Jump to content

பிரான்ஸ் உள்ளுராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி


Recommended Posts

பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம்.

1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமான வீடுகளில்(அறைகளில்) வாழந்;ந்தார்கள் பின்னர் அவர்கள் அரசியல் அகதி அந்தஸ்தை பெற்று தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கே உள்ள முயற்சியும், சிக்கனமும் சேர தமக்கென வியாபார தொகுதியை லாசப்பலில் ஏற்படுத்திக்கொண்டனர் பாரிஸில் நெருக்கமான வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் வசதிகருதி புறநகர்பகுதிகளில் குடியேறிக்கொண்டனர். புறநகர்பகுதிகளில் குடியேறிக் கொண்ட தமிழர்கள் தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள பல சமூகஅமைப்புகளை உருவாக்கி சமூகமட்டத்திலும், கிராமமட்டத்திலும் பலமுன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு தம்மை ஒரு அசைந்துகொணடிருக்கும் இனமாகவும் மற்றைய இனத்தினரிடையே அடையாளப்படுத்திக் கொண்டனர் .

இன்று எமது இளம் தலைமுறையினர் பிரஞ்சுத்தமிழர்களாக வாழத் தொடங்கிவிட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வாழப்போகியார்கள். இவர்களின் கல்வியும் உழைப்பும் பொருளாதார பலத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கான பாதுகாப்பு அரசியல்பலத்தில்தான தங்கியுள்ளது அதற்கான அடிப்டைஅரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தும் முகமாக 2008 இல் நடைபெறும் மாநகரபபை தேர்தலில் எம் இனத்தவர்கள் வேட்பாளர்களாக 14 நகரசபைகளில் 16 பிரதிநிதிகள் இணைத்துக்கொண்டுள்ளார்கள். இவர்களை மாநகரசபைளில் பிரதிநிதிகளாக்கி எமக்கான அரசியல் களத்தை நாம்திறந்து விடல் வேண்டும். இதற்கான ஒழுங்குகளை 61 தமிழ்ச்சங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டமைப்பான பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற அமைப்பு செய்துவருகின்றது.

வேட்பாளர்கள் விபரம்

(Argenteuil)(95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்

(Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம்

Goussainville(95190) குசான்வீல். செல்வி ரம்ஜா ஜெயமோகன்

Villiers Le Bel(95400) வில்லியே லூபெல் திருமதி தங்கா பாஸ்கரன்

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடது)

Garges les Gonesses(;95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்

La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன்

செல்வி சரணியா

செல்வி மதுரா

Aulnay Sous Bois(93600) ஒலுனே சூ புவா செல்வி தட்சாயினி தேவராஜ

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம்

Paris 8°(75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்

Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா

Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு

(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி

Link to comment
Share on other sites

இதென்ன ஒரு பிரான்ஸ்காரரும் தேர்தலில் நிக்கமுடியாத மாதிரி இவ்வளவு தமிழர் நிற்கினம். .

இவை எல்லாம் எங்க இருந்து முளைச்சவை?

Link to comment
Share on other sites

நேசன் இது நகரசபைக்கான தேர்தல் அதுவும் பிரான்ஸ் தலைநகரத்தில் ஒரு பிரிவிலும் அதன் சுற்றுப்புற நகரங்களில்சில இடங்களில் மட்டுமே இந்தத் தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுகின்றனர் எனிவரும் கால்களில் தேவையேற்படின் பிரான்சின்எல்லா நகரங்களிலும் இப்படி திடீரெண்டு முளைப்பார்கள் <_<:(

Link to comment
Share on other sites

அரசியல் ரீதியாக தமிழர்கள் முன்னுக்கு வருவது நல்லது தான் கடைசியில் காலை வாராத வரை. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியல் ஜெயதேவன் மாதிரி யாராவது இருந்தா இப்பவே நாமம் போட்டு அனுப்பி விடுங்கோ, பிறகு கரைச்சல் படாமல்.

Link to comment
Share on other sites

பிரான்சில் இந்த ஆண்டு நடைபெறும் மாநகர சபைத் தேர்தலில் 14 நகர சபைகளில் தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று திரள்வோம் தமிழர்களே

வாருங்கள்

Link to comment
Share on other sites

ஒன்று திரள்வோம் தமிழர்களே

வாருங்கள்

இந்:த செய்தியை வெளியிலை அதாவது தமிழ் ஊடகங்கள்எண்டு சொல்லுறவை ஊடாக கொண்டு வர பட்ட பாடு இருக்கே சொல்லி தீராது இதுக்கை ஒன்று படுவோம் உருப்படுவோம் எண்டு கோசம் வேறை :huh::huh:

Link to comment
Share on other sites

dsc01254zf3.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

dsc01237jt7.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

dsc01229pz7.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

20080306003um4.jpg

படங்கள் சிறிதாக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, நீங்களும் எலெக்ஷனில நிக்கலாமே? நீங்கள் தானே ஐரோப்பாவில இப்ப பிரபலமான ஒரு புள்ளி. இல்லாட்டி உங்கட பெயரும் இதுக்க இருக்கிதோ??

(Argenteuil)(95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்

Garges les Gonesses(;95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்

La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன்

Paris 8°(75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்

உதுல எது உங்கட பெயர்?

வேட்பாளர்கள் 16 பேருல ஆக 04 பேர் தான் ஆண்களோ? மிச்சம் எல்லாரும் பெண்களோ? ஆச்சரியமாய் இருக்கிது.

நான் நினைக்கிறன் என்ன எண்டால், பிரான்ஸில இருக்கிற தமிழ் ஆண்களை விட தமிழ் பெண்களுக்குத்தான் ஒழுங்கா பிரென்ச் லங்குவேஜ் கதைக்க தெரியுமாக்கும். இல்லாட்டி வேற ஏதும் காரணமோ?

Link to comment
Share on other sites


(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி 

சாத்திரி மேற்கண்ட பெயர் ரவீந்திரநாத் கலையரசியா? ரவீந்திரநாதன் கலையரசியா?

தயவுசெய்து விபரம் தரவும் நன்றி

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, நீங்களும் எலெக்ஷனில நிக்கலாமே? நீங்கள் தானே ஐரோப்பாவில இப்ப பிரபலமான ஒரு புள்ளி. இல்லாட்டி உங்கட பெயரும் இதுக்க இருக்கிதோ??

வேட்பாளர்கள் 16 பேருல ஆக 04 பேர் தான் ஆண்களோ? மிச்சம் எல்லாரும் பெண்களோ? ஆச்சரியமாய் இருக்கிது.

நான் நினைக்கிறன் என்ன எண்டால், பிரான்ஸில இருக்கிற தமிழ் ஆண்களை விட தமிழ் பெண்களுக்குத்தான் ஒழுங்கா பிரென்ச் லங்குவேஜ் கதைக்க தெரியுமாக்கும். இல்லாட்டி வேற ஏதும் காரணமோ?

கலைஞன் நான் எலெக்சனிலை நிக்கேல்லை காரணம் என்னாலை கன நேரம் நிக்க இயலாது கால் உளையும்.அடுத்ததாக பிரான்சில் நீங்கள் சொன்னதைபோல ஆண்களைவிட பெண்களிற்குதான் பிரெஞ்சு மொழி கதைக்கத் தெரியும் காரணம் ஆண்கள் தாங்கள் வந்த உடைனையே ஏதாவது வேலையை தேடிக்கொண்டு மனிசிமாரைத்தான் படிச்பிச்சவை அதுதான் காரணம் :lol::lol:


(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி 

சாத்திரி மேற்கண்ட பெயர் ரவீந்திரநாத் கலையரசியா? ரவீந்திரநாதன் கலையரசியா?

தயவுசெய்து விபரம் தரவும் நன்றி

ரவீந்திரநாத் கலையரசி என்றுதான்எனக்கு விபரம் தரப்பட்டது.ரவீந்திர நாதன் என்கிற அவரது பெயர் இங்கு பதியப்படும்போது சில எழுத்தகள் வெட்டப்பட்டிருக்கலாம். எனக்கும் அப்படிநடந்திருக்கு பாதிபெயரோடைதான் திரியிறன் நானும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்கள் பற்றிய புளகாங்கிதம் நல்லதுதான். நம்மவர்கள் ஈழத்தமிழர்கள் என்றால் பாண்டிச்சேரி, மொறிசியஸ், மலேசியத் தமிழர்கள் யார். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லையா. நம்மவர் என்பவர் பின்னர் நம் ஊரவர், நம் சாதியர் என்றும் மாறிச்செல்லலாம் அல்லவா?. நம்மவர் ஈழத்தமிழரைக் குறிக்கின்றதா? அல்லது நம்ம யாழ்பாண வெளள்ளாரை குறிக்கின்றதா? எதனைக் குறிக்கிறீர்கள். விளக்கம் குறைவாக இருக்கின்றது. எனக்கு விளங்காமலும் இருக்கலாம். சாத்திரி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகர்கள், சமூகவியலாளர்கள் கொஞ்சம் விளக்கமளிப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நம்மவர்கள் பற்றிய புளகாங்கிதம் நல்லதுதான். நம்மவர்கள் ஈழத்தமிழர்கள் என்றால் பாண்டிச்சேரி, மொறிசியஸ், மலேசியத் தமிழர்கள் யார். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லையா. நம்மவர் என்பவர் பின்னர் நம் ஊரவர், நம் சாதியர் என்றும் மாறிச்செல்லலாம் அல்லவா?. நம்மவர் ஈழத்தமிழரைக் குறிக்கின்றதா? அல்லது நம்ம யாழ்பாண ஆணவச்சாதியைக் குறிக்கின்றதா? எதனைக் குறிக்கிறீர்கள். விளக்கம் குறைவாக இருக்கின்றது. எனக்கு விளங்காமலும் இருக்கலாம். சாத்திரி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகர்கள், சமூகவியலாளர்கள் கொஞ்சம் விளக்கமளிப்பார்களா?
Link to comment
Share on other sites

ரொம்ப முக்கியம். இப்போ விளக்கம் தந்தவுடன் எல்லாம் விளங்கி விடுமோ?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணவிலான் :

ரொம்ப முக்கியம். இப்போ விளக்கம் தந்தவுடன் எல்லாம் விளங்கி விடுமோ

சரியாகச் சொன்னீர்கள் நுணவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவுக்கொழுந்துகாள் உங்கள் விளக்கங்ளை முதலில் முன்வையுங்கள். இந்த தேர்தலுக்கு முன் (உங்கள் மொழியில் நம்மவர்கள் அல்லாத) தமிழர்கள் இங்கு தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார்களா? நீங்கள் அறிவீர்களா? ஈழத்தமிழர் அதாவது நம்மவர் தவிர வேறு தமிழர்கள் இந்த தேர்தலில் (2008)போட்டியிடவில்லையா? அவர்களையும் நாம் நம்முடன் இணைத்தால் தமிழ்ஈழக் கோரிக்கைக்கு வலுச்சேர்கலாமல்லவா? கத்தியை தீட்டாமல் கொஞ்சம் புத்தியையும் தீட்டுங்கள்.

Link to comment
Share on other sites

ஓ, தாங்கள் புத்தியை நல்லாக தீட்டி தான் நம் சாதி, ஆணவ சாதி என்ற பதங்களை பாவித்தீர்களோ? . கேட்கும் விதமே தமிழீழத்துக்கு வலு சேர்பதற்கான எந்த அறிகுறியும்( உங்களுடைய எழுத்தில்) இல்லையே.

Link to comment
Share on other sites

கலைஞன் நான் எலெக்சனிலை நிக்கேல்லை காரணம் என்னாலை கன நேரம் நிக்க இயலாது கால் உளையும்.அடுத்ததாக பிரான்சில் நீங்கள் சொன்னதைபோல ஆண்களைவிட பெண்களிற்குதான் பிரெஞ்சு மொழி கதைக்கத் தெரியும் காரணம் ஆண்கள் தாங்கள் வந்த உடைனையே ஏதாவது வேலையை தேடிக்கொண்டு மனிசிமாரைத்தான் படிச்பிச்சவை அதுதான் காரணம் :wub::wub:

இது பிரான்சில மாத்திரம் இல்ல சாத்திரி அண்ணை...

கனடா,டென்மார்க்.. எண்டு எல்லா இடமும் இதே நிலமைதான். பொண்ணுகள் பெடியள விட மொழியில புலமை பெற்று இருக்கிறீனம்.

வெளியில சொன்னால் வெக்கக்கேடு. இனியாவது அப்ப பொண்ணுங்கள கிண்டல் செய்யாமல் அடக்கி வாசியுங்கோ.

எனக்கு தெரிஞ்ச கனவீடுகளில ஏதாவது கோல் வந்தால் மனுசிமார் தான் எடுக்கிறது. புருசன்மார் கோல் சத்தத்த கேட்டதும் மைந்திக்கொண்டு இருக்கிறது. ஏன் எண்டால் பலருக்கு மொழிப்பிரச்சனை. அதுவும் பிஸ்னஸ் கோலுகள் எண்டால் சொல்லி வேலை இல்லை. ஆண்கள் நிலமை பரிதாபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா,டென்மார்க்.. எண்டு எல்லா இடமும் இதே நிலமைதான். பொண்ணுகள் பெடியள விட மொழியில புலமை பெற்று இருக்கிறீனம்.

வெளியில சொன்னால் வெக்கக்கேடு. இனியாவது அப்ப பொண்ணுங்கள கிண்டல் செய்யாமல் அடக்கி வாசியுங்கோ.

எனக்கு தெரிஞ்ச கனவீடுகளில ஏதாவது கோல் வந்தால் மனுசிமார் தான் எடுக்கிறது. புருசன்மார் கோல் சத்தத்த கேட்டதும் மைந்திக்கொண்டு இருக்கிறது. ஏன் எண்டால் பலருக்கு மொழிப்பிரச்சனை. அதுவும் பிஸ்னஸ் கோலுகள் எண்டால் சொல்லி வேலை இல்லை. ஆண்கள் நிலமை பரிதாபம்.

இது கனடாவில நான் அறியாத ஒரு விடயம். உண்மையாத்தான் சொல்றேன், நான் அப்படி எங்கும் பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

முதல் சுற்றில் ஆறு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளார்களாம்... :lol:

சா, சாத்திரி அண்ணா மினைக்கெட்டதற்கு காணாது :lol::lol:

Link to comment
Share on other sites

Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம் (வலதுசாரிக்கட்சி)

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடதுசாரி)

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் (இடதுசாரி)

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம் (இடதுசாரி)

Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா (இடதுசாரி)

Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு (இடதுசாரி) இவர் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் மேலதிக தகவல்கள் தொடரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.