Jump to content

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.


Recommended Posts

நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன் எனக்கு இதுவரை பெர்னான்டோ புள்ளே மதுரை வந்த செய்தி தெரியாது....

ஒன்று நினைவில் கொள்ளுங்கள் சகோதரர்களே ...

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தன் இளமைக்காலத்தை சிறையில் கழிக்கும் பேரறிவாளன் திராவிடர்கழகத்தைச்சார்ந்தவ

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

உதவி கேட்டுத் தலைப்பைத் திறந்து இருப்பவர் திரு நெடுக்காலபோவான்.

தலைப்பில் என்ன நடக்கிறது யார் என்ன என்ன சொன்னார் என்று வாசிக்காமல் இடையில் வந்து சம்பந்தா சம்பந்தம் அற்று அலம்புவதை நிறுத்தவும். :mellow:

அதை தாங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.....!! அவருக்கு நீங்கள் அறிவுரை சொல்லி இருந்தால் பற்றவாய் இல்லை ... சம்பாந்தா சம்பந்தமில்லாமல் நீங்கள் மட்டும் அலம்பலாமோ....??? :(

அது சரி யாழ்களம் உங்கட குப்பை கொட்டும் களம் மட்டும்தானே...!! என்ன எல்லாம் ஈழத்தமிழனுக்கு பிரியோசனம் இல்லையோ அதை எல்லாம் கொண்டு வாங்கோ....!! :D:):(

Link to comment
Share on other sites

பெர்னாண்டோ விடயம் உண்மையில் சப்பை மாற்றர்தான்.

திராவிட இயக்கங்கள் செய்கின்ற செய்ய வேண்டிய வேலைகள் இதை விட பல உண்டு. முயலை அடிக்க பீரங்கி எதற்கு?

இது... :mellow::(:D

Link to comment
Share on other sites

அதை தாங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.....!! அவருக்கு நீங்கள் அறிவுரை சொல்லி இருந்தால் பற்றவாய் இல்லை ... சம்பாந்தா சம்பந்தமில்லாமல் நீங்கள் மட்டும் அலம்பலாமோ....??? :mellow:

அது சரி யாழ்களம் உங்கட குப்பை கொட்டும் களம் மட்டும்தானே...!! என்ன எல்லாம் ஈழத்தமிழனுக்கு பிரியோசனம் இல்லையோ அதை எல்லாம் கொண்டு வாங்கோ....!! :D:):(

ஒரு தலைப்பை ஒருவர் திறந்து எழுதும் போது அந்தத் தலைப்பிக்கு ஏற்புடையதாக தொடர்பு பட்டதாக தான் கருதுக்கள் எழுதப்படும்.அவற்றை வாசித்து விட்டு உள் வாங்கித் தன் பதில் எழுத வேண்டும்.இது கருதுக் களத்தின் அடிப்படை நியதி.

எது எது ஈழத் தமிழனுக்குப் பிரயோசனம் என்பதை தயாவோ நாரதரோ தீர்மானிக்க முடியாது.யாழ் களதிற்கு இது தேவை இல்லை என்றால் மட்டுறுத்துவர் அல்லது பொறுப்பாளார் அகற்றுவார்.

ஈழத் தமிழனுக்கு ஆரியர் பற்றித் தெரிய வேண்டாம் என்றால் அது பற்றி அரசியற்துறைச் செயலரோ ,தேசியத் தலைவரோ அல்லது இளங்குமரனோ அல்லது யோகியோ பேச மாட்டார்கள்.புலிகளும் தமிழர் திரு நாளைக் கொண்டாடவோ, வள்ளுவர் விழாவோ எடுக்க மாட்டர்கள். :(

Link to comment
Share on other sites

இந்தியாவின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் ஆரிய இந்துத்துவம் சார்ந்ததே.

சீனா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு கொம்யூனிஸம் காரணம் இல்லை. பாகிஸ்தான் உதவி செய்வதற்கு இஸ்லாம் காரணம் இல்லை.

ஆனால் இந்தியா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ சிந்தனைதான் காரணம். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

இதை ஒருக்கா விளக்கமாக எழுத்துங்கோ... எனக்கு உண்மையாக விளங்கவில்லை....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் காணும் நன்றி

Link to comment
Share on other sites

ஒரு தலைப்பை ஒருவர் திறந்து எழுதும் போது அந்தத் தலைப்பிக்கு ஏற்புடையதாக தொடர்பு பட்டதாக தான் கருதுக்கள் எழுதப்படும்.அவற்றை வாசித்து விட்டு உள் வாங்கித் தன் பதில் எழுத வேண்டும்.இது கருதுக் களத்தின் அடிப்படை நியதி.

எது எது ஈழத் தமிழனுக்குப் பிரயோசனம் என்பதை தயாவோ நாரதரோ தீர்மானிக்க முடியாது.யாழ் களதிற்கு இது தேவை இல்லை என்றால் மட்டுறுத்துவர் அல்லது பொறுப்பாளார் அகற்றுவார்.

ஆகவே நீங்கள் என்ன எழுதினீங்கள் எண்டது பீரச்சினையே இல்லை... தலைப்பு என்ன எண்டு பாத்து அதை எழுதினவர் என்ன எழுதினார் எண்டும் அதோட சம்பந்த படுத்தி ( சம்பந்தமே இல்லாவீட்டாலும்) கருத்து எழுத வேணும் எண்டுறீயள்....! ஆகவே சுருக்கமாக நீங்கள் எழுதின கருத்துக்கு பதில் எழுதுதல் பிழை எண்டுறீயள்...!!

என்னை அலம்புகிறீர் எண்டு சொன்ன நீங்கள், குப்பைகள் பற்றி எழுதியது நெஞ்சை தொட்டுது... :(:D:)

ஈழத் தமிழனுக்கு ஆரியர் பற்றித் தெரிய வேண்டாம் என்றால் அது பற்றி அரசியற்துறைச் செயலரோ ,தேசியத் தலைவரோ அல்லது இளங்குமரனோ அல்லது யோகியோ பேச மாட்டார்கள்.புலிகளும் தமிழர் திரு நாளைக் கொண்டாடவோ, வள்ளுவர் விழாவோ எடுக்க மாட்டர்கள். :mellow:

தமிழன் அடிவாங்கின போது எடடா தடியை குடடா அடியை எண்டு முன்னுக்கு நிண்டு சொல்லித்தர உங்களுக்கு எல்லாம் பிரபாகரன் எண்ட ஒருத்தர் தேவை பட்டார்...

நீங்கள் யாருமே தலைமைக்கு வரவும் இல்லை எப்பிடி தமிழனுக்காக சண்டை பிடிக்கிறது எண்டு சொல்லி கொடுக்கவும்... அப்ப எல்லாம் உங்கட திராவிடம் எங்கை போச்சுதோ தெரிய இல்லை....!!

இப்ப மட்டும் பிரபாகரன் எண்ட ஒருத்தர் உங்களுக்கு தேவை படுகிறார் உழுத்து போன திராவிடத்தை தூசிதட்டி எடுத்து அவரின் தலையில் போட...

ஈழத்திலை திராவிடமும் இல்லை, ஆரியமும் இல்லை... அங்கை இருக்கிறது ஈழத்தமிழர் தேசியம் மட்டும்தான்....

30 வருடமாக தலைவருக்கு போராட்டத்தை நடத்தும் போதே தமிழை எப்படி வளர்ப்பது என்பதையும் திட்டமிட்டே வந்துள்ளார்... தமிழ் நாட்டில் திராவிடர் இயக்கம் ஏற்படுத்தாத மாற்றத்தை எல்லாம் புலிகள் ஏற்படுத்தும் போது... திராவிட கொள்கையைதான் புலிகள் நடைமுறைபடுத்துகிறார்கள் என்பது நீங்கள் ஈழத்தேசியத்துக்கு செய்யும் அவமரியாதை...

இவ்வளவையும் செயலாக்கி காட்டும் தலைவருக்கு. கற்று கொடுத்தது ஏதோ திராவிடம் எண்டு இல்லாத ஒண்றுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் உங்களின் தீரம்.. உண்மையாகவே மெய் சிலிர்க்க வைக்கிறது... :(

தொடர்ந்து செயலாற்றுங்கள் நண்றி வணக்கம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான நடவடிக்கைக்கு இந்தியா முழு ஆதரவு - மதுரையில் அமைச்சர் ஜெயராஜ்

3/22/2008 11:24:30 PM

வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளுடனான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதர வையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவாலயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த் தனையில் பங்குபற்றினார்.

பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியே றிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியிருப்பதா வது : தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள் தான். ஆனால், பழி இராணுவத்தின் மீது விழுகிறது .

தமிழக மீனவர் களை இலங்கை இராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழியை இலங்கை இரா ணுவம் மீது போட்டு விடுகின்றனர்.

இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில்லை. பிரிவி னையை ஏற்படுத்துவதுதான் அவர்களது நோக்கம். அவர்கள் வெடி குண்டு கலாசாரத்தையே விரும்புகின்றனர். இந்த பிரச்சினையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதோடு உள்ளோம். இலங்கையில் அமைதியையும், சமாதானத்தையும் 95 சத வீதம் மக்கள் விரும்புகின்றனர்.

கிழக்கு மாகாணத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதன் மூலம் அவர்கள் சுய ஆட்சி பெற்ற மாநிலமாக செயல்பட உள்ளனர். விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா அவர்கள் உங்களை வேண்டும் என்றே சீண்டிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தலைப்பில் தி க வினரை நான் உதவிக்கு அழைக்கவில்லை. எல்லாத்துக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவா குரல் எழுப்புபவர்கள்.. அப்பாவி தமிழக மீனவர்களை ஆண்டாண்டா இலங்கைப் படைகள் சுட்டுக் கொல்வதை நேற்றைய சம்பவம் வரை தெளிவாக அறிந்திருந்தும்.. ஒரு சிங்கள அமைச்சன் தமிழ் நாட்டில் நின்று கொண்டு தனது படைகள் அவர்களைக் கொல்லவில்லை.. புலிகள் தான் கொல்கின்றனர் என்பதைச் சொல்ல கேட்டுக் கொண்டிருக்கின்றரே.. இந்த மெளனத்துக்குக் காரணம் என்ன என்றுதான் வினவியுள்ளேன்..!

சிங்களப் பேரினவாதிகள் வெளிப்படையாகவே கூறிக் கொண்டு பெளத்த ஆலயம் கட்டி.. தமிழகத்தில் உறவாடல் செய்ய அனுமதித்திருப்பது குறித்து இவர்கள் மெளனமாக இருப்பது ஏன் என்றுதான் கேட்கிறேன்.

இவை எல்லாம்.. ஈழத்தமிழர்களுக்கு இன்னல் செய்பவனுக்கு உதவும் செயலாக அவர்களுக்குத் தெரியவில்லையா என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் ஈழத்தமிழர் ஆதரவு என்பது.. வெறும் காங்கிரஸ் மத்திய அரசை நோக்கிய பாய்ச்சலா அல்லது உண்மையில் ஈழத்தமிழர்களின் நலனில் உள்ள அக்கறையின் வெளிப்பாடா என்று அறியவே கேட்கின்றோம்.

நாம் சிவசேனையிடமும் பி ஜே பியிடமும் இவை குறித்துக் கருத்துக் கேட்கவில்லை. காரணம் அவர்கள் தெளிவாகவே ஈழத்தமிழர் விவகாரத்தில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் தலையிடக் கூடாது என்ற நிலையில் இருக்கிறார்கள். பி ஜே பி காலத்தில் சிறீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பை விட திராவிட பாரம்பரிய கட்சியான தி மு க கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அளிக்கும் ஒத்துழைப்பு பலமடக்கு அதிகம். இது திராவிடக் கொள்கைக் கட்சியான தி மு கவுக்கும் தெரியும் இதர திராவிடக் கட்சிகளுக்கும் தெரியும். இருந்தும் தமிழகத்திலும் இந்தியாவிலும் அரசியல் செல்லாக் காசுகளாக உள்ள தி க வினரை கொண்டு ஈழ ஆதரவு செய்வது என்பதுதான் வேடிக்கையானது மட்டுமன்றி ஈழத்தமிழரை ஏமாற்றும் செயலும் கூட.

தி க வினர் தமிழகத்தில் கூட ஒரு தடவை தானும் சட்டசபைக்குப் போனது கிடையாது. அவ்வளவு மக்கள் மதிப்புள்ள அவர்களைக் கொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவை எப்படி தமிழகம் முழுவதும் பெருக்கிட முடியும். அதன் மூலம் எப்படி இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்..??!

தி க வினரைப் பயன்படுத்தி தி மு க தன்னை ஈழ ஆதரவாளன் என்று காட்டிக் கொள்ள குரல் எழுப்ப அனுமதிக்கின்ற அதேவேளை மத்திய அரசுக்கு ஆதரவளித்து காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதையும் குலைக்காமல் தனது ஆட்சி அதிகாரத்துக்கு பாதிப்பு வராமல் செய்து வருகிறது. இப்படி ஒரு நிலையிலேயே.. தி க வினரின் மெளனம் தொடர்பான சந்தேகம் எழுகிறது. தி மு க சிங்கள அமைச்சர்களை தமிழகத்தில் அனுமதித்து உறவு வளர்ப்பதை இவர்கள் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை..??! பெனோண்டோ புள்ள போன்றவர்கள் கருணாவின் பிளவில் பங்களித்த சிங்களவர்களில் முக்கியமானவர்கள். அப்படியானவர்களோடு தமிழகம் உறவாடுவதன் நோக்கம் என்ன..???! இதை தி க வினரும் கண்டும் காணாமல் விட்டிருப்பது.. அவர்களின் ஈழத்தமிழர் குரல் தொடர்பில் சந்தேகிக்க வைக்கிறது..!

ஐயா நெடுமாறன் மற்றும் வை கோ போன்றவர்கள் தி க வில் உள்ளவர்கள் அல்ல. ஐயா நெடுமாறன் தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் திராவிட தேசியக் கட்சிக்குரியவரல்ல. ஐயா நெடுமாறனுக்கு அளித்த வாக்குறுதியின் படி கருணாநிதி ஈழத்தமிழருக்கு என்று சேகரிப்பட்ட பொருட்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அது இன்று வரை காரியமாகவில்லை. ஆனால் அதையிட்டு ஐயா போன்றவர்கள் தான் பேச வேண்டி இருக்கிறதே தவிர இதர கட்சிகள் மெளனம் சாதிக்கின்றன. தி மு கவுக்கு நெருக்கடி வந்திடக் கூடாது என்று பார்க்கின்றன..!

ஆக தி க வினரின் செயற்பாடும் தி மு க அரசுக்கு முண்டு கொடுக்கும் பாணியில் தான் அமைந்திருக்கிறதா.. அல்லது உண்மையில் ஈழத்தமிழ் அனுதாபத்தின் விளைவா என்பதை சோதிக்க வேண்டியது ஈழத்தமிழனின் தேவையாகியுள்ளது. காரணம்.. நாளை இவர்களையும் நம்பி ஏமாறிடக் கூடாது என்பதற்காகவே தி க வினரை இத்தலைப்போடு சேர்த்தேனே தவிர.. அவர்களிடம் பகிரங்க உதவியைக் கோரவில்லை. தமிழ் மானமுள்ள எந்தத் தமிழனும் உதவி கோராமலே ஈழத்தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. நாம் எதற்கு உதவி கேட்டு இறைஞ்ச வேண்டும்..??! அவர்கள் தங்கள் தார்மீகக் கடமையை செய்ய இதயபூர்வமாக முன்வந்தாலே போதுமானது. தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் எந்த பாகுபாடுகளுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களாகிய எமக்கு பலமாக அமைய வேண்டுவதுடன் சிங்கள அமைச்சர்களை எதிர்க்கட்சியினரை.. தமிழ் துரோகிகளை தமிழகம் அரவணைக்கும் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள முன்வர வேண்டும்..! :mellow:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் எனக்கு இங்கை விளங்காத ஒரு விடயம் இருக்கு அதையும் ஒருக்கா (உங்கட நிலைப்பாட்டை) தெளிவு படுத்தி போடுங்கோ....!

ஈழதேசிய வடிவத்தையும் திராவிடம் எனப்படும் வடிவத்தையும் அடிக்கடி இங்கை முடிச்சு போட முனைகிறார்கள்... தலைவர் போராட்டத்தை முன்னெடுத்தது திராவிட கொள்கைகளின் அடிப்படியிலா ( அப்படித்தான் நிறுவ முற்படுகிறார்கள்)..?? இல்லை ஈழதேசிய தலைவரின் வெற்றியில் திராவிடத்தை புகுத்தி அதுதான் அவரின் கொள்கை எண்று சொல்கிறார்களா...?

விருட்சமாகும் எல்லா மரத்துக்கும் வேர்கள் உண்டு.... அப்படி வேர் இருக்கும் மரம் எல்லாம் புளியமரம்( திராவிடம்) எண்டு சொல்ல முடியுமா...??

Link to comment
Share on other sites

ஆங், அப்புறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கெடு குடி சொல் கேட்காது"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே !

எனது தாழ்மையான கருத்து என்னவென்றால், தமிழ்நாட்டில் இன்று ஆட்சியிலிருப்பவர்களால் ஒரு அளவுக்கு மேல் ஈழ தமிழர் சார்பாக குரல் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு சிறையில் அடைபடும் சாத்தியமும் உண்டு. இப்படிப் பல தமிழ் ஆதரவாளர்கள் சிறை சென்றதைப் பார்த்திருக்கிறோம். இந்திய மத்திய அரசு சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்துவருவதை இந்தத் தமிழ்த் தலைவர்களால் எதிர்க்க முடியாது. ஏனென்றால் அவர்களும் அங்கு ரெண்டாம்தரக் குடிமக்கள்தான்.

ஆனால் ஆட்சிக்கு வெளியில் இன்றும் ஆயிரமாயிரம் தமிழ் ஈழ ஆதரவு உள்ளங்கள் எமக்காக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளையும் நடத்துவதை நாம் அறியமாட்டோமா ? எதற்கு இந்த சீற்றம் ?

என்ன இல்லையென்றாலும் அந்த ஆதரவு உள்ளங்களில் நாம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்திருப்போம்.

இதைவிடச் சொல்ல எதுவுமில்லை.

:mellow: தயா, நெடுக்கு!

இருவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோள், தயவு செய்து இத்துடன் இதை விட்டு விடுங்கள். நாங்கள் செய்யும் இந்த வாதம் தமிழ்நாட்டு உள்ளங்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங், அப்புறம்.

புள்ளேயும் புறம்(From) இந்தியா தான் பூர்வீகம்

Link to comment
Share on other sites

புள்ளேயும் புறம்(From) இந்தியா தான் பூர்வீகம்

ஐயோ !

உண்மையைச் சொல்லாதீர்கள். என் அமைச்சுப்பதவிக்கு ஆபத்து.

Link to comment
Share on other sites

தி க வினர் தமிழகத்தில் கூட ஒரு தடவை தானும் சட்டசபைக்குப் போனது கிடையாது.

அண்ணை நெடுக்கண்ணை சட்டசபைக்குப் தேர்தெடுக்கப்படுவதென்றால் திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடவேண்டும். தேர்தலில் போட்டியிடாதவர்கள் எப்படி சட்டசபைக்குத் தெரிவாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்னாண்டோ விடயம் உண்மையில் சப்பை மாற்றர்தான்.

திராவிட இயக்கங்கள் செய்கின்ற செய்ய வேண்டிய வேலைகள் இதை விட பல உண்டு. முயலை அடிக்க பீரங்கி எதற்கு?

ஆமாம். இந்தச் சப்பை மாட்டருக்கே வாயைத் திறக்காதவர்கள் எப்படி மற்றதற்கு வாயைத் திறப்பார்கள் என்பதும் காதுக்குள் ஒலிக்கின்றது.

ஆயினும், திராவிடக்காரர் என்று இப்போது சொல்லும்படியாக யாரும் இல்லை என்றே நினைக்கின்றேன். இராமசாமியின் மறைவிற்குப் பின்னரே, திராவிடம் என்ற ஆங்கிலேயனால் பெயர் சூட்டப்பட்ட கருத்தாக்கம் செத்துவிட்டது. இப்போது இருப்பது தமிழ் தேசிம் ம்டடுமே. அதற்கு முதலில் கருத்தாக்கம் கொடுத்தவர் தேசியத் தலைவரே. அதற்கு எந்தக் கன்னடனையும் முதன்மைப்படுத்தச் சிலர் முயல்கின்றது என்றைக்குமே வெற்றிபெறாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திற்கு தமிழ் நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.(உ+ம் யாழில் வந்த வல்வை மைந்தனின் கவிதை ஒன்றினை தென்செய்தி இணையம் பிரசுரித்திருந்தது.) தொடர்ந்து தமிழ் நாட்டில் எமக்காகக் குரல் கொடுப்பவர்களில் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இருக்கிற ஆதாரவாளர்களையும் இழக்கச் செய்ய வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் ஆரிய இந்துத்துவம் சார்ந்ததே.சீனா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு கொம்யூனிஸம் காரணம் இல்லை. பாகிஸ்தான் உதவி செய்வதற்கு இஸ்லாம் காரணம் இல்லை.

ஆனால் இந்தியா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ சிந்தனைதான் காரணம். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

தமிழர்கள் தமது எதிரிகளை இனம் காண வேண்டும்.

வழமையான பழைய இறுவட்டைப் போட்டுத் திரும்பத் திரும்ப ஒலிப்பது போல இந்துத்துவத்தை ஈழப்போராட்டத்திற்கு எதிராகக் காட்டுகின்ற குள்ளநரித்தனம் இங்கே காட்ட்பபடுகின்றது. மாக்ஸ், சேகுவராவின் காலையும் நக்குவதே பிழைப்பு என்று திரிந்தவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் கதைக்கவெளிக்கி;டடால் தமிழனின் நிலை இது தான். ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூச் சக்கரை என்பது போலத் தமிழனின் நிலை மாறிவிட்டது. சீனா, பாகிஸ்தான் உதவினால் அங்கே மதவாதமோ, மண்டை கழுவுகின்ற மாக்கிசமோ கிடையாது. ஆனால் இந்தியா உதவினால் உடனே மத அடிப்படை என்று நியாயம் கற்பிக்கின்றவர்களை என்ன செய்வது.

அடிப்படையில் பௌத்த மத அடிப்படையில் இருக்கின்றவர்களுக்கு இந்துமதத்தைச் சார்ந்தவர்களை விட, இந்தியா இந்து மத சார்பாளர்கள் ஆதரவு தருகின்றார்கள் என்றது போலக் கதையளப்பதும், அப்படி ஆதரவளிக்கக் காரணம் மதம் என்று முடிப்பதும், புத்திசாலித்தனமான ஒருவனால் தெளிவாக இனம் கண்டுகொள்ளக் கூடிய, விதண்டாவாதமாகும்.

திராவிட இயக்கங்கள் எமக்காக போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் யாரும் மௌனமாக இல்லை. இன்றைக்கும் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள்தான்.

மார்ச் 28ஆம் திகதி திராவிட கழகம் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஆகவே எமக்காக போராடுபவர்கள் பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

நீங்கள் முதலில் ஈழவிடுதலைப் போராட்டத்தை கழிக்கப்பட்ட திராவிடக்கொள்கையோடு பொருத்திப் பார்ப்பதையோ, அல்லது தேசியத்தலைவரின் கருத்து;ககு உங்களிட்டத்தி;றகுப் பொருள் வழங்குவதையோ நிறுத்தி அவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப் பழகுங்கள் நண்பரே.

2. பழநெடுமாறன் என்றைக்குமே தன்னை ராமசாமி வழிவந்த திராவிடவாதியாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர்களோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு தமிழன ஆதரவாளரே தவிர, மற்றும்படி தன்னை ராமசாமியைப் பின்பற்றுபவராக என்றைக்குமே காட்டிக் கொண்டதில்லை. அவருக்குச் சிலவேளை குறித்தவர் மீது மரியாதையிருக்கலாம். அவ்வளவு தான்.

அவரைப் பொறுத்தவரைக்கும் தமிழும், தமிழனும் தான் மூச்சே தவிர, கன்னடக்காரரைத் திராவிடன் என்றோ, அதற்காக பரிந்து கொள்பவரும் அல்ல. அங்கே தமிழர்கள் பாதிக்கப்படும்போது எல்லாம் அதற்காக குரல்கொடுக்கின்ற முதல் மனிதர். யார் குரல் கொடுத்தாலும் அங்கு முன் நிற்பதால் தான் எந்தக் கட்சியோடும் பாரபட்சமின்றிப் பழகுகின்றார்.

திராவிட இயக்கங்களுக்கு நிறைய வேலை உண்டு. அவர்கள் பகுத்தறிவாளர்களுக்காக மட்டும் போராடுபவர்கள் அல்ல. அப்படி தந்தை பெரியார் அவர்களை உருவாக்கவில்லை.

இந்துப் பக்தர்களுக்கு கோயில் கதவை திறந்து விடவும் அவர்கள்தான் வர வேண்டும். சிதம்பரத்தில் தமிழ் நுழைவதற்கு துணை நிற்பதற்கும் அவர்கள்தான் வர வேண்டும்.

ரெம்ப வேடிக்கை. சிவனடியார்கள் போரடிச் சிதம்பரத்தில் நுழைந்ததை உரிமை கொண்டாடுகின்ற சுயநலம். சிதம்பர விடயத்துக்கும் இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் எதற்கு முன்னுக்கு நிற்கின்றார்களோ இல்லையோ, பெயர் எடுக்க ம்டடும் முன்னுக்கு நிற்கின்றார்கள்.

இப்படி நிறைய பணிகளை செய்கின்றவர்கள் எமக்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெறும் காழ்ப்புணர்வுகளோடு செய்திகளை திரிக்க வேண்டாம். இன்றைக்கு பெர்னாண்டொ சொன்னதை தமிழ் நாட்டில் யாரும் நம்பவில்லை. பத்திரிகைகள் பெர்னாண்டோ சொன்னதாக செய்தி வெளியிட்டாலும் மக்கள் நம்பவில்லை.

அப்படி ஒரு உறுதியான நம்பிக்கை தமிழக மக்களிடம் உண்டு. இதற்கு காரணம் திராவிட இயக்கங்களின் பரப்புரைதான்.

சிங்கள அரசின் பொய்யான பரப்புரைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒவ்வொரு முறையும் பதில் சொல்வது இல்லையே. எங்கே தேவையோ அங்கே பதில் சொல்வார்கள்.

திராவிட இயக்கங்கள் தமது வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.

மக்கள் நம்பவில்லை என்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள். புலத்து இளைஞர்கள் அறைகூவல் என்ற மாதிரியா??

ம். செயற்பட்டார்கள்.....தமிழனுக்கு

ள் சிதைவையே ஏற்படுத்தி, ஒவ்வொரு சாதியையும் ஒன்றுபடுத்தி, எதிர்காலத்தில் தமிழனு;ககுள் ஒற்றுமையையே வராத அளவிற்குச் செய்துள்ளார்கள்.

யாழ்களத்திற்கு தமிழ் நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.(உ+ம் யாழில் வந்த வல்வை மைந்தனின் கவிதை ஒன்றினை தென்செய்தி இணையம் பிரசுரித்திருந்தது.) தொடர்ந்து தமிழ் நாட்டில் எமக்காகக் குரல் கொடுப்பவர்களில் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இருக்கிற ஆதாரவாளர்களையும் இழக்கச் செய்ய வேண்டாம்.

ஓய்ந்து போயிருந்த இது பற்றிய தலைப்பை மீண்டும் கிளறி இன்பம் காண வைத்தவர் கையில் தான் இதற்கான பதில் இருக்கின்றது. அது வரைக்கும் மன்னிக்கவும் கந்தப்பு.

Link to comment
Share on other sites

யாழ்களத்திற்கு தமிழ் நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.(உ+ம் யாழில் வந்த வல்வை மைந்தனின் கவிதை ஒன்றினை தென்செய்தி இணையம் பிரசுரித்திருந்தது.) தொடர்ந்து தமிழ் நாட்டில் எமக்காகக் குரல் கொடுப்பவர்களில் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இருக்கிற ஆதாரவாளர்களையும் இழக்கச் செய்ய வேண்டாம்.

ஒரு சில ஆயிரம் திராவிட தோழர்களின் மனதை புண்படுத்திவிடாதீர்கள் . அவர்கள் மனது

புண்பட்டால் தமிழீழம் கிடைக்காமல் போய்விடும்! ஆனால் கோடிக்கணக்கில் உலகெங்கும் வாழும் இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீது சகட்டு மேனிக்கு சேற்றை வாரி விடுவோம்! அது தமிழீழம் அடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இதுவரை உலகெங்கும் பரந்து இயங்கும் இந்து இயக்கங்கள் எதுவும் தமிழீழத்திற்கு

எதிராக எந்த அறிக்கைகளும் விடவில்லை. ஈழத்து அரசியல் பற்றி பேசவும் இல்லை.

நாம் இப்படியே இந்து மத துவேசத்தை கக்கி கக்கி சர்வதேச இந்து மத நிறுவனங்கள் பலவும் சிங்களவரோடு கைகோர்த்து ஈழத்திற்கு எதிரான பிரசாரம் செய்யும் அளவிற்கு நிலைமையை சிக்கலாக்கி விடுவோம்

அது ஈழத்தமிழர்களை மெல்ல மெல்ல திராவிட கொள்கைகளின் பாலும் வேற்று மதங்களின் பாலும் திருப்ப முனையும் எங்கள் சூழ்ச்சிக்கு மேலும் வழு சேர்க்கும்.

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட எங்கள் பழமைவாத திராவிட புரட்டுக்களை தமிழர்கள் மேல் திணிப்பதற்கு இதை விட்டால் வேறு வாய்ப்பே கிடையாது.

Link to comment
Share on other sites

முதலில் பெரியார் பற்றி அவதூறு பேசுபவர்கள் தமிழகம் வந்து உண்மை நிலையை உணருங்கள்.... தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு ஈழத்தில் தமிழர்களின் அவல நிலை நன்கு தெரியும் சிங்கள கடற்படைதமிழ் மீனவர்களை சுட்டுக்கொல்வதும் நன்கு தெரியும்.

ஆனாலும் தமிழக மக்கள் சுயனலம் கொண்டவர்கள் யார் எப்படி ப்போனாலும் தானும் தன் பிள்ளையும் சுகமாக இருந்தால் போது என்ற எண்ணம் உள்ளவர்கள் அவர்கள் கவலை எல்லம் தம் பிள்ளைகளுக்கு நல்ல பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்க வேண்டும் ..லட்ச ல்ட்சமாக சம்பாதிக்க வேண்டும்.... இதற்கிடையே ஈழத்தமிழன் பற்றி கொஞ்சம் அனுதாபம் இருந்தாலும் ..... அதை வெளிக்காட்ட பயம்.

அதற்கு காரணம் இந்திய உளவுத்துறையும் க்யூ பிராஞ்ச் எனப்படும் தமிழக காவல்துறை ப்பிரிவும் உண்டாக்கியுள்ள பயம்.... புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறாயா உன் மீது பொடா போடப்படும் என உச்ச பயத்தை உண்டாக்கியது யார் என்பதும்... இந்த ஆட்சியிலும் புலி ஆதரவாளர்கள் மீது ஆயுதம் கடத்துவதாக பொய் வழக்குகள் போடப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலையில் எந்த நடுத்தர வர்க்க மனிதன் தான் வெளிப்படையாக போராட முன்வருவான்???

புலம்பெயர் தமிழர்கள் நீங்கள் கூட இங்கே தமிழகத்தில் உள்ள பெரியார் தொண்டர்கள் சிறைக்கு அஞ்சாமல் போராடுவதில் பாதியாவது செய்திருக்கிறீர்களா??? என்பதை சிந்தித்துப்பார்த்து விட்டு பிறகு பேசுங்கள்.....

தமிழக தில்லை சிதம்பர திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் தமிழில் பாட க்கூட பெரியார் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர்....

ஆனால் பாவம் நீங்களோ ஏதோ பெரியார் கட்சி தொண்டர்கள் தமிழகத்தில் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக செயல் படுவதால் தான்....பிராமணர்களும் இந்துத்துவ அமைப்பினரும் ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை என்று நினைத்துக்கொண்டு காலந்தள்ளுகிறீர்கள்....

அவர்கள் நயவஞ்சகத்தைக்குட புரிந்து கொள்ள இயலாத உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் :wub:

Link to comment
Share on other sites

திராவிடர் ஆரியர் என நாமே நமக்குள் மண்ணை போடுவோம்.ராமசாமி என பெரியாரை எதிலும் வம்புக்கு இழுப்பதை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பெரியாரை திட்டுவது ஆரோக்கியமானது அல்ல

http://www.puthinam.com/full.php?2b37WTK4b...2j0iZ0cc3qc1Gde

இந்த செய்தியை பர்க்க

உங்களின் இந்துத்துவ காதலை சற்று தேசநிர்மாணத்துக்கு தியாகம் செய்யுங்கள் தமிழீழ போராட்டத்தை திராவிட ஆரிய என சொல்லி குட்டையை குழப்பாதீர்கள் உங்கள் சண்டைகளை வேறு இடங்களில் வையுங்கள் திராவிட ஆரியர் என எப்படியும் புடுங்கு படுங்கள் தமிழீழ தேச போராட்டம் ஒன்றும் கறிவேப்பிலை அல்ல அதனுடன் இதனை இழுத்து குட்டையை குழப்ப வேண்டாம் இதனை நிர்வாகம் சற்று கவனத்தில் எடுக்க வேண்டும்

20080206007.jpg

20080206008.jpg

20080206008.jpg

20080206009.jpg

20080206001.jpg

20080206002.jpg

20080206003.jpg

20080206004.jpg

20080206005.jpg

20080206010.jpg

மேலுள்ள படங்கள் பெரியார் திராவிட கழகத்தினரின் போராட்டம் சம்பந்தமானது புலிகளின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் எல்லோரையும் அரவணைத்து செல்லும் விதமாகவே அமைகின்றது அதற்கு திராவிட ஆரிய மூலத்தினை பூச யாரும் முயல வேண்டாம் உங்களின் கற்பனை குதிரையை தட்டிவிட்டு அக்கருத்துகளை உங்களுக்கு சார்பாக யாரும் மாற்ற வேண்டாம்

பல்லாயிரம் செத்த பிணங்களை விட ஆயிரம் செயற்பாட்டாளர்களும் உணர்வாளர்களும் என்றும் மேல்

Link to comment
Share on other sites

வெற்றிவேல் தமிழகத்தில் பெரியார் தொண்டர்கள் எப்போதாவது ஈழப்போராட்டததை...இந்துத்துவ எதிர்ப்போடு தொடர்பு படுத்தியிருந்தனரா????

அது வேறு இது வேறு ..... இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது தவறா???

ஈழ ஆதரவு போராட்டங்களில் எப்போதாவது மத எதிர்ப்பு கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டுள்ளதா???

அல்லது இந்துத்துவா பற்றியாவது எதிர்த்துப்பேசுயுள்ளனரா???

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயைக்கூட அவரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலை காரணமாக பெரியார் தொண்டர்கள் விமர்சிப்பதில்லை என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு :wub:

Link to comment
Share on other sites

வெற்றிவேல் தமிழகத்தில் பெரியார் தொண்டர்கள் எப்போதாவது ஈழப்போராட்டததை...இந்துத்துவ எதிர்ப்போடு தொடர்பு படுத்தியிருந்தனரா????

அது வேறு இது வேறு ..... இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது தவறா???

ஈழ ஆதரவு போராட்டங்களில் எப்போதாவது மத எதிர்ப்பு கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டுள்ளதா???

அல்லது இந்துத்துவா பற்றியாவது எதிர்த்துப்பேசுயுள்ளனரா???

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயைக்கூட அவரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலை காரணமாக பெரியார் தொண்டர்கள் விமர்சிப்பதில்லை என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு :wub:

உண்மை வீணாக இருவேறான கொள்கைகளை போட்டு குழப்பி அதனை தமிழீழ போராட்டத்தோடு சம்பந்தப்படுத்தி இருக்கும் கொஞ்ச நஞ்ச செயற்பாட்டாளர்களையும் செயற்பாடில்லாமல் ஆக்குவதால் எந்த பயனும் இல்லை

Link to comment
Share on other sites

ஈழவன் இணைத்துள்ள படங்கள் எல்லாம் பெரியார் தொண்டர்கள் புதுதில்லி பாராளுமன்றம் எதிரில் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் எடுக்கப்பட்டவை......

இதில் கலந்து கொண்டுள்ள கொளத்தூர் மணி 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்

எனது நண்பனும் இதில் கலந்து கொண்டிருந்தான்

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்பது சகோதரன் ஈழவனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் நாங்கள் பெரியரை மதிக்கிறோம் காரணம் ..... வைக்கத்தில் அவர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் தானே அழைத்துச்சென்றார்.....

ச்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.