-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
ஐயா, பச்சை பச்சை என லஜ்ஜை இல்லாமல் பிச்சை புகும் எச்சை குணம் அறவே அற்றவர் பாஞ்ச் அவர் கருத்தில் தெறிக்கும் பன்ஞ்ச் என்பதை நான் அறிவேன். ஆனாலும், பாஞ்சின் கருத்தில் நான் கொண்ட இச்சை, கொடுக்க வேண்டியது மனம் பச்சை நிர்வாகம் என் ஆசைக்கு கட்டியது கச்சை. ஆகையால் வரிகளில் எழுதினேன் என் கருத்தை. பிகு நன்றி - டி ஆர் 🤣 -
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, ஆனி, 2007 இரு துணைப்படைக் கூலி குழுக்களிடையே மோதல் - அறுவர் பலி அம்பாறை மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த துணைப்படைக் கூலிகள் மீது போட்டித் துணைப்படைக் கூலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. அம்பாறையிலிருந்து பொத்துவில் நோக்கி இரு முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த கருணா துணைப்படைக் கூலிகள் மீது இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வைத்து போட்டித் துணைப்படைக் குழுவான பிள்ளையான் குழு மறைந்திருந்து தாக்கியதில் ஆறு கருணா துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அண்மைய நாட்களில் கருணா பிள்ளையான் ஆகிய துணைப்படைக் கூலிகளின் தலைவர்களுக்கிடையே நடந்துவரும் மோதலினையடுத்து, பொலொன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் எனும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கூலியின் குழுவினரில் 8 பேரை கருணா துணைப்படைக் கூலிகள் கடத்திச் சென்று கொன்றிருந்தனர். இதற்குப் பழிவாங்கும் முகமாகவே கருணா துணைப்படைக் கூலிகள் மீது பிள்ளையானின் அடியாட்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட தமது சகாக்களில் மூவரின் உடல்களைத் தூக்கிக் கொண்டு தப்பியோடிய கருணா துணைப்படைக் கூலிகள் ஏனைய மூவரையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் அந்த மூவரின் உடல்களை கோமாரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த 3 கருணா துணைப்படைக் கூலிகள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப் பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔
-
By Maruthankerny · Posted
தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும் அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும் எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள் மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.