Jump to content

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???


Recommended Posts

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

தொடர்ந்து படிக்க..........

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

http://isoorya.blogspot.com/

இல்லை! இல்லை! பகலிலும் எங்கள் பல்கலைகழகத்தில் நிறைய பேய்கள் நடமாடுகிறது. சிலவேளைகளில் காரில் லிப்டும் கேட்கிறது.

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பேய் என்டாலே ஒரேபயம். இரவில் நிழல்கள் அசைவதையே பேய் எண்டுதான் நினைக்கத்தோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

உங்களை யாரும் பேய்னு நினைச்சுடுவாங்களோ எண்ட பயம் உங்களுக்குள் இருந்திருக்குமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் கறுப்பி மாதிரிச் சிந்திக்கின்ற பெண்பிள்ளைகள் என்று யாருமில்லாததால் அப்படி எனக்கு நேரும் எனச் சிந்தித்ததில்லை.

பேய் வந்து வெள்ளை நிறம் என்று தானே சொல்வார்கள். நாம் அதற்கு நேர் எதிரான நிறம் என்பதால் அந்தப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

பேய் இரவில வெள்ளை..

பகல்ல கறுப்பு...

யாராவது பார்த்தவங்க..அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க உங்கள் அனுபவத்தை..

நம்பவும் முடியலை....நம்பாம இருக்கவும் விடுறீங்களான்னா இல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் லண்டன் பக்கம் வரவில்லையே விகடகவி.

Link to comment
Share on other sites

:) நம்ம ஜம்முபேபிக்கு நிறைய அனுபவம் இருக்குது. :lol:

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் இரவில் மட்டுமில்ல.. இருண்ட... பாழடைந்த இடங்களிலும் இருக்கும் என்பார்கள்.

ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. அதேன் பேய் பெண்களோடுதான் அநேகம் கூட்டுச் சேருது. இரண்டும் ஒரே ரகமா..??! பேய் ஓட்டிறம் என்று பெண்களைப் கட்டி வைச்சு வேப்பிலையால அடிக்கிறதை ஒரு தடவை பார்த்திருக்கிறேன்... அல்லது இரண்டும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றா..??!

அப்புறம் தமிழீழக் காவல்துறை அதை தடுத்து நிறுத்திட்டாங்க. இப்ப சிறீலங்கா இராணுவப் பேய் பிடிச்சிருக்கிறதால என்ன நடக்கோ தெரியல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் மட்டுமல்லாமல் பேய்களிடம் கூடப் பெண்கள் இலகுவாக ஏமாந்து போகின்றார் போலும்.

ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று அணுகாது என்று படிக்கவில்லையா நெடுக்ஸ். அது தான் ஆண்களிடம்.....

(என்ன ஆண்வர்க்கத்தில் இருந்து கொண்டு இப்படிக் கதைப்பதாக நினைக்கவேண்டாம். நெடுங்காலபோவனுக்காக 4 பக்கம் வர வைப்பதற்கான என் தனிப்பட்ட முயற்சி)

Link to comment
Share on other sites

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :huh::lol:

:D வசியண்ணா உதையேன் கேட்கிறியள். இப்போ எல்லாம் நான் எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்திலும் யாராச்சும் தெரியுறாங்களாஅ னு பேர்கிறேன் ல. அட கொஞ்சநாள் நான்பட்ட அவஸ்தை இருக்குதே சொல்ல முடியலையுங்கோ. :lol::lol: ரொம்ப ரொம்ப பயப்படுத்திட்டாங்க.

அடுத்தநாள் நீ நான் நிலா" இப்படம் நல்லா இருக்குமே னு நினைச்சு பார்த்தேன். அட பாவமே அதுவும் அதே நிலைதான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ண பேய் ஆவி பிசாசு பூதம் னு சொல்லி வெருட்டிவிடுறாங்க. தாங்க முடியலை

Link to comment
Share on other sites

தூயவன் நல்லா இருக்கு... :lol: இணைப்புக்கு நன்றி...

கண்ணாடி போட்டவர் நல்லா பயந்திட்டார்.. :lol:

இப்படி ஆக்களை வெருட்டிறது சரி.. ஆனா யாரிடமாவது

ஒருநாள் முறையா வாங்கிகட்டுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

நோவ் இதை ஏற்க முடியாது. மனிதரில ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க. அதாலதான் கொள்ளி வால் பிசாசுகள் அதிகம். மோகினிப் பிசாசுகள் குறைவு. முனி என்றும் ஒன்று சொல்வார்கள்...

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...! :lol::lol:

Link to comment
Share on other sites

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...!

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

Link to comment
Share on other sites

நான் இந்தக்கதைய முந்தியும் யாழில எழுதி இருக்கிறனோ தெரியாது. ஆனா சின்னனில நடந்த உண்மைச் சம்பவம். சொல்லிறன் கேளுங்கோ.

அப்ப நாங்கள் திருகோணமலை கோட்டையில கோணேசுவரர் கோயிலுக்கு பக்கத்தில இருந்தம். அப்ப எனக்கு வயசு அஞ்சு எண்டு நினைக்கிறன்.

ஒருநாள் விடியக்காலம்பற கீழ இருக்கிற என்னோட படிக்கிற பெடியன் வீட்டார் ஏதோ அல்லோல கல்லோலப்பட்டு சனம் எல்லாம் அந்தப் பக்கம் போச்சிதுகள்.

உங்களுக்கு தெரியும் தானே கோணேசுவரர் கோயிலுக்கு போகேக்க மேல மலை மாதிரி வருது. நாங்கள் அந்த மலையிண்ட இடையில இருந்தம்.

சத்தம் கேட்ட உடன நாங்களும் அப்பா, அண்ணா, அக்கா எல்லாரும் என்ன நடக்கிது எண்டு கீழ பாக்கப் போனம். அது சரியான லொக்கேசன் எங்க எண்டால் பிறகு அதில ஒரு புத்தர் கோயில் கட்டினவங்கள் தானே கோட்டையுக்க? அந்த புத்தர் கோயில் அடிவாரத்தில அவேண்ட வீடு.

அப்ப போய் அங்க பார்த்தா. எல்லாரும் சொல்லிச்சீனம் முனி அடிச்சதாம் எண்டு. அது என்ன முனி?

அது என்ன எண்டாலாம் ஒரு மரத்துக்க முனி இருந்ததாம். அந்த முனி மரத்த உடைச்சுக்கொண்டு வெளியில போனதாம் யாரோ கண்டவேளாம் எண்டு எல்லாம் கதை விட்டுக்கொண்டு இருந்திச்சீனம்.

அவேள் சொன்ன அந்த இடத்தில ஒரு பெரிய மரம் விழுந்து இருந்திச்சிது. மரம் எண்டால் மிகப்பெரிய மரம். சுமார் அம்பது அடி உயரம் கொண்ட பெரிய இராட்சத மரம் எண்டு சொல்ல வேணும்.

அதுல என்ன புதினம் எண்டால் உண்மையில மரத்துக்க பார்க்கேக்க ஒரு ஆளிண்ட உருவத்தில அதில உள்ளுக்க கோரையா - ஓட்டையா இருந்திச்சிது.

நாங்கள் தாவரவியல் படிக்கேக்க இப்பிடி மரத்துக்க துவாரம் - காற்று இடைவெளிகள் வாறது பற்றி படிச்சு இருக்கிறம் ஏ.எல் இல. ஆனாலும்..

அத இப்ப நினைச்சு பார்க்க எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கிது எண்டால் அந்த காற்று இடைவெளி எப்பிடி சரியாக கிட்டத்தட்ட இயற்கையாகவே ஒரு மனித உருவில் உருவாக்கப்பட்டு இருந்திச்சிது எண்டுறதுதான்.

அந்த மரம் பிளந்து போய் இருந்சிச்சிது. நான் நினைக்கிறன் என்ன எண்டால் பெரிய பழைய மரமா இருந்தபடியால் நல்லா காற்று அடிக்கேக்க விழுந்திடிச்சுது போல இருக்கிது. பக்கத்தில கடல் தானே. அப்ப அங்க ஒரே நல்லா காற்று வீசும்.

அவேள் அதுதான் அதுக்க முனி இருந்தது எண்டு சொல்லி இருக்கிறீனம்.

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

எனக்கு இந்த முனி, முனியாண்டி, பேய்களில நம்பிக்கை இல்லை. மனுசராகிய நாங்கள் தான் பேய்கள்! எண்டாலும் சின்னனில நடந்த இந்த சம்பவதை என்னால மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

நமக்கு நம்ம அம்மம்மா சொல்லி தத்திருக்காங்க. அவங்க படிக்கிற காலத்தில பிள்ளைகள் பள்ளிக்கு வரல்லைன்னா சொல்லுற காரணங்களே இதுதானாம். அந்த மரத்தடில மோகினி நிற்குது.. ரீச்சர் அதுதான் அம்மா ஸ்கூலுக்கு விடல்லை என்று. ரீச்சர் பயந்தில மோகினி எந்த மரத்தில, எங்க என்று ஆரம்பிக்க.. அதுவே அன்று ஸ்கூல் பூரா கதையா இருக்குமாம். அப்புறம்.. அந்த ஸ்கூலுக்கு வாற ஒற்றையடிப் பாதையில நின்ற புளிய மரம் தறிக்கப்பட்டு விடுமாம்.

அப்புறம் இன்னொரு நாள்.. ஏன் பிள்ளை நேற்று வரல்ல. ரீச்சர் வயலுக்கு போன இடத்தில கொள்ளி வால் பிசாசு சுட்டுடிச்சு என்றா போதுமாம்.. அடுத்த நாள் அந்த வயல்வெளிக்கால வாற ரீச்சர் வரமாட்டாவாம்.

இப்படி நிறைய இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நன்றாகத்தான் பேய்களைத்தேடுறீங்க. ஹீஹீ நல்லாக இருக்கு. :lol::lol:

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் நிச்சயமாக இதை நான் ஆமோதிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.