Jump to content

காதல் வானம் -ஒரு பாடகரின் பயணம்


Recommended Posts

கொழும்பிலிருந்து கோடம்பாக்கம்: ஒரு பாடகரின் பயணம்

குண்டுவெடிப்பு சப்தங்களால் கோமா நிலைக்கும்போகும் செவிகளை தனது இன்னிசை மழையில் உயிர்ப்பிக்க செய்யும் உன்னத காரியத்தை செய்து வருபவர் பாடகர் சிவக்குமார்.

இவரது பூர்வீகம் கொழும்பு. அக்னி சிவக்குமார் என்றால் இலங்கையில் தெரியாத ஆட்களே இல்லையாம். இவர் நடிக்கும் இசைக்குழுவின் பெயர்தான் அக்னி. பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்த பாட்டு ஆர்வம் இன்று சினிமா பாடகர்வரை வளர்த்துவிட்டுள்ளது.

இலங்கை வானொலிகள், தொலைக்காட்சி தொடர்கள் என இவரது பாட்டு பயணம் நெடுந்தொலைவு. 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாடகர் மனோதான் சிவாகுமாரின் இன்ஸ்பிரேஷனாம். இவர் நடத்தி வரும் இசைகுழுவில் தமிழ் பின்னணி பாடகர்-பாடகிகள் பலர் பாடியுள்ளனராம்.

'ஜிக்கி, சுசிலாவுடன் இணைந்து பாடிய பாக்கியமும் உண்டு' என்னும் சிவக்குமார் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆர்கெஸ்ட்ரா, ஆல்பம் என்ற வட்டத்துக்குள்ளிருந்து எப்போது வெளியே வரப் போகிறாய்? பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீதிடமிருந்து வந்த இந்த கேள்வி சிவக்குமாரை இப்போது சினிமாவுக்குள் தள்ளியுள்ளது.

சிங்களத்தில் ரீமேக் ஆகும் 'காசி' படத்தில் அனைத்து பாடல்களையும் பாடி பின்னணி பாடகர் என்ற அந்தஸ்திற்கும் உயர்ந்துள்ளார். கனடாவில் வெளியான இரண்டு படங்களிலும் பாடியுள்ள சிவக்குமாரின் அடுத்து குறி தமிழ் சினிமாதான்.

இதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் சென்னை வந்திறங்கிய சிவக்குமார் பல இசையமைப்பாளர்களிடமும் வாய்ப்புக்கான அச்சாரம் போட்டு வைத்துள்ளார். இருப்பினும் சிவக்குமாரின் திறமை கண்டு வியந்து முதல் வாய்ப்பை அளித்துள்ளார் இசையமைப்பாளர் உதயா. பீஸ்மர், காதல்கடிதம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள உதயா தற்போது வசீகரன் எழுதும் 'காதல் வானம்' என்ற ஆல்பத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதில் "எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்..." என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடலை பாட புதிய குரல் ஒன்று தேவைப்பட்டது. உதயாவின் தேடலில் தென்பட்ட தேன்குரலுக்கு சொந்தக்காரர் சிவக்குமார்தான்.

பாடல் பதிவின்போது அங்கிருந்த நம்மையும் உருகச்செய்தது சிவக்குமாரின் கானம்.

By Amalan -www.cinesouth.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொலகின்ற சிவக்குமார், நிலுக்ஸியின் கணவரா? நிலுக்ஸியின் மேடைகளில் பாடிய நிகழ்ச்சிகள் பார்த்திருக்கின்றேன். அப்போது, சிவக்குமாரும் பாடியிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.