Jump to content

யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி.

உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும்.

தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும்,

கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் .

1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா? அது பற்றிய உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா?

3)கடந்த பத்தாண்டுகளில் யாழ்க் களத்தின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?பாவனையாளர்களின் தொகை எவ்வளவு அதிகரித்து உள்ளது? மற்றைய தமிழ்க் களங்கள்,திரட்டிகளுடன் ஒப்பிடுகையில் யாழ்க் களத்தின் பயணர் வருகை வரிசை என்ன?

4) எந்த எந்த நாடுகளில் இருந்து எத்தனை சத விகிதமானோர் யாழ் களத்திற்கு வருகின்றனர்? யாழ்க்களத்தின் தற்போதைய அங்கத்தவர் தொகை என்ன? எத்தனை பேர் இதில் எழுதுகிறார்கள்?

5) யாழ்க் களத்தை வர்த்தக நோக்கில் ஏன் நீங்கள் செயற் படுத்தவில்லை? யாழ்க் களத்தை நாடதுவதற்கான, அபிவிருத்தி செய்வதற்கான செலவுகளை உங்கள் தனிப்பட்ட நிதியின் மூலமாகவா ஈடு செய்கிறீர்கள்.உங்களிடம் இருந்து யாழ்க் களத்தை வாங்குவதற்காக சிலர் முயற்சித்தாக நம்புகிறோம்.அது பற்றிக் கூற முடியுமா?

6)உங்கள் நோக்கில் யாழ்க்களம் எமது புலம் பெயர் சமூகத்தில் கருத்தியல் ரீதியாக சிந்தனை ரீதியாகா எதாவது தாக்கத்தை விழைவித்து உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

7)யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?பொழுது போக்கான விடயங்களைத் தேடி வருபவர்களிடம் இந்த எதிர்பார்ப்பு சாத்தியம் ஆனதா?

8)மட்டுறுதல்கள் அற்ற களங்கள் பல மூட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்புலத்தில்,மட்டுறுத்தல் என்பதை யாழ்க்களம் எவ்வகையில் நோக்குகிறது.இது சம்பந்தமாக தொடர்ச்சியான வாதப்பிரதி வாதங்கள் யாழ்க்களத்தில் நடந்துள்ளன.இதனால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

9)யாழ்க் களத்தை நாடாத்துவதில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் பற்றிக் கூற முடியுமா?இலவசமாக தமது நேரத்தை வழங்கி மட்டுறத்தல் செய்பவர்கள் எதிர் நொக்கும் பிரச்சினைகள் பற்றியும் இவற்றை எவ்வாறு நீங்கள் முகாமைத்துவம் செய்கிறீர்கள் என்பது பற்றியும் கூற முடியுமா?

10)தமிழ் இணைய உலகில் யாழ்க் களம் முதன் முதல் அறிமுகம் செய்த தொழில் நுட்பங்கள் என்ன என்ன? எத்தனையாம் ஆண்டுகளில்.

Link to post
Share on other sites

மோகன் அண்ணாவிடம் ஒரு கேள்வி. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் யாழ் களத்தில் உங்களால் மறக்கமுடியாத (அது கசப்பானதாக அல்லது சுவாரசியமானதாக) நிகழ்வை யாழ் கள உறுப்பினர்களுடன் பகிர முடியுமா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா நம்ம நாரதருக்கு நல்ல ஐடியா வந்திருக்கு. அய்யா..............

ஆனால் உண்மையான பதில்களை மோகன் தரவேண்டுமே. ஏனென்றால் யாழ் இப்போது ஒரு திகில் படம்போல இருக்கிறது. இப்போது யாழில் மாற்றம் செய்தார்கள். அதைப்பற்றி அறிவிக்கவே இல்லை. நுழைவுச்சொல்லில் பிரச்சனை இருந்தது. யாராவது அறிவித்தர்களா?

எல்லாவற்றையும் மோகன் கவனித்து கொள்ளமுடியாது. அவரும் எங்களை போல குடும்பத்துக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். சிரமத்தை குறைப்பதற்காக மட்டுறுத்துனர்களை நியமித்தால். அவர்கள் தான் தோன்றித்தனமாக நடக்கின்றார்கள்.

மட்டுறுத்துனர்கள் இந்திய இராணுவம் போல மோகன் உதவிக்கு என்று இவர்களை தெரிவு செய்தால் அவர்களே மோகனுக்கு..........................

இந்திய இராணுவமும் தமிழருக்கு.................................. செய்யத்தான் வாறம் என்று சொன்னவை.

Link to post
Share on other sites
:icon_mrgreen: மோகனிடம் ஒரேயொரு கேள்வி உமக்கு ஏனய்யா இந்த வேண்டாத வேலை :(
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

ஜயா மோகன் மிக நிதனமாக ஆறுதலாக வடிவாக சிந்திது;து பதிலளிப்பாராக.

பொறி வெடி. மிதிவெடி எல்லாம் வைத்திருக்கு..பாசம் போல வந்த கேள்வி கணைகளிற்குள்

பயங்கர வெடி குண்டு..

ஆனாலும் வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழிநடாத்தி

செல்கிறார்...அதற்கு எனது வாழ்த்துக்கள்..உரித்தாக...

மோகனின் பதிலில் தான் அவரது நரை அனுபவம் விளங்கும்..

இதில்..இரண்டு விதமாக பதிலழிப்பராக..

1) முறியடிப்பு பதில்

2) நேரான பதில்...

தற்போது தமது மத்திய குழுவை கூட்டி

அவசர மாநாட்டை கூட்டியுள்ளார்.

யாழ் ஆசிரியார்களான சிறப்பு நாயகன்

கலைஞன் இந்த ஒருங்கிணைப்புகளை நடாத்தி

வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து

செய்தி வந்துள்ளது..

மோகனின் வயசை கேட்காமா விட்டு விட்டார்கள்..

ஆரகோரா..மோகனுக்கும் யாழிற்கும்..வாழ்துக்;கள்..

:icon_mrgreen::(:(

Link to post
Share on other sites

யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி.

என்று என்பதை அய் என்று தமிழைக் கொல்ல முடிவெடுத்திருப்பதால் எல்லா விடயங்களிலும் புணர்ந்து வருகின்ற எதையும் பாவிக்காமல் இருப்பதே நீங்கள் செய்கின்ற தமிழ் கொலைக்குப் பொருத்தமாக இருக்கும்

எனவே பின்வருமாறு தான் எழுதப்பட வேண்டும்

.......

யாழ்க் களம் அகவஅய் 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவஅய்க் கேளுங்கள் சிறப்புப் பேட்டி.

உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவஅய்யாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும்.

தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தஅய் அறிமுகம் செய்வதாகவும் யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணஅய்ய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும்.

கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் .

1)யாழ் களத்தஅய்த் தொடங்க வேண்டும் என்கிற முனஅய்ப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

2)யாழ்க் களத்தஅய் ஏன் தொடங்கினோம் என்று நீங்கள் எப்போதாவது நினஅய்த்தது உண்டா? அது பற்றிய உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா?

3)கடந்த பத்தாண்டுகளில் யாழ்க் களத்தின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?பாவனஅய்யாளர்களின் தொகை எவ்வளவு அதிகரித்து உள்ளது? மற்றைய தமிழ்க் களங்கள் திரட்டிகளுடன் ஒப்பிடுகையில் யாழ்க் களத்தின் பயணர் வருகை வரிசை என்ன?

4) எந்த எந்த நாடுகளில் இருந்து எத்தனஅய் சத விகிதமானோர் யாழ் களத்திற்கு வருகின்றனர்? யாழ்க்களத்தின் தற்போதைய அங்கத்தவர் தொகஅய் என்ன? எத்தனஅய் பேர் இதில் எழுதுகிறார்கள்?

5) யாழ்க் களத்தஅய் வர்த்தக நோக்கில் ஏன் நீங்கள் செயற் படுத்தவில்லை? யாழ்க் களத்தஅய் நாடதுவதற்கான அபிவிருத்தி செய்வதற்கான செலவுகளஅய் உங்கள் தனிப்பட்ட நிதியின் மூலமாகவா ஈடு செய்கிறீர்கள்.உங்களிடம் இருந்து யாழ்க் களத்தஅய் வாங்குவதற்காக சிலர் முயற்சித்தாக நம்புகிறோம்.அது பற்றிக் கூற முடியுமா?

6)உங்கள் நோக்கில் யாழ்க்களம் எமது புலம் பெயர் சமூகத்தில் கருத்தியல் ரீதியாக சிந்தனஅய் ரீதியாகா எதாவது தாக்கத்தை விழஅய்வித்து உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

7)யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகஅய்ய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?பொழுது போக்கான விடயங்களைத் தேடி வருபவர்களிடம் இந்த எதிர்பார்ப்பு சாத்தியம் ஆனதா?

8)மட்டுறுதல்கள் அற்ற களங்கள் பல மூட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்புலத்தில் மட்டுறுத்தல் என்பதை யாழ்க்களம் எவ்வகஅய்யில் நோக்குகிறது. இது சம்பந்தமாக தொடர்ச்சியான வாதப்பிரதி வாதங்கள் யாழ்க்களத்தில் நடந்துள்ளன. இதனால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினஅய்கள் அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

9)யாழ்க் களத்தஅய் நாடாத்துவதில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் பற்றிக் கூற முடியுமா? இலவசமாக தமது நேரத்தை வழங்கி மட்டுறத்தல் செய்பவர்கள் எதிர் நொக்கும் பிரச்சினஅய்கள் பற்றியும் இவற்றஅய் எவ்வாறு நீங்கள் முகாமைத்துவம் செய்கிறீர்கள் என்பது பற்றியும் கூற முடியுமா?

10)தமிழ் இணஅய்ய உலகில் யாழ்க் களம் முதன் முதல் அறிமுகம் செய்த தொழில் நுட்பங்கள் என்ன என்ன? எத்தனஅய்யாம் ஆண்டுகளில்.

.................................................................

குறிப்பு : தலைப்பு திசை மாறுவதற்கு வருந்துகின்றேன். ஆனால் வேண்டுமென்றே முன்பும் இவ்வாறன புகுத்தல் நடைபெற்றதால் தான் இப்படி ஒரு பிரச்சனையைக் கிளப்ப வேண்டியதாக உள்ளது. அதற்கு வருந்துகின்றேன்.

மேலும் பந்திகளில் வருகின்ற சொற்பிழைகள் பற்றி எவ்வித கவனமும் மேற்கொள்ளப்படவில்லை. ஐ என்பதை அய் என்று எழுதி உயிர்எழுத்தைச் சிதைத்ததால் அதற்கு விளைவுகள் இவ்வாறு தான் அமையும் என்பதே என் கருத்தாகும். மோகன் அண்ணா இத்தலைப்புக்கு அளிக்க விரும்பிய பதிலோடு இது எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வசனங்களுக்கிடையில் எண்கள் வந்தால் அதனை இலக்கமாக எழுதுவது இல்லை

சொல்லாகவே எழுதுவார்கள்.. நான் அறிந்தது அப்படித்தான்.. :icon_mrgreen:

Link to post
Share on other sites

இல்லை வசி.

நான் சொல்லவருவது அது அல்ல. சிலர் சொன்னார்கள் என்பதற்காக ஐ என்பதை அய் என்று எழுதும் பழக்கத்தைத் தான் சொல்கின்றேன்.

அகவை 10 ஐ என்று வரவேண்டியதை அகவை 10 அய் என்றா எழுதுவது??

Link to post
Share on other sites

எனக்கு ஒரு விசயம் மாத்திரம் விளங்கிது. இதுல கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றுக்கும் மோகன் பதில் அளிக்கப்போவதில்லை எண்டு மட்டும் விளங்கிது. :icon_mrgreen:

:( மோகனிடம் ஒரேயொரு கேள்வி உமக்கு ஏனய்யா இந்த வேண்டாத வேலை :(

என்ன சாத்திரி அண்ணை இப்பிடி சொல்லிப்போட்டீங்கள். யாழுக்க வந்தபடியால்தானே எங்கையோ பிறந்து வளர்ந்து எங்கையோ வாழுற உங்களை எல்லாம் நான் எனது வாழ்க்கையில சந்திச்சன். நான் யாழுக்கு வந்து இருக்காட்டிக்கு தமிழ் ஆக்களுடனான எனது தொடர்புகள் முற்று முழுவதுமா அறுந்துபோய் இருக்கும். என்னை மாதிரித்தான் உங்கள் பலருக்கும் யாழ் அனுபவம் இருக்கும் எண்டு நினனக்கிறன். மோகன் யாழை துவங்கும்போது இப்படி யாழ் மூலம் உறவுப்பாளங்கள் எல்லாம் அமையும் எண்டு எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

Link to post
Share on other sites

ம்ம்..மோகன் அண்ணா..(பயப்பிடாதையுங்கோ நான் ஒரு கேள்வியும் கேட்க மாட்டன் :( )..ஆனா ஜம்மு பேபியின் அட்வைஸ் என்னவென்றா..விடை சொல்லக்க டென்சன் ஆகி தப்பி தவறி கூட..(ஒரு நாள் முதலமைச்சராக வெறி சாறி யாழ்கள நிர்வாகியா இருந்து பாருங்கோ என்று மட்டும் சொல்லி போடாதையுங்கோ :icon_mrgreen: )...பிறகு அவ்வளவும் தான்..(உதில கெயார்வுல்லா இருந்தாசரி மோகன் அண்ணா :( )..

இது எல்லாத்தையும் விட ஈசியான வழி என்ன தெரியுமோ..(அக்சுவலா நேக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தான் வரும் என்று சொல்லிவிட்டீங்க என்றா பிரச்சினையே இல்லை :lol: )..

ஏதாவது வேற அட்வைஸ் வேண்டும் என்றா என்ட பேர்சனல் செக்ரிட்டரி..(வலைஞன் மாமாவை :( )..நாடவும்..(என்ன பார்க்கிறியல் :wub: ..(எனக்கும் தான் முடியல :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி.

உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும்.

தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும்,

கீழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் .

1) யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

தற்போது பாவிக்கப்படும் இணைய தொழில்நுட்பத்திற்கு முன்னர் BBS என்ற ஒரு வகை தொடர்பாடல் முறை பாவிக்கப்பட்டு வந்தது. இது ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே அடங்கியது. அப்போதே இப்படி ஒரு விடயம் தமிழில் செய்யப்பட வேண்டும் என ஒரு ஆர்வம். இருந்து வந்தது. பின்னாளில் இணையங்கள் அறிமுகத்திற்கு வந்த போது தமிழ்வெப்.கொம் தொடங்கிய நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில விடயங்களை தமிழ்வெப்பில் 96ம் ஆண்டில் இருந்து சில காலம் இணைத்து வந்தேன். அப்போது தமிழ் எழுத்துக்களை இணையத்தில் பாவிப்பதில் சில சிக்கல்கள் இருந்த காரணத்தினால் தமிழ் விடயங்களை படமாக்கி (image) வடிவிலேயே இணைத்து வந்தோம். நேரச்சிக்கல் போன்ற சில காரணங்களால் சரியான முறையில் அதனை நடாத்த முடியவில்லை.

கல்வியின் பின்னர் வேலைப் பயிற்சியும் இணையம் சம்பந்தமாக அமைந்ததால் முரசு.நெற் என்று ஒன்றை பதிந்து எனது தனிப்பட்ட பயிற்சிக்காக சில காலம் பாவித்தேன். அக்காலத்தில் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தினைக் கொண்டே வந்தமையால், தமிழர்களுக்கு தமிழில் அதேவேளை தாயக விடயங்களையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த வகையிலேயே யாழ் இணையத் தொடக்கம் அமைந்தது.

2) யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா? அது பற்றிய உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா?

ஏன் தொடங்கினோம் என்று நினைத்ததவை விட, பொறுப்பாக நடாத்தக்கூடியவர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட நினைத்ததுண்டு. காரணம் முக்கியமாக நேரப்பிரச்சனை. ஆனாலும் பலர் ஒதுங்க வேண்டாம், துணைநிற்கின்றோம் என்று கேட்டதற்கிணங்கவும், எந்த ஒரு காரணத்திற்காகவும் பிழையானவர்களின் கைகளில் போகக்கூடாது என்பதற்காகவும் அந்த முடிவில் தாமதம் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றேன்.

3) கடந்த பத்தாண்டுகளில் யாழ்க் களத்தின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

பத்தாண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். தமிழில் தமிழர்களுக்கான இணையத்தளமாக அமையவேண்டும் என்கிற தொடக்கால சிந்தனையின் அடிப்படையில் அன்று தொட்டு இன்று வரை யாழ் இணையத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு மட்டங்களில் நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக தொழில்நுட்ப முயற்சிகளிலும், புலம்பெயர்ந்த படைப்பாளிகளை (எல்லோரையும் என்றில்லாவிட்டாலும்) ஒருங்கிணைப்பதிலும், புதியவர்கள் எழுதுவதற்கான களம் அமைத்துக் கொடுத்ததிலும், இளந்தலைமுறையினரில் குறிப்பிட்டளவிலானோரை தமிழ் மொழியின் அடிப்படையில் உள்வாங்குவதிலும், புகலிடத் தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதிலும் வெளிப்பட்டுள்ளது.

பாவனையாளர்களின் தொகை எவ்வளவு அதிகரித்து உள்ளது?

தொடக்க காலத்தில் இருந்து ஒப்பிடும் போது பாவனையாளர் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

image_1.jpg

கடந்த மாத வருகையாளர் விபரம்

மற்றைய தமிழ்க் களங்கள், திரட்டிகளுடன் ஒப்பிடுகையில் யாழ்க் களத்தின் பயணர் வருகை வரிசை என்ன?

மற்றைய களங்கள், திரட்டிகளுடன் நாம் ஒரு போதும் யாழை ஒப்பிடுவதில்லை. அதேபோல எந்தத் தளங்களையும் போட்டியாக நினைத்ததும் இல்லை. பலர் இணையத் தளங்கள் உருவாக்க தொழில்நுட்ப, ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கியுள்ளோம். அதேவேளை பலரது இணையத்தள உருவாக்கத்திற்கு யாழ் இணையம் உந்துதலாகவும், (தொழில்நுட்ப ரீதியாக) யாழ் இணையம் முன்மாதிரியாக இருந்திருக்கின்றது.

4) எந்த எந்த நாடுகளில் இருந்து எத்தனை சத விகிதமானோர் யாழ் களத்திற்கு வருகின்றனர்?

கீழுள்ள படத்தில் இருந்து கடந்த மாதம் வருகை தந்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

image_2.jpg

யாழ்க்களத்தின் தற்போதைய அங்கத்தவர் தொகை என்ன? எத்தனை பேர் இதில் எழுதுகிறார்கள்?

இன்றைய நிலையில் கருத்துக்களத்தில் மட்டும் 4316 அங்கத்துவ பதிவுகள் உள்ளன. எத்தனை பேர் எழுதுகின்றார்கள் என்பது தொடர்பாகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் இணைந்து கொள்பவர்கள் அனைவரும் கருத்துக்களை முன் வைப்பதில்லை. கருத்துக்களத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக இணைந்திருப்பவர்களும் இருக்கின்றார்கள். ஏதோ ஒரு ஆர்வக்கோளாறினால் இணைந்துவிட்டு பின்னர் கருத்துக்கள் எதுவும் எழுதாது வாசகர்களாக இருப்பவர்களும் இருக்கின்றார்கள். இணைந்த பின் எப்படிக் கருத்துக்களை உள்ளிடுவது என்பது தெரியாமலும் சிலர் இருக்கின்றார்கள். அவ்வப்போது கருத்துகளை வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது சிலர் வந்து கருத்துக்களை வைத்துவிட்டுச் செல்பவர்களும் இருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு தொகையினர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கருத்துக்களத்தில் எல்லோரும் தொடர்ந்து இருப்பார்கள் என்றில்லை. பழையவர்களின் வருகை குறைவதும், புதியவர்களின் வருகை அதிகரிப்பதுமாக கருத்துக்களம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

5) யாழ்க் களத்தை வர்த்தக நோக்கில் ஏன் நீங்கள் செயற்படுத்தவில்லை? யாழ்க் களத்தை நாடத்துவதற்கான, அபிவிருத்தி செய்வதற்கான செலவுகளை உங்கள் தனிப்பட்ட நிதியின் மூலமாகவா ஈடு செய்கிறீர்கள்.?

இணையத்தள செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்னும் நோக்கில் விளம்பரங்களூடாக அவற்றை நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போதிலும் அதற்காக முயற்சிகளை பெரியளவில் செய்யவில்லை. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக குகிள் விளம்பரங்களின் மூலம் சேர்வருக்குரிய பணத்தில் சிறிதளவு கிடைத்தாலும் தற்போது அதனை நிறுத்த வேண்டி ஏற்பட்டுவிட்டது. அதனால் அதனை நிறுத்தி விட்டோம்.அதனைத் தவிர தொடர்ச்சியாக எனது தனிப்பட்ட பணமே இணையத்திற்காக செலவிடப்படுகின்றது. இந்த 10 வது வருடத்தில் இருந்து விளம்பரங்களை இணைப்பதன் மூலம் செலவினை சமாளிக்கத் தீர்மானித்துள்ளோம்.

உங்களிடம் இருந்து யாழ்க் களத்தை வாங்குவதற்காக சிலர் முயற்சித்தாக நம்புகிறோம்.அது பற்றிக் கூற முடியுமா?

முயற்சித்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அதனை நாம் தவிர்த்து விட்டோம்.

6) உங்கள் நோக்கில் யாழ்க்களம் எமது புலம் பெயர் சமூகத்தில் கருத்தியல் ரீதியாக சிந்தனை ரீதியாக எதாவது தாக்கத்தை விழைவித்து உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

புலம் பெயர் சமூகத்தில் கருத்தியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் எந்தவகையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட சில மட்டங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு இணையத் தளமாக இருக்கின்றது என்பதனை சில பல நிகழ்வுகள் ஊடாக அறிய முடிகின்றது.

7) யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

யாழ் இணையம் முழுக்க முழுக்க தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக / விருப்பமாக இருக்கின்றது. ஆனால் அப்படி ஒரு நிலை இங்கில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. யாழ் இணைய வாசகர்கள், குறிப்பாக கருத்துக்கள உறுப்பினர்கள் நினைத்தால், கருத்தியல் அடிப்படையிலும் கூட்டு முயற்சிகளின் அடிப்படையிலும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும் என நம்புகின்றேன்.

பொழுது போக்கான விடயங்களைத் தேடி வருபவர்களிடம் இந்த எதிர்பார்ப்பு சாத்தியம் ஆனதா?

இது சாத்தியமா இல்லையா என்பதற்கு அப்பால் இது அவசியமானது என்பதைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.

8) மட்டுறுதல்கள் அற்ற களங்கள் பல மூட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்புலத்தில், மட்டுறுத்தல் என்பதை யாழ்க்களம் எவ்வகையில் நோக்குகிறது. இது சம்பந்தமாக தொடர்ச்சியான வாதப்பிரதி வாதங்கள் யாழ்க்களத்தில் நடந்துள்ளன. இதனால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

விதிமுறைகள் இல்லாவிட்டால் மட்டுறுத்தலுக்கான அவசியமும் இருக்காது. கருத்துக்களத்திற்கான சில அடிப்படை விதிமுறைகள் இருப்பதால் இங்கு மட்டுறுத்தல் அவசியமாகின்றது. மட்டுறுத்தல் என்பது சுதந்திரமான கருத்தாடல்களை முடக்குவதற்கோ, கருத்தாடல்களுக்கான சிந்தனைகளை அடக்குவதற்கோ ஆனா செயற்பாடு அல்ல. பண்பான, ஆக்கபூர்வமான, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கக்கூடிய கருத்தாடல்களை ஊக்குவிக்கவும் மட்டுறுத்தல் அவசியமாகின்றது.

மட்டுறுத்தல் செய்யப்படும் போது அது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுவது தவிர்க்க முடியாததே. முரண்பாடுகளும், சிறு சிறு மனஸ்தாபங்களும் ஏற்படுவது எதிர்பார்க்கக்கூடியதே. அந்த வகையில் ஏற்பட்ட பிரச்சனைகள், அனுபவங்கள் என்று பல இருந்தாலும் அவற்றை இங்கு குறிப்பிட்டுக் எழுதுவதை தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றேன்.

9) யாழ்க் களத்தை நாடாத்துவதில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் பற்றிக் கூற முடியுமா? இலவசமாக தமது நேரத்தை வழங்கி மட்டுறுத்தல் செய்பவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இவற்றை எவ்வாறு நீங்கள் முகாமைத்துவம் செய்கிறீர்கள் என்பது பற்றியும் கூற முடியுமா?

யாழ் களத்தில் இருந்த, இருக்கின்ற மட்டுறுத்துனர் யாரையும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. இன்று களம் இயங்குவதற்கு இவர்களின் துணையின்றி தனியாக கொண்டு நடாத்த முடியாது. நேரகாலம் என்றில்லாது கருத்துக்களை கண்காணித்து வருகின்றார்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல என்றாலும் யாரும் எதுவும் முறைப்பாடு சொன்னதில்லை. கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தல் செய்கின்ற போதும் சில சிக்கலான சந்தர்ப்பங்களில் நிர்வாக உறுப்பினர்கள் கலந்தாலோசித்த பின்னரே சில முடிவுகள் எடுக்கப்படுகின்றது.

10) தமிழ் இணைய உலகில் யாழ்க் களம் முதன் முதல் அறிமுகம் செய்த தொழில் நுட்பங்கள் என்ன என்ன? எத்தனையாம் ஆண்டுகளில்?

குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை தமிழ் இணைய உலகில் யாழ் களம் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க முயற்சிகளை யாழ் இணையம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன:

கருத்துக்களம் சார்ந்த தொழில்நுட்பங்கள்.

யுனிகோட் தொழில் நுட்பம்.

கொண்டோடி(Dynamic) எழுத்துரு (சுரதாவின் உதவியுடன்)

வலைப்பதிவு

முற்றம்

தேடி (இணைய இணைப்புகள்)

தமிழில் அரட்டை (chat)

விம்பகம் (படத்தொகுப்பு)

ஒளித்தடம்

தற்போது தொடக்கப்பக்கம் (desktop startpage)

முன்னைய தள வடிவமைப்புக்கள், விடயங்கள் சிலவற்றினை இங்கு பார்வையிடலாம்

http://web.archive.org/web/*/http://www.yarl.com

ஏனைய கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்கின்றேன்.

Link to post
Share on other sites

ஆஹா... மோகன் நன்றிகள்... பதில்களுக்கு... !! ^_^ பதில்கள் சிறப்பாக இருக்கிது...

கு.போ இன் பாசையில் சொல்வது என்றால் அருமை! அருமை! :D உங்கள் பணி தொடரட்டும். :lol:

நன்றிகள்! வாழ்த்துகள்! :lol:

Link to post
Share on other sites

அமைதியாக பொறுமையாக பதில் சொல்லி இருக்கும் மோகண்ணாவுக்கு பாராட்டுக்கள்.

மோகண்ணா இவ்வளவும் எப்படி ரைப் செய்தீர்கள். ஆச்சரியமாக இருக்குது. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன் இவ்வளவுசிறப்பாபக பதில் அளித்ததிற்கு

நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். மட்டுறுத்துனர்கள் தவறே செய்வதில்லையா? அப்படி அவர்கள் தவறு செய்தால் அவர்களை தண்டிப்பீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன்,

உங்கள் பதில்களுக்கு நன்றி.

யாழின் வரலாற்றை இணையத்தில் ஆவணப்படுத்த வேண்டும்.அதற்காக எந்த ஆண்டுகளில் எவை அறிமுகம் செய்யப்பட்டன என்பதையும் எழுதினீர்கள் என்றால் நலம்.

ஏனெனில் தமிழ் இணைய வரலாற்றை நாங்கள் எழுதவில்லை எண்றால் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார்கள்.

உதாரணத்திற்கு இணையத்தில் முதல் தமிழ்ப் பதிவு பற்றி மாலனுக்கும் பெயரிலிக்கும் இடையேயான கருத்தாடல்களைக் கூறலாம்.

தமிழ் விகியில் இவற்றை ஆவணப் படுத்தலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேட்க எதுவுமே இல்லை...நன்றிகளும், வாழ்த்துக்களும், அன்பும் மட்டும்....

Link to post
Share on other sites

கேள்விகளுக்கு சிறப்பாகவும் விரிவாகவும் பதில் தந்தமைக்கு நன்றிகள்.

7) யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

யாழ் இணையம் முழுக்க முழுக்க தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக / விருப்பமாக இருக்கின்றது. ஆனால் அப்படி ஒரு நிலை இங்கில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. யாழ் இணைய வாசகர்கள், குறிப்பாக கருத்துக்கள உறுப்பினர்கள் நினைத்தால், கருத்தியல் அடிப்படையிலும் கூட்டு முயற்சிகளின் அடிப்படையிலும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும் என நம்புகின்றேன்.

பொழுது போக்கான விடயங்களைத் தேடி வருபவர்களிடம் இந்த எதிர்பார்ப்பு சாத்தியம் ஆனதா?

இது சாத்தியமா இல்லையா என்பதற்கு அப்பால் இது அவசியமானது என்பதைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்

.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கேள்விகளை கேட்ட நாரதர் அண்ணாச்சிக்கும் பதில்களள யார் மனதும் புன்படுத்தாமல் சொன்ன மோகன் அண்ணாவுக்கும்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதில்கள் அசத்தல், நன்றிகள்

Link to post
Share on other sites
 • 5 years later...
 • கருத்துக்கள உறவுகள்

சரியான தருணத்தில்.... இந்தத் தலைப்பை தேடிப் பிடித்து, யாழின் முன் பக்கத்தில்...

இன்றைய தெரிவாகப் பிரசுரித்த, நியானிக்கு... ஒரு சபாஷ் போடுங்க.... :)

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளத்தை ஆரம்பித்த மோகனுக்கு வாழ்த்துக்கள். நன்றி தமிழ் சிறி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.