Jump to content

கொலை செய்யப்பட்ட நந்தனின் சிலை எங்கே?


Recommended Posts

.....

கண்ணப்பனை பூசை செய்த அனுமதித்த சிவபெருமான் நந்தனை கோயிலுக்கு உள்ளே வர ஏன் அனுமதிக்கவில்லை.

......

கண்ணப்பன் கோவிலில் பூசை செய்யவில்லை.... நந்தனை கோவிலிற்குள் அனுமதிக்கவில்லை... :unsure:

Link to comment
Share on other sites

சுடர்,

நீங்கள் எந்த எண்ணத்தில் சொன்னீர்கள் என்று தெரியவில்லை, ஆனால் உங்களுடைய பதிலில் உண்மை இருக்கிறது.

கண்ணப்ப நாயனார் பூசை செய்த சிவன் காட்டிலே, ஒரு மலை உச்சியிலே கோயில் இன்றி தனியாக அமர்ந்திருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய தெய்வங்கள் இப்படித்தான் இன்று வரை இருக்கின்றன.

அவர்களுடைய கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டிருக்காது. பல வேளைகளில் கோயில்களே இருக்காது. இந்தக் கோயில்களில் பார்ப்பனர்கள் பெரும்பாலும் பூசை செய்வது இல்லை. அந்த மக்களே தமக்கு தெரிந்த முறையில் வழிபாடுகளை செய்வார்கள்.

கண்ணப்ப நாயனார் வணங்கிய கடவுள் ஒரு மலை உச்சியில் தனித்து அமர்ந்திருக்கிறார். அந்தச் சிவனுக்கு ஒரு பார்ப்பனர் பூசை செய்து வருகிறார். ஆனால் சிவன் அவருக்கு காட்சி கொடுக்கவில்லை. பதிலாக கண்ணப்ப நாயனாருக்கு காட்சி கொடுக்கிறார்.

ஒரு பக்கம் கோயிலுக்குள் நுழைய விடாது வெளியிலேயே நந்தனை வைத்திருந்து, பின்பு உள்ளே நுழைய முயன்ற நந்தனை எரிக்கச் சொன்ன சிவன், மறுபுறம் கோயில் இல்லாது மலையில் தனித்து இருந்த இறைவனுக்கு பூசை செய்த கண்ணப்பனுக்கு காட்சி கொடுக்கிறார்.

இதைத்தான் கீதையும் "குல தர்மம்" என்று சொல்கிறது. அவரவர்க்கு ஒதுக்கப்பட்டதன் படி அவரவர் வாழ வேண்டும் என்பது இதனுடைய தத்துவமாம்.

நந்தனும் தன்னுடைய குலத்திற்கு என்று ஒரு இறைவனை உருவாக்கி வழிபட்டிருந்தால், அவனுக்கும் கடவுள் தரிசனம் கிடைத்திருக்கும். ஆனால் ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயிலுக்குள் புக முற்பட்டு விட்டான்.

கடைசியில் எரிக்கப்பட்டு, காணமல் போய் விட்டான். பாவம்.

சைவக் கோயில்களுக்குள் நுழைந்தவர்களாக பார்ப்பனர்களும் வேளாளர்களும் மட்டும்தான் குறிப்பிடப் படுகிறார்கள். மற்றைய சாதியினர் கோயில்களுக்கு உட் சென்ற கதைகள் என்னுடைய கண்ணில் படவில்லை.

தாழ்த்தப்பட்ட நாயன்மார்களுக்கு சிவபெருமான் அவர்களுடைய வீட்டுக்கே வந்து அருள் வழங்குகிறார். சிலர் கோயிலுக்கு செல்கின்ற வழியிலேயே இறைவனை அடைந்து விடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக நந்தன் எரிக்கப்படுகிறான்.

வைணவத்தில் விஸ்ணு சாதியைக் காக்கின்றார். சைவத்தில் சிவபெருமான் சாதியைக் காக்கின்றார். இப்படிக் கடவுள்களே சாதியைக் காக்கின்ற ஒரே ஒரு மதம் இந்து மதம் மட்டும்தான்.

இந்த சாதியை காக்கின்ற கதைகளை தமது வேதங்களாக படிக்கின்ற ஒரே ஒரு மதத்தவர்களும் இந்துக்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலை நாடுகளில்உள்ளவை பெரும்பாலும் வர்க்க ஏற்றத்தாழ்வுகள். உதாரணத்திற்கு மேலை நாடுகளில் முடி வெட்டுபவனின் மகன் மருத்துவரானால் அவனை மருத்துவன் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் அந்த வர்க்க ஏற்றத்தாழ்வுகளே தற்போது குறைந்து வருகின்றன ( உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற வன்மங்களை நான் குறிப்பிடவில்லை.)

ஆனால் இந்தியா போன்ற இடங்களில் உள்ளவை பிறவி ஏற்றத் தாழ்வுகள் அதைத்தான் நாம் சாதி என்கிறோம். இன்றைய ஏழை நாளை பணக்காரன் ஆகலாம். ஆனால் பிறவி ஏற்றத்தாழ்வுகள் அப்படியல்ல. அவற்றை கற்பித்தது இந்து மதம் மட்டு மே. வேறு எந்த மதமும் சாதியைக் கற்பிக்க வில்லை. சில கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பதில்லையா என கேட்கலாம். அதற்கு சபேசன் குறிப்பிட்டதுதான் காரணம். இந்து வேளாளன் கிறிஸ்தவத்திற்கு மாறும்போது கிறிஸ்தவனாக மாறாமல் கிறிஸ்தவ வேளாளனாகவே மாறுகிறான். மற்றும் படி பைபிள் சாதியைக் கற்பிக்கவில்லை. ஆனால் பிறவிப் பெண்ணடிமைத்தனம் இருக்கின்றது.

இந்து மதத்தில்பிறவி ஏற்றத் தாழ்வுகள் உள்ளன என்று கூறுவதை விட, பிறவி ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்து மதமே இயங்குகிறது.

வைசமும் ஒரு வகையில் சாதியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

பெரிய புராணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து நாயன் மாருக்கும் சாதிப் பட்டம் கட்டிவிடப் பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக :

சம்பந்தர் - பிராமணர்

சுந்தரர் - பிராமணர்

அப்பர் - வேளாளர்

இயற்பகை - வேளாளர்

திருநாளை போவார் - பறையர்

இப்படி அது நீளுகிறது.

ஆனால் நாம் கேட்கிறோம் வள்ளுவர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், வெள்ளி வீதியார், திருத்தக்க தேவர், நாதகுத்தனார் போன்றவர்கள் இன்ன சாதியென்று எங்கேயாவது பதிவு இருக்கிறதா??????????????!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

கண்ணப்பனை பூசை செய்த அனுமதித்த சிவபெருமான் நந்தனை கோயிலுக்கு உள்ளே வர ஏன் அனுமதிக்கவில்லை.

நல்ல கேள்வி.. அதுக்கு பதில் உங்களுக்கு தெரியாதது ஆச்சரியம்...!!

கண்ணப்பர் சொந்தமாக கோயில் வைத்து இருந்தார்... ஆனால் நந்தன் மற்றவரின் கோயிலுக்கு போனான்...!!

உதாரணமாக ஒரு பணக்காறர்... வெள்ளை க்காறன் எண்டே வச்சு கொள்ளுங்கோ...!! தனக்கான ஒரு அழகான வீடு கட்டி தேட்டம் எல்லாம் செய்து வைத்து இருக்கிறார்... அந்த வீட்டுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் உங்களை உள்ளே விடுவார்களா...??? எல்லாத்தையும் கடவுள் தந்தார் என்பதுக்காக அந்த வீட்டுக்குள் போவது உங்களின் உரிமை என்பீர்களா...??

அங்கே பிழை செய்தது நந்தன்னின் அறியாமை... அவன் தன்னை அந்த பொருளை அடையும் தகுதியை வழர்த்து கொள்ள இல்லை... தாள்த்த பட்டவனகவே வாழ்ந்தது நந்தனின் தவறு...

மதியாதார் வாசல் மிதியாதே எண்று தமிழில் பழமொழி இருக்கிறது... அங்கே போய் நந்தனார் கேவலப்பட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை...!!

Link to comment
Share on other sites

நந்தனை வெளியிலேயே நிற்க வைத்து நந்தியை விலகச் செய்து தரிசனம் கொடுக்கிறார்.

நந்தியை சிவன் சிலைக்கு முன்னாலை படுக்க வைத்ததற்குக் காரணம் கோயிலுக்கு வெளியே நிண்டு யாரும் சிவனைப் பார்கக் கூடாது என்பதற்காகவா? அதாவது கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதோர் வெளியில் நின்றும் பார்க்கக் கூடாது என்பதற்காகவா?

Link to comment
Share on other sites

கோவில் என்பது பொதுவானது..அந்த மதத்தை பின்பற்றும் எவரும் போககூடியதாக இருக்க வேண்டும்..இன்னார் தான் போகலாம்.. என்றால் அதில் அடக்குமுறை வந்துவிடுகின்றது....!

இந்து மதத்தில் இந்த அடக்குமுறை, வர்ணபேதம் ஆண்டாண்டு காலமாக உண்டு.... அதை தாம் சபேசன் சுட்டிக்காட்டியுள்ளார்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்தன் கோவிலுக்கு வந்தபோது கருவறைக்குள் ஏன் ஒளித்திருந்தார் இந்தச் சிவன்! - வெளியில் வந்து காட் தந்திருக்கலாமே, புட்டுக்கு மண் சுமக்க வெளியில் வந்தவர்!! இப்ப மாத்திரம் அசைய முடியாதவராகி நந்தியை மட்டும் அசைய வைத்தார்?

அல்லது சுலபபமான வழி நந்தன் அழகிய நந்திதாக வந்திருந்தால் ஆசைப்பட்டு எழுந்து ஓடி வந்து அணைத்திருப்பார்.

இதனால் புதியதான ஒரு பிள்ளைக் கடவுளும் கிடைத்திருக்கும்.

:rolleyes:

Link to comment
Share on other sites

இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் சாதி வெறியர்கள் என்பது என்னுடைய கருத்து. என்னுடைய கருத்து சரியே என்று யாழ் களத்திலும் சிலர் மீண்டும் மீண்டும் நிரூபித்து விடுகிறார்கள்.

ஏற்கனவே ஒருவர் தன்னை அம்பலப்படுத்தி விட்டார். இங்கே இன்னொருவர் வந்து விசத்தை கக்கி விட்டுப் போயிருக்கிறார்.

கோயில் என்பது தனியாருடைய வீடு அல்ல. கோயில் என்பது எல்லோரும் வணங்குகின்ற இறைவன் குடியிருப்பதாகச் சொல்லப்படும் ஒரு பொதுத் தலம். அங்கே இறைவனை வணங்க வந்த ஒருவனை வெளியே நிற்க வைப்பதையும், எரிப்பதையும் எந்த மனிதனும் நியாயப்படுத்த மாட்டான்.

இந்துச் சாதி வெறியர்கள் மட்டும்தான் நியாயப்படுத்துவார்கள்.

ஒருவனை பிறப்பினால் தாழ்த்தி விட்டு, அது அவனுடைய குற்றம் என்று சொல்ல இது போன்ற சாதி வெறியர்களால் மட்டும்தான் முடியும். இந்து மதம் "பூர்வஜென்ம பலன்" என்று முட்டாள்தனமாக உளறுவதை இவர்கள் வேறு மொழியில் சொல்கிறார்கள்.

ஒரு மதத்தவரின் கோயிலுக்குள் இன்னொரு மதத்தவரை அனுமதிக்காது கோயில்கள் உலகில் நிறைய இருக்கிறது. ஆனால் தன்னுடைய மதத்தவரையே அனுமதிக்காத கோயில்கள் இந்துக்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

இப்படி ஒரு மதத்தில் இருப்பதில் இவர்களுக்கு என்னதான் பெருமையோ தெரியவில்லை.

ஒரு மதம் தன்னுடைய மதத்தவர்களை பல கூறுகளாக பிரித்து வைக்கிறது. அதற்குள் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சட்டத்தை உருவாக்குகிறது.

இதை குல தர்மம் என்று சொல்கிறது. வர்ணாச்சிராம தத்துவம் என்கிறது.

இந்த வர்ணாச்சிரமத்திற்கு எதிராக ஐயன் திருவள்ளுவரில் இருந்து தந்தை பெரியார் வரை குரல் கொடுத்தார்கள். இன்று விடுதலைப் புலிகள் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர்கள் என்று திருந்தப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இந்துச் சாதி வெறியர்கள் மட்டும்தான் நியாயப்படுத்துவார்கள்.

ஒரு மதத்தவரின் கோயிலுக்குள் இன்னொரு மதத்தவரை அனுமதிக்காது கோயில்கள் உலகில் நிறைய இருக்கிறது. ஆனால் தன்னுடைய மதத்தவரையே அனுமதிக்காத கோயில்கள் இந்துக்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

முதலிலை உங்கட முட்டாள்தனத்துக்கு பதில் அளிப்பதா இல்லையா எண்டு நிறைய யோசித்தேன்.... பொழுது போகாமல் இண்டைக்கும் சும்மா தான் இருக்கேன் பதில் குடுத்தா என்ன எண்டு தோணிச்சுது... அதான் இது..!!

என்னை மதிக்காத இடம் எதுவாக இருந்தாலும் அங்கு எனது இடம் இல்லை என்பது எனது கருத்து.... ஆனால் நான் இருக்கும் இடத்தை சிறப்பானதாக்க என்னல் என்ன முடியுமோ அதை செய்வேன்..!!

ஒருவரும் பிறப்பால் தாள்ந்தவர் இல்லை... ஆனால் அவர்களை பணம் தாள்த்தி விடுகிறது... "கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை" எண்று ஒளவை பாடினார்... வறுமைதான் ஏற்ற தாள்வுக்கு காரணம்....!!! அந்த வறுமைய ஒளிக்க ஒண்டையும் செய்யாத நீங்கள் எல்லாம் சாதியை பற்றி பேசுகிறீர்கள்...!!!

TRO ஈழத்திலை வறுமையை ஒளிக்க பாடுபடுகிறது, இங்கை சமயதின் மேலை சேறு பூச பயன் படும் நேரத்திலை வறுமை நிலையை போக்க உதிரி மண்ணித்தியாலங்கள் வேலை செய்து பணம் அனுப்பலாம்...!! ( நான் செய்கிறேன் அதைத்தான் முன் மொழிகிறேன்) மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்யுங்கள்... உருப்படியாக அதையாவது செய்த மாதிரி இருக்கும்...

முதலிலை நான் தாள்த்த பட்டவனா இல்லையா என்பதுகூட உங்களுக்கு தெரியாது... அதுக்கும் முன்னம் சாதியை ஆதரிப்போர் பட்டியலிலை சேர்த்த அறிவை என்ன எண்டு சொல்வது எண்டே தெரிய இல்லை...!!

புலம்பெயர் நாடு ஒண்றில் பிள்ளையை நல்ல கிறீஸ்தவ பாடசாலைகளில் சேர்ப்பதுக்காக மதம் மாற்றும் பெற்றோர் இருக்கிறார்கள்.. கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.... அதன் காரணம் என்ன எண்று தெரியுமா...?? ஜேர்மனியில் அதிகம்..!! அதை பற்றி வேண்டுமானால் சேர்த்து இங்கே பேசலாம்...???

Link to comment
Share on other sites

என்னுடைய முட்டாள்தனத்திற்கு பதில் அளித்து என்னை கெட்டிக்காரன் ஆக்கப் போகிறீர்கள் என்று ஆவலோடு உங்கள் பதிலைப் படித்தால், சம்பந்தமில்லாமல் என்னவோ எழுதியிருக்கிறீர்கள்

நான் கெட்டிக்காரன் ஆக வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு இல்லைப் போல் இருக்கிறது.

பறவாயில்லை, நானாவது மேலதிக விளக்கத்தை தந்து உங்களை கெட்டிக்காரன் ஆக்குவதற்கு முயற்சிக்கிறேன்.

நாங்கள் இங்கே இந்து மதத்தில் உள்ள சாதி பற்றி பேசுகிறோம். இந்து மதம் ஒருவரை பணம்தான் தாழ்த்துகிறது என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் தாருங்கள்.

ஆனால் ஏழைப் பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்கள் அடங்கி நடக்க வேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது. இதற்கு இந்து மத சாத்திரங்களில் இருந்து என்னால் ஆதாரம் தர முடியும்.

நடைமுறையிலும் தாழ்த்தப்பட்ட ஒருவன் எத்தனை செல்வம் சேர்த்தும், அவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கிறான். இதை மறுப்பவர்கள் கிணற்றுத் தவளைகளாகத்தான் இருக்க முடியும்.

தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த செல்வந்தனோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள எத்தனை உயர் குல வேளாளர்கள் தயார் என்று ஒரு முறை விசாரித்துப் பாருங்கள்.

எம்மிடம் உள்ள சாதியை பணம் மாற்றாது. ஆயுதத்தால் அடக்கி வைத்திருக்கலாம்.

உண்மையான தமிழ் தேசிய உணர்வே சாதியத்தில் மாற்றத்தை கொண்டு வரும். தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற வர்ணாச்சிரமத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் துரோகிகளே.

நீ உன்னுடைய இடத்தில் இருந்து வளர்ந்து காட்டு என்று சொல்வது சாதியத் திமிர். எங்கள் இடத்திற்கு வராதே என்பதை நாகரீகமாக சொல்கின்ற முறை இது.

இதைத்தான் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தும் சாதி வெறியர்களும் சொல்கிறார்கள்.

இரட்டைக் குவழை வைத்திருக்கும் கடைக்காரன் என்ன சொல்கிறான்தெரியுமா?

"அவர்களை யார் இங்கு வந்து குடிக்கச் சொன்னது? வேண்டும் என்றால் அவர்கள் ஒரு கடை திறந்து கொள்ளட்டும்"

கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மறுப்பவன் என்ன சொல்கிறான்?

"அவர்கள் வேண்டும் என்றால் தனிக் கோயில் கட்டி வணங்கட்டும்"

இந்த சாதி வெறி பிடித்த குரலை இன்றைக்கு யாழ் களத்திலும் கேட்க வேண்டி வந்து விட்டது. இதை எண்ணி வெட்கப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

உங்கட கெட்டிக்காறத்தனம் கேவலமாய் இருக்கு.... தாள்த்த பட்ட ஒருவனுக்கு ஒருவாய் உணவுக்கு வகை செய்யாத நீங்கள் எல்லாம் அவனை உயர்த்தி காட்டுகிற்றேன் என்பதை கேட்க்கும் கேவலம் இங்கைதான் கண்கூடாக பார்க்க முடியுது...!!! இண்டைக்கும் அண்றாடம் கூலிக்கு உழைக்கிற மக்கள் கேள்வீயே கேக்காமல் தருகிற கூலிக்காய் கேவலமாக நடத்தபடுவது எங்கட தேசத்தில் நடப்பதில்லை எண்ட அதிசயமான செய்தியை கேள்வி படுகிறேன்...!!

சாதியத்துக்கு மதம் காரணம் இல்லை எண்டதிலை எனக்கு சந்தேகமே இல்லை... வறுமைதான் காரணம்... இதை தெரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு தேவைதான், அதை சபேசனிடம் எதிர்பார்ப்பது பிழைதான்...

மனுநீதியில் சொல்ல பட்ட சத்திரியரை விட்டு விடுங்கள் அவர்கள் ஆள்பவர்கள்....... அதில் சூத்திரருக்கும் , வைசியருக்கும் என்ன வித்தியாசம் என்பதை கொஞ்சம் கூறுங்கள்.... அவர்களை எது பிரித்து வைத்து இருக்கிறது எண்டது தெரியுமா...???

என்னை சாதி வெறியர் எண்ட கண்டு பிடிப்பை மேற்கொண்ட சபேசனுக்கு தெரியுமா நான் கோயிலுக்கு போய் 15 வருடம் கடந்து விட்டது எண்று....!! யாரைவது பார்த்து சாதி வெறியர் எண்டு கத்த வேண்டியது...! நான் மஞ்சள் கிடையாது கறுப்பும் கிடையாது.... சிவப்பு அதுதான் எனது வர்ணம்...!!

கறுப்பு என்பது கறை... அது எங்கை பட்டாலும் கறைதான்( தமிழன் கறுப்பு ஆகவே திராவிடனை கேவலப்படுத்துகிரேன் எண்று கூச்சலிடுவீர்கள் என்பதும் எனக்கு தெரியும்) ...!!!

சமதர்ம தேசம்... அதுதான் நிரந்தரமானது... பொருளாதாரத்தால் உயர்ந்த எந்த நாட்டிலும் சாதிகள் இல்லை... சாதிகள் இருக்கும் நாட்டில் பொருளாதாரம் பலமாக இல்லை... ஏன் எண்றால் பெரியவனே உடையவனாக இருக்கிறான்... இல்லாதவன் இருப்பவனை நம்பி வாழ்கிறான்...!!!! எண்று சமதர்ம அரசு வந்து எல்லாருக்கும் எல்லாவற்றையும் சமனாக கொடுக்கிறதோ அப்போ எல்லாரும் பெரியவன்....

முட்டாள் தனமாக யாரையாவது பார்த்து சாதி வெறியர் எண்று கத்துவதை நிறுத்துங்கள்.... உங்கள் வெற்று கூச்சலை இதுக்கு மேல் கேட்பதுக்கு எனக்கு இஸ்ரம் இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாண்ணா

கொஞ்சம் அமைதியாக இருங்கள். சில பேரின் செய்கை தொடர்பாக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கின்றேன். அது தொடர்பாக நிர்வாகம் ஒரு முடிவைச் சொல்லும் என நினைக்கின்றேன். பிறகு எதிர்வரும் காலங்களில் அவர்கள் உறவு பாதிக்கும், இவர்கள் உறவு பாதிக்கும் என்று யாராவது அறிவுரை சொல்லுகின்ற வேலை வைச்சுக் கொள்ளட்டும்....

அதற்குப் பிறகு கெட்ட வார்த்தைகளால் கூடப் பதில் எழுதத் தயங்கப் போவதில்லை...

Link to comment
Share on other sites

தயா,

நீங்கள் சிவப்பு என்பதை நான் நம்ப மாட்டேன். காரணம் நீங்கள் எழுதுவது ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. :lol:

எங்கேயோ "சமதர்ம தேசம்" என்ற சொல்லை எடுத்து கொண்டு வந்து, நீங்கள் சிவப்பு என்று சொன்னால் நான் நம்பி விடுவேனா? :D

நீங்கள் உங்களுக்குள் சாதி வெறி இல்லை என்று நம்பலாம். ஆனால் உங்களை அறியாமலேயே அது உங்களுக்குள் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த என்னுடைய நம்பிக்கை தவறு என்றால் நான் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவேன்.

நீங்கள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!

"நந்தன் தன்னுடைய இடத்தில் கோயில் கட்டி வணங்கட்டும், மதியாதார் வாசலுக்கு சென்றது நந்தனின் தவறு" என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

"தாழ்த்தப்பட்ட மக்கள் தமது இடத்தில் இருந்தபடி முன்னேறட்டும"; என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அண்மையில் உங்களுடைய தோழர்கள் (அதுதான் சிவப்புச் சட்டைக் காரர்கள்) சாதியக் கொடுமைகளை எதிர்த்துப் பரப்புரை செய்தார்கள். இரட்டைக் குவளை உள்ள தேனீர் கடைகளுக்கு சென்று அதை எதிர்த்து பரப்புரை செய்தார்கள். இதே போன்று என்னுடைய தோழர்கள் (அதுதான் கறுப்புச் சட்டைக் காரர்கள்) இரட்டைக் குவளை உள்ள கடைகளுக்குச் சென்று அந்த குவளைகளை அடித்து நொறுக்கினார்கள்.

அப்பொழுது உயர் சாதியினர் சொன்னார்கள்" இது எங்களின் கடை, இரட்டை குவளை வைப்பது எங்களின் உரிமை. இங்கே தேனீர் குடிக்கச் சொல்லி நாம் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை, அவர்கள் அவர்களின் இடத்தில் நின்று தேனீர் குடித்துக் கொள்ளட்டும்"

இப்பொழுது சொல்லுங்கள்!

இந்த சாதி வெறியர்கள் சொன்னதற்கும் நீங்கள் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?

இருவரும் ஒரு விடயத்தைத்தானே பேசுகிறீர்கள்!

தயா!

சில வேளைகளில் உங்களுக்குள் உள்ள சாதியத்தை நீங்கள் அறியாது இருக்கலாம். அதனால் நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனால் சற்று அமைதியாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் கேள்விகளை எழுப்புங்கள். சுயதேடல் மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்யுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் உதவும்.

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தாத நல்ல மனிதர்களுடனேயே நானும் கருத்தாட விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

தயா,

நீங்கள் சிவப்பு என்பதை நான் நம்ப மாட்டேன். காரணம் நீங்கள் எழுதுவது ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. :lol:

உங்களின் தரத்தை அறிந்து கொண்டேன்... சொல்வதுக்கு ஒண்றுமே இல்லை நண்றி வணக்கம்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியாத அளவுக்கு நாம் இல்லை என நினைக்கிறோம்;. பறவைகளாகிய நாம் என்ன சொன்னோம் எனில், நீங்கள் இங்க நந்தனை பற்றி கதையுங்க, கண்ணப்பனை பற்றி கதையுங்க.. ஆனால் தமிழ் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கனை எந்த காலத்தில மதம் பிரித்து வைத்தது? அல்லது சாதியின் அடிப்படையில், அல்லது மதத்தின் அடிப்படையில் எமது போராட்டம் பாதிக்கப்பட்டது?

நீங்கள் பேசுவது தமிழீழம் என்கின்ற எம் தாயகத்துக்கு அப்பாற்ப்பட்ட இடங்களில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி என்பனை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் சொல்வது என்ன என்றால், இந்து மதம் அப்படியிருக்கலாம், இப்படியிருக்காலம், தமிழில் பூசை செய்யாததாக இருக்கலாம். ஆனால் ஈழத்தில் கோவில்களை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும் பிராமணர் அல்லாதோர், அவற்ற மாற்ற முடியுமேட தவிர யாழ்களத்தை படித்துக்கொண்டு கருத்லெலுதிற ஆக்களில்லை. அது மட்டுமன்றி ஈழத்தின்ர, சிறப்புக்களின்ர ஒன்றாக இருக்கிற வற்றாப்பளை (பத்தாப்பளை) கோவில் பிரமணர்கள் பூசை செய்வதில்லை. அங்கே பூசாரிமார் எனப்படுகின்றவர்களால் தான் பூசை செய்யப்படுன்றது. எமக்கு தெரிந்து, வன்னியில் நாம் இருந்த காலத்திலும் சரி யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலும் சரி பல கோவில்களில் புசாரிமார்களின் பூசையை தமிழில் பாத்திருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம். கந்தா போற்றி, கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி, வெற்றி வேலா போற்றி, சுவாமிநாதா போற்றி என்று முருகனுடைய பெயர்களை சொல்லி போற்றி போற்றி என்று சொல்லி முருகனுக்கு பூசை செய்வதையும், அதன் பின் பஞ்சபுராணம் படிப்பதையும் பல கோவில்களில் நான் பார்த்திருக்கின்றேன்.

பிராமணர் பூசை என்பது ஒரு இடை செருகல் அதை வைத்துக்கொண்டு இந்து சமயம் அந்நிய மொழியில் பூசை செய்கின்றது சொல்வது தவறு தவறு என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்க்கு பக்கம் பக்கமாக பதிலெலுத என்னால் முடியாது காரணம்... நேரம்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் சாதி வெறியர்கள் என்பது என்னுடைய கருத்து. என்னுடைய கருத்து சரியே என்று யாழ் களத்திலும் சிலர் மீண்டும் மீண்டும் நிரூபித்து விடுகிறார்கள்.

By Sabesan.

தயா,

கோயிலுக்குள்ளோ கருவறைக்குள்ளோ செல்ல முடியாத ஒருவன், பணக்காரனாகிவிட்டால் அவனால் கோயிலுக்குள்ளோ கருவறைக்குள்ளோ செல்ல முடியுமா?

பணக்காரனாகிவிட்ட தாழ்த்தப்பட்ட ஒருவன், தான் வெள்ளாளன் என்று சொல்லி திருமண விளம்பரம் வெளியிட முடியுமா? அல்லது வெள்ளாளரின் கோயிலொன்றில் பங்குதாரனாக முடியுமா? சரி, பிறப்பால் வந்த தனது சாதியடையாளத்தைத் துறந்துவிட முடிகிறதா?

உங்கள் கேள்விகள், ஆலய நுழைவு, அனைவரும் அர்ச்சகர் உரிமை போன்றவற்றுக்காகப் போராடும் பெரியாரிய, இடதுசாரி, திராவிட, நக்சல் பாரிகளைப் பார்த்துக் எகதாளமாகக் கேட்கும் 'பார்ப்பனத் தன்மை' வாய்ந்தவையாக இருக்கின்றன. அவர்கள் கேட்பார்கள், 'உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே? பிறகேன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறீர்கள்?' என்று.

தனியொருவனின் வீட்டுக்குள் மற்றவர்களை நுழையவிடாத எடுத்துக்காட்டைக் கொண்டுவந்தீர்கள் பாருங்கள், 'அவர்கள்' கூட இப்படிப்பட்ட எடுத்துக்காட்டைச் சொல்லி போராட்டக் காரர்களைக் கேள்வி கேட்டதில்லை.

++++++++++++++++++++++++

இன்னொரு கேள்வி.

தமிழில் 'ழ'கரம் என்றோர் எழுத்துக்கூட்டம் ( ஒரு மெய்யும் பன்னிரண்டு உயிர்மெய்களும் இன்னமும் தமிழ் நெடுங்கணக்கில் இருக்கின்றன. யாரும் தூக்கிக் கொண்டுபோய் மறைத்துவிடவில்லை.) இருப்பதை மிக வன்மையாகவே மறுதலித்து வருகிறீர்களே, ஏன்?

நானறிய கடந்த மூன்று வருடங்களாக இந்த விடயத்தில் விடாக்கண்டனாகவே இருந்து வருகிறீர்கள். எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

தயா,

கோயிலுக்குள்ளோ கருவறைக்குள்ளோ செல்ல முடியாத ஒருவன், பணக்காரனாகிவிட்டால் அவனால் கோயிலுக்குள்ளோ கருவறைக்குள்ளோ செல்ல முடியுமா?

பணக்காரனாகிவிட்ட தாழ்த்தப்பட்ட ஒருவன், தான் வெள்ளாளன் என்று சொல்லி திருமண விளம்பரம் வெளியிட முடியுமா? அல்லது வெள்ளாளரின் கோயிலொன்றில் பங்குதாரனாக முடியுமா? சரி, பிறப்பால் வந்த தனது சாதியடையாளத்தைத் துறந்துவிட முடிகிறதா?

எனக்கு நூற்று கணக்காக நண்பர்கள் தாயகத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள்... அவர்களில் தாழ்த்தப்பட்டவர் யாருமே கிடையாது.... அவர்களில் யாரும் தன்னை தாள்த்தி கொண்டதும் கிடையாது... இதுதான் மனிதம்..!!

உயர்ந்தவன் தாள்ந்தவன் எண்டு பேசும் போதே உங்களுக்கு ்சில தாள்ந்தவரை தெரிந்து இருக்கிறது, மனக்கண் முன் கொண்டு வந்து இருக்கிறீர்கள்... அவர்கள் யார் என்பது உங்களுக்கு மட்டுமே வெளிச்சம்... அப்படி தெரிந்து வைத்து இருப்பதுதான் சாதி வெறி. அவர்களை உங்களின் மனங்களில் இருந்து நீக்கிவிடுங்கள்... உங்களிடம் இருக்கும் மேடு பள்ளம் நீங்கலாம்...!!

மனிதனிடம் உலகளாவிய ரீதியில் ஏற்றத்தாள்வுகள் உண்டு... அதில் இரண்டு வகையானவர்கள் மட்டும்தான் போராடுகிறார்கள்... ஒருவன் இருப்பவன், மற்றவன் இல்லாதவன்.... !!!

கோயிலே தேவை இல்லை எனும் நீங்கள், அதை பற்றி ஏன் கவலை படுகிறீர்கள்.. அங்கே போய்தான் உங்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுமா என்ன..?? இருப்பவன் தன்னை பெரியவனாக நிலை நாட்ட இல்லாதவனை வதைக்கிறான், அவனின் உழைப்பையும் உறுஞ்சுகிறான்... இதுதான் ஏற்றத்தாள்வுக்கு வகை செய்கிறது...!!!

ஒரு சிறுபான்மை பணக்காற குழுமம் கோயிலை கட்டுகிறது....! அந்த கோயிலை வளர்த்து விடுவது யார் எண்றால் பொருண்பாண்மையான இல்லாதோர் கூட்டம்தான்... அப்படியான கோயிலுக்கு வந்தால்த்தான் கடவுள் அருள் கொடுப்பார் எண்று சொல்லியா இருக்கிறார்.....!! அப்படியான கோயில்களை பிரபல்ய படுத்துவதை நிறுத்த வேண்டும்...!!

எல்லாரையும் வாருங்கள் வந்து போங்கள் எண்று பல கோயில்கள் இருக்கின்றனவே... உங்களுக்கு அவைகள் கண்களுக்கு தெரிவதில்லையா...????

அழுக்கு மற்றவனில் இல்லை... மக்களின் தாள்வுகள் எண்று சிலரை கண் முன் நிறுத்தி வைத்து இருக்கும் உங்களுக்குள்தான் இருக்கிறது....!!! அமர்ந்து சிந்தித்து பாருங்கள்....!!

Link to comment
Share on other sites

உங்களின் தரத்தை அறிந்து கொண்டேன்... சொல்வதுக்கு ஒண்றுமே இல்லை நண்றி வணக்கம்....!!

தயா,

நீங்கள் எழுதுவது புரிவதால் நீங்கள் சிவப்பு இல்லை என்று எழுதியதை சீரியசாக எடுக்க வேண்டாம். அது உங்கள் மீதான கிண்டலும் இல்லை. பொதுவாக சிவப்புக்காரர்கள் நீளமாக எழுதி கழுத்தறுப்பார்கள். அதற்குள் ஆயிரத்தெட்டு "இசம்" போட்டு படிப்பவர்களை பயமுறுத்துவார்கள். அவர்கள் எழுதுவது பெரும்பாலானவர்களுக்கு புரிவது இல்லை என்பது உண்மை. ஆகவே நான் இப்படி எழுதுபவர்களைத்தான் கிண்டல் அடித்தேனே தவிர உங்களை அல்ல.

நான் எழுதியதை புரியாது உங்கள் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

ஆனால் சிவப்புச் சட்டைக்காரர்கள் மீதான கிண்டலுக்கு பின்பு உங்களுடன் சீரியசாக சில கருத்தாடல்களை செய்திருக்கிறேன். அதற்கான உங்கள் பதிலை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

பறவைகள்,

நீங்கள் சொல்கின்ற விடயங்கள் உண்மை. ஆனால் அது பற்றிய உங்கள் புரிதல் தவறு என்று நினைக்கிறேன். தமிழில் வழிபாடு செய்யப்படுகின்ற கோயில்களில் எந்த கோயிலில் ஒரு பார்ப்பனர் பூசை செய்கிறார் என்று சொல்ல முடியுமா? நீங்கள் "ஐயர்" என்று அழைக்கின்ற அனைவரும் பார்ப்பனர் அல்ல என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்துகிறேன்.

நான் இங்கே பேசுகின்ற விடயமும் நீங்கள் சொல்வதுதான். சந்நிதியில், கதிர்காமத்தில், வற்றாப்பளையில் "கண்ணப்பர்கள்" பூசை செய்கிறார்கள். சில இடங்களில் "நீச பாசையாகிய" தமிழை பேசி விடுவர்கள் என்பதால் வாயும் கட்டப்பட்டிருக்கிறது.

நீங்கள் கண்ணப்பர்கள் பூசை செய்கின்ற கோயில்களைக் காட்டி தப்பிக்கப் பார்க்கிறீர்கள். நான் எல்லாக் கோயில்களுக்குள்ளும் நந்தன்களையும் உள்ளே விடுங்கள் என்று சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

நான் ஒண்றும் பெரிய தொழில் சங்க செயற்பாட்டாளன் கிடையாது... உரிமைக்காக தெருவில் இறங்கவும் இல்லை... ஆனால் மனிதனின் பிரச்சினை எப்போதும் வயிற்றை சுற்றி என்பதில் நான் தெளிவாக உள்ளேன்... சிவப்பு என்பது எனது ஈடுபாடு மட்டும்தான்...!!

"குலத்தாள்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" எண்று பாரதி பாடினான்.. மனிதனின் தாள்மையை கூட சொல்வது பாவம்... ஒருவன் தாள்ந்து போய் இருந்தால் அவனிடம் போய் நீ தாள்ந்து போய் இருக்கிறாய் என்பதை சொல்வதை விட்டு, நீ உயர வேண்டும் எண்று சொல்லுங்கள்... அவனை உயர்த்த வகை செய்யுங்கள்... அல்லது வளி காட்டுங்கள்...!!

இண்றும் ஈழத்தில் தமிழ்மக்கள் திட்டமிட்ட ரீதியில் பேரினவாத்தத்தால் , படுகொலைகளாலும், பொருளாதார தடைகளாலும், இடம்பெயர வைக்கப்படுவதாலும் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்... இது எல்லாமே மக்களின் போராடும் குணத்தை மழுங்கடிக்க வேண்டி செய்ய படுகின்றன... வறுமையால் போராடாத மக்கள் தங்களின் இயல்பை இளந்து அடிமை ஆகிறார்கள்... இதுதான் பேரினவாதம் முதலாளிதுவ கொள்கையின் வெளிப்பாடு...

இந்து மதம் தான் சொன்னது, எண்று நீங்கள் நாளாந்த அடிப்பட்டை பிரச்சினையில் வாழும் மக்களுக்கு காரணத்தை கண்டு பிடித்து கொடுப்பதால் மட்டும் அவன் அந்த பிரச்சினையில் இருந்து வெளி வந்து விடுவான் எண்றெல்லாம் நம்பாதீர்கள்... அப்படியான ஆராட்ச்சிகளும் கண்டு பிடிப்புக்களும் எதையும் பெற்றுதராது...!

குடும்ப பாரமே பெரும் சுமையாக வாடும் பெருண்பாண்மை பாட்டாளிக்கு நாளாந்த குறைந்த பட்ச வருமானத்தை (புலம்பெயர் நாட்டில் அரசு கொடுக்கும் உதவி மாதிரி ஒண்று ) கொடுக்க வகை செய்யுங்கள்.... அந்த மனிதன் தன் இயால்பான போராடும் குணத்தை பெற்று கொள்வான்...!!

நந்தன் கோயிலுக்கு போவதால் மட்டும் உயர்ந்து விட போவதில்லை... முதலில் நந்தன் தன் போராடும் குணத்தை பெற வேண்டும்.. அதுக்கு நந்தன் உயரவேண்டும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.