோன்றும் அன்பரே.

நீங்கள் செய்வதை விவாதம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். :rolleyes:

ஒரு விவாதத்தின் அடிப்படை ஆணித்தரமான கருத்துக்கள்

ஆணித்தரமான கருத்துக்களின் அடிப்படை அசைக்க முடியாத ஆதாரங்கள்

அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படை நல்ல ஆராய்ச்சி

நல்ல ஆராய்ச்சிக்கு அடிப்படை பல அறிஞர்கள் எழுதிய நூல்கள்

உங்கள் கருத்துக்களுக்கு ஆதாரமாக எந்த நூல்களையோ, நடுநிலையான ஆய்வாளர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளையோ, இல்லை மூல நூல்களில் இருந்து சில பகுதிகளையோ நீங்கள் இணைக்கவில்லை. பக்கசார்ர்பான பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை ஆதாரமாக வைக்கமுடியாது.

இங்கே மேற்கு நாடுகளில் பல்கலைகழகங்களில் பல்வேறு reliable references and tangible evidences இல்லாத விவாதங்களை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் செய்வதை விவாதம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். :rolleyes:

ஒரு விவாதத்தின் அடிப்படை ஆணித்தரமான கருத்துக்கள்

ஆணித்தரமான கருத்துக்களின் அடிப்படை அசைக்க முடியாத ஆதாரங்கள்

அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படை நல்ல ஆராய்ச்சி

நல்ல ஆராய்ச்சிக்கு அடிப்படை பல அறிஞர்கள் எழுதிய நூல்கள்

உங்கள் கருத்துக்களுக்கு ஆதாரமாக எந்த நூல்களையோ, நடுநிலையான ஆய்வாளர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளையோ, இல்லை மூல நூல்களில் இருந்து சில பகுதிகளையோ நீங்கள் இணைக்கவில்லை. பக்கசார்ர்பான பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை ஆதாரமாக வைக்கமுடியாது.

இங்கே மேற்கு நாடுகளில் பல்கலைகழகங்களில் பல்வேறு reliable references and tangible evidences இல்லாத விவாதங்களை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை

நீங்கள் எந்த அடிப்படையில் கடவுளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். எதாவது ஆதாரம் காட்ட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் முடியும் என்று சொல்லவில்லையே. நானும் சாதாரணமானவன் தானே.

ஆனால் இப்படியான பதிலளிக்கமுடியாத கேள்விகளுக்காகத் தான் அஞ்ஞானம் என்ற கோட்பாடு உருவாகியது. இயற்கையில் தானாகவே நடக்கின்ற மாற்றங்கள், அது மற்றவற்றோடு கொண்டிருக்கின்ற இசைவாக்கம், அது சிதைந்தால் ஏற்படும் இயற்கை அழிவுகள்(இப்போது அனுபவிக்கின்றோம்) போன்றவற்றைக கட்டுப்படுத்தும் 3ம் சக்தி தொடர்பாக எழுந்ததே கடவுள் என்ற கொள்கை

ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் புரியலாம். ஆனால் அது தான் கடவுள் என்றால் பொறுப்பாழியாக முடியாது. இப்போது நாம் கொடுத்திருக்கின்ற கடவுள் உருவத்திற்கு எவ்வித சம்ந்தமில்லாமலும் அவர் இருக்கலாம் ( என்ன கூடக் கதைக்கின்றனா?)

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் முடியும் என்று சொல்லவில்லையே. நானும் சாதாரணமானவன் தானே.

ஆனால் இப்படியான பதிலளிக்கமுடியாத கேள்விகளுக்காகத் தான் அஞ்ஞானம் என்ற கோட்பாடு உருவாகியது. இயற்கையில் தானாகவே நடக்கின்ற மாற்றங்கள், அது மற்றவற்றோடு கொண்டிருக்கின்ற இசைவாக்கம், அது சிதைந்தால் ஏற்படும் இயற்கை அழிவுகள்(இப்போது அனுபவிக்கின்றோம்) போன்றவற்றைக கட்டுப்படுத்தும் 3ம் சக்தி தொடர்பாக எழுந்ததே கடவுள் என்ற கொள்கை

ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் புரியலாம். ஆனால் அது தான் கடவுள் என்றால் பொறுப்பாழியாக முடியாது. இப்போது நாம் கொடுத்திருக்கின்ற கடவுள் உருவத்திற்கு எவ்வித சம்ந்தமில்லாமலும் அவர் இருக்கலாம் ( என்ன கூடக் கதைக்கின்றனா?)

***

- - -

மனிதன் அறிவு வளர வளர இயற்கையைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். அண்டவெளி மாறிக்கொண்டே இருக்கிறது நாள் தோறும். க்ளோபல் வார்மிங் பிரச்சனைக்கும் மனிதர்கள் காரணம். இப்படி நடப்பவைகளுக்கு கடவுள் தான் காரணம் என்றால் நான் பதில் எழுதுவது வீண் தானே நண்பரே.

Link to comment
Share on other sites

நீங்கள் எந்த அடிப்படையில் கடவுளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். எதாவது ஆதாரம் காட்ட முடியுமா?

கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை காண கண்ணாடி ஒன்று இருந்தால் தான் முடியும்

அதுபோல் உள்ளிருக்கும் இறையை உணர்த்தும் கண்ணாடி தான் தியானம்!!!

பயிற்சியும் முயற்சியும் எந்த கலைக்கும் வேண்டும்.

உன்னை கடந்தால் உள்ளே இருப்பது கட+வுள். ஆற்றைக்கடக்க ஓடம் வேண்டும்! உன்னை கடந்து உள்ளே செல்ல தியானம் வேண்டும்

இனிப்பு சுவையே அறியாத ஒருவன் இனிப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன செய்யலாம்? இனிப்பு பண்டத்தை வாங்கி கொடுக்கலாம். அதை அவன் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தால் அவன் இனிப்பை உணர்வது எப்படி?

நீங்களும் அப்படித்தான் கடவுளை காட்டு என்கிறீர்கள் நானும் இனிப்பை வாங்கி தருவது போல தியானம் செய்யுங்கள்! புரியும் என்கிறேன். ஐயோ மாட்டேன் என்றால் அது உங்கள் பிரச்சினை. Steering Wheel பிடிக்க முடியாது என அடம்பிடிப்பவன் காரோட்ட கற்றுக்கொள்ள முடியாது. அது போல் தான் இதுவும்

பிராணவாயுவை காட்ட முடியாது. ஆனால் மூக்கால் சுவாசிக்க முடியும். அது போல் ஒவ்வொன்றை உணரவும் வெவ்வேறு பொறிமுறைகள் உண்டு, அதை சரிவர செய்தால் உணர முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நினைவில் என்றும் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எங்கள் வீட்டில் மறைந்தவர்கள் படத்தின் கீழ் இப்படி எழுதுவோம் - "எங்கள் நினைவில் வாழும் எங்கள் அன்பு..." என.

மனிதன் அறிவு வளர வளர இயற்கையைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். அண்டவெளி மாறிக்கொண்டே இருக்கிறது நாள் தோறும். க்ளோபல் வார்மிங் பிரச்சனைக்கும் மனிதர்கள் காரணம். இப்படி நடப்பவைகளுக்கு கடவுள் தான் காரணம் என்றால் நான் பதில் எழுதுவது வீண் தானே நண்பரே.

அறிவியல் கடவுள் கொள்கையை நிராகரிக்கவில்லை. அதேபோல் நிரூபிக்கவும் முடியவில்லை. முடிவில அளவுள்ள அகிலத்தில் மனிதன் அறிந்து கொண்டவற்றுள் இருந்து இவற்றை தீர்மானிக்க முடியவில்லை என்பதும் மனிதனின் இருப்பு பூமியில் முடியும் முன்னராவது இதற்கு விடைகிடைக்குமா என்றால் அதுவும் தெளிவாகவில்லை.

***

கடவுளின் துகளைத் தேடி என்றொரு ஆய்வை ஐரோப்பாவை மையப்படுத்தி செய்ய இருக்கிறார்கள். எனவே விஞ்ஞானிகள் கூட கடவுளின் கொள்கை தொடர்பில் ஒரு அறுதியான முடிவெட்ட முடியாதவர்களாக இருக்கும் போது.. கடவுளின் துகளைத் தேடும் போது... நாம் மட்டும் நமக்கு நாமே பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு...??! பெரிய மனிதர்கள் என்று நாமமும் சூட்டிக் கொள்கின்றோம். என்ன பைத்தியக்காரத்தனம்..!

Dark matter and 'God particle' within reach

http://www.cosmosmagazine.com/node/1043

Link to comment
Share on other sites

அறிவியல் கடவுள் கொள்கையை நிராகரிக்கவில்லை. அதேபோல் நிரூபிக்கவும் முடியவில்லை. முடிவில அளவுள்ள அகிலத்தில் மனிதன் அறிந்து கொண்டவற்றுள் இருந்து இவற்றை தீர்மானிக்க முடியவில்லை என்பதும் மனிதனின் இருப்பு பூமியில் முடியும் முன்னராவது இதற்கு விடைகிடைக்குமா என்றால் அதுவும் தெளிவாகவில்லை.

***

கடவுளின் துகளைத் தேடி என்றொரு ஆய்வை ஐரோப்பாவை மையப்படுத்தி செய்ய இருக்கிறார்கள். எனவே விஞ்ஞானிகள் கூட கடவுளின் கொள்கை தொடர்பில் ஒரு அறுதியான முடிவெட்ட முடியாதவர்களாக இருக்கும் போது.. கடவுளின் துகளைத் தேடும் போது... நாம் மட்டும் நமக்கு நாமே பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு...??! பெரிய மனிதர்கள் என்று நாமமும் சூட்டிக் கொள்கின்றோம். என்ன பைத்தியக்காரத்தனம்..!

Dark matter and 'God particle' within reach

http://www.cosmosmagazine.com/node/1043

நெடுக்காலபோவான்,

***அறிவியலால் நிருபீக்க முடியாதை எவையுஉம் அறிவியல் அல்ல.

கடவுளின் துகளைத் தேடி என்பதில் பாவிக்கப்படும் 'கடவுள்' என்பது,

மனிதனால் திண்ம நிலையை அடையவைக்க கூடீய உப அணுத் துகள்களைக் கண்டு பிடிக்க முடியும் என்றால் அவன் கடவுள் ஆகிறான் என்னும் அர்தத்திலேயே அத்தகைய துகள்களுக்குக் கடவுளின் துகள் எனப் பெயரிடப்பட்டது.

புனை கதைகளை அறிவியலின் பெயரால் எழுதிப் பூச் சுற்ற வேண்டாம்.

ஐன்ஸ்ரயினின் சார்பு நிலைத் தத்துவம் திண்மமானது சக்தியாக மாற்றப்பட வல்லது என்று கூறுகிறது.குவான்ரம் இயற்பியலும் சக்தியும், திண்மமும் அணுவின் இரு வேறு வடிவங்களே என்று கூறுகிறது.இவை இந்த இரண்டு நிலைகளையும் அடைய எது காரணமாக இருக்க முடியும்.உதாரணத்திற்கு மின்காந்த சக்தியாக இருக்கும் போட்டோன்கள் எங்கனம் பொருளாக அல்லது திண்மமாக மாறக் கூடும் என்பதை விளக்க ஹிக்ஸ் போசோன் என்னும் துகள் காரணமாக இருக்கலாம் என்று முன் மொழியப் படுகிறது.அதாவது இந்த சக்தியும் திண்மமும் மாறும் ஹிக்ஸ்சின் பொறி முறையை சரி என்பதை நிரூபிக்க இது வரை கண்டு பிடிக்கப்படாத இந்த ஹிக்ஸ் என்னும் துகள் கண்டு பிடிக்கப்பட்டாக வேண்டும்.இந்த மாற்றத்தை உண்டு பண்ணும் ஹிக்ஸ் அணுத் துகளே , 'கடவுளின் துகள் ' என்று அறிவியலாளர்களால் சிலாகிக்கப்படுகிறது.ஒரு அணு பொருளாக இருப்பதற்கும், சக்தியின் வடிவமாக இருப்பதற்கும் அடிப்படையாக இருக்கக்கூடியது இந்த அணுத் துகளே என்று நம்பப்படுவதே இந்த பெயரிற்கான காரணம் ஆகும்.

இது வரை நடை பெற்ற அணு ஆர்முடுகல் பரிசோதனைகளில் இந்த ஹிக்சின் துகள் கண்டுபிடிக்கப் படவில்லை.இதைக்கண்டு பிடிப்பதற்காக உருவாக்கப்படதே Large Hadron Collider (LHC) என்னும் அதி சக்திவாய்ந்த அணு ஆர்முடுகி.இது ஜெனிவா நகரில் ஐரோப்பிய அணு ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்டு வருகிறது.இந்தக் கருவியே இந்த வருடத்தின் நவம்பர் மாதம் அளவில் இயக்கி வைக்கப்பட இருக்கிறது.

//

http://aatputhan.blogspot.com/2007/05/blog-post.html

//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னர் தந்த இணைப்பு போதுமான தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அறிவியல் அறிஞர்கள் அநாவசியமாக கடவுளின் துகள் என்ற நாமமிட வேண்டிய அவசியத்தில் இருக்கவில்லை. அதற்கு பெயரிட பல வழிவகைகள் இருக்கின்றன.

ஆனால் அறிவியல் அறிஞர்கள் குறிப்பிட்ட உப அணுத்துணிக்கைகளை கடவுளின் துணிக்கை என்று பெயரிட்டதன் மூலம் அவர்கள் கடவுள் என்ற கொள்கைக்கான அடிப்படையில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது..!

வலைப்பூப் பதிவுகளை ஆதார சகிதம் பதிவது அல்லது உசாத்துணைகள் சகிதம் பதிவது சிறப்பு என்பதுடன் திரிபுகள் மற்றும் கருத்துச் சிதைவுகளை தடுக்கும்..! :wub::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

They call it the God particle: a mysterious sub-atomic fragment that permeates the entire universe and explains how everything is the way it is. Nobody has ever seen the God particle; some say it doesn't exist but, in the ultimate leap of faith, physicists across the world are preparing to build one of the most ambitious and expensive science experiments the world has ever seen to try to find it.

என்று சொல்கிறது காடியன்.

கடவுள் என்ற கொள்கையை முற்றாக நிராகரித்திருப்பின் அறிவியலாளர்கள் கடவுள் என்ற பதத்தை அங்கு பாவித்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்த்திருப்பர். ஆனால்.. அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்த மாயைத்தனமான உப அணுத்துணிக்கைக்கு "கடவுளின்" துணிக்கை என்று பெயரிட்டுள்ளனர்.

அது கடவுளை நேரடியாக இனங்காணப்பயன்படப் போவதில்லை. மாறாக கடவுள் என்ற கொள்கை அடிப்படைக்குரியதால் பாவிக்கப்பட்ட அல்லது படும் துணிக்கையாக அது கண்டறியப்பால் இனங்காணப்படலாம் என்பதுதான் அதன் சாரம்..!

http://www.guardian.co.uk/science/2004/aug...nlifesupplement

It's probably the closest to God that we'll get," said Jos Engelen, Cern's chief scientist

http://www.guardian.co.uk/news/2006/nov/20...tories3.science

Link to comment
Share on other sites

முரளி,

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கும், நாசிய இனவாதக் கருத்துக்கும் என்ன சம்பந்த்தம்? கொன்சம் விளக்குங்கள்.

உங்களுக்கு இவை இரண்டையும் பற்றிய பிழையான புரிதலை ஏற்படுத்திய மூலம் எது? அதனைத் தாருங்கள் அல்லது இரண்டும் எவ்வாறு தொடர்பு படுகிறது என்று எழுதுங்கள்.

இந்த பிழையான புரிதலை பாடசாலையில் நான்கு மாதமாக சொல்லித் தந்தார்கள். உங்களுக்கு வேண்டுமானால் எனக்கு கற்பித்த பேராசிரியரின் மின்னஞ்சல் முகவரியை தருகின்றேன். அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

இந்த பிழையான புரிதலை பாடசாலையில் நான்கு மாதமாக சொல்லித் தந்தார்கள். உங்களுக்கு வேண்டுமானால் எனக்கு கற்பித்த பேராசிரியரின் மின்னஞ்சல் முகவரியை தருகின்றேன். அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள். :wub:

யாழ்க் களத்தில் எழுதினால் இங்கே தானே பதில் சொல்ல வேண்டும்?

படிபித்ததை நீங்கள் எவ்வாறு விளங்கி கொண்டீர்கள் ,எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினீர்கள் என்று கேட்டால் அதற்கான விளக்கம் நீங்கள் தானே கொடுக்க வேண்டும்?

யரோ ஒரு பேராசிரியர் என்ன பாடத்தில் எதன் அடிப்படையில் என்ன சொன்னார் என்று நாங்கள் எப்படி அறிந்து கொள்வது? :rolleyes:

Link to comment
Share on other sites

They call it the God particle: a mysterious sub-atomic fragment that permeates the entire universe and explains how everything is the way it is. Nobody has ever seen the God particle; some say it doesn't exist but, in the ultimate leap of faith, physicists across the world are preparing to build one of the most ambitious and expensive science experiments the world has ever seen to try to find it.

என்று சொல்கிறது காடியன்.

கடவுள் என்ற கொள்கையை முற்றாக நிராகரித்திருப்பின் அறிவியலாளர்கள் கடவுள் என்ற பதத்தை அங்கு பாவித்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்த்திருப்பர். ஆனால்.. அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்த மாயைத்தனமான உப அணுத்துணிக்கைக்கு "கடவுளின்" துணிக்கை என்று பெயரிட்டுள்ளனர்.

அது கடவுளை நேரடியாக இனங்காணப்பயன்படப் போவதில்லை. மாறாக கடவுள் என்ற கொள்கை அடிப்படைக்குரியதால் பாவிக்கப்பட்ட அல்லது படும் துணிக்கையாக அது கண்டறியப்பால் இனங்காணப்படலாம் என்பதுதான் அதன் சாரம்..!

http://www.guardian.co.uk/science/2004/aug...nlifesupplement

It's probably the closest to God that we'll get," said Jos Engelen, Cern's chief scientist

http://www.guardian.co.uk/news/2006/nov/20...tories3.science

//கடவுள் என்ற கொள்கையை முற்றாக நிராகரித்திருப்பின்

அறிவியலாளர்கள் கடவுள் என்ற பதத்தை அங்கு பாவித்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்த்திருப்பர்//

முதலில் அறிவியலில் எந்தப் பதத்தைப் பாவித்தாலும் அதற்கான தெளிவான வரைவிலக்கணம் இருக்கும்.இங்கே பாவிக்கப்பட்ட கடவுள் என்கிற வார்த்தைக்கு எந்த அறிவியல் ரீதியான வரைவிலக்கணமும் கிடையாது.அப்படி இருக்குமாயின் 'கடவுள்' என்பது அறிவியற்பூர்வமாக வரையறுக்கப்பட்ட நிறுவப்பட்ட ஒன்றாக இருக்கும்.இங்கே கடவுள் என்னும் வார்த்தைப் பிரயோகம் இந்த உபத் துகளுக்கு இடப்பட்டதற்கான காரணம் பொதுத் தளத்தில் கடவுள் என்னும் சொல்லுக்கு இருக்கும் பயன்பாட்டின் அடிப்படையிலையே பிரயோக்கிக்கப்பட்டது.ஒருவர் 'கடவுள்' என்பது இல்லாத ஒன்று என்று கூறும் போது அவர் கடவுள் என்னும் வார்த்தையைப் பிரயோகித்ததனால் கடவுள் என்பவர் இருக்கிறார் என்று அவர் சொல்கிறார் என்பது போல் இருகிறது .

மேற்காட்டிய கட்டுரைகள் அனைத்திலும் இது தெளிவாக் கூறப்பட்டுள்ளது.இவற்றை வைத்துக் கொண்டு அறிவியலில் கடவுள் என்பது நிறுவப்படுகிறது என்று சாரம், சேட் என்று புனைவதை நிறுத்தவும்.

மனிதனால் ' கடவுளின் 'துகளை காண முடிந்தால் ,பொதுத் தளத்தில் கடவுள் பற்றி இதுவரை வரையறுத்த எந்த மதமும் அவசியம் இல்லை என்பது நிறுவப்படுகிறது.இதுவரை எது கடவுள் என மதங்களால் புனையப்பட்டவை அனைத்தும் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனால் ' கடவுளின் 'துகளை காண முடிந்தால் ,பொதுத் தளத்தில் கடவுள் பற்றி இதுவரை வரையறுத்த எந்த மதமும் அவசியம் இல்லை என்பது நிறுவப்படுகிறது.இதுவரை எது கடவுள் என மதங்களால் புனையப்பட்டவை அனைத்தும் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

இந்த விளக்கம் முற்றிலும் தவறானது. கடவுளின் துணிக்கை என்பது கடவுளை கண்டுபிடித்துவிடத்தக்க துணிக்கை அன்று. கடவுள் என்ற கொள்கை அடிப்படைக்குரிய காரணி அகிலத்தில் பாவித்த அந்த மாயக் கூறு என்பதைத்தான் அது அடையாளப்படுத்தும்... ஒருவேளை அவ்வுபவணுத்துணிக்கை கண்டறியப்பட்டால்.

"It's probably the closest to God that we'll get," said Jos Engelen, Cern's chief scientist"

இதை இவ்வாய்வை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் சிரேஸ்ர விஞ்ஞானி இப்படிக் குறிப்பிட்டுள்ளார்..

அவர்கள் இவ்வாய்வின் மூலம் கடவுளை கண்டுவிடலாம் என்றோ கடவுளை மறுதலிக்கலாம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை..! :wub::rolleyes:

Link to comment
Share on other sites

அவர்கள் இவ்வாய்வின் மூலம் கடவுளை கண்டுவிடலாம் என்றோ கடவுளை மறுதலிக்கலாம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை..! :wub::rolleyes:

//கடவுள் என்ற கொள்கையை முற்றாக நிராகரித்திருப்பின் அறிவியலாளர்கள் கடவுள் என்ற பதத்தை அங்கு பாவித்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்த்திருப்பர்// :wub:

//அது கடவுளை நேரடியாக இனங்காணப்பயன்படப் போவதில்லை. மாறாக கடவுள் என்ற கொள்கை அடிப்படைக்குரியதால் பாவிக்கப்பட்ட அல்லது படும் துணிக்கையாக அது கண்டறியப்பால் இனங்காணப்படலாம் என்பதுதான் அதன் சாரம்..!// :wub:

ஆகவே கடவுளின் துணிக்கை என்று சொன்ன அறிவியலாளர்கள் , கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதை இப்போது ஏற்றுக் கொள்கீறீர்கள்.

அறிவியலில் ஒன்று இப்போது இருக்கிறது அல்லது இல்லை என்னும் இரண்டு நிலை தான் இருக்கிறது.இதுவரை அறியப்படாத எவற்றையும் அறிவியல் அறிந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ கருதுவதில்லை.அறியப்படாதன அறியப்படாதனவையாகவே கொள்ளப் படுகின்றன.

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தில் எழுதினால் இங்கே தானே பதில் சொல்ல வேண்டும்?

படிபித்ததை நீங்கள் எவ்வாறு விளங்கி கொண்டீர்கள் ,எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினீர்கள் என்று கேட்டால் அதற்கான விளக்கம் நீங்கள் தானே கொடுக்க வேண்டும்?

யரோ ஒரு பேராசிரியர் என்ன பாடத்தில் எதன் அடிப்படையில் என்ன சொன்னார் என்று நாங்கள் எப்படி அறிந்து கொள்வது? :rolleyes:

கூகிள், அது இது எண்டு நிறைய தளங்கள் இருக்கிது. தேடிப்பாருங்கோ. இதுக்கு மேல என்னால விளங்கப்படுத்த ஏலாது. மேலும் நான் $650 செலவு செய்து படிச்ச கோர்ஸ் இது. எண்டபடியால் எல்லாத்தையும் வெளியில இலவசமா சொல்ல ஏலாது. :wub:

Link to comment
Share on other sites

கூகிள், அது இது எண்டு நிறைய தளங்கள் இருக்கிது. தேடிப்பாருங்கோ. இதுக்கு மேல என்னால விளங்கப்படுத்த ஏலாது. மேலும் நான் $650 செலவு செய்து படிச்ச கோர்ஸ் இது. எண்டபடியால் எல்லாத்தையும் வெளியில இலவசமா சொல்ல ஏலாது. :wub:

கூகிளில தேடக் கூடியதுக்கு ஏன் மினக்கெட்டு ஒரு கோஸ் எண்டு 650 டொலர் செலவழிச்சனியள்?

ஆனா நிங்கள் சொன்னதைப் போல கூகிளில தேடின ஆப்பிடுறது அமெரிக்க கிரித்துவ அடிப்படைவாதிகளின் இணையத் தளங்களாத் தான் இருக்கும்.அந்தக் குப்பையைத் தான் நீங்கள் காசு கொடுத்துப்படிச்சியல் எண்டால் நீங்கள் படித்த பாடம் அமெரிக்க அடிபடைவாதக் கிருத்துவமாக இருக்க வேண்டும். நிச்சயமாக பரிணாம அறிவியற் பாடமாக இருந்திருக்காது.அதனால் தான் மேலும் விளக்கம் கேட்டேன், நீங்கள் நழுவுகிறீர்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமாக கடவுளைக் காட்டு என்று ஒருபுறமும், கடவுள் துகள் என ஒரு புறமுமாக விவாதம் விதன்டாவாதமாகிக் கொண்டிருக்கு.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என ஏற்கனவே சொன்னவர் பலர்!

இப்ப ஒரு விமானம் மட்டும் இருந்தால் போதும், உடனே பறந்துபோய் வெள்ளைமாளிகையில் இறங்கி புஸ்ஸைப் பார்க்கலாம், அல்லது கோல்பேசில இறங்கி கோத்தபாயாவைப் பார்க்கலாம் என்றமாதிரியிருக்கு. அதுகூட தற்போதய நிலையில் முடிகிற காரியமா? அதற்குக்கூட எவ்வளவு விதிமுறைகள் இருக்கு.

இப்படித்தான் இப்ப கொஞ்சக் காலத்துக்கு முன் கடவுளே இல்லையென்று சொன்ன நாத்திகவாதியான இளைஞருக்கு நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றார். இஞ்ச சும்மா இந்த ஆவியா, புகையாவெல்லாம் பேய்க் காட்டக்கூடாது என்று இவர் சொல்ல அவரும் சீ சீ அப்படியெல்லாமில்லை இதோ நீயும் நானும் நகமும் சதையுமா எப்படி எதிரெதிரே நின்று பேசிக்கொண்டிருக்கிறோமோ அப்படியே கடவுளை உனக்கு முன் நிப்பாட்டுகிறேன் என்று சொன்னார்.

அப்படியென்றால் அந்தக் கடவுள் நான் கேட்பதையெல்லாம் தருவாரா?

இதென்ன விளையாடுகிறாயா? அது தெய்வம் நீ எதைக் கேட்டாலும் தரும்.

சரி, அப்படியாயின் அத் தெய்வத்தை எனக்குக் காட்டுங்கள். கைவசம் நிறையப் பிரச்சனைகள் கிடக்கு எல்லாத்தையும் இப்பவே தீர்த்துப் போடுறன்.

சொன்னபடியே அவ் முதியவர் கண்முன்னே அவருக்கு கடவுளைக் காட்டினார்.

இவரோ அத் தெய்வ தரிசனத்தின் முன் எதையும்கேட்கத்தோன்றாமல் நின்றார்.

நீ கடவுளைப் பார்த்தாயா? வேண்டியதைக் கேட்டாயா பெரியவர் கேட்டார்.

ஆம் பார்த்தேன். எதையும் கேட்கவில்லை. தயவு செய்து இன்னொரு முறை!

சரி! மறுபடியும் தெய்வம் வந்தது. தரிசனம் மட்டும்தான்! இப்படியே மூன்று முறை நடந்தது.

என்ன இளைஞனே மூன்றுமுறையில் ஒருமுறை கூடவா உன்னால் நீ விரும்பியதைக் கேட்க முடியவில்லை.

ஆம் சுவாமி! அந்தத் திவ்ய தரிசனத்தின் முன் நான் கேட்க நினைப்பதெல்லாம் மகா அற்பமாகப் பட்டது.

இது எங்கோ புராண காலத்தில் நடந்ததல்ல, சமீப காலங்களில் நடந்தவை.

கடவுளைக் காட்டியவர் இராமகிருஸ்ன பரமஹம்சர்! கண்டவர் விவேகானந்தர்.

இது போலவே ஈழத்தில் யோகர்சுவாமி மற்றும் குடைச்சாமி பேன்றவரைக் குறிப்பிடலாம்.

மேலே ஒரு சகோதரி கூறியது போல் தியானம்,நல்லொழுக்கம், நல்ல கர்மாக்களைச் செய்வதன்மூலம் இறைவனின் தரிசனம் கிட்டும். இப்படித் தொடரும்போது சில காலத்திலேயே நல்ல அறிகுறிகளைக் காணமுடியும்.

எவ்வித முயற்சியுமின்றி எல்லாத்துக்கும் இல்லை, இது இல்லை, அது இல்லை என மறுப்பதாலோ அன்றி அதாரம் கொண்டு வா என அலறுவதிலோ பிரயோசனமில்லை. வாழ்வுதான் சேதாரமாகிப் போகும்!!!

Link to comment
Share on other sites

பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களின் மனிதரும் கடவுளும் என்னும் நூலில் இருந்து ஒரு பகுதி.

கடவுளா?

மத வாதி: உலகம் யாரால் ஆக்கப்பட்டது?

பகுத்தறிவு உலகம் ஆக்கப்பட்டது என்பதை நீ, முதலில் நீரூபிப்பாயா? நண்பா!

வாதி: உலகம் ஆக்கப்பட்டது என்று நிறுவிய பின் அல்லவோ, ‘யாரால்

ஆக்கப்பட்டது’ என்ற வினாவை நீ எழுப்பலாம்!

ம : அப்போ, உலகம் ஆக்கப்படவில்லை என்கிறாயா?

ப : ஆக்கப்பட்டதோ இல்லையோ அது எனக்குந் தெரியாது உனக்குந் தெரியாது

யாருக்குமே தெரியாது. எனவே, தெரியாத பொருள் பற்றி நாம் பேசிப்

பயனில்லை.

ம : ஏன், யாருக்குந் தெரியா தென்று அவ்வளவு அறிதியிட்டுக் கூறுகின்றாய்?

ப : காரணத்தோடுதான் கூறுகிறேன், இந்த உலகத்தின் மேலே பிறந்த நமக்கு,

இந்த உலகத்தின் தோற்றம் எப்படியப்பா தெரிந்திருக்க முடியும்? உலகம்

முந்தியது நாம் பிந்தியவர்கள்.

ம : அது சரிதான். ஆனால் நாம் ஒரு கட்டடத்தைப் பார்க்கிறோம்@ அதைக்

கொண்டு அக்கட்டடம் ஒருவரால் ஆக்கப்பட்டது என்று அனுமானிக்கிறோம்

அல்லவா? அது போல், இந்த உலகத்தையும் ஒருவர் ஆக்கியிருக்கிறார்

என்று ஏன் அனுமானிக்கக்கூடாது?

ப: நல்ல கேள்விதான்! இங்கே பார்@ வேறு கட்டடங்களை மனிதர்கள்

கட்டுவதை நாம், கண்ணால் முன்னமே பார்த்திருக்கிறோம் அதைக் கொண்டு

தான் இக்கட்டிடத்தையும் ஒருவர் கட்டியிருக்க வேண்டும் என்று

அனுமானிக்கிறோம். ஆனால், வேறு எந்த உலகத்தை யார் செய்ததைக்

கண்டு இவ்வுலகமும் ஒருவரால் செய்யப்பட்டது என்று அனுமானிப்பது? வேறு

உலகம் ஒருவரால் செய்யப்படுவதை நாம் கண்ணால் பார்க்க வில்லையே!

ம : உன் அறிவுத் தெளிவைக் கண்டு மெச்சுகிறேன்@ இன்னுமொரு ஐயம்,

கடவுள் தான் இவ்வுலகத்தை உண்டாக்கினார் என்று சொல்கிறார்களே,

அதைத் தெளியவைக்க வேண்டுகிறேன்.

ப : நல்லது சொல்கிறேன் கேள், இவ்வுலகத்தைக் கடவுள் உண்டாக்கினார்

என்றால், கடவுளை உண்டாக்கியவர் யார்?

ம : கடவுளை ஒருவரும் உண்டாக்கவில்லை. அவர், தொடக்க மின்றி -

அனாதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

ப: இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத ஒருவரால் - கடவுளால் உண்டாக்கப்

பட்டது என்று அனுமானித்து பிறகு அக் கடவுளை ஒருவரும் உண்டாக்க

வில்லை. என்று முடிவு கட்டுவதிலும் பார்க்க இவ்வுலகமே யாராலும்

உண்டாக்கப்படவில்லை. இது தொடக்கமின்றி (அனாதியாக) இருக்கிறது

என்று கூறுவது அறிவுடைமை யாகும் அல்லவா? இன்னுமொன்று, கடவுள்

என்ற ஒருவர் இருக்கிறார் என நிரூபித்த பின்னல்லவோ கடவுள்தான்

இவ்வுலகத்தை உண்டாக்கிறார் என்று கூற வேண்டும். கடவுள் இருக்கிறார்

என்று அவர்கள், முதலில் நிரூபிப்பார்களா?

ம : அப்போ, கடவுள் இல்லை என்பது தான் உங்கள் முடிந்த முடிவா?

ப : கடவுள் இருக்கிறார் என்றதற்கு ஆத்திகர்கள் இதுவரை சொன்ன

எல்லாவற்றையும் பொய்யும் பிழையும் என நிரூபித்து விட்டோம். எங்கள்

அறிவாலும் ஆராய்ந்து பார்த்தோம்@ அப்படி ஒரு கடவுள் இருக்கிறார் என்று

சொல்ல எந்த வகையான நியாயமான சான்றும் கிடைக்கவில்லை. எனவே,

மனதில் இல்லை என்று பட்டதை இல்லை என்கிறோம், இதில் தவறேனும்

உண்டா?

ம : கடவுள் இல்லை என்பதை எப்படி நீங்கள் ஆராய்ந்தீர்கள்?

ப : இல்லாததை இல்லை என்று சொல்ல அப்படி ஒன்றும் அதிக ஆராய்ச்சி

தேவை இல்லை நண்பா, என்றாலும் சொல்கிறேன் கேள்! நாம், ஒரு பொருளை

இருக்கிறது என்று ஒப்புக் கொள்வதாய் இருந்தால், அந்தப் பொருள் எங்கள்

ஐம்புலன்களில் ஒன்றிலாவது படவேண்டும் அதாவது அப்பொருள் எங்கள்

கண்ணில் தோன்ற வேண்டும், அல்லது காதில் ஒலிக்க வேண்டும், அல்லது

மூக்கில் மணக்க வேண்டும், அல்லது நாவில் சுவைக்க வேண்டும். அல்லது

உடம்பில் உறுத்த (பட) வேண்டும், இந்த ஐந்து வகையில் ஒன்றிலாவது

புலனுணர்ச்சியைத் தராத ஒரு பொருள். இருப்பதாக நாம் நம்புகிறோமா?

இல்லை! சிந்தித்துப்பார் எனவே தான் ஐம்புலனால் அறிய முடியாத கடவுள்

என்றொன்று இல்லை என்கிறோம்.

ம : இந்த உலகத்தையும் பொருள்களையும் உயிர்களையும் பற்றி உங்கள்

கருத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன்.

ப: ஐம்பெரும் பருப்பொருட்களின் (நிலம், நீர், தீ, காற்று, வான்) கூட்டினால்

இவ்வுலகப் பொருட்களும் உயிர்களும் தோன்றுகின்றன. இயற்கையின் ஒரு

ஒழுங்கின் படி செயல் படுகின்றன பின், பருப்பொருட்களின் பிரிவால்

அழிகின்றன.

உடம்பின் இயக்கத்தில் இருந்து பிறக்கும் ஒரு ஆற்றலே உயிர். இவ்வுடம்பின் இயக்கம் நிற்க ஆற்றலும் நின்றுவிடும்.

மனிதன் பிறக்கிறான்! இறக்கிறான். இந்த இடைக் காலத்தில் அவன் இன்பமாய் வாழ வேண்டும். எனவே அவன் தன்னுடைய வாழ்க்கையைப் பிறருக்குத் தீங்கில்லாத படிக்குத் திட்டப்படுத்தி ஒழுங்காக அமைத்துக் கொண்டு தானும் இன்பத்தைப் பெற்று மற்றவரும் இன்பம் பெறுதற்கு வேண்டிய உதவியை அன்போடும் பண்போடும் செய்து வாழ வேண்டும்.

ம : நண்பா! நீ சொன்னவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன்@ இன்று தொடக்கம்

நானுமொரு நாத்திகனாய் மாறி விட்டேன். இனி கடமை கண்ணியம் கட்டுப்பாடு

தவறாமல் உழைப்பதே என் வேலை. இன்னும் என் மனத்துள் ஐயங்கள்

எழுந்தால் உன்னை நாடுகிறேன் போய் வருகிறேன் வணக்கம்.

ப : வணக்கம் நண்பா, சென்று வா! வென்று வா

http://www.noolaham.net/project/02/155/155.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.