Jump to content

அழுக்கு!!


Recommended Posts

அழுக்கு!!

site03sx3.jpg

ஆக்கம் -

களவாஞ்சிகுடி யோகன்..!!

அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள். :lol:

"எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன்.

"இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?"

"ஏன் அங்கிள்?"

"ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்."

தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வருடப் பழக்கம்.செல்வன் அவுஸ்ரெலியா வருவதிற்கு ஊக்குவித்த நண்பன்,அவன் இங்கு வந்திறங்கிய பொழுது "சிட்னி" மாநிலதிற்கு வேலை பெற்று போயிருந்தான்.ஆனாலும் அவனின் நண்பனின் நண்பனொருவன் அவனுக்குச் சில அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்தான்.அந்த உதவியால் முதன் முதலில் வாடகை வீடோன்றுக்கு போன போது,பக்கத்துக் குடியிருப்பில் தெய்வேந்திரன் அங்கிளின் வீடு."ஊரிலே" டிப்போ ஒன்றில் வேலை செய்தவர்,கொஞ்சம் புளுகுதான் ஆனாலும் உதவி செய்யும் மனபான்மை உள்ளவர்."என்று அங்கிளை பற்றி அறையில் உள்ள சிநேகிதர்கள் செல்வனுக்குச் சொன்னார்கள்.புதுப் பொடியன் ஒருவன் வந்திருக்கிறான் என அறிந்து செல்வனைக் காண அங்கிள் வந்தார்."டை" அடித்த தலையிலே தொப்பியொன்றை அணிந்திருந்த அவர்,கதைக்கும் பொழுது பரஸ்பர அறிமுகத்திற்கும் பின்னர்,ஊரிலுள்ள பலரது பெயர்களைக் கூறியவர்களில் சிலரைத் தான் செல்வனுக்கு தெரிந்திருந்தது.ஆனாலும்,"நீர் நமது பிள்ளை தான்,உமக்கு என்ன உதவிகள் தேவைபட்டாலும் தயங்காமல்வாரும்."என்று கூறிவிட்டுப் போனார். :o

பின்னாளில் செல்வன் படித்து,வேலை பெற்று புது இடத்திற்கும் போய்விட்டான்.அங்கிளும் புதுவீடு வாங்கிக் கொண்டு பிறிதொரு ஊருக்கும் போயிருந்தார்.அப்படியிருந்து??் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்து கொண்டுதானிருந்தது.இரண்டு மாதங்களுக்குமுன் அங்கிள் தம்பதியினரின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.செல்வனுக்கும் அழைப்பு.பரிசுப் பொருட்களோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.

"அங்கிள் அலுவல்கள் இல்லாமல் அழைக்கமாட்டர்,ஞாயிற்றுக் கிழமை போனால் தெரிந்துவிடும்."நினைத்து கொண்டான்.பின்னேர வெயில் மறைந்துபோயிற்று,அங்கிளின் வீட்டுக்கும் போக ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது.செல்வன் கதவை திறந்தான்.வெளியே புருஷோத்....

"வா மச்சான்,உனக்கு கல்யாணமெல்லாம் முற்றாகியிருக்குதாம்."

"ஓமடா,கல்யாணமென்று ஏற்பாடு பண்ணியாட்டி,காசு தான் கையில் இல்ல,அது தான் உன்னட்டக் கொஞ்சம் மாறலாமென்று வந்தனான்."

"போன கிழம தான் ஊருக்கு காசு அனுப்பினனான்,இப்ப என்னட்ட காசு இல்லை மச்சான்."செல்வன் கூறினான்.

"இல்லடா செல்வா,உன்னை நம்பி தான் வந்தனான்,நீ சீட்டும் எடுத்த நீ என்று கேள்விபட்டனான்,எப்படியோ மாறியெண்டாலும் உதவி செய் மச்சான்."

செல்வன் ஆச்சரியபடும் விதத்தில் புகைபடத்திலே அந்தை பெண் அழகாய்த் தெரிந்தாள்.அவனுக்குப் பிடித்க்ட பச்சை நிறத்தில் சேலை உடுத்திருந்தாள்.குங்குமப்பொ??்டோடும் திருத்தமான அவயங்களோடு தெளிவாய்த் தெரிந்தாள் அவள்.புகைபடத்தைப் பார்த்து அவன் சற்றுத் தடுமாறியது உண்மை. :)

"என்ன சொல்கிறீர்?" தெய்வேந்திரன் அங்கிள் கேட்டார்.

"என்னுடைய முடிவு மட்டும் இறுதி முடிவு இல்லையங்கிள்.ஊரிலும் கேட்க வேணும்,

அதுவும் சரியென்றால் நான் ஊருக்கு போக இருக்கிறன்,போகிற போது இந்தப் பெண்ணைச் சந்தித்து இருவரும் மனம் விட்டுக் கதைத்து,விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து,இருவருக்கும் பிடித்துச் சம்மதம் என்று வந்தால் செய்யலாம் ஆனால் அதற்கிடையில் என்னைவிட நல்ல வரன் அமைந்தால் நீங்கள் செய்து கொடுங்கள் பிரச்சினையில்லை."என்றான் செல்வன்.

"எப்ப மட்டில் ஊருக்கும்போக இருக்கிறீர்?"அங்கிள் கேட்டார்,

செல்வன் குறிப்பாக போகும் நாள் பற்றி சொன்னான்..

"நீர் ஊருக்கு போய் பார்த்து முடிவு சொன்ன பிறகு தான் நாங்கள் வேறு வரன் பாக்கிறதப் பற்றி யோசிப்பன்,என்னப்பா?"என்று ஆன்ரி,அங்கிளின் துணையோடு சொன்னாள்.இருவரும் புறப்ப்ட ஆயத்தமானார்கள்.. :(

"இவ்வளவு வசதியான வீட்டில் நீர்மட்டும் தனியாகவா இருக்கிறீர்?,அதுவும் இந்த இடத்தில்?"புறபடும் போது அங்கிள் இரண்டு தடவைகள் கேட்டார்."ஏன் அங்கிள் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்,தனியாக இருந்துவிட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்கலாமல்லவா?"என்று சொல்லி விட்டான் செல்வன்..

ஒரு சனி கிழமை மதியம்.கல்யாண வீடொன்றில் செல்வன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.அப்பொழுது அங்கிளின் தொலைபேசி அழைப்பு.

"உம்மை பெண்வீட்டாருக்கும் பிடிக்கவில்லையாம்,அதனால் இந்த சம்பந்தத்தை நாங்கள் கைவிடுவோம்."என்று கூறிவிட்டுத் தொலைபேசியை துண்டித்துக் கொண்டார். :(

அங்கிளின் அன்புபிடியிலிருந்து விடுபட்டதில் செல்வனுக்கு ஓரளவு நிம்மதி ஆனாலும் என்ன காரணமாக இருக்க கூடும் என்ற நினைப்பு நெஞ்சிலே எழுந்தது."ஒருவனை என்னைவிடத் தகுதியான மாப்பிள்ளை அவர்களுக்கு கிடைத்திருக்க கூடும்."என்ற ஜதார்த்த சிந்தனையோடு அதை பற்றி மறந்திருந்தான்.

முருகன் கோவிலின் கும்பாபிஷேகத் தினம்.அலையலையாக மக்கள் கூட்டம்.செல்வனும் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்றான்,நிர்மல மூர்த்தி அண்ணணும் கோவிலிலே தென்பட்டார்.குடும்பத்தோடு அவர் சாமி கும்பிட வந்திருந்தார்.பல மாதங்களுக்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள்.

"எப்படி இருக்கிறீர் செல்வா?தெய்வேந்திரன் அங்கிள் கல்யாணமெல்லாம் பேசினவராமே?கேள்விபட்டேன்?"நிர்மலமூர்த்தி அண்ணன் கேட்டார்.அங்கிளோடு நெருங்கி பழகுபவர் நிர்மல மூர்த்தி அண்ணன்.அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் செல்வன்.ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்தவற்றை அவருக்கு சொன்னான்.

"பெண் வீட்டார் யாரும் உம்மை வேண்டாமென்று செல்லவில்லை அங்கிளுக்கு உம்மேல சந்தேகம்,அந்த இடத்தில் நீர் தனியாக வசிக்கிறீராம்,ஏன் இவர் தனியாக இருக்க வேண்டும்,நிறைய பெட்டைகளோடு இவருக்குத் தொடர்பு இருக்க வேண்டும்,அது தான் தனியாக இருக்கிறார் என்பது அவரின் கணிப்பு.அது போக நீர் இருக்கும் ஏரியாவில் விலைமாதர் விடுதியும் இருகிறதாம்,நீர் அங்கேயும் அடிக்கடி போய்வரக் கூடுமாம்,இந்தச் சந்தேகங்களோடு புருஷோத்திடமும் கேட்டிருக்கிறார்,அவனுக்கு உம்மீது என்ன கோபமோ தெரியாது,செல்வனுக்கு நிறைய பெட்டைகளோடு தொடர்பு இருக்கிறது தான் அங்கிள் அது தான் அவன் தனியாகவே இருக்கிறானென்று அவனும் சொல்லியிருக்கிறான்,அதனால் தான் அங்கிளே உனக்கு இந்த முடிவைச் சொல்லியிருக்கிறார்." :D

நிர்மலமூர்த்தி அண்ணணின் கதையை கேட்டுச் செல்வனுக்குக் கோபம் வரவில்லை.சிரிப்பு தான் அதிகம் வந்தது.ஆனாலும் புருஷோத்தும் இப்படி சொல்லியிருக்கிறானே என்று தான் வேதனை.

"கல்யாணதிற்குப் பண உதவி செய்யவில்லையென்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறான்,இவனெல்லா??் ஒரு சினேகிதன்."அலுத்துக் கொண்டான் செல்வன். :lol:

மழைதூறி கொண்டிருக்கிற மாலைபொழுது அது.காதுமடல்களைக் கூட விறைக்க வைக்கும் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.செல்வ

Link to comment
Share on other sites

யோகன் அண்ணா நலமா??

என்னை ஞாபகம் இருக்கிறதோ

என்னை விட அக்காவுக்கு தான்

உங்கள் எழுத்து மீது விருப்பம்

இருந்தாலும் அழுக்கு சிறு கதை

நன்றாகவே இருக்கிறது.

செல்வன் யார் நீங்களோ??

உங்கள் சிறு கதைகள் பலவற்றை அக்காவுடன்

சேர்ந்து வாசித்த ஞாபகம். :rolleyes:

Link to comment
Share on other sites

"அழுக்கு" கதை சுத்தமாகவே இருக்கின்றது. களுவாஞ்சிக்குடி யோகன் அவர்களின் கன்னி முயற்சி அருமை. பாராட்டுக்கள்

அட இது உண்மைச் சம்பவமோ? அப்போ தனிய வீட்டில் ஒரு ஆனோ பெண்ணோ இருந்தால் தப்பாமோ?

என்னமோ போங்கோ நான் செல்வனாக இருந்தால் தெய்வேந்திரன் அங்கிள் ( சீ அவரை அங்கிள் னு இனிமேல் சொல்ல வேணாம்) அவரைப் போய் 4 வார்த்தை நறுக்கென்று கேட்டிருப்பேன் ல. ஜஸ்ட்டு மிஸ்ஸு.

Link to comment
Share on other sites

கன்னி முற்சியோ வெண்ணிலா?

யாழ்ழ இது அவருடைய கன்னி முயற்றி பட் அவர் ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர்....

நல்லா இருக்கு யோகன் அண்ணா பட் உந்த பெறுசுகளாள நல்லா நொந்து போனிங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அழுக்கு" கதை சுத்தமாகவே இருக்கின்றது. களுவாஞ்சிக்குடி யோகன் அவர்களின் கன்னி முயற்சி அருமை. பாராட்டுக்கள்

ஜயோ பிள்ளை நீங்க ஊரில பேப்பர்கள் வாசிக்கிற பழக்கமில்லையோ இந்த மனிசனின்ட கதை வராத பேப்பரே இல்லை இது கன்னி முயற்சி இல்லை கிழவி முயற்சி அதாவது கனகதைகள் எழுதி போட்டு சும்மா நேரம் போகல்ல என்று யாழில எழுதி இருக்கிறார் போல.

இவர் ஒரு நல்ல படைப்பாளி,கலைஞன்,வானொலி அறிவிப்பாளர், மற்றும் புகழ் விரும்பாத படியால் தான் பேபிகளிட்டையே தன்ட படைப்பை கொடுத்திருக்கிறார் போல.

அட கதை எழுதுறது என்றா இப்படியா எழுத வேண்டும் உவ்வளவு நாளும் நான் எழுதினது எல்லாம் என்னவென்று எனக்கே விளங்கவில்லை. :rolleyes:

என்னை விட அக்காவுக்கு தான்

உங்கள் எழுத்து மீது விருப்பம்

இருந்தாலும் அழுக்கு சிறு கதை

நன்றாகவே இருக்கிறது.

பிள்ளை அக்கா வாசித்தா அக்கா தான் கருத்து எழுத வேண்டும் நீங்க வாசித்தா நீங்க கருத்து எழுத வேண்டும்,அது சரி அக்காவும் யாழிற்கு வாரவாவோ :):lol:

இப்படி எல்லாம் எழுதிட்டன் என்று பிறகு கொஞ்ச நாள் போக என்னையும் வெங்காயம் என்று திட்ட கூடாது சொல்லிட்டன் :lol:

Link to comment
Share on other sites

குறிப்பு -

யாழில் எனது முதற் சிறுகதை அன்புள்ளங்களிடமிருந்து ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்பார்கிறேன்...!!

ஜயோ பிள்ளை நீங்க ஊரில பேப்பர்கள் வாசிக்கிற பழக்கமில்லையோ இந்த மனிசனின்ட கதை வராத பேப்பரே இல்லை இது கன்னி முயற்சி இல்லை கிழவி முயற்சி அதாவது கனகதைகள் எழுதி போட்டு சும்மா நேரம் போகல்ல என்று யாழில எழுதி இருக்கிறார் போல.

கன்னி முற்சியோ வெண்ணிலா?

யாழ்ழ இது அவருடைய கன்னி முயற்றி பட் அவர் ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர்....

நான் வீரகேசரியில் களுவாஞ்சிக்குடியோகனின் கதைகள் வாசித்த நினைவு.

ஆனால் யாழில் இதுதான் முதற்சிறுகதை என்றதுகாக அபப்டி சொன்னேன்

Link to comment
Share on other sites

வணக்கம் ஜோகன் மாமா....கதை மிகவும் நன்றாக இருந்தது..(எழுத்து நடையை மிகவும் நன்றாக இரசித்தேன் :lol: )..யாழ்களதிற்காக கதை எழுதி தரும்படி கேட்க எழுதி தந்ததிற்கும் கள உறவுகள் சார்பாக நன்றிகள் ஜோகன் மாமா.. :D

கதை மிகவும் யதார்த்தமாக செல்கிறது..(அத்துடன் சமுகத்தில் நடந்த/நடக்கின்ற)...விடயத்தை கதையாக்கிய விதம் நன்றாக இருக்கிறது ஆனால் கதை முதல் பாதி மிகவும் சுவார்சியமாக நகர்ந்து சென்றதை அவதானிக்க கூடிதாக இருந்தது.. :D (இடையில் சற்று தொய்வு)..இது என்னுடைய கருத்து மற்றவர்களை பற்றி தெரியாது..இறுதியில் நன்றாக இருந்தது..(இடையில் கதை சுவாரசியம் சற்று குறைந்தது கதையின் மேல் இருந்த ரசனையை குறைத்ததாக கருதுகிறேன் :D )...அவ்வாறு இல்லாதுவிடில் கதை இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்பது எனது தனிபட்ட கருத்து...(இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க :D )..

மற்றும்படி கதை மிகவும் நன்றாக இருந்தது மிகவும் நன்கு ரசித்தேன்..(அது சரி ஜோகன் மாமா என்ன உங்களுக்கு நடந்த கதையோ :D )...அட நான் பகிடிக்கு.. :lol:

அத்துடன் கதையின் தலைப்பு "அழுக்கு" பெரிதாக எழும்பவில்லை என்று நினைக்கிறன் :D ஏன் இந்த தலைப்பை தெரிவு செய்தீங்க போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா.. :D

நன்றி!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு, உங்களின் கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடருங்கள்.

நுணா அண்ணா இது என்னுடைய கன்னி முயற்சி அல்லா... :D (பிரபல எழுத்தாளர் ஒருவரின் கதை)....யாழிற்காக கதை எழுதி தரும் படி கேட்டனான் கேட்டவுடனே எழுதி தந்தவர் :lol: ...உங்கள் வாழ்த்து அவருக்கு தான் போய் சேர வேண்டும்..(உங்கள் விமர்சனங்களையும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் :D )...நன்றி...(அது சரி ஜம்மு பேபி உப்படி எல்லாம் கதை எழுதுமா :lol: )...ரொம்ப கொடுமையாக்கும்..ஜம்மு பேபியின்ட கதை வந்து சிவப்பு ரோஜா ரேஞ்சில தான் இருக்கு.. :D (நிசமா என்னால முடியல்ல :D )...

கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்...(உங்கள் கருத்துக்கள் எல்லாம்)..சிறுகதையை எழுதியவரை சென்றடையும்... :D (அவர் உங்களுக்கு கருத்துகளை தெரிவிப்பார்)...அனைத்து உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பிள்ளை அக்கா வாசித்தா அக்கா தான் கருத்து எழுத வேண்டும் நீங்க வாசித்தா நீங்க கருத்து எழுத வேண்டும்,அது சரி அக்காவும் யாழிற்கு வாரவாவோ

இப்படி எல்லாம் எழுதிட்டன் என்று பிறகு கொஞ்ச நாள் போக என்னையும் வெங்காயம் என்று திட்ட கூடாது சொல்லிட்டன்

முடியல்ல மாமா...டிஸ் இஸ் டூ டூ மச் ஆக்கும்...(என்ன கொடுமை இது :D )...அது சரி இப்ப என்னதிற்கு அவாவின்ட அக்கா யாழிற்கு வந்தா தான் என்ன வராட்டி தான் என்ன...(இருங்கோ மாமியிட்ட போட்டு கொடுக்கிறேன் :lol: )...

வெங்காயம் என்று திட்டினதில தப்பே இல்லையப்பா :lol: ...(என்னால முடியல்ல :D )...மாம்ஸ் அவாவை விட்டிடுங்கோ...(என்ட தங்கச்சி ஆச்சே)...அது தான்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

புத்தன் அண்ணா,

அக்கா கதை வாசித்தால்

அக்கா தான் கருத்து எழுத

வேண்டுமோ..

அதை கேட்டு நானும் எழுதலாம் தானே

அக்கா ஆர்வமாக யாழ் வாசிப்பா

அதோடு நின்று விடுவா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா,

அக்கா கதை வாசித்தால்

அக்கா தான் கருத்து எழுத

வேண்டுமோ..

அதை கேட்டு நானும் எழுதலாம் தானே

அக்கா ஆர்வமாக யாழ் வாசிப்பா

அதோடு நின்று விடுவா. <_<

அக்கா வாசித்தால் என்ன ? அவ வின் கருத்தை கேட்டு நீங்களே எழுதி விடுங்கள். ஆனால் ஒன்று உங்க அக்காவையும் கெதியில் யாழில் இணைத்து , கருத்துக்களை எழுத வையுங்கள். அது உங்கள் சாமர்த்தியம்

Link to comment
Share on other sites

அதானே பாவம் நிண்டு கொண்டே இருந்தான்னா கால் நோக போது அட கப்பி அக்கா பீளீஸ் அவாவ இருக்க சொல்லுங்க...

Link to comment
Share on other sites

அதானே பாவம் நிண்டு கொண்டே இருந்தான்னா கால் நோக போது அட கப்பி அக்கா பீளீஸ் அவாவ இருக்க சொல்லுங்க...

அது சரி சுண்டல் அண்ணா அதை ஏன் நீங்க சொல்லாம கறுப்பி அக்காவிட்ட சொல்ல சொல்லுறியள்... :huh: (இது ரொம்ப கொடுமையாக்கும் :unsure: )...நிசமா என்னால முடியல்ல...(அட...அட சுண்டல் அண்ணாவிற்கு எவ்வளவு பாசம் பாருங்கோ கால் நோக போது என்று இருக்க எல்லாம் சொல்லுறார் :unsure: )...நல்லா நடத்துறியள்.. :unsure:

"ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி

இனி என்ன நான் செய்ய" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஜம்ஸ்! இதென்ன அழுக்கு என்று கொஞ்சம் அரக்கிப் போக நினைத்தேன். ஆனால் சுத்தம் நம்மை விட்டாலும் விடும், அழுக்கு விடாதுதானே! அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். தொட்டுட்டுது மனசை!!! நன்று! வாழ்த்துகள்!!! :D:D

Link to comment
Share on other sites

அட ஜம்ஸ்! இதென்ன அழுக்கு என்று கொஞ்சம் அரக்கிப் போக நினைத்தேன். ஆனால் சுத்தம் நம்மை விட்டாலும் விடும், அழுக்கு விடாதுதானே! அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். தொட்டுட்டுது மனசை!!! நன்று! வாழ்த்துகள்!!!

ம்ம்ம்...சுத்தத்திலும் விட அழுக்கில் தான் நிறைய மாட்டரே இருக்கு பெரியப்பா..(அது தான் சுத்தமா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு பாருங்கோ :unsure: )...அட நான் ஒவ்வொரு நாளும் குளிக்கிறனான் பாருங்கோ..மனசை பற்றி கொண்ட அழுக்கை துடைத்துவிட்டு தூய்மையாக வாசித்து கருத்து சொன்ன சுவி பெரியப்பாவிற்கு நன்றிகள்.. :D (மனதில் ஒற்றி கொண்ட அழுக்கை தூய்மையாக எழுதியவர் நானல்ல பெரியப்பா ஜோகன் என்னும் சிறுகதை எழுத்தாளர் :D )...உங்கள் பாராட்டு அவருக்கு தான் சென்றடைய வேண்டும்..(நான் யாழில அவரின்ட கதையை போட்டது மட்டும்தான் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுக்கு சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொருவர் மனங்களிலும் அப்பிக்கிடக்கும் அழுக்குகளைப்

போக்குவதற்கு அவரவர்தான் முயற்சிசெய்ய வேண்டும். எழுதிய யோகனுக்கும் எடுத்துவந்த யமுனாவுக்கும்

நன்றிகள் தொடர்ந்தும் யோகனுடைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

அழுக்கு சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொருவர் மனங்களிலும் அப்பிக்கிடக்கும் அழுக்குகளைப்

போக்குவதற்கு அவரவர்தான் முயற்சிசெய்ய வேண்டும். எழுதிய யோகனுக்கும் எடுத்துவந்த யமுனாவுக்கும்

நன்றிகள் தொடர்ந்தும் யோகனுடைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி கண்மனி அக்கா உங்கள் கருதிற்கு தொடர்ந்து வரும் காலங்களிள் ஜோகன் அண்ணாவின் ஆக்கங்களை இங்கே கொண்டு வருகிறேன்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சகோதரி கறுப்பி,

இதில் சாமர்த்தியம் எல்லாம் ஒன்றுமில்லை

அக்காவிற்கு நேரம் கிடைபதில்லை

அவ்வளவு தான். :D

சகோதரி ஒரு உதவி!!

எனக்கு பிடித்திருந்தா

நான் இருப்பேன் தானே

யாரும் சொல்லி தான்

இருப்பேன் என்று இல்லை

இதை அந்த நபரிடம்

சொல்லி விடுங்கோ. :D

Link to comment
Share on other sites

கப்பி அக்கா பதில் போட்டதுக்கு றொம்ப தாங்ஸ்னு சொல்லி விடுங்க... :unsure::wub:

Link to comment
Share on other sites

கப்பி அக்கா பதில் போட்டதுக்கு றொம்ப தாங்ஸ்னு சொல்லி விடுங்க... :):(

சுண்டல் அண்ணா உது தேவையோ... :unsure::wub::D:D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கங்கள.யாழிலே வெளியான எனது " அழுக்குகள்" சிறுகதையைப் படித்த அன்புள்ளங்கள் எல்லாருக்கும் இவ்வேளையில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன்.குறிப்பாக விமர்சனங்கள் எழுதிய உறவுகளுக்கு விஷேடமாக நன்றிகள் கூறும் தருணத்தில்,சில கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்குப் பதிலுமாக கீழே தொடர்கின்றேன். :lol:

யாழில் என்னை எழுதத் தூண்டியவர்கள் இருவர்.காணும்பொழுதெல்லாம் அன்பாக வற்புறுத்தியவர்கள் அவர்கள்.சுண்டலும்,ஜம்மு பேபியும் சொல்வதைத் தட்டுவது மிகவும் அரிது.ஏனென்றால் நீயுட்டனின் மூன்றாவது விதியை பார்க்கவும். :lol:

அதிலும் இரண்டு நாளைகுள் தரவேண்டும் என்று ஜம்மு பேபி தவணையும் தந்தான்.புறத்திலுள்ள அழுக்கை விட அகத்திலுள்ள அழுக்கினால் ஆபத்துக்கள் அதிகம்.மனதிலே புரையோடிகிடந்த கரு இரண்டு நாட்களில் "அழுக்காக" உருப்பெற்றது சரி விமர்சனங்களை பார்போம்.

சிறு இடைவேளைக்கு பின்னர் கனிஷ்டாவை யாழ் மூலம் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.அக்கா தான் அதிகமாக உங்கள் கதைகளை படிப்பார் என்று எழுதியிருந்தீர்கள்.ஏன் கனிஷ்டா உங்களுக்குக் கதைகள் பிடிக்கிறதில்லையா?உங்களுக்கு எழுத்து திறமை இருக்கிறது.அதை கொண்டு பொறுமையாக வாசிக்கலாமல்லவா?நன்றி கனிஷ்டா.செல்வன் நீங்களோ யோகன் அண்ணா? என்று கேட்டிருந்தீர்கள் ஏதோ அறிந்து விட்டுக் கேட்பது போல் இருக்கிறது கனிஷ்டா. :o

சுவைபடவும் சுருக்கமாகவும் என்னை ஊக்குவித்த நுணாவிலானுக்கு நன்றிகள்.. :D

கன்னி முயற்சி என்று தெரிவித்து,யாழிலே கன்னி முயற்சி என்று கூறி சுடச் சுடத் தெளிவாக விமர்சித்த வெண்ணிலா உங்களுக்கு இதயங் கனிந்த நன்றிகள்.அவரையெல்லாம் இனி "அங்கிள்" என்று கூப்பிடுவதே "வேஸ்ற்" என்ற பந்தியை வாசித்த போது சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடிவிட்டேன். :wub:

என்ன சுண்டல்?பெரிசுகளால் அதிகமாக நொந்து போனீர்களோ யோகன் அண்ணா?என்று கேட்டிருந்தீர்கள்.சுண்டலை விட சற்றுக் கம்மிதான். :lol:

புத்தன் அண்ணாவின் பாராட்டுக்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.அறிவிப்பு துறையில் இன்னும் கவனம் எடுக்க தூண்டியது உங்கள் பாராட்டு,நிச்சயமாக எழுத்திலும் என்னை மெருகேற்றுவேன் நன்றிகள்.அது சரி நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.எதிர்காலத்தி??் திறமையாகவும் எழுதுவீங்கள் என்று நம்புகிறேன். :wub:

தலைப்பே பிடிக்கவில்லை என்று ஜம்மு பேபி தெரிவித்திருந்தார்.புறத்தை பார்ப்பதை விட அகத்தை பார்த்து எடை போடுங்கள் சரியா.சில பந்தியை வாசித்து சுவாரஷ்யமாக நகர்த்த முடியவில்லை என்று சொல்லியிருந்தீர்கள்.அந்த துணிச்சலிற்கு சபாஷ்.உண்மையில் நானும் இதை ஒப்பு கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.விஷய மென்னவென்றால் முக்கியமான திருப்பத்தில் சுவாரஷ்யம் தேவைபடாது என்று நினைத்தன்.அது தவறு என்று அறிவித்ததிற்கு பாராட்டுக்கள்.. :(

சுவி,நீங்களுமா புற அழுக்கைக் கண்டு ஓட நினைத்தீர்கள் நல்ல வேளை நெருங்கி வந்து வாசித்து விமர்சித்த தருணதிற்கு அன்பான நன்றிகள். :lol:

காவலூர் கண்மணி,எமது ஆக்கத்தை எதிர்பார்க்கிறார் என்ற போது மிக்க மகிழ்ச்சியடந்தேன்.உங்கள் ஆக்கங்களையும் நாம் கூர்ந்து நோக்குகிறோம் தயவு செய்து அடிகடி எழுதுங்கள். :lol:

நன்றி!!

களவாஞ்சிக்குடியோகன்..

Link to comment
Share on other sites

ஹீஹீ களுவாஞ்சிக்குடி யோகன் தனது கதைக்கு கருத்துக்கள் சொன்னவர்களுக்கு பதில் கூறியிருக்கின்றார் ஜம்மு மூலம். நன்றிகள் ஜம்மு. :wub:

அவரையெல்லாம் இனி "அங்கி" என்று கூப்பிடுவதே "வேஸ்ற்" என்ற பந்தியை வாசித்த போது சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடிவிட்டேன்

அவரை அங்கிள் என்று கூப்பிடுவது வேஸ்ட் என்பது என் கருத்து. இருப்பினும் உங்கள் பெருந்தன்மையால் நீங்கள் அவர் சொன்னால் சொல்லிட்டு போகட்டும் அவர் அங்கிள் ஆச்சுதே அவருக்கு மதிப்பு கொடுக்கணும் வயதுக்கு மதிப்புக்கொடுக்கணும் என நினைச்சு அவர் செய்த சதியை மறந்து அவரை அங்கிள் என்று கூப்பிடணும் எனில் கூப்பிடலாமே. ஏன் திண்டாடுறிங்க. திண்டாடாதையுங்கோ களுவாஞ்சிக்குடி யோகன். :wub:

அதுசரி நீங்கள் வெண்ணிக்கு அங்கிளா அண்ணாவா? வெண்ணி எபப்டி கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்? :D:lol:

ஜம்ஸ் ஆன்சர் ப்ளீஸ் :o

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா அக்கா எனக்கு எதுகப்பா நன்றிகள் :) ..(முடியல என்னால :lol: )...ம்ம் தாரளாமாக நிலா அக்கா நீங்க கேட்ட கேள்வியை அவரிடம் சமர்பிக்கிறேன் :lol: ..(பதில் சில நேரம் தாமதமாகும் பிரச்சினை இல்ல தானே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா அக்கா எனக்கு எதுகப்பா நன்றிகள் :) ..(முடியல என்னால :D )...ம்ம் தாரளாமாக நிலா அக்கா நீங்க கேட்ட கேள்வியை அவரிடம் சமர்பிக்கிறேன் :( ..(பதில் சில நேரம் தாமதமாகும் பிரச்சினை இல்ல தானே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

:lol: அவர் சொன்ன கருத்துக்களை ஜம்முபேபி சிரமம் பாராமல் இங்கு பதிஞ்சமைக்குந் அன்றி சொன்னேனுங்கோ. ஏன் தாங்க முடியலை?

ஓ தாமதமாக தான் பதில் வருமா. சரி எப்படின்னாலும் பதில் வரணும். சரியோ பேபி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.